Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதத்தின் ஊடாகவே கொலை செய்யப்பட்டார் – சஜித் பிரேமதாச

Featured Replies

sajith_CI.jpg

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

லுனுகம்விஹர என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பாரிய திட்டங்களின் மூலம் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் உண்மையான விபரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு புலனாய்வு செய்திகளை அம்பலப்படுத்திய லசந்த விக்ரமதுங்க இதன் ஓர் கட்டமாகவே மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு அரச பயங்கரவாதமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பொது வேட்பாளர் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்ற சடன என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சில அலைவரிசைகளில் இருட்டடைப்பு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தடைப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிடுவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114144/language/ta-IN/article.aspx

ஹ்ம்ம்ம்.. இவரது அப்பாவால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை மறந்து விட்டார் போலும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்ம்.. இவரது அப்பாவால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை மறந்து விட்டார் போலும்..

இது  கூட

இப்ப  தேவை கருதிதான் சொல்கிறார்..... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி ‍ ‍ அமரர் ரணசிங்க பிரேமதாச
 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி ‍ ‍ அமரர் ரணசிங்க பிரேமதாச

பல குடும்பங்களுக்கு வீடுகளை  கட்டிக்கொடுத்தவர்

நான் சந்தித்திருக்கின்றேன்......

பல குடும்பங்களுக்கு வீடுகளை  கட்டிக்கொடுத்தவர்

நான் சந்தித்திருக்கின்றேன்......

நான் அவருடன் ஒன்றாக குளித்து இருக்கின்றேன்....

இது நக்கல் அல்ல.

1991 இல் அவரின் சுச்சரித வீடு இருக்கும் குணசிங்க புரத்தில் தான் நானும் தங்கியிருந்தேன். அருகில்

வாழிக் கிணறு என்று சொல்லப்படும் பொது குளியல் இடம் இருக்கு. இவ்வாறான இடங்களில் இருந்தவர்களுக்கு அது என்னவென்று புரியும். அங்கு சின்ன சின்ன தொட்டிகளில் பைப் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு சின்ன கட்டணத்தினை செலுத்திய பின் அங்கு சென்று குளிக்கலாம். எங்கள் குடியிருப்பில் தண்ணிப் பிரச்சனை அடிக்கடி வருவதால் பல முறை அங்கு குளித்திருக்கின்றேன். அங்குள்ள மக்களுடன் மக்களாக பிரேமதாசாவும் வாழ்ந்தவர் என்பதால் ஒரு 5 மெய்பாதுகாவலர்களுடன் வந்து குளித்து செல்வார் (ஒரு ஸ்டன்ட்). காலை 5:30 மணிக்கே ஆள் குளிக்க வருவார்....

பிரேமதாசாவுடன் வாழைத்தோட்டத்தில்  ( கெசல் வத்த) வாழ்ந்த பல ஊர் வர்த்தகர்களுக்கு ' நல்ல உறவு' இருந்தது!

கொழும்பனும் அந்தப் பக்கம் வசித்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

பல குடும்பங்களுக்கு வீடுகளை  கட்டிக்கொடுத்தவர்

நான் சந்தித்திருக்கின்றேன்......

உண்மை ஐயா, குடிசயில் வாழ்ந்த என்னை போன்றேருக்கு வீடுகொடுத்து பல உதவிகள் செய்தார். கனவான்க‌ளே ஜனாதிபதியாக வரும் இலங்கையில் லெவரியா விற்ற ஒரு சாதாரண குடிமகன் ஜனாதிபதியானது ஆச்சரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் செய்த தேவையில்லாத கொலைகளில் இதுவும் ஒன்று:(

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாசாவுடன் வாழைத்தோட்டத்தில்  ( கெசல் வத்த) வாழ்ந்த பல ஊர் வர்த்தகர்களுக்கு ' நல்ல உறவு' இருந்தது!

கொழும்பனும் அந்தப் பக்கம் வசித்திருக்கலாம்!

பலர் பலவிதமக இவரை கேலி செய்வார்கள், எங்களுக்கு இவர் ஒர் நாயகன் / பிதாமகன் / கோட் ஃபதர்.

பலர் பலவிதமக இவரை கேலி செய்வார்கள், எங்களுக்கு இவர் ஒர் நாயகன் / பிதாமகன் / கோட் ஃபதர்.

ம்ம்...அவரே வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை (கண்களை தோண்டி எடுத்து 100 இற்கும் மேற்பட்டவர்களை கொன்று இருந்தனர்), கொக்கட்டிச் சோலை படுகொலை, கிளாலிப் படுகொலை என்று தமிழ் மக்கள் மீதும் 88 இல் ஜேவிபி அழிப்பில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மீதும் படுகொலை தாண்டவத்தினை நடத்தியதன் சூத்திரதாரி!

  • கருத்துக்கள உறவுகள்

ரிச்சர்ட் டி சொய்சா - இலங்கையின் ஊடகவியலாளர் கொலையின் முதல் புள்ளி.

ஆரம்பித்து வைத்தவர் சாட்சாத் பிரேமதாசாவே.

இவருக்கும் பிரபாவுக்கும் பலத்த ஒற்றுமைகளுண்டு. இதுக்கும் மேல சொன்னா விசுகர் காலத்தூக்கிறன் எண்டு வைவார்.

நான் பார்த்து வியந்த ஆற்றல் கூடிய மனிதர்களில் இருவரும் உள்ளனர். ஒருவரை பாடசாலை மாணவராய் நான் இருக்கும்,போதும் இன்னொருவரை வீதியில் வைத்தும் சில அடி தூரத்தில் பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பார்தால் இலங்கை அரசியலில் யார் உத்தமன்? எல்லோருடைய கரங்களிலும் இரத்தக்கரைகளே

நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் பார்த்து வியந்த மனிதர்களில் இவர் ஒருவர். 
 
சில நாட்களுக்கு முன்பு றகர் விளையட்டு பற்றி கேட்டபோது கோசன் எழுதியிந்தீர்கள் இலங்கையின் நான்கு வகையான வகுப்பு முறைகளை பற்றி. யார் இத்தகையா வகுப்புககளை உருவாக்கியது? எந்த அடிப்படையில்? ஏன் ஒரு 4ம் தர வகுப்பு சமூகத்தை சேர்ந்த் ஒருவருக்கு ரகர் விளையாட முடியாது? ஆங்கிலம் பேசமுடியது, ஜனாதிபதியாக வரமுடியாது? இவை எல்லாம் மனிதனால் மனிதனுக்கு போடப்பட்ட தடைகள்.
 
லெவரியா விற்ற ஒரு ஏழை ஜனாதிபதியாக வந்தது ஒரு சாதனையே. அதனாலேய பல நல்ல குணங்கள் அவரிடம் காணப்பட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப்பார்தால் இலங்கை அரசியலில் யார் உத்தமன்? எல்லோருடைய கரங்களிலும் இரத்தக்கரைகளே

சந்தேகமே இல்லை. பிறேமதாசா வாழைத்தோட்டத்தின் சண்டியன் என்பது அனைவரும் அறிந்ததே. :)

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகமே இல்லை. பிறேமதாசா வாழைத்தோட்டத்தின் சண்டியன் என்பது அனைவரும் அறிந்ததே. :)

யாழில் டக்ளஸ் கூட சண்டியந்தான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் டக்ளஸ் கூட சண்டியந்தான்

அது தான் அவருக்கு நிறைய பெயர்கள் உண்டு. பிறேமதாசாவை  சிங்கள மக்கள் மதிக்கும் அளவுக்கு டக்ளசை யாரும் மதிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளுடன் மன சுத்தியுடன் இன பிரச்னைக்கு தீர்வு காண பேசிய ஒரே ஒரு அரசியல்தலைவர் பிரேமதாசாதான்.
நாட்டில் சாமாதானம் நிலவுவது என்றால் அது பேச்சுக்களால் முடியும் என்று நம்ப்பியவர்.
ஒழிவு மறைவுகள் இன்றி  மூன்றாம் தரப்ப்பு நாலாம் தரப்பு இல்லாமல் 
சிங்கள தலைமையும் -புலிகளும் நடத்திய பேச்சுவார்த்தை.
இனவாதிகள் ரஞ்சன் விஜரட்ன காமினி திசநாயக்கா போன்றவர்களால். பாதுகாப்பு அமைச்சு முன்னிறுத்தப்பட்டு போர் தொடக்கபட்டது. 
இவர்கள் குளறுபடி பண்ணிகொண்டிருக்கிரர்கள் என்பதை கூட காமித் ஊடாக புலிகளுக்கு தெரிவித்திருந்தார். 
 
இவரின் மறுபுறம் ரவுடி என்றுதான் சொல்கிறார்கள்.
ஒருபுறம் இலங்கை என்ற நாடு ஏழைகள் இன்றி இருக்க வேண்டும் என்றும் எண்ணியவர். 

புலிகள் செய்த தேவையில்லாத கொலைகளில் இதுவும் ஒன்று :(

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

வகுப்புவாதம் என்பது எப்போதும் இருக்கும். சாதியில் சலவை தொழிலாளியாக, பாடசாலை கல்வியை ராப்பள்ளியில் கற்ற ஒருவர், கண்டியின் ஐங்கோண மண்டபத்தில் ஏறுவதா? என கண்டிய, கொவிகம மையவாத சிங்கள தலைமைகள் அங்கலாய்த்ததும், எப்படியாவது காமினியை அல்லது அத்துலத் முதலியை ஜனாதிபதியாக்கிவிட முயன்றதும் வரலாறு.

ஆனால் இதில் பகிடி என்னவென்றால் - பிரேமதாசவின் குடும்பம் அடுத்த தலைமுறைக்குள் தம்மை மேல்தட்டாக கருதி செயல்ப்படுவதே. ரோயல் , லண்டன் ஸ்கூல் ஒப் எக்கனாமிக்ஸ் படிப்பு, வேட்டைக்குப் போவது என்று சஜித் ஒரு பக்க மேல்தட்டு கறுவாத்தோட்ட சிங்களவர். றகரும் விளையாடுவார். 4 வகுப்புகளும் அப்படியேதான் இருக்கிறது, பிரேமதாசாக்கள் தான் 4 இல்லிருந்து1 க்கு போய்விட்டார்கள். தாம் வந்த பாதையையும் மறந்துவிட்டார்கள். ஆனால் தந்தை பிரேமதாசா கடைசிவரை மாறாமல் இருந்தார்.

இவரின் மறுபக்கம் கொடியது. தனது பதவிக்கு எதிரான யாரையும் போட்டுத்தள்ளினார். ஜேவிபி, புலிகளை எதிர்கொள்ள என்ன வன்முறையையும் மக்கள் மீது அவிழ்த்து விடும் சுதந்திரத்தை ஆமிக்கு கொடுத்தார்.

இவர் இதயசுத்தியோடு புலிகளோடு பேசினார் என்பதையும் ஏற்கமுடியாது. மங்கள முனசிங்க கமிசன், பாராளுமன்ற தெரிவுகுழு என்று இழுத்தடித்தாரே தவிர சுயாட்சி உள்ள ஒரு தீர்வுதிட்டத்தையும் முவைக்கவில்லை. இவரைவிட தமிழருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்பதில் சந்த்ஹிரிகா ஓரளவு இதயசுத்தியோடு இருந்த்ஹார்.

வடக்கை வைத்துகொண்டு கிழக்கை விட்டு விடுங்கள் என தந்திரமாக பிரபாவை வைத்தே வடகிழக்கு பிரிவினையை ஏற்படுத்த நினைத்தார் ( இதை பிரபா கையாண்ட விதம் அருமை).

ஆனால் 90 யூனில் யுத்தத்தை பிரேமதாச விரும்பவில்லை. இன்னும் கொஞ்சகாலம் இழுத்தடிக்கலாம் என நினைத்தார். புலிகள் தாமாகவே ஒரு முஸ்லீம்வியாபாரியை மட்டகளப்பில் போலீஸ் தாக்கியது என்ற அற்பகாரணுத்துக்காக சண்டையை தொடங்கினர்.

சந்திரிக்கா பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே இராணுவம் பாரிய ஆயுத குவிப்பில் ஈடுபட்டுகொண்டிருன்தது.
இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது. 
மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு கூட சிறிய தீர்வு கூட முவைக்கவில்லை.
பொருளாதார தடை அமுலிலேயே இருந்தது.
மக்கள் போக்குவரதிட்காக  பூனகேரி  பாதை கூட திறக்க சம்மதிக்கவில்லை. 
 
பிரேமதாச இலங்கை சாசனத்தின் படி எல்லாவற்றையும் சட்டத்தின் ஊடாக செய்ய விரும்பியதால் காலம் நீண்டது.
புலிகளை தேர்தல் மூலம் பாராளுமன்றம் வரும்படியும் (புலிகளின் வெற்றி உறுதியாக இருந்தது) அடுத்த கட்டத்திற்கு அங்கிருந்து நகரலாம் என்றும் நம்பினார்.
 
சண்டை தொடங்கியது இராணுவம்தான்.
கமித்தை அழைக்க போன செஞ்சுலுவை சங்க வாகனம் மீதே தாக்குதல் நடத்தினார்கள். புலிகளின் டொமினிக் அவர்கள் மயிர் இழையில் உயிர் தப்பினர். அன்று காலை 10 மணிபோல் கோட்டையில் இருந்தே செல் அடிக்க தொடங்கி இருந்தார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

ஹமீதின் வாகனத்தின் மீது சூடு விழ முன்னமே கிழக்கில் பிரச்சினை தொடங்கீட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமீதின் வாகனத்தின் மீது சூடு விழ முன்னமே கிழக்கில் பிரச்சினை தொடங்கீட்டு.

உண்மைதான் ஆனால் பேச்சு தொடர்ந்தது ....
அன்றோடுதான் பேச்சுவார்த்தை முறிந்து போர் தொடங்கியது. 
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் பேரூந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போராளியை செக் பொயின்ரில் இராணுவம் இறக்கி கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.அப்போராளியின் பெயர் தரணி என நினைக்கிறேன் .இதன் காரணமாகவே யுத்த முறிவு ஏற்பட்டது.ஆளாளுக்கு வரலாற்றை மாற்றாதீர்கள் 2ம் லெப்டினன்ட்

தரணி

கிருஸ்ணபிள்ளை கந்தலிங்கம்

கிரான், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 20.02.1990

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் பேரூந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போராளியை செக் பொயின்ரில் இராணுவம் இறக்கி கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.அப்போராளியின் பெயர் தரணி என நினைக்கிறேன் .இதன் காரணமாகவே யுத்த முறிவு ஏற்பட்டது.ஆளாளுக்கு வரலாற்றை மாற்றாதீர்கள்

அதன் பிறகு நடந்ததுதான் நான் கூறிய விடயம்.
பேச்சு வார்த்தை நடத்த கமீத் பலாலி வந்தார் அவரை அழைக்க சென்றவர்கள் மீதுதான் தாக்குதல் நடந்தது. 
அது கமீத் கூட எதிர்பாராதது. முற்றுமுழுதாக ரஞ்சன் விஜரட்ன  .... காமினி திசநாயக்க போன்றவர்களின் முடிவில் நடந்தது.
 
கிழக்கு விடயம் நடந்த பின்பு நானே போராளிகள் (ஆயுதங்களுடன்)  சிலபேரை ஆனையிறவால் எல்ப் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு விவகாரம் நடந்த இருநாள்களில் நான் மட்டக்களப்பில் இருந்து என் தந்தையுடன் ஆனையிறவு வழியாக பயணித்தோம். அப்போதே , செங்கலடி, ஒட்டுசுட்டான்போன்ற போலீஸ் நிலையங்கள் புலிகளின் கைக்கு வந்துவிட்டிருந்தன, தமிழ் போலீஸ்காரர் எச்சரித்து விடுவிக்கப்பட, சிங்கள பொலீசார் கதைதானார்கள். மட்ட்டகளப்பில் 600 பொலீச்காரரை கருணா ஏற்கனவே டம் பண்ணவும் தொடங்கிவிட்டார்.

கொக்காவில்,காம்பை தாண்டி பயணித்து மாங்குளம் வந்தபோது ஆமி ரோட்டை மறித்து முன்னால் போன டிரக்டருக்கு சுட மாங்குளத்தை சுத்தி மீண்டும் ஏ9 இல்,ஏறி வந்தோம். ஆனையிறவில் எமக்குப் பின்னால் வந்த லொறியை ஆமி திருப்பி விட்டு, உங்களதுதான் கடைசி வாகனத்தொடர், அதுவும் அரச வாகனங்கள் என்பதால் விடுகிறோம். திரும்பி வவுனியா போங்கள், புலிகள் வாகனத்தை பறிப்பார்கள் என்று மிரட்டல் கலந்து எச்சரித்து அனுப்பினார்கள்.

இரவு வீடு வந்தபோதே கோட்டைப் பக்கம் சூட்டுச் சத்தமும், பலாலியில் இருந்து ஓரிரு செல்வீச்சுக்களும் ஆரம்பமாகி விட்டிருந்தன.

ஹமீது வந்தது இதற்க்கும் அடுத்தநாள். அப்போ சண்டை முற்றாக தொடங்கி விட்டிருந்தது. கிழக்கில் அன்று இரு பகுதியும் பலமாக மோதிக்கொண்டனர். கமீது வந்த விமானமே மயிரிலையில் தப்பியதாக அன்று உதயனில் படித்த நியாபகம். இந்நிலையில்தான் அவரை ஏற்றப்போன வாகனம் மீதும் சூடு விழுந்தது.

பிரேமதாசாவை மீறி ரஞ்சன், காமினி எந்த கொம்பனும் ஒரு விரலையும் அசைக்க முடியாத நிலையே அன்றிருந்தது. யுத்தத்தை உடனடியாக தொடங்க விரும்பாத பிரேமதாசா யுத்தம் தொடங்கிய பின்பும் இறுதி முயற்சியாக ஹமீதை பலாலிக்கு அனுப்பினார் என்பதே உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.