Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர்

Featured Replies

CMFFG42432.jpg

 

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
குறிப்பாக போரின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோர் பற்றி விவரம் புள்ளிவிபரவியல் ரீதியாக இல்லை என்று தெரிவித்த சிறிதரன் அவற்றை முழுமைப்படுத்திப் பெற்றுக் கொள்ள ஏன் முடியாது என அரச அதிபரிடம் கேள்வி எழுப்பினார்.
 
இதன்போது அரச அதிபரும் அமைச்சரும் அவ்வாறான விவரங்களைப் பெற்றுப் பூரணப்படுத்துவது சாத்தியமற்றது எனத் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த சிறிதரன் அத்தகைய பதிவு தேவை என்று மீள வலியுறுத்தினார்.
 
இதன் போது குறுக்கிட்ட "நீங்கள்தான் இத்தகைய அழிவுகளுக்குக் காரணம்" என்றார். இதனால் கூட்டத்தில் வாதம் எழுந்தது. இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்த வில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையில் கூட்டம் நடைபெற்று முடிந்தது 
 
 http://malarum.com/article/tam/2014/12/09/7335/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html#sthash.hfD6v3mK.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சீவி பண்பாளர், இந்த ரெண்டு பேரும் காட்டுக்கத்தல் கத்தி இருப்பீனம் - மனுசன் வெளிக்கிட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ் தேவானந்த ஜனநாயகச் சூழலுக்கு உரித்துடைய ஒருவர் அல்ல. அவர் எதனையும் தமிழ் மக்களிடம் எதேட்சதிகாரமாகவும்.. சிங்களவர்களிடம் கூனிக்குறுகியும்.. பெற்றுக் கொள்ளும் வழமையைக் கொண்ட ஒருவர்.

 

இந்தக் கூட்டத்தையும் தனது அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்த.. சிறீதரனின் நியாயமான கோரிக்கைக்கு பொறுப்பற்ற வகையில் பதில் அளித்து.. பிரச்சனையை உருவாக்கி.. தன் இஸ்டத்துக்கு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.

 

டக்கிளஸ் தேவானந்தா தமிழ் மக்களிடம் இருந்து விலகி போய் விடுவது நல்லது. அவர் செய்த ஆயுத ஜனநாயக அரசியலால் தமிழ் மக்கள் பெற்றவை அனைத்தும் போதும். போய் கொழும்பில் சிங்களவனோடு கூனிக்குறுகி மிச்ச காலத்தை கழித்து முடிக்கட்டும். அதுவே அவருக்கு நல்லது. :icon_idea:

Edited by nedukkalapoovan

டக்கிளஸ் தேவானந்த ஜனநாயகச் சூழலுக்கு உரித்துடைய ஒருவர் அல்ல. அவர் எதனையும் தமிழ் மக்களிடம் எதேட்சதிகாரமாகவும்.. சிங்களவர்களிடம் கூனிக்குறுகியும்.. பெற்றுக் கொள்ளும் வழமையைக் கொண்ட ஒருவர்.

 

இந்தக் கூட்டத்தையும் தனது அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்த.. சிறீதரனின் நியாயமான கோரிக்கைக்கு பொறுப்பற்ற வகையில் பதில் அளித்து.. பிரச்சனையை உருவாக்கி.. தன் இஸ்டத்துக்கு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.

 

டக்கிளஸ் தேவானந்தா தமிழ் மக்களிடம் இருந்து விலகி போய் விடுவது நல்லது. அவர் செய்த ஆயுத ஜனநாயக அரசியலால் தமிழ் மக்கள் பெற்றவை அனைத்தும் போதும். போய் கொழும்பில் சிங்களவனோடு கூனிக்குறுகி மிச்ச காலத்தை கழித்து முடிக்கட்டும். அதுவே அவருக்கு நல்லது. :icon_idea:

 

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, இப்ப எல்லா இடமும் சிங்களவன் ஆட்சி மட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையில் கூட்டம் நடைபெற்று முடிந்தது 

 

 

பிறகென்ன டக்ளசனுக்குத்தான் வெற்றி... :D

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் பண்பாளரா இருந்து பிரயோசனம் இல்லை.....இந்தாளுக்கு அரசியல் செய்ய தெரியாட்டி பேசாமல் வீட்டோட இருந்திருக்கணும்......அதவிட்டிட்டு எழும்பி போறது ஓடி போறது என்றுகிட்டு......:D

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் பண்பாளரா இருந்து பிரயோசனம் இல்லை.....இந்தாளுக்கு அரசியல் செய்ய தெரியாட்டி பேசாமல் வீட்டோட இருந்திருக்கணும்......அதவிட்டிட்டு எழும்பி போறது ஓடி போறது என்றுகிட்டு...... :D

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்.  

விக்கி டக்கியாேடபேசவேணுமெண்டால் டக்கி அதைக்கேக்க வேணுமே. டக்கி சாேளன் பாெரிஞ்சமாதிரி தான்மட்டுந்தான் கதைக்கும். மற்றவை கதைத்தால் தன் கதை கந்தல் என்று தெரியும் அந்தாளுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.