Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வாரத்தில் முடிவை அறிவிப்போம்: தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: மாவை

Featured Replies

Mavai.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஒரு வாரத்தில் பகிரங்கமாக அறிவிப்போம். அதேவேளை தமிழ் மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார் 

அம்பாஹை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை மற்றும் மகாணசபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்களுக் கிடையிலான ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதின் அடிப்படையில் நாங்கள் இந்த கருத்து கணிப்பு ஒன்றை திரட்டி, மிகைவிரைவில் தலைவர் சம்மந்தன் மருத்துவ பரிசேதனையில் இருந்து வந்ததும் எல்லோரும் சேர்ந்து கூட்டாக ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிவிப்போம். 

http://virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இதை அறிவிக்க முன்னரே ஜனாதிபதி தேர்தல் முடிந்து விடும். இதுவும் நல்ல ஐடியாத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவாளிகள் இப்படித்தான்

கனக்க பேசுவார்கள்

கன பேருடன் பேசுவார்கள்

நாலு திசையும் காது கொடுப்பார்கள்

செயல் வடிவம் வரும் முன்

காலம் கடந்துவிடும்

மீண்டும்

கன பேருடன் பேசத்தொடங்குவார்கள்...... :(

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

அடடே! நீங்கள் எல்லாரும் கூட்டமைப்பு சொல்லும் வரைதான் காத்துகொண்டு இருக்கிறிங்கள் போலகிடக்கு. 

 

சொல்லாமல் விட்டால் ஓட்டே போடா மாட்டிங்களாக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்

அறிவாளிகள் இப்படித்தான்

கனக்க பேசுவார்கள்

கன பேருடன் பேசுவார்கள்

நாலு திசையும் காது கொடுப்பார்கள்

செயல் வடிவம் வரும் முன்

காலம் கடந்துவிடும்

மீண்டும்

கன பேருடன் பேசத்தொடங்குவார்கள்...... :(

அறிவாளிகள் அல்லாதவர்கள்:

சிலருடன் மட்டும் ரகசியமாக பேசுவார்கள்.

பேசிக்கொண்டே ஒருவரை ஒருவர் கொன்று தள்ளுவார்கள்.

பிறகு பெரும் போரில் இறங்குவார்கள்.

அப்படியே எல்லோரும் இறந்து போவார்கள்.

கூட்டமைப்பு இந்த தேர்தலில் வேண்டும் என்றே முடிவு எடுப்பதையும் மக்களை வழி நடத்துவதையும் பின்போட்டு வருகிறது. இந்த தேர்தல் மிகவும் மோசமான இன கலவரத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ராஜபக்ச தோற்றால் இன கலவரமும் அதை காரணம் காட்டி இராணுவ ஆட்சியும் நிச்சயம் வரும்.

தமிழ் மக்கள் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்தால் கடுமையாக பாதிக்க படுவார்கள். ஆனால் அவர்கள் ராஜபக்சவுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள்.

மைத்திரி இனவாதம் பேசாவிட்டால் ராஜபக்ச வெல்லுவதை தவிர்க்க முடியாது. அதற்காக தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களிக்காமல் விட்டால் ராஜபக்ச ராணுவ ஆட்சி தொடரும். மக்களை மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று பகிரங்கமாக கூட்டமைப்பு கேட்டால் வெடிக்கும் கலவரம் அடுத்த முள்ளிவாய்க்காலாக மாறும்.

ஆகவே கூட்டமைப்பு மிகவும் கவனமாக இந்த நிலைமையை கையாளுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கைச் செலுத்துங்கோ.. ஆனால் செல்லுபடியற்ற வாக்காக. ஒருத்தருக்கும் புள்ளடி வேணாம். மொத்த வாக்கு அட்டைக்கும்..பெரிய ஒரு புள்ளடியை போட்டு எல்லாரையும் நிராகரியுங்கோ. :icon_idea:

 

இதுதான் நல்ல முடிவு.

 

மாவை முடிவு எடுக்கிறத்துக்கு இடையில சனம் முடிவெடுத்திடும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கை பொறுத்தவரை மக்களின் மனங்களின் ஒரு மாற்றம் தேவைபடுகின்றது ஏன் வடகிழக்கில் வாழும் சிங்கள மக்களும் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர் யார் அறிவித்தாலும் சரி அறிவிக்கா விட்டாலும் சரி மக்களின் மனதில் வெறுப்புணர்வே மிதமிஞ்சியுள்ளது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்திடமும் அவர்களின் உறவினர்களிடமும் பதுக்கப்பட்ட பணத்தினால் நாட்டில் பணத்தட்டுப்பாடு அதுவே அன்றாட மக்களின் பொருளாதார, வாழ்வாதரத்தில் பெரிய இடி போதாதுக்கு நுண்கடன் நிறுவனங்களினால் வழங்கப்படும் கடன்களினால் மக்களின் சிக்கல் மிக மிக வலியை ஏற்படுத்திகொண்டுள்ளது. இவற்றில் இருந்து மக்கள் சுவாசிக்க ஒரு மாற்றமே தேவைப்படுகின்றது. இதுவே தற்போதைய நிலை....!!

  • கருத்துக்கள உறவுகள்
ஆகவே கூட்டமைப்பு மிகவும் கவனமாக இந்த நிலைமையை கையாளுகிறது. 

 

 

சம்பந்தரின் சாணக்கியம் என்னவென்று தான் பார்த்து விடுவோமே. உங்களின்(மக்களின்) விருப்பத்துக்கு வாக்களியுங்கள் என்றால்  கூட்டமைப்பின் சாணக்கியத்தை பாராட்டலாம்.உடனே  நாங்கள் படித்தவன் படித்தவன் தான் என புளகாங்கிதம் அடையலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு.
 
மற்ற ஒட்டுகுழு ஓனான் குழுக்களை உங்கள் கட்சியில் சேர்க்க கூடாது என்று ஒரு கண்டிசன் அடிப்படியில் எப்போதோ மைத்திரியுடன் கூடி இருக்க வேண்டும்.
ஏன் தாமதிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.