Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, இசைக்கலைஞன் said:

Sheep Behaviour என்று ஒன்று உள்ளது. இதை பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளார்கள். பெரும்பான்மையானவர்கள் செய்யும் ஒரு விடயத்தை நாமும் செய்துவிட்டால் ஒரு தவறும் ஏற்படாது என்கிற சிந்தனை. அதன்படி, ஆங்கிலம், கிறிஸ்மஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் நடைபெறுகின்றது. :unsure: (இந்தத் திரியை பின்னால் போய் வாசித்துப் பார்த்தால் பல அடிபிடிகள் நடந்துள்ள விடயம் தெரிய வருகிறது.. :D: )

 

தெரிந்தும் வந்து கருத்தைப் பதிந்த உங்கள் துணிவு பாராட்டப்பட்ட வேண்டியது.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 140
  • Views 16.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

எப்படி?

தமிழ்/ இந்து புத்தாண்டு ஏப்ரல் 13/14 இவ் அல்லவா? சனவரி 1 இல் புத்தாண்டு வாழ்த்து சொல்வதிலும் கிறிஸ்தவம் மற்றும் அதையொட்டிய மத நம்பிக்கைகள் இருக்கு அல்லவா?

சுமே

சனவரி 1 இல் புத்தாண்டு வாழ்த்து சொல்லமாட்டார்

அது அடுத்த தலைமுறையை திசை திருப்பும் செயலாகும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

எப்படி?

தமிழ்/ இந்து புத்தாண்டு ஏப்ரல் 13/14 இவ் அல்லவா? சனவரி 1 இல் புத்தாண்டு வாழ்த்து சொல்வதிலும் கிறிஸ்தவம் மற்றும் அதையொட்டிய மத நம்பிக்கைகள் இருக்கு அல்லவா?

 

எமக்கான புத்தாண்டு என்று சித்திரை வருடபிறப்பை கொண்டுவந்தவர்கள் ஆரியர்களே. அதன் முன்னர் தை மாதத்தில் தான் தமிழர்களும் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இது தொடர்பான பதிவை தேடுகிறேன். கிடைத்ததும் போடுகிறேன். யாழ் உறவு ஒன்றுதான் பதிந்திருந்தார்.

நீங்கள் எல்லாம் சித்திரைப புத்தாண்டைக் கொண்டாடுகிறீர்களா என்ன ??/

ஆங்கிலப் புத்தாண்டுக்கும் கிறித்தவத்துக்கும் என்ன தொடர்பு ????

5 minutes ago, விசுகு said:

சுமே

சனவரி 1 இல் புத்தாண்டு வாழ்த்து சொல்லமாட்டார்

அது அடுத்த தலைமுறையை திசை திருப்பும் செயலாகும்.

 

ஒரு கருத்து விளங்கினாலும் விளங்காததுபோல் எழுத உங்களால் மட்டும் தான் முடியும் அண்ணா

Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமக்கான புத்தாண்டு என்று சித்திரை வருடபிறப்பை கொண்டுவந்தவர்கள் ஆரியர்களே. அதன் முன்னர் தை மாதத்தில் தான் தமிழர்களும் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இது தொடர்பான பதிவை தேடுகிறேன். கிடைத்ததும் போடுகிறேன். யாழ் உறவு ஒன்றுதான் பதிந்திருந்தார்.

சரி,

பொங்கல் அன்று "இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்"  என்று சொல்வீர்களா "இனிய புது வருட வாழ்த்துகள்" என்று சொல்லிகின்றீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் புதுவருட வாழ்த்துக்கள் என்றுதான்

On 12/27/2016 at 9:57 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதன் முன்னர் தை மாதத்தில் தான் தமிழர்களும் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். 

நான் நினைக்கிறன், தமிழுக்கு சித்திரை 1 தான் தமிழர்களின் புத்தாண்டு. அதனால் தான் தமிழ் வருடம் சித்திரையில் ஆரம்பிக்கிறது. தமிழர்கள் தை மாதத்தில் புத்தாண்டு கொண்டியதாக நான் அறியவில்லை. சிலபேர் தைப்பொங்கலை புத்தாண்டுக்கொண்டாட்டமாக நினைக்கிறார்கள் போல இருக்குது. ஆனால் தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் உழவர்களின் திருநாள்.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1

 
vaniyal.jpg
முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு
 
தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

http://thirutamil.blogspot.ae/2008/04/1_14.html

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2

 
sittirai+2.JPG
 
தமிழர் கண்ட கால அளவீடு
 
பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.
 
திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.
 
பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.
 
வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.
 
சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.
 
சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.
 
மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.
 
இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.
 
"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

http://thirutamil.blogspot.ae/2008/04/2.html

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3

 
sittirai+3.JPG
தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
 
ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.
 
பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.
 
இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.
 
சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.
 
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-
 
1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை
 
2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை
 
3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு
 
4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு
 
5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை
 
தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.
 
இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.
 
இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
 
'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''
 
 
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.
 
தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

http://thirutamil.blogspot.ae/2008/04/3.html

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4

 
sittirai+4.JPG
சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு
 
தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.
 
அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.
 
அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.
 
ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.
 
'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.
 
பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.
 
அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.
 
இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.
 
பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.
 
இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.
 
ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.
 
ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.

http://thirutamil.blogspot.ae/2008/04/1.html

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2016 at 11:25 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யோவ் முனி புத்தாண்டு மதம்சார்ந்தது இல்லை. பொதுவானது.

நீங்கள் பொதுவானது என்று சொல்றீங்க அந்த வருசத்துக்கு பெயரு வச்சு கொண்டாடுறாங்களே எப்படி துர்முகி அது இது என்று tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் பொதுவானது என்று சொல்றீங்க அந்த வருசத்துக்கு பெயரு வச்சு கொண்டாடுறாங்களே எப்படி துர்முகி அது இது என்று tw_blush:

துர்முகி தமிழ் பெயரா என்ன?? தமிழர்களின் கணக்கில் அறுபது ஆண்டுகள் என்பது இல்லை ஆது ஆரியர் புகுத்தியது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துர்முகி தமிழ் பெயரா என்ன?? தமிழர்களின் கணக்கில் அறுபது ஆண்டுகள் என்பது இல்லை ஆது ஆரியர் புகுத்தியது.

அது ஆரியரோ கூரியரோ அதை விடுங்கோ 2017 க்கு என்ன பெயர் அதை சொல்லுங்கோ  உங்களுக்கு மட்டும் வாழ்த்து  தெரிவிக்க போறன் கெதியா சொல்லுங்கோtw_blush:

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துர்முகி தமிழ் பெயரா என்ன?? தமிழர்களின் கணக்கில் அறுபது ஆண்டுகள் என்பது இல்லை ஆது ஆரியர் புகுத்தியது.

 

1 hour ago, முனிவர் ஜீ said:

அது ஆரியரோ கூரியரோ அதை விடுங்கோ 2017 க்கு என்ன பெயர் அதை சொல்லுங்கோ  உங்களுக்கு மட்டும் வாழ்த்து  தெரிவிக்க போறன் கெதியா சொல்லுங்கோtw_blush:

தேடிப் பார்த்ததில் துன்முகி வருடம் என்பதுதான் சரியாக உள்ளது.  ஏன் அனைவரும் துர்முகி என்று எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. துன்முகி என்பதின் அர்த்தம் வெம்முகம். அடுத்த வருடம் ஹேவிளம்பி ( அர்த்தம் - பொற்றடை)

நமது அவைப் புலவர் சுவியை அரச சபைக்கு அழைக்கின்றேன் - மேலும் விளக்கத்திற்காக 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

 

தேடிப் பார்த்ததில் துன்முகி வருடம் என்பதுதான் சரியாக உள்ளது.  ஏன் அனைவரும் துர்முகி என்று எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. துன்முகி என்பதின் அர்த்தம் வெம்முகம். அடுத்த வருடம் ஹேவிளம்பி ( அர்த்தம் - பொற்றடை)

நமது அவைப் புலவர் சுவியை அரச சபைக்கு அழைக்கின்றேன் - மேலும் விளக்கத்திற்காக 

உங்க தேடலுக்கு மிக்க நன்றி 

 

எங்க ஆச்சி சீ அக்கா சுமேவை காணல

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

 

தேடிப் பார்த்ததில் துன்முகி வருடம் என்பதுதான் சரியாக உள்ளது.  ஏன் அனைவரும் துர்முகி என்று எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. துன்முகி என்பதின் அர்த்தம் வெம்முகம். அடுத்த வருடம் ஹேவிளம்பி ( அர்த்தம் - பொற்றடை)

நமது அவைப் புலவர் சுவியை அரச சபைக்கு அழைக்கின்றேன் - மேலும் விளக்கத்திற்காக 

எனக்கு சண்முகியைத்தான் தெரியும்....!  tw_blush:

வாக்கிய பஞ்சாங்கம் துர்முகி என்றுதான் சொல்லுது.....! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

அது ஆரியரோ கூரியரோ அதை விடுங்கோ 2017 க்கு என்ன பெயர் அதை சொல்லுங்கோ  உங்களுக்கு மட்டும் வாழ்த்து  தெரிவிக்க போறன் கெதியா சொல்லுங்கோtw_blush:

ஏன் பெயர் இருந்தாத்தான் வாழ்த்துச் சொல்ல முடியுமா ???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் பெயர் இருந்தாத்தான் வாழ்த்துச் சொல்ல முடியுமா ???

ம் வாழ்த்து சொல்லேக்க ஒரு கிக் இருக்குமே அக்கா  ............................ வருடத்தில் சகலதும் பெற்று சொளபாக்கியமாக வாழ  எல்லம் வல்ல  இறைவன் துணைபுரிவானாக என்று ( நான் )  வாழ்த்த வேணும் அதற்க்காக கேட்டனாக்கும் tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

ம் வாழ்த்து சொல்லேக்க ஒரு கிக் இருக்குமே அக்கா  ............................ வருடத்தில் சகலதும் பெற்று சொளபாக்கியமாக வாழ  எல்லம் வல்ல  இறைவன் துணைபுரிவானாக என்று ( நான் )  வாழ்த்த வேணும் அதற்க்காக கேட்டனாக்கும் tw_blush:

ம்க்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.