Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயம்?

 
 
daily%2Bjaffna.jpg
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்!

 

கோலாலம்பூர்: இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானம் ஒன்று நடுவானில் மாயமானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏர் ஏசியாவிற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. 155 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் இன்று காலை 8.30 மணி அளவில் சிங்கப்பூர் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், வழக்கமான பாதையிலிருந்து விமானம் விலகிச் சென்றுள்ளதாகவும், அதன் தகவல் தொடர்பு காலை 6.30 மணி முதல் துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

28-1419741156-air-asia-600.jpg

 

மாயமான விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே இந்தாண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்தது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மாயமான விமானத்திற்கு என்ன ஆனது, அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன என்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

இதற்கிடையே, தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலைய இணையதளத்தில் மாயமான விமானம் தாமதம் என அறிவிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்
160 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானம்: பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்தது?
Sanjith December 28, 2014 Canada
 
இந்தோனேசியாவின் சுரயபோ நகரத்திலிருந்து சிங்கப்பூரிற்கு 160 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் மாயமாகி உள்ளது.
எயர்ஏசியா விமாசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமொன்று காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பிட்ட விமானத்துடனான தொடர்புகள் இன்று காலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
சுரபாயோவிற்கும், சிங்கப்பூரிற்கும் இடையிலான ஜாவா கடற்பகுதிக்கு மேலாகவே குறிப்பிட்ட விமானம் காணமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பிட்ட விமானம் காணமல்போவதற்கு முன்னர் வழமைக்கு மாறான பாதையில் பயணிப்பதற்கான அனுமதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த தகவலை அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஹடி முஸ்தப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இரண்டாம் இணைப்பு
 
மாயமான ஏர்ஏசியா விமானம் பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என ஆய்வு நடைபெற்று வருவதாக இணைய செய்திகள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து புறப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்த நிலையில், அதனைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் காளிமாண்டான் பகுதிக்கு மேற்கே, ஜாவா கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது தொடர்பு இழந்தது என்று இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த விமானத்திலிருந்து தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால் அனுப்பப்படும் சமிக்ஞைகள் எதுவும் வரவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர்.

இந்த விமானத்தில் பெரும்பாலும் விடுமுறைக்காகப் பயணித்தவர்களே அதிகம் இருந்ததாகவும் , சிங்கப்பூர் இந்தோனேசியர்களுக்கு பிடித்த விடுமுறைத் தலம் என்பதால் அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் ஜாகர்த்தாவிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூரின் ராணுவ விமானங்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோனோர் இந்தோனேசியர்கள் என்று தெரிகிறது.

இந்தோனேசிய நகரான சுரபயாவிலிருந்து புறப்பட்ட 45 நிமிடத்துக்குள் இந்த விமானம் விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்திருக்கிறது.

விமானி மோசமான வானிலை காரணமாக விமானப் பாதையை மாற்றுவதற்கு அனுமதி கோரினார் என்றும் ஆனால் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் தகவலறிய குழுமியிருக்கின்றனர்.

குறைந்த விலை டிக்கெட்டுகளை வழங்கும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் என்றறியப்படும் விமான நிறுவனங்களில் ஒன்று இந்த ஏர் ஏசியா நிறுவனம். மலேசிய நிறுவனமான இதன் இந்தோனேசிய துணை நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த விமானம்.

இந்த நிறுவனத்தின் விமானங்கள் இது வரை பாதுகாப்பாகவே இயங்கி வந்திருக்கின்றன.

மலேசியாவுடன் தொடர்புடைய ஒரு விமானம் இந்த ஆண்டு காணாமல் போவது இது மூன்றாவது முறையாகும்.

50 நிமிடங்களுக்கு முன்னர்

http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141228_airasiaplane

இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் பறந்த வழியில் காணாமல்போயுள்ள ஏர் ஏஷியா நிறுவனத்தின் பயணிகள் விமானத்தை வான் வழியாக தேடும் பணிகளை, இரவு சூழ்ந்துவிட்டதால் இந்தோனேஷியா இடைநிறுத்தியுள்ளது.

போர்னியோவுக்கு தென்மேற்காகவுள்ள கடற்பரப்பில் விமானம் தொடர்பை இழந்திருந்த இடத்தில், இந்தோனேஷியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் கிளம்பிய இராணுவ விமானங்கள் தேடிவந்தன.

மோசமான வானிலை நீடித்தாலும் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் சில கப்பல்கள் இந்த விமானத்தை தொடர்ந்தும் தேடிவருகின்றன.

ஏர்பஸ் 320 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் இந்தோனேஷியர்கள் பெரும்பான்மையாக மொத்தம் 162 பேர் இருந்தனர்.

கடுமையான காற்றை தவிர்ப்பதற்காக பாதை மாறுவதாக காணாமல்போன விமானத்தின் விமானி கூறியிருந்தாரே தவிர அபாய எச்சரிக்கை எதுவும் அவரிடம் இருந்து வந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த விமானத்திலிருந்து தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால் அனுப்பப்படும் சமிக்ஞைகள் எதுவும் வரவில்லை என்றும் இந்தோனேஷிய அதிகாரிகள் கூறினர்.

இந்த விமானத்தில் பெரும்பாலும் விடுமுறைக்காகப் பயணித்தவர்களே அதிகம் இருந்ததாகவும், சிங்கப்பூர் இந்தோனேசியர்களுக்கு பிடித்த விடுமுறைத் தலம் என்பதால் அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் ஜகார்த்தாவிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார்.

141228130012_airasia_yang_hilang_512x288மலேஷியாவுடன் தொடர்புடைய விமானம் காணாமல்போன சம்பவம் இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக நடந்துள்ளது

இந்தோனேசிய நகரான சுரபயாவிலிருந்து புறப்பட்ட 45 நிமிடத்துக்குள் இந்த விமானம் விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்திருக்கிறது.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் தகவலறிவதற்காக குழுமியிருக்கின்றனர்.

குறைந்த விலை டிக்கெட்டுகளை வழங்கும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் என்றறியப்படும் விமான நிறுவனங்களில் ஒன்று இந்த ஏர் ஏசியா நிறுவனம். மலேசிய நிறுவனமான இந்த ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்தோனேஷிய துணை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமே காணாமல்போயுள்ளது.

இந்த நிறுவனத்தின் விமானங்கள் இதுவரை பாதுகாப்பாகவே இயங்கி வந்திருக்கின்றன.

மலேஷியாவுடன் தொடர்புடைய விமானம் காணாமல்போகும் சம்பவம் இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141228_airasiaplane

இந்த உலகத்தில் என்ன நடக்குது  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்து..?
 
 
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் ஒன்றின் உடைந்த பாகங்கள் பெலிங்டங் தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜாவா கடலில் கண்டறியப்பட்ட விமான பாகங்கள் மாயமான ஏர் ஏசியா விமானத்துடையதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமானது. இந்தோனேசியாவின் சுரபையா விமான நிலையத்திலிருந்து QZ8501 என்ற விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.35 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டது. சிங்கப்பூர் விமான நிலைத்தை 6.30 மணிக்கு அடைய வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
விமானம் மாயமான தகவலை ஏர் ஏசியா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரி முஸ்தபா, விமானம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றுள்ளது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன் வேறு பாதையில் செல்லப் போவதாக விமானி அறிவித்ததாகவும் ஏர் ஏசியா தெரிவித்துள்ளது. விமானம் கடத்தப்பட்டுள்ளதா அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானதா என தெரியவில்லை. இந்த விமானத்தில் இந்தியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

காணாமல் போன இந்தோனேஷியாவின் ஏயார் ஏசியா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QZ8501 இலக்கத்தைக் கொண்ட விமானமானது இந்தோனேஷியா நேரப்படி 7.00 மணியளவில் பிரதான மையக்கட்டுப்பாட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட வேளை கடற்பரப்பில் மாயமாகியுள்ளது.

ஏயார் பஸ் ஏ 320-200 வகையைச்சார்ந்த இவ் விமானத்தில் 155 பயணிகள் மற்றும் அலுவலகப் பணியாட்கள் 7பேர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பயணம் செய்தோரில் 149 இந்துனேஷியர்களும், கொரியா நாட்டைச் சேர்ந்த மூவரும்,சிங்கப்பூர்,பிரித்தானியா மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் வீதமும் பயணித்ததாக தவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் 138 வளர்ந்தோரும், 16 பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.

இந்தோனேஷியா நேரப்படி இன்று காலை 7.55மணியளவில் பயணத்தை ஆரம்பித்த விமானத்தின் தொடர்பாடலின் பின்னர் 42 வினாடிகளின் பின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான சேவை நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி இந்துனேஷியாவின் கலிமந்தான் மற்றும் ஜாவாத்தீவுகளிற்கிடையே அண்மித்த கடற்பரப்பிலே விமானம் மாயமாகியுள்ளது.விமான நிலையம் தமது துக்கத்தை வெளிப்படுத்த தமது facebookஇல் கருப்பு வெள்ளையாக மாற்றியுள்ளது.

fligh-600x329.jpg

air-asia_1.jpg air-asia_2.jpg air-asia_4.jpg AirAsia-600x363.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/36000.html#sthash.u5AXSPVd.dpuf

இந்த உலகத்தில் என்ன நடக்குது  :(

இப்போதாவது பேய் இருக்கிறதை நம்புகிறீர்களா? அந்தப்பகுதியில் அடிக்கடி நடக்கும் அனர்த்தங்கள்;சுனாமி தைப்போன் போன்றவற்றால் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்துள்ளனர்.அந்தப்பகுதியில்தான் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காவு கொள்ளும் வீதமும் கூடவாகவிருக்கின்றது.பத்து நாட்களுக்கு முன்பும் அப்பகுதியில் ஏற்பட்ட புயலால் விமானமொன்று பறக்க முடியாத நிலை ஏற்பட்டு பின்னர் உடனடியாக ஜப்பான் நாட்டில் தரையிறக்கப்பட்டது நினைவிருக்கலாம்.ஏதோ ஒன்று எனக்கு சொல்லத்தெரியவில்லை.இது பற்றி ஏதும் தெரிந்த விஞ்ஞானிகள் சொல்ல விரும்பவுமில்லை இது தான் உண்மை

"காணாமல்போன ஏர்ஏஷிய விமானம் கடலுக்கடியில்"
  •  
    29 டிசம்பர் 2014

 

141229150903_indonesia_missing_plane_624

இந்த விமானம் காணாமல் போனதற்கு முன்பாக கடைசியாக அந்த விமானத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ஒருங்கிணைப்புத் தகவல்களின் அடிப்படையிலேயே தாம் இந்த அனுமானத்திற்கு வந்திருப்பதாக பாம்பாங் சொய்லிஸ்டோ தெரிவித்தார்.

162 பயணிகளுடன் இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த ஏர் பஸ் A320-200 ரக விமானம் காணாமல் போய் ஒரு நாள் முடிந்துவிட்டநிலையில் அதனைத்தேடும் பணிகள் தொடர்கின்றன. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதற்கான எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் நிலைகுலைந்த நிலையில் இந்தோனேஷியாவின் சுரபயா விமானநிலையத்தில் குழுமியிருக்கின்றனர். இந்த விமானத்தோடு காணாமல் போயிருக்கும் தமது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் குறித்த தகவல்களுக்காக அழ்ந்த கவலையோடு அவர்கள் காத்திருக்கின்றனர்.

கடைசியாக மோசமான வானிலையை காரணம்காட்டி பாதை மாற்றுவதற்காக இந்த விமான ஓட்டி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் இந்த விமானம் அதன் கண்காணிப்பு ரேடார்களின் பார்வையில் இருந்து மறைவதற்கு முன்னதாக அதனிடமிருந்து எந்தவிதமான அபாய அறிவிப்போ, அவசர உதவிக்கான கோரிக்கையோ வரவில்லை.

இந்த பின்னணியில் தமக்கு கொடுக்கப்பட்ட விமானத்தின் ஒருங்கிணைப்புத் தகவல்களை சீராய்வு செய்து பார்த்தபோது இந்த விமானம் தற்போது கடலுக்கு அடியில் இருக்கலாம் என்கிற அனுமானத்திற்கே தாங்கள் வந்திருப்பதாக இந்த விமானத்தை தேடுவதற்கான இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் பாம்பாங் சொய்லிஸ்டோ ஜாகர்த்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் மலேசிய விமானங்களை தெருவில் உருட்டித்தான் கொண்டுபோகவேணும்போல் உள்ளது.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

பேயும் இல்ல பிசாசும் இல்ல. வயதான இந்த விமானங்களை வைச்சு வியாபாரம் பண்ணுற விமான நிறுவனங்கள் தான் குற்றவாளிகள்.

 

இன்று குறிப்பிட்ட விமான நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில்.. எந்த விமானமும் 100% பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையாம். அதை ரிக்கெட் போடேக்க சொல்லி விற்கலாமில்ல. எதில கூட பாதுகாப்போ அதில மக்கள் போவினம் தானே..!!

 

விமானங்களில்.. காலநிலை அறிவிப்புக்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ள நிலையிலும்.. பழைய விமானங்களில்.. தொழில்நுட்ப முன்னேற்றம் இன்மையால்.. விமான ஓட்டிகள்.. பிந்திய கடைசி நேர முடிவுகளை எடுக்க வெளிக்கிட்டு.. விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பேயும் இல்ல பிசாசும் இல்ல. வயதான இந்த விமானங்களை வைச்சு வியாபாரம் பண்ணுற விமான நிறுவனங்கள் தான் குற்றவாளிகள்.

 

இன்று குறிப்பிட்ட விமான நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில்.. எந்த விமானமும் 100% பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையாம். அதை ரிக்கெட் போடேக்க சொல்லி விற்கலாமில்ல. எதில கூட பாதுகாப்போ அதில மக்கள் போவினம் தானே..!!

 

விமானங்களில்.. காலநிலை அறிவிப்புக்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ள நிலையிலும்.. பழைய விமானங்களில்.. தொழில்நுட்ப முன்னேற்றம் இன்மையால்.. விமான ஓட்டிகள்.. பிந்திய கடைசி நேர முடிவுகளை எடுக்க வெளிக்கிட்டு.. விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். :icon_idea:

தற்போதைய குவாலிட்டி இன்ஸ்பெக்சன்(quality inspection)  99% இலக்குவைத்தே செய்யபடுகிறது. (ISO (international standard organization) recommended requirement is 99%)
அதைதான் அவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் எல்லா விமானமும் 1% பிழையுடன் பார்க்கிறது என்பதல்ல ...
ஆனால்  1% பிழைக்கு சாத்தியம் அதிகம் என்பதுதான். 
இப்போதும் பல புதுக்கார்கள் பிழைப்பதற்கும் அதுதான் காரணம். 

The AirAsia Indonesia plane was delivered in 2008, has flown 13,600 times, completing 23,000 hours, and underwent its last maintenance in November.

 
 
_79964131_pair.gifCo-pilot Remi Emmanuel Plesel (left) and Captain Iriyanto
_79964129_6j9k5q72.jpgRelatives pored over passenger manifests at both affected airports
_79956714_79956712.jpgThe Airbus, pictured here on an earlier flight, disappeared about an hour after takeoff
Difficult year

The AirAsia Indonesia plane was delivered in 2008, has flown 13,600 times, completing 23,000 hours, and underwent its last maintenance in November.

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விளையாட்டு பிளைட்டுக்கு ரிமோட்கொன்ரோல் இருக்கிறமாதிரி......பெரிய பிளைட்டுகளுக்கும் ரிமோட்கொன்ரோல் வைச்சிருக்கிறாங்களோ ஆருக்குத்தெரியும்????  :D  :lol:
 
பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலையே இருக்கிறதை ஆட்டிஅசைக்கிறவங்களுக்கு உதெல்லாம் சிம்பிள் வேலை.... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.