Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கார் வாங்கலாம் வாங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுபாரு என்று ஒரு கார் இருக்கிறது. ஜப்பானியக் கார்களில் மிகவும் தரமானது. ஓடுவதற்கும் இதமானது. 4சில்லுகளும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் மிகவும் வசதியான ஓட்டம்.

 

பொக்ஸர் எனும் நேர் 4 அல்லது 6 சிலிண்டர்களைக் கொண்டது.

 

விலையும் கைக்கு அடக்கமானது.

 

எம்மவர்கள் பலருக்குத் தெரியாத ஒரு கார்.

 

டொயோட்டா , மஸ்டா , கொண்டா என்று நிற்காமல் மற்றைய கார்கள் பற்றியும் தேடிப் பாருங்கள்.

 

Suzuki also similar to Subaru type.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் ஒரே நாடுதான், ஆனால் தரம் என்று வரும்போது சுபாருவின் முன்னால் சுசூக்கியினால் நிற்கமுடியாது. இது ஆப்பிளையும் ஆரெஞ்சையும் ஒப்பிடுவது போன்றது. சுபாரு தனிரகம் ! ஓட்டிப்பார்த்தால்த்தான் அருமை தெரியும். ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் வாத்தியார்!
 
இப்போது கார் வாங்கியிருப்பீர்கள் என நினைக்கின்றேன். இருந்தாலும் நானும் ஒருசில வார்த்தகளை பகிர்கின்றேன். :)
 
கார் என்றால் பணத்தை தெருவில் போட்டதிற்கு சமன் என்று சொல்வார்கள். :icon_idea:
கார் வாங்கும் போது பெறுமதி என்று பார்த்தால் அவரவர் வருவாய்களுக்கு ஏற்ப சிந்தித்து வாங்குவது புத்திசாலித்தனம்.
ஒரு சிறிய தொகையை வைத்து விலையுயர்ந்த கார்களும் வாங்கக்கூடிய சொர்க்க காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு சிறிய வேறு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கக்கூடிய வல்லமை இருக்க வேண்டும்.
எனவே கட்டுக்காசுக்கு கார்வாங்கினால் அனாவசிய வட்டியும் தேவையில்லாத இதர செலவுகளும் வரும்.
பண வசதியிருந்தால்....உடனடி கட்டணத்துடன் வாங்குவதே உத்தமம். :icon_idea:
 
கார் எங்கு வாங்கினாலும் உத்தரவாதத்துடன் வாங்க வேண்டும். இது மிகமிக முக்கியம். ஆகக்குறைந்தது 24 மாதங்கள்.இது ஒருசில கண்டு பிடிக்க முடியாத தொழில்நுட்ப பிரச்சனைகள் வரும்போது எமக்கு பேருதவியாக இருக்கும்.
 
காரின் வேகம் என்று பார்த்தால் 100 குதிரைவலு நடுநிலையில் உள்ளது.
 
எந்த கார் என்று வரும்போது....
ஜேர்மனி கார்கள் அத்திவாரம் பலமானது.நீண்டகாலம் பாவிக்கக்கூடியது.வேகவீதியில் போகும்போது அதன் அமைதியும் வீதியுடனான அழுத்தமும் இதர நாட்டு வாகனங்களை விட வேறுபட்டது. .40 வருட பழைய கார்களை இன்னும் காணக்கூடியதாக இருக்கின்றது.
 
ஜப்பான்/ கொரிய நாட்டு கார்கள் அளவுக்கதிகமான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன.பார்க்க வடிவாக இருக்கும். காரின் உட்புறமும் கண்கவர் கவர்கின்றவையாக இருக்கும்.பாரம் குறைந்த கார்கள். ஒரு சிறிய விபத்து வந்தாலும் பாரதூரமாக முடிந்த கதைகள் பல.வாகன காப்புறுதிகளும் கொஞ்சம் அதிகமென நினைக்கின்றேன்.சரியாகத்தெரியாது. திருத்த வேலைகள் வந்தால் ஜேர்மன்கார்களைவிட மூன்றுமடங்கு செலவு அதிகமென கேள்விப்பட்டுள்ளேன்.
 
 
 
நீங்கள் ஜேர்மன் நாட்டில் வசிப்பவராக இருந்தால்....... ஜேர்மன் நாட்டு கார் வாங்குவதே புத்திசாலித்தனம்.  :D
 
பலருக்கு பயன் மிக்க திரியை ஆரம்பித்த வாத்தியாருக்கு நன்றிகள்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் அவுஸ் வந்த புதிதில் எனக்கு இலவசமாக ஒரு 1989 Nissan Pulsar நண்பன் ஒருவன் தந்திருந்தான். ஓர் $1,500 செலவுக்கு பின்னர் ஓடக்கூடியதாக இருந்தது. அறப் பழையகார். ஒன்றரை வருடங்களில் எனது இன்னொரு நண்பன் ஓட்டும் போது எஞ்சின் வெடித்து கையை விட்டது. $50 இக்கு பழைய இரும்புக்கு கொடுத்தேன். பின்னர் Nissan Skyline  R33 sports கார் வாங்கினேன். 1997, turbo உள்ள கார். அமத்தினால் பறக்கும். பின்னர் 2001 BMW M3, சிறந்த ஒரு sports கார். Skyline போலவே எண்ணெய் தாங்கியையும் கட்டி இழுத்துக்கொண்டு போக வேண்டும். பின்னர் புத்தம் புதுக்கார் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். BMW 3 series வாங்கலாம் எண்டு யோசித்துக் கொண்டிருந்தேன் ஆனால் வாங்கினதோ Toyota Hilux SR5 4 x 4 Turbo Diesel. சனி ஞாயிறு மட்டுமே பாவிப்பதால் சின்னக் காராக வாங்கியிருக்கலாம் எண்டு இப்ப யோசிக்கிறேன். மனைவிக்கு ஒரு Mazda 2 hatch வாங்கியிருந்தேன். அந்தக்கார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்திலே முற்றாக நொறுங்கி காப்புறுதி மீண்டும் ஒரு புது Mazda 2 வை தந்திருக்கிறார்கள். மோட்டார் சைக்கிள் வரிசையிலே 1994 Yamaha Virago 250, 2010 Honda CBR, 2007 Yamaha R6 (current)   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

புதுக்கார் வாங்குகையில் விற்பனை வரி 20% கட்டணும். ஒரு முறை தான் அறவிடுவார்கள்.
 
பசை உள்ளவர்களும், பெரு நிறுவன உயர் அதிகாரிகளும் தமது வாகனங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, அல்லது பிடிக்காவிடில் அதற்கு முன்னரோ மாத்துவார்கள்.
 
ஆகவே நான் எப்போதும் 6 மாத வயதுள்ள புதுக்கார் வாங்கி 20% சேமித்துக் கொள்வேன். 

 

 

நாதமுனி நீங்கள் சரியான கெட்டிக்காரனாக இருக்கின்றீங்கள்.

நீங்கள் சொல்வதைப் போலவே பலரும் ஆற் மாதம் அல்லது ஒரு வருடம் பாவித்த கார்களையே வாங்குகின்றனர்.

சில கார்கள் 10 அல்லது 12 ஆயிரம் கி மீ களையும் தாண்டாமல் இருக்கும்.

ஆனால் நிறுவனங்கள் பாவித்த காராக இருந்தால் பலரும் பாவித்திருப்பார்கள். அதனால் அவதானம் தேவை.

நீங்கள் கூறியதைப் போல இங்கு இல்லை.

எப்படியான காரை வாங்கினாலும் இறுதிப்பாவனையாளராக நாங்கள்

19 வீதம் வரி  கட்டியே தீரவேண்டும்.

நிறுவனங்கள் அந்த வரியை மீண்டும் விற்பனை வரியில்  மாதமோ வருடமோ  முடியச் சரி செய்துகொள்வார்கள்.

உங்கள் கருத்திற்கு நன்றிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி நீங்கள் சரியான கெட்டிக்காரனாக இருக்கின்றீங்கள்.

நீங்கள் சொல்வதைப் போலவே பலரும் ஆற் மாதம் அல்லது ஒரு வருடம் பாவித்த கார்களையே வாங்குகின்றனர்.

சில கார்கள் 10 அல்லது 12 ஆயிரம் கி மீ களையும் தாண்டாமல் இருக்கும்.

ஆனால் நிறுவனங்கள் பாவித்த காராக இருந்தால் பலரும் பாவித்திருப்பார்கள். அதனால் அவதானம் தேவை.

நீங்கள் கூறியதைப் போல இங்கு இல்லை.

எப்படியான காரை வாங்கினாலும் இறுதிப்பாவனையாளராக நாங்கள்

19 வீதம் வரி  கட்டியே தீரவேண்டும்.

நிறுவனங்கள் அந்த வரியை மீண்டும் விற்பனை வரியில்  மாதமோ வருடமோ  முடியச் சரி செய்துகொள்வார்கள்.

உங்கள் கருத்திற்கு நன்றிகள்

 

 

சில நிறுவன கார்கள் தாம் கட்டிய வரி மீண்டும் உங்களிடம் அறவிடுவதாக (தள்ளி விடுதல்) குறிப்பிட்டே விற்கப்படும். இது அவர்களது 'cash flow' விற்கு உதவும்.
 
நீங்கள் ஒரு நிருவனமாயிருந்தால் வரிக் காசைக் கட்டி, பின்னர் நீங்கள் கட்ட வேண்டிய வரியில் அதைக் கழித்துக் கொள்ளலாம். 
 
நீங்கள் தனி ஆளாக, இருந்தால் அந்தக் கார் தேவை இல்லையே. ஏனெனில் நீங்கள் அந்த வரிப் பணத்தினை மீட்க முடியாது. ஆகவே பிரத்தியேக பாவனைக்கு வாங்குபவர்கள், நிறுவனம் விற்கும் காரின், வரி மீள் அறவிடுவதாயின் தவிர்த்து விடலாம்.
 
நாட்டுக்கு நாடு வித்தியாசமான வரிச் சட்டம். சில நாடுகளில் ஒரு கார் எதனை முறை விற்கப் படினும் வரி கட்ட வேண்டும்.
 
உதாரணமாக UK யில் lottery. சீட்டு விற்கும் போதே, வரி அறவிடுவதால், பரிசு பெறுபவருக்கு வரி இல்லை. காரணம்: வெல்லாதோர் tax reclaim பண்ணலாம் என்பதால். ஆனால் வேறு சில நாடுகளில் பரிசு பெறுபவருக்கும் வரி உண்டு.
 
அரசு நினைத்தால் எதுவும் முடியும் தானே.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

புதுக்காரில் சௌகரியம், அசௌகரியம் என்று இரண்டும் உண்டு.

அதனை குறிப்பிட்ட கால அளவுகளில் அதனை பராமரிப்புக்கு விட்டு, அதன் புத்தகத்தில் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை பராமரிப்புக்கு.... 500 - 1000€ வரை செலவாகும்.

 

இங்கு வாகனம் வைத்திருந்து 28 வருடங்களானாலும், இப்போ வைத்திருக்கும் காருடன் மூன்று கார்களையே வாங்கியுள்ளேன்.

 

 

இன்ன கார்தான் ... வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் ஊரில் உள்ள அது சம்பந்தம்பட்ட கார் கொம்பனிகளின் விற்பனை நிலையங்களையும், பத்திரிகைகளையும் தனியே... நோட்டமிடுவேன்.(இதற்கு 2 மாதம் எடுக்கும்)

 

 

அதனை பென்சன் எடுத்தவர் பாவித்திருந்தால்... இன்னும் சந்தோசம்.

இளையவர்களும், துருக்கியரும் பாவித்த காரை வாங்கவே மாட்டேன்.

 

எல்லாம் சரி வந்து விட்டால்..... காரின் தரத்தை அறிய ஒரு Hobby மெக்கானிக் ஒருவரையும், குறிப்பிட்ட விலையிருந்து 1500 € குறைக்க இன்னுமொரு நண்பர் உள்ளார், அவரையும் அழைத்துச் சென்று பேரம் பேசி.....   :D

 

 

நிறைய நேரம் எடுத்தும்  பல ஆலோசனைகளுக்கும் பின்னரும் கார் வாங்குவதால் தான் நீங்கள் இத்தனை காலத்திலும் மூன்று கார்களைப் பாவித்துள்ளீர்கள் என்று நினைக்கின்றேன் .

 

அத்துடன் காரின் பராமரிப்பிலும் கவனம் எடுப்பதாகத் தெரிகின்றது. பாவித்த கார்களை வாங்கும் போது முதியோர்கள் பாவித்த கார்களை வாங்கினால் பல நன்மைகள் உள்ளன.

 

நீங்கள் கூறியதுபோல இளையவர்கள் பாவித்த காரையோ அல்லது துருக்கியரிடமிருந்தோ கார்களை வாங்குவதைத்  தவிர்ப்பது நல்லது.இளையவர்கள் தாறுமாறாக ஓடித்தள்ளுவார்கள் பராமரிப்பிலும் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.

 

துருக்கியர்கள் தனது மாமி பாவித்து மச்சான் பாவித்தது எனப் பல பொய்களைச் சொல்லிக் காரை விற்று விடுவார்கள். அது அவர்களது வியாபாரம் என்பது பலருக்கும் தெரிய வருவதில்லை.

 

காரின் விலையைக் குறைப்பதற்கும் பல யுக்திகளைக் கடைப்பிடிக்கின்றீர்கள். :D  :lol: 

 

நல்ல பராமரிப்பில் இருந்த கார்களை வாங்கித் தொடர்ந்தும் பராமரிப்பில் கவனம் எடுத்தால் தமிழ் சிறி அண்ணையைப் போல 28 வருடங்களுக்கு மூன்று  கார்களே போதும் என்பதைக் கவனத்தில் கொள்கின்றோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுபாரு என்று ஒரு கார் இருக்கிறது. ஜப்பானியக் கார்களில் மிகவும் தரமானது. ஓடுவதற்கும் இதமானது. 4சில்லுகளும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் மிகவும் வசதியான ஓட்டம்.

 

பொக்ஸர் எனும் நேர் 4 அல்லது 6 சிலிண்டர்களைக் கொண்டது.

 

விலையும் கைக்கு அடக்கமானது.

 

எம்மவர்கள் பலருக்குத் தெரியாத ஒரு கார்.

 

டொயோட்டா , மஸ்டா , கொண்டா என்று நிற்காமல் மற்றைய கார்கள் பற்றியும் தேடிப் பாருங்கள்.

 

நான் ஒரு சுபாருப் பிரியன்! மகள் பிறந்த நேரம் நல்ல விபத்து பாதுகாப்புடன், பனியில் வழுக்காமல் ஓடக் கூடிய, ஆனால் விரலுக்கேத்த வீக்கமான விலையுடன் வாகனம் தேடிய பொழுது சுபாரு தான் பட்டியலில் முதலில் வந்தது. சுபாருவின் சிறப்பம்சங்கள் பல, அவற்றில் சில:

 

எல்லா சுபாரு வாகனங்களும் எப்போதும் நாலு சக்கர ஓட்டம் கொண்டவை! (இதன் பிரதிகூலம், எரிபொருள் கொஞ்சம் அதிகம் செலவாகும்!, அனுகூலம், மலை, பனி, மழை எதிலும் பாதுகாப்பான வழுக்கல் இல்லாத ஓட்டம்!)

 

இதன் எஞ்சின் குறுக்காக இருப்பதால், புவியீர்ப்பு மையம் எப்பவும் தாழ்வாக இருக்கும், சடுதியான திருப்பத்தில் கவிழும் ஆபத்து குறைவு.

 

பயணிகள் அமரும் பகுதியும், கார்கோ பகுதியும் விசாலமானவை

 

விலையைப் பொறுத்தவரை, ஒப்பிடத் தக்க டொயோட்டா, ஹொண்டாவை விட மலிவு.

 

உலகின் கடினமான பாதைகள் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுபாரு கார்கள் அதிகம் பாவனையில் இருக்கின்றன. இலங்கையிலும் கண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஒரு முதுமொழி சொல்வார்கள்  நல்லாயிருக்கும் ஒருவனை கெடுப்தானால் மூன்று வழிகள் உள்ளதாக.

 

1) பழைய காரை வாங்கிக் கொடுப்பது

அல்லது

2)பங்குக் காணியை வாங்கிக் கொடுப்பது

அல்லது

3) மூளை சுகமில்லாத ஒரு பெண்ணை கட்டிக் கொடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அமெரிக்காவில் நிறைய புதிய கார் கொம்பனிகள்

 

000 டவுன்   000 இன்றஸ்ற்

 

இதில் ரொயாட்டா கம்பனிகள் கொடிகட்டப் பறக்கின்றன.

 

உங்கள் இடத்தில் இப்படி வசதியிருந்தால் நல்ல டீல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு பிடித்த கார்கள் டோயார்ரா ......மஸ்டா ...........இதைத்தவிர வேறு எந்தக்கார்களையும் நான் வாங்குவதில்லை  :D

 

எல்லா வாகனங்களும் எல்லோருக்கும் பொருந்தாது.

வாகனப் பொருத்தமும் அமைய வேண்டும் என்பார்கள்.

அப்படி உங்களுக்கு மஸ்டாவும் டொயோற்றாவும் அமைந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. :D

தமிழ் சூரியன் உங்கள் கருத்துக்கு நன்றிகள்

இந்த ரெண்டு வகையான காரிலையும் தற்சமயம் கண்.

 

Chevrolet Camaro

 

2010%20Chevrolet%20Camaro%20%20(4).jpg

 

 

 

 

Dodge Charger

 

2014-dodge-charger-4.jpg

 

 

 

 

2014-Dodge-Charger-Sedan-SE-4dr-Rear-whe

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு சுபாருப் பிரியன்! மகள் பிறந்த நேரம் நல்ல விபத்து பாதுகாப்புடன், பனியில் வழுக்காமல் ஓடக் கூடிய, ஆனால் விரலுக்கேத்த வீக்கமான விலையுடன் வாகனம் தேடிய பொழுது சுபாரு தான் பட்டியலில் முதலில் வந்தது. சுபாருவின் சிறப்பம்சங்கள் பல, அவற்றில் சில:

 

எல்லா சுபாரு வாகனங்களும் எப்போதும் நாலு சக்கர ஓட்டம் கொண்டவை! (இதன் பிரதிகூலம், எரிபொருள் கொஞ்சம் அதிகம் செலவாகும்!, அனுகூலம், மலை, பனி, மழை எதிலும் பாதுகாப்பான வழுக்கல் இல்லாத ஓட்டம்!)

 

இதன் எஞ்சின் குறுக்காக இருப்பதால், புவியீர்ப்பு மையம் எப்பவும் தாழ்வாக இருக்கும், சடுதியான திருப்பத்தில் கவிழும் ஆபத்து குறைவு.

 

பயணிகள் அமரும் பகுதியும், கார்கோ பகுதியும் விசாலமானவை

 

விலையைப் பொறுத்தவரை, ஒப்பிடத் தக்க டொயோட்டா, ஹொண்டாவை விட மலிவு.

 

உலகின் கடினமான பாதைகள் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுபாரு கார்கள் அதிகம் பாவனையில் இருக்கின்றன. இலங்கையிலும் கண்டிருக்கிறேன்.

 

நன்றி ஜஸ்டின்,

 

நான் டொயோட்டா, மஸ்டா என்று தொடங்கி இப்போது சுபாருவில் நிற்கிறேன். நான் ஒட்டிய கார்களில் சுபாருபோல ஓட்டத்திற்கும் உடம்பிற்கும் இதமானது இதுவரை பார்த்ததில்லை. 2011 இல், இரண்டுவருட பாவனையின் பின்னர் 2009 SUBARU FORESTER XS PREMIUM  வாங்கினேன். அலாதியான ஓட்டம். ரோட்டின் குலுக்கம் எதுவும் உடம்பிற்குத்தெரியாமல் படகில் போவது போல இருக்கும். அதேபோல ஸ்டியரிங், பிரேக்கிங் என்பன கூட மிகவும் இலகுவானவை.

 

டொயோட்ட. மஸ்டா என்பவற்றுடன் ஒப்பிடும்போது, பலமான கார் சுபாரு. மற்றைய ஜப்பனிய கொரிய வாகனங்களுடன் ஒப்பிடும்போது இதற்கான காப்புறுதியும் குறைவு ( WRX ஐத் தவிர -  ஏனென்றால் இந்தக் காரை COPS MAGNET என்று சொல்வார்கள், அப்படியொரு ஓட்டம், பொலிஸார் கண்டால் நிச்சயம் கலைப்பார்கள் அல்லது மறிப்பார்கள்).

 

எம்மில் பலருக்கு இந்தக் கார் பற்றித் தெரியாது.வெள்ளைகளுக்கு இதன் மேல் ஒரு பைத்தியம். வார விடுமுறை நாட்களென்றால் எடுத்துக்கொண்டு FOUR WHEEL DRIVING, OFF ROAD DRIVING என்று கிளம்பி விடுவார்கள். எனது வெள்ளையின நண்பன் ஒருவன் எனது கார்பற்றிப் பேசும்போது, "கொஞ்சம் பெற்றோல் அதிகமாகக் குடிக்குமே ?" என்று கேட்டான். ஆனால் எனக்கு 100 கிலொ மீட்டர்களுக்கு 9.2 - 9.4 லீட்டர் பெற்றோல்தான் செலவாகிறது. நான் 98 Premium Petrol மட்டுமே பாவிக்கிறேன். இதனால், காரின் இயந்திரம் பாதுகாக்கப்படுவதோடு, அதிக கிலோ மீட்டர்களும் கொடுக்கிறது. ஒவ்வொரு 6 மாதத்திற்கும் தவறாமல் மெயின்ரனஸ் செய்துவிடுகிறேன், அதானால் இதுவரை எந்தப் பிரச்சினையுமில்லை.

 

இந்தக் கார்பற்றி வெள்ளையினத்தவர் எப்போதும் ஒன்றைச் சொல்வார்கள், அதாவது ஒரு மில்லியன் கிலோ மீற்றர்கள் வரை அசையாமல் ஓடும், நீங்கள் 15 - 20  வருடங்களுக்கு இன்னொரு கார்பற்றி யோசிக்கத் தேவையில்லை என்று. எனக்கும் அது உண்மை என்றுதான் தோன்றுகிறது.

 

ஆகவே பயப்படாமல் சுபாரு வாங்குங்கள், ஆனால் WRX வாங்குவதாக இருந்தால் மட்டும் நிதானமாக ஓடுங்கள், ஏனென்றால் எப்போது பொலீஸ் கார் உங்களைப் பிந்தொடர்கிறதென்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் !!!!!

குளப்படிகார SUBARU WRX TURBO

 

2s8h7k0.jpg

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பெரும்பாலும் ஜேர்மன் கார்களும்... அமெரிக்க வாகனங்களுமே வாங்க பிடிக்கும்... ஜேர்மனி கார்களில் பிடிக்காத விடயம் அதன் மெயின்ரெனன் .... யானை விலை.... குதிரை விலை... உதிரிப்பாகங்கள்...$120 மணித்தியால லேபர்.

 

BMW விட Audi உள்ளும் வெளியும் நன்றாக இருக்கும்.... ! 

வாங்குங்க... ஏ 8 8 சிலின்டர்....4.2 லீட்டர் இன்ஜின்.... பறக்கலாம் அதிவேக பாதையில்.....

சோகம் என்ன என்றா....12மாதத்தில் 11 ஸ்பீடிங் ரிக்கற்.... :(   (சத்தியமாக)

 

audi  நல்ல கார் மட்டுமல்ல அதிகளவில் ஜேர்மன் பாவனையாளர்களால் விரும்பப்படும் வாகனமும் கூட. எந்த வாகனமானாலும் அந்த வாகனத்தை  வேறு ஒரு நாட்டில் பாவிக்கும் போது அதன் உதிரிப்பாகங்களின் விலை அதிகமாகவே இருக்கும் என நினைக்கின்றேன்

bmw  வாகனத்தின் பராமரிப்பு செலவு  ஜேர்மனியிலும் அதிகமாகவே உள்ளது. அதைவிட பாவித்துச் சிறிது காலம் செல்ல அதன் எரிபொருள் பாவிப்பு அதிகமாகி விடுகின்றது.

audi  யில் ஆசை தான்  இருந்தாலும் நமக்கு இந்த விபரீத ஆசை இல்லை. :D:lol:

 

Audi_TT_2518592b.jpg

 

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிதர்சன்  

 

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.