Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!!!- எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் எவ்வாறான பங்கினை வகிப்பது என்பது பற்றி இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான பங்களிப்பினை வழங்குவது என்பது பற்றி கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்காத போதிலும், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் ஆலேசானைக் குழுவாக இயங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி கட்சியும் இவ்வாறான ஓர் நிலைப்பாட்டை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.நாடு தற்போது சர்வாதிகார ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஜனநாயகம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/news/36660/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/36660/57//d,article_full.aspx

 

இன்றைய ஜனாதிபதி மகிந்தவின்  ஆலோசகர்களாகத்தான் பிள்ளையானும் கருணாவும் உள்ளார்கள்.

ஆகவே  மைத்திரிபால ஜனாதிபதியாக வந்தால்   அவருக்கு ஆலோசகராக இருக்கச்  சுமந்திரன் மட்டுமே லாயக்கு :)

 

  • கருத்துக்கள உறவுகள்

Tamil leaders may lose all but will keep their dignity intact என்பது தந்தை செல்வா வாய்மொழி.

சம்பந்தன், சுமோ, சீவி மாவை யாரும் அமைச்சுப் பதவிக்கு அடிபடாயினம். செல்வமும் அப்படியே. ஆனால் சுரேசை நம்ப முடியாது. Dignity யா கிலோ என்ன விலை என்பார், பதவியாசை காட்டினால்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண இப்பவே நைசா நூல் விட்டுப்பாக்கிறார். அப்ப வல்லையில் போட்ட பனங்கொட்டைக்கு யார் தண்ணி ஊத்திறது.

  • கருத்துக்கள உறவுகள்

Tamil leaders may lose all but will keep their dignity intact என்பது தந்தை செல்வா வாய்மொழி.

சம்பந்தன், சுமோ, சீவி மாவை யாரும் அமைச்சுப் பதவிக்கு அடிபடாயினம். செல்வமும் அப்படியே. ஆனால் சுரேசை நம்ப முடியாது. Dignity யா கிலோ என்ன விலை என்பார், பதவியாசை காட்டினால்.

 

சம்பந்தரை விடுங்கள் அவருக்கு வயதாகிவிட்டது

 

மாவை அண்ணை அன்றிலிருந்து தலைமைக்குக் கூட ஆசைப்படாமல்

தமிழருக்காக வாழ்ந்து அரசியல் செய்கின்றார். தலைமைக்குக் கட்டுப்படும் பண்பு அவரிடம் அதிகமாக உள்ளதால் பல இடங்களிலும்

 சமாளிக்க வேண்டியுள்ளது.எந்தச் சிங்கள அரசுடனும் சேர்ந்து அரசியல் செய்யமாட்டார் என அடித்துக்கூறலாம்.

 

விக்கினேஸ்வரன் தமிழருக்காக இதுவரை பெரிதாக எதையும் செய்யவில்லை.

.அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஆசை அவருக்கு இல்லை என்று சொல்ல முடியாது.

 

 

சுமந்திரன் கூட்டமைப்பில் மக்களால் தெரிவு செய்யாப்படாமல் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்.

அதே பின்கதவால் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொளமாட்டார் என்பதற்கு  என்ன உத்தரவாதம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீலனின் இடத்தை இவர் நிரப்ப.. கதிர்காமரின் இடத்தை யார் நிரப்பிறது. சம்பந்தனின் இடத்தை அவரே நிரப்பிக்குவார். மீண்டும்.. 1998 காட்சிகள் அரங்கேற உள்ளன போலும்.!!! அதை மிஞ்சி......  இந்த முறை மகிந்த கூட்டணி தீர்மானத்தை நாடாளுமன்றில் எரிக்கும்..!! சென்ற முறை ரணிலின் ஐ தே க.. மற்றும் ஜே வி பி எரித்தார்கள். அப்படியே சந்திரிக்கா நிறைவேற்று அதிகாரத்தை தக்க வைச்சார்... இப்ப மைத்திரி தக்க வைப்பார். போர்க்குற்றம்.. இனப்படுகொலை.. எல்லாம் ஆவிபறப்படைஞ்சிடும். தமிழர்கள் கொட்டாவி விட்டுக்க வேண்டியான்.  :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

."எவ்வாறான பங்களிப்பினை வழங்குவது என்பது பற்றி கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்காத போதிலும், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்" - எம்.ஏ.சுமந்திரன்

அவரே இது தன் தனிப்பட்ட முடிவு என்று சொல்கிறார்.. GTN உட்பட எல்லாரும் TNA சொன்னதாக சொல்கிறார்கள்..

இவர் அப்புக்காத்து பாருங்கோ.. நாளைக்கு TNA முடிவெடுத்திட்டு .. முடிவுக்கு கட்டுபடுகிறன் என்று சொல்லலாம் தானே.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவரை.... யார், தனக்கு அமைச்சு பதவி வேண்டாம் என்று அறிக்கை விடச் சொன்னார்கள்?
 

அப்படிச் சொன்னால் தான்...... கூட்டமைப்பில் உள்ள,

மற்றைய உறுப்பினர்கள் பம்மிக் கொண்டு இருப்பார்கள் என்று, நினைத்தாரா?
அப்படி... அமைச்சு பதவி கொடுக்க வேண்டும் என்றால்.... சுமந்திரனை மிஞ்சி..... ஒரு "கிங் மேக்கர்" எனும்  நினைப்பு.
 

இதுகளில்.... காட்டும் குள்ள நரித்தனத்தை..... சுமந்திரன் ஜெனிவா போன்ற சர்வதேச அரங்குகளில் காட்டியிருக்கலாம்.
அங்கெல்லாம்... சொதப்பி விட்டு, இப்போ.... உள்ளூரில் சொதப்ப வந்திருக்கிறார்.
 

ஒன்றேயொன்றை.... சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்,
தமிழன் பனங்காட்டு நரி. உங்களது... சலசலப்புகளை, கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்.

Edited by தமிழ் சிறி

முன்னர் இப்படித்தான் நடந்தது ஆனபடியால் மீண்டும் அப்படித்தான் நடக்கும் இதைவிட வேறு விதமாக எம்மவரால் சிந்திக்கமுடியாது .

 

ஆயுத போராட்டகாலங்களிலும் விடுதலை புலிகள் பின்வாங்கும் போது புலிகள் திருப்பி அடிக்கும் என்று நம்புவார்கள் அதை அவர்கள் சில தடவைகள் உண்மை என்று நிரூபித்ததன் விளைவுதான் இறுதி யுத்தத்திலும் இந்தா அடிக்குது இந்தா அடிக்குது என்று கடைசிவரை நம்பி ஏமாந்தார்கள் .

 

இந்த காலகட்டத்தில் கிரிகெட்டை உதாரணமாக வைத்து  Ian Botham 1981Australia vs England Cricket சீரிசை ஏறக்குறைய தனியொருவராக வென்றார் .பின்னர் அடுத்த சீரிஸ் விளையாடும் போது இங்கிலாந்து படு கேவலாமாக விளையாடும் போது Botham எப்படியும்  காப்பாற்றுவார் என்று நினைத்தார்கள் ஆனால் அவரும் மண்ணை கவ்வினார் .இதே கதைதான் விடுதலை புலிகளுக்கும் ஏற்படபோகின்றது என்று அப்பவே எழுதினேன் .

 

 எமது அரசியலில் பழைய சரித்திரங்கள் இனி திரும்பாது .

  • 1 month later...

சுமந்திரன் அமைச்சராகிவிட்டாரா ?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அமைச்சராகிவிட்டாரா ?

சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்.

சம்பந்தன், சுமந்திரன் இந்த இரண்டு பிறவிகளின் நலன்களையும் மட்டும் சதா 24 மணித்தியாலமும் சிந்திப்பவர் இந்த கரி என்பவர். நாளைக்கே கஜேந்திரகுமார் சம்பந்தன் என்பவரின் பக்கம் சேர்ந்தால் அவரை புகழுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.