Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி பட்டம் விடும் போட்டி: வானில் பறந்த அதிசயங்கள்

Featured Replies

kite%208556.jpg
 
வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான் மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பட்டங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
 
kite%208560.jpg
 
kite%208557.jpg
 
 
kite%208558.jpg
 
 
kite%208566.jpg
 
kite%208565.jpg
 
kite%208564.jpg
 
kite%208562.jpg
 
 
kite%208561.jpg
 
 
kite%208559.jpg
 
 
kite%208567.jpg
 
 
kite%208563.jpg
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

வேதாள மாதிரி உள்ள பட்டம் அழகாக உள்ளது, ஆனால் எவ்வளவு உயர பறந்தது என்று தெரியாது. தாஜ் மஹால் உயர பறக்கிறது போல உள்ளது . பட்டங்களில் கை வண்ணம் கண்டோம்.

  • தொடங்கியவர்

zfsdf.jpg

 

 

yujhkj.JPG

 

 

ryhfgh.jpg

 

 

guu.JPG

 

 

ggggggh.jpg

 

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் விநோத, சித்திர பட்டம் விடும் போட்டி வல்வெட்டித்துறை மடத்தடி உதயசூரியன் கடற்கரையில் புதன்கிழமை (15) இடம்பெற்றது. இந்தப் பட்டம் விடும் போட்;டியில் தாஜ்மஹால், சிறியரக உழவு இயந்திரம், சைனிஸ் றாகன், தேவதை, பறக்கும் பாம்பு, பிராந்து, ஆமை, மீன், பெப்சி கோலா, குதிரை, நட்;டுவக்காலி, கப்பல், உலங்கு வானூர்தி ஆகிய பல விநோத உருவப்பட்டங்களை உருவாக்கிய 53 போட்டியாளர்கள் இந்தப்போட்டியில் பங்குபற்றினார்கள். இந்தப் பட்டம் விடும் போட்டியில் தாஜ்மஹால் வடிவப் பட்டத்தை வடிவமைத்து ஏற்றிய சிவநாதன் நிமலன் என்பவர் முதலிடத்தைப் பெற்றார். இரண்டாம் இடத்தை சிறிய ரக உழவு இயந்திரத்தை வடிவமைத்த மகேந்திரன் காசன், மூன்றாமிடத்தை சைனிஸ் றாகன் பட்டத்தை வடிவமைத்த நாகலிங்கம் அகர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கல்வியில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற வல்வைப் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் இணைய நூலக வசதி அறிமுகப்படுத்தல் திட்டம் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.எஸ்.மீடின் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

 

/www.tamilmirror.lk/137744#sthash.vH5Eq8Lr.dpuf

இதுவும் ஒரு பொறியியல் தான்.. 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு பொலிகண்டியில் இப்படி ஒரு போட்டியை கண்டுள்ளேன்.. ஆனால் இவ்வளவு விநோதமாக இருக்கவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி : 11 வயது சிறுமியை கற்பிணியாக்கிய இளைஞருக்கு விளக்கமறியல்///

அடப்பாவிங்களா எல்லாரும் அங்க பட்டம் விட்டிட்டிருக்க இங்க ஒருத்தன்.....கட்டம் கட்டிட்டானே.....

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நுணுக்கமாகவும் அழகாகவும் பட்டங்களைக் கட்டி அதனைப் பறக்கவிட்டுச் சாதனை புரிந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எங்களால் முடிந்ததெல்லாம் இதுதான்.

1912113_10155110417950228_67742335757825
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எதைச்செய்தாலும்

திறம்படச்செய்வான்

அதிலொரு பட்டம் பெறுவான்

 

வாழ்த்துக்கள்

படிச்சு பட்டம் எடுப்பதிலும், காற்றில் பறக்கும் பட்டம் செய்வதிலும், மற்றவருக்கு பட்டம் வழங்குவதிலும் (முக்கியமாக துரோகிப் பட்டம்) ஈழத் தமிழன் எப்பவும் முன்னோடிதான் :D

 

(நெருப்பு கிருப்பை பத்த வைச்சுட்டனோ?)

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சு பட்டம் எடுப்பதிலும், காற்றில் பறக்கும் பட்டம் செய்வதிலும், மற்றவருக்கு பட்டம் வழங்குவதிலும் (முக்கியமாக துரோகிப் பட்டம்) ஈழத் தமிழன் எப்பவும் முன்னோடிதான் :D

 

(நெருப்பு கிருப்பை பத்த வைச்சுட்டனோ?)

 

 

இன்னொன்றையும் விட்டு விட்டீர்கள்

பத்த வைப்பதிலும்..... :lol:  :D 

படிச்சு பட்டம் எடுப்பதிலும், காற்றில் பறக்கும் பட்டம் செய்வதிலும், மற்றவருக்கு பட்டம் வழங்குவதிலும் (முக்கியமாக துரோகிப் பட்டம்) ஈழத் தமிழன் எப்பவும் முன்னோடிதான் :D

 

(நெருப்பு கிருப்பை பத்த வைச்சுட்டனோ?)

 

பத்தவைச்சுட்டியே பரட்டை

 

பிற்குறிப்பு: (ஒரு தமிழ் சினிமா நகைச்சுவையி இருந்து) 

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நுணுக்கமாகவும் அழகாகவும் பட்டங்களைக் கட்டி அதனைப் பறக்கவிட்டுச் சாதனை புரிந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எங்களால் முடிந்ததெல்லாம் இதுதான்.

1912113_10155110417950228_67742335757825

இது பிராந்து பட்டம், நல்ல காற்று இருந்தால் தான் ஏற்றலாம். யாடும் போது விண் சத்தம் காதைக் கிழிக்கும்

பட்டங்கள் பார்பதற்கு அழகாக உள்ளன. அதனை வடிவமைத்து வானில் பறக்கவிட்டு, மக்களை மகிழ்வடைவித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.