Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடுவிழாவுக்கு தயாராகிறது மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்களுக்கு நன்றி சபேசன்.

மருது, அயர்லாந்து மட்டுமில்லை, ஐரோப்பாவின் ஒரே சமுத்திரம் அட்லாண்டிக்கே, மேலே இருக்கும் ஆர்டிக்கை விட்டுப்பார்த்தால்.

வன்னியன், மத்தள ஒரு சர்வாதிகாரியின் கனவுத்திட்டம். தனது மாவட்டத்தில் விமான நிலையம், மைதானம், துறைமுகம் எல்லாம் கட்டும் திட்டத்தில் செய்தது.

இதற்கு ஒரு சரியான பிஸினஸ் கேஸ் ஒருபோதும் இருந்ததில்லை. வேணுமெண்டே விமான நிலையத்தையும், துறைமுகத்தையும் கட்டி, சிலகாலம் நட்டத்தில் ஓட்டியபின், லாபம் இல்லை என்று கூறி சீனாவின் ராணுவத்தேவைக்கு கையளிக்கும் திட்டம் இருந்ததாயும் கூறுவர்.

இப்போ இதை என்ன செய்வது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு ஹப் ஆக மாற்ற முடியுமா? இலங்கைக்குள் வரும் விமானங்கள் எப்படியும் கொழும்பில் தரித்தே செல்லும், அங்குதான் 95 சதவீத பயணிகள் ஏறி, இறங்குவர். சிங்கபூர், ஹாங்கொங், டோஹா எல்லாம் அருகில் இருக்கையில் இன்னொரு ஹப் இவ்வட்டாரத்தில் வர முடியுமா?

கிழக்கு கரைவழியே முல்லைத்தீவு ஊடாக யாழுக்கு ஒர் அதிவேக நெடுஞ்சாலை அமைத்தால் - அம்பாந்தோட்டையில் இருந்து யாழுக்கு 4 மணியில் போக முடிந்தால், வடகிழக்கின் கணிசமான பயணிகளை கவரலாம்.

எல்லாத்தையும் விட சிறப்பான திட்டம், இதை அமெரிகாவுக்கு தளம் அமைக்க நீண்ட நாள் லீசில் கொடுப்பதுதான்.

இந்தியா சம்மதித்தால்.

கோஷான்,

 

நீங்கள் குறிப்பிட்ட மூன்று ஹப்களைவிட, துபாய், அபுதாபி, பாங்காக் ஆகியவையும் உள்ளன. இந்த அனைத்து ஹப்களிலும் உள்ள மைனஸ் பாயின்ட்டுகள்

1) தலை சுற்ற வைக்கும் Landing Fee. 

2) Prime time slots கிடையாது.

3) தென்கிழக்கு ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் உள்ளன. இடையே இல்லை.

4) இந்தியாவை யாரும் ஹப் ஆக பயன்படுத்த விரும்புவதில்லை. காரணம் அவர்களது குழப்பமான Arrival Transit நடைமுறைகள். ஜெட் எயார்வேஸ் கொஞ்சக்காலம் அவர்களது டொரண்டோ - ப்ரசெல்ஸ் - சென்னை - கொழும்பு ரூட்டை, டொரண்டோ - சென்னை டிக்கெட்டைவிட குறைந்த விலைக்கு விற்றுப் பார்த்தார்கள். சரிப்பட்டு வரவில்லை. காரணம், ட்ரான்சிட் பயணிகளை இமிகிரேஷன்வரை கூட்டிக்கொண்டு போய் காட்டிவிட்டு வருவார்கள். அதையெல்லாம் யாரும் விரும்புவதில்லை.

 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முயற்சித்தால் இலங்கையில் அருமையான ஹப் கொண்டுவர முடியும். லொகேஷன் அப்படி. ஆனால், அரசு நிறுவனம் என்பதால் ஆர்வம் இல்லை. (இதற்குமுன் எமிரேட்ஸ் இலங்கையில் ஹப் உருவாகாமல் தடுத்துக்கொண்டு இருந்தது. இப்போது அந்த தடையில்லை. ஆனால், இவர்களுக்கு ஆர்வமும் இல்லை)

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

விளங்குது சபேசன்,

ஒரு குறைந்தவிலை (value for money) ஹப் அமைக்கலாம் என்றே படுகிறது. இப்போதும் மத்தளவுக்கு வரிச்சலுகை கொடுத்துப் பார்த்தும் சரியாகபோகவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

மத்தள ஒரு ஹப் ஆகினால், கட்டுநாயக்கவின் வீழ்சி தவிர்க முடியாயதாககூடுமா?

அல்லது துபை அபுதாபி போல அருகருகே இருந்தும் லாபகரமாய் போகுமா?

ஒன்று மட்டும் நிச்சயம் மத்தள லாபகரமாய் இயங்கினால் பலாலி சர்வதேசதரத்துக்கு உயர்வது ஒரு நாளும் நடவாது. வேணுமெண்டால் இந்தியாவுக்கு மட்டும் போகும் படி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேர் சொறீலங்காவை சிங்கப்பூருன்னு நினைச்சுக்கிட்டே வாழினம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து நேரடியா லண்டனுக்கு வந்த மூளையை விற்று பிழைக்கும் பார்டிகளுக்கு, மட்டகளப்பு திருமலைக்கே போயிராத கேசுகளுக்கு, இலங்கையின் வனப்பு பற்றியும் economic potential பற்றியும் தெரிய நியாயமில்லை.

ஏல் வரைக்கும் பிச்சைகார சிறிலங்கா போட்ட கல்விப்பிச்சையை வெட்கம் இன்றி விற்றுப்பிழைக்கும் நாம் நன்றி மறக்கக் கூடாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்குது சபேசன்,

ஒரு குறைந்தவிலை (value for money) ஹப் அமைக்கலாம் என்றே படுகிறது. இப்போதும் மத்தளவுக்கு வரிச்சலுகை கொடுத்துப் பார்த்தும் சரியாகபோகவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

மத்தள ஒரு ஹப் ஆகினால், கட்டுநாயக்கவின் வீழ்சி தவிர்க முடியாயதாககூடுமா?

அல்லது துபை அபுதாபி போல அருகருகே இருந்தும் லாபகரமாய் போகுமா?

ஒன்று மட்டும் நிச்சயம் மத்தள லாபகரமாய் இயங்கினால் பலாலி சர்வதேசதரத்துக்கு உயர்வது ஒரு நாளும் நடவாது. வேணுமெண்டால் இந்தியாவுக்கு மட்டும் போகும் படி இருக்கும்.

மத்தள, கட்டுநாயக இரண்டையும் ஹப் ஆக ரன் செய்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின்  fleet size போதாது. இப்போது உள்ளதைவிட 10 மடங்கு அதிகமாக வேண்டும். ஆனால், வெளி ஆட்கள் யாராவது குறைந்த விலையில் ஹப் அமைக்க இலங்கைக்கு வரலாம்.

 

உதாரணமாக, ப்ரசெல்ஸ் (பெல்ஜியம்).

 

உங்களுக்கு சபீனா எயார்லைன்ஸ் (Sabena) ஞாபகம் இருக்கிறதா? பெல்ஜியத்தின் பிரதான விமான நிறுவனமாக இருந்து, 2001-ல் பாங்ட்ரப்சி அடித்து மூடப்பட்டது. அதன்பின் ப்ரசெல்ஸ் எயார்போர்ட் அம்போவென்று இருந்தது.

 

இப்போது அதை ஒரு மினி ஹப் ஆக உபயோகிக்கிறது இந்தியாவின் ஜெட் எயார்வேஸ். 

 

இது எல்லாவற்றையும் விட திறம் பிளான், மத்தள விமான நிலையத்தின் தளபாடங்களையாவது பலாலிக்கு தள்ளிக்கொண்டு போக முடிந்தால், அட்டகாசம்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து நேரடியா லண்டனுக்கு வந்த மூளையை விற்று பிழைக்கும் பார்டிகளுக்கு, மட்டகளப்பு திருமலைக்கே போயிராத கேசுகளுக்கு, இலங்கையின் வனப்பு பற்றியும் economic potential பற்றியும் தெரிய நியாயமில்லை.

ஏல் வரைக்கும் பிச்சைகார சிறிலங்கா போட்ட கல்விப்பிச்சையை வெட்கம் இன்றி விற்றுப்பிழைக்கும் நாம் நன்றி மறக்கக் கூடாது.

 

சொறிலங்கா ஒன்றும் ஓசில தரேல்ல. எங்கள் பெற்றோர்  போன்று கஸ்டப்பட்டு   உழைச்சு வரிசெலுத்தினதில தான் சொறிலங்கா   ஊருக்கு பிச்சை போட முடிந்தது.

 

ஆம்.. வனப்பை பராமரிக்கிற  அழகை தான் பார்க்கிறமே.  காடழிப்பு.. கண்டல்   அழிப்பு..  சேனை..  நிலக்கீழ் நீர் மாசு.. கட்டுப்பாடற்ற மீன்பிடி.. கடலரிப்பு.. மட்டக்களப்பு கடலரிப்பில் கடலுக்க கிடக்குது.. கொழும்பு கடலுக்க இருந்து மீளுது... தெரியுது என்ன விதத்தில்..  வடக்குக் கிழக்கில்.. நிலம்  வளம் பாதுகாக்கப்படுகுதுன்னு..!

 

நீங்க கண்ணை மூடிக்கிட்டு சிங்களவனுக்கு நோகாமல்.. பால் குடிக்கலாமுண்ணே.  எல்லாரும்  அப்படியல்ல. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிட்சைகார நாட்டிடம் உழைத்ததில் ஒரு பகுதியைதான் உங்கள் பெற்றார் வரியாக கட்டி இருப்பீனம். எனவே எப்படிப்பார்த்தாலும் ஏல் வரையான நம் எல்லோரின் படிப்பும், பிச்சைகார நாடு இட்ட பிச்சையே.

என்னது மட்டக்களப்பு கடலுக்க இருக்கிதா? செம காமெடி.

கடரிப்பு என்பது ஒரு natural phenomena யூகேயில் Linconshire Norfolk கரையில் இதை விட மோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

Coastal Erosion:

 

Sri Lanka has a coastline of 1585 km. More than half of her 19.5 million population live in villages, towns and cities of the coastal districts. The economic importance of the coastal areas has increased further with the rapid urbanization, the development of commercial harbors (Colombo, Galle and Trincomalee). Fishing harbors and anchorages, main lines of communication (road and rail) recreational facilities and tourism. It has been estimated that over 50- 55 percent of the shoreline is subjected to or threatened by coastal erosion. The effects of coastal erosion are largely felt in the west, south-west, and southern coastal belt. Coastal erosion severely affects infrastructure facilities such as the railway, road system and disturbs economic activities along the coast such as fishing, recreational and other coast-related activities.

 

More over sea serge is also occur in within the Sri Lankan territory.

H_Profile4.PNG

Districts Vulnerable to Coastal Hazard

 

http://www.saarc-sadkn.org/countries/srilanka/hazard_profile.aspx

 

1280px-Beach_slum_-_Colombo_-_Sri_Lanka.

 

வடக்குக் கிழக்கில் நிலை இப்படி..???!

 

Coastal+belt+from+Galle+Face+to+Mount+La

 

கொழும்பு கடலரிப்பு தடுப்பு முகாமைத்துவம் முறையான அமுல்படுத்தலில்

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் ஆண்டவரே சரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த விமான நிலையத்தை மைத்திரி விமான நிலையம் எனப் பெயர்மாற்றம் செய்து விட்டால் சிலவேளை பல விமானங்கள் வந்து இறங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குதான் ஊரில் போய் எதையும் பார்க்க வேணும் என்பது.

நீங்கள் மேலே போட்ட படம் காலி முகத்திடலுடயது. ஒரு கிமி தூரத்துக்கு, மக்கள் கூடும் கடற்கரையை இப்படி செய்துவச்சிருக்கு.

அப்புறம் கொள்ளுபிட்டிய முதல் கல்கிசை வரை ரயில்பாதை பாதுகாப்புக்கு கல்லுப் போட்டிருக்கு.

மற்றும்படி தெற்கே அம்பாந்தோட்டை பானம வரை, மேற்கே மன்னார் வரை எல்லா இடமும் கல்லுப்போடவில்லை.

ஆனால் வல்வெட்டித்துறையில் போடிருக்கு. திருமலையிலும்.

உங்கள் இலங்கை பற்றிய அறிவு 10 ம் வகுப்பு சமூககல்வியுடன் தங்கிவிட்டதுபோல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இன்னுமொரு செம காமெடி - நீங்கள் வடக்கு-கிழக்கு என்று போட்டிருக்கும் படம் உண்மையிலேயே தெகிவளை கடற்கரையினுடையது.

பின்னணியில் மெளண்ட் லாவனியா ஹோட்டல் கட்டிடம் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

உற்றுப்பார்கையில் உங்கள் ரெண்டாம் படம் காலிமுகத்திடல் போலவும் தெரியவில்லை. அதில் ஒரு பக்கம் பார்த்த்ஹால் பாங் ஒப் சில்லொன் மற்றப்பக்கம் கோல்பேஸ் ஹோட்டல். ரண்டையும் காணவில்லை.

இது மலேசியாவோ?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது படம் மவுண்டலேனியா அந்த கொட்டல்தான் பின்னுக்கு இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
சபேசன் எல்லாவற்றையும் சரியாக எழுதுகிறீர்கள் ...
ஏன் இலங்கையில் ஹப் வரவேண்டும்?
பிளட் மப்பில் (flat map)பார்கிரீர்களா ?
 
இலங்கையில் இருக்கும் எல்லோரும் ஏறினாலே 20 மில்லியன்தான் ஏறி எங்க போறது ?
சிங்கபூர் வரி விலக்கு சர்வதேச சந்தையை திறந்துதான் விமான போக்குவரத்தை அதிகரித்தது.
 
இப்போதைய கோலோபளிசசன் காலத்தில் அப்படியொரு சந்தை கைகொடுக்க போவதில்லை.
மலிவு விலையில் உல்லாசம் ஒரு விடயமாக பார்க்கலாம் ....
அனால் இப்போ கொட்டல்களின் விலை மேலை நாட்டை விட இலங்கையில் அதிகம். என்ன காரணம் என்றே புரியவில்லை. 
ஐரோப்பியர்கள் சீனர்கள் செல்வது என்றால் எப்படியும் $700-1000 டிக்கெட் மட்டும் செலவாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மருது இரண்டாவது படம் மவுட்ண்ட் இல்லை. இப்படி ஒரு கடற்கரியோர நடைபாதை மவுண்டில் இல்லை. கூடவே இப்படி ஒரு skyline உம் மவுண்ட் கரையோரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
நான் அந்த பக்கம் 1992இற்கு பின்பு போனதில்லை ...
இந்த படத்தை நான் முன்பு சுனாமியின் நேரம் பார்த்திருக்கிறேன் . கொட்டேல் மஔண்ட்லெனியா என்று இருந்தது.
எனது பிச்சர் பைலில் இந்த படம் இப்போதும் இருக்கிறது அதில் மொண்ட்லெனெனியா என்றுதான் சேமித்து வைத்திருக்கிறேன்.
அப்போ அது பிழை என்று நினைக்கிறன்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

'மவுண்ட் லெவினியா பீச்' என கூகிளாண்டவரிடம் தேடினால் இந்த படங்களைத் தான் காட்டுகிறார்...

 

7068692-Mount-Lavinia-beach-resort-0.jpg  \

 

68295444.jpg

 

220023.jpg

 

mount-lavinia.jpg

 

mt-lavinia-beach-640x426.jpg

 

http://blog.thecheaproute.com/category/asia/

சபேசன் கோசன் உங்கள் கருத்தாடலை தயவு செய்து தொடரவும். மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மவுண்ட் லெவினியாவா மட்டக்களப்பா என்ற விவாதம் தேவையா?
 
அம்பாந்தோட்டை விமான நிலையமும் துறைமுகமும் எந்த விதமான முன் ஆராய்வுகள் (Feasibility study) இல்லாமலா கட்டி இருப்பார்கள். அம்பாந்தோட்டை விமான நிலையம் பற்றிய விபரம் தெரியாது. ஆனால் துறைமுகத்திற்காக செய்யப்பட்ட ஆராய்வில் கடலில் உள்ள பாறைகள் காரணமாக Feasibility studyஐ முதல் செய்த நிறுவனம் பரிந்துரைக்க மறுத்திருந்தாக கேள்விப்படடேன். ஆனல் பின்னர் இதற்குள் நுளைந்த சீனா மண்திடல்களை மட்டும் அகற்றி பாறைகளை அகற்றாமல் துறைமுகத்தை கட்டியது ஆச்சரியமானது. சிலவேளை சீனா தனது தேவைக்காக (இராணுவ கடற்படை) கட்டி இருக்கலாம். எப்படியாயினும் பலாலியில் விமான நிலையம் வருவது நல்லது ஆனால் நடைமுறையில் அரசியல் ரீதியாக சாத்தியமாகும் போல தெரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

மருது

நெடுக்குப் போட்ட ரெண்டாம் படம் Photoshop பண்ணியிருக்கு. மவுண்ட் லவனியா ஹோட்டலையும் வேறு ஒரு நடைபாதை/skyline ஐயும்.

92 இல் இருந்ததைவிட மவுண்ட் கரையோரம் பெரிதாய் மாறவில்லை. ஆனால் பம்பலப்பிட்டி வெள்ளவத்தை கரையோரம் பிரமிக்கும் மாற்றம்.

வன்னியன்,

கொழும்பு போனால் கட்டாயம் இந்த ஹோட்டலுல்குப் போகவும். Breakfast Buffett £10. சகல வகை உணவுகளையும் மூக்கு முட்ட ஒரு பிடி பிடிக்கலாம். அருமையான காலனித்துவ கால கட்டிடம். Roof terrace restaurant and beach restaurants.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இணைக்கப்பட்டுள்ள இரண்டு படங்களில்  முதலாவது வடக்குக் கிழக்கு கரையோர நிலைகளின்   நிலைக்கு ஒப்பீடாக  இணைக்கப்பட்டது. அதனால்  அதன் கீழ் குறிப்பில்.. ????! என்று போட்டிருக்கிறோம்.

 

இரண்டாம் படம் கொழும்பு. அது மலேசியாவோ.. சிங்கப்பூரோ அல்ல. சிங்கள தேசம் தன் பொருண்மிய வளங்களை எப்படி கடலரி்ப்பில்  இருந்து தக்க வைக்கக் கூடிய திறனைக் கொண்டிருக்கிறது என்பதற்கு  உதாரணம்.

 

வடக்குக்கிழக்கில் நிலை இவற்றை விட மோசம். அங்கு சரியான மதிப்பீடுகளோ ஆய்வுகளோ கிடையாது அல்லது எடுக்க ஆர்வமின்மையால் கடலும் தமிழன் மண்ணை தின்ன   அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

z_p06-The-Central.jpg

 

இது கிழக்கு கரையில் நிலை.... :):icon_idea:

 

 

சிலர்  இந்த ஆபத்துக்களைக் கூட மூடிமறைக்க நினைக்கிறார்கள். இவர்களிடம்  இருந்து எப்படி நீதியான கருத்துக்களையும் செயற்பாட்டு திறனுள்ள கருத்துப் பகிர்வுகளையும்  எதிர்பார்க்க முடியும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் எல்லாவற்றையும் சரியாக எழுதுகிறீர்கள் ...

ஏன் இலங்கையில் ஹப் வரவேண்டும்?

பிளட் மப்பில் (flat map)பார்கிரீர்களா ?

இலங்கையில் இருக்கும் எல்லோரும் ஏறினாலே 20 மில்லியன்தான் ஏறி எங்க போறது ?

சிங்கபூர் வரி விலக்கு சர்வதேச சந்தையை திறந்துதான் விமான போக்குவரத்தை அதிகரித்தது.

இப்போதைய கோலோபளிசசன் காலத்தில் அப்படியொரு சந்தை கைகொடுக்க போவதில்லை.

மலிவு விலையில் உல்லாசம் ஒரு விடயமாக பார்க்கலாம் ....

அனால் இப்போ கொட்டல்களின் விலை மேலை நாட்டை விட இலங்கையில் அதிகம். என்ன காரணம் என்றே புரியவில்லை.

ஐரோப்பியர்கள் சீனர்கள் செல்வது என்றால் எப்படியும் $700-1000 டிக்கெட் மட்டும் செலவாகும்.

Like Solomon Bandaranaike, Jayewardene was born a Christian,

converted to Buddhism and embraced nativism to identify himself with the people.

In his 70-odd years, he had been through the ups and downs of

politics, more downs than ups, and become philosophical in his acceptance of

lowered targets. He wanted to move away from Sri Lanka's socialist policies

that had bankrupted it. After meeting me in Sydney, he came to

Singapore, he said, to involve us in its development. I was impressed by

his practical approach and was persuaded to visit Sri Lanka in April1978. He

said he would offer autonomy to the Tamils in Jaffna. I did not realise

that he could not give way on the supremacy of the Sinhalese over the

Tamils, which was to lead to civil war in 1983 and destroy any hope of a

prosperous Sri Lanka for many years, if not generations.

He had some weaknesses. He wanted to start an airline because he

believed it was a symbol of progress. Singapore Airlines (voted as the Best

Airline Year 2000 in the Fortune Magazine's recent issue) employed a good

Sri Lankan captain. Would I release him? Of course, but how could an

airline pilot run an airline? He wanted Singapore Airlines to help. We did.

I advised him that an airline should not be his priority because it

required too many talented and good administrators to get an airline off

the ground when he needed them for irrigation, agriculture, housing,

industrial promotion and development, and so many other projects. An

airline was a glamour project, not of great value for developing Sri Lanka. But

he insisted. So we helped him launch it in six months, seconding 80 of

Singapore Airlines' staff for periods from three months to two

years, helping them through our worldwide sales representation, setting

overseas offices, training staff, developing training centres and so on.

But there was no sound top management. When the pilot, now chairman of the

new airline, decided to buy two second-hand aircraft against advice, we

decided to withdraw. Faced with a five-fold expansion of capacity,

negative cash flow, lack of trained staff, unreliable services and

insufficient passengers, it was bound to fail. And it did.

It was flattering to have Sri Lanka model their country after Singapore.

They started a housing programme in 1982 based on ours, but there

was no adequate financing. They set up a free trade zone only slightly

smaller area than the area of Singapore which might have taken off but for

the Tamil Tigers whose terrorist tactics scared investors away.

The greatest mistake Jayewardene made was over the distribution of

reclaimed land in the dry zone. With foreign aid, he revived an

ancient irrigation scheme based on "tanks" (reservoirs), which could store

water from the wet side of the mountains. Unfortunately, he gave there

claimed land to the Sinhalese, not the Tamils who had historically been the

farmers of this dry zone. Dispossessed and squeezed, they launched the Tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சபேசன் எல்லாவற்றையும் சரியாக எழுதுகிறீர்கள் ...
ஏன் இலங்கையில் ஹப் வரவேண்டும்?
பிளட் மப்பில் (flat map)பார்கிரீர்களா ?
 
இலங்கையில் இருக்கும் எல்லோரும் ஏறினாலே 20 மில்லியன்தான் ஏறி எங்க போறது ?
சிங்கபூர் வரி விலக்கு சர்வதேச சந்தையை திறந்துதான் விமான போக்குவரத்தை அதிகரித்தது.
 
இப்போதைய கோலோபளிசசன் காலத்தில் அப்படியொரு சந்தை கைகொடுக்க போவதில்லை.
மலிவு விலையில் உல்லாசம் ஒரு விடயமாக பார்க்கலாம் ....
அனால் இப்போ கொட்டல்களின் விலை மேலை நாட்டை விட இலங்கையில் அதிகம். என்ன காரணம் என்றே புரியவில்லை. 
ஐரோப்பியர்கள் சீனர்கள் செல்வது என்றால் எப்படியும் $700-1000 டிக்கெட் மட்டும் செலவாகும்.

 

மருதங்கேணி,

 

இலங்கையில் ஹப் வரவேண்டும் என்று நான் எழுதவில்லை. ராஜவன்னியன் கேட்டார் ஏன் மத்தளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்று. அதற்கு நான் சொன்ன பதில், 

 

கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே, தலைநகர் இல்லாத மற்றொரு இடத்தில் இப்படியொரு விமான நிலையம் இயங்க வேண்டுமென்றால், 2 விஷயங்களில் ஒன்று நடக்க வேண்டும்.

 

1) பெரியளவில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து (உதாரணம் டோக்கியோவின் நரீட்டா, ஹனீடா விமான நிலையங்கள்). இலங்கையில் அதற்கு சாத்தியம் இல்லை. மிகச் சிறிய நாடு.

 

2) இந்த விமான நிலையம் ஒரு HUB ஆக இருக்க வேண்டும். இன்றுள்ள சூப்பர் HUB அட்லான்டா (ஜோர்ஜியா). ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரு HUB-ஐ உருவாக்கலாம், ஆனால், அவர்களுக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.

 

இரண்டும் நடப்பதற்கில்லை என்றுதான் எழுதியுள்ளேன்.

 

HUB Creation சுலபமான விஷயமல்ல. குறைந்தது 10-15 நாடுகளுக்காவது, 5th freedom rights வைத்திருக்க வேண்டும். (CMB-BKK-HKG, அல்லது  CMB-DXB-LHR போல). அப்படியானால்தான் feeding traffic-ஐ முழுமையாக உபயோகிக்கலாம். இல்லாவிட்டால், 767 ரகத்தில் (கிட்டத்தட்ட J24 Y180) அதிக விமானங்கள் தேவை. A340 பெருத்துவிட்டது. 380-ஐ நினைத்தும் பார்க்க கூடாது.

 

இவர்கள் பலாலியை டெவலப் செய்யலாம், இரு தரப்பும் மனது வைத்தால். பலாலிக்கு நல்ல ஹோப் உள்ளது, ஆனால், கடந்த ஆண்டு நான் பேசியபோது, சென்ட்ரல் ஏஜென்சிகள் பலாலிக்கு வருவதை சம்பந்தன் விரும்பவில்லை என்று விக்கினேஸ்வரன் சொன்னார். 

 

பேசாமல் விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.