Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு உற்பத்திகளுக்கு வெளிநாட்டில் சந்தைவாய்ப்பு

Featured Replies

அஞ்சலி ஆராய்ச்சியில்

 

article_1422705431-a.jpg

 

யாழ். திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் அஞ்சலி எனப்படும் கத்தரி இனம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி க.கருணைநாதன்,  சனிக்கிழமை (31) தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விவசாயத்திணைக்களத்தால் சிபாரிசு செய்யப்பட்ட இவ்வின கத்தரி தொடர்பான இசைவாக்க பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வின கத்தரி ஆராய்ச்சிக்காக பயிரிடப்பட்டு அவை எமது மண்ணுக்கு பொருத்தமானதா? அவற்றின் விளைச்சல் அளவு, சுவை, கவர்ச்சி மற்றும் புழுத்தாக்கம் என்பன தொடர்பாக ஆராய்ந்து கொள்வதற்காக பயிரிடப்பட்டுள்ளது. இவற்றை அறுவடை காலம் 80 நாட்கள் ஆகும். அறுவடை செய்கின்ற போது, இக்கத்தரியின் தன்மையை அறிந்த கொள்ள முடியும். இதற்காக 'சீதா எலிய' விலிருந்து நாற்றுக்கள் கொண்டுவரப்பட்ட பயிரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

article_1422705442-b.jpg

 

 

http://www.tamilmirror.lk/138865#sthash.ucM6aZLE.dpuf

  • Replies 75
  • Views 10.5k
  • Created
  • Last Reply

30 மில்லியன் ரூபாய் செலவில் பாற் பண்ணை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் அனுச்சியம் குளம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் 30 மில்லியன் ரூபாய் செலவில் பாற்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், சனிக்கிழமை (31) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள முதலாவது பாற்பண்ணை இதுவாகும். இங்கு முதற்கட்டமாக பிற மாவட்டங்களில் இருந்து 25 நல்லின பசுக்களை கொண்டு வந்து அவற்றின் கன்றுகளை பண்ணையாளர்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
அவற்றில் இருந்து பெறப்படும் பாலை துணுக்காய் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பால் பதனிடும் சங்கத்திற்கு கொடுத்து வருகின்றோம்.
 
இந்த வருடம் இந்த பால் பாற்பண்ணையில் பால் பதனிடும் திணைக்களம் அமைப்பதோடு பால் உற்பத்திப் பொருட்களை  தயாரித்து விநியோகிக்கவுள்ளோம்.
அத்துடன் இங்கு பண்ணையாளர்களுக்கு செயல்முறை பயிற்சிகள் வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

30 மில்லியன் ரூபாய் செலவில் பாற் பண்ணை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் அனுச்சியம் குளம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் 30 மில்லியன் ரூபாய் செலவில் பாற்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், சனிக்கிழமை (31) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள முதலாவது பாற்பண்ணை இதுவாகும். இங்கு முதற்கட்டமாக பிற மாவட்டங்களில் இருந்து 25 நல்லின பசுக்களை கொண்டு வந்து அவற்றின் கன்றுகளை பண்ணையாளர்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
அவற்றில் இருந்து பெறப்படும் பாலை துணுக்காய் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பால் பதனிடும் சங்கத்திற்கு கொடுத்து வருகின்றோம்.
 
இந்த வருடம் இந்த பால் பாற்பண்ணையில் பால் பதனிடும் திணைக்களம் அமைப்பதோடு பால் உற்பத்திப் பொருட்களை  தயாரித்து விநியோகிக்கவுள்ளோம்.
அத்துடன் இங்கு பண்ணையாளர்களுக்கு செயல்முறை பயிற்சிகள் வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 

 

 

 

நல்லதொரு செய்தி

நன்றி  இணைப்புக்கு..

ஆரவாரமில்லாமல் உள்ளூர் மக்களுக்கு உதவுவதில் நெஸ்லே ஒரு முன்மாதிரியான நிறுவனம். நான் அறிந்தவரை பால் உற்பத்தி என்பது சிறிலங்காவில் பல்வேறு காரணங்களால் இலாபமீட்டக் கூடிய ஒரு தொழில் அல்ல. ஆனால் நெஸ்லே போன்ற நிறுவனங்கள் ஓரளவு வளர்ப்பாளர்களுக்கு இலாபமும் தொழிலும் தரும் வகையில் உதவுகிறார்கள். இன்னுமொரு சிறப்பு, அந்தந்தப் பிரதேச ஆட்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள், தமிழ் ஏரியாவில் தமிழர் இருப்பார், சிங்கள ஏரியாவில் சிங்களவர் இருப்பார், முஸ்லிம் பகுதியில் முஸ்லிம் பொறுப்பாக இருப்பார். இலங்கை கற்றுக் கொள்ளத் தவறிய அடிப்படைப் பாடத்தை கற்றுக் கொண்டு இலாபமீட்டி வளர்கிறது நெஸ்லே!

 

பால் மவை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் அது இலாபம் ஈட்டும் தொழிலாக மாறும், ஏன் தான் இந்த பால் மாவை இறக்குமதி செய்கிறார்ளோ, எல்லாம் இந்த முதலாலிமார் செய்யும் வேலை முதலில் அதை தடை பண்ண வேண்டும்,

பால் மவை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் அது இலாபம் ஈட்டும் தொழிலாக மாறும், ஏன் தான் இந்த பால் மாவை இறக்குமதி செய்கிறார்ளோ, எல்லாம் இந்த முதலாலிமார் செய்யும் வேலை முதலில் அதை தடை பண்ண வேண்டும்,

 

இல்லை டாஷ்.
 
குழந்தைகளின் வளர்ச்சிக்கும் போஷாக்கிற்கும் பால் அவசியம்.
இலங்கையின் உற்பத்தி தேவையானதை விட மிகவும் குறைவு. இதனை ஊக்குவிப்பதற்காக நோர்வே போன்ற நாடுகள் கொள்வனவு விலையை விற்பனை விலையை விட மிக அதிகமாக்கி உள்ளார்கள். இலங்கையில் இது சாத்தியமில்லை.

இல்லை டாஷ்.
 
குழந்தைகளின் வளர்ச்சிக்கும் போஷாக்கிற்கும் பால் அவசியம்.
இலங்கையின் உற்பத்தி தேவையானதை விட மிகவும் குறைவு. இதனை ஊக்குவிப்பதற்காக நோர்வே போன்ற நாடுகள் கொள்வனவு விலையை விற்பனை விலையை விட மிக அதிகமாக்கி உள்ளார்கள். இலங்கையில் இது சாத்தியமில்லை.

 

இதை தான் நானும் கூறுகிறேன் , பால் உற்பத்தியை அதிகமாக்குவதால் நாம் இறக்குமதியை குறைக்க முடியும் அல்லவா.நிச்சயமாக பல பரந்த வெளிகளை கொண்ட ஊரில் பால் உர்பத்தியை அதிகரிக்கலாம், என்னுடைய வாதம் என்னவென்றால் திட்டமிட்டே 1977ம் ஆண்டுக்கு பின்னர் வந்த அரச முதலாளிகள் பால் உற்பத்தியை குறைத்து வைத்த் இருக்கின்றனர்

இதை தான் நானும் கூறுகிறேன் , பால் உற்பத்தியை அதிகமாக்குவதால் நாம் இறக்குமதியை குறைக்க முடியும் அல்லவா.நிச்சயமாக பல பரந்த வெளிகளை கொண்ட ஊரில் பால் உர்பத்தியை அதிகரிக்கலாம், என்னுடைய வாதம் என்னவென்றால் திட்டமிட்டே 1977ம் ஆண்டுக்கு பின்னர் வந்த அரச முதலாளிகள் பால் உற்பத்தியை குறைத்து வைத்த் இருக்கின்றனர்

 

நிதர்சனமான உண்மை.
 
பால் உற்பத்தியை அதிகரித்தால் அங்கர் போன்ற நிறுவனங்கள் தமது மேலதிக உற்பத்தியை இலங்கையில் கொட்ட முடியாது. ஆனால் எமக்கும் ஒரு நாளைக்கு 30-40 லீட்டர் பால்கொடுக்கும் பசுக்கள் தேவை. ஒரு முறை இவற்றை இறக்குமதி செய்தால் பின்னர் இவற்றை நாமே உருவாக்கலாம்
 
ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது.
பூனைக்கு மணி கட்ட நீங்கள் தயாராக இருந்தால் - சிறு தரவு.
 
1. Holstein
 
800px-Cow_female_black_white.jpg
 
Milk Production: 11,800 kilograms per year
Other name/s: Holstein-Friesian Cattle or Friesian Cattle
Origin: North Holland and Friesland - Netherlands
Distinction: It is the highest production dairy animal in the world.
The current National Holstein milk production leader is Ever-Green-View My 1326-ET EX-92. This amazing milk producing or dairy cattle produced 32,740 kg of milk in 365 days attaining her world record in February 2010.
 
இவற்றை "கேற்பை" இன மாடுகள் என்று அந்தக் காலத்தில் அழைப்பது வழக்கம். ஒரு தரத்தில் 10 போத்தல் பால் கறக்கலாம். ஆனால் இவை குளிர் காலநிலை கொண்ட தேசத்திற்கே சரியானவை. கொழும்பில் கூட இவை வாழக்கூடியவை. கொழும்பில் இத்தகைய மாடு ஒன்றை வளர்த்து பால் கறந்து இருக்கிறோம்.
 
வன்னியிலோ யாழிலோ இவை பிழைக்க மாட்டா. ஆனால் இந்திய "வன்னி" இன மாடுகள் உள்ளன. இவை கூட கேற்பை இன மாடுகளுக்கு கிட்டத்தட்ட சமமான பாலைத் தரக்கூடியவை. ( சற்றுக் குறைவு தான் ) ஆனால் வட பகுதி கால நிலைக்கு நின்று பிடிப்பார்கள். "ஜேசி" என்ற இன்னுமொரு இனமும் இருக்கிறது. அதுவும் வடபகுதியில் நின்று பிடிக்கும். கூடியளவு பாலையும் தரும்.
 
ஊர் மாடுகள் மிகக் குறைந்த பாலையே தரும்.  :wub:  :D
 
 

பால்பண்ணை, மாடு, பசு வளர்ப்பு, கன்று பராமரிப்பு, பால் பண்ணைத் தொழிலில் தேவையான தகவல்கள்...

 

http://www.ssivf.com/ssivf_cms.php?page=89

 

 

ஒருங்கிணைந்த பண்ணையம்

https://www.facebook.com/pages/Tamilnadu-Farms-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/746659525375572

 

மாடு வளர்ப்பு சில வீடியோக்கள் (தமிழ்)

 

https://www.youtube.com/watch?v=_XeyXH-L2jY////

 

https://www.youtube.com/watch?v=LcF-EAKrV1k////

 

https://www.youtube.com/watch?v=6xItkJZRRbc////

 

https://www.youtube.com/watch?v=-l5UBNj3ZEI////

 

https://www.youtube.com/watch?v=UM0lZQ1J9PE////

Edited by Athavan CH

சிறிமாவின் ஆட்சியில் குழந்தைகளுக்கான பால்மா வெலிசறையில் தயாரிக்கப்பட்டது.இங்கு  பெரியவர்களுக்காக லக்ஸ்பிறே நோயாளிகளுக்காக விட்டாமோல்டும் தயாரித்தார்கள்.தொண்டமானின் கிராமிய கைத்தொழில் அமைச்சின் கீழ் ஹைலான்ட் என்னும் முழு ஆடைப்பால் மாவும் தயாரிக்கப்பட்டது.பின்னர் ஜே ஆரின் ஆட்சியில் தான் உள்ளூர் தயாரிப்புகள் யாவும் நிறுத்தப்பட்டு வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் இருந்த ஆலைகளில் பொதிசெய்யப்பட்டன.இதே போலத்தான் கட்டிப்பால் என்றால் கெட்டியாகவிருக்க வேண்டும்.அதற்கும் இலங்கையில் பேர் போன தொழிற்சாலை பொலனறுவையிலிருந்த "பெரக்கும்பா" ஆலை.இதையும் பின்னர் " நெஸ்லே" நிறுவத்துக்கு விற்றுவிட்டார்கள்.ஆனால் தற்காலத்தில் உலகளாவிய நிறுவங்களுடன் போட்டி போட முடியாது.ஆகவே  எமது உற்பத்திகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் குறைந்த வருமானமாயினும் ஒரு நிலையான சீரான வருமானத்தைப்பெற முடியும்.உதாரணத்துக்கு உலகின் (உணவுப்பொருட்களுக்கு) அத்தியாவசியப்பொருட்களுக்கு முன்ணனியான நிறுவனங்கள் "யுனி லிவெர்" (சண் புரொடக்ஸ்),(Unilever or Sun products)  " நெஸ்லே"(Nestle)  மற்றும் கிறாFவ்ட் fவூட்ஸ்(Kraft foods). இவை மூன்று கம்பனிகளும் இலங்கையில் உள்ள படியால் மேற் குறிப்பிட்ட கருத்தைக்கூறினேன்.பாலுற்பத்தி மிகவும் இன்றியமையாத தொழில்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

Made In SriLanka (North & East) என்று போட்டால் சுமந்திரனும் சம்பந்தரும் கோவிக்க மாட்டார்களா..? :rolleyes:
 

உண்மை விதை வெங்காயச் செய்கை வெற்றி

 

article_1422861951-DSCF4596.JPG

 

உண்மை விதை மூலமான வெங்காயச் செய்கை, யாழ். மாவட்டத்தில் வெற்றியளித்துள்ளதாக திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி க.கருணைநாதன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.

 

இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர்

 

, 'இலங்கை முழுவதும் உண்மை விதை மூலம் விளைச்சலை பெறும் வெங்காயச் செய்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெங்காயத்தின் பூக்களில் விதைகள் உருவாகி அவற்றை விதையாக பெற்றுக்கொள்வதே உண்மை விதை எனப்படுகின்றது. இம்முறை யாழ்.மாவட்டத்தின் காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்றதாக உள்ளதா? என ஆராய்வதற்காக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டது  இது வெற்றியளித்ததை அடுத்து, சுமார் 100 விவசாயிகள் இந்த வெங்காயச் செய்கையை மேற்கொண்டுள்ளார்கள்' என்றார்.  

 

கலப்பு தன்மை அற்ற இந்த வகை வெங்காயங்களில் இருந்து 75 நாட்களில் விதையை பெற்றுக்கொள்ள முடியும். நோய்த்தன்மை குறைந்த நோய் எதிர்ப்பு தன்மையுள்ள வெங்காயத்தின் இயல்புகொண்டு ஓரளவு பருமன் உடைய இந்த வெங்காயம் பார்வைக்கு அழகாகவும் உள்ளது. உண்மை விதை மூலம் வெங்காயச் செய்கையை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படாது. இந்த விதைகள் யாழ்.மாவட்டத்திலுள்ள விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை என்பதால் அவர்களுக்கு இந்த உண்மை விதைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி நிலையத்தில் இந்த வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

 

article_1422861960-DSCF4602.JPG

 

http://www.tamilmirror.lk/138960#sthash.LtwI1T7n.dpuf

 

கால்நடை உற்பத்தி, அபிவிருத்திக்கு ரூ. 42 மில்லியன்

 

வடமாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 42 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

வாழ்வாதாரம், இனவிருத்தி, திணைக்கள கட்டமைப்பு என மூன்று பிரிவுகளாக செலவுப் பட்டியல் நிதி ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். மத்திய கால்நடை அமைச்சால் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கால்நடை வைத்தியர்களுக்கு விடுதிகளும் அமைக்கவுள்ளோம். இந்திய அரசின் நிதியுதவியில் நல்லின மாடுகள், விவசாய உபகரணங்கள், பால் பதனிடும் இயந்திரங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்குமாறு யாழ். இந்தியத் துணைத்தூதர் ஏ.நடராஜனிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அவர் சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என வசீகரன் கூறினார். -

 

http://www.tamilmirror.lk/138997#sthash.J31HQBOK.dpuf

தாயக மக்கள் கற்றுக்கொள்ள நிறையவே விடயங்கள் உண்டு. எப்போதும் புதிதாக ஒரு தொழிலையோ பயிற்செய்கையோ ஆரம்பிக்கும் போது அரசிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் (மானியமாய்)கிடைக்குமிடத்து அவைகளை பெற்று உபயோகப்படுத்த பழகிகொள்ள வேண்டும்.சில வேளை அழிவுகள் வரும் போது இழப்புகளை சமாளிக்கலாம்.காப்புறுதிகள் இருந்தால் பெற்றுக்கொள்ள வேண்டும். இவை ஆரம்ப நிலையில் உதவியாகவிருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்லை எங்கடை சனம் தன்னிறைவு அடைய வேணும். :D

அதுக்குப்பிறகுதான் மாங்கொட்டை பனங்காய்ப்பணியாரத்தைப்பற்றி கதைக்க வேணும். :D

ஏதோ மைத்திரி வந்துட்டார்...பிரச்சனை முடிஞ்சுது எண்ட மாதிரியெல்லொ கதை போகுது.... :icon_mrgreen:

மைத்திரியர் வந்தவுடனை  கன பினாட்டு மெழுகல் கதையள்தான் இப்பப்ப வருது...... :D

இன்னும் கொஞ்ச நாளையாலை ஒரு புதுக்கதையொண்டு வரும் :(

அதுக்குப்பிறகு கறுத்தக்கொழும்பான் வைக்கலிலை எப்பிடி சுத்தி இஞ்சை கொண்டுவரலாம் எண்டதையும் ஆராய்ச்சி செய்யலாம். :lol:

'தென்மராட்சியின் பழச்செய்கையை பாதுகாக்கவேண்டும்'

article_1422943850-lkp.jpg

 

தென்மராட்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பழச் செய்கைகளை காப்பாற்றுதல் மற்றும் உயிரியல் பல்வகையை பாதுகாக்கும் திட்டத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரியொருவர், செவ்வாய்க்கிழமை (03) கூறினார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

குரங்குகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்து பழவகைகளைக் காப்பாற்றி உயிர்பல்வகைமையையும் பாதுகாத்தல் என்றும் திட்டம் இதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல், மீசாலை பழமுதிர்ச்சோலை கேட்போர்கூடத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்றது. வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், யாழ். விவசாய திணைக்கள அதிகாரிகள், தென்மராட்சி பிரதேச பழச் செய்கையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த 3 நாட்களாக குரங்குகளின் நடமாட்டங்களை அவதானித்தாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கூறினர்.

 

கதடி தொடக்கம் எழுதுமட்டுவாள் வரையில் 30 தொடக்கம் 35 வரையான குரங்குகள் கூட்டமாகவும் மீசாலை சோலையம்மன் ஆலயப் பகுதியில் 100 தொடக்கம் 150 வரையான குரங்குகள் கூட்டமாக நுழைந்து பழங்களை நாசம் செய்கின்றன. அப்பகுதி இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, குரங்குகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு கூண்டுகளில் பிடிக்கப்படுகின்றன. வௌ;வேறு கூட்டங்களைச் சேர்ந்தவற்றை ஒரே கூண்டுக்குள் அடைத்தால் அவற்றுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. தனித்தனியாக இல்லாமல், ஒரு கூட்டத்தை முழுவதுமாக பிடித்து அவற்றை ஒன்றாக வனங்களில் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் குரங்குகளை வனங்களில் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

 

article_1422943862-lkp2.jpg

 

http://www.tamilmirror.lk/139053#sthash.En7YRhy5.dpuf

உப உணவுச் செய்கைக்கு ஊக்குவிப்பு

 

article_1422951790-BB.JPG

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச்; செய்கை அறுவடைக்கும் சிறுபோகச் செய்கை ஆரம்பிப்பதற்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் உப உணவுச் செய்கையை ஊக்குவிற்பதற்கான புதிய திட்டம் அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைகளத்தின் ஏற்பாட்டில் இந்தத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

முதற்கட்டமாக 20 ஏக்கர் நிலத்தில் உப உணவுச்; செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வெற்றி அளிக்கும் பட்சத்தில் 200 ஏக்கரில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உன்னிச்சை பெருநீர்ப்பாசன திட்டத்தின் கீழ் பொன்னாங்கனிச்சேனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   கௌப்பி, பயறு, சோளன் போன்ற தானியங்களும் வெங்காயம் உள்ளிட்டவற்றையும்  இடைக்காலச் செய்கையாக மேற்கொள்ளமுடியும் என்று  விவசாயிகளுக்கு விவசாய திணைக்கள அதிகாரிகளால் ஆலேசனை வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் வயல் நிலம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வளம் மிக்கதாக மாற்றப்படுவதுடன், விவசாயிகளுக்கு தொடர்ச்சியான வருமானத்தையும் ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

 

http://www.tamilmirror.lk/139070#sthash.BzvCb0ZQ.dpuf

அதிக எண்ணெய் தரும் எள்

 

article_1423203759-Ellu.jpg

 

திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் 50 சதவீத எண்ணெய் தரும் எள் ஆராய்ச்சிக்காக பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய ஆராய்ச்சி நிலையப் பொறுப்பாளர் க.கருணைநாதன் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார். இந்தப் புதிய எள் தொடர்பாக அவர்  மேலும் கருத்து கூறுகையில், தற்போது பயிரிடப்பட்டுள்ள எள்ளில் இருந்து 35 சதவீத எண்ணெயே  பெறமுடியும். நான் ஆராய்ச்சிக்காக பயிரிட்ட எள்ளில் இருந்து 50 சதவீத எண்ணெயைப்பெற முடியும்.

 

குறைந்த காலமான 60 நாட்களில் எள்ளை அறுவடை செய்து எண்ணெயைப் பெற முடியும். எமது மண் காலநிலை என்பனவற்றுக்கு இது பொருத்தமானதா? என்பதை அறிவதற்காக முதன் முதலாக   ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் நோய்த் தாக்கம், விளைச்சல் என்பவற்றையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஆராய்ச்சிக்காக  பயிரிடப்பட்ட எள் செழிப்பானதாக இருப்பதனால் சிறந்த அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். முடிவு சாதகமாக அமைந்தால் விவசாயிகளுக்கு விதை எள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/139251#sthash.ircgPVSF.dpuf

பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை

 

article_1423655894-nathanvelii01.jpg

 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் பெரிய வெங்காயச் செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் கலந்துரையாடல் நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தம்புள்ள மிற் கன்றி விவசாயிகள் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர்களான எச்.எம்.எம்.கீர்த்திபண்டார, வில்சன் கருணாதிலன, அபேவிக்கிரம மற்றும் வில்சன் சூரியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டம் பற்றி தெளிவுபடுத்தினர். 2015ஆம் ஆண்டு, சிறு மற்றும் கால போகங்களில் உலர் வலயத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

article_1423655916-nathanvelii02.jpg

 

http://www.tamilmirror.lk/139590#sthash.vJyOwLDJ.dpuf

யாழில் பனை உற்பத்திகள் மூலம் அதிக வருமானம்

 

யாழ். மாவட்ட பனை அபிவிருத்திச் சபைக்கு கடந்த 2014ஆம் ஆண்டு பனை உற்பத்திகள் மூலம் அதிகளவான வருமானம் கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்திச் சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ம.கியூபேட் அன்ரனி வியாழக்கிழமை (12) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
 
பனை அபிவிருத்திச் சபையால் யாழ். மாவட்டத்துக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 19.11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொண்டுள்ளோம்.
அதில் பனை உற்பத்தி பொருட்கள் பதநீர் உற்பத்தி பனம் தும்பு உற்பத்தி, விற்பனை மூலம் முன்னைய ஆண்டுகளை விட 2014ஆம் ஆண்டு கூடிய வருமானம் கிடைத்துள்ளது.
 
யாழ். மாவட்டத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபையின் 4 கற்பகம் விற்பனை நிலையத்தின் ஊடாகவும் களஞ்சியப்பகுதி ஊடாகவும் 86.600467 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
 
 

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தொழிற்சாலை அமைக்க 12 நிறுவனங்கள் கோரிக்கை

 

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 3 தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருவதாக யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.சிவகங்காதரன் வெள்ளிக்கிழமை(13) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

தரையில் பதிக்கும் சீமெந்து கல் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆணி, பிணைச்சல் உள்ளிட்ட மென் இயந்திரவியல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியன தொழிற்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் தற்போது 35 பேர் பணிபுரிந்து வருகின்றார்கள். பேப்பர், நைலோன் கயிறு, ஜாம், கோடியல் போன்றவை தயாரிக்கும் 12 தொழிற்சாலைகள் அனுமதி கோரியுள்ளன. அவற்றுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை பூர்த்தியானதும் இந்த தொழிற்சாலைகளும் இயங்கும் என அவர் கூறினார். 

 

http://www.tamilmirror.lk/139732#sthash.WpNbVyZQ.dpuf

மாதுளை செய்கையில் அதிக வருமானம்

 

article_1423914648-madulai.jpg

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உற்பத்தித்திறன் குறைந்த பகுதிகளில் மாதுளை செய்கையை மேற்கொள்வதன் மூலம் 10 மடங்குக்கும் மேற்பட்ட வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம்,சனிக்கிழமை (14) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

தரிசு (கைவிடப்பட்ட) நிலத்திலிருந்து வருமானம் பெற்றுக்கொள்ளக்கூடிய நோக்கிலும் அராலி, நாவற்குழி, தீவகம், துன்னாலை, நவாலி ஆகிய உற்பத்தித்திறன் குறைந்த பகுதிகளில் வர்த்தக ரீதியாக மாதுளைச் செய்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.    மேற்படி பிரதேசங்களில் பிற பயிர்கள் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. எனவே அப் பகுதி விவசாயிகள் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு மாதுளைச் செய்கையை பயனுடையதாக அமையும்.  

 

ஒரு பழத்தை உற்பத்தி செய்ய உற்பத்திச் செலவு 5 ரூபாய் தொடக்கம் 8 ரூபாய் வரையில் செலவாகும். விற்பனை செய்யும் போது ஒரு பழத்துக்கு 80 ரூபாய் முதல் 100 வரையில் பெற்றுக்கொள்ள முடியும்   இந்த வருடம் கத்தரிக்கும் கருவிகள், தரமான மாதுளம் கன்றுகள், மென் விதையுள்ள கன்றுகள் ஆகியவற்றை வழங்குவதற்காக 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாதுளை செய்கை மேற்கொள்ள ஆர்வமுடையவர்கள், குறைந்தது ஒரு ஏக்கரில் 4,000 கன்றுகள் வைக்கக்கூடியவராக இருக்கவேண்டும். அத்துடன் வர்த்தக ரீதியில் இந்த பயிர்ச் செய்கையை மேற்கொண்டு சந்தை நிரம்பலை அதிகரித்து சந்தை விலையை குறைத்து மாதுளைக்கான நுகர்வை அதிகரிக்க முடியும். வர்த்தக ரீதியாக பயிர்ச்செய்கை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு பயிற்சிகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் கூறினார். 

 

www.tamilmirror.lk/139779#sthash.YjdESfoI.dpuf

 

 

'ரெட்லேடி'யை அதிகரிக்க திட்டம்

 

article_1424335328-RLP300.jpg

 

வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்வதற்கு ரெட் லேடி இன பப்பாசி உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக வடமாகாண விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் வியாழக்கிழமை (19) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

உள்ளூர் பப்பாசி வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய முடியாது. சந்தையில் கேள்வி கூடிய பயிராக பப்பாசி இருப்பதால், ரெட் லேடி இன பப்பாசிஇயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முடியும். ரெட் லேடி இனம் உயர் தொழில்நுட்பத்துடன் செய்யப்படுகின்ற முறை ஆகும்.

 

இதை எல்லோரும் பயிரிட முடியாது. உற்பத்தித்திறன் கூடியதும் சீரான வெப்ப நிலையைக் கொண்டதும், ஏற்றுக்கொள்ளக்கூடிய தரம், சேதமில்லாத பழமாக இருக்க வேண்டும். ஆர்வமுள்ள 100 விவசாயிகளுக்கு இந்த வருடம் பயிற்சி வழங்கவுள்ளோம். அவர்களுக்கு பயிர்ச் செய்கைக்குரிய நீர்ப்பாசன தொகுதி, கன்றுகளை வழங்கி அவர்களை ஒரு குழுவாக செயற்பட வைத்து, ஏற்றுமதியாளர்களை தொடர்புபடுத்தி சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்தவுள்ளோம். ஆர்வமுள்ள விவசாயிகள் விவசாயத் திணைக்களத்தில் தொடர்புகளை மேற்கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார். -

 

: http://www.tamilmirror.lk/140085#sthash.3RlZ0Uxd.dpuf

  • 2 weeks later...

பனை உற்பத்தி விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் 

 

பனை உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரித்து பனை உற்பத்தியில் தங்கியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தலைவர் கே.விஜிந்தன், திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

 

கடந்த காலத்தில் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்த வேலைத்திட்டங்களை குறுகிய நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, உற்பத்திகளை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். சர்வதேச ரீதியில் எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் விமான நிலையத்திலும், சதோச, காகில்ஸ் போன்ற சிறப்பு கடைகளிலும் எமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

 

சுற்றுலா மையங்களை தெரிவு செய்து அங்கு எமது கற்பகம் விற்பனை நிலையத்தை அமைத்து நடமாடும் சேவைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம். பனை அழிவை தடை செய்வதற்கு புதிய சட்ட ஏற்பாடு ஒன்று உருவாக்கி செயற்படுத்துவதற்கு எமது உறுப்பினர்களால் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

 

கடந்த காலங்களில் கைப்பணி பயிற்சிகளை மேற்கொள்பவர்களின் இடைவிலகல் அதிகமாகி உள்ளது. அவ்வாறான இடைவிலகலை தடுப்பதற்கு பயிலுநர்களுக்கு உதவு தொகைகள் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். கீழ்மட்ட பணியாளர்களிடம் இருந்து கருத்துக்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

 

எந்தவகையில் உற்பத்திகளை அதிகரிக்க முடியுமோ, அந்த வகையில் உற்பத்திகளை அதிகரித்து வேலைவாய்ப்பு, முன்னேற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம். திக்கம் வடிசாலையிலுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு கண்டு அதனை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

 

 http://www.tamilmirror.lk/140886#sthash.MY6MfzQm.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.