Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கன் ஸ்னைப்பர் (American Sniper) - விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் பார்த்த ஒரு ஆங்கிலப்படம். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை பிராட்லி கூப்பருக்கு வாங்கிக் கொடுத்த படம். அதுபற்றிய எனது விமர்சனம்.

 

வழமையான அமெரிக்க இராணுவ வல்லாதிக்கத்தைக் காட்டும் ஏனைய படங்களைப் போலவே இது எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, உண்மையான கதையை அடைப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் பலரையும் இதன்பால் ஈர்க்க வைத்திருக்கிறது.

 

அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப் பிரிவான னேவி சீல்ஸ் (NAVY SEALS) எனப்படும் மூவூடகப் படையணியைச் சேர்ந்த கிறிஸ் கைல் என்று அழைக்கப்பட்ட தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் துப்பாகி வீரரின் உண்மையான வாழ்க்கையை அவரே எழுதிய சுயசரிதையை அடிப்படையாக வைத்து, அந்தப் புத்தகத்தின் பெயரிலேயே பிரபல கொலிவூட் நடிகரும் இயக்குனருமான கிலின்ட் ஈஸ்ட்வூட் இனால் உருவாக்கப்பட்ட ஒரு படம்தான் அமெரிக்கன் ஸ்னைப்பர்.

 

1999 இலிருந்து 2009 வரை அவர் ஈராக் யுத்தத்தில் அமெரிக்க மரைன் அதிரடிப்படை வீரரகளுக்கு பக்கத்துணையாக குறிபார்த்துச் சுடும் வீரராகப் பணியாற்றிய விதம் பற்றிப் படம் பேசுகிறது.

 

அமெரிக்கக் காலாட்படை வீதி வீதியாக ஈராக்கியர்களின்  கடுமையான எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியில் முன்னேறிக்கொண்டிருக்க, எங்கோ ஒரு மாடிவிட்டின் மேலிருந்து பதுங்கியபடியே கீழே வீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் தனது தோழர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து அவர்களைக் கொல்ல வரும் எதிரிகளைத் தூரவிருந்தே சுட்டுக் கொல்வது அவரது பணி. எங்களைக் காப்பாற்ற ஒருவன் மேலே இருக்கிறான் என்ற தைரியத்தில் அவரது தோழர்கள் பயப்படாமல் முன்னேறுகிறார்கள்.

 

ஒருமுறை அமெரிக்க தாங்கியொன்று முன்னே செல்ல அதன் இரு மருங்கிலும் அமெரிக்க காலாட்படை வீரரர்கள் மெதுவாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.ஆவர்களை மேலேயிருந்து பிராட்லி கூப்பார் (உண்மையான கிறிஸ் கைல் இன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர்) தனது துப்பாக்கியின் தொலைநோக்கியூடாக அவதானித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று ஒரு வீட்டின் கதவு திறக்கப்பட்டு ஒரு முஸ்லீம் பெண்ணும், ஒரு சிறுவனும் அமெரிக்க வீரர்களை நோக்கி வரத் தொடங்குகிறார்கள். பாதிவழியில் அந்தப் பெண் தனது பர்தாவுக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு கிரேனைட்டை எடுத்து அந்தச் சிறுவனிடம் கொடுத்து அதை அமெரிக்க வீரர்களை நோக்கி எறியச் சொல்கிறாள். சிறுவனும் அந்தக் குண்டை கைய்யில் தூக்கிப் பிடித்தபடை அமெரிக்க வீரர்களை நோக்கி எறிவதற்காக ஓடி வருகிறான். "சிறுவனாக இருக்கிறானே, என்ன செய்வது?"  என்று பிராட்லி கூப்பர் தொலைபேசியில் சற்றுத் தயங்கியவாறு தனது மேலதிகாரியிடம் கேட்க, "உன்னுடை முடிவு" என்று தொலைபேசியிலிருந்து பதில் வருகிறது. வீதியில் சென்று கொண்டிருக்கும் தனது தோழர்களைக் காப்பாற்றுவதற்காக அந்தச் சிறுவனைச் சுடுகிறார் பிராட்லி கூப்பர். சிறுவன் கீழே விழ, அவனது கையியிலிருந்த குண்டை எடுத்துக்கொண்டு மீண்டு வீரர்கள் நோக்கி ஓடி வருகிறாள் அந்தப் பெண். அவளையும் சுடுகிறார் அவர். அன்று அவரது தோழர்கள் அவரினால் காக்கப்படுகின்றனர்.

 

இப்படிப் பலவிடங்களில், மனச் சாட்சிக்குப் பிழையாக இருந்தாலும் கூட தனது தோழர்களைக் காப்பதற்காக சிறுவர்கள், பெண்கள் என்று எவர் தாக்க வந்தாலும் மேலிருந்து சுட்டுக் கொல்கிறார் அவர். இப்படிப் பலமுறை தனது தோழர்களைக் காப்பாற்றுவதால் அவரைப் பற்றி வீரர்களுக்கிடையே ஒரு உயர்வான மதிப்பு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் லெஜென்ட் என்று சொல்வார்களே, அதுபோல. அவர் உடனிருந்தால் நாம் சாகமாட்டோம் என்று வீரர்கள் நம்புமளவிற்கு அவர் அவர்களைக் காக்கிறார். இதனாலேயே ஈராக்கிய தீவிரவாதிகலுக்கு இவன் சிம்ம சொப்பனமாக மாறுகிறார். இதனாலேயே அவருக்கு "ரமாடியின் சாத்தான்" எனும் பெயரை அவர்கள் வைக்கிரார்கள். அவரைக் கொல்வதற்கு ஈராக்கியத் தீவிரவாதிகள் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.ஆனால் இறுதிவரை அவர்களால் அவரைக் கொல்ல முடியவில்லை.

 

இடைக்கிடையே விடுமுரையில் வீடுவரும் அந்த வீரரின் குடும்ப வாழ்க்கை காட்டப்படுகிறது. பணியிலிருந்து ஓய்வுபெறுங்கள் என்று விடாது நச்சரிக்கும் மனைவி, குழந்தைகள் என்று அவரைச் சுற்றியுள்ளவர்கள் காட்டப்படுகிறார்கள்.ஆனால், தன்னை நம்பியிருக்கும் தனது தோழர்களைக் காப்பதுதான் தனது தலையாய பணியென்று நம்பும் அவர் மீண்டும் மீண்டும் போர்முனைக்குச் செல்கிறார்.

 

இந்தப் படத்தில் வரும் இன்னொரு நெஞ்சை உருகவைக்கும் காட்சி, விடுமுறையில் வீடு வந்திருந்த அவர் தனது மகனை அழைத்துக்கொண்டு வாகன டயர் மாற்றும் இடத்திற்குச் செல்கிறார். அங்கே அவரை அடையாளம் கண்ட இன்னொரு முன்னால் வீரர் நீங்கள் கிறிஸ் அல்லவா என்று கேட்கிறார். அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத கிறிஸ், ஆம் நாந்தான். நீங்கள் யாரென்று அந்த முன்னால் வீரரைப் பார்த்துக் கேட்கிறார். தன்னை யாரென்று கூறும் அந்த முன்னால் வீரர், இன்று உங்களால்த்தான் நான் உயிர் வாழ்கிறேன். உங்களுடன் ரமாடியில் ஒரு போர்க்களத்தில் நானும் ஈடுபட்டிருந்தேன். அங்கே என்னை நீங்கள் எதிரிகளிடமிருந்து கப்பாற்றினீர்கள். நான் இன்று எனது பிள்ளைகள், மனைவியுடன் வாழ முடிகின்றதென்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். போரில் செல்லும் பலருக்கு இந்தப் பாக்கியம் கி9டைப்பதில்லை. ஆனால் எனக்கு உங்களின் மூலம் கிடைத்திருக்கிறது, மிக்க நன்றி என்று சொல்லும் அவர் இறுதியாக குனிந்து கிறிஸின் மகனிடம், "உனது தகபனார் ஒரு உண்மையான வீரன்" என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

 

ஒரு கட்டத்தில் ஈராக்கிய குறிபார்த்துச் சுடும் தீவிரவாதியொருவன் பல அமெரிக்க வீரர்களைச் சுட்டுக் கொல்கிறான். அவனது தாக்குதலால அமெரிக்க இராணுவம் தடுமாறிக் கொனண்டிருக்க , அவனைக் கொல்வதற்கு ஒரு படையணி அனுப்பப்படுகிறது,. கிறிஸ் கைலும் அந்தப் படையணியில் இடம்பெறுகிறார்.  வீதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமெரிக்க வீரர்களை தூரவிருந்து அவன் கொல்ல ஆரம்பிக்கிறான். இதை கண்டுகொண்ட கிறிஸ் கைல், தனது துப்பாக்கியின் அதியுயர் சூட்டெல்லைக்கு வெளியே அவன் ஒளிந்திருந்தாலும் கூட, தனது நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அவனைக் குறிபார்த்துச் சுடுகிறார். அவனும் கொல்லப்படுகிறான்.

 

இறுதியாக வீடுவரும் அவருக்கு போரின் மனக் காயங்கள் மன உழைச்சலைத் தருகின்றன. ஒரு மனோ தத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் முன்னால் காயப்பட்ட ராணுவ வீரர்களின் சங்கத்துடன் இணந்து அவர்களுக்கு ஓய்வுநேரப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார் கிறிஸ் கைல்.

 

2013 இல் அமெரிக்க ராணுவத்தின் முன்னை நாள் வீரர்களுக்கான துப்பாக்கிச் சுடும் தளமொன்றில் அவரும் அவரது நண்பர் ஒருவரும் இன்னொரு அமெரிக்க வீரரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

 

தனது ராணுவ சேவையில் குறைந்தது 160 உறுதியாகத் தெரிந்த எதிரிகளைக் குறிவைத்துச் சுட்டுக் கொன்ற ஒரேவீரர் எனும் பெருமையை பெற்றுக்கொள்ளும் இவர், சுமார் 255 எதிரிகளைக் கொன்றிருப்பதாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது.

 

தனது தோழர்களைக் காக்கும் தனது பணியில் தன்னால் கொல்லப்பட்ட எதிரிகளுக்கு எந்தவித இரக்கமும் காட்டாத இவர்பற்றி விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. போரில் பின்னாலிருந்து சுடுபவர் என்று இவரை வசைபாடும் பலரும் இருக்கிறார்கள்.

 

ஆனால் இவர் கொல்லப்பட்டபோது அந்த ஊரே அழுதது. அவரது மரண ஊர்வலம் சென்ற வீதியெங்கும் மக்கள் பாலங்களுக்கு மேலாகவும், வீதியோரங்களிலும் நின்று அஞ்சலி செலுத்திய விதம் நெஞ்சை உருக வைக்கிறது. அவரை சக ராணுவ வீரர்களும் , மக்களும் எவ்வளவு தூரத்திற்கு நேசித்தார்கள் என்பதற்கு இது சாட்சி.

 

இந்தத் திரைப்படத்தினால் முஸ்லீம்களுக்கெதிரான குறிப்பாக அரேபிய - அமெரிக்கர்களுக்கெதிரான உணர்வு மேலோங்கியிருப்பதாக அமெரிக்காவில் வாழும் அரேபியர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பொன்று கூறியுள்லதுடன், இந்தப் படத்தின் இயக்குனரையும், நடிகரையும் இதுபற்றி மக்களுக்கு தைரியம் கொடுக்குமாறும் கேட்டிருக்கிறது.

 

நடிகரிடமிருந்து இதுவரை எதுவித பதிலும் வராதபோதும், இயக்குனர் இந்த குற்றச்சாட்டுப் பற்றிக் கூறுகையில், "நான் எனது முன்னால் ராணுவ வீரர்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன், அவர்கள் நாட்டிற்காகச் செய்த சேவை அளப்பரியது" என்று மட்டும் கூறியிருக்கிறார்.

 

இறுதியாக, இது ஒரு மிகச் சிறந்த படம். ராணுவ ரீதியிலும், தோழமை ரீதியிலும். முடிந்தால் பாருங்கள் !

ஒஸ்கார் விருதிற்கு நியமிக்கபட்டிருக்கின்றார் .

  1. Ceremony date (2015)February 22, 2015.
    அமரிக்கர்கள் பக்கத்தில் அது சரியாகத்தான் இருக்கும் பல உயிர் இழப்புகளை அவர் தடுப்பத்தால் .
    உண்மை எதுவென்று பார்த்தால் அமெரிக்கனுக்கு ஈராக்கில் என்ன வேலை ? தனது நாட்டை அந்நிய படையிடம் இருந்து விடுவிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.
    கடைசியில் இவரால் காப்பாற்றப்பட்ட இராணுவ வீரரே இவரின் உயிரை எடுக்கின்றார். ஊனமாக அலைவதை விட 

உயிர் போயிருக்கலாம் என நினைத்தாரோ தெரியாது .

விரிவான நேர்த்தியான விமர்சனம் நன்றி ரகு .

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் ஒருவன் தன் இராணுவத் தோழர்களை காக்க குழந்தை, பெண் அனைவரையும் சுடுகின்றான் அவனை விமர்சகர் உயர்ந்த வீரன், மற்றும் லெஜன்ட் என்று குறிப்பிடுகிறார் இன்னொருவன் தன் தாய்நாட்டை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்க இராணுவத்தை மட்டுமே சுட்டழிக்கின்றான். அவனை இதே விமர்சனம் தீவிரவாதி என்று அழைக்கிறது. இந்த விமர்சகர் மேற்குறிப்பிட்ட படத்தை பொழுதுபோக்கு சினிமா என்ற ரீதியில் மையப்படுத்தி கதையயை விமர்சிக்கிறாரா அல்லது தார்மீகத்தை அடிப்படையாக வைத்து விமர்சிக்கிறாரா என்பதையும் இங்கு கூறியிருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்கார் விருதிற்கு நியமிக்கபட்டிருக்கின்றார் .

  1. Ceremony date (2015)February 22, 2015.
    அமரிக்கர்கள் பக்கத்தில் அது சரியாகத்தான் இருக்கும் பல உயிர் இழப்புகளை அவர் தடுப்பத்தால் .
    உண்மை எதுவென்று பார்த்தால் அமெரிக்கனுக்கு ஈராக்கில் என்ன வேலை ? தனது நாட்டை அந்நிய படையிடம் இருந்து விடுவிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.
    கடைசியில் இவரால் காப்பாற்றப்பட்ட இராணுவ வீரரே இவரின் உயிரை எடுக்கின்றார். ஊனமாக அலைவதை விட 

உயிர் போயிருக்கலாம் என நினைத்தாரோ தெரியாது .

விரிவான நேர்த்தியான விமர்சனம் நன்றி ரகு .

 

நன்றி அர்ஜுன்,

 

நீங்கள் கேட்டதுபோல அமெரிக்கர்களுக்கு ஈராக்கில் என்ன வேலை?

 

எல்லாம் அரசியல்வாதிகளின் முடிவுதானே?? அவர்களின் தாளத்திற்கு ஏற்ப ராணுவ வீரர்களும் செல்கிறார்கள், ஆயிரக்கணக்கில் செத்து மடிகிறார்கள். வியட்னாம், ஈராக், ஆப்கானிஸ்த்தான் என்று எங்குமே தேவையில்லாத ஆக்கிரமிப்பும் உயிரிழப்பும்.

 

ஆனாலும் ஒன்று, அரசியல் காரணங்களுக்காக அவர்கள் போரிடச் சென்றாலும், வீரர்களிடையே இருக்கும் நட்பும், ஒருவரையொருவர் காக்க வேண்டும் என்கிற அக்கறையும் போற்றுதற்குரியது. இது எல்லா இராணுவங்களுக்கு பொருந்தும். ஆனால் இந்த ஆக்கிரமிப்புக்களால் அல்லல்ப்படும் மக்களின் அவலம் தனிக்கதை. அதை யார்தான் எடுக்கப் போகிறார்கள் ?? 

 

இந்தப் படத்தைப் போலவே என்னைப் பாதித்த இன்னொரு படம் பிளக் ஹோக் டவுன் (Black Hawk Down). 1993 இல் சோமாலிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க மரைன் அணியொன்றின் கதை. இன்னும் பார்க்கும்போதெல்லாம் கண்களில் நீரை வரவழைக்கும் ஒரு திரைப்படம். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

அமெரிக்கன் ஒருவன் தன் இராணுவத் தோழர்களை காக்க குழந்தை, பெண் அனைவரையும் சுடுகின்றான் அவனை விமர்சகர் உயர்ந்த வீரன், மற்றும் லெஜன்ட் என்று குறிப்பிடுகிறார் இன்னொருவன் தன் தாய்நாட்டை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்க இராணுவத்தை மட்டுமே சுட்டழிக்கின்றான். அவனை இதே விமர்சனம் தீவிரவாதி என்று அழைக்கிறது. இந்த விமர்சகர் மேற்குறிப்பிட்ட படத்தை பொழுதுபோக்கு சினிமா என்ற ரீதியில் மையப்படுத்தி கதையயை விமர்சிக்கிறாரா அல்லது தார்மீகத்தை அடிப்படையாக வைத்து விமர்சிக்கிறாரா என்பதையும் இங்கு கூறியிருக்க வேண்டும்.

 

வணங்கா முடி,

 

அந்த விமர்சகர் நாந்தான். தார்மீக அடிப்படையில் அந்த நிகழ்வை நியாயப்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ நான் முயலவில்லை. படத்தின் பின்னாலிருக்கும் அரசியலும் எனக்குத் தேவையற்றது. ராணுவ வீரன் ஒருவனின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை அவனது பார்வையிலேயே விமர்சித்தேன்.

 

தீவிரவாதி என்று நான் குறிப்பிட்டது படத்தின் அடிப்படையில்தான். அவர்கள் தமது தாயகத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கத்தான் போராடுகிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஒஸ்கார் விருதிற்கு நியமிக்கபட்டிருக்கின்றார் .

  1. Ceremony date (2015)February 22, 2015.
    அமரிக்கர்கள் பக்கத்தில் அது சரியாகத்தான் இருக்கும் பல உயிர் இழப்புகளை அவர் தடுப்பத்தால் .
    உண்மை எதுவென்று பார்த்தால் அமெரிக்கனுக்கு ஈராக்கில் என்ன வேலை ? தனது நாட்டை அந்நிய படையிடம் இருந்து விடுவிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.
    கடைசியில் இவரால் காப்பாற்றப்பட்ட இராணுவ வீரரே இவரின் உயிரை எடுக்கின்றார். ஊனமாக அலைவதை விட 

உயிர் போயிருக்கலாம் என நினைத்தாரோ தெரியாது .

விரிவான நேர்த்தியான விமர்சனம் நன்றி ரகு .

 

தவறான தமிழ் பிரயோகம். Nominated என்பது நியமிக்கபட்டிருக்கிறார் என்பதல்ல.

பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் என்பதே சரியான தமிழ் பிரயோகம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி ரகு உங்களின் விமர்சனத்துக்கு. ஒரு சாரார் றீபப்லிக்கனின் பரப்புரை என்கிறார்கள். இன்னும் சிலர் சிறுவர், பெண்ணை கொன்றது பிழை என்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு இராணுவத்தின் அனுபவம் என்கிறார்கள்.
 
 

ஒஸ்கார் விருதிற்கு நியமிக்கபட்டிருக்கின்றார் .

  1. Ceremony date (2015)February 22, 2015.
    அமரிக்கர்கள் பக்கத்தில் அது சரியாகத்தான் இருக்கும் பல உயிர் இழப்புகளை அவர் தடுப்பத்தால் .
    உண்மை எதுவென்று பார்த்தால் அமெரிக்கனுக்கு ஈராக்கில் என்ன வேலை ? தனது நாட்டை அந்நிய படையிடம் இருந்து விடுவிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.
    கடைசியில் இவரால் காப்பாற்றப்பட்ட இராணுவ வீரரே இவரின் உயிரை எடுக்கின்றார். ஊனமாக அலைவதை விட உயிர் போயிருக்கலாம் என நினைத்தாரோ தெரியாது .

விரிவான நேர்த்தியான விமர்சனம் நன்றி ரகு .

 
அவரின் உயிரை எடுத்தது அவரால் காப்பற்றப்பட்டவர் அல்ல. அவர் ஊனமுற்றவரும் அல்ல. 
போர்களத்தில் இருந்து மீண்டு வந்த போரின் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட (PTSD-   Post-traumatic stress disorder / Anxeity disorder  ) ஒரு முன்னாள் இராணுவ வீரராலேயே Chris Kyle துப்பாக்கி பயிற்சியின் போது சுட்டு கொல்லப்பட்டார்.   :icon_idea:

ஒஸ்கார் விருதிற்கு நியமிக்கபட்டிருக்கின்றார் .

  1. Ceremony date (2015)February 22, 2015.
    அமரிக்கர்கள் பக்கத்தில் அது சரியாகத்தான் இருக்கும் பல உயிர் இழப்புகளை அவர் தடுப்பத்தால் .
    உண்மை எதுவென்று பார்த்தால் அமெரிக்கனுக்கு ஈராக்கில் என்ன வேலை ? தனது நாட்டை அந்நிய படையிடம் இருந்து விடுவிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.
    கடைசியில் இவரால் காப்பாற்றப்பட்ட இராணுவ வீரரே இவரின் உயிரை எடுக்கின்றார். ஊனமாக அலைவதை விட 

உயிர் போயிருக்கலாம் என நினைத்தாரோ தெரியாது .

விரிவான நேர்த்தியான விமர்சனம் நன்றி ரகு .

தனது நாட்டை அந்நிய படைகளிடம் இருந்து மீட்பதற்கு அவர்கள் எதையும் செய்யலாம்.

அனால் அதையே புலிகள் செய்தால் மட்டும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லையே.  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இராணுவம் பெண்களையும் குழந்தைகளையும் சுட்டு கொல்லும் சந்தர்ப்பங்களில் அந்தமுடிவுகள் களத்தில் இருப்பவர்களால் மட்டும் எடுக்கப்பட்டவை அவை தலைமைபீடத்தில் இருந்தது வழங்கப்பட்ட கட்டளைகள் அல்ல என்று சொல்வதில் பகீரத பிரயத்தனம் எடுக்கப்பட்டிருப்பதும் புரிகிறது. இராணுவ விதிகளின்படி களத்தில் நிற்பவரிடம் "உன்னுடைய முடிவு" என்று தலைமைபீடம் சொல்லுவது உண்மையில் சிறுபிள்ளைதனமான, உண்மைக்கு புறம்பான, நடைமுயில் இல்லாத ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

தனது நாட்டை அந்நிய படைகளிடம் இருந்து மீட்பதற்கு அவர்கள் எதையும் செய்யலாம்.

அனால் அதையே புலிகள் செய்தால் மட்டும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லையே.  :D 

 

முடிவுகளை  எடுத்தவர்கள் வெள்ளைகள்

அவர்கள் முடிவில் பிழை இருக்காது........ :(

முடிவுகளை  எடுத்தவர்கள் வெள்ளைகள்

அவர்கள் முடிவில் பிழை இருக்காது........ :(

பின்னூட்டம் எழுத முதல் கடைசி என்ன அங்கு பேசப்படும் பொருள் என்றாவது புரிந்துகொள்ளுங்கள் .வேறும் ஊகத்தில் பின்னூட்டங்கள் எழுதவேண்டாம் .

விளங்காத விடயங்களில் ஏன் மூக்கை நுளைப்பான் உங்களுக்குத்தான் நைட் மசாலா போன்ற பல திரிகள் இருக்கின்றனவே . :)

சீமான் படம் பார்த்தீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்கள் பார்த்தேன், படம் பார்க்கவில்லை. ஆனால், வழக்கமான அமெரிக்க ராணுவ வீரர்களைப் புனிதர்களாக அமெரிக்கர்கள் மனதில் பதிய வைக்கும் ஹொலிவூட் முயற்சி என்கிறார்கள் பார்த்தவர்கள். என்ன பிரச்சினையென்றால் அமெரிக்கர்கள் வியட்னாம் கால மனநிலையில் இப்போது இல்லை. ஜூலியன் அசாஞ்சே ஈராக்கின் ஹடிதாவிலும், ஆப்கானிலும் நடப்பதை வீடியோ ஆதாரத்தோடு வெளியே கொண்டு வந்த பிறகும், "சிறுவனும் பெண்ணும் சுட வந்தார்கள், அவர்களைக் கைல் சுட்டார்" என்ற புருடாவெல்லாம் "கொஞ்சம் உப்புப் போட்டுத்தான்" அமெரிக்கப் பார்வையாளர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். கிறிஸ் கைல் தன் சுய சரிதையில் எழுதிய சில சம்பவங்கள் நடந்ததாக ஆதாரங்கள் இல்லையென்கிறார்கள் இப்போது. திரைப்படம் அவரது சரிதையில் இருந்து "loosely based" என்பதால் கற்பனை இன்னும் அதிகம் இருக்கும். குடியரசுக் கட்சிக்கு தங்கள் கிறிஸ்தவ வெள்ளையின வாக்காளர்களின் ஆதரவைத் தூக்கி விட இந்தப் படம் உதவும் என நினைக்கிறேன்!.

  • கருத்துக்கள உறவுகள்
"அமெரிக்கன் ஸ்னைப்பர்" ~ எதேட்சையாக ..எதிர்பார்ப்புகளோ , திரை படத்தின் பின்னல் இருக்கும் உண்மை சம்பவங்கள் குறித்த எந்த ஒரு புறிதலோ, அரசியலோ இல்லாமல் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
 
திரைப்படம் என்கின்ற ரீதியில் ஒவ்வொரு காட்சியும் படத்தினுள் என்னை மூழ்கடித்தது. கிரிஸ் கைலின் பால்யப் பருவம், சகோதர பாசம், ராணுவ பயிற்சி, ஆரவாரம் அற்ற காதல், திருமணம், ஈராக்கில் யுத்தப் பங்கெடுப்பு, யூத்த ரணம் மற்றும் அது தரும் உளவியல் மாற்றங்கள், பாதிப்புகள், அவரின் வாழ்க்கை அஸ்தமணம் ... இவையே திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகள்.
 
கிளின்ட் ஈஸ்ட்வூட் திரைப்படங்களில் இருக்கும் நேர்த்தி, கதை கூறும் விதம், காட்சி அமைப்புகள், இனோரன்ன விடயங்கள் இந்த திரைப்படத்திலும் அருமையாக கையாளப்பட்டு இருக்கிறது.
 
ஒரு ராணுவ வீரனாக அவன் சாட்சியங்களின் பதிவு மட்டுமே இந்த திரை கதை. இதில் அரசியல் கலப்பதும், அல்லாது ஒரு திரைப்படமாக பார்ப்பதும் ரசிகனின் கையில் தான் இருக்கிறது.
 
இந்த திரைப்படம் பார்த்தான் பின்னர் என் மனதில் நிறைய சிந்தனைகள் கிளர்ந்தது. அதுவும் கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில். இங்கு கிரிஸ்மஸ் பண்டிகை, பரிசு பொருள் ஷாப்பிங், மதுப் புட்டி, i phone, galaxy இப்படி நாங்கள் இருக்க ... எங்கோ ஒரு நாட்டில், பாசையே தெரியாத ஊரில், யாரையுமே நம்பமுடியாத சூழ்நிலையில்  மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு தனக்கு தரப்பட்ட கடமையை செய்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர் என் மனதில் வந்து போனார்கள். (எங்கள் போராளிகள் உள்பட)
          
என்னை  பொறுத்த வரையில் யுத்தம் ஒரு அகோரம், அழிவு, மனித வம்சத்தை சின்னாபின்னமாக்கும் ஒரு விடயம். அது எந்த நோக்கத்தில் நடந்தாலும் விளைவு மேற் கூறியதே.
 
தவிற முஸ்லீம் தீவிரவாதம் என்பது எல்லை கடந்தது, கனேடிய பாரளுமன்றம் தொடங்கி, பாகிஸ்தான் பள்ளி, பசி பட்டினியில் வாடும் ஆபிரிக்கா, பிரான்சில் இருக்கும் பத்திரிகை ஆபீஸ்  வரைக்கும் இன்று அது பாய்கின்றது. இதை எல்லாம் எப்படி மண்மீட்பு, அன்னியருக்கு எதிரரான போர் என்று அடையாளப்படுத்தலாம்?
 
படத்திலே ஒரு காட்சி ~ முஸ்லீம் சிறுவன் ஒருவனை, அவரின் தகப்பனாரை தீவிரவாதிகள் தலையில்  டிரில்லர் கொண்டு ஓட்டை துளைத்து சிதைத்து கொள்வார்கள்... அவர்களைப் போன்றவரை தான் இந்த திரை படத்தில் வரும் கிரிஸ் கைல் துப்பாகியால் குறி பார்த்து சுட்டுக் கொள்வார்.
ஒரு ராணுவ வீரராக அவருக்கு அளிக்கப்படும் கடமையை சரியாக செய்வார்.
 
 திரைப்படத்தை பார்க்காதவர்கள் ஒரு முறை பார்க்கலாமே. பார்க்காமலேயே எப்படி கருத்து சொல்ல முடியும்?
தவிர விமர்சனங்களில் சரி பிழை என்றும் ஒன்று  இல்லையே!! 
அது உங்கள் பார்வை... இது எனது பார்வை...
 
மற்றும் படி அமெரிக்க செய்த அரசியல் பிழை, ராணுவம் செய்த அட்டூழியம் கொடுமை இது குறித்து ஒரு தனி திரி தொடங்குங்கள் அது சார்ந்து ஒரு பொது அறிவு, வாசிப்பு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சியம் கருத்து எழுதுவார்கள். :)
  • கருத்துக்கள உறவுகள்

 

அமரிக்கர்கள் பக்கத்தில் அது சரியாகத்தான் இருக்கும் பல உயிர் இழப்புகளை அவர் தடுப்பத்தால் .
உண்மை எதுவென்று பார்த்தால் அமெரிக்கனுக்கு ஈராக்கில் என்ன வேலை ? தனது நாட்டை அந்நிய படையிடம் இருந்து விடுவிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.

 

 

பின்னூட்டம் எழுத முதல் கடைசி என்ன அங்கு பேசப்படும் பொருள் என்றாவது புரிந்துகொள்ளுங்கள் .வேறும் ஊகத்தில் பின்னூட்டங்கள் எழுதவேண்டாம் .

விளங்காத விடயங்களில் ஏன் மூக்கை நுளைப்பான் உங்களுக்குத்தான் நைட் மசாலா போன்ற பல திரிகள் இருக்கின்றனவே . :)

 

 

இதற்குள்

இதை எழுதியதால் தான் கேள்வி  வந்தது??

அங்கொன்று

இங்கொன்று என்று அரசியல் செய்ய வெளிக்கிட்டால்....??

முதலில் நம்மை சுத்தம் செய்யலாமே...??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறந்த படம் முடிந்தால் பாருங்கள் என்று விமர்சனத்தை முடித்துக்கொண்டது தான் எனக்கு புதிராக இருந்தது. இதை எந்தக்கோணத்தில் பார்த்தால் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்பது படத்தைப் பார்ப்பவரைப் பொறுத்ததுதான் இல்லையென்று சொல்லவரவில்லை. இந்த விபரத்தையும் விமர்சனம் செய்பவர் கூறியிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்பது எனது கருத்தாக இருந்தது. பல படங்கள் உண்மைக்கதைகளை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் முக்கிய இடங்களில் சில கற்பனை நிகழ்வுகள் புனையப்பட்டிருக்கும். படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் நமது தாய்நாட்டில் நடந்திருந்தால் அப்போதும் கூட இப்படம் எனது பார்வைக்கு சிறந்தபடமாக தெரிந்திருக்குமோ என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது. அமெரிக்கர்களை உலகத்தின் இரட்சகர்கள், சமாதானத்தின் காவலர்கள், ஜனநாயகத்தின் புதல்வர்கள், second to none என்ற மையக்கருத்துடன் எடுக்கப்படும் படங்களை என்னால் ஜிரணித்துக்கொள்ளவும் முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமுடி,

 

படம் எனக்குப் பிடித்திருந்தது. அநேகமான அமெரிக்கப் போர்ப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பதுண்டு. நீங்கள் கூறுவதுபோல அமெரிக்க இராணுவ மேலாதிக்க மாயைக்குள் நான் சிக்குண்டவனாக இருக்கலாம்.

 

நீங்கள் சொல்வதுபோல இதே சம்பவம் எமது தாய்நாட்டில் நடந்திருந்தால் எனது பார்வை நிச்ச்யம் வேறு மாதிரி இருந்திருக்கும்.

 

எனது இயல்பான மேற்குலக விசுவாசம் இந்தப் படத்தினையும் ஆதரிக்கச் செய்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகுநாதன் மொழியாக்கத்துக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.