Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகத்தார் வீடு.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் அசைபோட்டு பார்ப்போம்... :)

 

இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. . 

 

முகத்தார் வீடு . 1 

 

 

நேரம் : காலை 9 மணி 
(முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .) 

பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா? 

முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும் 

பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ? 

முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன் 

(பொண்ணம்மா முகம் கழுவ கிணத்தடிக்குப் போற முகத்தார் கப்பைக் கழுவி தேத்தண்ணியை ஊத்தி வைக்கிறார்) 
முகத்தார் : இந்தாரும் தேத்தண்ணி. . அதுசரி திருநீறை நெத்திலை புூசினீரோ அல்லது தட்டிலை தலையை வைச்சு தேச்சனீரோ அப்பிடிக் கிடக்கு. . 

பொண்ணம்மா : உங்கடை இந்த நக்கலுக்கொண்டும் குறைச்சலில்லை. . 

(அந்த நேரம் படலை திறக்கும் சத்தம் கேக்கிறது பொண்ணம்மா எட்டிப் பாக்கிறா. .) 
பொண்ணம்மா : கிழிஞ்சுது. . .வேலைவெட்டியில்லை காலேலையே வந்திடுங்கள் 

முகத்தார் : யாராயப்பா இப்பிடி திட்டுறாய்? 

பொண்ணம்மா : வேறை யார் உங்கடை கூட்டாளிதான் சாத்திரியார். . 

முகத்தார் : இஞ்சை தனிய என்னவேணுமானாலும் திட்டு ஆட்களுக்கை மரியாதை கெடுத்துப் போடாதை என்ன. . . 

பொண்ணம்.மா : சும்மா அந்தாளோடை அலம்பாமல் ஆளை வேளைக்கு கலைச்சுப் போட்டு வாங்கோ சட்டி பானை எல்லாம் கழுவ வேணும் சந்தைக்கும் போக வேணும் . . 

முகத்தார் : சரி... சரி. . புலம்பாமல் போ. . .எட சாத்திரி என்ன காலேலையே. இஞ்சாலை முகமும் விடியாத மாதிரி கிடக்கு என்ன விசயம் ? 

சாத்திரி : எல்லாம் வீட்டுப் பிரச்சனைதான் இந்த மனுசிமாருக்கு என்னத்தைச் செய்தாலும் திருப்திப் பட மாட்டாளவை 

முகத்தார் : நீ எதைச் சொல்லுறாய்? 

சாத்திரி : வேறை என்ன காலேலை எழும்பி சமைச்சுப் போட்டு ஒரு ரவுண்ட் வெளிக்கிடுவம் எண்டு வந்தால் மனுசிகாரி சொல்லுறாள் சாப்பாட்டைப் போட்டு நாய்க்கு வைச்சிட்டு போங்கோ எண்டு 

முகத்தார் : இதென்ன சின்ன வேலைதானே. . 

சாத்திரி : நானும் சொன்னன் போட்டு வந்து உனக்கும் நாய்க்கும் போட்டு தாறன் எண்டு அதுக்கு சொல்லுறாள் நான் வாறதுக்கிடையிலை நாய் படுத்திடுமாம் ஏன் அவளுக்கு இதைச் செய்யகூட என்ன வருத்தம். . . 

முகத்தார் : விடு சாத்திரி இதுக்குப் போய் டென்ஷன் ஆகிக் கொண்டு . . . . 

(அந்த நேரம் பொண்ணம்மா தேத்தண்ணி கொண்டு வந்து சாத்திரிக்கு குடுக்கிறா. .) 
பொண்ணம்மா : என்ன சாத்திரியண்ணை களைச்சுப்போய் வந்திருக்கிறீயள் தேத்தண்ணி குடியுங்கோவன். எனக்குக் கொஞ்சம் உள்ளைவேலை யிருக்கு வாறன். . 

முகத்தார் : (மனசுக்குள்) உள்ளை வேலையா? நான் போய்த்தான் ஏதன் செய்யவேணும்) சாத்திரி தேத்தண்ணியை குடியன் 

சாத்திரி : முகத்தான் நீ குடுத்து வைச்ச ஆளடப்பா பொண்ணம்மா மாதிரி பெண்சாதி கிடைக்கிறதுக்கு . . . 

முகத்தார் : (நான் போட்டு வைச்ச தேத்தண்ணியை கொண்டு வந்து குடுத்தவுடனை பொண்ணம்மா நல்லம் நான் குடுத்து வைச்சனான் யாரிட்டை சொல்லுறது) சாத்திரி இதெல்லாம் விதிப் பலன் . . . . 

(அந்த நேரம் நாய் படலையைப் பாத்துக் குரைக்குது யாரோ நிற்பதுபோல நிழல்வேறை) 
முகத்தார் : இது என்னடா ஆமிக்காரனைக் கண்ட மாதிரி நாய் குரைக்குது யாரது? 

சாத்திரி : அதுதான் எனக்கும் தெரியலை கூப்பிடட்டே . . ? 

பொண்ணம்மா : என்னப்பா நாய் ஏதோவைக் கண்டமாதிரி குரைக்குது போய் ஒருக்கா பாருங்கோவன் 

(முகத்தார் எழுந்து படலையடிக்குப் போறார் நிண்டஆளையும் கூட்டிக் கொண்டு வாறார் ஆளைக் கண்டதும்) 
பொண்ணம்மா : நான் நினைச்சன் இவராத்தான் இருக்குமெண்டு. .வாங்கோ. . 

சாத்திரி : எட. . சின்னப்புவே. என்ன குமர்ப்பிள்ளை மாதிரி வெக்கப்பட்டுக் கொண்டு. . 

சின்னப்பு : இல்லையடா சாத்திரி எனக்கும் இந்த நாய்களுக்கும் ஒத்து வராது ஏற்கனவே ஒரு (புல)நாயிட்டை மாட்டுப்பட்டு கந்தலானனான் அதாலை கொஞ்சம் தள்ளி நிக்கிறனான். 

பொண்ணம்மா : சரி. . . 3பேரும் சேர்ந்தாச்சு இனி விடிஞ்ச மாதிரித்தான். . 

முகத்தார் : என்ன சின்னப்பு காலேலை கடையள் புூட்டுப் போல இந்தப் பக்கம் வந்திருக்கிறாய். . . ? 

சின்னப்பு : இல்லை முகத்தான் சாத்திரி வீட்டுப் பக்கம் போனன் இந்த நாயைவிட முனியம்மாவின் குரையல் பெரிசாக்கிடக்கு பேசாம திரும்பிட்டன். . 

முகத்தார் : அது ஒண்டுமில்லை இண்டைக்கு அட்டமி யெல்லோ கனத்தநாள் சிலபேரிலை காட்டும் இந்த நேரத்திலை நாங்கள் கொஞ்சம் விலகியிருப்பது நல்லம் 

சாத்திரி : சின்னப்பு இஞ்சை எண்டாலும் மனுசியை நினைவுபடுத்தாமல் இரு பாப்பம் அதுசரி அடுத்தமாதம் லெக்ஷன் வருகுதெல்லோ பேப்பருகள் என்ன சொல்லுது. . ? 

முகத்தார் : யாரடாப்பா உதிலை மினைக்கடுறது சனத்துக்கும் பெரிசா ஆர்வமில்லை. 

சின்னப்பு : முந்தி பிரேமதாசா வெட்டுவர் புடுங்குவர் எண்டு போட்டம் பிறகு அம்மா ஏதோ செய்வா எண்டு போட்டம் என்ன நடந்தது இருக்கிற இனவாதத்தை கூட்டித்தான் விட்டிருக்கினம் அவ்வளவுதான் 

சாத்திரி : சின்னப்பு இந்தமுறை நீ யாருக்குப் போடப் போறாய். . ? 

சின்னப்பு : நான் போடாமல் விட்டா வீட்டிலை இந்த குறுக்காலைபோன குத்தியன் எடுத்துக் கொண்டு போய் தன்ரையாளுக்குப் போட்டுவன் ஆனா படியா போடத்தான் வேணும் யாருக்கு எண்டு இன்னும் யோசிக்கேலை 

சாத்திரி : நான் நினைக்கிறன் ரணில் கொஞ்சம் லிஸ்ட் விட்டிருக்கிறார் அவற்ரை தேர்தல் பிரசாரத்திலை மனுசன் செய்திச்சுச்செண்டால் நல்லம் 

சின்னப்பு : எங்கை உவங்கள் செய்ய விடுவங்களோ. . . ? 

முகத்தார் : அப்ப மகிந்தா வந்தால் என்ன நடக்கும் . . ? 

சின்னப்பு : அவர் ஜேவிபிக்கும் மொட்டைக்கும்தான் ஜனாதிபதி ஆகப் போறார் வந்தாப் பிறகு பாரன் மனுசன் தலையைப் பிச்சுக் கொண்டு ஓடாட்டிக்கு. . . 

சாத்திரி : ஏன் சின்னப்பு அப்பிடிச் சொல்லுறாய் ? 

சின்னப்பு : பின்னை என்ன இந்த ஜேவிபிக்கும் மொட்டைகளுக்கும் ஒத்துவராது பாலிமெண்டிலை பாத்தீங்களே மொட்டைகளின்ரை காவி உடுப்பைக் கழட்டி அடிச்சது ஆர்? 

முகத்தார் : ஆனா சின்னப்பு தெற்கிலையெல்லாம் மகிந்தாவுக்குத்தான் அதரவு கூட இருக்கெண்டு சொல்லினம் அதோடை மொட்டைகள் பிரச்சாரத்திலை இலங்கேலை பௌத்தத்தை கொண்டு வந்ததும் மகிந்தா(மன்னன்)தான் அதுபோல அந்த பௌத்தம் அழியாமல் காப்பாத்துவதும் இந்த மகிந்தாவால்தானாம். .எண்டு விடுகினம் 

சின்னப்பு : முகத்தான் உந்த மொட்டைகளின் கதையை விடு அரச சுகபோக வாழ்க்கை பிடிக்காமல் துறவியானவர்தான் புத்தர் அவரைப் பின்பற்றி வாறவை அரச பதவிக்கு ஆசைப்படுகிறதெண்டால் என்ன இது. . . . 

சாத்திரி : அதுவும் சரிதான் சின்னப்பு யார் வந்தாலும் எமக்கு இதே கெதிதான் என்ன சொல்லுறீயள். . .? 

முகத்தார் : அனேகமா சிறுபான்மையெல்லாம் ரனிலுக்குத்தான் சப்போட் பண்ணுவினம் போலக்கிடக்கு பாப்பம் என்ன நடக்குதெண்டு. . . 

பொண்ணம்மா : என்ன 3பேரும் லெக்ஷன் கேக்கப் போறீங்களோ. . ? உங்களுக்கு இந்த அரசியலை விட்டாவேறை கதையில்லைப் போல என்ன. . . ? 

சின்னப்பு : எங்கடை வயசுக்குப்பிள்ளை நாங்க வேறை என்னத்தைத்தான் கதைக்கிறது 

சாத்திரி : சரி இதை இதோடை விடுவம் இன்னோரு கதைகேள்விப் பட்டியளோ திருகோணமலை கடல்த்தண்ணி பச்சைத் தண்ணியாக் கிடக்காம் 

சின்னப்பு : இதென்ன கதை கடல்தண்ணி பச்சைத்தண்ணியில்லாமல் சூடுதண்ணியோ.? 

சாத்திரி : சின்னப்பு உனக்கு தவறனைத்தண்ணியைத் தவிர வேறையொண்டும் தெரியாது இது பச்சை நிறத்திலை தண்ணியிருக்காம் சனம் திருவிழா மாதிரி கடக்கரையிலை கூடிச்செண்டால் பாத்துக்கோவன் 

முகத்தார் : உந்த சுனாமிக்குப் பிறகு எங்கடைசனங்கள் கடலை வடிவாத்தான் பாக்குதுகள் ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் கண்டுபிடிச்சிடுங்கள் 

சாத்திரி : இருந்தாலும் முகத்தான் இது முன்னையதுகளைவிட வித்தியாசமா இருக்குதாம் 

முகத்தார் : நானும் பேப்பரிலை பாத்தனான் இதுவந்து இந்தியாகாரங்கள் செய்யிற வேலைபோலத்தான் எனக்கு படுகுது 

சின்னப்பு : என்ன கடலுக்கை சாயத்தைக் கொட்டிப் போட்டங்களோ . . ? 

சாத்திரி : சின்னப்பு உந்த விசர் பகிடியை விட்டுட்டு கதையைக் கேள் முகத்தான் நீ சொல்லு. . . 

முகத்தார் : இந்த பாக்குநீரிணையை பெரிய கப்பல்கள் வரவேண்டுமெண்டு ஆழமாக்கிறதுக்கு சேது சமுத்திரத்திட்டமொண்டை தொடங்கினவையெல்லோ அது இப்ப நடமுறைக்கு வந்திட்டுது இனி கடலை ஆழமாக்கேக்கை அங்கையிருக்கிற உயிரிணங்கள் திக்குத்திசை தெரியாம கரையொதுங்கியிருக்குதுகள் போல கூட்டமா வரேக்கை அந்த இடத்திலை சில மாற்றங்கள் தெரியத்தான் செய்யும் 

சின்னப்பு : அப்பிடியெண்டால் சில மீன் இனங்களும் அழியிறத்துக்கும் வாய்ப்பிருக்கு என்ன. . ? 

முகத்தார் : மீனினங்கள் மட்டுமல்ல பளிங்குப்பாறையள் கூட அழிய வாய்ப்பிருக்கு 

சின்னப்பு : அப்ப மீன் பிடிக்கிற ஆட்களுக்கு பாதிப்பில்லையோ . . ? 
முகத்தார் : ஏன் இல்லாமல் இப்பிடி மீன் இனங்கள் அழியிறதாலை மீன்பிடித்தொழில் கலர்மீன் ஏற்றுமதிகூட பாதிப்படையச் சாத்தியம் இருக்கு . . 

சாத்திரி : அப்ப இது எங்கடை அரசாங்கத்துக்கு விளங்கேலையோ இந்த திட்டத்துக்கு எதுக்கு சம்மதிச்சவை. . 

முகத்தார் : எங்களுக்கு மாத்திரமில்லை தமிழ்நாட்டு மீன்பிடித்துறைக்கும் பாதிப்புத் தான் முதலிலை ஜெயலலிதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தவ பிரயோசணமில்லை எங்கடை அரசாங்கம் தமிழீழ மீனவர்தான் பாதிக்கப் படப்போயினம் எண்டுட்டு சும்மா இருந்திட்டினம் 

சாத்திரி : இப்ப இந்த திட்டம் முடிஞ்சால் கொழும்பு துறைமுகத்துக்கு வாற கப்பல்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுமே இதாலை இவைக்கு நட்டம்தானே. . ? 

முகத்தார் : உண்மைதான் சாத்திரி எல்லாம் முடிஞ்சாப்பிறகுதான் ஓடி முழிப்பினம் 

சின்னப்பு : உவைக்கு எங்கடை ஒருகண்ணைக் குத்திறதெண்டால் தங்கடை இரண்டு கண்ணையும் குத்திக் கொள்ளுவினம். . 

பொண்ணம்மா : என்னப்பா மணி 11யாகுது சந்தைக்குப் போகேலையோ. . .? 

முகத்தார் : சரி. . சரி. . வெளிக்கிட்டுட்டன் சின்னப்பு சாத்திரி வெளிக்கிடுங்கோ மனசி கொப்பிலை ஏறுதக்கிடையிலை நான் ஒருக்கா சந்தைக்கு போகவேணும். . 

சாத்திரி : நானும் வெளிக்கிடுறன் மனுசிக்காரி உலையும் வைச்சிருக்க மாட்டாள் போய்த்தான் எதன் செய்யவேணும் சின்னப்பு வரட்டே. . . 

சின்னப்பு : இரண்டுபேரும் மனுசிமாருக்கு பயந்து என்ன ஓட்டம் ஓடுறாங்கள் நல்ல காலம் என்ரை மனுசி கொழும்புக்குப் போனது எவ்வளவு சந்தோஷம். . . 

(யாவும் கற்பனை)

 

yarl_logo.gif

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவது பந்தில முகத்தார் பொன்னம்மாவுக்குச் சொன்னதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்லுறன்...!  :)

 

மனிசிக்கு மரியாதை கொடுப்பவர்கள் என்பது எமக்குள்ளேயே இருக்கட்டும்...!!  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(இங்கு வரும் உரையாடலில் சில வார்த்தைகள் யாழ்ப்பாணத்தில் பேச்சுவழக்கில் உள்ளவை இது யாழ் களம் எண்டபடியால்தான் அனேகருக்கு புரியும் என நினைக்கிறேன் சின்னப்பு . சாத்திரி உங்களின் பேர்கள் இதில் பாவிப்பதில் எதாவது ஆட்சேபனைகள் இருந்தால் தனிமடலில் தெரிவிக்கவும்) 

முகத்தார் வீடு . . அங்கம் -2 

நேரம் : காலை 10 மணி 

(முகத்தார் வளவுக்குள் வேலிக்கு கதியால் போட்டுக்கொண்டிருக்கிறார் வீட்டுக்குள்ளிருந்து பொண்ணம்மா கூப்பிடுகிறா. . .) 

பொண்ணம்மா : எங்கையப்பா நிக்கிறீயள் வேலியோடை நிண்டு சொறியாம ஒருக்கா மாக்கெட்டுக்கு போட்டு வாங்கோவன். 

முகத்தார் : ஏனடியப்பா எழும்பினவுடனையே கத்திறீர். . .பொறும் வாறன். . . இஞ்சை இன்னும் நேரம் இருக்குத்தானே பிறகேதுக்கு அவசரப்படுகிறீர் ? 

பொண்ணம்மா : உங்களுக்கு விளங்காது இப்ப விரதநாளெல்லோ வேளைக்குப் போணாத்தான் நல்ல மரக்கறி வாங்கிவரலாம். 

முகத்தார் : சரி. . . சரி. . .என்னவேண்ட வேணும் சொல்லும் பாப்பம் 

பொண்ணம்மா : ஏனப்பா 12 மணித்தியாலம் குசினிக்கை நிக்கிறீயள் உங்களுக்குத் தெரியாதோ? 

முகத்தார் : மரக்கறி உமக்கு விருப்பமானதைச் சொன்னாத்தானே நல்லது பிறகு வாங்கி வந்தாப் பிறகு துள்ளிக் குதிக்காம.ல். . . . 

பொண்ணம்மா : பாவற்காய் 2 எடுங்கோ அப்பிடியே கரட் இருந்தால் சம்பல் ஒண்டு போடலாம் கிழங்கேடுக்கிறதெண்டால் உரும்பிராய் கிழங்கா பாத்தெடுங்கோ பிறகு 4 முருங்கக்காயும். . . 

முகத்தார் : எல்லாம் சரி இந்த முருங்கக்காய் மட்டும் வாங்க மாட்டன் கண்டியோ .போண கிழமை வாங்கேக்கை இரண்டு பெட்டையள் பாத்துச் சிரிச்சதுகள் எனக்கு வெக்கமாப் போச்சு. 

பொண்ணம்மா : நீங்கள் ஏன் பெட்டையளைப் பாத்தனீங்கள் வளவுக்கை நிண்ட முருங்கை மரத்தையும் தறிச்சுப் போட்டியள் வாய்க்கு ருசியா சாப்பிடுவமெண்டால் அதுக்கும் விடுகிறீயள் இல்லை. . 

முகத்தார் : சரி ஒப்பாரி வைக்காதையும் பக்கங்களிலை ஆட்களில்லாட்டி வாங்கி வாறன் 

பொண்ணம்மா : கட்டேலை போற வயசிலை இந்த மனுசனுக்கு முருங்கைக்காய் வாங்க வெக்கமாக் கிடக்காம். . . . 

(சந்தைக்கு போண முகத்தார் அரைமணித்தியாலத்தால் வழியில் கண்ட சின்னப்புவையும் கூட்டிக் கொண்டு வாறர் ) 

முகத்தார் : சின்னப்பு வெளியிலை இருப்பம் வீட்டுக்கை ஒரே வெக்கை மனிசிட்டை மரக்கறியைக் குடுத்திட்டு வாறன் இருந்துகொள். . 

பொண்ணம்மா : எங்கையப்பா இந்த மனுசனைப் பிடிச்சனீங்கள் விரதநாள் அதுவுமா போட்டுட்டு வேறை வந்திருக்கும் 

முகத்தார் : எனக்கு உன்ரை குணம் தெரிஞ்சுதான் வெளியிலை இருத்திப் போட்டு வந்தனான் பாவமடி. மனிசியும் கொழும்புக்கு போணதாலை போக்கிடமில்லாமல் றோட்டிலை நிண்டார் ஒருநேரம் சாப்பாடு குடுத்தால் புண்ணியமாப் போகும்தானே . . 

பொண்ணம்மா : இல்லையப்பா உந்த மனுசன் சாப்பிட்டுப் போட்டு எதாவது நொட்டை நொடி சொல்லிக் கொண்டு திரியும். அதுதான் . 

முகத்தார் : இண்டைக்கு விரதநாள் அதுவுமா உன்ரை கையாலை ஒருக்காச் சமையுமன் சின்னப்புவும் சாப்பிட்டா இன்னோரு நாள் இந்தப் பக்கம் வரமாட்டான் 

பொண்ணம்மா: என்னை மாட்டி விட்டுட்டு எங்கை போறியள் (இந்த நாசமாபோண சின்னப்பு ஏன்தான் வந்திச்சோ தெரியேலை ) 

முகத்தார் : சின்னப்பு மத்தியாணம் இஞ்சை சாப்பிட்டுட்டு போ என்ன. மரக்கறி சாப்பாடு; உனக்கு ஒத்துவராதுதான். . 

சின்னப்பு : பரவாயில்லை முகத்தான் ஒருநாள்தானே. . மனுசியும் வீட்டிலை இல்லாதது விசராக் கிடக்கு. சரி என்ன புதிசா எதாவது புதினங்கள் இருக்கோ? 

முகத்தார் : லெக்ஷனைப் பற்றி சொல்லுறதெண்டால் மலையக தமிழ் கட்சிகள் 2ம் ரணில் ஆதரிக்கிற தெண்டு முடிவெடுத்திட்டினம் 

சின்னப்பு : யாரு சந்திரசேகரனும் தொண்டமானுமோ? 

முகத்தார் : ஓமோம். . .இதாலை மலையக மொத்த வாக்குகளும் ரணிலுக்குத் தான் போகப் போகுது. . 

சின்னப்பு : இப்ப முஸ்லீம் காங்கிரசும் ரணிக்குத்தானே சப்போட் பண்ணப் போகினம் அதுசரி உவர் தொண்டமான் மகிந்தாவோடை கதைக்கப் போணவர் எல்லோ என்ன நடந்தது. . 

முகத்தார் : அது என்ன பகிடி எண்டால் மகிந்தான்ரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலை சிறிபதி சூரியராச்சி எண்ட பிரதியமைச்சர் ஒருவர் பங்கு பற்றுகிறார் இந்த மனுசன் கூட்டமொண்டிலை பேசேக்கை தொண்டமான் ஹக்கீம் ஆட்களின் ஆதரவு இல்லாட்டியும் மகிந்தாவருவது உறுதி எண்டு சொல்லியிருக்கிறார் இது தொண்டமானுக்கு சுட்டுப்போட்டுது போல 

சின்னப்பு : இந்த சூரியராச்சிக்கும் தேவையில்லாத வேலை சும்மா மைக்கை கண்டவுடனை பேசுறதே. . 

முகத்தார் : அதுதான் இப்ப கனபேர் மகிந்தாட்டை சொல்லியிருக்கினமாம் அவரை பிரச்சார நடவடிக்கேலையிருந்து விலத்தச் சொல்லி.. 

சின்னப்பு : இனி என்ன செய்யிறது அதுதான் தொண்டமான் பப்பிளிக்கா அறிக்கை விட்டுட்டாரே. . . 

முகத்தார் : இப்ப எங்கடை ஆட்கள்தான் வெளிப்படையா யாருக்கு போடுறதெண்டு அறிவிக்கேலை. . 

சின்னப்பு : இனவாதிகளோடை சேர்ந்திருக்கிற மகிந்தாவை விட ரணில் பரவாயில்லை என்ன முகத்தான் 

முகத்தார் : இப்ப எங்கடை பிரச்சனைக்கு யார் வந்தாலும் எதாவது செய்வார்கள் எண்டு எதிர்பார்க்க முடியாதுதான் ஆனா இதுக்காண்டி தேர்தலை புறக்கணிச்சு போடாம விட்டாலும் இந்த ஆமிக்காரங்களும் டக்ளஸ்சின்ரை ஆட்களும் கள்ளவோட்டுப் போட்டு மகிந்தாவை கொண்டு வந்திடுவங்கள் இனவாதிகள் ஆட்சியமைப்பது சிறுபாண்மை இனத்தவர்களுக்கு நல்லதில்லை. . . 

பொண்ணம்மா: சின்னப்பு மனுசி வீட்டிலை இல்லாட்டி இஞ்சை நேரை வந்து சாப்பிட்டுப் போறதுதானே இண்டைக்கு சாப்பிட்டுட்டுப் போங்கோ என்ன. . 

முகத்தார் : (அடிப்பாவி கூட்டிக்கொண்டு வந்ததுக்கு உள்ளுக்கை கத்திப் போட்டு இப்பிடிக் கதைக்கிறாளே ) எதாவது குடிக்கத் தாருமன் 

சின்னப்பு : எனக்கெண்டா ஒண்டும் வேண்டாம் பிள்ளை 

பொண்ணம்மா : இந்த நேரம் சின்னப்பு என்ன குடிப்பர் எண்டு எனக்குத் தெரியும் இந்த மனுசனும் விரதத்தாலை இந்த 10 நாளும் அடக்கிக் கொண்டு இருக்குது. . 

முகத்தார் : சும்மா கதையை விட்டுட்டு வேளைக்கு சமையும் பசிக்குது (அப்பாடி சின்னப்பு நிக்கிறதாலை கொஞ்சம் அதிகாரத்தைக் காட்ட முடியுது ) 

சின்னப்பு : அதுசரி முகத்தான் ஜேவிபித் தலைவருக்கு எதிரா நடவடிக்கை எடுக்கச் சொல்லி இராணுவம் சொல்லுதாம் 

முகத்தார் : அதுவந்து முன்னைய இராணுவத் தளபதிகள் ஒரு 4பேர் சேர்ந்து அறிக்கையொண்டை எமுதி சந்திரிக்காட்டை குடுத்திருக்கினம் சோமவன்ச மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி. . . 

சின்னப்பு : இந்த மனுசன் அப்பிடி என்ன செய்துச்சு? 

முகத்தார் : அந்த மனுசன் என்ன டோப்பிலை கதைச்சுதோ தெரியேலை இலங்கை ராணுவத்தைக் கலைக்கவேணும் எண்டு சொல்லியிருக்கிறார் இது வந்து இராணுவத்திலை இருக்கிறவையை அவமதிக்கிற செயல் எண்டுதான் நடவடிக்கை எடுக்கச் சொல்லினம் 

சின்னப்பு : ஆனா இலங்கை ராணுவம் 88லை ஜேவிபி விசயத்திலை உசாராத்தான வேலை செய்திருக்கிறாங்கள் ரயர் விளையாட்டைப் போட்டபடியாத்தான் அடங்கினவை இப்ப இந்த அம்மா வந்துதான் எழுப்பி விட்டிருக்கிறா. . 

முகத்தார் : சிலவேளை சோமவன்ச கைது செய்யப்படலாம் எண்டு பேப்பரிலை இருக்கு அதோடை இவர் விமல் வீரவம்சாவும் 2 . 3 நாளாத் தலைமறைவெண்டும் சொல்லுறாங்கள் உண்மை பொய் தெரியேலை 

சின்னப்பு : லெக்ஷனுக்கிடையிலை பெரிய விளையாட்டுகள் இருக்குதெண்டு சொல்லுறாய். . பாப்பம் 

முகத்தார் : அதுசரி சின்னப்பு சாத்திரியை 2 நாளாக் காணேலை எங்கையாள் ? 

சின்னப்பு : அதையேன் கேக்கிறாய் முனியம்மா நகம் வெட்டேக்கை விரலிலை கீறிப் போட்டுதாம் இதுதான் சாட்டெண்டு மனுசி கட்டிலை படுத்திட்டுது சாத்திரியர் தான் உடுப்புத் தோக்கிறதிலை இருந்து எல்லா வேலையும் ஆளுக்கு வெளிக்கிட நேரமில்லை 

பொண்ணம்மா : சரி . .சரி. . கதைச்சது காணும் வாங்கோ சாப்பிடுவம் ..இஞ்சருங்கோ வாழையிலை 3 வெட்டியாங்கோவன். . . . . . 

(யாவும் கற்பனை)

 
yarl_logo.gif
 

ஏற்கனவே 2005 இல் எழுதப்பட்டு வந்த விடயம் இது.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/6829-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே 2005 இல் எழுதப்பட்டு வந்த விடயம் இது.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/6829-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/

 

யார் இல்லையென்றார்.   இத்திரியின்    ஆரம்பத்தையும் அதன்  இறுதியையும் நன்கு கவனியுங்கள்.

 

இனிவரும் காலங்களில்  கட்டிவைத்த வீட்டையாவது பராமரிக்க விடுங்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை குறுக்கெழுத்துப்போட்டிக்கு பதிலைக் கண்டு பிடிக்க இப்படியெல்லாமா உதவுவீங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் வீடு - அங்கம் 3 



இது கொஞ்சம் வித்தியாசமாக



(சாத்திரியை 1 கிழமையாக் காணவில்லை எண்டு முகத்தாரும் சின்னப்புவும் அவரைத் தேடி வருகிறார்கள் அங்கை பாத்தால் சாத்திரி வீட்டுக்கு முன்னால் ஒரு புதுக்கார் நிக்குது. உள்ளே சாத்திரி வலு பிசியா வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் பொறுமையுடன் வெளியில் காத்து நிக்கிறார்கள் முகம்ஸ்மும் சின்னப்புவும்)



சாத்திரி : சின்னப்பு கோவியாதைங்கோ கொஞ்சம் பிசி..



சின்னப்பு : யாரடாப்பா இது புது ஆட்களாக் கிடக்கு. . 



சாத்திரி : இவை எங்கடை ஆட்கள்தான் லண்டனிலை இருந்து வந்திருக்கினம்



முகத்தார் : என்னவிசயம் அதுவும் உன்னட்டை வந்திருக்கினம் 



சாத்திரி : இவை புலம் பெயர்ந்து போய் கைநிறைய நல்லா சம்பாதிச்சிருக்கினம் இப்ப இதை வைச்சு தமிழை .கலையை வளர்க்க இங்கை வந்திருக்கினம்



சின்னப்பு : அதுக்கு நீ என்ன ஜடியா குடுத்தனி ?



சாத்திரி : அதுதான் தமிழை வளர்க்கிதெண்டால் சினிமாப்படம் எடுங்கோவன் எண்டன் கலையையும் வளர்த்த மாதிரி போகும் எண்டு இப்ப என்னையே பிடிச்சுக் கொண்டினம் படத்தை எடுத்துத் தரச் சொல்லி .



முகத்தார் : முறையான இடத்துக்குத்தான் வந்திருக்கினம் இவைக்கு படமெடுத்த முன் அனுபவம் ஏதெனும் இருக்கோ?



சின்னப்பு : முன்னனுபவமிருந்தால் என்னதுக்கு சாத்திரியிட்டை வருகினம்



சாத்திரி : இஞ்சை வாங்கோவன் உங்களுக்கும் அவையை அறிமுகப்படுத்தி வைக்கிறன் இந்தா இவர்தான் தயாரிப்பாளர் தல. .மற்றதெல்லாம் இவற்றை நண்பர்கள் 



முகத்தார் : தம்பி வணக்கம் என்ன படம் எடுக்கப் போறீயளாம்?



தல : அதுதான் வந்திருக்கிறம் படம் எடுக்க ஜடியா குடுத்திட்டு சாத்திரியார் இன்னும் கதையையே சொல்லேலை….



சாத்திரி : கதையா அது என்னத்துக்கு தமிழ் படத்துக்கு தேவையில்லையே அதை நான் பாத்துக் கொள்ளுறன். .



தல : அப்ப ஹீரோ ஹீரோயின் வில்லன் இவர்களையாவது தெரிவுசெய்யலாமே. .



சாத்திரி : (முகத்தாரைக் காட்டு ) இந்தா ஹீரோக்கு இவரைப் போடுவம் 



தல : என்ன ஜயா விளையாடுறியள் நான் இவ்வளவு காசைப் போட்டு என்ன பக்திப்படமா எடுக்கப் போறன்



சாத்திரி : ஏன் அப்பிடிச் சொல்லுறீயள் இவருக்கு என்ன 52வயசுதான் ஆகுது அப்பிடியே ஆளைத் மாத்திப் போட்டிட மாட்டன்



தல : என்ன 25 எண்டு எழுதிக்காட்டப் போறீயளா இது படம் ஜயா. . 



சாத்திரி : 58 வயசிலை நடிக்கிற ஆட்களின் படத்தை 200 நாளுக்கு மேலை ஓட வைக்கிற சனங்கள் இவரை ஏற்றுக் கொள்ள மாட்டினமோ?



தல : அப்ப வில்லன் நடிகனுக்கெண்டாலும் பழைய ஆளைப் போடுவம். . 



சாத்திரி : போட்டாப் போச்சு இந்தா (சின்னப்புவைக் காட்டி) சும்மாதான் இருக்கிறார்



தல : ஜயா நான் படம் எடுக்கிறது சனம் பாக்கிறதுக்கு. . .



சாத்திரி : நீங்க பழைய ஆளைப் போடச் சொன்னதிலை நான் இவரைச் சொன்னனான்

(ரகசியமாக தலையிடம் இந்த 2பேரையும் புக் பண்ணினால் எங்களுக்கு சிலவே இருக்காது யுஸ் குடுக்கிற நேரத்திலை 1போத்தல் கள்ளுக் குடுத்தா காணும் கள்ளு வலு மலிவு இஞ்சை)



தல : சரி டைரக்டர் நீங்க சொல்லுறீயள் அப்ப ஹீரோயின் ஆரைப் போடப் போறீயள்



சாத்திரி : அதுதான் யோசிக்கிறன் கவர்ச்சிப்புயல்கள் 2பேர் இருக்கினம் போய் கேக்கத்தான் பயமாக்கிடக்கு. . 



தல : பரவாயில்லை யார் எண்டு சொல்லுங்கோ நான் போய் கேட்டுப் பாக்கிறன்



சாத்திரி : பேர் வந்து பொண்ணம்மா . சின்னாச்சி ஆனா நாங்க எடுக்கிற கதைக்கு அவர்கள் பொருந்த மாட்டார்கள் போலத் தெரியுது ஒரு விஜயசாந்தி மாதிரியான சப்ஜெட் எண்டாப் பரவாயில்லை இது வந்து கணவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறமாதிரியான கரேக்டர்



தல : இப்ப என்ன சார் பண்ணறது?



சாத்திரி : சரி போணாப் போகுது நாங்க ஜோதிகாவை போடுவம்



தல : என்ன ஜோதிகாவா? அவங்க எங்கடை படத்திலை நடிக்க வருவங்களா?



சாத்திரி : நீங்க என்ன நினைச்சு என்னட்டை வந்திருக்கிறீயள் மை போட்டு வித்தை காட்டி ஆளை இழுத்தெடுத்திட மாட்டன் ஆனா என்ன கொஞ்சம் செலவாகும் 



தல : காசுக்கு நோ. . பிரோப்பிளம் எனக்கு ஜோதிகா சம்மதிச்சா சரி. . 



சாத்திரி : தம்பி தல ஜோதிகா படத்திலை நடிக்கிறதுக்குத்தான் சம்மதிப்பா உங்களுக்கில்லை (சா. . .சரியான ஜோள்ளுப் பார்ட்டியா கிடக்கு இதையே சாட்டா வைச்சு நல்லாக் கறந்திட வேண்டியதுதான்)



(தல அங்கிருந்து புறப்பட்டதும் முகத்தார் சின்னப்பு பக்கம் திரும்புகிறார் சாத்திரி)



சாத்திரி : முகத்தான் இந்தப் படத்துக்கு நீ தான் ஹீரோ சின்னப்புதான் வில்லன் ஜோதிகா தான் ஹீரோயின் நான் முடிவு செய்திட்டன்



முகத்தார்: பாவமடா தயாரிப்பாளர் 



சாத்திரி : இந்தா உனக்கு 5டூயட் 5பைட் சீன் இருக்கு வாயை மூடிட்டு இரு



சின்னப்பு : சாத்திரி அப்பிடியே 5ரேப் சீனையும் சேர்த்து விடன் புண்ணியமா போகும்



சாத்திரி : சின்னப்பு பிறகு கொம்பனி கணக்கிலை ஆஸ்பத்திரி சிலவெல்லாம் செய்யேலாது



முகத்தார் : சாத்திரி உனக்கு கோயில் கட்டித்தான் கும்பிட வேணும் என்ரை ஆசையெல்லாம் நிறைவேறப் போகுது



சாத்திரி : ஹீரோ எண்டா பின்னை சும்மாவா.. . . .



முகத்தார் :அதோடை மச்சான் ஓசிலை லண்டன் கனடா எல்லாம் போகலாமே. .



சாத்திரி : ஆர் சொன்னது கூட்டிட்டு போற தெண்டு 



முகத்தார் : 5டூயட் எண்டா அங்கையெல்லாம் கொண்டு போய் தானே எடுப்பாங்கள்



சாத்திரி : அது ஒறிச்சினல் டைரக்டர் நான் யாரு. . .உலகப்படத்திலை லண்டன் கனடாவை காட்டிப் போட்டு அதிலை ஏறி நிண்டு ஆடச் சொல்லிட மாட்டன். 



முகத்தார் : அப்ப சூட்டிங் தொடங்கினவுடனை இங்கையே தங்கிடலாம் என்ன சாப்பாடு தண்ணி எல்லாம் தருவினம் தானே. .



சாத்திரி : ஏன் பொண்ணம்மா சொந்தங்கள் எல்லாத்தையும் கூட்டி வாவன் அதெல்லாம் சரி வராது வீட்டிலை சாப்பிட்டுட்டு வரேக்கை எனக்கும் ஒரு பார்சல் கட்டிக் கொண்டு வரவேணும் விளங்கிச்சே. ..



முகத்தார் : சரி சாத்திரி கதையிலை கொஞ்சத்தை சொல்லன்



சாத்திரி : ஹீரோ அதாவது நீ என்றி ஆகிற சீனைச் சொல்லுறன் கேள்

நம்மடை ஹீரோயின் அதுதான் ஜோதிகா றோட்டாலை நடந்து வாற அவவின்ரை காலை மாத்திரம் காட்டுறம் அப்ப றோட்டிலை இருந்த கல்லொண்டு அவவின் காலிலை தட்டுப்பட்டு அங்கை படுத்திருந்த ஒரு சொறிநாய் மீது பட்டு விடுகிது நாய் மெல்ல தலையை தூக்கிப் பாத்து உறுமுது இந்த இடத்திலை பயங்கர சவுண்ட் ஈபைக்ட் ஒண்டைப் போடுறன் நாய் உறுமுறது தத்துரூபமா இருக்கும் பாரன்.;



முகத்தார் : என்ன நாயின் வொயிசை றைக்கோட் பண்ணிப் போடப் போறீயே



சாத்திரி : சா. . .முனியம்மாவை டப்பிங் குடுக்க வைக்கலாம் எண்டு இருக்கிறன்



முகத்தார்: சரி இதுக்கை நான் எங்கை வாறன்



சாத்திரி : பொறன். . அப்பதான் நீ நித்திரையாலை எழும்பி கேட்டை திறந்து கொண்டு றோட்டுக்கு வாறாய் ஜோதிகாவை துரத்த நினைத்த நாய் சடின் பிரேக் போட்டு உன்னைப் பாக்குது அதுக்கு பழைய நினைவுகள் ஏதோ ஞாபகம் வர அப்பிடியே உன்மேலை பாய்ஞ்சு கொத்தோடை கவ்வுது. . 



முகத்தார் : சாத்திரி உனக்கே இது நல்லா இருக்கா ஜோதிகாவை காப்பாத்தப் போய் கடைசிலை என்னையே காப்பாத்தேலாம போகப் போகுது. . 



சாத்திரி : ஆ.. இஞ்சைதான் நீ சாத்திரியின் விளையாட்டை பாக்கனும் அப்பிடியே உனக்கும் நாய்க்கும் ஒரு பயங்கரச் சண்டையை சேக்கிறன் திடீரென நீ நாயின் காதுக்கை ஏதோ சொல்லுறாய் அதைக் கேட்டதும் நாய் சும்மா பிச்சுக்கிட்டு திரும்பி பாக்காம ஓடுது நீ என்ன சொன்னாய் எண்டதை படத்திலை கடைசி மட்டும் சொல்லவே மாட்டம் இதையெல்லாம் ஓரமா பாத்துக் கொண்டிருந்த ஜோதிகா உனக்குக் கிட்ட வந்து அப்பிடியே உன்ரை கையை பிடித்து தாங்ஸ் எண்டு சொல்லறா அப்பிடியே கட் பண்ணி போடுறம் ஒரு குத்து சோங் சும்மா மன்மதராசா தோத்துப் போகும் பாரன் 



முகத்தார் : எனக்கெல்லாம் அப்பிடி ஆட ஏலாதடா. . 



சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்



(முகத்தார் மெதுவாக கண்ணை மூடி ஜோதிகாவுடன் டூயட் பாடுற சீனுக்குள் போகிறார் திடீரென "பொதக்' எண்டு ஒரு சத்தம்)



பொண்ணம்மா : என்னப்பா ஒழுங்கா கட்டிலை படுக்கத்தெரியாதோ விழுந்திட்டியள் வயசுபோண நேரத்திலை கை கால் முறிஞ்சா எனக்குத்தான் கரைச்சல்



முகத்தார் : (மனசுக்குள் அடக் கடவுளே கனவிலை ஜோதிகாவோடை கட்டிப் பிடிச்சு உருளேக்கைதான் விழுந்ததெண்டு பொண்ணம்மாக்குத் தெரிஞ்சால்??????? )



[size=9](யாவும் கற்பனை)

 

http://www.yarl.com/forum3/index.php?/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே, ஐந்து ரேப் சீனென்டால் ஆஸ்பத்திரிச் செலவு வரத்தான் செய்யும்...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் வீடு - அங்கம் 3 

 

.....

முகத்தார் : எனக்கெல்லாம் அப்பிடி ஆட ஏலாதடா. . 

சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்

(முகத்தார் மெதுவாக கண்ணை மூடி ஜோதிகாவுடன் டூயட் பாடுற சீனுக்குள் போகிறார் திடீரென "பொதக்' எண்டு ஒரு சத்தம்)

பொண்ணம்மா : என்னப்பா ஒழுங்கா கட்டிலை படுக்கத்தெரியாதோ விழுந்திட்டியள் வயசுபோண நேரத்திலை கை கால் முறிஞ்சா எனக்குத்தான் கரைச்சல்

 

http://www.yarl.com/forum3/index.php?/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/

 

இந்த வரிகளைப் படித்தவுடன் சிரிப்பை அடங்க முடியவில்லை.. நல்ல கற்பனை..!

( இளவயதில் இந்த மாதிரி கட்டிலிருந்து கீழே விழுந்த அனுபவமும் இருக்கு..! :) )

  • கருத்துக்கள உறவுகள்

யாரு சகுந்தலாவா ..., சில்க்கா..!. வன்னியன்...!!  சேம் பிளட்...!!!  :) :)



  • கருத்துக்கள உறவுகள்

அருமை குமாரசாமியர்

  • கருத்துக்கள உறவுகள்

யாரு சகுந்தலாவா ..., சில்க்கா..!. வன்னியன்...!!  சேம் பிளட்...!!!  :) :)

 

நீங்களும் அப்படித்தானா? :)

 

அது கனவிற்கு முன்னான நினைவைப் பொறுத்து மாறும் சுவி..! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.