Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதிப்புக்குரிய நெல்சன் மண்டேலா மாதிரி சம்பந்தன் அவர்களும் ஒய்வு எடுப்பது நல்லது: - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Tamilsforobama-USA150news.jpg

நியூ யோர்க் - பெப்ரவரி 5,2015

 

சம்பந்தனின் நீண்ட நாள் போற்றக் கூடிய அரசியல் சேவையிலிருந்து ஓய்வுபெற்று, அடுத்த இளம் தலைமுறைக்கு தம்மையை விட்டுக் கொடுப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும், சம்பந்தர் தமிழ்ச் சரித்திரத்தில் வாழ்நாள் தலைவராக இல்லாது, தமிழ் இனத்திற்காக தன்னை அர்ப்பணித்தார் என்று தமிழ்ச் சரித்திரம் கூறும்.

   

சரித்திரத்தை அமைத்துவிட்ட அமெரிக்காவின் முதல் தலைவர் ஜோர்ச் வாசிங்டன் 5 வருடம் அரசியலில் பணியாற்றிவிட்டு மீண்டும் 65 வயதில் தனது விவாசாயத்தினை செய்வதற்கு வேர்யினியாவுக்கு சென்றுவிட்டார்.

தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா 5வருடம் தலைவராய் பணியாற்றிவிட்டு மீண்டும் தனது வீடு சென்று ஓய்வு பெற்றார்.

 

சம்பந்தர் அவர்கள் 81 வயதினை அடைகின்றார். இந்த யூன் மாதத்துடன் அவரது எம். பி பதவி முடிவு பெறுகின்றது. இந்நிலையில் வடகிழக்கில் உள்ள ஒரு இளம் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கு இது ஒரு நல்ல தருணம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த புதிய தலைவர் சட்டதடதரணியாக இருக்கக் கூடாது. ஏனெனில் சட்டத்தரணியானவர் எங்கள் போராட்டத்தினை நீதித்துறையோடு இணைப்பதை தவிர போராடக்கூடியவர்கள் அல்லர். அத்துடன் எங்கள் புதிய தலைவர் துணிந்தவராகவும் நேர்மையுள்ளவராகவும், அறிவுள்ளவராகவும். குறிப்பாக போராட்டக் குணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

 

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

 

http://seithy.com/breifNews.php?newsID=126230&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வயதை வைத்து ஒருவரை வசை பாடுதல் சரியன்று. :(  :(

அவரது பிழை சரியை 

குறிப்பிட்டு நமது அறிக்கைகளை விடலாமே ஒழிய......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒய்வு எடுப்பது நல்லது: - 

 

தமிழர்களின் வாழ்வில் கிடைத்த இரு பெரும் சாபகேடு கலைஞரும் சம்மந்தரும் என்னும் அளவுக்கு போகக்கூடாது. 

சகல வேலைகளிற்கும் இளைப்பாறும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளிற்கு மட்டும் ஏன் இல்லை?
 
தயவு செய்து யாராவது விளக்கம் தரமுடியுமா?

இந்த அமைப்பு இருப்பதே மறந்து போயிற்று. 

 

நல்ல வேலை இந்த அறிக்கையை பார்த்ததும் நினைவுக்கு வந்தது. 


குறிப்பிடும் மடியா உரிமையும் அதிகாரமும் இலாத ஒரு இனத்துக்கு இருக்கும் அமைப்புக்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

வயதை வைத்து ஒருவரை வசை பாடுதல் சரியன்று. :(  :(

அவரது பிழை சரியை 

குறிப்பிட்டு நமது அறிக்கைகளை விடலாமே ஒழிய......

80 வயதில் சம்மந்தருக்கு சிந்தனை ஆற்றல் இருக்கும் என்று நினைப்பது வெறும் முட்டாள்தனம்.
இனி சம்மந்தரால் அறளை பெயர்ந்த வேலைகளும் பேச்சுக்களும்தான் பேச முடியும். எதையும் சிந்தித்து எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது.
வெளி உலகில் நடப்பவை பற்றி அவரால் கிரகிக்க முடியாது.
உலகில் அபராத தொழிநுட்ப வளர்ச்சி எல்லா நாடுகளிலும் பாதுகாப்பு அரசியல் பொருளாதார வளர்ச்சி என்பதில் பெருத்த பங்காக முதலிடத்தில் இருக்கிறது.
இவை பற்றியெல்லாம் இனி இவரால் அலச முடியாது.
 
அவரின் அறளை பெயர்ந்த செயல்பாடுகளுக்கு ...
இன்னொரு கூட்டம் சரியான அரசியல் நகர்வு என்று பேசியும் எழுதியும் கொண்டு திரிய வேண்டியதுதான்.
 
சம்மந்தர் இந்தியா வளர்க்கும் கிளி.
அவளவுதான்!
  • கருத்துக்கள உறவுகள்

இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். சம்பந்தர் advisor ஆக இருக்கலாம்.அதற்காக சம்பந்தரை வெறுப்பது என்பதல்ல.எல்லாவற்றுக்கும் ஒரு வயதெல்லை உண்டு. தெற்காசியாவில் தான் இருந்தால் எழும்ப மாட்டார்கள். கடப்பாரை கொண்டு தான் ஆட்களை எழுப்ப வேண்டும்.

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோகாமல் நொங்கு திண்பதை விடுத்து ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அரசியல் கட்சி ஒன்றை ஶ்ரீ லங்காவில் பதிவு செய்து தனது அரசியல் வித்துவத்தன்மைகளை அங்கு நேரடியாக களத்தில் காண்பிக்கலாமே? 

 

சட்டத்தரணிகள் போராடும் குணம் அற்றவர்கள், தலைமைப்பதவிக்கு லாயக்கு அற்றவர்கள் என்பது இந்த அறிக்கையை எழுதியவர்கள் எவ்வளவு அடி முட்டாள்கள் என்பதை காட்டுகின்றது. உலக அரசியல் வரலாற்றில் ஆயிரமாயிரம் சட்டத்தரணிகளின் பங்கு உள்ளது. அது தொண்டரில் தொடங்கி தலைவர் வரை செல்கின்றது. நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரே ஒரு சட்டத்தரணிதானே. கனடாவில் வளர்ந்துவரும் தமிழ் அரசியல் பிரமுகர் கரி ஆனந்த சங்கரியும் ஒரு சட்டத்தரணிதானே.

 

தமிழரசு கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான தந்தை செல்வா ஒரு சட்டத்தரணி என்பதாவது இந்த அறிக்கையை தயாரித்த கோமாளிகளிற்கு தெரியுமா? 

Edited by கிழவி

தமிழ் அரசியலில்ஆரம்பத்தில் இருந்து பெரும்பங்கு வகித்தவர்கள் சட்டத்தரணிகளே. தமிழர் உரிமை போராட்டத்தை சட்டரீதியாக  தமது மூளையை கொண்டு கையாள தெரியாமல் அல்லது விரும்பாமல்  தமது பதவிகளூக்காக உணர்ச்சி அரசியலை தூண்டிவிட்டவர்களும் இந்த சட்டத்தரணிகளே. சட்டத்தரணிகளுக்கு தமது உத்தியோகத்தை விட போதிய நேரம் இருப்பதால் தமது பகுதி நேர தொழிலாக அரசியலை தேர்ந்தெடுத்தார்கள். கி.யூ சி பட்டம் பெற்ற தந்தை செல்வாவே தமிழினத்தை கடவுள் தான் காப்பற்ற வேண்டும் என்று கூறியது சட்டத்தரணி அரசியல் வாதிகளின்   தோல்வியின் வெளிப்பாடே. இன்றைய தலைவைர் சம்பந்தர் கூட பதவிக்காக உணர்ச்சி அரசியலை தூண்டிய ஒருவரே.

 

இவ்வாறாக தமிழ் சூழலில் சட்டத்தரணிகள் தொடர்பான அவநம்பிக்கை அவர்களை இவ்வாறு அறிக்கையிட செய்திருக்கலாம். கிழவி அவர்கள் கூறிய நோகாமல் நுங்கு தின்பது என்பது எமது தமிழ் சட்டத்தரணிகளுக்கு தான் சால பொருந்த கூடிய கருத்து.  அவர்களது தமிழரசு கட்சியில் இளைஞர் பேரவையை உருவாக்கியதன் மூலம் தாங்கள் போராடாமல்  இளைஞர் பேரவை மூலம் உணர்ச்சி அரசியலை தூண்டி பதவி சுகம் காண புறப்பட்டது  எல்லோருக்கும் தெரிந்த விடயம். இங்கு சிலர் ஆயுத போராட்டத்திற்கும் தமிழரசு கட்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று எமது காதில் பூச்சுற்ற விளைகின்றனர். முழு பழியையும் போராடி இறந்த இளைஞர்கள் மீது போட்டுவிட்டு பழைய தமிழரசு கட்சி சட்டத்தரணி அரசியலை புகுத்த  விளைகி்றனர். இதற்காகவே திட்டமிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றைய கட்சிகளை திட்டமிட்டு ஓரம்கட்டி தமிழரசு கட்சி என்ற கிழட்டு கட்சியியை பலபடுத்தி வருகின்றனர்.

 

புதிய இளம் தலைவர்கள் உருவாக்கபடவேண்டும் என்பது சரியான கருத்து. அந்த புதிய தலைமை தமிழரசு கட்சி உருவாக்கிய பத்தாம் பசலி அரசியலை விட்டு வெளியே வந்து புதிய சிந்தனையை உருவாக்க வேண்டும். அதற்கு சமூக சிந்தனை உடைய  புதிய தலைவர்கள் உருவாக வேண்டும்.  அவர்கள் பல்வேறு துறைசார் நிபுணர்களாக இருப்பதே வரவேற்கதக்கது. கெளரவ மாகாண அமைச்சர் திரு ஐங்கரநேசன் அதற்கு சிறந்த உதாரணம். அவரை போல் வித்தியாசமான நவீன சிந்தனைகளுடன் புதிய அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களிடையே உருவாகுவதே தமிழரசுக்கட்சி என்ற பழமைவாத கட்சியிடன் இருந்து தமிழனத்தை புதிய நவீன காலத்தை நோக்கி நகர்த்த தேவையானது. தமிழரசு கட்சி மீண்டும் தமது பழைய பத்தாம் பசலி அப்புகாத்து அரசியலை புகுத்துவது நல்லதல்ல. மேற்கு நாடுகளில் அரசியல் வாதிகளை பார்தோமானால் அவர்கள் பல்வேறு துறைசார் நிபுணர்களை கொண்டிருப்பதை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வசதிக்கு ஏற்றாப்போல் பேசுவதும், எழுதுவதும் இலகுதான்.
 
சட்டத்தரணி குமார் பொன்னம்பலத்திற்கு மாமனிதர் விருது கொடுக்கலாம்.
 
சட்டத்தரணி வை. கோபாலசாமியை தலையில் தூக்கி வைத்து ஆடலாம்.
 
முன்னாள் ஶ்ரீ லங்கா ஜனாதிபதிகள்  மகிந்தரும் ஒரு சட்டத்தரணி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் ஒரு சட்டத்தரணி. இவர்கள் எல்லாம் அரசியலில் தமது இனத்திற்காக பலவற்றை சாதிக்கும்போது தமிழருக்கு மட்டும் சட்டத்தரணியாக பின்புலம் கொண்ட ஒருவர் அரசியல் தலைவராக வரக்கூடாது என்பது புதுமையான விஞ்ஞான கோட்பாடு!
 
வெளிப்படையாக சுமந்திரன் தலைவராக வரக்கூடாது என்று கூறலாம். அதற்காக, சட்டத்தரணிகள் தமிழ் தலைவர்களாவதற்கு லாயக்கு அற்றவர்கள், போராட்ட குணம் அற்றவர்கள் என்று லூசுத்தனமாக கதைக்கக்கூடாது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சகல வேலைகளிற்கும் இளைப்பாறும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளிற்கு மட்டும் ஏன் இல்லை?
 
தயவு செய்து யாராவது விளக்கம் தரமுடியுமா?

 

 

உலக அரசியலில் இது சர்வசாதாரணம்.  :icon_idea:​ 
 
"ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே" என்பது போல் சட்டங்களை உருவாக்குபவர்களே அவர்கள்தான். ஆனால் அவர்கள் உருவாக்கிய சட்டங்களை....அது எதுவாக இருந்தாலும் அவர்களே கடைப்பிடிக்க மாட்டார்கள்.  :D
 
உலகத்திலை எந்த கஸ்மாலமும் செய்யாத  ஜில்மா வேலையெல்லாவற்றையும் செய்பவர்கள் இந்த அரசியல்வாதிகள் தான்:  :D  :lol:
 
கஸ்மாலத்திற்கான சிறு விளக்கம்:- சமஸ்கிருதத்தில் மனநோயை 'கச்மலம்' என்று சொல்வார்கள். இதுவே, கஸ்மாலம் என்றாகிவிட்டது. ஒருவரைத் திட்டுவதற்கு இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் சென்னை வாசிகள்தான் 'கஸ்மாலம்' என்று இச்சொல்லை அதிகமாக உபயோகிப்பார்கள். இதற்கு "மோசமான மனதைக் கொண்டிருப்பவன்" என்று பொருள்

உண்மையில். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் இந்த கருத்து தமிழ் அறிவுஜீவிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு தமிழர் மத்தியில் ஒட்டு மொத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய ஒரு சிறந்த கருத்து. சட்டத்தரணிகள் தமிழர் அரசியலில் இருக்க கூடாது என்பதல்ல தமிழர் அரசியல் என்பது சட்டத்தரணிகளின் ஆதிக்கத்துக்குள் இருக்கக்கூடாது என்பதே இங்கு விளங்க வேண்டிய அம்சம்.

சட்டத்தரணிகள் தமிழர் அரசியலில் பாரிய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தும் அவர்கள் எதையும் சாதிக்க வில்லை என்பதுடன் மிகவும் குறுகிய மனப்பாங்குடன் அவர்கள் செயற்பட்டதை கடந்த காலம் காட்டி நிற்கிறது. ஆகவே பல்துறை நிபுணர்கள் தமிழர் அரசியலில் ஆர்வம் காட்டவேண்டும். மேற்கு நாடுகளில் துறைசார் அறிவுடன் சமூகவியல் தகைமைகள் (social competence) ஒரு கல்வியாளர்களுக்கு மிகவும் அவசியமானது. அதுவும் அரசியலுக்கு வருவதற்கு இந்த தகைமைகள் மிக முக்கியமானது. எமது நாடுகளில் சட்டத்தரணிகளுக்கு சமூகவியல் தகைமை என்பது நடைமுறையில் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு காரணம். அவர்களது கல்வி முறை. பச்சை சுயநலத்துடன் தாம் செய்யும் எந்த அயோக்கியத் தனத்தையும் நியாயப்படுத்தக்கூடிய தகைமைகள் இருந்தால் போதும்.

(எமது தெற்காசியாவில் ஒரு படித்தவருக்கு நடைமுறையில் இருக்கக்கூடாது என்று அவர்களே நினைக்கும் தகைமை இந்த social competence என்பது வேறுவிடயம்)

பொருளாதார அறிஞர்கள், சுற்றுப்புறச்சூழல் அக்கறைகொண்ட சமூகவியல் அறிஞர்கள், வர்த்தகர்கள் என பல் வேறு துறையில் உள்ளோர்கள அரசியலுக்கு வரவேண்டும்.

கிழவி மகிந்தரும் ஜே.ஆர் ஜெயவர்ததனாவும் நாட்டிற்கு நன்மை செய்தவர்கள் என்று நினைக்கின்றீர்களா? நாட்டின் ஜனநாயத்தையே பாழாக்கி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்படுத்தி தனது கட்சி நலனைப்பற்றியே சிந்தித்தவரை எப்படி சமூக அக்கறையுடன் நாட்டு நலன் பற்றி சிந்தித்தார், சாதித்தார் என்று கூறினீர்கள். மகிந்த அவரைப்பற்றி சொல்லவே தேவையில்லை. படு மோசமாக நாட்டை பாழாக்கியவர்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

 

80 வயதில் சம்மந்தருக்கு சிந்தனை ஆற்றல் இருக்கும் என்று நினைப்பது வெறும் முட்டாள்தனம்.
இனி சம்மந்தரால் அறளை பெயர்ந்த வேலைகளும் பேச்சுக்களும்தான் பேச முடியும். எதையும் சிந்தித்து எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது.
வெளி உலகில் நடப்பவை பற்றி அவரால் கிரகிக்க முடியாது.
உலகில் அபராத தொழிநுட்ப வளர்ச்சி எல்லா நாடுகளிலும் பாதுகாப்பு அரசியல் பொருளாதார வளர்ச்சி என்பதில் பெருத்த பங்காக முதலிடத்தில் இருக்கிறது.
இவை பற்றியெல்லாம் இனி இவரால் அலச முடியாது.
 
அவரின் அறளை பெயர்ந்த செயல்பாடுகளுக்கு ...
இன்னொரு கூட்டம் சரியான அரசியல் நகர்வு என்று பேசியும் எழுதியும் கொண்டு திரிய வேண்டியதுதான்.
 
சம்மந்தர் இந்தியா வளர்க்கும் கிளி.
அவளவுதான்!

 

 

சம்பந்தருக்கு, ஒரு சக்கர நாற்காலியும்.கொடுத்து விட்டால்.....

இன்னும்... நூறு வருஷம், தமிழ் மக்களின் தலையில்... மிளகாய் அரைக்க ஆள் ரெடி.

வெட்கம்... ரோசம், மானம் கெட்டதுகள்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.