Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99

எனக்குப் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்

இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும்

எனக்கும் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,

பேய்களுக்குக் கோயில் இல்லை

வேளா வேளைக்குப் பூஜை இல்லை

அபிஷேகம் அலங்காரம்

காணிக்கை உண்டியல் அறவே இல்லை

தேர் இல்லை திருவிழா இல்லை

சப்பார பவனி கூட இல்லை

கடவுளைப் போல் பேய்கள்

சாதி மதம் பார்ப்பதில்லை.

ஓட்டத்தான் வேண்டுமெனில்

கடவுள்களை ஓட்டிவிட்டு

பேய்களை ஓட்டுங்கள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98

பாத்திரமறிந்து

 

பிச்சையிடுகிறது

தெய்வம்

தங்கத்தட்டில்

வைரக்கற்களையும்

அலுமினியத் தட்டில்

சில்லரைக் காசுகளையும்

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 97

 

சட்டெனப் பரவும் வெறுமை

 

யாருடனாவது

பேசிக்கொண்டிருக்கையில்

நடந்து சென்று கொண்டிருக்கையில்

வாகனம் ஓட்டிச்செல்கையில்

சட்டென்று

ஒரு வெறுமை கவ்வுகிறதா?

சுற்றிலும் பலர் இருந்தும்

யாரும் இல்லாததுபோல்

ஏதேதோ சப்தம் இருந்தும்

எதுவுமே இல்லாத

மௌனம் நிலவுவது போல்

உணர்வு மேலோங்குகிறதா?

ஆரம்பத்திலேயே நீங்கள்

கண்டுபிடித்துவிட்டதால்

அச்சப்படத் தேவையில்லை.

இந்த வெறுமை

விரவிப்

பரவி

உங்கள் உலகத்தையே

முற்றிலும்

ஆக்கிரமித்து

அதனால் நீங்கள்

முற்றிலும் தனிமைப்பட்டு

அந்த ஏகாந்தத்தை

நீங்கள் அனுபவிப்பது

மற்றவர்களுக்கு

பைத்தியக்காரத்தனமாகத் தெரிவது

உங்களுக்குப்

பிரச்சனையில்லையென்றால்

நீங்கள்

இப்போது செய்துகொண்டிருப்பதை

அப்படியே தொடருங்கள்.

அப்படி இல்லையென்றால் ...

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

புத்தகத்தை

மூடிவைத்துவிடுங்கள்

எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையை

இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள்.

மலைகள்

மரங்கள்

பறவைகளுடன்

தனிமையில்

இருக்கும்

பொழுதுகளைத்

தவிர்த்துவிடுங்கள்

தொடர்ந்து சில நாட்கள்

எல்லாத் தொலைக்காட்சி

நிகழ்ச்சிகளையும்

ரசித்துப் பாருங்கள்

குறிப்பாக

சமீபத்திய

தமிழ் சினி மாக்களைப் பாருங்கள்

மனைவியோடு ஒரு முறை

மாமியார் வீட்டுக்குப்

போய் வாருங்கள்

இந்தக் கூட்டு சிகிச்சையை

தொடருங்கள்

கொஞ்சநாளில்

அந்த வெறுமை

பரவுவது

நின்று

மெல்ல மறைய

ஆரம்பித்திருக்கும்

உங்கள் வாழ்க்கை

பழைய வண்ணங்களுக்குத்

திரும்பியிருக்கும்

உங்கள் பழைய

வாழ்க்கையை

தொடருங்கள்,

மறுபடி வெறுமை

தென்படும் வரை.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

கொஞ்சம் பிசகினாலும்

நீங்கள் காலி.

 

 

கவிஞன் சாதாரணன். ஒரு கவிஞனாக நானும் சாதாரணன். மானுடத்தைப் பாடுவது, மானுடத்துக்குத் துணை நிற்கும் இயற்கையின் கூறுகளைப் பாடுவது கவிஞனின் பணி.

ஒரு புல்லும் ஒரு பறவையும் வேறொரு மனிதனும் தமக்கான கவிதைகளை ஒரு கவிஞன் மூலமாக எழுதிச் செல்கிறார்கள். கவிஞன் கவிதைக்கு ஒரு கருவி. கவிதையும் கவிஞனுக்கு ஒரு கருவி.

கவியரசர்கள், கவிச்சிற்றரசர்கள், மஹாகவிகள் என்று கவிஞர்களில் படிநிலைகள் தேவையில்லை என்பது என் கருத்து. 

ஆனால் சாதாரணனான கவிஞனின் கவிதைகள் சாதாரணமாகவும், சிறந்தவையாகவும் இருக்கலாம். ஒரு சாதாரணக் கவிஞனான எனது சாதாரணக் கவிதைகளுக்கு இடையில் நான் தேர்ந்தெடுக்கும் சில கவிதைகள் எனக்கு அசாதாரணமாகத் தோன்றும். மற்றவர்களுக்கு அப்படித் தோன்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை.

அப்படி எனக்குத் தோன்றும் கவிதைகளே இப்பதிவுகளில் இடம்பெறுகின்றன. (“ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றும் கொள்ளலாம் இவற்றை. இல்லையெனில் பிற கவிதைகளை பதிக்க “ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றொரு பக்கத்தையும் தொடங்கலாம்)

இந்தப் பக்கத்தில் பதிக்கப்படும் என் (அ)சாதாரணக் கவிதைகளைப் படித்துப் பகிருங்கள் இயன்றவரை. பகருங்கள் உங்கள் கருத்துகளை.

Edited by seyon yazhvaendhan

  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
சேயோன் யாழ்வேந்தன் ... அழகான, தெளிவான வரிகள் !! 
 கவிதை ஆரம்ப வரிகளே "குட்டிக் கவிதைகள்" 
சாதாரண வரிகள்...அசாதாரண சிந்தனை 
கவிஞரே வாழ்த்துக்கள்....
  
 நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.

எவர்க்கும் புரிகின்ற சாதாரணமான அசாதாரண கவிதை தான் ....

 

அப்படி ஒரு பார்வை பார்த்ததனால் 
உனக்கு
என்ன கிடைத்தது?
எனக்கு -
ஒரு கவிதை.
  

 

எங்களுக்கும்... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 01 

அவரவர் அகராதிகள்

 

நீ குடை கொண்டுவர விரும்பாத

ஒரு நாளில்

திடீரென்று மழை வந்தது.

எனது குடையில்

இருவருக்கும் இடமிருந்தபோதும்

நாகரிகமும் கூடவர

இடமில்லாததால்

குடையை உன்னிடம் தந்து

நனைந்தபடி நானும் நடந்தேன்.

 

நான் மகிழ்ச்சித் துள்ளலுடன் நடப்பதை 

நீ கடைக்கண்ணால் பார்த்தாய்.

நான் மகிழ்ந்தது 

உனக்கு கொடை கொடுக்க முடிந்ததற்காக அல்ல;

குடை இருந்தும்

நான் நனைய முடிந்தற்காகவே.

 

உன் கூந்தலிலிருந்த ரோஜா

கீழே விழுந்ததை

நான் வருத்தத்துடன் பார்த்ததை 

நீ ஓரக்கண்ணால் பார்த்தாய்.

நான் வருந்தியது 

உன் கூந்தலிலிருந்து

ரோஜா விழுந்ததற்காக அல்ல,

அது விழுந்ததற்காகவே.

என் மகிழ்ச்சியையும்

வருத்தத்தையும் 

உனது அகராதியில் 

அர்த்தப்படுத்திக்கொண்டு,

ஓர் ஏளனப் பார்வையோடு

எனக்குக் குடையும் விடையும் தந்து

நீ நிழற்குடையில் ஒதுங்கினாய்.

அப்படி ஒரு பார்வை பார்த்ததனால் 

உனக்கு

என்ன கிடைத்தது?

எனக்கு -

ஒரு கவிதை.

 

-சேயோன் யாழ்வேந்தன்

 

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 25

முதலும் கடைசியும்

 

கடைசி ஆசை

என்னவென்று கேட்டனர்

வாழணும் என்றான்.

முதலும் முடிவுமான

ஆசையென்னவோ

அது மட்டும் தானே?

ஒருவன் மட்டுமே

உயிர் பிழைக்க

வாய்ப்பென்றதும்

பல லட்சம் பேரை

முந்திக்கொண்டு

முன் வந்து

அண்டத்துக்குள்

நுழைந்ததும்

அதனால்தானே?

முந்நூறு நாளுக்குப் பக்கம்

மூச்சடக்கி உள்ளிருந்து

பின் உதிரம் சொட்டச் சொட்ட

முட்டி மோதி தலைகுப்புற

மண்ணில் விழுந்ததும்

அதற்குத்தானே?

எதற்கிந்த நிலையில்லா வாழ்வென்ற

தத்துவங்களையெல்லாம்

ஊறுகாயாய்த் தொட்டுக்கொண்டு

வாழ்வை ருசிப்பதும்

அதனால்தானே?

இது என்ன தனிப்பட்ட

இவன் ஒருவனின் ஆசையா என்ன,

இவனுக்குள் இருக்கும்

கோடான கோடி செல்களுக்கும்

இருக்கின்ற ஆசைதானே?

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 24

அவன்

 

 

அவன் இதயம்

எப்போதும்

முகத்திற்கு

இடம் பெயர்ந்திருக்கும்

நீங்கள் அதை

அறிய முடியாதபடி

தாடி மயிர்

மறைத்திருக்கும்

 

அவன் நெஞ்சிலிருக்கும்

கனல்

சில நேரம்

விரலிடுக்கு வரை

இறங்கி வந்துவிடும்

 

அவனைச் சிலர்

கவிஞன் என்று

அழைப்பதுண்டு

 

உங்களைப் பெரும்பாலும்

தாமதமாகவே

அடையாளம் கண்டுகொள்ளும்

அவன் மேல்

வருத்தப்பட  வேண்டாம்

 

காகிதம் தேடிக்

கிடைப்பதற்குள்

தன்  கவிதைகளையே

மறந்து விடுபவன் அவன்

 

ஏதாவது

பூங்கா  மரத்தடியில்

எழுதிக்கொண்டிருப்பவனைப்

பார்க்க நேர்ந்தால்

சாப்பிட்டாயா

என்று கேட்பது தப்பில்லை

 

நீங்கள் உண்பதைக்

கொஞ்சம்

அவனுக்கும் கொடுத்தால்

தன்மானம் பார்க்காமல்

வாங்கித் தின்றுவிட்டு

இன்னும் கொஞ்சம் -

எழுதுவான்

 

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 02

 

இழந்தவை

என் முன்னோருக்கு இருந்தது

எனக்கு வால் இல்லை

என் முன்னோருக்கு இருந்தது

எனக்கு வாள் இல்லை

என் முன்னோருக்கு இருந்தது

எனக்கு வாழ்வில்லை

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 03

பயணிகளின் கனிவான கவனத்துக்கு

 

தாமதமாக வரும் ரயில்கள்

தாமாகவே தாமதமாக வருவதில்லை

 

ஜன்னலோரம் அமரும் பயணிகள்

ரயில் ஓடும்போது மரங்களையும்

நிற்கும்போது உங்களையும் ரசிக்கிறார்கள்

 

அபாயச் சங்கிலியைப் பார்த்தாவது

அதிக சங்கிலிகள் அணிவதை

பெண்கள் தவிர்க்க வேண்டும்

 

பயணி ஒருவர்

கழுத்துச் சங்கிலியை

கை விரலில் சுற்றி

பல்லிடுக்கில் கடித்தால்

அது அபாயச் சங்கிலி என்பதை

இளைஞர்கள் அறிக

 

ரயில் எவ்வளவு புகை விட்டுச் சென்றாலும்

பயணிகள் புகைவிடுவது

தண்டனைக்குரிய குற்றமாகும்

 

பயணச் சீட்டு இல்லாத பயணிகளை

பரிசோதகர்கள் இறக்கிவிடுவதில்லை

அவர்கள் நுண்பேசியில்

குறுஞ்செய்தி வைத்திருப்பார்கள்

முன்பதிவு செய்த பயணிகள்

பிறருடன் பேசாது வருவதால்

‘ரிசர்வ்ட்’ பயணிகள் என்றும்

பொதுப்பெட்டியில் கலந்து பழகும் பயணிகள்

‘அன்ரிசர்வ்ட்’ பயணிகள் எனவும்

அறியப்படுகிறார்கள்

 

பொதுப்பெட்டியின் கழிவறையில்

சரியாகக் கழுவிக்கொள்ளப் பழகியவர்கள்

வாழ்க்கையில் எத்தகைய சவாலையும்

எளிதாக சமாளித்துவிடுவார்கள்

 

உயர் வகுப்பு பெட்டிகளில்

இன்னமும்

உயர் சாதிப் பயணிகளே

அதிகம் பயணிக்கிறார்கள்

 

மேல் தட்டு

நடுத்தட்டு

கீழ்தட்டு என்று

சமூகத்தைப் பிரதிபலிப்பவையாகவே

ரயில் பெட்டியில்

படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன

 

இணையாக இருந்தாலும்

இணையவே இணையாத

தண்டவாளங்களில்

அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன

 

நானும் அவளும்

அன்று வேறு வேறு பெட்டிகளில்

ஏறியிருந்தால்

இன்று எதிரெதிர் கூண்டுகளில்

நின்றிருக்கமாட்டோம்

 

Edited by seyon yazhvaendhan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதைகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, நற்கவிதை உறவுகளுக்கு.

மற்ற கவிஞர்களின் படைப்புகளை எதிர்நோக்குகிறேன்.

 


நன்றி, நற்கவிதை உறவுகளுக்கு.

மற்ற கவிஞர்களின் படைப்புகளை எதிர்நோக்குகிறேன்.

 


 ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 04

வர்ணத்தின் நிறம் 

 

முதலில்

நிறத்தில்

வர்ணம்

தெரிகிறதாவெனத்

தேடுகிறோம்

 

நெற்றியில் தெரியவில்லையெனில்

சட்டைக்குள் தெரியலாம்

சில பெயர்களிலும்

வர்ணம் பூசியிருக்கலாம்

 

வார்த்தையிலும்

சில நேரம்

வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்

 

நான்கு மூலைகளில்

மஞ்சள் தடவிய

திருமண அழைப்பிதழ்களில்

முந்தைய தலைமுறையின்

வால்களில்

வர்ணங்கள் தெரிகின்றன

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

நான்கு வர்ணங்களையும்

நானே படைத்தேன்

என்றவன்

ஒரு நிறக்குருடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 05

ரணம் பெயர்க்க

 

பெண் குழந்தை பிறந்தால்

உன் நிறைவேறாத

காதலுக்குச் சொந்தக்காரியின்

பெயரை வைப்பதென்னவோ

நியாயந்தான்

 

ஆனால்

ஆண்குழந்தை பிறந்தால்

பெயர் வைக்கும் உரிமையை

மனைவிக்குக் கொடுத்துவிடு

பின் பெயர்க்காரணம் கேட்காதே.

  • கருத்துக்கள உறவுகள்

எளிய தமிழில் இனிய கவிதைகள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எளிய தமிழில் இனிய கவிதைகள் பாராட்டுக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் தாயாம் தமிழால் இணைந்திருக்கிறோம்.   படைப்பாளியைப் படைப்பவர்கள் வாசகர்கள்.  தொடர்ந்து கவிதைகளைப் படியுங்கள், பதியுங்கள், பகிருங்கள்.   நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 06

சொந்த மதத்தின் புதிய கடவுள்

    

வேறு யாருமல்ல

இயேசு அழைத்ததால் மட்டுமே

நாங்கள் சென்றோம்

 

சொந்த மதத்தின் சார்பாக

வேறெந்தக் கடவுளும்

எங்களை அழைக்கவில்லை

மோடி அழைத்ததால் மட்டுமே

நாங்கள் திரும்புகிறோம்

 

குஜராத்தில் கோயில் கட்டப்பட்டு

தன் சிலையும் நிறுவப்பட்டபிறகு

விளக்குமாற்றுக்கு

பட்டுக்குஞ்சம் வைத்த

தலைநகரத்துத் தேர்தல் கண்டு

தனக்குக் கோயில்

வேண்டாமென்று சொன்ன

எங்கள் சொந்த மதத்தின்

புத்தம் புதிய கடவுளைத் தவிர

வேறெந்தக் கடவுள்

தனக்குக் கோயில்

வேண்டாமென்று சொல்லியிருக்கிறது?

 

 

 

(செய்தி: குஜராத்தில் மோடி பக்தர்களால் கட்டப்பட்ட மோடி கோயிலில் மோடியின் சிலை நிறுவப்பட்ட பிறகு, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தனக்குக் கோயில் வேண்டாமென்று மோடி அறிவித்திருக்கிறார்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 07

அவர்கள்
 

 

அவர்கள் 
வெறுங்கையோடுதான்
பேசிக்கொண்டிருந்தார்கள்
தம்மீது ஏவப்பட்ட 
ஆயுதங்களைத்தான்
கைகளில் ஏந்தியிருக்கிறார்கள்

அவர்களும்
வெள்ளைச்சட்டைக்காரர்கள்தான்
ரத்தம் சிந்த வைத்து
அதை சிவப்பாக்கியது
நீங்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும்
வெள்ளைச்சட்டைக்காரர்கள்தான்
ரத்தம் சிந்த வைத்து
அதை சிவப்பாக்கியது
நீங்கள்தான்.

 

உண்மை

தொடருங்கள்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 08

 

என் மரணம் இன்னும் நிகழவில்லை

 

என் மரணம்

நிகழ்ந்து விட்டதாக

என் எதிரிகள் தான்

தொலைக்காட்சியில்

முதலில் அறிவித்தார்கள்

ஒரு பிணத்தின்

கழுத்தருகே

என் முகத்தையும்

வைத்துக்காட்டினார்கள்

எனக்கு

அந்நியமானவர்கள் முதல்

அன்னியோன்னியமானவர்கள் வரை

அனைவருமே

என் மரணத்துக்கு

இரங்கல் தெரிவித்தார்கள்

என் மரணத்தை

அவர்கள்

உள்ளூர விரும்பியிருக்கிறார்கள்

என் மனத்தின்

அடியாழத்தில்

ஏதோவோர் ஓரத்தில்

ஒரு சிறு நம்பிக்கையின்

கீற்று

நான் மரணிக்கவில்லையென்று

சொல்கிறவரை

என் மரணத்தை

எப்படி நான் நம்ப முடியும்?

என் அடையாளம்

அவன்.

அவன் வேறு

நான் வேறோ?

 

எழுநூறு கோடி மனிதர்கள்

இருப்பதாய் நம்பும்

கடவுள்

இருக்கிறாரா என்று

எப்படி சந்தேகிப்பதில்லையோ

அப்படியே

எட்டு கோடி தமிழர்கள்

நம்பும்

ஒரு மனிதன்

இருப்பதை நாங்கள்

சந்தேகிப்பதில்லை ..... (20.2.15 4.00 am) கவிதை இன்னும் நிறைவடையவில்லை)

Edited by seyon yazhvaendhan

  • கருத்துக்கள உறவுகள்

தந்திரமான கவிஞர் நீங்கள். பந்தை எப்படிப் போடுவது என்று நன்றாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள்  :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நரியின் தந்திரம் அல்ல, புலியின் தந்திரம் என்று நம்புகிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 09

தூக்கத்தில் நடப்பவை 

 

தூக்கத்தில்

கனவுகள் நிகழ்கின்றன

கனவுகள் பெரும்பாலும்

நினைவிலிருப்பதில்லை

தூங்குவதுபோல் கனவு கண்டு

விழிப்பவர்களுக்கு

தூக்கமே கனவாகப் போய்விடுகிறது

 

தூக்கத்தில்

மரணங்கள் நிகழ்கின்றன

தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று

செத்தவனைத் தவிர்த்து

எல்லோரும் சொல்லுவார்கள்

 

தூக்கத்தில்

விபத்துகள் நிகழ்கின்றன

இறந்து போன பயணிகளும்

ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக

யூகங்களினடிப்படையில்

ஊடகங்கள் தெரிவிக்கின்றன

சாவதற்கு சற்றுமுன்

அவர்கள் விழித்திருப்பதற்கு

சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.

தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில்

பெண்களின் தூக்கத்தில்

அதிகார்ப்பூர்வ கணவர்களால்

நிகழ்த்தப்படும் விபத்துகள்

சேர்க்கப்படக் கூடாதென

உச்ச நீதிமன்றமே

தீர்ப்பளித்திருக்கிறது

 

தூக்கத்தில் கொலைகள் நிகழ்கின்றன

மதுபோதையிலோ

புணர்ச்சிக்குப் பிந்தைய அயர்ச்சியிலோ

உறங்கும் கணவனின் தலையில்

குழவிக்கல்லையோ (கிராமப் பெண்டிர்)

கிரைண்டர் கல்லையோ (நகரப் பெண்டிர்)

போட்டுக்கொல்வது பெரும்பான்மையாக உள்ளது

அப்படியொரு கொலையைச் செய்து

ஜெயிலுக்குப் போய்வந்த பழனியம்மாள்

75 வயதிலும் நலமாக இருக்கிறாள்

 

தாங்கள் தூக்கத்தில் நடப்பதையோ

தங்கள் தூக்கத்தில் நடப்பதையோ

தூக்கத்தில் நடப்பவர்கள் அறிந்திருப்பதில்லை

நடைப்பயிற்சியின் அவசியம் குறித்த

மருத்துவர்களின் பயமுறுத்தலாலும்

ஊடகங்களின் மிகைப்படுத்தலாலும்

ஏற்படுகின்ற மனஉலைச்சலாலேயே

அவர்கள் தூக்கத்தில் நடப்பதாக

அவர்களால் சொல்ல முடிவதில்லை.

 

சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

 

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 10

 

எங்களுக்கு விடை தெரிந்த கேள்விகள்

 

சரக்கு ரயில் என்பது

மதுபானங்கள் ஏற்றி வரும்

ரயிலல்ல

 

ஆண்டிமணி என்றோர்

உலோகம் இருந்தாலும்

கோயில் மணி பித்தளையால்தான்

செய்யப்படுகிறது

 

 

மோடி மஸ்தானின் மாந்தரீகம் என்பதும்

மோடி மேஜிக் என்பதும்

வேறு வேறு

 

இந்தியாவின் ‘கேபிட்டல்’

வெளிநாடுகளில் இருந்தாலும்

‘புதுடெல்லி’ என்பதுதான்

சரியான விடை

 

நாட்டைத் தூய்மையாக்க

நாம் யாரும்

சுத்தமானவர்களாக

இருக்கவேண்டியதில்லை

 

எங்களுக்கு விடை தெரிந்த

இது போன்ற

பொது அறிவுக் கேள்விகள்

எந்தப் போட்டித் தேர்விலும்

கேட்கப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"நாட்டைத் தூய்மையாக்க

நாம் யாரும்

சுத்தமானவர்களாக

இருக்கவேண்டியதில்லை"

 

வாழ்த்துக்கள்!! சேயோன் யாழ்வேந்தன். :rolleyes: 

உங்கள் கவிதைகள் அசாதாரணக் கவிதைகள் மட்டுமல்ல! வாந்தி எடுப்போருக்கு மருந்தாகவும் தெரிகிறது!!. :rolleyes:  :rolleyes: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதின் ஆழத்திலிருந்து வரும் தாய்த்தமிழ் உறவின் பாராட்டு மொழி, ஒரு படைப்பாளியை பல மடங்கு எழுதச் செய்யும். தோழர்  Paanchன் வாழ்த்து அத்தகையது.  படைப்பாளியைப் படைப்பவை இத்தகைய வாழ்த்துகள். நன்றி.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 11

கவிதை கேளுங்கள்

 

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 12

க வி தை

 

கவி தைக்கிறான்

கவிதை

குரங்கு தைக்கும் உடை

எனக்கெதற்கென்று

எவரும் உடுத்தாமல்

கிடக்கிறது கவிதை

கவி விதைக்கிறான்

கவிதை

வினை விதைத்தவனே

அதை அறுக்கட்டுமென்று

அறுவடை ஆகாமல்

கிடக்கிறது கவிதை

கவி கதைக்கிறான்

கவிதை

அவன் சொந்தக் கதை

சோகக்கதை

எனக்கெதற்கு என்று

கேட்காமல்

கிடக்கிறது கவிதை

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 13

விழுந்தவை  

 

தென்னை மரத்தில்

சட்டென்று நிலா எரிந்தது

நான் சுதாரிப்பதற்குள்

கீற்றின் நிழல்

கீழே விழுந்துவிட்டது

தொப்பென்று

கிணற்றில்

ஏதோ விழுந்த சத்தம்.

அது விழுந்ததால்

எழும்பிய அலைகளில்

நெளிந்தபடி மிதந்தது

நிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.