Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாததால் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர் வேலை பார்க்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ம் திகதி, அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்ததை பார்த்து சந்தேகித்த ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க பொலிசார், அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டுள்ளனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று கூறி உள்ளார்.

அப்போது அவரை பொலிசார் ஒருவர் தரையில் தள்ளிவிட்டதால் அவர் முடங்கிப்போகிற அளவுக்கு காயம் அடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

tamilwin

 

  • கருத்துக்கள உறவுகள்

'நோ இங்கிலீஷ்' என்று சொல்வது ஆங்கிலம் தெரியவில்லை என்கிற பொருளில்.. ஆனால் உண்மையில் ஆங்கில இனம் (வெள்ளை) வேண்டாம் என்கிற பொருளைத்தான் அது தருகிறது. :o இதனால் ஏற்பட்ட விபரீதமாகக்கூட இருக்கலாம்.. ஆனாலும் அமெரிக்க பொலீசுக்கு common sense கொஞ்சம் குறைவு என்பது என் எண்ணம்.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் ரோதனையா இருக்கு இந்த அர்னாப் முகர்ஜியோடை.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/UW4131HmKoE

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் கிந்தி தெரியாததால் ஈழத்தமிழருக்கு இந்திய அமைதிப்படையால் நேர்ந்த கொடுமைகளையம் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும். :o  

  • கருத்துக்கள உறவுகள்
usa-police-attack-130215-200-india.jpg

மகனை பார்க்க அமெரிக்கா சென்ற நபரை, சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீசார் சரமாரியாக தாக்கினர். முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாய் படேல்(57). இவரது மகன் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். மகனை பார்க்கவும், சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் படேல் அமெரிக்கா சென்றார்.

   

மகன் வீட்டில் தங்கியிருந்த படேல் அருகில் உள்ள பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள வீடுகளின் கார் பார்க்கிங் பகுதியை உற்றுப் பார்த்தபடி சென்றுள்ளார். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் சுரேஷ்பாய் படேலை மடக்கி விசாரித்தனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால், போலீசாரின் கேள்விக்கு பதில் அளிக்க தெரியவில்லை. ‘நோ இங்கிலீஷ்’ என்று மட்டுமே கூறியுள்ளார். மேலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், வாக்கிங் என்று மட்டும் ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

அப்போது, அவர் எதார்த்தமாக பேன்ட் பாக்கெட்டில் கையை விட, கைத்துப்பாக்கியை எடுக்க முயல்கிறார் என சந்தேகம் அடைந்த போலீசார் படேல் மீது பாய்ந்து, அவரது கையை மடக்கி கீழே தள்ளினர். இதில் படேலின் முகம் தரையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அவர் அப்படியே மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது முதுகெலும்பு பகுதியில் பலத்த அடிபட்டது: மார்பெலும்புகள் நொறுங்கியிருந்தன.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டு படேல் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இந்திய அமெரிக்க சங்கமும், மத்திய அரசும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை, சவுத் பிளாக் அலுவலகத்துக்கு வரவழைத்து இந்தியா தனது கவலையை தெரிவித்தது.

இது தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை விவரங்களை தெரிவிக்கும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளித்து வருகின்றனர்.

http://seithy.com/breifNews.php?newsID=126462&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை, சவுத் பிளாக் அலுவலகத்துக்கு வரவழைத்து இந்தியா தனது கவலையை தெரிவித்தது.

கவலை தெரிவித்தபோது எடுத்த படம்..

Spoiler
emoticon-concern.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்க அமெரிக்கர் எண்டா அல் ஷார்ப்ரனைக் கூப்பிட்டு மைக்கைக் குடுத்துட்டு விட்டுருவினம். ஹிஸ்பானிக் காரர் ஒண்டும் சொல்லாமல் இருந்திருவீனம். இந்தியரிட்ட மாட்டிக் கொண்டாங்கள் சிங்கனுகள்! கிரிமினல் வழக்கு சிவில் வழக்கெல்லம் போட்டு இந்தப் பொலிஸ்காரரை ஒட்டாண்டி ஆக்கிப் போட்டுத் தான் அடங்குவார்கள். செய்யத் தான் வேணும். இல்லா விட்டல் இந்த மடையங்களுக்கு அறிவு வராது. :D

  • கருத்துக்கள உறவுகள்

'நோ இங்கிலீஷ்' என்று சொல்வது ஆங்கிலம் தெரியவில்லை என்கிற பொருளில்.. ஆனால் உண்மையில் ஆங்கில இனம் (வெள்ளை) வேண்டாம் என்கிற பொருளைத்தான் அது தருகிறது. :o இதனால் ஏற்பட்ட விபரீதமாகக்கூட இருக்கலாம்.. ஆனாலும் அமெரிக்க பொலீசுக்கு common sense கொஞ்சம் குறைவு என்பது என் எண்ணம்.. :unsure::D

 

காவல்த்துறையினருக்கு

ஆயுதப்பயிற்சி  கொடுக்கும் அளவுக்கு 

மனிதாபிமானப்பயிற்சி  செய்வதில்லை என்பதற்கு இந்த கானொளியும்

அந்த மனிதரின் இன்றையநிலையும் ஒரு எடுத்துக்காட்டு...

 

வீட்டுக்கு வீடு துப்பாக்கிகளுக்கு அனுமதி  கொடுத்துவிட்டு

பேசமுடியாதவன்

கை இல்லாதவனையெல்லாம் சந்தேகப்படுகிறது அமெரிக்கா.. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

காவல்த்துறையினருக்கு

ஆயுதப்பயிற்சி  கொடுக்கும் அளவுக்கு 

மனிதாபிமானப்பயிற்சி  செய்வதில்லை என்பதற்கு இந்த கானொளியும்

அந்த மனிதரின் இன்றையநிலையும் ஒரு எடுத்துக்காட்டு...

 

வீட்டுக்கு வீடு துப்பாக்கிகளுக்கு அனுமதி  கொடுத்துவிட்டு

பேசமுடியாதவன்

கை இல்லாதவனையெல்லாம் சந்தேகப்படுகிறது அமெரிக்கா.. :(  :(  :(

அமெரிக்காவுக்கு உறவினர்களை அழைப்பவர்கள் கொஞ்சம் அங்குள்ள நடைமுறைகளை சொல்லிக்கொடுப்பது நல்லது. முதலாவது, ஊரில் செய்வதுபோல எல்லாவற்றையும் பிராக்குப் பார்த்துக்கொண்டு போகக்கூடாது. :unsure:

இரண்டாவது விடயம்.. பொலீஸ் விசாரிக்க வந்தால் அப்பிடியே நிலத்தில் படுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பட்டு பட்டு என்று சுட்டுவிடுவார்கள். :o:D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு உறவினர்களை அழைப்பவர்கள் கொஞ்சம் அங்குள்ள நடைமுறைகளை சொல்லிக்கொடுப்பது நல்லது. முதலாவது, ஊரில் செய்வதுபோல எல்லாவற்றையும் பிராக்குப் பார்த்துக்கொண்டு போகக்கூடாது. :unsure:

இரண்டாவது விடயம்.. பொலீஸ் விசாரிக்க வந்தால் அப்பிடியே நிலத்தில் படுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பட்டு பட்டு என்று சுட்டுவிடுவார்கள். :o:D

 

 

பிரான்சில் இந்தக்கிழமை கலக்கிவரும் செய்தி- துப்பாக்கி தற்பொழுதிலிருந்து எங்களுடன் புது நண்பன் 

 

Béziers : le "nouvel ami" de la police municipale ? Un pistolet Par Paul Laubacher | L'obs – mer. 11 févr. 2015
  • 13693078.jpg

    L'obs/Paul Laubacher - Béziers

Le maire d'extrême droite de Béziers, Robert Ménard, avait annoncé sa volonté d'armer la police municipale. C'est chose faite. Et la campagne de communication ne fait pas dans la dentelle.

"Désormais la police nationale à un nouvel ami". Ce mercredi 11 février au matin, les habitants de Béziers ont vu fleurir la nouvelle campagne d'affichage de leur police municipale. Si le slogan semble innocent, l'image qui l'accompagne lui donne un sens bien différent : un pistolet avec le drapeau français gravé dessus.

Contacté par "L'Obs", le service de la police municipale de Béziers, dont le maire d'extrême droite actuel, Robert Ménard, a été élu en s'alliant avec le Front national, confirme l'existence de cette campagne de communication. Elle a été lancée mardi dans la soirée. 

Sur Twitter, l'affiche a provoqué de vives réactions :

Comme le rappelle "Midi-Libre", Robert Ménard avait annoncé en juin dernier sa volonté d'armer la police municipale de sa ville en vue des prochaines Feria. 

Le conseil municipal du 14 novembre a acté, en novembre dernier, quasiment à l'unanimité, le principe d'une nouvelle convention entre la police municipale, dont les missions se trouvent redéfinies, et les services de l'État. 

Au menu, donc : des Flash-Ball, des tasers et des revolvers pour un coût total d'armement de 60.000 à 70.000 euros.

Contacté par "l'Obs", le maire et le directeur de la police municipale n'ont pas encore répondu à nos demandes d'information.

 
  • கருத்துக்கள உறவுகள்

டே சோமாறி போலீஸ் எண்டு ஏதோ எழுதியிருக்கு.. :( என்ன அது? :D

  • கருத்துக்கள உறவுகள்

டே சோமாறி போலீஸ் எண்டு ஏதோ எழுதியிருக்கு.. :( என்ன அது? :D

 

 

அடப்பாவி

அது "Désormais la police nationale à un nouvel ami"

இப்பொழுதிலிருந்து.... :lol:  :D 

 

இதை பிரசுரித்திருப்பவர்கள்

தீவிரவலது சாரிகளால் ஆளப்படும் மாகாணசபையினர் என்பது குறிப்புச்செய்தி.. :( 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான் சொல்வது புது இடங்களில் பராக்குப்  பார்க்கப்படாது.
இருந்தாலும் அமெரிக்கருக்கு இன்னும் கிலி அடங்கவில்லை.


டே சோமாறி போலீஸ் எண்டு ஏதோ எழுதியிருக்கு.. :( என்ன அது? :D

 

ப்ரான்ஸ் பொலிசார் சோமாறிகள் என்டு சொல்லியிருக்கலாம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டே சோமாறி போலீஸ் எண்டு ஏதோ எழுதியிருக்கு.. :( என்ன அது? :D

 

பூமிப் பந்தின் இளைய மொழி உதயத்திற்க்கு இன்று இரவு 8.42 ற்க்கு கால் கோள் அமைந்திருக்கின்றது

 

இளைய மொழியின் எழில்மிகு செம்மல் இசைக்கலைஞனார் வாழ்க :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.