Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

சமர்ப்பிக்கின்றேன்..

மூச்சு!

பேச்சு!

ஆற்றல்!

அசைவு!

அனுபவம்!

வாழ்க்கை!

அன்பு, இதயம்..

இவை அனைத்தையும் உனக்கு!

உனக்கே உனக்காக!

எனக்கே எனக்காக..

எனக்காக நீ என்ன

தரப் போகிறாய்?

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

என்ன தரப்போகின்றாய்

என என்னிடமே

உன் கேள்விக் கணையை

ஏவுகின்றாயே; உன்னிடம்

என்னையே தந்தேன்

என்ன இருக்கு மீண்டும்

உனக்கு நான் தர?

ஆதலால் உயிரே

என்னிடம் ஏதுவுமே

இனிமேல் கேட்காதே

Edited by வெண்ணிலா

இனிமேல் கேட்காதே..

வயது எவ்வளவு?

வழுக்கைத் தலையா?

வசீகரமானவரா?

வாய்நாற்றம் உண்டா?

உயரம் எவ்வளவு?

ஊர் எந்தப்புறம்?

உறவினர்கள் யார்?

திறமைகள் எவை?

இனிமேல் இவ்வாறு என்னிடம்

கேள்விகள் கேட்காதே!

என்னை நான் யார் என்று

எப்போதோ மறந்துவிட்டேன்!

ஏனென்றால் நான் ஒரு

காதல் பைத்தியம்!

பைத்தியம்

உலக அமைத்திக்காய்

ஊமையான பைத்தியம்

உருண்டு புரண்டு

உண்மைகள் உரைத்து

உறவிழந்து உடைமையிழந்து

உருக்குலைந்த பைத்தியம்

சிங்களக்கொடியவர்களால்

சுPர்குலைந்த பைத்தியம்

போதிமரத்தடியில்

புத்தன் பெற்ற ஞானம்

அரசமரத்தடியில் என்

அந்தரங்கத்துடன் அழிந்துபோய்ச்சு

அரசைத்துறந்து அவன் பெற்ற ஞானம்

அம்மணமாய் என்னுடல்

அலையும்போது அழிந்து போய்ச்சு

அழிந்து போய்ச்சு

அனைத்தும் அகதிவாழ்வில்!

அழகிய ஊர்..

சொந்தங்கள்.. உறவுகள்!

இனிமை.. இளமை!

தனிமையில் கிடைக்கின்ற இரசனை!

தனித்துவம்.. இவையெல்லாம்

இனி எப்போது கிடைக்கும்?

அழிந்து போய்ச்சு

அனைத்தும் அகதிவாழ்வில்!

அழகிய ஊர்..

சொந்தங்கள்.. உறவுகள்!

இனிமை.. இளமை!

தனிமையில் கிடைக்கின்ற இரசனை!

தனித்துவம்.. இவையெல்லாம்

இனி எப்போது கிடைக்கும்?!

எப்போது கிடைக்குமென

ஏங்கித்தவிக்கின்றேன்

தாகத்தில் துடிக்கின்றேன்

வெற்றுடம்பில் வேர்வையணைக்க

கட்டுடம்பை காட்டி

வெட்டவெளியில் கிட்டிப்புள்

விளையாடிய காலம்

கிட்டடியிலும் கனவில்

வந்து போயிற்று

அம்மா சொல் கேளாமல்

ஆற்றோரம் வயலோரம்

வம்பளந்து கிடந்தநாட்கள்

இன்பமடா இன்பமடா

நினைவெல்லாம்

தேன் மழையடா !

அடைமழையில்

குடையெடுத்தால் நனையுமென்று

குறும்பெல்லாம் கொட்டியங்கே

குதூகலாமய் களித்த நாட்கள்

கொஞ்சி கொஞ்சி

என்னை கொஞ்சம் கொஞ்சமாய்

கொல்லுதடா !

கொல்லுதடா இதயபாரம்..

மூச்சை அடைக்குதடா..

ஏதோ ஓர் வேதனை என்னை

தூங்கவிடாமல் தவிக்கவைக்க..

என் சோகத்துக்கு என்ன

காரணம் என்றே....

எனக்குள்த் தேடி தேடி

வெறுமையை மட்டும்

மென்று மென்று முழிக்கிறேன்..

என் நண்பன் யார்...

என் எதிரி யார்..

என் பேச்சு யாரை சலனப்படுத்தியது..

என் மௌனம் யாரை சங்கடப்படுத்தியது..

என்னை மாற்ற என்னால்

என்ன செய்யமுடியும்..

என்னை மறக்க என்னால் முடியுமா..

நான் தோப்பில் வாழும் தனிமரமா..

தோப்பைத் தொலைத்த தனிமரமா..

என் மனதின் மயானஅமைதியில்

ஏனிந்த சஞ்சலப்புயல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஞ்சலப் புயல் ஏன் உனக்கு?

சாந்தி கொள் உன் மனதில்

தேவை தேடி வந்தவரை

தேடியோடி ஏன் அலைகின்றாய்?

ஏறி உன்னை மிதித்தவரை

எட்ட நின்றே நீயும் பார்

கிட்ட சென்று கலங்காதே

விட்டு சென்றவரையெண்ணி

எண்ணங்கள் ஆர்பரித்து

சாமங்களை அலங்கிக்கின்றது

இரவுகளின் நிசப்தத்தில்

மௌனமாக உணர்வுகள்

வெடித்து சிதறுகின்றது

விழி வழியே ஊரும் கண்ணீர்

கதுக்குள்ளே சமயத்தில்

விழுந்து விடுகின்றது

யாருக்கும் தெரியாத

யாரும் அறியாத

உணர்வுள் பரிதவிக்கின்றது

கழைப்பு மிகுதியால்

உணர்ந்த நடுக்கமும்

பல பேர் முன்

பசியை மறைக்க

பட்ட பாடும் என்னுள்ளே

போதகனாய் வாழ்கின்றது

யாருக்கும் தெரியாமல்

எனது உணர்வுகள்

நிர்வாணமாகும் போது

கண்ணீர் மழையில்

நனைகின்றேன்

தேhப்பில் இருந்தாலும்

ஒவ்வொரு மரமும் தனிமரம்

எனது உணர்வுகளும் அப்படியே

நான் எனக்கு மட்டும் உண்மையாய்

நீ உனக்கு மட்டும் உண்மையாய்

இருக்கின்றோம் தனிப்பட்ட வாழ்வில்

இருந்தாலும்

நாம் நாட்டுக்கு உண்மையாய்

இருப்பதில்

துயரங்கள் பாரங்கள்

எல்லாம் தூரப்போகின்றது

ஏனெனில்

தாயின் துயருக்கு முன்

என் துயரங்களை ஒரு

துரும்பாக உணர்கின்றேன்

Edited by sukan

சுகன் உங்கள் கவிதை கனத்த மனங்களுக்கு ஆறுதல் வாழ்த்துகள்..

உணர்கிறேன்..

நீயில்லாத

தேசத்தில் கூட

உன் வாசத்தை

வாசத்தை உணரும்- என்

தேசத்து உறவே உன்னுள்

சோகங்கள் நிறைய

சுகமாய் கவியாய்

உதிர்கின்றது

கவிகளால் தொடுகின்றறோம்

கனத்து வேர்க்கும் உணர்வுகள்

ஒரு நதியாய்சேர்ந்து

யாழ்களத்தில் ஓடுகின்றது

தாயகத்தை நோக்கி..

நோக்கி..

நான் நோக்கி

நீ நோக்காதபோது...

என் நோக்கியா விடும்

மடலையேனும்

நோக்கு...

பேக்கு..

வேண்டாம் பொருள்

தெரியாத

கெட்டவார்த்தையை

அனுப்பதே

என் அகராதிகளையெல்லாம்

பழைய கடதாசிக்குப் போட்டு

வாங்கிய நோக்கியா இது.

இது என்ன

உங்கள் மனக் குப்பைகளை

இறக்கி வைக்கும்

இடமா?

மல்லாந்து படுத்து

காறி உமிழ்கின்றீர்

மள மளவென்று

கருத்து மூட்டைகளை

அவிழ்கின்றீர்

சிலர் இங்கு வந்து

சில்லறைச் சண்டைகள்

செய்கின்றார்

சிந்திக்க மறக்கின்றீர்

கணினிச் சாளரம்

திறந்து

கன சனம் பார்க்குதய்யா!

ஆகவே

கருத்துக்களில் கொஞ்சம்

கரிசனம் சேரும்

இல்லையெனில்

வந்தசனம் சோரும்!

பெண், காதல்

இவைகடந்து

ஏன் உங்கள்

கற்பனைக் குதிரைகள்

பயணிக்கவில்லை!

சுற்றி சொல்ல

பல சேதி இருக்கு

சும்மா சுழன்று

நானும் எழுதுவன்

கவிதையென்று

காதலாகிக் கசிந்துருகாமல்

பாடுபொருள் மாற்றும்

பல முத்தான

கவிதைகள் பிறக்கட்டும்!!!

பிறக்கட்டும் கவிப்பூக்கள்..

திறக்கட்டும்.. அறைச் சாளரம்..

ஒலிக்கட்டும் உன் குரல்...

திக்கெட்டும் எட்டும் புலவா...

நூலேறும் உன் பா

காலங்கள் வாழ

வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்கள் கவியே

நீ கவிதைகள்

பிறக்கட்டும ்

என்றாயே

கவிதையென்ன

கடைச்சரக்கா

வாங்கி விற்பதற்கு

இல்லையே! அது

அவரவர் எண்ணச்

சிதறல்கள்

இங்கே யாரும்

கவியரசு வைரமுத்து

இல்லை வானத்தைப்

பார்த்து கவிபடைக்க

குறை கூறி

சென்றவரே உம்

கற்பனை விரியட்டும்

முதலில் சிந்தனைச்

சிதறலாய் எனி

வரும் புதுக்கவிதை

புது பொலிவு

பெற்று நிக்கட்டும்

எமக்காய்..........

எமக்காய்

இறுதியில் கடவுளும்

கருணை காட்டவில்லை

சாமத்தில்

பேய்கள் எழுந்து

வங்காலையில்

இரத்தம் குடித்த போது

கருணையே உயிர் விட்டிருந்தது

ஒரு பூந்தோட்டத்தில்

கோடாரியால்

கோரப்பற்களுடன்

பூப்பறித்த புத்தனின்

பிள்ளைகளின்

சாமத்து நரபலி

புகைபடங்களில் பார்த்த

புகலிடத் தமிழருக்கு

இதயம் வேர்த்த

வேர்வையோடு

இரத்தம் கசிந்தது

அந்தப் பூந்தோட்டத்தின்

இறுதிக்கணங்களை

யாரால் எண்ணிப்பார்க முடியும்?

கற்பனை கூட செய்ய முடியாத

காடைத்தனத்தை

காட்டு விலங்குகள்கூட

செய்யாது

காய்ச்சல் வந்தால்

நூறு முறை தொட்டுப்பார்கும்

தாய் முன் பிஞ்சுகளை

கடித்த குதறினார்களா?

இரவில் பேய்க்கதைகளின் பயத்தில்

தய் தந்தையை கட்டியுறங்கும

குஞ்சுகளின் முன்

பெற்றவர்களை குதறினாயா?

அயலுக்கும் சத்தம் கோட்காமல்

நாலு உயிர்களை நசித்த கொடுமை

எப்படி என்பது

யாருக்கு தெரியும்?

அம்மாவை விடு என்று

அழுதார்கள்

அப்பாவை விடு என்று

அழுதார்கள்

பிள்ளையை விடு என்று

கதறினார்கள்

நிச்சயம்

சப்பத்து கால்களை பிடித்த

கதறியிருப்பார்கள்

வீரிட்டு கத்தியிருப்பார்கள்

ஆனால்

கத்தவும் முடியாமல்

வாயை பொத்தியிருப்பார்கள்

ஐயா என்று கதறவும் முடியாமல்

வாயை பொத்தியிருப்பார்கள்

பயத்தில் ரணத்தில்

அழுது கதறி உயிர்விடவும்

அனுமதி மறுக்கப்பட்டவர்கள்

யாருமல்ல எமது

உறவுகள்

நடு நிசியின்

மயான அமைதியை

பீதியின் அலறல்கள்

கிழித்தெறிந்ததை

உணரத்தான் முடியுமா?

ஒரு வார்த்தையால்

சொல்லத்தான் முடியுமா?

இரத்தம் தோய்ந்த

வங்கலை கிராமத்தின்

அந்த இரவுகள்

எந்த காலத்திலும்

வடுக்களாக வாழும்

இன மானமுள்ள தமிழருக்கு

காடைத்தனத்துக்கு ஒரு

ஆண்மை காட்டின சிங்கள

காடையர்களை

என்னவென்று சொல்வது?

வேண்டு மென்று

விட்டுச் சென்ற

ஆணுறைகளும்

இராணுவ பட்டிகளும்

ஏக்களமிட்ட போதும்

கூட்டிக் கொடுப்பவனும்

காட்டிக் கொடுப்பவனும்

மாற்றிச் சொன்னான் இதைக்கூட

மானத்தை வித்து

பிணங்களை எண்ணி

பிச்சை எடுத்து

பிழைப்பு நடத்தும்

நடை பிணங்களின்

திசைப்பக்கமும்

தலை வைக்க கூடாது

அவன் வாழும் பக்கத்தின்

கோவில் குளத்துக்கும்

போவது பாவம்.

Edited by sukan

பாவம் தாளம் ராகம் - கொண்டு

நாட்டியம் ஆடிடும் கோலம்

அவள் அழகிய கண்களின் சுபாவம்

அதை காண்பவர் நெஞ்சு தத்தித்தாவும்

தித்திக்கும் அவள் தேகம்

தாமரை இதழ் தரும் தாகம்

இது சித்திக்கும் முத்திக்கும் ஏங்கும்

புத்தன் புத்திக்கும் தந்திடும் மோகம்

மோகம் கொண்டவன்

என்

மனச்சிறையில்

அவன் நினைவுகள்

தென்றலால் பதிவு

செய்து

சுழல் காற்றாய்

சுற்ற.....

அவன் என்னை

தீண்டியதால் எனக்குள்

அவன் வாசம்

சுற்றிச்சுற்றி

சுழல......

என் இதயத்தின்

நாளங்களை அவன்

நினைவென்னும்

சுழல்காற்று

பிடிங்கிச்செல்ல

அவனோ மீட்டுகின்றான்

எனக்காய் யாழை

யாழை மீட்டிடும் காளை - அவன்

நெஞ்சினில் காதல் சுவாலை

நாளை எனும் நாளும் வரும் வேளை

நங்கை நீ சூட வருவாயா ஒரு மாலை

Edited by vettri-vel

ஒரு மாலை வேளையில்

நடந்தேன் தெருச்சாலையில்

கண்டேன் ஓர் காளையை

விழுந்தேன் காதல் வலையில்

இணைந்தேன் திருமண சோலையில்

ஆண்டுகள் ஆறின் பின்.

பின் இரண்டு பிள்ளை

பெற்றெடுத்த பின்பு

கண் நிறைந்த காதல்

கந்தலாகி போக

காசு காசு என்று

இரண்டு பேரும் ஓட

தேசம் விட்டு தேசம் வந்து

வேசம் ரொம்ப போட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

வேசம் ரெம்பப் போட்டோம்

விண்ணில் கயிற்றில் நடந்தோம்

மண்ணில் வில்லாய் வளைந்தோம்

குட்டிக் கரணம் போட்டது குரங்கு

வட்ட நெருப்பில் பாய்ந்தது பூணை

குறுக்கே வெட்டக் கிடந்தான் பையன்

துள்ளிச் சுழன்றாடினாள் மனைவி

படம் எடுக்குது பாம்பு - மேலால்

பாயப் பார்க்குது கீரி

சுத்தி நிக்குது கூட்டம்- சிந்தும்

சில்லறைக்கு காவலாய் நாய்

சாண் வயிற்றின் சத்தம் நீக்க

மனிதனும் விலங்குமாய் கலந்தே

சமத்துவம் பேணி சதிராடுகின்றோம்.

சதிராடுகின்றோம்

நாங்கள்

வாழ்கையென்னும்

சிறைச்சாலைக்குள்

புரிந்து கொள்ளா

உறவுகளின் முன்னால்

உறவுகளின் முன்னால்

உதறிச்சென்றவனே

உழிந்து துப்பியவனே

கவிஎன்னும் நாமத்தை

கவசமாய் கொண்டவனே

படைப்பவனை தின்னாதே

படைப்புகளை மிதிக்காதே

சிற்பியின் கை சிக்கி

சிலையானவை போக

எஞ்சிய துண்டங்களும்

என்றோ காட்சிக்கு வரும்

சிதறல்களும் சிறுதுகள்களும்

என்றும் சீரழிந்து போவதில்லை

கலைக்கண்ணால் பார்த்தால்

கழிவும் ஓர்; ஓவியம்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.