Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

கவிகள் தொங்கும்..

மரத்தடியில்..நான்

அமர்ந்தேன்....எதிரே...

அழகிய ஆறாய்....

அவள்..அசைந்தாடும் தென்றலாய்..

அவள் ஆடையாட

அதில் சேர்ந்தோடும்..

என் மனதை ஒரு

நிமிடம்...நிறுத்தியிழுத்து..

வந்தது.. நிஜதேவதையல்ல...

கனவு தேவதை..

அது அழகான ஆறல்ல..

கானல்..நீர்..

அது மரத்தடியல்ல..

என் கட்டில்..

அவை தொங்கும் கவியல்ல..

கவிப்பூங்காட்டின் மலர்கள்.

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

மலர்கள் என

மங்கையெனை

மணந்தவனே

நிலவு என

நிலாவிவளை

நினைத்தவனே

கங்கையென

கன்னியெனை

காதலித்தவனே

நதியென

நங்கையெனில்

நனைந்தவனே

மேகமென

மெல்லமாக

மோதியவனே

முகிலென

முன்னின்று

முட்டியவனே

அலையென

அணங்கிவளை

அணைத்தவனே

பறவையென

பக்கத்திலேயே

பறந்தவனே

மின்னலென

கண்திறந்து

ரசித்தவனே

மலையென

விலகாமல்

மயங்கியவனே

கல்லென்றதால்

கல்லாகியதேனோ

கல்லுக்குள்ளும் ஈரமுண்டு

கல்லும் சிலையாகும்

எனைக் கையில் எடு

உளி கொண்டு தட்டு

வலிக்காமல் தட்டு

வடிவான சிலையாகும்வரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடிவான சிலையாகும் வரை

சிலையாக நின்றேன் சித்திரப்பதுமையாக

அலை பொங்கும் மன அலையோடு

கலைதனை ரசிக்கும் ரசிகையாய்

பதுமையாய் வடித்தது வெண்பனி

ததும்பும் சிலையா

அதுவும் இல்லைவே இல்லை

கருமை கொண்ட பெண்ணொன்று

சிலை கண்டு.............

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

பழி சொல்லும்..

புவி காதல்

வலி நூறடி..

வண்ண நிலவாக

பெண் உன்

கண்கள் ஒளிருதடி...

இடை ஆடும்.

கொடியாக நான்

கூட வரவா..

தடை போட

படை வரினும்..

உடையாதடி..காதல்..

ஜெயம் காணும்..

பயம் ஏனோ..

தயை செய்யடி

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

Edited by vikadakavi

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

பழி சொல்லும்..

புவி காதல்

வலி நூறடி..

வண்ண நிலவாக

பெண் உன்

கண்கள் ஒளிருதடி...

இடை ஆடும்.

கொடியாக நான்

கூட வரவா..

தடை போட

படை வரினும்..

உடையாதடி..காதல்..

ஜெயம் காணும்..

பயம் ஏனோ..

தயை செய்யடி

சிலை கண்டு..

அலை பாயும்...

நிலை பாரடி...

உனை யன்றி

எனை யாள

உறவேதடி....

தடியோடவள்

புருஷன் வந்தால்

உன் நிலை யென்னடா :icon_mrgreen:

சிலை கூட

சேலை போட்டால்

வாய் விரிக்கும் மனிதன்

நீ- இல்லைடா...!

அலை பாயும்

மனதிற்க்கு

விலங்கு போடடா...!

புவியாழப் பிறந்தவனே

தம்பி - நீ

பெண் மோகத்தில்

புதையாதேடா.... ! :icon_idea:

தடியோடவள்

புருஷன் வந்தால்

உன் நிலை யென்னடா

சிலை கூட

சேலை போட்டால்

வாய் விரிக்கும் மனிதன்

நீ- இல்லைடா...!

அலை பாயும்

மனதிற்க்கு

விலங்கு போடடா...!

புதையாதேடா..அண்ணா

என் காதலை குழி தோண்டி...

யாரோ ஒருத்தியை காதலித்து

யாரோ ஒருத்தியை மணந்து வந்து

அண்ணியென்றாய்.. நான் கேட்டேனா..

அடுக்கடுக்காய் மூன்று பெற்று

அப்பனான பின்னும்..

வேலையிடத்தில்..அண்ணிக்கு

உலை வைக்கிறாய்..

யாரந்த சிறுக்கியென்று

நான் கேட்டேனா...

வயது வந்த காளை..

உன்னைவிட வெள்ளை..

பொறுப்பில் குறைவில்லை

இப்போதுதான்.. ஏதோ ஒருபிள்ளை..

உனக்கேன் அண்ணா பொறுக்கவில்லை..

வாழவிடு.. வழிவிடு..

இல்லை.. சாகவாவது விடு.. :icon_mrgreen:

Edited by vikadakavi

விடு என்று சொல்லிவிட்டால்

விட்டு விடுவேனா..

என்னிடத்தில் வெறுப்பால்

ஏதோ உமிழுகின்றாய்

காதலித்த பெண்ணைத்தான்

கட்டிவந்தேன் கண்ணா

ஏறெடுத்தும் என்னொரு பெண்

என்றும் பார்த்ததில்லை !

நீ கூறிடும் உன்

கற்பனையில் - நான்

உண்மையாகவில்லை

இன்னும் அடுக்கிடு

உன் மொழியை -அது

எனக்கு வலிப்பதில்லை....! :icon_mrgreen:

எனக்கு வலிப்பதில்லை

எவ்வளவு இலகுவாக சொன்னாய்

அண்ணா...மெய்யாய்..

எனக்கு வலிக்கிறது...

பொய் சொல்வதும் புறம் சொல்வதும்..

என்னிடம் இல்லை...

காதலர்கள்.. காயப்படுவார்கள்..

காயப்படுத்த மாட்டார்கள்..

அண்ணா நான் காயப்படுகிறேன்..

நீ வார்த்தைகளால்.. படுத்துகிறாய்..

உன் இல்லறத்தில் கல் எறியச்

சொல்லவில்லை..என் மீது

நீ சொல்லெறிந்தாய்..

சின்னவன்தானே..

உண்மையைக் கோபத்தில்.

பொதுஇடத்தில் உளறிவிட்டேன்..

மன்னித்துக்கொள் அண்ணா.. :icon_mrgreen:

அண்ணா என்று அழைத்தழைத்தே

எனக்கு வேட்டு வைப்பதாக

உனக்கு குழி பறிக்கின்றாய்.....!

மட்டுறுத்தும் நபர்கள் எல்லாம்

உனக்கு நண்பராகலாம்

ஆனால் எனக்கு

யாரும் இல்லை என்றுதான்...

நீ எழுதும் நாடகத்தில்

என்னை நடிக்க வைக்கிறாய்..! :icon_mrgreen:

உண்மை என்று இன்னும் - நீ

திரும்பத் திரும்பச் சொல்வதனால்

கட்டும் கதைகள் யாவுமே

உண்மையாகிப் போகுமா..?

என்னைத் தெரிந்ததாய்

என்ன தெரிந்தாய் ...?

''நேசக் கரத்துக்கு

கை கொடுங்கள் ''

நீ - கதவடைத்தாய்

உன் ஜன்னல் வழி நான்

கூச்சல் போட்டேன்

''கவிதை ஒன்றும்

பசித்த வயிறுக்கு

சோறு போடாதே...''

என் கூச்சல் பிடிக்காமல்

வசைபாடித் திரிகின்றாய்..!

என்னைத் தெரிந்ததாய்

ஏதும் சொல்லு

ஆனால் என் காதல் பற்றி

எதுவும் சொல்லாதே..

ஏனென்றால் அது என்

பேச்சல்ல மூச்சு..!

Edited by gowrybalan

மூச்சு முட்டுகிறதா...

முட்டட்டும்..

வம்புக்கிழுத்தவரே..

வாய் வலிக்கிறதா...

நேசக்கரம்...

முகவரி மறைத்தவனா நான்...

இருபதாயிரம் மக்கள்முன்

நின்று முகம் உரைத்தவன்...

பத்துக் காசு கொடுத்து பசியாற்றும்..

அண்ணா.. பந்தி போட்டு

பசியாற்றும்.. மக்களை

அறியாமல் இகழாதீர்கள்..

நகைச்சுவைக்கு கவி

வரைந்தால்..

சிரிக்காமல்

கரிக்கிறீர்கள்..

வம்பிழுத்தது..

நானல்ல

நீங்கள்தான்..

இளையவன் பிழை

என்றால்

பொறுத்துக்கொள்ளுங்கள்...

வறுத்து தள்ளாதீர்கள்..

:)

Edited by vikadakavi

தள்ளாதீர்கள் என்று சொல்லி

என்னை தள்ளிவிடப் பார்க்கின்றீர்

இல்லாக் கதைகள் பேசி நின்றால்

அந்த அல்லா கூட ஏற்பானா...? :wub:

கோபத்தில் சொன்னதென்றும்-பின்

நகைச்சுவைக்காய் வரைந்ததாக

நல்லாய் கதை முடிக்கலாம்...!

உள்ளத்தில் உள்ளதெல்லாம்

உன்னையன்றி யாரறிவார் ...

என்னைத்தானே தூற்றுகிறாய்

தம்பி நல்லாய் நீ தூற்று

இன்னும் கொஞ்சம் வேணும் என்றால்

கரி எடுத்து என்முகத்தில் பூசு

நாலுபேர்கள் சிரிக்கணும்னா

நானும் கோமாளி யாகுகின்றேன்

நல்லாய் கைகொட்டி

வாய்விட்டு சிரித்து

என் முகத்தில் கரியெடுத்து பூசு.... :)

காதல் எந்தன் மறு பிறப்பு

என் பிறப்பைப் பழித்தாய் தம்பி!

உந்தன் பிறப்பைப் பழிக்க வேணும்னா

அன்னை யுன் - அன்னை அழுவாள் பாரு!

அன்பினாலும் பண்பினாலும்

வளர்ந்து வந்த வீடு - என் வீடு!

உன்னைப் போல பொய்யுரைக்க

என்னால் ஒன்றும் முடிவதில்லை பாரு!

இன்னும் கதைகள் புனையணும்னா

அதை இங்கெடுத்து போடு!

ஆனால் விகடம் உந்தன் கவியில் இல்லை

அதையும் நீயும் பாரு...!!!! :rolleyes:

Edited by gowrybalan

பாரு பாரு என்றென்னை

சொற்போருக்கு அழைத்துவிட்டு..

காதலை இகழாதே..என்று

காவியமேன் இன்று

உங்கள்.. காதல் மெய்..

ஒத்துக்கொள்கிறேன்

நான் சொன்ன பொய்

குப்பையைக் கிளறியதா

கோபத்தைக் கிளறியதா..

புரியவில்லை... பெரும்

புதிரப்பா.. சில ஆணின்

ஆள்மனமும்..

படையைப் பார்த்து

பயந்து வந்த அகதி நான்..

வெறும் வாய்வீரன்..

வெறும் சொல்லாளன்..

சிறு தமிழ்பித்தன்..

வம்புக்கிழுத்தது..நேரில் என்றாயின்

வாய் பொத்தி போயிருப்பேன்..

களம் என்றதால்.. கண்டதும்

சொன்னேன்...ஆனால்..

கண்டதைத்தான் சொன்னேன்

என்று சொன்னேனா..

சினம் ஆறவேண்டும்..

வாழ்க்கை கண்ணாடி போல..

நீங்கள் சிரித்தால் சிரிக்கும்..

நீங்கள் முறைத்தால் முறைக்கும்..

நீங்கள் மேல் எறிந்த கல்

உங்கள் மேல் விழுந்தது..

எறிந்ததற்கு வருந்துங்கள்..

விழுந்ததற்கு எரியாதீர்கள்

ஜடப்பொருளை சினந்து

உதைக்கின் கால்தான் வலிக்கும்..

கரி பூசவில்லை உங்கள் காதலில்

கவி தூவினேன்..

சோதனைகள்.. தாண்டியதால்தான்

அரிச்சந்திரன்.. வாழ்கிறான்..

பழிசொல்லை கழிந்தால்தான்..

காதலும் வாழும்..

என் தவறை உணர்கிறேன்..

வலைப்பூ பார்த்து

வாழ்வை உணர்ந்தேன்..

பல்லாண்டு வாழ்க..

நெற்றிக்கண் திறந்தாலும்

என் கவி வழியை மாற்றியது..

உங்கள் குற்றமே..

மன்னிப்பு தேவையில்லை

மறந்து விடுகிறேன்..

அண்ணா... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அண்ணா என்று

ஆசையுடன் தினம் அழைத்தாய்

கண்ணா இதுதானா பாசம் என்றே

ஆதரவு காட்டினேன்

பாசத்தையும் நேசத்தையும்

வேசமாய் மாற்றிவிட்டு

எங்கே பறந்தாய்

எங்கே பறந்தாய்

என் செல்லக்கிளியே

உனை நான் கூண்டில்

என்றுமே அடைத்ததில்லையே

பாசமாகத்தானே கிளியே

பார்த்து பார்த்து வளர்த்தேன்

இதர கிளிகளோடு நீ

இன்பமாக பழகையிலும்

நான் உனை முறைத்தேனா

நீ எங்கு பறந்தாய்

எப்போ வருவாய் மீண்டும் என்னிடம்

சொல்லு கிளியே

செவ்விதழ் திறந்து

ஒரு வார்த்தை சொல்லிடு

ஒரு வார்த்தை சொல்லிடு

என்று நீ

கெஞ்சினாலும்

கிட்ட வந்து கொஞ்சினாலும்

கிஞ்சித்தும் நான்

என் நிலை விட்டு இறங்கேன்

உன் மேல் இரங்கேன்...

கூட்டில் அடைத்தா

உனை வளர்த்தேன் என்று

கேள்வி கேட்கிறாயே

பெண் கிளியே...

உன் மனக் கூட்டில்

ஏனடி எனை

அடைக்கவில்லை என்று

நான் கேட்பேனடி....

பறந்த திசை

எங்கே என்று

முழிக்காதே

திறந்து கிடந்த

இன்னொரு மனக் கூட்டில்

மகிழ்ந்து நானே

அடைபட்டேன்

அறிவாய் நீ கிளியே!

Edited by kavi_ruban

கிளியே நீ அறிவாய்

பிள்ளைபோல உனை

நான் அணைத்ததையும்

நா வருடி கதைக்க வைச்சதும்..

அன்று தந்தேன் சுதந்திரம்

இன்று எனை விட்டு நீ

இன்னோர் மனக்கூட்டில்

இன்பமாக இருந்து

என்னையே கேட்கிறாய்

எதிர்க்கேள்விகள் பல

ஆமாம் கிளியே உனை

அன்புக்கூட்டில் வைத்துவிட்டு

மனக்கூட்டில் அடைக்காதது

என் தப்புத்தான்...

அதற்காக பறந்து போய்

எதற்காக எனை நோகடிச்சு

என் கண்ணீர் பார்த்து

உவகை கொள்கிறாயோ

நானறியேன்..

ஆசைக் கிளியே நீ வா வா

அன்பு முத்தம் பல தா தா

நிலவோடு கிள்ளை மொழியில்

பலகதைகள் பேசிட வா வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசிட வா வா என்றழைத்தாய்

பேசிட வந்தால் வீண்

பேச்சு எதற்கு என்றே எனை

பேசாமடந்தையாக்கி விட்டு

பேச்சும் மூச்சும் நீதான் என்றே

பேசி பேசியே

பேரம் பேசுகின்றாய்

என்னிடம்

என்னிடம்.. எத்தனையோ..

எனக்கே பிடிக்காமல்...

கொதிக்கும்.. தகட்டில்..

விழுந்த நீர்த்துளியாய்..

வெடிக்கும் என் கோபம்

எனக்கே பிடிக்கவில்லை...

தவறான கருத்தை..

சரியென வாதிடும்

என் தலைக்கனமெனக்கு

பிடிக்கவில்லை..

வேலைனை மறந்து..

மின்வலையில் உழலும்..

என்னை எனக்கு

பிடிக்கவில்லை

பிடிக்காத என்னை

நான் எப்படி விலகுவது?.

விலகுவது சுலபம்

அப்பனே

விந்தைச் செயல்

ஏதும் இல்லை

முந்தைக் கதையெல்லாம்

முழுசாய் மற...

பழசாய்ப் போன

சங்கதி நமக்கெதற்கு?

ஆளுக்காள் கல்லெறிந்து

விளையாடி என்ன பயன்?

கல்லெறிந்தால் காயம்

ஆறும் - சுடு

சொல்லறிந்தால்

வடு மாறாது...

கொடு உன் கையை

முகத்தில் புன்னகை கீறு

மெதுவாய் குலுக்கு

சொன்னதற்கெல்லாம்

வருத்தம் தெரிவு

சொல்லாத கதையேதும்

காதுக்கு வரின்

நில்லாது ஓடிப் போய்

உன் நிலை விளக்கு

உன் மனசுக்குள்

ஒளி வரும்

பிறகேன் உனக்கு விளக்கு!

Edited by kavi_ruban

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு ஏற்ற பெண்

தேவை என்று

தேடிய பெண்ணை

விலக்கி விலக்கி

வைத்தார்கள் அந்த

மூன்று நாட்களும்

நாட்களும் நாழிகையாய்..

கால் கொண்டு ஓடும்..

இயந்திர தேசத்தில்

வாழ்வை வளமாக்க

வர்ததகனாய்.. அதில்

வித்தகனாய்..இவன்..

இரவுபகலோடி....பல

திரவியங்கள் தேடி...

செல்வந்தன் ஆனான்..

சந்தோசப்பூரிப்பில்..

கண்ணாடி முன்..

புன்னகைப்பூவை

இரசித்தான்..உள்..

உள்ளம் சொன்னது.

ஏதோ தொலைத்துவிட்டாய்.. என்று..

ஆமாம்..

அவன் வாலிபம் தொலைந்து விட்டது..

அவன் உல்லாசம் கலைந்துவிட்டது..

அவன் இளநரையை..

பித்தநரை என்று சொல்லிக்கொண்டிருந்தான்..

பித்தநரையை முடிவு

செய்யும் முடியே.. உதிரந்து

விட்டதால்..அவனால்..

அவனுக்கே சமாதானம்

சொல்லமுடியவில்லை !...

சொல்ல முடியாமல்

சுகம் காணமுடியாமல்

எண்ணொனா துன்பத்தால்

இத்துப்போகின்றான்

காலத்தின் சுழற்சியில்

காதல்தான் தப்பிடுமோ

தப்பிவிடும் காதலும்

தப்பாகி போய்விடுமோ ?

தப்பாகி போய்விடுமோ..

நாம் போடும் தாளங்கள்...

நம் வாழ்க்கைப் போராட்டங்கள்..

எப்போதும் வலிதானா..

எம் தேசதாகங்கள்..

எத்தனை உயிர்த்தியாகங்கள்...

அப்போது நாம் வாழ்ந்த

அழகான வாழ்வை தினம்

அசைபோடும்.. நம் உள்ளங்கள்..

முப்போதும்..மூவுலகும்..

எவ்வகையில் வாழ்ந்தாலும்..

நியாயத்தில்.. நல்நெஞ்சங்கள்..

இப்போது சொல்லுங்கள்

நம்நாட்டின் செல்வங்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

போராடும்..புலிவீரர்கள்..

புலிவீரர்கள் புரியாத புதிர்கள்

புலியாகி புண்ணிய பூமிக்காய்

புதிதாய் பிறப்பவர்கள்

புதிதாய்ப் பிறப்பவர்கள்

யார் அவர்கள்..

எண்ணிப் பார்க்கிறேன்...

என்றோ இறந்தவர்களா...

புதிய உயிர்களா...

இறந்தவர்கள் எங்கே...

எண்ணிப்பார்க்கிறேன்...

அலை பாய்ந்தும் அறியாத புதிராய்..

இறப்பும் பிறப்பும்..

உயிர் என்று..

மூச்சாய்.. பேச்சாய்..

அசைவாய்.. அனலாய்..

எரிபொருளாய்..

இயங்க வைக்கும் மின்சாரமாய்..

உள்ளே இருக்கிறதாம்..

அது இல்லாமல் போனால் நாம் பிணமாம்..

எண்ணிப்பார்க்கிறேன்..

நம் பிறப்புக்கும்..

இறப்பும் அதிக தூரமில்லை

நமக்கு நெருங்கிய

உறவு மரணம்தான் போல

மரணம்.. இருப்பவர்களுக்கு

துயரம்..

இறப்பவர்களுக்கு விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.