Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பர் சிங்கர் வெற்றிப் பரிசு அனைத்தும் அநாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்: - உலகத் தமிழர்களின் வெற்றியாளர் ஜசிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னது நெடுக்கர் University Research grant எடுத்து ஊருக்கு அனுப்பிறதா?  :D

அந்த நாட்டு மக்களிண்டை வரிபணத்திலை விஞ்ஞான ஆய்வுகளுக்காக 

கொடுக்கிற பணம் உங்கடை வீட்டு காசா என்ன நெடுக்கர்?  :lol:

நீங்கள் எப்பவாவது research grant எடுத்திருகிறீங்களா நெடுக்கர்? 

அந்த பணத்தை எவ்வாறு விஞ்ஞான ஆய்வுகளுக்கு உபயோகித்தீர்கள் 

என்பதை விளக்க வேண்டும் (Annual Progress report) 

Research findings publish பண்ண வேண்டும். 

ஊருக்கு அனுப்பிறதுக்கு அது என்ன சங்ககடை காசா என்ன?  :D  :D

யாழிலை இருக்கிறவன் எல்லாம் கேணயன் எண்ட நினைப்பில 

ஏரோபிளேன் ஒட்டுறீங்க்களா நெடுக்கர்?  :D  :lol:

சீமான், நெடுக்கர் வருவார், வந்து தானோ அல்லது தனக்குத் தெரிந்தவரோ அப்படி கிரான்ற் எடுத்து ஊருக்கு அனுப்பினதாகச் சொல்வார்! அந்த கிரான்ற்ரில் அப்படியான ஏற்பாடுகள் இருந்ததாகவும் சொல்வார்! ஆனால் கிரான்ற் பெயரையோ ஏஜென்சியின் பெயரையோ சொல்ல மாட்டார்! விளங்குதா உங்களுக்கு? :D

கிரான்ற் காசை சத்தமில்லாமல் தானே நெடுக்கர் அனுப்ப முடியும்? :Dஊரவன் வரிப்பணத்தில இருந்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கொடுக்கப் பட்ட பணத்தை எடுத்து உங்கள் விருப்பத்திற்குத் தானம் செய்வது திருட்டுக்கு ஒப்பானது, அதை சத்தமில்லாமல் தான் செய்ய வேண்டும்! தங்களுக்கு வந்த சம்பளத்தை அனுப்பினால் அது தியாகம் எனலாம், திருட்டு அல்ல! ஆனால் நீங்கள் கிரான்ற் காசை அனுப்புவதாகச் சொல்வது தான் நம்ப இயலாமல் இருக்கு! அல்லது இதுவும் நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலில் தகவல் எடுத்து புலமைப் பரிசிலில் இங்கிலாந்து வந்த மாதிரியான கதையா? (அந்த ஸ்கொலர்ஷிப்பின் பெயர் நீங்கள் இது வரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! இல்லையா? :icon_idea:)

 

ஜஸ்டின் அண்ணா! 
நெடுக்கர் எவ்வளவு பெரிய யாழ் கள விஞ்ஞானி. 
அவர் போயும் போயும் British council தகவல் எடுத்து புலமை பரிசு பெற்று தான் 
இங்கிலாந்து வந்தாரா? சாச்சா நான் நம்ப மாட்டன் :D .
கொழும்பு பல்கலையில் முதல் மாணாக்கனாக வந்த நெடுக்கரை தங்கடை பல்கலைக்கு எடுக்கிறதுக்கு 
இங்கிலாந்து பல்கலைகழகங்கள் போட்டி போட்டிருக்குமல்லவா? 
எதிர்கால நோபல் பரிசு விஞ்ஞானி தங்கள் பல்கலையில் படிப்பது 
அவர்களுக்கு எவ்வளவு பெருமை. நெடுக்கருக்கு Full bright scholarship கிடைத்திருந்தால் 
அது நெடுக்கருக்கு பெருமை இல்லை. அந்த Full bright scholarshipக்கு தான் பெருமை.  
உங்கடை கதையை பார்த்தால் நெடுக்கர் இங்கிலாந்துக்கு ஏஜென்சி மூலமாக களவா போய் 
அசைலம் அடிச்சிட்டு பல்கலையில் அகதி மாணவராக இலவசமாக படித்து அகதி மாணவருக்கு 
கிடைக்கும் இலவச உதவி பணத்தை பெற்றவர் மாதிரியல்லவா இருக்கு :lol: .
சாச்சா அப்படி இருக்காது. நெடுக்கர் எவ்வளவு பெரிய விண்ணன்.
ஒவ்வொரு முறையும் மருத்துவத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கும் போதும் 
அதில் கலாநிதி.நெடுக்கலபோவான் (Dr. Nedukkalapovan) எனும் பெயர் இருக்கா என்று நாம் ஏக்கத்துடன் பார்ப்பதுண்டு.  :D
சீக்கிரம் நாம் பொறுமை இழந்து நோபல் பரிசு கமிட்டிக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு யாழ் கள சார்பில நாமெல்லாம் சேர்ந்து ஒரு நோபல் பரிசை உருவாக்கி நெடுகருக்கு கொடுக்க வேண்டி வரும் போல கிடக்கு.  :D    :lol:

சீமான், நெடுக்கர் வருவார், வந்து தானோ அல்லது தனக்குத் தெரிந்தவரோ அப்படி கிரான்ற் எடுத்து ஊருக்கு அனுப்பினதாகச் சொல்வார்! அந்த கிரான்ற்ரில் அப்படியான ஏற்பாடுகள் இருந்ததாகவும் சொல்வார்! ஆனால் கிரான்ற் பெயரையோ ஏஜென்சியின் பெயரையோ சொல்ல மாட்டார்! விளங்குதா உங்களுக்கு? :D

 

                                    :D  :D  :D

 

ஜஸ்டின் அண்ணா அப்படி நெடுக்கர் சொல்லுற மாதிரி Research grant ஏதாவது இருந்தால் 
நெடுக்கரிடம் கேட்டு உடனடியாக அந்த grant/funding agency பற்றிய தகவல் தரவும். 
அடியேனுக்கு அவசரமாக நிறைய பணம் தேவைபடுது.  :D  :lol:
ஊருக்கு அனுப்ப அல்ல. சொந்த செலவுக்கு.  :D

Edited by seeman

ஜெசிக்காவுக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அவர் ஒருவருக்கும் தானம் செய்யாமல் பரிசை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி இருந்தால், உலக தமிழ் மக்களின் ஆதரவினால் வெற்றி பெற்ற இவா பரிசை ஏன் ஆதரவு அற்ற குழந்தைகளிற்கு கொடுக்கவில்லை என்று தாறுமாறாய் குற்றம் சுமத்தி இருப்பார்கள். 

 

பரிசை அநாதரவான குழந்தைகளிற்கு தானம் செய்வதாக அறிவித்தமையால் ஜெசிக்கா மீதும், அவர் குடும்பம் மீதும் குறை கண்டுபிடிப்பதற்கு புதிய காரணம் தேவைப்படுகின்றது. எனவே, நாம் பரிசுத்தொகையை முன்னாள் போராளிகளிற்கு கொடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.

 

பரிசை முன்னாள் போராளிகளிற்கு தானம் செய்வதாக அறிவித்து இருந்தால், இவா யார் முன்னாள் போராளிகளுக்கு உதவிசெய்வதாக கூறி எங்கள் விடுதலை போராட்டத்தை தொலைக்காட்சியில் மட்டம் தட்டுவதற்கு. முன்னாள் போராளிகளை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம். இவா தாயக போராட்டத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் புகழ் பெறுவதை நிறுத்தவேண்டும் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருப்போம்.

 

எங்களுக்கு யாரையாவது திட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இனி புதிய ஒருவர் வசமாய் மாட்டும்வரை இந்த ஜெசிக்காவையும், குடும்பத்தையும் விடுவதாய் இல்லை. 

 

வேற?

 

நாங்களும் எத்தனை ஆய்வுகள் செய்கின்றோம். ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகின்றோம். புழு, பூச்சி, புடலங்காய், பாகற்காய், பப்பாளி தொடக்கம் முன்னாண், மூட்டுக்கள், நிணனீர் தொகுதிவரை ஆராய்ச்சி செய்தாயிற்று. 

 

இவ்வளவு செய்யும் எங்களை கண்டுகொள்ளாமல் கேவலம் ஒரு 14வயது சிறுமியை மட்டும் எல்லோரும் பாராட்டிக்கொண்டு இருந்தால் எங்களுக்கு சினம் வராதா பின்ன??

 

நெடுக்கரின் உண்மையான உளவியல் பிரச்சினையை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் கிழவி.  :D

  • கருத்துக்கள உறவுகள்

கிரான்ற் காசை சத்தமில்லாமல் தானே நெடுக்கர் அனுப்ப முடியும்? :D ஊரவன் வரிப்பணத்தில இருந்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கொடுக்கப் பட்ட பணத்தை எடுத்து உங்கள் விருப்பத்திற்குத் தானம் செய்வது திருட்டுக்கு ஒப்பானது, அதை சத்தமில்லாமல் தான் செய்ய வேண்டும்! தங்களுக்கு வந்த சம்பளத்தை அனுப்பினால் அது தியாகம் எனலாம், திருட்டு அல்ல! ஆனால் நீங்கள் கிரான்ற் காசை அனுப்புவதாகச் சொல்வது தான் நம்ப இயலாமல் இருக்கு! அல்லது இதுவும் நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலில் தகவல் எடுத்து புலமைப் பரிசிலில் இங்கிலாந்து வந்த மாதிரியான கதையா? (அந்த ஸ்கொலர்ஷிப்பின் பெயர் நீங்கள் இது வரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! இல்லையா? :icon_idea:)

 

உங்கள் அறிவையும்.. ஆராய்ச்சியையும் மெச்சுகிறேன். இதனை இப்படியே தொடருங்கொ.. இன்னொரு ஆராய்ச்சி பட்டம் தருவார்கள்.

 

பிரித்தானிய நடைமுறையில் மாணவர்களுக்கு.. 3 வகை நிதி உள்ளது.

 

1. கல்விக் கடன்.

 

2. உதவிப் பணம்.

 

3. தேவைக் கடன்.

 

புலமைப் பரிசில்கள் வருமாறு..

 

1. பல்கலைக்கழக மட்ட புலமைப் பரிசில்.

 

2. பொதுநலவாய நாடுகளின் மாணவர்களுக்கான புலமைப் பரிசில்.

 

3. ஆராய்ச்சி நிறுவனங்கள் வழங்கும் புலமைப் பரிசில்.

 

4. பெறுபேறுகளின் அடிப்படையில்.. பல்கலைக்கழகம் வழங்கும் புலமைப்பரிசில்கள்.

 

5. 3ம் உலக நாடுகளைச் சார்ந்த மாணவர்களுக்கான அதி உயர் சித்திக்கான புலமைப் பரிசில்கள்.

 

இப்படி நிறைய இருக்கு. இங்கிலாந்தில் உண்மையாகவே பல்கலைக்கழகம் போய் படிப்பவர்களிடம் பழக்கம் வைச்சு இதனைக் கண்டிபிடியுங்கோ. உங்களின் இந்தச் சின்னத்தனமான எழுத்துக்களுக்கு தொடர்ந்து பதில் சொல்லிட்டு இருக்க எங்களுக்கு அவசியம் தெரியவில்லை.

 

மேலும்.. இங்கிலாந்தில் குறைந்த வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகள் உயர்கல்விக்கு தெரிவாகும் போது.. பராமரிப்பு உதவிக் கடன் வழங்கப்படுகிறது.

 

நாங்க குறிப்பிட்ட மாணவர்கள்.. தங்கள் கிரான்டில்.. ஆண்டுக்கு 3000 பவுன்ஸ் வரை தாயகத்துக்கு அனுப்பி வருகிறார்கள்.

 

ஜெசிக்கா.. எமது மக்களின் கண்ணீரின் துயரின்.. மீது தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் போது.. ஏன் செய்யும் உதவியை உருப்படியா செய்ய முன்வரக் கூடாது.

 

வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் என்றாலே கள்ள வாக்குக் கூட்டம் என்றதும்.. இம்முறை தெரியவந்திட்டாம். அதுவும் ஜெசிக்கா புகழ் தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று இருந்தது போய் நடுவர் தீர்ப்பே மக்கள் தீர்ப்பாகிட்டுதாம். இதுவும் எம்மவர் புகழே...! :lol::icon_idea:

நெடுக்கரின் உண்மையான உளவியல் பிரச்சினையை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் கிழவி.  :D

 

அண்ணே கிழவியின் பாக்கு வெத்திலை வீணி.. வடிந்த.. முந்தானையை பிடிச்சு தொங்கிட்டு இருக்கும்.. உங்க உளவியலை முதலில சரிசெய்யுங்க. நெடுக்கருக்கு தெரியும்.. தனக்கு என்ன வைத்தியம் எங்க எப்படி செய்யனுன்னு. முதலில உங்கள் சிலரின் மூளை இடம்மாறுவதை நிறுத்தினால் எல்லாம் சரியாகும். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முன்னாள் போராளிகள் எவரும் எம்மை வந்து கேள்வி கேட்கமாட்டார்கள் எனும் துணிவில் தாறுமாறாய் புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிடுகின்றோம். எமது வெளிநாட்டு புலமைப்பரிசில் காசைக்கொடுத்து முன்னாள் போராளிகளின் வாழ்விற்கு உதவுகின்றோம், அவர்களை காப்பாற்றுகின்றோம். பல்கலைக்கழக வாழ்வில் நாங்கள் எடுப்பதே பிச்சை என்பது வேறுகதை. 
 
எல்லாம் யூகேயில் இருக்கின்றோம், எவனும் நேரே வந்து வழி மறித்து கேள்வி கேட்கமாட்டான் என்கின்ற துணிவு. முன்னாள் போராளிகள் யாரிடமாவது வசமாய் மாட்டுப்பட்டால் பச்சை மட்டையால் ***யில் சாத்துத்தான் கிடைக்கும். யூகேயில் பாதுகாப்பாக இருக்கும்வரை அந்தப்பயம் எமக்கு இல்லைத்தானே.
 
விரைவில் படித்து முடித்து வன்னிக்கோ, யாழ்ப்பாணத்துகோ போய் பெரிசாய் செய்து கிழிப்போம் என்று சொல்லிக்கொண்டே காலத்தை தள்ளலாம். அதற்கு முன் ஒரு ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடித்து நாம் தாயகத்துக்கு நிரந்தரமாய் போய் வாழவேண்டிய இடர்ப்பாடு வராமல் முட்டுக்கட்டை வராதா என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே அடுத்தவனை பற்றி கற்பனை செய்துக்கிட்டே வாழவேண்டியான் கிழவி. அதைவிட்டால்.. உங்களுக்கு வேறு வழி இல்லை.

 

உதவி செய்பவர்களை உங்களிடம் காட்டிக்கொடுக்கும் நோக்கம் எங்களுக்கில்லை. நீங்க வீணா முக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏன்னா.. உதவி செய்பவனுக்கும் நன்மை பெறுபவனுக்கும் மட்டுமே இது அவசியமான விசயம். உங்களுக்கு ஊர் வம்பளப்பு. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
துளிர்களைத் தளிர்க்க விட்டு
துயரத்துக்கு ஒத்தடம் கொடுக்கும்
துணிவினைப் பெறும் வகையில்
பணிவினைக் காட்டி நாமும்
இளையோரின் ஊக்கியாகிப்
பகுத்தே நாம் அரவணைத்தால்
பாரினில் தமிழரினம்
பகைவென்று எழுந்திடுமே!
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்  செல்வமே. வளர்க. 

 

ஜெசிக்காவின் பணம். அவர் யாருக்கும் கொடுப்பார் கொடுக்காமல் விடுவார். இங்க சிலர் ஏன் அதுக்கு குத்தி முறியினம் என்டு தான் விளங்கவில்லை. 

 

 

போராளிகள் மாவீரர்கள் ஆவதற்காகத்தானே இயக்கத்தில் இணைந்தார்கள். எனவே, அவர்களிற்கு மறுவாழ்வு தேவையில்லை. ஆனால், ஆயுதபோராட்டம் அப்படியானது அல்ல. தமிழீழம் கிடைக்கும்வரை அது தேவை. ஜெசிக்காவிற்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை ஐந்தாம் கட்ட ஈழப்போரிற்கு அர்ப்பணித்து இருக்கலாம். ஆனாலும் விஜய் ரீவி அனுமதித்தாலும் அப்படியெல்லாம் செய்வதற்கு அவர்களிற்கு உங்களைப்போல் வீரம் வேண்டுமே.

 

குதிரையின் குணம் அறிந்துதான் கடவுள் அதற்கு கொம்பு கொடுக்கவில்லை. உங்களுக்கு கருத்தியலுக்கு இது நன்றாகவே பொருந்துகின்றது.

 

:lol:  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெசிக்காவின் பணம். அவர் யாருக்கும் கொடுப்பார் கொடுக்காமல் விடுவார். இங்க சிலர் ஏன் அதுக்கு குத்தி முறியினம் என்டு தான் விளங்கவில்லை. 

 

 

 

:lol:  :lol:

 

 

ஈழத்தமிழன் ஓட்டு மூலம் போட்டியில் ஒரு கிலோ தங்கம் வென்ற ஜெசிக்காவின் பரிசு அவா உடையது அல்ல. ஒரு கிராம், இரண்டு கிராம் தங்கம் என்றாலும் என்றாலும் பரவாயில்லை. பாவம் சிறுமிதானே போனால் போகின்றது என்று விட்டுவிடலாம். ஒரு கிலோ தங்கம் என்றால் சும்மாவா? அம்மாடி அது ஆ...யிரம் கிராம் ஆயிற்றே! ஆற்றில் போட்டாலும் அளவறிந்து போடவேண்டும். ஊர்ப்பணத்தை ஜெசிக்கா குடும்பத்தினர் ஊதாரித்தனமாய் செலவளிக்க நாம் இடம் கொடோம்.

பிரபல பாடகர் & நடுவர் மனோ CMR நேர்காணல்

 

 

https://www.youtube.com/watch?v=w2SBX08Y2p0

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்..

 

இந்தப் போட்டியே... சிறுவர் வதை. இருந்தும் நடத்த அனுமதி... அதனால் அதை பற்றி தொடர்ந்து பேசிக்கிட்டிருக்க முடியாது. பெரிய ஆக்களின் வியாபாரம் அது. அவர்களை தட்டிக்கேட்க இன்னும் ஒருத்தரும் வரேல்ல.. என்ற திமிர் அவர்களுக்கு.

 

இது அப்பட்டமான.. பல கோடிகள் புரளும் விஜய் ரீவி நடத்தும்.. சிறுவர் வியாபாரம். அதை எவனுமே கண்டுக்கிறதில்ல.

 

விஜய் ரீவி மேற்குலக அகதித் தமிழர்களிடம் காசு பறிக்கும் பொறிமுறை. அதனை விளங்கிக் கொள்ளும் நிலையில்.. அகதித் தமிழர்கள் இல்லை. அவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை தான் ஊர்ப் பிரச்சனை. அதுக்கு பிறகு உல்லாசப் பிரச்சனை. அதையும் தாண்ட முடியல்ல..

 

சினிமாவை மையப்படுத்தி இயங்கும்.. விஜய் ரீவி.. எம்மவர்களின் திறமையின் அளவுகோலானது கொடுமை. அதையும் புரிய வைக்க முடியல்ல..

 

இத்தனை இயலாமைகளையும் தாண்டி சிலதை எம் எருமைமாட்டு தமிழர்களுக்கு உணர்த்தனுன்னா.. இதுதான் வழி. :lol::icon_idea:

 

போராளிகள்.. மாவீரர்கள் ஆனது உங்களின் அகதி அந்தஸ்த்துக்கு.. அந்த உண்மையோடு வாருங்கள். மிச்சத்தை விலா வாரியா அலசுவம். கிழவி வந்தமா.. வெத்திலை இடிச்சமா வாயில போட்டமா... நாலு பேரை பார்த்து துப்பினமா.... என்றில்லாமல்.. பெட்டிக்கு வெளில வந்து சிந்திக்க கற்றுக் கொள்வது நல்லம். சமூகத் தேவையது. :icon_idea::rolleyes::lol:

எந்த நாட்டு சட்டத்தில சிறுவா் வதை என்று விளக்க முடியுமா? சும்மா ஒரு பொது அறிவிற்காக தெரிஞ்சு கொள்ளலாம் என்று தான் கேட்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு சட்டத்தில சிறுவா் வதை என்று விளக்க முடியுமா? சும்மா ஒரு பொது அறிவிற்காக தெரிஞ்சு கொள்ளலாம் என்று தான் கேட்கிறன்.

 

ஒரு வருசத்துக்கு உங்க பிள்ளையின் பள்ளிப் படிப்பை நிறுத்திப் பாருங்க.. தெரியும்.  எந்த நாட்டு சட்டமென்று. நீங்க எல்லாம் மேற்கு நாடுகளில் எதுக்கு சீவிக்கிறீங்களோ..?! சாப்பிடவும் பிள்ளைப் பெறவுமா...?! :D:icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருசத்துக்கு உங்க பிள்ளையின் பள்ளிப் படிப்பை நிறுத்திப் பாருங்க.. தெரியும்.  எந்த நாட்டு சட்டமென்று. 

 

ஓ அப்ப இந்த போட்டி ஒரு வருசமா நடக்குதா? உலகம் தெரியாத பிள்ளையா இருக்கிறன். :icon_mrgreen:

 

 சம்மந்தப்பட்டவையள் மேல  இந்த மேற்குலகம் இன்னுமா வழக்கு போடாம இருக்கு.

பாவம் அவங்களுக்கு சட்டம் தொரியேலை போல.

 

நீங்க எல்லாம் மேற்கு நாடுகளில் எதுக்கு சீவிக்கிறீங்களோ..?! சாப்பிடவும் பிள்ளைப் பெறவுமா...?!  :D  :icon_idea:

 

 

எங்களால முடியுது நாங்க செய்யிறம்  :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருசத்துக்கு உங்க பிள்ளையின் பள்ளிப் படிப்பை நிறுத்திப் பாருங்க.. தெரியும்.  எந்த நாட்டு சட்டமென்று. நீங்க எல்லாம் மேற்கு நாடுகளில் எதுக்கு சீவிக்கிறீங்களோ..?! சாப்பிடவும் பிள்ளைப் பெறவுமா...?! :D:icon_idea:

 

நெடுக்கர்! இந்த குழந்தை வதையை ஏன் நீங்கள் கனேடிய நீதித் துறைக்கு உடனே அறிவிக்கவில்லை? நீங்களும் இதில் complicit போல இருக்கே? :D

 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா, இந்த நிகழ்ச்சியில் தனுஷ் சொன்னது: " நீங்கள் உங்களுக்கு தெரியாமலே ஒரு பாடலின் மூலம் , எவ்வளவு பெரிய விஷயத்தை உலகத்திற்கு சொல்லி இருக்கிறீர்கள்".

இவரின் தந்தை ஜூட் ஹாட்லி கல்லூரி பழைய மாணவராவார்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திற்கா.. விஜய் ரீவிய.. ஒபாமா பார்க்கிறாரா.. தனுஷ் தன்ர விளம்பரத்துக்கு எதுவும் சொல்வார்... இப்படிச் சொல்லும் தனுஷ் முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கேக்க ஏன் சும்மா கிடந்தார்..?! உந்த வெட்டி பில்டப் தான் ஏன்...?!  :icon_idea::rolleyes:


நெடுக்கர்! இந்த குழந்தை வதையை ஏன் நீங்கள் கனேடிய நீதித் துறைக்கு உடனே அறிவிக்கவில்லை? நீங்களும் இதில் complicit போல இருக்கே? :D
 

 

நாங்க விஜய் ரீவி மற்றும்.. ஜெசிக்காவின் எந்த நகர்வையும்.. ஆதரிக்கல்ல. அதனால்.. இதில் குற்றவாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
jessica-230215-200-seithy-news.jpg

தயவு செய்து ஈழக் குழந்தை ஜெசிக்காவின் தாயக உணர்வை கொச்சை படுத்தி விமர்சிக்காதீர்கள். தாயகத்தைப் பிரிந்து புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழரின் வலியையும் வேதனையையும்தான் அவள் தனது பாடல் வரிகளின் மூலம் உணர்வு கொப்பளிக்க வெளிப்படுத்தினாள். அவள் பாடலில் தெரிந்த சோகம் உண்மையானது. தாய் நாட்டுப் பற்று மிகுந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தை அவள்.

   

தாயகத்தைப் பிரிந்து அந்நிய நாட்டில் பிறந்த குழந்தைகளுக்குத்தான் தாய் நாட்டுப் பற்று அதிகம். அவர்கள்தான் புலம்பெயர்ந்த தேசங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டங்களை நடத்தி சர்வதேசத்துக்கு எம் தாயகத்தில் நடந்த கொடூரமான இனப் படுகொலைகளை தெரியப் படுத்தினார்கள். ஐ.நா.வை தலையிட வைத்ததும் இந்த மாணவர்களின் போராட்டமே. இவர்களுக்கு தாயகத்தை பிரிந்த வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்த உரிமை இல்லையா...?

ஜெசிக்காவின் பாடல் திறமையினால் அவளுக்கு ஒரு மேடை கிடைத்தது. அந்த மேடையை பயன்படுத்தி உலகத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழரின் வலிகளையும் தாய் மண்ணின் விடியலை எதிர்பார்க்கும் ஏக்கத்தையும் சொன்னாள். அதை உணர்ந்த நடுவர்களினதும், பார்வையாளர்களின் கண்களிலும் கண்ணீர் மல்கியது.. அதைப் பார்த்த அத்தனை புலம்பெயர்ந்த மக்களின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.. ஏன்... ? அது எங்களின் ஏக்கம்..வலி.. அதை உலகத்துக்கு சொல்ல எங்களுக்கு மேடை கிடைக்கவில்லை. ஜெசிக்காவுக்கு கிடைத்தது.

எங்களின் உணர்வுகளை ஈழக் குழந்தையாகிய அவள் இசையோடு வெளிப் படுத்தினாள். இது அவமானமா..? இது அவளது உரிமை. அவள் உடலில் ஓடுவது ஈழ இரத்தம். இந்த குழந்தையின் உணர்வை கொச்சை படுத்தி விமர்சிக்காதீர்கள். போட்டியில் அவள் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் உலகத் தமிழினத்தின் மனங்களில் நீங்கா இடம் பெற்று விட்டாள் .

அவளுக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தைக் கூட பெற்றோரை இழந்த தமிழக குழந்தைகளுக்கும் , ஈழத்தில் வாழும் குழந்தைகளுக்கும் அன்பளிப்பு செய்து விட்டாள். அவளுடைய இந்த பெரும்தன்மையையும் கொச்சைப் படுத்தப் போகின்றீர்களா..?

லண்டனில் வாழும் ஈழப் பெண் பாடகி மாயா, ஈழத்தில் நடக்கும் அவலங்களை அவள் பாடல் மூலமாக வெளிப் படுத்தியே உலகப் புகழ் பெற்ற பாடகியாகி விட்டாள். அவரைப் பற்றி அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா...? " அவள் எங்கள் ஈழக் குழந்தை , பெருமையாக இருக்கிறது " என்று சொன்னார். அவர் சொல்லவில்லையே.. " ஈழ உணர்வை விற்று லண்டனில் பிச்சை எடுக்கிறாள் " என்று. அவர்களுக்குத் தெரியும் ஈழக் குழந்தைகள் எங்கு சென்றாலும் அவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வார்கள் என்று. உண்மையான தாய் நாட்டுப் பற்றாளர்கள் , உலகம் வியக்கும் ஈழக் குழந்தைகளின் திறமையை எண்ணி பெருமைப் படுவார்கள்.நாங்களும் பெருமைப் படுவோம்.

 

வன்னி புஷ்பா,

கனடா .

 

http://seithy.com/breifNews.php?newsID=127123&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.