Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஓர் கிளர்ச்சி – அது றோவின் பின்னணியில் இடம்பெற்றது - சீற்றத்துடன் கூறினார் மகிந்த

Featured Replies

Mhai%20shout_CI.jpg

 

இலங்கையில் ஒரு கிளர்சிச் சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் ரோ (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

“கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடபகுதி மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்” எனவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான ‘டோன்’  பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

தங்காலையிலுள்ள தன்னுடைய கால்டன் இல்லத்தில் வைத்து டோன் பத்திரிகையாளருக்கு மகிந்த பேட்டியளித்தார். 

“இப்போதும் நீங்கள் ஜோதிடத்தை நம்புகின்றீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, “இப்போது நான் நம்பவில்லை” எனக் கூறி பலமாகச் சிரித்தார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸஷ, “அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு நாடுகளைப் பாருங்கள். அவர்கள் எமது நண்பர்களல்ல” எனவும் குறிப்பிட்டார்.

“பாகிஸ்தான் எமக்கு உதவியது. விஷேடமாக முஸாரப் உதவினார். இப்போது எமது நாட்டில் என்ன நடைபெற்றிருக்கின்றது எனப் பாருங்கள்? இங்கு ஒரு சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியிர் ரோ (இந்திய புலனாய்வு நிறுவனம்) இருந்துள்ளது” எனவும் மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் குற்றஞ்சாட்டினார்.

தேர்தலில் கிடைத்த தோல்வி பற்றி குறிப்பிட்ட மகிந்த ராஜபகஸஷ, “கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடமாகாண மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல வரும்புகின்றீர்களா எனக் கேட்கப்பட்டபோது, “இந்தக் கிளர்சிச் சதி விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117130/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தப்பு கணக்கு போடுறீங்கள் ராசா ,ஒரு இனத்தை அழித்தவர்கள் தங்களுடைய நலனுக்காக....நீங்கள் பதவியில் இருக்க வேணும் என்றால் இந்தியாவின் செல்லப்பிள்ளையாக மாறவேணும் ......

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருச சிம்மாசன சுகபோகத்தை, துளைத்து, 'அணில் ஓட விட்ட நாய்' மாதரி பார்த்துக் கொண்டிருக்கும் மனிதருக்கு கொலை வெறி வரத்தானே செய்யும்.

இந்தாள் திரும்பி வந்தால்... சிங்களம் இல்லாத எல்லாருக்கும் வெடி தான்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கும் இந்தியாவும் சேர்ந்து இவரை தோற்க செய்தார்கள். தமிழரும், முஸ்லிம்களூம் வாக்குகளை இவருக்கு போடவில்லை. எல்லோருக்கும் சேர்த்து ஒரு ஆப்பு கொடுத்துள்ளார் மகிந்த.

இரண்டு வருச சிம்மாசன சுகபோகத்தை, துளைத்து, 'அணில் ஓட விட்ட நாய்' மாதரி பார்த்துக் கொண்டிருக்கும் மனிதருக்கு கொலை வெறி வரத்தானே செய்யும்.

இந்தாள் திரும்பி வந்தால்... சிங்களம் இல்லாத எல்லாருக்கும் வெடி தான்...

 

 

மஹிந்த திரும்பி வந்தால் ஜோதிட சிஹாமணியின் நிலை என்ன ?  :D

சீனாவிடம் போகும் போது யோசித்து இருக்கவேண்டும் .

யாழிலும் சீனா கொள்ளை கொண்டு போகுது என்றவர்கள் தான் பெரும்பான்மை .

சீனா பொருளாதாரத்தில் இலங்கைக்கு என்ன உதவியும் செய்யலாம் அரசியல் என்று வரும்போது இந்தியாதான் .இதை இங்கு எழுதி களைத்துவிட்டேன் மகிந்தா ஒருக்கா வாசித்திருக்கலாம் . 

  • கருத்துக்கள உறவுகள்

.இதை இங்கு எழுதி களைத்துவிட்டேன் மகிந்தா ஒருக்கா வாசித்திருக்கலாம் . 

 

எங்கன்ட சனம் அந்த மனுசனுக்கு தமிழை வாசிக்க சொல்லிகொடுக்கவில்லை சொல்லி கொடுத்திருந்தால் இன்று இந்த அவலம் வந்திருக்குமா.....பல தடவைகள் நான் சொன்னான் மகிந்தாவுக்கு தமிழை வாசிக்க கற்றுக்கொடுக்கும் படி ஆனால் ஒருத்தரும் கேட்கவில்லை..... :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவனிடம் அப்பத்தை பிரிக்கக்கொடுத்ததை விடுத்து

நமக்கள்ளேயே பிரித்துக்கொள்ளலாம் என அத்தனை தமிழ்த்தலைமைகளும்  கெஞ்சின.

மகிந்தவுக்க பெரும் சந்தர்ப்பம் கிடைத்தது

இப்ப அழத என்ன பயன்....?

எல்லாம் தலைக்கு மேலே போயாச்சு (கடன், ஒப்பந்தங்கள் உட்பட)

 

 

எங்கன்ட சனம் அந்த மனுசனுக்கு தமிழை வாசிக்க சொல்லிகொடுக்கவில்லை சொல்லி கொடுத்திருந்தால் இன்று இந்த அவலம் வந்திருக்குமா.....பல தடவைகள் நான் சொன்னான் மகிந்தாவுக்கு தமிழை வாசிக்க கற்றுக்கொடுக்கும் படி ஆனால் ஒருத்தரும் கேட்கவில்லை..... :D

 

 

முதலில் புளட் கேட்கவில்லை என்றார்

பின்னர் புலிகள் வாசிக்கவில்லை  என்றார்

இப்ப மகிந்த

உலகம் வாசித்திருக்கலாம் என்கிறார்

 

ஆனால் நானும் பார்க்கின்றேன்

ஏதாவது முக்கிய நேரங்களில் நழுவி விடுகிறார்

போட்டிகளிலும் அப்படித்தான்

இதுவரை ஒரு விளையாட்டுப்போட்டியில் கூட இங்கு கலந்து கொண்டு  

முதல் பரிசை வாங்கியதாக தெரியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும் பள்ளிகூடம் போகவில்லையா

http://en.m.wikipedia.org/wiki/Mahinda_Rajapaksa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.