Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கக்கூசை (மலத்தை) கையால் கழுவலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கத்தை விட்டு பேச வேண்டிய ஒரு விடயம், ஆனாலும் பலர் முகம் சுழிப்பார்கள் என்று நினைகிறேன். நான் UKல் படிக்கும் போது, ஒரு நாள் ஒரே கடி. ஊரில் வைத்தியரிடம் போனால் மருந்து தருவார். அப்படித்தான் இங்கயும் என்று நினைத்துகொண்டு வெளிகிட்டு போனன். டாக்டர் கேட்டார், கையாலயோ கழுவினனிர் என்று. நானும் வெக்கபடாமல் சொன்னன் வடிவாக துடைச்சு போட்டு குளிக்கேக்கை சோப்பு போட்டு கழுவினனன் என்று. அவர் சொன்னார் தொடுறதை நிப்பாட்டும், கடி தானால் நிக்கும் என்று.

அன்று பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை.

உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா MP,

உந்த வேலையைத் தான் கோடிக்கணக்கான சனம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா எல்லாம் செய்யுது. என்ன, சோப்பு போட்டு சிலதுகள் கழுவாது. வசதி இல்லை.

என்னத்தை சாப்பிட்டீர்களோ, உங்களுக்கு ஏதேனும், பூச்சி விழுந்திருக்கும். டாக்குத்தர் அதுக்கு மருந்து தந்து போட்டு, இதுவும் சொல்லியிருப்பார். :D

Edited by இணையவன்

அவர் சொன்னார் தொடுறதை நிப்பாட்டும், கடி தானால் நிக்கும் என்று.

அன்று பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை.

உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.

தொடுவதால எல்லாம் பிரச்சனை வராது அப்பு.  
 
அவனவன் அதுக்குள்ள என்னென்னவோ எல்லாம் செய்றாங்கள். என்ன கிழிஞ்சா போட்டுது?
 
 9ம் ஆண்டு படிக்கைக்கில விஞ்ஞானா வாத்தியார் என்ர  வட்டாரியை வாங்கி   தன்ர நிக ஊத்தையை எடுக்க அது மஞ்சளாக வந்தது. அவர் ஏதோ சொல்லி சமாளிச்சார். அனால் எங்களுக்கு தெரியும் அது என்னவென்று.
அவருக்கு இப்ப 80 வயது தாண்டி ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒருக்கால் வாசிச்சு பாருங்கள்.
http://www.nhs.uk/news/2009/09September/Pages/EcoliQA.aspx
“How can I prevent E. coli?” என்ற கேள்வியின் விடையை முக்கியமாக வாசியுங்கள்.
கக்குசு கழுவும் போது, நக இடைவெளியில் தங்கும் கிருமிகளை சோப்பு போட்டு கழுவினால் போகாது. அவை கையால் சாப்பிடும்போது வாய்க்குள் போகும். இது என் விளக்கம்.
தண்ணி தட்டுபாடு காரணமாக ஆபிரிக்காவில் உள்ளவர்கள் கல்லாலும், குளிர் தண்ணி காரணமாக சீனாவில் உள்ளவர்கள் உலர்ந்த இலைகளாலும், ஐரோப்பாவில் பேப்பரும் பாவித்து ஆரம்ப காலத்தில் துடைத்தார்கள். ஆசியாவில் கையும் தண்ணியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடுவதால எல்லாம் பிரச்சனை வராது அப்பு.  
 
அவனவன் அதுக்குள்ள என்னென்னவோ எல்லாம் செய்றாங்கள். என்ன கிழிஞ்சா போட்டுது?
 
 9ம் ஆண்டு படிக்கைக்கில விஞ்ஞானா வாத்தியார் என்ர  வட்டாரியை வாங்கி   தன்ர நிக ஊத்தையை எடுக்க அது மஞ்சளாக வந்தது. அவர் ஏதோ சொல்லி சமாளிச்சார். அனால் எங்களுக்கு தெரியும் அது என்னவென்று.
அவருக்கு இப்ப 80 வயது தாண்டி ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்.

படிப்பிச்ச வாத்தியாருக்கு மரியாதையை குடுப்பது நல்லது.

யாழ்ப்பாண தண்ணியில் மல தோற்று இருப்பதாக சில மாதங்கள் முன் செய்தியில் பார்த்தனான்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மலம் என்பது உங்கள் உடலில் இருந்து வெளியேறும் சமிபாட்டுக்கு மேலதிகமான உணவுக் கூறுகள் மற்றும் சில இரசாயனக் கழிவுகளின் கலவை. அது தவறுதலாக கையில் படுவதால்.. கைக்கு சேதாரம் வரும் என்றால்.. உடலுக்குள் அது இருக்கும் போதும் சேதாரம் தான். ஆனால்.. சில கழிவு இரசாயனங்கள்.. வெளித் தோலில் பட்டால்.. அலேர்ஜி வர வாய்ப்புள்ளது. கிருமித் தோற்றுக்களுக்கும் வாய்ப்புள்ளது என்பதால்.. மலத்தை கையால் கழுவுவதை தவிர்ப்பது.. ருசு பாவித்தாலும் கூட கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்வதும் அவசியம். மலத்தை விட மலசல கூடத்தில் பல நுண்ணங்கள் வாழ்கின்றன. அதில் எங்கு தொட்டாலும்.. கைகளை நன்கு சுத்தப்படுத்துவது நல்லம்.  :icon_idea:  :)

*** படிப்பிச்ச வாத்தியாருக்கு மரியாதையை குடுப்பது நல்லது.

வேற என்ன நிகதுக்கை மஞ்சளாக வரும்?  காலமை சரக்கு கறி (ஒருவித மஞ்சள் ) சாப்பிட்டார்  என்று சொல்லுவியள் போல.
 
அவர் அதை பார்த்து முகம் சுழிச்சதை நாம் எல்லோருமே அவதானித்தோம்.
 
மற்றபடி அவர் எப்பவுமே ஒரு மதிப்புகுரியவரே- அவரது கற்றல் திறமைக்கு.

மலத்தை விட மலசல கூடத்தில் பல நுண்ணங்கள் வாழ்கின்றன. அதில் எங்கு தொட்டாலும்.. கைகளை நன்கு சுத்தப்படுத்துவது நல்லம்.  :icon_idea:  :)

உண்மை. உது தெரியாமல் சிலர் அதுக்குள்ளே இருந்து போன் கதைக்கினம். பிறகு அதை அங்கே  அக்கம் பக்கத்தில வைக்கினம்- கழுவுற நேரம்.

Edited by இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலம் என்பது உங்கள் உடலில் இருந்து வெளியேறும் சமிபாட்டுக்கு மேலதிகமான உணவுக் கூறுகள் மற்றும் சில இரசாயனக் கழிவுகளின் கலவை. அது தவறுதலாக கையில் படுவதால்.. கைக்கு சேதாரம் வரும் என்றால்.. உடலுக்குள் அது இருக்கும் போதும் சேதாரம் தான். ஆனால்.. சில கழிவு இரசாயனங்கள்.. வெளித் தோலில் பட்டால்.. அலேர்ஜி வர வாய்ப்புள்ளது. கிருமித் தோற்றுக்களுக்கும் வாய்ப்புள்ளது என்பதால்.. மலத்தை கையால் கழுவுவதை தவிர்ப்பது.. ருசு பாவித்தாலும் கூட கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்வதும் அவசியம். மலத்தை விட மலசல கூடத்தில் பல நுண்ணங்கள் வாழ்கின்றன. அதில் எங்கு தொட்டாலும்.. கைகளை நன்கு சுத்தப்படுத்துவது நல்லம்.  :icon_idea:  :)

இது ஒரு தவறான புரிதல். உடலில் எத்தனையோ வகையான கிருமிகள் உள்ளன. சில நன்மையானது சில தீமையானது. உதாரணம் சில கிருமிகள் உணவை சமிபாடடைய உதவி செய்கின்றது. எனினும் ஓவ்வொன்றும் அவை இருக்கும் இடத்தில் இருந்தால் ஆபத்தானது அல்ல.

அத்துடன் உடம்புக்கு கூடாத கிருமிகளை உடம்பு மலத்துடன் வெளியேற்றும். அவை மீண்டும் உடம்புக்குள் சென்றால் பாதிப்பானது.

உங்கட கருத்து மனித மலத்துக்கு மட்டுமா?
 
நாம் சாணியை வெறும் கையால் பயன்படுத்துகிறோமே? மெழுகிவிட்டு அதில் படுக்கிறோம்?

அத்துடன் உடம்புக்கு கூடாத கிருமிகளை உடம்பு மலத்துடன் வெளியேற்றும். அவை மீண்டும் உடம்புக்குள் சென்றால் பாதிப்பானது.

மும்பை போன்ற இடங்களில் இருக்கும் சேரியில் அதற்கு பழக்கபட்ட சனங்கள் நிறைய இருகினமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு சாணி சலம் என்பன இந்தியாவில் மருந்தாக குடிக்கிறார்கள். அதை பற்றி எனக்கு அறிவு இல்லை. சாணி நல்லதொரு வெப்ப தடுப்பான், குளிர்மையை கொடுக்கின்றபடியால் அதனால் சுவர் பூசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தவறான புரிதல். உடலில் எத்தனையோ வகையான கிருமிகள் உள்ளன. சில நன்மையானது சில தீமையானது. உதாரணம் சில கிருமிகள் உணவை சமிபாடடைய உதவி செய்கின்றது. எனினும் ஓவ்வொன்றும் அவை இருக்கும் இடத்தில் இருந்தால் ஆபத்தானது அல்ல.

அத்துடன் உடம்புக்கு கூடாத கிருமிகளை உடம்பு மலத்துடன் வெளியேற்றும். அவை மீண்டும் உடம்புக்குள் சென்றால் பாதிப்பானது.

உடம்பு பல வழிகளில் கிருமிகளை வெளியேற்றுகிறது. சுவாசம்.. தும்பல்.. உமிழ் நீர்.. சிறுநீர்..மலம் என்று அது பல வழிகளில் அமையும்.

ஒருவர் தன் சொந்த மலத்தை தொடுவதால்.. மீள் கிருமித் தொற்றுக்கு ஆளாகிறார் என்பதை விட.. கிருமிகள் உடலை விட்டு வெளியேறும் அளவிற்கு மீளப் பெருக வாய்ப்பாகும்.. என்று சொல்லலாம். 

பொதுவாக ஒருவரின் மலம் இன்னொருவரில் பல பக்க விளைவுகளை தொற்றுக்களை உண்டாக்கவல்லது. அதே அதற்குரியவரிடத்தில்.. அதன் விளைவு அந்தளவுக்கு பெரிதாக அமையாது.

ஏலவே குறிப்பிட்டது போல.. மலத்துடன் வெளியேறும் சில கழிவு இரசாயனங்கள்.. தோலுக்கு அலேர்ஜி ஆகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு பிரச்சனையில்லை ,நாங்க ஊரியிலயிருந்தே  டிசு தான் பாவிக்கிறது . :D

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு பிரச்சனையில்லை ,நாங்க ஊரியிலயிருந்தே  டிசு தான் பாவிக்கிறது . :D

பூவரசம் குழை.. தேமா மரக் குழை.. தேக்கு மரக் குழை.. (இவை காய்ஞ்சும்.. பச்சையாவும்).. பழைய பேப்பர்.. இது தானே.. நீங்க ஊரில பாவிச்ச ருசு.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நகம் ஒழுங்காக வெட்ட வேண்டும்.  வலது கையால் நீரூற்றி இடது கை கட்டை விரல் சுன்டு விரல் தவிர்த்து நடு மூன்டு விரல்கலால் கழுவ வேண்டும். (சுரண்டக் கூடாது) . பின்பு சவர்க்காரம் போட்டு கைகளை நன்றாக தேய்த்துக் கழுவினால் போதும்.  தலைமுறை தலைமுறையாக இதைத்தான் செய்கின்றோம். ஒரு கடியுமில்லை.

எமது நாட்டில் 365 நாளும் பச்சைத் தண்ணியில் குளிக்கலாம் எல்லாம் செய்யலாம். மேலைத் தேய நாடுகளில் 75 வருடத்துக்கு முன் என்று பார்த்தாலே குளீருக்குள்ளும் ,பனிக்குள்ளும் தண்ணீரே உறைந்திருக்கும். வளவுக்குள் குந்தி இருக்கவே ஒரு தில் வேணும்.

( இங்கேயே சில கிராமத்து வீடுகளில் மண்வெட்டி கொண்டு காலைக் கடன் முடிக்க காட்டுக்குள் போவினம்).  அப்ப அவர்கள் பேப்பர்தான் பாவிக்க வேண்டும். இப்ப அப்படியல்ல , எல்ல இடமும் சுடுநீர் தாராளம். இப்ப இவர்கள் கட்டும் மல கூடத்தில் நீரால் கழுவுவதற் கேற்ற மாதிரி வளைந்து குடுக்கக் கூடிய பைப் பொருத்துகின்றனர்.  முன்பு விசயம் தெரியாமல் முல்லுக் கரண்டியோடு மல்லுக் கட்டியவர்கள் , எமது  விழாக்களுக்கு வரும்போது நாம் கரண்டிகள் வைத்தாலும் அவற்றை ஒதுக்கி விட்டு பருப்பும் சோறும் குழைத்து வெட்டினம்.

எப்படியும் சிறிது காலத்தில் அவர்கள் திருந்தி விடுவார்கள் . நாம்தான் கொழுக்கட்டையையும் கரண்டியால் கொத்திக் கொண்டிருக்கின்றோம்..!  :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு பிரச்சனையில்லை ,நாங்க ஊரியிலயிருந்தே  டிசு தான் பாவிக்கிறது . :D

நாங்களெல்லாம் அந்தக்காலத்திலேயே கைகளுக்குக் கிளவ்ஸ் போட்டுக் கழுவும் ஆக்கள் தெரியுமோ. :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பூவரசம் குழை.. தேமா மரக் குழை.. தேக்கு மரக் குழை.. (இவை காய்ஞ்சும்.. பச்சையாவும்).. பழைய பேப்பர்.. இது தானே.. நீங்க ஊரில பாவிச்ச ருசு. :lol::D

ஊமத்தம் கொட்டைய விட்டுட்டியலே. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஊமத்தம் கொட்டைய விட்டுட்டியலே. :lol::D

இதில பனங்கொட்டை நல்ல சாமான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊமத்தம் கொட்டைய விட்டுட்டியலே. :lol::D

இதைப் பாவிக்கக் காணேல்ல.

மிச்ச எல்லாம் பாவிக்க கண்டிருக்கிறோம்.

அதுவும் தாங்கள் பாவிச்சிட்டு.. அடுத்த வீட்டு வளவுக்க வேலி.. மதில் தாண்டித் தான் எறிவார்கள் நம் தமிழர்கள்.

அதை அவிட்ட விட்ட நாய் கவ்விக் கொண்டு வந்து.. தின்னும். என்னடா நாய் குழை தின்னுது என்று.. பார்த்தால்.... அதுவும் குளிப்பாட்டிட்டு.. காய வைச்சிட்டு.. பாவம் உல்லாசமா உலா வரட்டும் என்று விட்டால்.. நாய் உந்த வேலையை செய்யும். இதுக்காக பக்கத்து வீட்டு ஆக்களை கூப்பிட்டு பேசவா முடியும்.  :D  :icon_idea:

நம் தமிழர்களோடு வாழ தனிக் கலை பொறுமை சகிப்புத் தன்மை.. அவசியம்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குத்திப் பனை சுத்தி...

ஊரில, வெட்டின பனையின், மிச்சமிருக்கிற குத்திப் பனைக்குப் பின்னால் காலைல குந்தி இருப்பார் சாம்பசிவத்தார்.

யாரும் வந்தால், வாற பக்கத்துக்கு ஏத்த மாதிரி, எழும்பாமல், இடது அல்லது வலது காலை நகர்த்தி, நகர்த்தி குத்திப் பனையை ஒரு சுத்து சுத்தி வருவார்.

கடைசில, பனம் கொட்டை தான். :lol::D

சுழல் கக்கூசை பற்றி குறைச்சு கதைக்ககூடாது . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பூ! எவ்வளவு பேர் கருத்தெழுதினம். நானும் திரி விட்டுத்தான் பார்க்கிறன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவரசம் குழை.. தேமா மரக் குழை.. தேக்கு மரக் குழை.. (இவை காய்ஞ்சும்.. பச்சையாவும்).. பழைய பேப்பர்.. இது தானே.. நீங்க ஊரில பாவிச்ச ருசு. :lol::D

என்னத்தை பாவிச்சாலும் கடைசியா தண்ணியை காட்டாட ஒரு திருப்தி வராது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பாவிக்கக் காணேல்ல.

மிச்ச எல்லாம் பாவிக்க கண்டிருக்கிறோம்.

அதுவும் தாங்கள் பாவிச்சிட்டு.. அடுத்த வீட்டு வளவுக்க வேலி.. மதில் தாண்டித் தான் எறிவார்கள் நம் தமிழர்கள்.

அதை அவிட்ட விட்ட நாய் கவ்விக் கொண்டு வந்து.. தின்னும். என்னடா நாய் குழை தின்னுது என்று.. பார்த்தால்.... அதுவும் குளிப்பாட்டிட்டு.. காய வைச்சிட்டு.. பாவம் உல்லாசமா உலா வரட்டும் என்று விட்டால்.. நாய் உந்த வேலையை செய்யும். இதுக்காக பக்கத்து வீட்டு ஆக்களை கூப்பிட்டு பேசவா முடியும். :D:icon_idea:

நம் தமிழர்களோடு வாழ தனிக் கலை பொறுமை சகிப்புத் தன்மை.. அவசியம். :lol:

நீங்கள் ஒரு தமிழன். ஆனால் தமிழன் மீது ஏன் இந்த வெறுப்பு. எனக்கு ஒரு பெரியவர் சொன்னார், புலிகள் போராடினம் எங்கட சனத்தின் விடிவுக்கு. ஆனால் சுதந்திரம் கிடைச்சு நாலு மாதத்தில் திரு மேதகு பிரபாகரனுக்கு விளங்கும் இந்த கேவலங் கேட்ட சனத்துகாகவா உயிரை கொடுத்து போராடினம் என்று. தன் உறவை கூட தள்ளி போட்டு தான் மேலே போகும் அளவுக்கு சுயநலம் கொண்ட கூட்டம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூ! எவ்வளவு பேர் கருத்தெழுதினம். நானும் திரி விட்டுத்தான் பார்க்கிறன்!

மொழிகளில் தமிழுக்கு தான் வெட்கம் உண்டு. சிலருக்கு கக்குசு எனும் தமிழ் சொல்லை பாவிக்க வெட்கம். அதுக்கு வெட்கமே இல்லாத ஆங்கிலத்தை பாவிப்பார்கள். பல உதாரணம் உண்டு.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு பிரச்சனையில்லை ,நாங்க ஊரியிலயிருந்தே  டிசு தான் பாவிக்கிறது . :D

சுத்தம் சுகம் தரும்  :D

பூவரசம் குழை.. தேமா மரக் குழை.. தேக்கு மரக் குழை.. (இவை காய்ஞ்சும்.. பச்சையாவும்).. பழைய பேப்பர்.. இது தானே.. நீங்க ஊரில பாவிச்ச ருசு.  :lol:  :D

இதைத்தானே சொல்ல வாறியள்.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.