Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியா செல்லும் குடியேற்றவாசிகள் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்! - புதிய சட்டம் வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Tower-bridge-cam-100315-400-seithy.jpg

பிரித்தானியாவில் வசிப்பதற்கு அல்லது தொழில் புரிவதற்கு வரும் குடியேற்றவாசிகள், தாம் கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பது அந்நாட்டின் புதிய கடும் சட்ட விதிகளின் கீழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டிலிருந்து தாம் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அத்தாட்சிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கையளிப்பது அவசியமாகும்.

   

பிரித்தானியாவில் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்பு விதிகளை இவ்வாறு மேலும் கடுமையாக்குவதன் மூலம் மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதை தடுக்க முடியும் என அந்நாட்டு அமைச்சர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

 

விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த நடைமுறையின் கீழ், பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள், தமக்கு எதிரான கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் சான்றிதழை தத்தமது நாட்டு அதிகாரிகளிடமிருந்து பெறவேண்டியுள்ளது.

 

ஆனால் இந்த புதிய நடைமுறைக்கு 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதற்கு சாத்தியமற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் விதிவிலக்குப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://seithy.com/breifNews.php?newsID=127984&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாசமறுப்பு.

கிழக்கு ஐரோப்பாவின் சகல, கிரிமினல் கோஸ்டிகளும் உங்க வந்து, காப்புளிகள், எல்லாம், அப்பாவிகள், ஃதங்கப்பவுன், எண்டு சொல்ல வச்சிட்டாங்கள்.

உதை விட்டுப் போட்டு இவையள் ஐரோப்பாவுக்கு வெளியாளயாம்.??

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் குடிவரவு தரவுகளை பார்த்தால்.. இந்தியர்களும்.. பாகிஸ்தானியர்களும் தான் அதிகம்.. நிரந்தர விசாக்களைப் பெறுகின்றனர்.

 

எம்மவர்கள் அகதி அந்தஸ்த்தில் கில்லாடிகள். 2014 இல் 6ம் இடத்தில் உள்ளனர்.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நிறுத்தப்பட்டுள்ள Skill Migration மூலம், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, நைஜீரியா, பங்களாதேஸ் எண்டு கணக்க உள்ளார வந்திட்டினமே.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாலும் எனி நிரந்தரமாகக் குடியேறும் சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்தால்...?!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வருகுதோ இல்லையோ, இந்த Life in the UK exam மிலயே கணபேர் சேடம் இழுக்கினம்.

கஸ்டமாக்கிப் போட்டினம். உங்க ஊத்த ஜக்கட்டோட திரியிற கோஸ்டியள், அங்க, சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் எண்டு, வேகாத வெய்யிலுக்க, பிளேசர், உள் பொக்கற் பிரிட்டிஸ் பாஸ்போட் எண்டு பழைய ஆக்கள் காட்டின எடுப்பைக் காட்டலாம் எண்டு நினைச்ச ஆக்கள் பாடு தான் கஸ்டம். :D

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வருகுதோ இல்லையோ, இந்த Life in the UK exam மிலயே கணபேர் சேடம் இழுக்கினம்.

கஸ்டமாக்கிப் போட்டினம். உங்க ஊத்த ஜக்கட்டோட திரியிற கோஸ்டியள், அங்க, சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் எண்டு, வேகாத வெய்யிலுக்க, பிளேசர், உள் பொக்கற் பிரிட்டிஸ் பாஸ்போட் எண்டு பழைய ஆக்கள் காட்டின எடுப்பைக் காட்டலாம் எண்டு நினைச்ச ஆக்கள் பாடு தான் கஸ்டம். :D

 

உந்த கென்சவேட்டிவ் கொண்டு வந்த.. புதிய பாடத்திட்ட.. பரீட்சையை 15 நிமிசத்துக்க முடிச்சது. சென்ரர்காரன் கேட்டான்.... ஆர் யு சுவர் என்று.. (ஏன்னா பரீட்சைக்கான கால அளவு 45 நிமிசம்).. ஜெஸ் என்று சொல்ல.. குறைஞ்சது 20 நிமிடமாவது பரீட்சை செய்யனும்.. இரும் ஜங்மான்.. ஐ கம் பக் என்று போனார். 20 நிமிசம் கழிய வந்து.. பரீட்சையை முடிச்சு வைச்சிட்டு.. கம்பியூட்டரில் ஐடி எல்லாம் மீள சரி பார்த்திட்டு.. பாஸ் என்றார். உதெல்லாம்.. கஸ்டம் என்றால்.. யு கேக்கு வார குறூப்பை நினைச்சா.. எப்படி தான் உதுங்க எல்லாம் நாட்டுக்கு பொருண்மிய நன்மையோ...?! :D  :)

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கென்சவேட்டிவ் கொண்டு வந்த.. புதிய பாடத்திட்ட.. பரீட்சையை 15 நிமிசத்துக்க முடிச்சது. சென்ரர்காரன் கேட்டான்.... ஆர் யு சுவர் என்று.. (ஏன்னா பரீட்சைக்கான கால அளவு 45 நிமிசம்).. ஜெஸ் என்று சொல்ல.. குறைஞ்சது 20 நிமிடமாவது பரீட்சை செய்யனும்.. இரும் ஜங்மான்.. ஐ கம் பக் என்று போனார். 20 நிமிசம் கழிய வந்து.. பரீட்சையை முடிச்சு வைச்சிட்டு.. கம்பியூட்டரில் ஐடி எல்லாம் மீள சரி பார்த்திட்டு.. பாஸ் என்றார். உதெல்லாம்.. கஸ்டம் என்றால்.. யு கேக்கு வார குறூப்பை நினைச்சா.. எப்படி தான் உதுங்க எல்லாம் நாட்டுக்கு பொருண்மிய நன்மையோ...?! :D:)

அட, நீங்கள் ஆரு?, உங்கட விலாசம் என்ன?. உங்களுக்கு 15 நிமிசமே மெத்திப் போச்சு. ஒரு ஜஞ்சு நிமிசத்தில எடுத்தெறிஞ்சு போட்டெல்லே வந்திருக்கோணும்.

என்.....ன, நெடுக்கர், ச....

:D:lol:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அட, நீங்கள் ஆரு?, உங்கட விலாசம் என்ன?. உங்களுக்கு 15 நிமிசமே மெத்திப் போச்சு. ஒரு ஜஞ்சு நிமிசத்தில எடுத்தெறிஞ்சு போட்டெல்லே வந்திருக்கோணும்.

என்.....ன, நெடுக்கர், ச....

:D:lol:

 

அது விலாசம் இல்லை. கடினம் ஆக்கிறம் என்ற பரீட்சையை.. அந்த நாட்டின் நடைமுறைகளோடு ஒன்றின் இலகுவாக முடிக்கலாம் என்பது தான் கருத்து.

 

வாற குறூப் தங்களுக்குள் வாழ மட்டும் கற்றுக் கொள்வதால்.. பிரித்தானியா பற்றி அறியாமல் பெயில் விடுவதே அதிகம். 

 

உடன நெடுக்கர்.. யார்.. விலாசம்.. அடிப்படை தமிழ்புத்தி.. வந்திட்டுது பாருங்க. இதுதான் பிரச்சனை.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உடன நெடுக்கர்.. யார்.. விலாசம்.. அடிப்படை தமிழ்புத்தி.. வந்திட்டுது பாருங்க. இதுதான் பிரச்சனை. :lol::icon_idea:

அட, நான் என்ன வெள்ள எண்டே சொல்லுறன்?

விடுங்க நெடுக்கர், சும்மா, டமாசு. :lol:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 வருடத்திற்கு மேல் ஒருவர் மாணவர் விசாவில் இருந்தால் அவருக்கு இங்கிலாந்தில் வதிவிட உரிமை கிடக்கும். அதுபோல் 14 வருடங்களுக்கு மேல் ஒருவர் சட்டவிரோதமாக வாழ்ந்திருந்தாலும் அத்தகையோருக்கும் நிரந்தர வதிவிடத்திற்கு விண்னப்பிக்கலாம். 
என நினக்கின்றேன். இத்தகையவர்கள் police report எங்கிருந்து கொண்டு வருவார்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

Police clearance ???

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடத்திற்கு மேல் ஒருவர் மாணவர் விசாவில் இருந்தால் அவருக்கு இங்கிலாந்தில் வதிவிட உரிமை கிடக்கும். அதுபோல் 14 வருடங்களுக்கு மேல் ஒருவர் சட்டவிரோதமாக வாழ்ந்திருந்தாலும் அத்தகையோருக்கும் நிரந்தர வதிவிடத்திற்கு விண்னப்பிக்கலாம்.

என நினக்கின்றேன். இத்தகையவர்கள் police report எங்கிருந்து கொண்டு வருவார்கள்?

EU க்கு வெளியே, புதிதாக விசா கோருபவர்களுக்கு, அவர்களது பெயரில் குற்றப் பதிவுகள் ஏதும் இல்லை என அந்தந்த நாட்டு பொலீசார் வழங்கும் சான்றிதழ் கோரப்படுகிறது.

பிரித்தானியாவினுள்ளும், எவ்வளவு நாள் இருந்தாலும், கிரிமினல் ரெக்கோட் இருக்கிறதா, இல்லையா என்று சொல்வது கடினமானது இல்லையே.

£10 கொடுத்து Report எடுக்கலாம். போலீஸ்காருக்கு (Police database) நம்மள பத்தி தெரியாது என்று எழுத்தில தந்தா, அது தான் நல்ல ரிப்போட்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்று நிரூபிக்க முடியாத குடியேற்றவாசிகளான தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியாக்குள் புகுந்து பின்னர் இலண்டன்வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை என்பார்கள். படிக்க வந்து அப்படியே குந்தியிருந்தவர்கள் படிக்காதவர்கள் எல்லாம் வந்து பிரித்தானியாவுக்கும் மகாராணிக்கும் இருந்த மரியாதையை கெடுத்துப்போட்டார்கள் என்று மூக்கால் அழுவார்கள்!

கடந்த 3 வருடத்தில் மாத்திரம் சனத்தொகை அரை மில்லியன் குடியேற்றவாசிகளால் (2/3 இல் கிழக்கு ஐரோப்பியர்கள்) அதிகரித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதின பலர் சமீப காலத்தில் பல்கலைக்கழகப் பக்கம் தலை வைச்சுப் படுக்கேல்ல என்று விளங்குது.

 

தற்போதைய அதாவது 2010 ஏப்ரலுக்கு பின்னான மாணவர் விசா அல்லது அதன் கீழான நீட்டிப்பு பெற்ற எவரும்.. கல்விக் காலம் முடிய தொடர்ந்து தங்கிப் படிப்பதில் கட்டுப்பாடு உள்ளது. இளமாணிக் கல்வி.. முதுமாணி கல்வி உட்பட.. தொடர்ச்சியாக ஒருவர் 5 வருடங்கள் இருந்துவிட்டால்.. அவர் சொந்த நாடு திருப்பி மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போதுள்ளது. கலாநிதி பட்டம் பெற வருபவர்களுக்கு உச்ச அளவாக.. 3 - 7 ஆண்டுகள் வரை மட்டும் விசா வழங்கப்படும். அதுவும்... கல்வியில் முன்னேற்றம் தொடர்பில் பல்கலைக்கழகம் தொடர்ந்து அவதானிக்க வேண்டும். 

 

தற்போதைய நடைமுறைகளின் கீழ் ஒரு மாணவர் கல்வி கற்கும் நோக்கற்று.. பிரித்தானியாவில் தங்க விருப்பம் கொன்டு செயற்படுகிறார் என்று கண்டால்..அவரின் விசாவை ரத்துச் செய்யக் கோரும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

பிரித்தானியாவில்.. மாணவர்களுக்கு ஒரேயடியா 10 வருட விசா கொடுப்பதில்லை. புதுப்பிக்கும் காலத்தில் உள்ள விசா நடைமுறைகளுக்குள் தான் விசா புதுப்பிக்கப்பட்ட பின் மாணவர்கள் உள்வாங்கப்படுவர்.

 

2014 ஏற்பாட்டின் படி மாணவர்கள் விசா நிராகரிக்கப்பட்டால்.. நீதிமன்றம் செல்ல முடியாது. உள்நாட்டு அமைச்சு மீளாய்வுக்கு மட்டும் நிராகரிப்பின் தன்மை சார்ந்து அனுமதி அளிக்கப்படும். (அசைலம் என்றால்.. அப்பீல்.. அப்பீலுக்கு அப்பீல்.. அதுக்கும் அப்பீல்.. அதுமுடிய.. புதிய விண்ணப்பம் என்று சும்மா காலத்தைக் கடத்தி.. ஓசி விசா எடுத்து விட்டால்.. ஒரு செலவும் இன்றி குடியுரிமை விண்ணப்பம் வரை ஓசியில் பயணிக்கலாம். அப்படி அல்ல மாணவர்களுக்கான விசா நடைமுறைகள்.)

 

மாணவர்கள்... நிரந்தர விசா எடுக்கும் முறையிலும் கட்டுப்பாடுள்ளது. தற்போது.. மாணவர்களாக இருந்து.. கல்வி கற்று.. உச்ச தகமை குடிவரவு விசா பெற்றவர்கள் தான் கல்வி சார்ந்து நிரந்தர விசா பெற முடியும். அதுவும் எதிர்காலத்தில் இல்லாமல் போகப் போகிறது. 

 

அதனால் தான் படிக்க என்று வரும் நம்மவர்கள் எல்லோரும் ஏறும் இலகு ஓடமான அசைல ஓடத்தில் ஏறி.. உல்லாசம் அனுபவிக்க நினைக்கிறார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம்.

 

ஆனால் யாழில் பலர் இன்னும் அப்டேட் இன்றி.. பழைய பஞ்சாங்கம் படிச்சுக் கொண்டிருக்கிறார்கள்.  :lol:  :icon_idea:

Edited by nedukkalapoovan

பிரிட்டிஸ் மகாராணி  பேரனுகள் தப்பிக்க வாய்ப்பு  இருக்கு  அகதிகள் பாவம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அசைலத்தில் உள்ளவர்களில்.. பலர் உண்மையான அகதி கிடையாது. உங்களைப் போன்றவர்கள் கூட. வெளிநாட்டு வாழ்க்கைக்காக... ஆயுதம் தூக்கிட்டு.. காட்டுக்க.. போட்டிட்டு ஓடியந்தாக்களில்.. நீங்களும் ஒருவர் போலவே தெரிகிறது. வந்து புலி பிடிச்சது.. ஆமி அமுக்கினது.. என்று கட்டுக்கதை எழுதிறது பெரிய விசயமா என்ன.   :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எவ்வளவு கட்டுப்பாடுகள்.

10, 15 வருசம் முன்னால் இங்க மாணவர் விசாவில் வந்தவர்ள் கூட, தனிய வேற கள்ள பெயரில் அகதி அடிச்சு, காசு எடுத்து இருக்கினம்.

இப்ப எவ்வளவு கட்டுப்பாடுகள்.

10, 15 வருசம் முன்னால் இங்க மாணவர் விசாவில் வந்தவர்ள் கூட, தனிய வேற கள்ள பெயரில் அகதி அடிச்சு, காசு எடுத்து இருக்கினம்.

அது  சரி கள்ளமட்டை  இழுத்தவன் எல்லாம் இப்ப பெரிய ஆக்கள் அண்ணே விடுங்க   :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எவ்வளவு கட்டுப்பாடுகள்.

10, 15 வருசம் முன்னால் இங்க மாணவர் விசாவில் வந்தவர்ள் கூட, தனிய வேற கள்ள பெயரில் அகதி அடிச்சு, காசு எடுத்து இருக்கினம்.

 

அசைலம் என்கிற.. பொன் வாத்து ஓசில கிடைக்குதென்றால்.. விடுவார்களா நம்மவர்கள்.  :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசைலத்தில் உள்ளவர்களில்.. பலர் உண்மையான அகதி கிடையாது. உங்களைப் போன்றவர்கள் கூட. வெளிநாட்டு வாழ்க்கைக்காக... ஆயுதம் தூக்கிட்டு.. காட்டுக்க.. போட்டிட்டு ஓடியந்தாக்களில்.. நீங்களும் ஒருவர் போலவே தெரிகிறது. வந்து புலி பிடிச்சது.. ஆமி அமுக்கினது.. என்று கட்டுக்கதை எழுதிறது பெரிய விசயமா என்ன.   :lol:  :icon_idea:

 

 நெடுக்கர் நீங்கள் டொல்மேச்சராயும் வேலை செய்யிறியள் எண்டு நினைக்கிறன்.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.