Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி இலங்கை வருகை தொடர்பான செய்திகள்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி MAR 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

modi-tna-300x200.jpgசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இன்றுமாலை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

tna-modi.jpg

 

http://www.puthinappalakai.net/2015/03/13/news/4379

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக அரசமைப்பின் 13 திருத்தத்திற்கு அப்பாலும் செல்லவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இருவரும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை நான்கு ஓப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.
 
இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் வீசா பெறத் தேவையில்லை என்பதை உறுதிசெய்யும் உடன்படிக்கையிலும், சுங்கத்துறை தொடர்பான மற்றும் அபிவிருத்தி தொடர்பானபரஸ்பர உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுவது தொடர்பான உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.
 
இலங்கையில் ரவீந்திரநாத் தாகூர் அருங்காட்சியகத்தை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஓப்பந்தம் கைசாத்தாகியுள்ளது.
 
இதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடனான கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள மோடி, மீனவர்கள் விவகாரத்தில் வாழ்வாதர மற்றும் மனிதாபிமான ரீதியிலான விடயங்கள் தொடர்பு பட்டுள்ளதால் அவற்றின் அடிப்படையிலேயே இவற்றிற்கு தீர்வை காண முயலவேண்டும்,
 
அதேவேளை இந்த விவகாரத்திற்கு நீண்ட கால தீர்வை காண்பது அவசியம். இரு நாட்டு மீனவர் அமைப்புகளும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ள கூடிய பரஸ்பர தீர்வை காண்பதற்காக கூடிய விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது அவசியம். இரு நாட்டு அரசாங்கங்களும் இதனை முன்னெடுக்கவேண்டும்.
 
திருகோணமலையை பெட்ரோலிய தளமாக மாற்றுதற்கு உதவுவதற்கு இந்தியா தயாராகவுள்ளது.
 
சம்பூர் மின்நிலையம் விரைவில் ஆரம்பிக்கப்படுவது குறித்து ஆர்வமாகவுள்ளேன், இலங்கை தமிழர்கள் உட்பட அனைவரினதும் அபிலாஷைகளை உள்ளடக்கும் எதிர் காலத்தை உருவாக்கும் உங்களது முயற்சிகளிற்கும், சமத்துவம், நீதி சமாதானம் ஆகியவை ஐக்கிய இலங்கைகுள் நிலவுவதற்கும் இந்தியா உங்களோடு உறுதுணையாக உள்ளது.
 
அரசமைப்பின் 13 வது திருத்த்தை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவம், அதற்கு அப்பாலும் செல்வதும் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளுக்கு பங்களிப்பை வழங்கும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கும் - நரேந்திர மோடி:-

இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான இலங்கையுடன் வர்த்தக உறவுகளைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்தமை பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்தார் எனவும் இவ்வாறே நட்பு நாடுகள் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார உறவுகளின் அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையில் வலுவான உறவுகளைப் பேண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய வலயத்தின் பெற்றோலிய மையமாக திருகோணமலையை மாற்றியமைக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் திகதி முதல் ஒன் அரைவல் வீசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லிக்கும் கொழும்பிற்கும் இடையில் எயார் இந்தியா விமான சேவை நேரடி விமான சேவைகளை நடாத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117539/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

"13, 13 என்று எங்கள் விடயத்தில் தலையிட வேண்டாம்." கூட்டமைப்பின் தலைவர்கள் ஆணித்தரம். அதிர்ச்சியில் உறைந்தார் மோடி.

- நமது உல்ட்டா நிருபர் :D

  • கருத்துக்கள உறவுகள்
dc28bb92b7646e960eab83f415f23323.jpg

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். 

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரே சந்தித்து கலந்துரையாடினர்.
 
அந்தக் குழுவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
gfdgff.jpg
 

 

  • கருத்துக்கள உறவுகள்

77d9180c5aff91187adf8b8d07b6c53f.jpg

இலங்கையில் தீவிரவாதம் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.  இதுவே மாற்றத்திற்கான நேரம். எனவே எதிர்கால பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியது இலங்கையின் கடமை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம்  மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இன்று பிற்பகல்  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எனக்கு பெருமையளிக்கிறது. பிராந்தியத்தில் ஜனநாயகம் நடைபோட பாடுபடுவோம். 
 
இலங்கை மக்களுக்கு இந்தியா மக்களின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
 
எதிர்கால இந்தியாவிற்கான எனது கனவு அண்டை நாடுகளுக்கும்மானது தான். இலங்கையில் தொழில் முனைவோரும், அறிவார்ந்தமக்களும் உள்ள நாடு. இந்த பகுதியில் நாம் நம்மை எப்படி அடையாளப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே வளர்ச்சியடையும். 
 
அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதன் மூலம் நாம் வலுவடையமுடியும். இந்தியாவில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது. 
எனினும் இலங்கையில் தீவிரவாதம் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவே மாற்றத்திற்கான நேரம். எதிர்கால பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியது இலங்கையின் கடமை. 
 
இலங்கையின் ஒருமைப்பாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தில் இலங்கை பங்கெடுத்துக்கொள்ளலாம். போட்டிகள் நிறைந்த உலகில் இணைந்து செயல்படுவது அவசியம். 
 
இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இருநாடுகளை போக்குவரத்தில் இணைப்பதன் மூலம் வளர்ச்சி காணலாம். இதனால் இலங்கையச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வந்தவுடன், விசா வழங்கும் வசதியும் அறிமுகப்பபடுத்தப்படும். 
 
இருநாடுகளின் பாதுகாப்பும் பிரிக்க முடியாதது. இருநாடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து இருக்க முடியாது. 
 
கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். சுதந்திரமான இறையான்மை மிக்க நாடுகளாக இந்தியாவும் இலங்கை ஓரணியில் செயற்படுகின்றன.
 
 
நல்ல நட்பு நாடான இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்போம். அத்துடன்  இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
மேலும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்  என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை வைத்து தான் இலங்கை வந்துள்ளேன். 
 
இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டால் இலக்கை விரைந்து அடையமுடியும்  என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை, மோடியின்  இன்றைய பேச்சு கடந்த கால வரலாறுகளை சுட்டிக்காட்டியே உரையாற்றியிருந்தார். அத்துடன்  நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் என்ற பெருமையினையும்  பெற்றுள்ளார். 
 
இந்தவகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிநாட்டவர்களில் மோடியும்  ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

http://onlineuthayan.com/News_More.php?id=415773916313105385

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு 380 மில்லியன் டொலர்  வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது என பாராளுமன்றத்தில் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்களத் தீவிற்கு பாலம் ஒன்றையும் அமைப்போம் எனவும் குறிப்பிட்டார்.D012544525874.jpg

இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

 

பிரதமர் மோடியை, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். கடந்த 1987ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்திற்கு பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

 

இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய பிரதமர்,

இலங்கைக்கு வருகை தருவது பெருமை அளிக்கிறது. இந்த நாடாளுமன்றம் ஆசியாவின் பழமையான நாடாளுமன்றங்களில் ஒன்று. புத்த கயாவில் இருந்து ஆசிகளை எடுத்து வந்துள்ளேன்.  

 

இரு நாடுகளிடையே கலாச்சார பரிமாற்றங்கள் இருப்பது பெருமையளிக்கிறது. இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் இலக்கை விரைந்து அடைய முடியும். இந்தியாவும் இலங்கையும் நில எல்லையால் இணைக்கப்படவில்லை. இருநாடுகளும் நில எல்லையால் இணைக்கபடாவிட்டாலும் இரண்டும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். 

 

தெற்காசியாவில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. கடுமையான தீவிரவாத தாக்குதல்களை நாம் எதிர்கொண்டு சமாளித்து வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கை என்ன செய்யவேண்டும் என்பதை இலங்கைதான் முடிவு செய்யவேண்டும். 

 

அண்டை நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் உறுதியான பொருளாதர நண்பனாக இலங்கையால் இருக்க முடியும். 

 

இராமாயண இதிகாசத்துடன் இலங்கைக்கு தொடர்பு உள்ளது. அமைதி சகிப்புத் தன்மையை மகேந்திரர் சங்கமித்திரை ஆகியோர் இலங்கைக்கு கொண்டு வந்தனர். வேளாங் கண்ணியும் நாகூர் தர்காவும் இலங்கையை இந்தியாவுடன் இணைக்கின்றன. அனைத்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசுகளின் கடமை.  

 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாடுகளின் பலம். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தேர்தல் ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. 

இருநாடுகளுக்கு இடையே தொடர்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வது இருநாடுகளின் பொறுப்பு ஆகும். 

 

இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு 380 மில்லியன் டொலர்  வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு துறையில் இலங்கையுடனான உறவை இந்தியா முக்கியத்துவமாக கருதுகிறது. சிங்களத்தீவிற்கு ஒரு பாலம் அமைப்போம் என்ற பாரதியார் வரிகளை கூறி தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார். 

 

 

http://www.virakesari.lk/articles/2015/03/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

article_1426249779-DSC_0717.jpg

மோடியின் வருகையை கண்டித்து, கொழும்பு தெவட்டஹா பள்ளிவாயலுக்கு முன்பாக ஜூம்மா தொழுகைக்கு பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டிலே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படங்கள்: நிசால் பதுகே)

article_1426249801-DSC_0724.jpg

article_1426249814-DSC_0726.jpg

article_1426249827-DSC_0737.jpg

article_1426249851-DSC_0748.jpg

 

http://www.tamilmirror.lk/141624

10392279_794956543926861_547408667250030


11046655_794956623926853_198785358229690


11054436_794956657260183_355446591361040


Indian prime minister Narendra Modi visit parliament today.(Photos by Noharathalingam)

 

இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு 380 மில்லியன் டொலர்  வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது என பாராளுமன்றத்தில் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்களத் தீவிற்கு பாலம் ஒன்றையும் அமைப்போம் எனவும் குறிப்பிட்டார்.

 

 

ஐயோ ஐயோ!!!
 
மோடி சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று பாராளுமன்றத்திலேயே கூறிவிட்டார். பாரதி பாவம் தெரியாமல் பாடிவிட்டான் (சீ துரோகி). சரி பாலம் அமைத்தாலும் தலைமன்னார்தான் அருகிலுள்ளது. அப்ப தமிழ்ஈழம் அம்பேலா?
 
எதற்கும் நாங்கள் எங்கள் எதிர்ப்பை மோடி ஜரோப்பா வரும்போது கறுப்புக் கொடியுடன் பதிவு செய்வோம்.
 
எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

article_1426216399-cartoon2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜயோ ஜயோ!!!
 
மோடி சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று பாராளுமன்றத்திலேயே கூறிவிட்டார். பாரதி பாவம் தெரியாமல் பாடிவிட்டான் (சீ துரோகி). சரி பாலம் அமைத்தாலும் தலைமன்னார்தான் அருகிலுள்ளது. அப்ப தமிழ்ஈழம் அம்பேலா?
 
எதற்கும் நாங்கள் எங்கள் எதிர்ப்பை மோடி ஜரோப்பா வரும்போது கறுப்புக் கொடியுடன் பதிவு செய்வோம்.

 

 

முஸ்லிம்கள் மோடியை இனம் கண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முசுலீம்களுக்குத்தான் மோடி எதிரி. எமக்கென்னாச்சு? நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கவேண்டும். வேணுமெண்டால் மோடியின் இந்து வெறியை எம்சார்பாக திருப்ப முயலவேண்டும்.

ஜீவன் - உங்கள் நக்கல் ரொம்ப புதிசு. நல்லாயிருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
“இலங்கையில் தீவிரவாதம் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது”
 
“சிங்களத் தீவிற்கு பாலம் ஒன்றையும் அமைப்போம்”
 
“புத்த கயாவில் இருந்து ஆசிகளை எடுத்து வந்துள்ளேன்”

 

 

 
உன்ஹோனே ஹமாலா கியா ஜயேகா (மச்சி தொலைந்தார்)
  • தொடங்கியவர்

இந்திய விமானப்படை உலங்குவானூர்திகளிலேயே தலைமன்னார், யாழ். செல்கிறார் மோடி MAR 14, 2015 | 1:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Indian-Mi-17B-5-300x200.jpgசிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது நாளான இன்று யாழ்ப்பாணம், தலைமன்னார், அனுராதபுர ஆகிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

அவரதும், அவரது பாதுகாப்பு அதிகாரிகளினதும் பயணங்களுக்கென இந்திய விமானப்படையின் மூன்று உலங்கு வானூர்திகள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாட்டுக்காக சிறிலங்கா வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன், யாழ்ப்பாணத்துக்கு சிறிலங்கா விமானப்படையின் விமானங்களிலேயே பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு சீன அதிபரின் பயணத்தின் போதும், 2009இல் ஐ.நா பொதுச்செயலரின் பயணத்தின் போதும், சிறிலங்கா விமானப்படை விமானங்களே பயன்படுத்தப்பட்டன.

எனினும், இந்தியப் பிரதமரின் பயணங்களுக்காக இந்திய விமானப்படை உலங்குவானூர்திகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்றுகாலை 11 மணியளவில் தலைமன்னாருக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்தியாவின் உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட மதவாச்சி – தலைமன்னார் இடையிலான தொடருந்துப் பாதையில் தொடருந்துச் சேவையை ஆரம்பித்து வைப்பார்.

அதையடுத்து, பிற்பகல் 12.30 மணியளவில், உலங்குவானூர்தி மூலம், யாழ். மாநகரசபை மைதானத்தில் சென்று தரையிறங்கும் மோடி, யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடுவார்.

அதைத்தொடர்ந்து, கீரிமலைக்குச் செல்லும் இந்தியப் பிரதமர், அங்கு நகுலேஸ்வரம் சிவன் கோவிலில் வழிபாடுகளை செய்த பின்னர், கீரிமலைப் பகுதியில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட வீடு ஒன்றைப் பயனாளியிடம் கையளிப்பார்.

யாழ்ப்பாணம் செல்லும் இந்தியப் பிரதமருக்கு, வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, மதிய விருந்து அளித்து கௌரவிப்பார்.

அதையடுத்து, யாழ் பொதுநூலகம் அருகே இந்திய உதவியுடன், அமைக்கப்படவுள்ள கலாசார நிலையத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுவார்.

இதேவேளை, இந்தியப் பிரதமரின் பயணத்துக்காக சிறிலங்கா வந்துள்ள இந்திய விமானப்படையின் எம்.ஐ 8 உலங்கு வானூர்திகள் நேற்றுமுன்தினம், யாழ்ப்பாணத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன.

1990ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியப் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர், இந்திய விமானப்படையின் உலங்கு வானூர்திகள் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...03/14/news/4390

 

 

அரசுடன் முரண்டாத மூலோபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும் – கூட்டமைப்புக்கு மோடி அறிவுரை MAR 14, 2015 | 2:44by புதினப்பணிமனைin செய்திகள்

sam-modi-300x200.jpgசிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் முரண்படாத வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாயங்களில் மாற்றங்களைச் செய்ய முன்வர வேண்டும் என்றும், பொறுமையாக விடயங்களைக் கையாளுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருப்தி வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது, கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார்.

அதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.

அப்போது இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் என்று இந்தியப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான காலஅவகாசத்தை வழங்குவது அவசியம்.

கடந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்போக்கினை கொண்டிருந்தது.

புதிய அரசாங்கத்தின் மனநிலையில் சில மாற்றங்களை என்னால் உணரமுடிகிறது.

ஆகவே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன், கடந்த காலத்தில் மேற்கொண்ட அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய காத்திரமான அணுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது என ஆலோசனையையும் எமக்கு வழங்கினார்” என்று குறிப்பிட்டார்.

sam-modi.jpg

இதனிடையே, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்  பிரேமச்சந்திரன்,

“இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படுகின்ற போது வட-கிழக்கு இணைப்பு என்பது ஒரு முக்கிய விடயம். இந்திய- சிறிலங்கா உடன்பாடு என்பது வட- கிழக்கு இணைப்பு என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அந்த உடன்பாடும் இடைநிறுத்தப்பட்டது.

வடகிழக்கு என்பது தமிழ் மக்களுடைய வரலாற்று பூர்வமான தாயகப்பிரதேசம். ஆகவே இனப்பிரச்சினை தீர்வுக்கு வடகிழக்கு இணைப்பு என்பது முக்கியமாகும்.

மக்கள் முழுமையாக குடியேற்றப்பட வேண்டும். சொற்ப அளவிலேயே மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இன்று தான் அதுவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகுதி எப்போது நடக்கும் என்பது தெரியாது ஆகிய விடயங்களை உள்ளடக்கிய கருத்துக்களை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்து விளக்கினோம்.

அதன்போது கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் சிறிலங்கா அதிபரை சந்தித்த போது,அவர் காணி மற்றும் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்.

அவர் எனக்கு உறுதியளித்ததாக நான் சொல்ல மாட்டேன் ஆனால் இவை தொடர்பில் அவர் ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்.

இது ஒரு புதிய அரசாங்கம் ஆகவே நீங்கள் அவர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பொறுமை தேவை.

முன்னர் ஏனைய அரசாங்கங்களோடு அணுகியதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தோடும் அணுகக்கூடாது.

இந்த அரசாங்கம் பல மாற்றமான கருத்துக்களை கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலோபாயக் குழு இவை தொடர்பில் விரிவாக ஆலோசித்து புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசவேண்டும்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருகின்றது தானே  என  அவர் எம்மிடத்தில் வினவியபோது நாம் ஆம் என பதிலளித்தோம்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செயற்பட வேண்டுமென எமக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தியப்பிரதமர் சிறிலங்காவின் புதிய அரசு மீது நிறைவான நம்பிக்கை வைத்திருப்பதை எம்மால் உணரமுடிந்தது.

இந்திய பிரதமர் சிறிலங்காஅரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக இலங்கை அரசு செயற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

http://www.puthinapp...03/14/news/4393

 

BLUE BIRD

 

  • தொடங்கியவர்

அம்பாந்தோட்டையில் மோடியின் பெயரில் கிராமம்!

இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமர் ரணில் அறிமுகப்படுத்தினார். 

அதன் போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ இலங்கையின் புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பாக இந்திய பிரதமரிடம் விளக்கியுள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமர் ரணில் அறிமுகப்படுத்தினார். அதன் போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ இலங்கையின் புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பாக இந்திய பிரதமரிடம் விளக்கியுள்ளார்.

குறித்த வீடமைப்பு திட்டத்திற்கு இந்தியா தனது ஆதரவை வழங்க வேண்டுமாறு அமைச்சர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீ நரேந்திர மோடி என்ற பெயரில் கிராமம் ஒன்று உருவாக்கவுள்ளது தொடர்பாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதற்கு இந்திய பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1426288009&archive=&start_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்


f960470c5ddbfda55aba417731fa9841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.