Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்வாழ் தமிழர் தம் தாய்நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள்: பேராசிரியர் இரா.சிவசந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்வாழ் தமிழர் தம் தாய்நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள்: பேராசிரியர் இரா.சிவசந்திரன்

9d63d9d4-4274-439c-a783-f4376fba1adf1.jp

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தில் புலம் பெயர் வாழ் கல்வியாளர் சிலருடனான கலந்துரையாடல் ஒன்று 07.03.2015 சனிக்கிழமையன்று நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆற்றிய உரையாடலின் போது புலம்பெயர் தமிழர் தம் தாய் நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றிய பல்வகைப்பட்ட சிந்தனைகளை முன்வைத்தார்.

புலம்பெயர் வாழ் தமிழர்கள் தம் தாய்நிலத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனை அரசியல் ரீதியாகவும் பொருளாதாரம் என்ற பிரிவினுள் விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்ற அடிப்படையிலும் அணுகவேண்டும். சமூகம் என்ற பிரிவினுள் கல்வி, உயர்கல்வி, கலை கலாசாரம், சமயம், சுகவாழ்;வு, வேலைவாய்ப்பு போன்றனவாகப் பார்க்கப்படலாம்.

1. புலம்பெயர் வாழ் தமிழர்கள் தாம் வாழும் நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துதலின் ஊடாக அந்த நாட்டை எமது அரசியல் பிரச்சனைகளில் ஈடுபட தூண்டமுடியும். அந்நாடுகளின் உள்ளுர் அரசியலிலும் நாடாளுமன்ற அரசியலிலும் ஈடுபடுவதன் மூலம் எமது பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்துவதோடு அவர்கள் வாழும் நாட்டின் மக்களுக்கும் எமது நியாயப்பாட்டை உணர்த்தமுடியும்.

உதாரணமாக:- கனடாவில் வாழும் செல்வி.சிற்சபேசன், திருவாளர்கள் டேவிட் பூபாலபிள்ளை, ஹரி ஆனந்தசங்கரி, நீதன் போன்றவர்கள் கனடிய அரசியலில் ஈடுபடுவதன் மூலம் எமது பிரதேசத்தில் நிலவும் ஜனநாயகம், நீதி, மனிதநேயம் பற்றி எடுத்துரைப்பதை காண்கின்றோம். இதனை ஏனைய புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மவர் முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

2. புலம்பெயர் நாட்டில் வாழும் மக்கள் இரு நாட்டு குடியுரிமை பெற முயற்சிக்க வேண்டும். இலங்கையில் சென்ற ஆட்சியின் போது இது இறுக்கமாக இருந்தாலும் புதிய ஆட்சி மாற்றத்தில் ஒரு விட்டுக்கொடுப்பு தெரிகிறது. எனவே இதனைப் பயன்படுத்தி இரு நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்கு நிறுவன ரீதியாக முயற்சிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் எமது குடித்தொகை எண்ணிக்கை, வாக்குப்பலம் என்பன அதிகரிக்கும்.

3. புலம்பெயர் தமிழர்கள் இங்கு விவசாய பொருளாதார அபிவிருத்தியிலும், கைத்தொழில் அபிவிருத்தியிலும், வர்த்தக அபிவிருத்தியிலும், கல்வி வளர்ச்சியிலும், மருத்துவ துறைகளில் மேம்பாட்டுக்கும் முதலீடுகளை செய்யமுடியும். இம்முதலீடுகளை நாம் நேரடி முதலீடுகள் எனவும், இணைந்த முதலீடுகள் எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். இணைந்த முதலீடு எனும்போது புலம்பெயர் மக்களும் இலங்கையில் வாழ்வோரும் இணைந்து முதலீடு செய்வதும் ஒரு வகையாகும். தென் இலங்கை முதலீட்டாளர்களுடன் இணைந்தும் முதலீடு செய்யப்படலாம். மத்திய அரசுடன் இணைந்தும், மாகாண உள்ளுராட்சி சபையுடன் இணைந்தும் இம்முதலீடுகள் செய்யப்படலாம். சில பாரிய முதலீடுகள் பல் தேசிய கம்பனிகளுடன் இணைந்து செய்யப்படுவதும் சாத்தியமே.

4. சமூக மேம்பாடு என்று சொல்லும்போது கல்வித்துறையில் ஆரம்ப, இடைநிலைக் கல்விக்கும், உயர் நிலைக்கல்விக்கும் இவர்கள் பெருமளவு உதவலாம். பாடசாலைக் கல்லூரி மட்டங்களில் புலம்பெயர்ந்து வாழ்வோர் - பெருமளவு உதவி செய்கின்ற போதிலும் அவர்கள் இங்குள்ள பாரிய கல்லூரிகளுக்கே பெருமளவு உதவுகின்றார்கள். பிரதேசத்திலுள்ள சிறு பாடசாலைகள் கவனிக்கப்படுவதில்லை. இதில் ஒரு சமமான வளர்ச்சிப்பரம்பல் தேவை. மேலும் இங்குள்ள பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் போன்றவற்றை கிராம மட்டங்களிலும் கற்பிப்பதற்கு உதவிகள் செய்யலாம். உயர் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாதுள்ளோருக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று கொடுப்பதுடன் வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசிலையும் வழங்கமுடியும்.

5. மருத்துவ துறையைப் பொறுத்த வரையில் தனியார் மருத்துவமனைகளை உருவாக்கலாம். இம்மருத்துவமனைகளில் புலம்பெயர் வாழ் மருத்துவர்கள் தமது விடுமுறை காலத்துக்கு வருகை தந்து உதவலாம். முக்கியமாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் உதவிகள் பெருமளவுக்கு தேவைப்படுகின்றன.

6. எமது தாய்நிலத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு உதவி செய்யலாம். இங்குள்ள ஆழமற்ற குடாக் கடல்களை நீச்சல் தடாகங்கள் போன்று சுத்தப்படுத்தி பாதுகாப்பு வலைகளை அமைத்து உருவாக்கமுடியும். ஆழமற்ற குடாக்கடல்களில் காணப்படுகின்ற கடல் தாவரங்களின் சூழலைப் பேணுவதன் மூலம் சுற்றுலாவுக்கான அழகைப் பேணுவதோடு அதனை பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கும் முயற்சிக்கலாம்.

7. கிராமங்கள் தோறும் நூல் நிலையங்களையும், சிறுவர் பூங்காக்களையும் அமைத்து வழங்கலாம். ஏலவே உள்ள சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்றவற்றிற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் இதனை அபிவிருத்தி செய்யலாம். புலம்பெயர் தமிழர்கள் தம் தம் பாரம்பரியத்தை ஊர்களில் நிலை நிறுத்துவதற்காக தம் தாய் தந்தையரின் பெயரில் இவ்வாறான நற்கருமங்களை ஆற்றமுடியும்.

உதாரணமாக:- ஒருவர் தனது தாய் தந்தையரின் பெயரில் உருவாக்கி பூரணப்படுத்தி கொடுக்கும் சிறுவர் பூங்கா, நூல்நிலையம் என்பனவற்றை அவ்வூர் அமைந்துள்ள பிரதேச சபையின் நிர்வாகத்திடம் கையளிக்கலாம்.

விவசாயச் செய்கை இங்கு இன்றும் முறையாக ஒழுங்குபடுத்தப்படாது குடும்ப அலகு நிர்வாகத்தினுள்ளேயே காணப்படுகின்றது. இதனை மாற்றி கூட்டுறவு அடிப்படையில் விவசாயப் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள், மீன்பிடித் தொழிலுக்கான பண்ணைகள் என்பவற்றை உருவாக்கி அங்கு பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக இவற்றில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகளவு வழங்கமுடியும்.

8. எந்த பொருளாதார சமூக அபிவிருத்திக்கும் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறுவது முக்கியமானதாகும். கட்டிடங்களை உருவாக்குவதற்கு மாத்திரமன்றி கைத்தொழில், விவசாய, மீன்பிடி வர்த்தகத்துறைகளுக்கான அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குவதற்கும் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படுவது இன்றியமையாததாகும். இங்கு துறைசார்ந்த நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் இல்லை. இதனை உள்ளுர் நிபுணர்களைக் கொண்டும், புலம்பெயர் மக்களிடம் உள்ள நிபுணர்களைக் கொண்டும் அமைக்கலாம். இந்நிறுவனத்தின் தொடர்புகளுக்;கு தகவல் தொழில்நுட்ப முறைமைகளை பயன்படுத்துதல் சாத்தியமே.

உதாரணமாக:- Skype வலையமைப்பு முறை மூலம் நிபுணத்துவ ஆலோசனை வழங்குவோரும் பயனாளிகளும் கலந்துரையாடமுடியும்.

9. புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு வலைத்தளங்களை உருவாக்கி நடத்தி வருகின்ற போதிலும் அவை பெருமளவு தமிழர் தம் அரசியல் சார்ந்ததாகவே விளங்குகின்றன. பெருமளவு வலைத்தளங்கள் அறிவு ரீதியாக பிரச்சினைகளை அணுகாது உணர்வு ரீதியாகவே அணுகுவதை அவதானிக்கமுடிகிறது. உண்மையில் பொருளாதார, சமூக, கல்வி மேம்பாட்டை மையப்படுத்திய அபிவிருத்தி சார் விடயங்களே எமக்குத் தேவை.

இறுதியாக புலம்பெயர் வாழ் மக்கள் ஒவ்வொருவரும் தன் தாய் மண்ணின் முன்னேற்றத்திற்கு ஒரு தர்மகாரியம் செய்யவேண்டும் என தீர்மானிப்பார்களே ஆயின் எமது தாய் நிலம் வளம்பெற அவர்களின் அந்த தீர்மானமே போதுமானதாக இருக்கும்.

சமீப காலங்களின் புலம்பெயர் தமிழர்களால் பெருமளவுக்கு கோயில்கள் அழகான முறையில் கோபுர வசதியுடன் கட்டப்பட்டு வருவது போல பொருளாதார, கல்வி, சமூக மேம்பாட்டுக்காகவும் இவர்கள் தீவிரமாக உழைப்பார்களேயாயின் எமது பிரதேசத்தில் பல இன்னல்கள் விரைவில் தீரும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=9d63d9d4-4274-439c-a783-f4376fba1adf

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பயனுள்ள முறையில் உரையாடுவோம்.

பத்தி 4 இல் சொல்லப்பட்ட கல்வி அபிவிருத்தி பற்றிப் பார்ப்போமாயின்.

பிரபல பாடசாலிகளின் வளர்சிக்கே புலம்பெயர் பணம் செலவாகிறது.

எல்லா பாடசாலை புலம்பெயர் சங்கங்களும் ஒரு அமைப்பை உருவாக்கி, தத்தம் சங்க வருவாயில் 10% த்தை ஒரு fund ஆக்கி அதை பிந்தங்கிய பாடசாலைகளுக்கு செலவழிக்கலாமே? யாழ் இந்து, பரியோவான், மாணவர்கள் இணைந்து ஒரு முன் மாதிரியாக தொடங்கலாம்.

படத்தில் முன்னுக்கு கழுத்து பட்டியுடன் இருப்பவர் எழுத்தாளர் மாலனா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4. சமூக மேம்பாடு என்று சொல்லும்போது கல்வித்துறையில் ஆரம்ப, இடைநிலைக் கல்விக்கும், உயர் நிலைக்கல்விக்கும் இவர்கள் பெருமளவு உதவலாம். பாடசாலைக் கல்லூரி மட்டங்களில் புலம்பெயர்ந்து வாழ்வோர் - பெருமளவு உதவி செய்கின்ற போதிலும் அவர்கள் இங்குள்ள பாரிய கல்லூரிகளுக்கே பெருமளவு உதவுகின்றார்கள். பிரதேசத்திலுள்ள சிறு பாடசாலைகள் கவனிக்கப்படுவதில்லை. இதில் ஒரு சமமான வளர்ச்சிப்பரம்பல் தேவை. மேலும் இங்குள்ள பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் போன்றவற்றை கிராம மட்டங்களிலும் கற்பிப்பதற்கு உதவிகள் செய்யலாம். உயர் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாதுள்ளோருக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று கொடுப்பதுடன் வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசிலையும் வழங்கமுடியும்.

சில காரியங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆங்கில மொழிக் கல்வி மிகவும் அவசியம். 4 வயதில் இருந்து A/L வரை முழுமையாக ஆங்கில மீடியத்தில் கல்வி கொடுக்கப்படும் பள்ளியும் உள்ளது.

இது மானிப்பாயில் ஜேர்மன் NGO ஒன்றின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி-

Edited by sabesan36

இணைப்பிற்கு நன்றி சபேசன் .

ஒளிப்பதிவின் பின்னணிக்குரல் விறுவிறுப்பு / புலனாய்வு ரிஷியினது போல் இருக்கின்றது.  :D  

  • கருத்துக்கள உறவுகள்

சோதி வேம்படி லேனில் இருக்கும் ஸ்கூலா இது சபேசன்?

இதே போல் அதே பகுதியில் சாயி சமித்தியும் ஒரு ஆங்கில மொழி கல்விக்கூடத்தை நடத்துவதாய் சொன்னார்கள். வெளியில் இருந்து பார்த்த போது நன்றாகத்தான் இருந்தது.

சர்வதேச பாடசாலைகளிறிக்கு எல்லாரும் போக முடியாது. யாழில் கூட மானிப்பாய், நல்லூர் பகுதிகளை விட்டு - நாகர் கோவில், குடத்தனை பக்கம் அல்லது சுழிபுரப் பக்கமாக போகும்போதும் பல பிந்தங்கிய அரச பாடசாலைகளை காணலாம்.

காசுள்ளவர்களுக்கு, பொஸ்கோ, செஞொன்ஸ், இந்து, இப்படி பள்ளிக்கு போக, டியூசன் எடுக்க வசதி இருக்கும். அட்மிசன் தவறினாலும் சர்வதேச பாடசாலைகள் இருக்கு. ஆனால் எல்லா விதத்திலும் எழைகளே மென்மேலும் வாய்ப்பற்றுப் போகிறனர்.

பேரசிரியர் சொல்வது இதைத்தான். எல்லா மட்டங்களும் சமசீராய் முன்னேற வேண்டும்.

யாழில் ஆவது பரவாயில்லை. வன்னி, மட்டு, திருமலையின் கிராமப்புறங்களில் நிலைமை படுமோசம்.

ஆனால் புலத்தில் பாடசாலைச் சங்கங்கள் ஹில்டனில் கெட்டுகெதர் வைப்பதில் செலவழிக்கும் காசை மீதம் செய்தாலே எவ்வளவோ செய்யலாம்.

90% உங்கள் பாடசாலைக்கு கொடுத்து விட்டு 10 ஐ மற்றயவைக்கு கொடுங்கள் என்பதே நான் சொல்வது.

அர்ஜூன் அண்ணா, பலருடனும் தொடர்பில் இருப்பவர் நீங்கள். குறிப்பாக யாழ் இந்து சங்கத்துடன். நீங்கள் ஏன் இந்த யோசனையை அவர்களிடம் பிரேரிக்க கூடாது.

முதல் கட்டமாக யாழ் மாவட்ட ரீதியில் தொடங்கலாம். இந்து, பரியோவான், உடுவில், யாழ்ப்பாணக்கல்லூரி, ஹாட்லி இவற்றை சேர்த்து,மாவட்ட ரீதியில் முதலில் தொடங்கலாம். பின்னர் ஏனைய மாவட்ட பாடசாலைகளை உள்வாங்கி விஸ்தரிக்கலாம்.

அர்ஜூனுக்கு மட்டுமில்லை மாணவர் சங்கங்களின் தொடர்பிலுள்ள அனைவர்க்கும் இது பொருந்தும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோதி வேம்படி லேனில் இருக்கும் ஸ்கூலா இது சபேசன்?

இதே போல் அதே பகுதியில் சாயி சமித்தியும் ஒரு ஆங்கில மொழி கல்விக்கூடத்தை நடத்துவதாய் சொன்னார்கள். வெளியில் இருந்து பார்த்த போது நன்றாகத்தான் இருந்தது.

சர்வதேச பாடசாலைகளிறிக்கு எல்லாரும் போக முடியாது. யாழில் கூட மானிப்பாய், நல்லூர் பகுதிகளை விட்டு - நாகர் கோவில், குடத்தனை பக்கம் அல்லது சுழிபுரப் பக்கமாக போகும்போதும் பல பிந்தங்கிய அரச பாடசாலைகளை காணலாம்.

காசுள்ளவர்களுக்கு, பொஸ்கோ, செஞொன்ஸ், இந்து, இப்படி பள்ளிக்கு போக, டியூசன் எடுக்க வசதி இருக்கும். அட்மிசன் தவறினாலும் சர்வதேச பாடசாலைகள் இருக்கு. ஆனால் எல்லா விதத்திலும் எழைகளே மென்மேலும் வாய்ப்பற்றுப் போகிறனர்.

பேரசிரியர் சொல்வது இதைத்தான். எல்லா மட்டங்களும் சமசீராய் முன்னேற வேண்டும்.

யாழில் ஆவது பரவாயில்லை. வன்னி, மட்டு, திருமலையின் கிராமப்புறங்களில் நிலைமை படுமோசம்.

ஆனால் புலத்தில் பாடசாலைச் சங்கங்கள் ஹில்டனில் கெட்டுகெதர் வைப்பதில் செலவழிக்கும் காசை மீதம் செய்தாலே எவ்வளவோ செய்யலாம்.

90% உங்கள் பாடசாலைக்கு கொடுத்து விட்டு 10 ஐ மற்றயவைக்கு கொடுங்கள் என்பதே நான் சொல்வது.

சோதி வேம்படி லேனுக்கு அடுத்தது. மேதேர்ஸ் லேன். 

சாயி சமித்தி நடத்தும் பள்ளி இதற்கு அடுத்த காணியில் உள்ளது. அது தமிழ், இது ஆங்கில பள்ளி. 

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும்.. பேராசிரியர் அவர்கள்.. ஊரில பாதுகாப்பான குடிநீருக்கு முதலில வழி சொல்லிப்போட்டு மிச்சத்தை அடுக்கி இருக்கலாம்.

இவரும் மைத்திரி ஆட்சியில்.. தேனும் பாலும்.. ரன் பண்ணுது என்ற நம்பிற ஆள் போல. 

ஈழத் தாயகத்தின் அபிவிருத்தியில்.. புலம்பெயர் தமிழர்கள் என்றில்லை.. உலகத் தமிழினம் ஒட்டுமொத்தமாக கூட்டிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி.. அறிவு.. ஆலோசனைகள்.. திட்டங்களை அமுல்படுத்துவதே சிறந்தது.

உலகத் தமிழினம் என்பது.. போரை சாட்டி உலகெங்கும்..ஓடிய தமிழர்கள் உட்பட.. தமிழகம்.. சிங்கப்பூர்... மலேசியா.. மொரிசியஸ்.. தென்னாபிரிக்கா.. என்று பரந்து வாழும் தமிழ் சமூகம் ஒவ்வொன்றுக்குள்ளும்.. ஒவ்வொரு ஆளுமைகள்.. பொதிந்துள்ளன. அவற்றை ஒருங்கிணைக்கக் கூடிய வாய்ப்பிருந்தும்.. செய்யாமல்.. வெறுமனவே புலம்பெயர் தமிழர்கள் என்று குண்டுச் சட்டியில்.. குதிரை ஓட்ட ஏன் இவர் விரும்புறார்..?!!  :)  :rolleyes:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பயனுள்ள முறையில் உரையாடுவோம்.

பத்தி 4 இல் சொல்லப்பட்ட கல்வி அபிவிருத்தி பற்றிப் பார்ப்போமாயின்.

பிரபல பாடசாலிகளின் வளர்சிக்கே புலம்பெயர் பணம் செலவாகிறது.

எல்லா பாடசாலை புலம்பெயர் சங்கங்களும் ஒரு அமைப்பை உருவாக்கி, தத்தம் சங்க வருவாயில் 10% த்தை ஒரு fund ஆக்கி அதை பிந்தங்கிய பாடசாலைகளுக்கு செலவழிக்கலாமே? யாழ் இந்து, பரியோவான், மாணவர்கள் இணைந்து ஒரு முன் மாதிரியாக தொடங்கலாம்.

வணக்கம் கல்வி எங்கள் மூலதனம் - கல்விசார் கருத்தரங்கும் கலந்துரையாடலும் நோக்கம்: எமது தாயகப் பிரதேசத்தின் கல்விசார் பிரச்சனைகளை ஆராய்வதன் மூலமும், அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை கலந்தாலோசிப்பதன் மூலமும், எமது தாயகத்தில் ஒரு வளமான கல்வியியற் சூழ்நிலையை உருவாக்க உதவுதல். இன்று எமது தாயகத்தில் பல்வேறு கவன ஈர்ப்பான்களாலும், தாயக வாழ்வாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளாலும், கல்விப் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.நாம் 1985 தொடக்கம் 2014 வரையான பல்கலைக்கழக தெரிவு புள்ளிவிபரங்களை திரட்டி அறிக்கையாக வடிவமைத்துள்ளோம். அதனை உங்களுடன் பகிர்வதன் மூலம், உங்கள் பாடசாலை மற்றும் உங்களுடன் சார்ந்த கல்விச் சமூகத்திடம் இந்த செய்தி சென்றடையும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்காக நாங்கள் இந்த கல்வியியற் கருத்தரங்கினை ஒழுங்கமைத்து சிட்னியின் சகல தமிழர் தாயக பழைய மாணவர் சங்கங்களை அழைத்திருக்கின்றோம். நீங்களும் இதில் பங்குபற்றி இந்த கருத்தரங்கினை வளமாக்க வேண்டும் என்பதே எமது அவா. காலம்: 20 மார்ச் 2015 நேரம்: மாலை 7:00 மணி முதல் 9:45 மணி வரை இடம்: யாழ் நிகழ்ச்சி கூடம், பெண்டில்ஹில் (Yaarl Function Centre, 221A Wentworth Avenue, Pendle Hill NSW 2145 (Opposite Pendle Hill Station)) உங்கள் சங்கத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று பேர் பங்குபற்றலாம். தயவுசெய்து பங்குபற்றுபவர் விபரங்களை முன்கூட்டியே அறியத்தரவும். நிகழ்ச்சி நிரல்: 7:00 இறை வணக்கம் 7:05 அகவணக்கம் 7:06 வரவேற்புரை / அறிமுக உரை 7:15 தகவல் பகிர்வு - 1985 - 2014 பல்கலைக்கழக தெரிவு புள்ளிவிபரம் (வடக்கு, கிழக்கு மாகாணங்கள்) - Dr. Roshan Ragel, Senior Lecturer, Department of Computer Engineering,University of Peradeniya 8:00 களநிலவரம் - தாயாக அதிபர்களுடன் உரையாடல் (தொலைபேசி) 8:45 கலந்துரையாடல் / ஆவணப்படுத்தல் 9:45 நிறைவு உங்கள் அனைவரினதும் பங்களிப்பும், கருத்துக்களும் எமது முன்னெடுப்பிற்கு பெரிதும் உதவும் என்று நாம் திடமாக நம்புகின்றோம். நன்றி கு.பார்த்தீபன் தலைவர் - யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் சிட்னி , ஆஸ்திரேலியா தொடர்புகளுக்கு 0423331111 Like · · Share நன்றிகள் முகப்புத்தக உறவுக்குhttp://www.jaffnahindu.org/events/australasia/jaffna-hindu-educational-workshop-sydney-australia-55.html

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் சொல்லிய இதைத்தான்  

கடந்த பல வருடங்களாக  செய்து வருகின்றோம்

சிறார்களின் கல்வி

மக்களின் தண்ணீர்ப்பிரச்சினை

தாயக மக்களின் பொருளாதார வளர்ச்சி  சார்ந்து பல லட்சங்களை வருடாவருடம் தாயகத்தக்கு அனுப்பி

அங்கு படிப்பையும் பாடசாலைக்குத்தேவையான உபகரணங்களையும் பாதுகாப்பையும் 

போரினால் நிர்க்கதியான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும்

படித்தவர்களுக்கு ஏற்ற ஆசிரியத்தொழிலையும்

எம்மால் முடிந்தளவுக்கும் மேலாக செய்து வருகின்றோம்..

இவற்றை எமது சுயநல விளம்பரத்துக்காக செய்வதாக சொல்லி

தட்டிக்கழித்து கேவலப்படுத்துவோர்

எவருடன் சேர்ந்து இவற்றை செய்து முடிக்கப்போகிறார்கள்....??

கணணி தட்டும்  வாய் வீரர்களின் பங்களிப்புடனா???

யார் குற்றி அரிசியானாலும் சரி

நாலு பெருக்கு நன்மை செய்யணும் என்றால் எதுவும் செய்யலாம்

எவரிடமும் உதவி பெறலாம் என்பதே எனது கருத்தும் கொள்கையும்.....

தொடர்க...

வாழ்த்துக்கள்

Edited by விசுகு

ஈழத் தாயகத்தின் அபிவிருத்திக்கு உதவியை எதிர்பார்த்து, அண்மைக் காலங்களில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் உரிமையுடன் கை ஏந்தி நிற்பது தவறல்ல. ஆனால் அவ்வுதவி, தாயகத்தில்  இருப்போருடைய சுயமுயற்சியை மழுங்கடித்து, எடுத்ததற்க்கு எல்லாம் "கேட்டால் காசு அனுப்புவான்" என்கிற மனநிலையில் அவர்களை வாழ வழி வகுத்துவிடக் கூடாது.
 
பசியோடு  இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பது சிறந்தது என்ற நடைமுறைச் சாத்தியமான கூற்றுக்கிணங்க எமது உதவி அமைவது சாலச் சிறந்தது. 
 
அதுமட்டுமல்ல எமது உதவியை எதிர்பார்ப்பவர்கள் தம்மைவிட கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு தயக்கமின்றி உதவும் மனநிலையில் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். 
 
பாடசாலைக்கு போய்வர சைக்கிள் வேணும் என்ற பக்கத்து வீட்டு சிறுவனின் ஏக்கத்தை புறந்தள்ளி, வெங்காயம் ஏத்தி இறக்க "ஜகுவர் கார்" ஒன்றை இங்கிருந்து எதிர்பார்ப்பது தவறு.
 
தேடல், சுயமுயற்சி, அக்கறை, பொறுப்புணர்ச்சி.. போன்ற வெற்றிக்கு தேவையான அடிப்படை விடயங்களை சிறுபராயத்திலேயே கற்றுகொள்வதை உறுதிப்படுத்த வெண்டும்.
 
கீழே உள்ள காணொளியை பலர் முன்பே பார்த்திருக்கலாம்.  இன்னும் ஒரு முறை பார்த்து எமக்கு தேவையானதை எடுத்துக் கொள்வது தவறில்லைத்தானே?  :)
https://www.youtube.com/watch?v=dk60sYrU2RU
 
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மிகவும் சந்தோசம். நான் முன் வைத்த திட்டத்தையும் தயவு செய்து பிரேரியுங்கள். இத்திட்டம் சரிவரும் பட்சத்தில் இந்த fund ற்கு யாழிலும் உதவி கோரலாம். கட்டாயம் என் சிறு பங்களிப்பு இருக்கும்.

Small point - பாத்திரம் அறிந்துதான் எதையும் செய்ய வேண்டும். பின்தங்கிய பாடசாலை ஒன்றுக்கு ஒரு கணணிக்கூடம் செய்து கொடுப்பது, தூண்டில் வாங்கிக் கொடுப்பது ஒப்பானதே.

இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
 
யாழ் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளிற்கே பெருமளவு உதவி கிடைக்கப்படுகின்றன. இவை கட்டிடங்களிற்கும் உபகரணங்களிற்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் உயரதர கல்வி என்பது மிகவும் போட்டி நிறைந்தது. எனவே ரியூக்ஷன் அத்தியாவசியமான ஒன்றாகின்றது. யாழ் மாநகரசபைக்கு வெளியே கல்விகற்கும் மாணவர்களும் யாழ்நகரத்திற்கு வரவேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றது. இம் மாணவர்களிற்கு ரியூக்ஷன், பிரயாணம், எழுது உபகரணங்கள போன்ற செலவுகள் அண்ணளவாக மாதம் 3000 ரூபா தேவைப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் பலருக்கு இது எட்டாக்கனியாகவே உள்ளது. படிக்கும் ஆர்வமுள்ள இம்மாணவர்களிற்கு உதவியும் தேவை. பாடசாலை அதிபர்ளின் ஒத்துழைப்புடன் இம்மாணவர்களினைக் கண்டறியலாம். அவர்களிற்கான உதவியும் நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும். பல பாடசாலை அதிபர்கள் இவர்களது முன்னேற்றங்களை அறியத்தருவார்கள். அத்துடன் உதவியைப் பெறுபவர்களிற்கும் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது பரீட்சை பெறுபேறுகள் குறிப்பிட்ட சராசரிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது. இது இன்னொரு வகையில் முன்னேற்றத்திற்கான தூண்டுகோலாகவும் இருக்கும்.
 
நான் படித்த இரு பாடசாகளிற்கும் பலவிதமான உதவிகள் கிடைக்கின்றன. அவற்றை மீறி வெளியில் வந்து தேடியபோதுதான் ஒரு அதிபரின் அறிமுகம் கிடைத்தது. ஆனல் அவரும் தனிப்பட்ட உதவியை நம்ப பின்நின்றார். நீங்கள் இடையில் நிறுத்தினால் என்னாவது என்ற பயம். ஆனால் நம்பிக்கையை பெற இரு முழுமையான வருடங்கள் தேவைப்பட்டது. பின்னர் அவரே இன்னொரு அதிபரையும் அறிமுகப்படுத்தியிருந்தார். எனவேதான் இத்தேவைக்கான உதவியை நிறுவனமயப்படுத்த வேண்டும் என எழுதினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.