Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஏ. சுமந்திரனுடனான ஊடக சந்திப்பு

Featured Replies





  • கருத்துக்கள உறவுகள்

Gari CMR இன் இணைப்பை தேடுகின்றேன் கிடைக்குமா ? வெட்டுப்படாதது 

  • கருத்துக்கள உறவுகள்

Gari,

செய்யுறதெல்லாம் நீங்கள் ஆனா இங்க சுமந்திரன்ர காவடி எண்டு ஏச்சு வேண்டுறது நான்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சுமந்திரன் ஏன் லண்டனுக்கு வரமாட்டன் என்று அடம்பிடிக்கிறார்..?! வந்து மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வாரோ..?!  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், கிளிநொச்சியில் மகனைச் சிங்கள இராணுவத்திடம் பறிகொடுத்த ஒரு தாயார், எங்களுக்கும் ஒரு குண்டைப்போட்டுக் கொன்றுவிடுங்கோ எனக்கூறுகிறது அதுபற்றி என்ன நினைக்கிறியள்?

 

இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்களது பட்டியலை சுமந்திரன் பெற்றுக்கொண்டதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது அதுபற்றி என்ன சொல்லுறியள். தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தால்தான் பெயர்களை வெளியிடுவியளோ? அப்படியெனில் டக்ளசுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

 

கொத்தா முகாம் எனும் முகாம் இருக்கு அதற்கான ஆதாரங்கள் இருக்கு எனமூச்சுக்கு முன்னூறு தடவை சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார் அதுபற்றி உங்களது  கருத்து என்ன?

 

சுரேஸ் பிரேமச்சந்திரன் சித்தார்த்தன் சங்கரி போன்றோர்களுக்கு வேறுவேறு பிண்ணணி இருக்கு அந்தப்பின்னணியிலிருந்து வெளிவரப்பாக்கினம் எனக்கூறுகிறியள், அவர்களாலும்  சேர்த்த வாக்குகள் அடிப்படையிலேயே தேசியப்பட்டியல் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறியள் அந்தப்பாவப்பழியிலிருந்து எப்ப வெளிவரப்போகுறியள்?

 

அதுசரி கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் சரியான வேளையில் பதிவுசெய்தாயிற்று எனக் கூறுகிறியள் அதற்கான வரைவு எண் என்ன? எந்தச்சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்டது?

 

கூட்டமைப்பை  அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டால் என்ன காரணத்துக்காகப் பொதுச்சின்னம் ஒன்றைப்பெற்றுக்கொள்ளமுடியாது?

 

தமிழர் விடுதலைக்கூட்டணி எனும் கட்சி, தந்தை செல்வநாயகம் அவர்களாலும், திரு திருச்செல்வம் அவர்களாலும் ஜி ஜி பொன்னம்பலம் அவர்களாலும் உருவாக்கப்பட்டது, அக்கட்சியது உதயசூரியன் சின்னமே பாராளுமன்றில் தமிழனை எதிர்க்கட்சித் தலைவராக முதல் முதலில் அமர்த்தியது. தற்போது அக்கட்சி ஆனந்தசங்கரியால் செயற்பட முடியாதவாறி நீதிமன்றத்தில் முடக்கப்பட்டுள்ளது உங்களது அப்புக்காத்து மூளையால அதை மீட்டெடுக்க ஏன் முடியவில்லை?

 

சரி புலம்பெயர் தமிழர்கள் எல்லாருமே புலிவால்கள் இல்லை என்கிறீர்கள், அப்போ வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களது இன்னல்களைத் தீர்க்க புலம்பெயர் தேசத்து மக்களுடன் சேர்ந்து முறையான திட்டமிடல்களை இதுவரை மேற்கொண்டிருக்கிறீர்களா?

 

தேர்தல் செலவுக்காக புலம்பெயர்தேசங்கள் தோறும் குறிப்பாக கனடாவில் சேர்த்த பாரிய நிதிபோல் உங்களால் அதாவது கூட்டமைப்பில் அங்கத்துவம்வகிக்கும் உங்கள் அனைவராலும் திட்டமிடப்பட்டு உதவித்தொகையை ஏன் சேர்க்கமுடியவில்லை?  உங்கள் இணக்க அரசியலது செல்வாக்கை ஏன் இதற்க்குப் பாவிக்க முடியவில்லை.

 

மிகவும் நல்லமுறையின் திட்டமிட்டு ஒரு நிதிஅமைப்பை ஏன் உங்களால் உருவாக்கமுடியவில்லை?

 

 

 

 

 

 

 

 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஐனநாயகக்கட்சியின் உறுப்பினர்

மக்கள் பிரதிநிதி

அதே மக்களுக்கு அனுமதி பெறுபவர்களே கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டளையுடன்

வடிகட்டியவர்களுக்கு மட்டும் கொடுக்கும் பேட்டியையும்

விளக்கங்களையும்  

வெளியிலிருந்து கேட்க பார்க்கவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் தமிழினம்...

 

இதுவும் கடந்து போகும்.

 

Edited by விசுகு

கனடாவில் இருக்கும் கூட்டமைப்பினர் செய்தது மிகப்பெரிய ஜனாநாயக விரோத செயல் என்பது உண்மைதான் .

 

ஆனால் ஜனநாயகம் என்று பட்டிகளை உள்ளே விட்டால் கூட்டம் குழம்பிவிடும் என்பதும் உண்மை. பொப் ரெயையே பேசவிடாமல் கூக்குரல் இட்டு கூட்டத்தை குழப்பிய கோஷ்டிகள் இங்கிருக்கு,

அதனால்  அதற்கான முன்னேச்சரிக்கையோ தெரியாது .

அமிர்தலிங்கத்தின் அஞ்சலி கூட்டைதை குழப்பும் போது ஒருவர் அழ என்றாலும் கொஞ்ச நேரம் தரும்படி கேட்டார் .

 

இந்த ரௌடிகளில் சிலர்  கோட் சூட்டுடன் வருவதுதான் கொடுமையிலும் கொடுமை .

 

இப்படி குழப்பும்  ஒருவரை (இந்திராவின் தந்தை ) போன வருடம் உட்பிரச்சனையால் ஒரு கூட்டத்தில் பேசவிடாமல் குழப்பினார்கள் அது பெரும் பகிடி .

 

இந்த குழப்பும் கோஷ்டிகள் இப்போ நன்றாக குறைந்துவிட்டது சில மிச்ச சொச்சங்கள் இப்பவும் உலாவுதுகள் . 

 

இப்படியானவர்களை இல்லாமல் செய்ய எமது இனம் கொடுத்த விலை மிக அதிகம் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் குட்டமைப்பை அரசியல் கட்சியாக இதுவரை பதிவுசெய்யப்படவில்லை சுமந்திரன் அப்படி உண்மைக்குப்புறம்பான செய்தியை கனடாவில் எதற்காகச் சொன்னார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.