Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் கார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sauthi-arap-prince-car-250315-400-puthin

முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன் டலால், உல்லாசம், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்பது உலகறிந்த ரகசியம். இருப்பினும், உலகின் விலையுயர்ந்த கார்களை சேகரிப்பதிலும் இவர் அதிக ஆர்வம் உடையவர் என்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி, அதிநவீனமானதும் விலையுயர்ந்ததுமாக 37 கார்களை தனது அரண்மனை வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் இளவரசர் அல்வாலித் இன் டலால், 38-வதாக ஒரு சொகுசுக்காரை வாங்க விரும்பினார்.

   

சொகுசுக் கார் என்றாலே, அனைவரின் நினைவிலும் நிழலாடும் ’மெர்ஸடிஸ் பென்ஸ்’ இவரது மனக்கண்ணிலும் தோன்றத்தொடங்கியது. உடனடியாக, ஜெர்மனியில் இருந்து ஒரு பென்ஸ் காரை இறக்குமதி செய்த அவர், அந்தக்காரை இந்த ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும்படி செய்ய வேண்டுமானால், என்ன செய்யலாம்? என சில நாட்கள் வரை சிந்தித்தார். மந்திரி பிரதாணிகளிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் ஆலோசனை கேட்டார். ‘ஹுரேக்கா..!’ என உரக்க கத்தாத குறையாக ஒரு புதிய முடிவுக்கு வந்தார் இளவரசர்.

 

காரின் உள்பகுதி, வெளிப்பகுதி, கதவின் கைப்பிடி, வீலின் ரிம்கள், புகையை வெளியேற்றும் சைலன்சர் என தலை முதல் பாதம் வரை அந்த பென்ஸ் காருக்கு வைரத்தால் ஜோடனை செய்தால் என்ன? என்று ஒரு ‘சிம்பிளான’ யோசனை அவருக்கு உதித்தது. உடனடியாக வைர வியாபாரிகளையும், நகை அலங்கார வேலைப்பாட்டில் பெயர் போன சில தொழிலாளிகளையும் அரண்மனைக்கு வரவழைத்து, தனது திட்டத்தை தெரிவித்தார்.

 

இளிச்சவாயன் எவனாவது இதைச்சொன்னால் இளக்காரம் செய்ய முடியும். ஆணையிடுபவர் செல்வவளம் மிக்க பெரிய நாட்டின் இளவரசராயிற்றே.., அங்குலம், அங்குலமாக வைரத்தால் இழைக்கப்பட்ட அந்தக்கார் சில மாதங்களில் கண்ணை சிமிட்டிக்கொண்டு பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்த தொடங்கியது. கடந்த 2013-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற கார் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்தக்கார், பலரை மூக்கின் மீது விரலை வைக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

அதே வேளையில், ஏழை நாடுகளை சேர்ந்த கீழ்த்தட்டு மக்களை வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொள்ளவும் வைத்தது. இந்த காருக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 48 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 4 கோடியே எண்பது லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 300 கோடி ரூபாய்). அம்மாடியோயோயோவ்வ்..! என்று கத்தத்தோன்றுகின்றதா? கொஞ்சம் பொறுத்திருங்கள்.

 

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இந்த வைரக்காரின் அருகில் நின்று புகைப்படம் எடுக்கவும், தொட்டுப்பார்க்கவும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 6 லட்சம் ரூபாய்) தர வேண்டும் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் அறிவித்திருந்தது, விலையைவிட பெரிய ஆச்சரியத்தையும் கூடவே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ’ஒரு வேளை இந்த காருக்காக செலவு செய்ததில் சவுதி இளவரசரின் பாக்கெட் மணி காலியாகி விட்டதோ, என்னவோ..? அதுதான் தொட்டுப்பார்க்க கூட இம்பூட்டு பணம் கேக்குறாரு..’ என்று பார்வையாளர்களில் சிலர் காமெடியாக பேசிக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன.

 

http://seithy.com/briefPuthinam.php?newsID=128986&category=Puthinam&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவனே... இவங்களுக்கு, நல்ல புத்தியை கொடுப்பா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவனே... இவங்களுக்கு, நல்ல புத்தியை கொடுப்பா.... :D

 

எல்லாம் அந்த பூமிக்கடியில் புதைஞ்சு போயுள்ள மசகு எண்ணெய் எடுக்கும் வரை தான். அதுக்கு அப்புறம்.. மணல் தான் பறக்கும்.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பசி வர   அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கே யாத்திரைகள்
இருவேறு லகம் இது வென்றால்
இறைவன் என்பவன் எதற்காக ....

இறைவன் உலகத்தை படைத்தானா .......

  • கருத்துக்கள உறவுகள்

பசி வர அங்கே மாத்திரைகள்

பட்டினியால் இங்கே யாத்திரைகள்

இருவேறு லகம் இது வென்றால்

இறைவன் என்பவன் எதற்காக ....

இறைவன் உலகத்தை படைத்தானா .......

அதே இறைவன் தான், நாம் செய்த பாவ புண்ணியத்தை வைத்து, இரு வேறு உலகங்களுக்கும் பிரித்து அனுப்புவதாக சொன்னார்களே... :o

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எம் தகுதிக்கு 300 € க்கு பிரான்டட் ஷூ வோ , ஆடைகளோ வாங்க முடியும் என்டால் , அவர் அவரது தகுதிக்கு 300 கோடிக்கு கார் வைத்திருப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஜஸ்ட் லைக் தட் பார்த்துட்டு போய்க் கொண்டேயிருக்க வேண்டியதுதான்....! :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எம் தகுதிக்கு 300 € க்கு பிரான்டட் ஷூ வோ , ஆடைகளோ வாங்க முடியும் என்டால் , அவர் அவரது தகுதிக்கு 300 கோடிக்கு கார் வைத்திருப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஜஸ்ட் லைக் தட் பார்த்துட்டு போய்க் கொண்டேயிருக்க வேண்டியதுதான்....! :)

 

chai-wala2.jpg?w=764

 

இவர் தன்னுடைய வசதிக்கு...  ஏற்ப, தனது சைக்கிளை அலங்கரித்துள்ள மாதிரி...

சேக்கு... தன்னுடைய, காரை, வைரத்தால்.... அலங்கரிக்கலாம் என்று சொல்கிறீர்களா? சுவி. :D  :lol:

Edited by தமிழ் சிறி

ஏன் மற்றவர்களை  பார்த்து  பொறமை படுவான்.  விரும்பினால் நீங்கள் என்ன விருப்பமோ  அதன் படி இருக்கலாம் தானே .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மற்றவர்களை  பார்த்து  பொறமை படுவான்.  விரும்பினால் நீங்கள் என்ன விருப்பமோ  அதன் படி இருக்கலாம் தானே .

பூமிக்கு நீங்கள் வரும்போது எதையும் கொண்டுவருவதில்லை 
நீங்கள் வரும்போது இங்கு இருக்கும் அனைத்தும் இன்னொருவரின் உழைப்பில் உருவானது.
பூமியில் இருப்பதை எல்லோருடனும் முடிந்த அளவில் பகிருவதுதான் நிஜாயமனது.
எந்த ஒரு அதிகாரத்தை  (பணம் ஆயுதம் பலம் அழகு) பாவித்து இன்னொருவருக்கு உரியதை 
அபகரிப்பது அடாவடித்தனம் அது ஆக்கிரமிப்பு.
அதை மனிதர்களால் ஏற்றுகொள்ள முடியாது....
 
சவூதி நிலத்தில் இருந்து ஊறும் எண்ணெய் சவூதி மக்கள் அனைவருக்கும் சொந்தம்.
அதிகாரத்தை பாவித்து இவர்கள் தமக்கு மட்டுமே சொந்தம் ஆக்குகிறார்கள்.
மக்கள் தெருவில் சோமாலியாவில் இல்லை ............. இந்த கார் போகபோகும் வீதிகளிலேயே இருக்கிறார்கள்.
 
மெக்காவிற்கு போகிறவளுக்கே ஒழுங்கான மல சல கூடம் இல்லை.

அதை சௌதி மக்கள் எல்லோ யோசிக்கணும் .நாம் எம் மக்களை யோசிப்போமே .

  • கருத்துக்கள உறவுகள்
உலக வளங்கள் உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் உரியது.
எங்கள் கடலில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று கடலில் 
நஞ்சை இறைக்கும் செயலை யார் செய்தாலும் தடுக்க வேண்டும். 

vinkal-260315-200-seithy-world.gif

1,000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியை மிக அருகில் கடக்க உள்ளதாகவும், 37 ஆயிரம் கிமீ வேகத்தில் வரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். '2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர்களை கடந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல்லானது, பூமியின் மீது மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமாக வரும் இந்த விண்கல் பூமியின் மீது மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

   

1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் மோதினால் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். கடந்த 1908ஆம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்காவில் விண்கல் விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சைபீரியாவில் விண்கல் மோதியது இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அப்போது உணரப்பட்டது. விண்கல் மோதியபோது 80 மில்லியன் மரங்கள் அழிந்தது, சுமார் 5.0 அளவில் அதிர்வு காணப்பட்டது. துங்குஸ்காவில் விழுந்த விண்கல் 50 மீட்டர் ஆழத்துக்குப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது. இதைவிட '2014 ஒய்.பி.35' விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பில்நேப்பியர் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “துங்குஸ்கா போன்ற நிகழ்வுகள் எல்லாம் சிறியதுதான், பதிப்பு உண்மையில் மிகவும் ஆபத்தானது. அப்போது நாம் இதுபோன்ற விண்கல்களை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. எனவே நாம் பாதிப்பை சமாளிக்க தயார்படுத்திக் கொள்ளாமல் இருந்தோம். ஆனால் ‘2014 ஒய்.பி.35' போன்ற விண்கற்கள் உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நிகழ்வுகளை தடுக்கவும் ஏதோ ஒன்று உள்ளது. விண்கற்கள் பூமியில் மோதுவது என்பது ஒரு அரிதான நிகழ்வுதான். இருப்பினும், விண்கற்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது” என்றார்.

 

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விண்கற்கள், மிகவும் அருகே வரும்நிலையில் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், பூமிக்கு அருகே விண்கற்கள் வருகிறது என்பது, பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவது என்று பொருள் ஆகாது, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போன்ற எச்சரிக்கை உள்ளது என்பதே பொருள் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://seithy.com/breifNews.php?newsID=129011&category=WorldNews&language=tamil

 

இப்படி ஒரு ஆபத்து பூமிக்கு வரும் போது ...
இவரின் காரா போய் இடிக்க போகிறது ??
 
 
எமது வரிபனத்தில் ....
அமெரிக்கர்கள் நாங்கள் ஏதும் செய்தால்தான் பூமிக்கு விடிவு 
proud to be an American 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டவனே... இவங்களுக்கு, நல்ல புத்தியை கொடுப்பா.... :D

 

சிறித்தம்பியர் இஞ்சத்தையான் கலியணவீடு சாமத்தியவீடுகளுக்கு போய் கன காலம் போலை...... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பியர் இஞ்சத்தையான் கலியணவீடு சாமத்தியவீடுகளுக்கு போய் கன காலம் போலை...... :D  :lol:

 

ஹி... ஹீ...ஹி...  

எனக்கென்னவோ.... எங்கடை சாமத்திய வீடு, கலியாண வீடு ஞாபகம் வரவில்லை அண்ணை. :D  :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.