Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரீவி பார்த்துப் பார்த்து பிள்ளைகளை நாசம் செய்கின்றார்கள் பெற்றோர் - க.தேவராஜா

Featured Replies

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் பெரும் தடையாகவுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் ஒருநாளில், அரைவாசிக்கு மேற்பட்ட பொழுதை தொலைக்காட்சியுடன் செலவிடுகின்றார்கள். தம் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அக்கறை அற்றவர்களாக தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கி விடுகின்றனர் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா தெரிவித்தார்.

இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் ஆகியவற்றின் 13ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கலும் இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

பெரும்பாலான பிள்ளைகள் கற்பதற்கான சூழல் வீடுகளில் இல்லாத காரணத்தினால், கல்வியில் பின்னடைவை எதிர்நோக்குகின்றார்கள். இன்றைய எமது கல்வித்தர வீழ்ச்சிக்கு தொலைக்காட்சி பெட்டிகளும் தொடர் நாடகங்களும் முக்கியமான காரணமாக அமைகின்றன.

நூலகத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும். வாசிப்பதால் எம்முடைய அறிவு மேலும் வளர்ச்சியடைகின்றது. இணுவில் பொதுநூலகம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை கொண்ட நவீன நூலகம் ஆகும். இந்த பிரதேசத்தை சேர்ந்த அனைவரும் நூலகத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

பிரதேச மாணவர்களின் அறிவை மேம்படுத்தவதற்காக கனிணி ஆய்வுகூடம், படிப்பகம் போன்ற வசதிகளை நூலகம் கொண்டுள்ளது. இந்த வசதிகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீடுகளில் கற்றலுக்கான சூழ்நிலை இல்லாத மாணவர்கள் தங்கள் கல்வியறிவை வளர்த்துக் கொள்வதற்க்காக நூலகங்களை நாடி கற்றலுக்கான சூழலில் தமது கல்வியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இணுவில் பகுதியில் எதிர்வரும் ஆண்டுகளில் நவீன வசதிகளுடன் கூடியதாக சர்வதேச தரத்துக்கு இணையாக சிறுவர் முள்பள்ளி ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணுவில் பிரதேசத்து இளைஞர்களது முயற்சியால் இணுவில் பொது நூலகமானது பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றி வருகின்றது.

கல்விச் சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் நூலகங்களை நாடி சுயகற்றலின் ஊடாக தமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களிடத்தில் இளம் பராயத்தில் ஏற்படுகின்ற வாசிப்பு பழக்கமின்மையே மாணவர்களை கல்விச் சூழலில் இருந்து விடுபடச்செய்து சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடத் தூண்டுகின்றது. வாசிப்பு பழக்கமுள்ளவர்களிடம் சுயகற்றலின் ஊடாக நல்ல விடயங்களை கற்று நல்ல வழியில் தங்களது வாழ்க்கையை திட்டமிட்டுக்கொள்ள முடிகின்றது என்றார்.

http://www.newjaffna.com/moreartical.php?newsid=37534&cat=event&sel=current&subcat=11#sthash.hJij6wtI.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

----

பெரும்பாலான பிள்ளைகள் கற்பதற்கான சூழல் வீடுகளில் இல்லாத காரணத்தினால், கல்வியில் பின்னடைவை எதிர்நோக்குகின்றார்கள். இன்றைய எமது கல்வித்தர வீழ்ச்சிக்கு தொலைக்காட்சி பெட்டிகளும் தொடர் நாடகங்களும் முக்கியமான காரணமாக அமைகின்றன.

-----

பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீடுகளில் கற்றலுக்கான சூழ்நிலை இல்லாத மாணவர்கள் தங்கள் கல்வியறிவை வளர்த்துக் கொள்வதற்க்காக நூலகங்களை நாடி கற்றலுக்கான சூழலில் தமது கல்வியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

------

 

இந்தத் தலைமுறையை சேர்ந்த, பல தமிழ் பெற்றோர் தொலைக்காட்சிப்  பெட்டிக்கும், சினிமாவுக்கும் அடிமைப் பட்டுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

 

ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு.... தமிழ்க் கடைகளுக்குக்குப் போனால்... அங்கு பல பெற்றோர் வீடியோ கசெட், நாடக சீடி போன்றவற்றை அள்ளிக் கொண்டு போவதை காணலாம்.

 

இப்போது.... இணையம், சற்றலைற் என்று வீட்டுக்குள் 50 தமிழ் தொலைக்காட்சி சேவைகளாவது இலகுவாக வந்து விடுகின்றது. இப்போது.... தமிழ் கடைகளும்.... இந்தப் பெற்றோரால் வெறிச்சோடிப் போய்விட்டது.

தாங்கள் பெற்ற பிள்ளைக்கு, வீட்டில் படிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்காத..... பெற்றோர் என்றுமே மன்னிக்க முடியாதவர்கள்.

 

பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் போதாது.... அவர்களுக்காக வாழ்க்கையில் தமது சந்தோசங்களை, தியாகம் பண்ணும் பெற்றோரால் தான்... சமுதாயத்துக்கு பிரயோசனப் படும், நல்ல ஒரு தலைமுறையை.... உருவாக்க முடியும்.

  • தொடங்கியவர்

இப்ப கன வீட்டில விளம்பரம்தான் சோறு போடுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இஞ்சை ஒராளுக்கு மனிசன்காரன் வேலையாலை வாறதும் தெரியாது போறதும் தெரியாது.அவ்வளவுத்துக்கு சீரியல் சீரியஸ்.. <_<
 
ஏலாக்கடைசியிலை இந்த வீடியோவையும் போட்டுக்காட்டிப் பார்த்தன். ஒரு அசுமாத்தத்தையும் காணேல்லை  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்தையராவது பெரிதல்ல

 

தாய் தந்தையராக அமைவதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்தையராவது பெரிதல்ல

 

தாய் தந்தையராக அமைவதே மேல்.

 

இரண்டு வரி என்றாலும், நச்சென்ற அருமையான... கருத்து ஈழப்பிரியன். :)

  • கருத்துக்கள உறவுகள்

 

இஞ்சை ஒராளுக்கு மனிசன்காரன் வேலையாலை வாறதும் தெரியாது போறதும் தெரியாது.அவ்வளவுத்துக்கு சீரியல் சீரியஸ்.. <_<
 
ஏலாக்கடைசியிலை இந்த வீடியோவையும் போட்டுக்காட்டிப் பார்த்தன். ஒரு அசுமாத்தத்தையும் காணேல்லை  :(
 

 

திருமுருக கிருபானந்த வாரியார் ' துணைவன்' படத்தில் ஏ.வி.எம் ராஜனுக்குக் குடுக்கிற 'அட்வைஸ்' தான் உங்களுக்குச் சரி வரும்.. குமாரசாமியண்ணை!

 

மகனே.. உன் வழிக்கு அவள் வராவிட்டால்...நீ அவள் வழிக்குப் போ! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.