Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?

Featured Replies

கட்டுக்கோப்பானவர்கள் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பவர்கள் திருமணத்திற்கு முன்னரான உடலுறவுகளை விரும்பமாட்டார்கள். இதில் நானும் அடக்கம்.... :)

 

உலக முன்னேற்றம் நாகரீக வளர்ச்சி என குத்திமுறிபவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம்.  :icon_idea:

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஐயா :D 
தாங்கள் கலியாணத்துக்கு முன்னம் கலாச்சாரம் கட்டுபாட்டை கடை பிடிச்சியள் பாராட்டுக்கள்.  :lol:
கலியாணத்துக்கு பிறகு மனிசியின் தங்கை பரிமளத்தை கிளப்பினது மட்டும் எந்த கலாச்சாரம் கட்டுபாட்டுக்குள்ளை அடங்கும்?  :D  :icon_idea:
  • Replies 67
  • Views 10.8k
  • Created
  • Last Reply
ஆணும் பெண்ணும் காதலிக்கும் போது திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் தவறு இல்லை என்று எமது முன்னோர்கள் 
சங்க இலக்கியத்தில் அகத்திணை என்னும் பகுதியில் களவியல் ஒழுக்கம் என்று இதை சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வதை காந்தர்வ மணம் என்று அழகாக சொல்கிறார்கள்.   :D  :icon_idea:
 
இந்த திரியை பார்க்கும் போது தமிழீழ காவல் துறையை ஆரம்பித்து வைக்கும் போது தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. " ஒழுக்கத்தில் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் என்று இருவகை உண்டு. புற ஒழுக்கம் என்பது சமூகம் கலாச்சாரம் உறவினர் நண்பர்கள் காவல் துறை நீதி போன்றவற்றுக்கு பயந்து தப்பு தண்டா செய்யாமல் இருப்பது. அக ஒழுக்கம் என்பது சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதும் மாட்ட மாட்டேன் என்று நிச்சயமாக தெரியும் போதும் தப்பு செய்யாமல் இருப்பது. பெரும்பாலானவர்கள் புற ஒழுக்கத்தை கடை பிடிக்கிறார்கள். அக ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் கடினமானது. அதனை கடின பயிற்சி மனகட்டுபாடு மூலம் அடையலாம். நீங்கள் அக ஒழுக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் இலட்சியங்களை அடைய முடியும் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்று தலைவர் சொன்ன போது அவர் எனக்கு கடவுளாக தெரிந்தார். எனது முற்பிறவியில் எனது குருநாதராக இருந்தவர் கூட ஒரு முறை தனது  அக ஒழுக்கம் காரணமாக தனது தொழில் சார் நேர்முக பரீட்சைகளில் சிறந்த பலனை அடைய முடிந்தது என்று சொன்னார். எனது முற்பிறவி குருநாதர் ஒரு முறை தனது வாழ்வில்  எந்த சந்தர்ப்பத்திலும் பொய் சொல்வதில்லை என்பதை தீவிரமாக கடை பிடிப்பதாக சொன்ன போது மானசீகமாக குருவின் பாதங்களில் சரணடைந்து விட்டேன்.  :D  :icon_idea:
 
பிற்குறிப்பு : குருஜி கூட காந்தர்வ மணம் புரிந்ததாக எங்கேயோ சொன்ன மாதிரி இருக்கே.  :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஊரிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் கலியாண பேச்சு முற்று ஆகினாப்பிறகு ஓடிப்பிடிச்சு விளையாட  விடுவினம். :D  :icon_idea:
 
அது 20/25/30/35/40 எண்டாலும் எழுத்து எழுதினாப்பிறகுதான் கிஸ்சிங் டச்சிங் எல்லாம். :wub:
இப்ப என்னடாவெண்டால் 13லையே எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு 15லை பாட்டிமாதிரி கதைக்குதுகள்.30 வயதிலை கிழவன் கிழவி மாதிரி திரியுதுகள். :(
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஐயா :D
தாங்கள் கலியாணத்துக்கு முன்னம் கலாச்சாரம் கட்டுபாட்டை கடை பிடிச்சியள் பாராட்டுக்கள்.  :lol:
கலியாணத்துக்கு பிறகு மனிசியின் தங்கை பரிமளத்தை கிளப்பினது மட்டும் எந்த கலாச்சாரம் கட்டுபாட்டுக்குள்ளை அடங்கும்?  :D  :icon_idea:

 

 

 

subrahmanyan_2.jpg

 

நாம் உமக்கு காட்சியளித்து அருள்பாலிக்கின்றோம். :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
எதிலும் ஒரு ஒழுங்குமுறையைக் கையாள்வது மனித வாழ்வியலுக்கு உகந்தது. மனிதனைத்தவிர மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் இந்த ஒழுங்குகளை இயற்கையே அளித்து வருகிறது. பாலுறவுக்கான ஒரு ஒழுங்கை மனித இனம் ஒழுங்குபடுத்தியுள்ளது. இந்த ஒழுங்கை ஒரு நாகரீகமாகவும் கருதலாம். ஆனாலும் இந்த நாகரீகத்தைப் பின்பற்றாதவர்கள் அனைவரையும் கெட்டவர்களாகவும் கருதமுடியாது. அதுபோலவே பின்பற்றும் அனைவரையுமே நல்லவர்கள் என்று கருதவும் முடியாது. பள்ளிக்கூடம் சென்று கல்விகற்பது ஒரு ஒழுங்குமுறைக்குள் உள்ளது, இருந்தும்  பள்ளிக்கூடம் சென்று கற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகளாகவும், கல்லாதவர்கள் அறிவற்றவர்களாகவும் இருப்பதில்லை. 
 
"டண்டணக்கா" சுட்டிக்காட்டியதைப்போல் கெட்டது என்ற கருத்துக்கு உட்பட்டதை அழகுபடுத்திக் காட்டிவிட்டால் வாழ்க்கையும் அழகாகும். 
 
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ப்பா வெளி நாட்டு மாப்பிள்ளைகள் எல்லாம் ஈழ பெண்களை கடத்தி செல்கிறார்கள் ஏனோ? அப்ப அங்க இருக்குற பெண்கள் என்ன ?...................... :rolleyes: :rolleyes:

ஏன் அங்க உள்ள பெண்களை திருமணம்  முடிக்க விரும்புவதில்லை அவங்க என்ன வேலி பாய்ந்தவங்களா??

தற்போது ஈழத்தில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள் திருமணம் என்ற போர்வையிலும், வெளிநாட்டு மோகத்திலும்

நாங்க சாமியார போகிறோம் அவள் காட்டும் ராட்டாவில் என்ன வாழ்க்கை   daa :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இதுவே நம் பெரியோர்களின் விஞ்ஞானவிளக்கம் :D

இப்புடி இருந்தால் இன்னும் விளங்கும் :icon_idea:

 

15 வயசிலே திருமணமான எம் முன்னோர்கள் என்னன்டு 10-12 பெத்தவை, இல்லை வெள்ளைக்காரனுக்கு ஒவொருநாளும் தானே பாயுது!!!!!

30 வயத்திற்கு பின் பிரசவம் தொடங்கும் பெண்கள் 50வயதில் பல நரம்பியல் நோய்களுக்கு ஆளாவது தெரியாதா?

 

 

ஒரு பெண் / ஆண் பூப்படைந்ததும்.. திருமணத்துக்கு தயாராக முடியாது. ஏன் 16 வயதோடு.. பாலுறவுக்கு தயாராக இருந்தாலும்.. அந்த வயதில்.. கருவைச் சுமக்கும் அளவுக்கு ஒரு பெண் இருக்க வாய்ப்பில்லை. அதற்கான வயதாக.. 20 --- 21 ஐ எடுக்கலாம்.

 

அதேபோல்... 20 வயதில் கல்யாணம் கட்டிறவை.. 30 வயதை தாண்டி 4 வது பிள்ளையை பெத்துக்க முடியுதுன்னா.. ஏன்.. முதலாவது பிள்ளையை பெத்துக்க முடியாது..??!

 

ஒரு ஆண் 40 வயதில்.. 5 வது பிள்ளைக்கு அத்திவாரம் போடுறார் என்றால்.. ஏன் அவர் அந்த வயதில் முதலாவது பிள்ளைக்கு போட முடியாது.

 

எங்கையோ உதைக்குதே லாஜிக்கு. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ப்பா வெளி நாட்டு மாப்பிள்ளைகள் எல்லாம் ஈழ பெண்களை கடத்தி செல்கிறார்கள் ஏனோ? அப்ப அங்க இருக்குற பெண்கள் என்ன ?...................... :rolleyes: :rolleyes:

ஏன் அங்க உள்ள பெண்களை திருமணம்  முடிக்க விரும்புவதில்லை அவங்க என்ன வேலி பாய்ந்தவங்களா??

தற்போது ஈழத்தில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள் திருமணம் என்ற போர்வையிலும், வெளிநாட்டு மோகத்திலும்

நாங்க சாமியார போகிறோம் அவள் காட்டும் ராட்டாவில் என்ன வாழ்க்கை   daa :lol:

 

நாய்க்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்குத் தண்ணி தான்.. என்பார்கள். அதுபோல் தான் எங்கட மாப்பிள்ளைகள். அவர்களின் அடக்குமுறைக்கு.. சோம்போறித்தனத்துக்கு ஏற்ற ஒன்றைப் பார்த்து அவிழ்த்துக் கொண்டு வருகிறார்கள். அதுங்க வந்து ரெலிபோனும்..ரீவி சீரியலும் என்று அதே ஊரில இருந்து காலம் கழிச்சது போலத் தான் கழிக்குதுங்க. இடையில இரண்டு.. மூன்று குட்டியை போட்டுக்குதுங்க. அவ்வளவு தான்.

 

இந்த வாழ்கை மேற்கின் நாகரீகத்தில்.. ஊறிவிட்ட பெண்களுக்கு சரிவராது. அதுங்க கொஞ்சம் தங்கட விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வாழ்க்கையை சுதந்திரமாக தீர்மானிக்க நினைக்குதுங்க. அதில தப்பே இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் தெரிவு.

 

முனிவர்ஜீ... ஒன்று ராரா காட்டுதுன்னா.. உங்களை கடவுள் ஆசீர்வதிச்சிருக்கிறார் என்று நம்பிக்கிட்டு.. பதிலுக்கு ராரா பாய் பாய் சொல்லிட்டு.. வாழ்க்கையை தொடருங்கள்.

 

ப்கருக்காக.. வாழ்க்கை இல்லை. எங்கள் வாழ்கை எங்களுக்காக. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்குத் தண்ணி தான்.. என்பார்கள். அதுபோல் தான் எங்கட மாப்பிள்ளைகள். அவர்களின் அடக்குமுறைக்கு.. சோம்போறித்தனத்துக்கு ஏற்ற ஒன்றைப் பார்த்து அவிழ்த்துக் கொண்டு வருகிறார்கள். அதுங்க வந்து ரெலிபோனும்..ரீவி சீரியலும் என்று அதே ஊரில இருந்து காலம் கழிச்சது போலத் தான் கழிக்குதுங்க. இடையில இரண்டு.. மூன்று குட்டியை போட்டுக்குதுங்க. அவ்வளவு தான்.

 

இந்த வாழ்கை மேற்கின் நாகரீகத்தில்.. ஊறிவிட்ட பெண்களுக்கு சரிவராது. அதுங்க கொஞ்சம் தங்கட விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வாழ்க்கையை சுதந்திரமாக தீர்மானிக்க நினைக்குதுங்க. அதில தப்பே இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் தெரிவு.

 

முனிவர்ஜீ... ஒன்று ராரா காட்டுதுன்னா.. உங்களை கடவுள் ஆசீர்வதிச்சிருக்கிறார் என்று நம்பிக்கிட்டு.. பதிலுக்கு ராரா பாய் பாய் சொல்லிட்டு.. வாழ்க்கையை தொடருங்கள்.

 

ப்கருக்காக.. வாழ்க்கை இல்லை. எங்கள் வாழ்கை எங்களுக்காக. :):icon_idea:

 

நாம எப்பவும் உஷாரு தெரியும்தானே நெடுக்கண்னை இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படித்தானே நமக்கு தெரியாததா என்ன :)

 

யாருக்கும் இதனால் எந்த வித விளைவுகளும் உருவாகாமல் இருந்தால் தப்பில்லை .  உடலால் மட்டும் ஒழுக்கம் இருந்தும் மனத்தால் நிறையபேருடன் அனுபவிப்பது போல் மனதை அலையவிடுவது தான் பெரும்பலனவர்களின் நிலைப்பாடாக உள்ளது ... 
 
இதனை விட ஆசையை அனுபவிப்பதில் தப்பில்லை ... ஆனால் இதன் நல்லது கெட்டவைகள் தெரிந்து இருக்க வேண்டும் ... பெண்கள் கவனமாக இருப்பது நல்லம் .. ஏனெனில் பதிக்கபடுபவர்கள் அவர்கள்தான் .....
 
நம்பிக்கை தன்மை முக்கியம் ... உங்கள் காதலனுடன் என்றால் ... அவன் உங்களை ஏமாற்ற மாட்டன் என்பதற்க்கு என்ன வலுவான காரணம் ஏதும் உண்டா ?  .
 
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாதாசன் பல இடங்களில் உங்கள் கருத்துக்களைப் பார்த்து சுவற்றில் மண்டையை மோதி இருக்கிறேன்.

ஆனால் நீங்கள் மேலே சொன்னது - ஐ லைக் இட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

யாருக்கும் இதனால் எந்த வித விளைவுகளும் உருவாகாமல் இருந்தால் தப்பில்லை .  உடலால் மட்டும் ஒழுக்கம் இருந்தும் மனத்தால் நிறையபேருடன் அனுபவிப்பது போல் மனதை அலையவிடுவது தான் பெரும்பலனவர்களின் நிலைப்பாடாக உள்ளது ... 
 
இதனை விட ஆசையை அனுபவிப்பதில் தப்பில்லை ... ஆனால் இதன் நல்லது கெட்டவைகள் தெரிந்து இருக்க வேண்டும் ... பெண்கள் கவனமாக இருப்பது நல்லம் .. ஏனெனில் பதிக்கபடுபவர்கள் அவர்கள்தான் .....
 
நம்பிக்கை தன்மை முக்கியம் ... உங்கள் காதலனுடன் என்றால் ... அவன் உங்களை ஏமாற்ற மாட்டன் என்பதற்க்கு என்ன வலுவான காரணம் ஏதும் உண்டா ?  .

 

 

கவனமாக இருந்தால் யாருடனும் எப்போதும் கலவியில் ஈடுபடலாமா?
மனத்தால் நிறையப்பேருடன் அனுபவிப்பதை விட பிரீதி / குளிசைகளுடன் நிறையப்பேருடன் நேரடியாக இச்சைகளை தீர்த்துக்கொள்ளலாமா?
  • கருத்துக்கள உறவுகள்

பல்லிருந்தா பாக்குப் போடலாம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்யலாம் என்பதல்ல..

இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒருவேளை குழந்தை பிறக்கும் சூழ்நிலை வந்துவிட்டால் தந்தை என்கிற முறையில் அந்த ஆண் குழந்தைப் பராமரிப்புச் செலவில் ஒரு பங்கை ஏற்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீதிமன்றம் மூலம் அதை செய்விக்கலாம். அதுக்கும் சரிவராவிட்டால் அரசாங்கமே ஆணின் சம்பளத்தை பிடித்து தாய்க்கு தரவும் வழி உள்ளது. தந்தைக்கு வருமானமே இல்லையென்றால் அரசு பணம் தரும்.

ஆனால் தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைக்கோ தாய்க்கோ என்ன பொருளாதாரப் பாதுகாப்பு உள்ளது??

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லிருந்தா பாக்குப் போடலாம். :)

 

திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா? 

திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?   இல்லை, இல்லை, இல்லை

 

நாங்கள் தமிழர்கள், எங்கு சென்றாலும் எந்த நாட்டில் இருந்தாலும் எமது ஒழுக்கம், பண்பாடு பேணப்பட வேண்டும்!!

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" - வள்ளுவர் வாக்கு

ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

வெள்ளைக்காரர் என்பவர்கள் ஒன்றும் வேற்றுக்கிரக வாசிகள் இல்லை. Swinging 60s இல்தான் அவர்களும் மாறினார்கள். அதுக்கு முன் அவர்கள் எம்மை விட கட்டுப்பெட்டித்தனமாய் வாழ்ந்தார்கள்.

கஜுராஹோ சிற்பங்களை கண்டு அதிர்ச்சியடைந்த விக்டோரியன் வெள்ளைகள் அதை ஒரு பாவாகாரியம் என்று கருதி புதர் மண்ட விட்டார்கள்.

இப்போதும் யாழ்ப்பாணத்தில் இல்லாத கட்டுப்பெட்டித்தனம் யூ எஸ் சின் பைபிள் பெல்டில் உண்டு.

ஆனால் நீங்கள் சொல்லுவதுபோல் திருமணம் ஆகாமலே single mother ஆகும் கலாச்சாரம் தெற்காசியாவில் (இன்னும்) பரவவில்லை என்பதால் அங்கே தாய்/சேய் பாடு திண்டாட்டம்தான். ஆனால் alimony எனும் paternal child support அந்த காலத்தில் இருந்தே இலங்கை சட்டத்தில் இருக்கு. ஆனாலும் கட்டாயம் social stigma இருக்கும். குறிப்பாக பெருநகரங்களுக்கு வெளியே.

அதுக்குத்தான் பிரபாதாசன் பெண்கள் "கவனமாய்" இருக்க வேணும் ( ரப்பர் வாங்கலியோ ரப்பர்) என்கிறார் :)

குசா அண்ணை,

எல்லாம் நம்பிக்கை/புரிந்துணர்வை பொறுத்தது அண்ணை.

It's complicated, open relationship, இப்படி திருமணத்துக்கு பின்னும் முன்னும் பலவகையில் நடக்குது விளையாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மீனா,

ஒருவனுக்கு ஒருத்திதான் தமிழ்கலாச்சாரம் எண்டு காட்டும் ஆதாரம் ஒன்றையேனும் தாருங்கள்?

இல்லை என்பதற்க்கு இதிகாச, புராண, காப்பியங்களில் இருந்து பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும்.

திருமணத்துக்கு முன் பாலுறவு ( கட்டிக்க போகும் ஒருவனுடன் மட்டும்) இருப்பதில் என்ன ஒழுக்க கேடு இருக்கிறது?

தாலி கட்டுவதற்கு முன் செய்தால் ஒழுக்க கேடு, ஒரு சரட்டை கழுத்தில் மாட்டியபின் அதே ஆளுடன் செய்தால் அது உத்தமித்தனம் என்பது ரொம்ப செயற்கையாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்காரங்களே ஆசிய / இந்து கலாச்சாரங்கள் வாழ்க்கைக்கு நல்லதெண்டு படையெடுக்கிறாங்கள்....எங்கடையள் என்னடாவெண்டால் வெள்ளைக்காரன் கலாச்சாரத்துக்கு காவடி எடுக்குதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளைக்கு பழகிப்பாப்பம்......சரி வரேல்லையெண்டால் வேறையொண்டை பாப்பம். இதுதான் இப்ப லேட்டஸ்......இது இப்பிடியே தொடர்ந்து கொண்டு போகும்... :lol:  :D


அது சரி அதிலை என்ன தப்பு எண்டு கேட்கிற உலகமடா இது.  :o

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை,

மாறாதது என்பது மாறாதது என்கிற வார்த்தை மட்டுமே.

உங்களுக்கு பெண் ஜீன்ஸ் பாண்ட் போடுவது சாதாரணம் - 100 வருடம் முந்திய தமிழர் பரம்பரைக்கு அதுவே தெய்வ குற்றம்.

இப்போ பிக்கினியை பார்த்து நாம் முகம் சுழிக்கிறோம் - மேலாடை என்பதே தமிழ்கூறும் நல்லுலகுக்கு களப்பிரர் காலத்தின் பின்பே அறிமுகமாயிற்று அதுவரை டுபீஸ் பிகினிதான் ( அதுதான் மார்பு கச்சை) எங்கட மூதாதைகள் கட்டினது.

இவ்வளவு ஏன் 50 வருடங்கள் முன்பு வரை கோவணத்துடன் வீதியில் நடப்பது சர்வசாதாரணம் - இப்போ?

குந்தி தேவிக்கு முந்திய ஒரு சிங்கிள் மதர் உண்டா?

திரெளபதைக்கு முந்திய ஒரு multiple sex partners வைதிருந்த பெண் உண்டா?

நேற்றைய நாகரீகம், இன்றைய அநாகரீகம், இன்றைய அநாகரீகம் நாளைய நாகரீகம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீனா,

ஒருவனுக்கு ஒருத்திதான் தமிழ்கலாச்சாரம் எண்டு காட்டும் ஆதாரம் ஒன்றையேனும் தாருங்கள்?

இல்லை என்பதற்க்கு இதிகாச, புராண, காப்பியங்களில் இருந்து பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும்.

திருமணத்துக்கு முன் பாலுறவு ( கட்டிக்க போகும் ஒருவனுடன் மட்டும்) இருப்பதில் என்ன ஒழுக்க கேடு இருக்கிறது?

தாலி கட்டுவதற்கு முன் செய்தால் ஒழுக்க கேடு, ஒரு சரட்டை கழுத்தில் மாட்டியபின் அதே ஆளுடன் செய்தால் அது உத்தமித்தனம் என்பது ரொம்ப செயற்கையாய் இருக்கிறது.

கோஷான், நீங்கள் சொல்வது போன்ற ஒரு வாழ்க்கை முறை, புராதன இந்தியாவிலும்.. மற்றும் சில ஆபிரிக்க நாடுகளிலும் இருந்ததாக வாசித்துள்ளேன்!' பின்னர் 'எயிட்ஸ்' போன்ற ஒரு விதமான நோய் பரவியதால் பாரிய அழிவு ஏற்பட்டதாயும், அதைத் தொடர்ந்து... சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைக்கு.. சமூக அமைப்பு தள்ளப்பட்டதாகவும் அறிந்தேன்! இதுவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறை உருவாகக் காரணம் என்று சொல்கிறார்கள்!

 

தலைவன், தலைவி, களவுகாதல், காந்தர்வ மணம் எல்லாமே தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன! அந்தக் காலத்தில் 'கூட்டுக் குடும்ப' வாழ்க்கை முறை இருந்ததால்.. குழந்தைகள் பிறந்தாலும், அவை அநாதரவாக விடப்படும் சாத்தியங்கள் மிகவும் குறைவாக இருந்தன! இந்த முறை இப்போதும் சில ஆபிரிக்கக் கிராமங்களில் நடைமுறையில் உள்ளதை அவதானித்துள்ளேன்! ஒரு பெண் குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் தகப்பன் யாரென்று தெரியாவிட்டால்.. அந்தக் குழந்தையின் தாய் வழிப் பாட்டனாரின் பெயரை அந்தக் குழந்தை தனது முதன்மைப் பெயராக எடுத்துக் கொள்கின்றது!

 

எமது தற்போதைய சமூக அமைப்பில், திருமணமான உறவுகளே.. உடைந்து போகின்ற கால கட்டத்தில் இப்படியான ' திருமணத்துக்கு முன்பான பாலியல் உறவுகளின்' விளைவுகள் மிகவும் விரும்பத் தகாததாகவே இருக்கும்! ஒரு தரமான ' சமூகக் கொடுப்பனவுத் திட்டம்' கூட எம்மிடம் இல்லை!

 

அத்துடன் இப்படியான உறவுகள் அனுமதிக்கப் பட்டால்... ஒரு சிகரட் தானே .. குடிச்சுப் பாப்பம் எண்ட மாதிரி ஆரம்பித்து.. இறுதியில் ' சிகரட் பழக்கமே' ஒருவரை ஆக்கிரமித்து விடுவது போல... பிற்கால வாழ்வில் ' பிறன் மனை விளைதலே' முடிவாக முடியும்!

 

மற்றும் படிக்கு, அவரவர் வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை போன்றவையே இப்படியான 'திருமணத்துக்கு முன்னரான' உறவுகளைத் தீர்மானிக்கின்றன!

 

எல்லா உறவுகளும் திருமணத்தில் முடிந்துவிட்டால், எமது ஊரில் தற்கொலைகளே இருந்திருக்காது! அதனால் தானோ என்னவோ... ' கவனம்' என்று எமது முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றுள்ளார்கள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணை ஒரு சைவப் பழமெல்லே, அதுதான் அந்த உதாரணங்கள்.

தவிரவும் திரெளபதை அம்மன் ஒரு பண்டைய தமிழ் சிறு தெய்வம் கூட.

ஈசன் என்று ஒருவர் வருவார் அவரிட்ட கேளுங்கோ சிவனும், குமார தெய்வமும் அம்மனும் கூட தமிழ் கடவுளர்தான் என்பார்.

இதில் சிவனுக்கு 2. குமார தெய்வத்துக்கும் 2.

கண்ணகி - காலத்திலே மாதவியும் அவர் கூட்டமும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளவே பட்டிருந்தன.

முன்பே சொன்னேன் பாரதி சொல்லும் வதுவை என்பது வேறொண்டும் இல்லை - living togeather தான்.

இப்படி கனக்கச் சொல்லலாம். எதுக்கும் நீங்களும் கொஞ்சம் தேடிப் பாருங்கோவன்.

அருமையான பதிவு புங்கை. பெருமாளின் கேள்விக்கு உங்கள் பதிவே நல்ல பதிலாயும் அமைக்கிறது.

 

கவனமாக இருந்தால் யாருடனும் எப்போதும் கலவியில் ஈடுபடலாமா?
மனத்தால் நிறையப்பேருடன் அனுபவிப்பதை விட பிரீதி / குளிசைகளுடன் நிறையப்பேருடன் நேரடியாக இச்சைகளை தீர்த்துக்கொள்ளலாமா?

 

செக்ஸ் என்பது நாங்களாகவே உருவாக்கியது   இல்லை அது எங்கள் உடலில் உள்ள ஒரு உணர்வு . அது சிலருக்கு கட்டுக்குள் இருக்கும் , சிலரால் முடியாது ... உதாரணமாக பசியை போல ... சிலருக்கு  அதனை அடக்கி வைக்கும் தன்மை அதிகம் . ஆனால் சிலர் அடிக்கடி பசிக்குது என்று கத்துவார்கள் .....ஏனெனில் அது  உடல் சார்ந்த விடயம் ....
 
எங்கள் கலாசாரத்தில் நல்லதும் உண்டு கெட்டவைகளும் உண்டு .   திறந்த மனதுடன் சொல்லுங்கள் உங்களுக்கு பலரை பர்க்கும் போது மனம் சன்சலப்படுவது இல்லையா ? மனதுக்குள் அழுத்தத்தினை வைத்து கடைசியில் மனம் வெடித்து சாவதனை விட அந்த ஆசையை தீர்ப்பதில் என்ன  தப்பு ...
 
தமிழ் கலாசாரம் என்று என்னத்தை கண்டீர்கள் .... வெளிநாடுகளில் சிவப்பு விளக்கு பகுதிகளை அரசாங்கங்கள் அனுமதித்து இருப்பது ஒரு சிறந்த விடயமே ... ஆசை அதிகம் உள்ளவர்கள்  அங்கு செல்லலாம் .... எங்கள்  இடங்களில் பாருங்கள்  அப்பாவி பெண்களை நாசம் செய்கின்றார்கள் ....
  • கருத்துக்கள உறவுகள்

பசிக்குது என்பதற்காக சாப்பாட்டுக் கடையில் கொள்ளை அடிக்க முடியாது. அதை தடுப்பது சமூக ஒழுங்கு. அதுபோல் தான்.. பாலியல் என்பது சமூக ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு உணர்வாக இருப்பதில் பல நன்மைகள் இருக்கிறது.

 

வெள்ளை வெள்ளை என்று உதாரணம் காட்டுகிறோம்.. பெருமளவு வெள்ளைகளும் ஒருவன் ஒருத்தின்னு தான் வாழுதுகள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அந்த நிலையை விட்டு விலக வேண்டியவர்கள் அதை இட்டு சஞ்சலப்படாமல் தமக்கு என்ன தேவையோ அதை நோக்கி செயற்படுகிறார்கள். அமெரிக்காவிலும் வேர்ஜினிற்றி பேசப்படுகிறது. காக்கப்படுகிறது. அரேபியாவிலும் அதே. ஆபிரிக்காவிலும் அதே. எம் சமூகம் அதனை கற்பு என்கிறது. பதங்கள் மாறனினாலும் மக்கள் உணர்வுகள்..பாலியல் சார்ந்து ஓர் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறது.

 

பாலியலையும் பசியையும் ஒப்பிடுவதை நான் சரியென்று கொள்ளமாட்டேன். பசி என்று குழந்தை அழுகிறது. பாலியல் என்று அது அழுவதில்லை. இயற்கை கூட பாலியலை.. ஒரு கால எல்லைக்குள் கட்டுப்படுத்த நினைக்கின்ற போது.. நாம் ஏன் எல்லை மீறணும்..?! அங்கு ஒரு ஒழுக்கத்தைப் பேணுவது பல சமூக தனி நபர் பாதுகாப்புக்கும் ஒழுங்குக்கும் உதவும் என்பது எங்கள் தனிப்பட்ட கருத்தாகும். அதையே நாங்க கடைப்பிடிக்கிறோம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.