Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் ஈழ வலைப்பதிவர்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Blogs எனப்படுகின்ற வலைப்பதிவுகள் பற்றி அறிந்திருப்பீர்கள். அண்மைக்காலம் வரை ஈழத்தின் கிளிநொச்சியிலிருந்து வலைப்பதிந்த நிலவன் மற்றும் அகிலன் ஆகியோர் யுத்த தீவிரத்தை அடுத்து சென்னை சென்றிருக்கிறார்கள். சென்னையில் அண்மையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரும் அங்கு ஈழத்தில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டள்ளனர். செஞ்சோலை சிறுவர் வளாகம் மீதான குண்டுத்தாக்குதலில் நேரடிச் சாட்சியான அகிலன் தனது அனுபவங்களை அங்குள்ளோர் முன்னிலையில் விபரித்த வீடியோ காட்சி இவ் இணைப்பில் இருக்கிறது. சந்திப்பில் கலந்து கொண்ட பலரும் ஈழத்தின் துயரம் தங்களை பேச்சடக்க வைத்ததாக குறிப்பிட்டு இருக்கின்றனர். நிலவன் அகிலன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கான தூண்டு கோலாக நம்ம லக்கி லுக் இருந்திருக்கிறார். நன்றி லக்கி லுக்..

http://chennapattinam.blogspot.com/2006/11/blog-post_19.html

காவடி, என்ன அப்பிடி மொட்டையா நன்றி சொல்லிப்போட்டு விட்டுப்புட்டீர்?

எம் தொப்புள் கொடி உறவே...

உதய சுரியன் நட்சத்திரமே...

மிடுக்கான சிங்கமே...

அஞ்சா நெஞ்சனே...

நீ வழிய பல்லாண்டு வாழிய...

நன்றிகள் பல பல...

அப்படி உடனுக்குடன் செய்தியை கவிதையாக்க வேணும். இல்லாட்டி என்ன மண்ணாங்கட்டிக்கு கவமணி என்று பெயர் வைத்திருக்கிறீர்.

எங்கை உடனை எடுத்துவிடும் பாப்பம்... நான் பாத்துக்கு கொண்டு நிக்கிறன்??

இல்லாட்டி ஓடிப்போய்விடு

கிழிந்தது முகமூடி...

தூக்கிக் கட்டு கோவணத்தை...

ஒழிந்தது உன்கர்வம்...

உதுதான்........... எனக்குள் ஒருவனோ? B) B) B)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் என்ரை கவிமணி பட்டத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அந்தப்பட்டத்தை எனக்கு அளித்தவர் நல்லவன். ஆக அவரால்தான் அந்த பட்டத்தை திரும்ப பெற முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி.

இதன்மூலம் நிறைய விசயங்களைத் தெரிந்துகொண்டேன்.

நான் அளித்தது "பாக்கோ" பட்டம்தான். கவிமணி பட்டம் என்னால் அளிக்கப்படவில்லை. அது வேறு யாரோ அளித்த ஞாபகம். (இவோன்???)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறுக்கு மன்னிக்கவும்.. அந்த நேரம் நிறைய பட்டம் தந்தார்கள்.. அதனால் யார் தந்ததென நினைவில்ல.. கவிப்பிரியன் எண்டு கூட யாரோ பட்டம் தந்தாங்க.. யாருப்பா அது..

  • கருத்துக்கள உறவுகள்

:angry: ரெம்ப முக்கியமான பிரச்சனை! வேறு என்ன பட்டம் வேணும் சொல்லுங்கோ! எல்லாத்தையும் நானே வழங்குறன்! ஆட்களை ஞாபகப்படுத்துற கஸ்டம் இருக்காது B)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் நீங்களா பாத்து என்ன தந்தாலும் எனகஇகு ஓகே.. பாத்துக்கொடுங்களேன்--

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ்... கோவணத்தை எப்பிடியப்பு தூக்கிக் கட்டுறது.. உதில பொருட்குற்றம் இருக்கிறது

நண்பர் அகிலன் மற்றும் நிலவன் ஆகியோர் சான்றிதழ் மற்ற எந்த ஆவணமுமின்றி சென்னை வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை மற்றும் கல்விக்கான ஏற்பாடுகள் செய்ய கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

சென்னையில் இதுபோன்ற ஈழத்தமிழ் அகதிகளுக்காக மறுவாழ்வு தர முன்னாள் இலங்கை அமைச்சரின் மகன் (தமிழர்) ஒருவரின் தலைமையின் கீழ் ஒரு அமைப்பு இருப்பதாக கேள்விப்பட்டேன். விசாரித்துப் பார்த்தால் சரியான தொடர்பு தகவல்கள் இங்கிருப்பவர்களிடம் இல்லை.

அந்த அமைப்பு பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்....

ஆம் அந்த முன்னாள் அமைச்சரின் மகன், தலைமைச்செயலகத்தில் பணி புரிந்தாந்தார், எல்லோருடனும், பணம் வாங்கிக்கொண்டுதான் அலுவல் பாப்பார், பணம்கொடுத்தால் எதுவும் செய்வார், ஈழத்தமிழருக்கு எதிராகவும் செய்வார். செய்து கொண்டு இருந்தார், தற்போதய நிலை தெரியவில்லை. :angry: :angry: :angry:

அவர் செய்வதைவிட, லக்கிமுடிந்தால் நீங்கள் ஒரு துரும்பை அவருக்காக அசைத்து போட்டாலும், அதன் பயன் அகிலனுக்கு உச்சத்தை கொடுக்கும். :blink:

Edited by Birundan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி.. 97 களில் தமிழகத்திற்கு படகில் வந்தவன் நான். மண்டபம் அகதிகள் முகாமில் காலத்தை கழித்த பின் கையைக் காலைப் பிடித்தல்ல.. காசைக் கீசைக் குடுத்து திருச்சி வந்தேன். ஆயினும் எந்த சான்றிதழும் நான் கொண்டு வரவில்லை. எனக்கு எந்த ஒரு பள்ளியிலும் அனுமதி தரவில்லை. ரி சி கேட்டார்கள். இடம் பெயர்ந்து வாறவன் ரி சியை வாங்கி கொண்டா வரமுடியும்.. ? நான் அப்போது இலங்கையில் சாதரணதரம் படித்து முடித்திருந்தேன். ஆயினும் பரீட்சை முடிவுகள் வரவில்லை. நான் படித்த பாடசாலை முல்லைத்தீவில் இருந்தது. முழு இலங்கையுடனுமே முல்லைத்தீவு தொடர்பற்றிருந்த காலத்தில் இந்தியாவிலிருந்து எப்படி சான்றிதழ்கள் எடுப்பது..

1 வருடம் எவ்வளவோ முயன்றேன்.. யாரும் எனக்கு அனுமதி தருவதாயில்லை.. அட போங்கடா.. நீங்களும் உங்க பள்ளியும்.. சாட்சிகாரன் காலில விழுறதை விட சண்டைக்காரன் காலில விழுவம் என்று விட்டு கொழும்பு போய் விட்டேன்.

தந்தை செல்வாவின் மகன் சந்திரகாந்தன் அல்லது காசன் என்ற ஒருவர் இருக்கிறார். ஆனால் நான் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்த அந்தக் காலத்தில் அவர்களது செயற்பாடு பற்றி அறிந்ததேயில்லை..

உண்மையில் அங்கு வருகின்ற அகதிகளுக்கு வெளிநாடுகளில் யாராவது உறவினர்கள் பண உதவி செய்தாலன்றி மற்றும் படி அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறி தான்.

குறுக்ஸ்... கோவணத்தை எப்பிடியப்பு தூக்கிக் கட்டுறது.. உதில பொருட்குற்றம் இருக்கிறது

நாங்கள் மரபுகளை மீறி புரட்சியாக புதுக் கவிதை வடிக்கும் போது பொருட்குற்றமாவது மண்ணாங்கட்டியாவது. குற்றங்குறைகள் காணுறதைவிட்டிட்டு ஒருவன் உணர்வுகளை வெளிப்படுத்திறான் என்று ஊக்குவியுங்கோ. நாளைக்கே நான் புதுக்கவிதை கரந்தடி கவிமணி ஆகலாம். றாக்கற்றும் விடலாம் அணுகுண்டும் வெடிக்க வைக்கலாம். :wacko:

  • கருத்துக்கள உறவுகள்

லக்கி உங்கள் உதவும் மனப்பான்மைக்கு நன்றிகள் ஆனால் நீங்கள் சொன்ன அந்த உதவி செய்கின்ற அமைச்சரின் மகன் சந்திர காசனை தான் கேட்டிருக்கறீர்கள் என நினைக்கிறேன். அவர் போன்ற ஒருவரிடம் உதவிகள் பெறுவதை விட முடிந்தளவு நீங்களே ஏதாவது உதவிகள் செய்தால் புண்ணியமா போகும். ஏனெனில் அவர்கள் போன்றவர்கள் பசிவயிற்றுடன் வருபவனிற்கு உணவை காட்டியபடியே தங்கள் சுயலாபகணக்கு பார்ப்பவர்கள். எனவே தமிழ்நாட்டில் பணம் மற்றும் தனிப்பட்ட செவ்வாக்கை பயன்படுத்தி செய்ய முடிந்தால் செய்யுங்கள்(இப்படி எழுதியதற்கு மன்னிக்கவும் காரணம் எனக்கும் தமிழ் நாட்டிற்கும் 20 ஆண்டுகளிற்கு மேலாக நல்ல நெருக்கம் அந்த அனுபவம்தான்)

சென்னையில் ஏதும் முயற்சிக்க இயலாது :)

சென்னை வந்த அனுபவம் யாருக்காவது இருப்பின், இது நன்றாகவே தெரியும்....

நம்முடைய களத்தில் இருக்கும் இன்னொரு நண்பர் நிலவனுக்கும், அகிலனுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அவர் முயற்சி வெற்றி பெறட்டும்....

மற்றபடி நீங்கள் சொன்ன சந்திரகாசனைப் பற்றிதான் நான் கேள்விப்பட்டேன் போலிருக்கிறது. அவரைப்பற்றி எச்சரித்ததற்கு நன்றி.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ் கோவணத்தை தூக்கி தலையில் கட்டுவாராக்கும் காவடி

தமிழீழ தந்தை செல்வாவின் மகனா இப்படி......?

தமிழனை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.....!

இப்படி நான் சொல்லவில்லை தந்தை செல்வாவே சொன்னது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரகாசன் பற்றி பல புகார்கள் உள்ளன. இதற்கு முன் அவருடைய சில பேட்டிகளைப் பார்த்திருக்கிரேன். புலிகளின் கொள்கைகட்கு அவர் முரன் பட்டவர் போலும், தான் ஓர் தூர நோக்கோடு பார்ப்பது போலவும் பேசுவார்.

பெயருக்காக அலையும் இன்னோர் பெயர் வழியோ இவர் என்று தான் எனக்கு எண்ணத் தோன்றியது!

கடவுள் தான் காக்க வேனும் என்பது.... கைவிடப்பட்ட நிலை.....

நாங்கள் அப்படி அல்ல....நம் தமிழர் அப்படி அல்ல....

நம் வாழ்வாதாரத்தை தக்கவைக்க தீவிரமாக ஓர் போராடும் இனம்.... :angry:

மேலும் ஒரு வேண்டுகோள்......

கோவனத்தை தூக்கி கட்டமுன்.... 5 கி.மீற்ற்ர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்க்களை வெளியேற சொல்லி விடுங்கள்....பாவங்கள் .. அவர்கள் ஏன் அவஸ்த்தைப்படுவான்...? :):):mellow:

தம்பி கனிதன்

தலைவரின் படம் ஒன்றைப் போட்டிருக்கிறீர்கள் என்று தெரியுது. ஆனால் அது தெளிவில்லாமல் இருக்கு. எனவே அப்படத்தின் ஒறிஜினல் பைலை இங்கே பதிவு செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சந்திர காசன் பற்றியும் இங்கு விவாதிக்க படுவதான் அவர் பற்றிய சில தகவல்கள் நான் எழுதிய பக்கங்களில் இங்கு http://www.yarl.com/forum3/index.php?showt...5151&st=440 பாரக்கவும்மேலதிகமாக இவரே இன்றும் ஈ என் டி எல் எவ் வை கட்டுபடுத்துபராகவும் அதோடு தமிழ் நாட்டில் ஒரு பல்கலை கழகத்தை இயக்குபவராகவும் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி.. மட்டகக்களப்பில் இருந்து சிறையுடைப்பின் போது டேவிட் என்ற ஒருவர் தற்போது தமிழகத்தில் இருக்கிறார். அவர் எழுதிய நூலொன்றினை தற்போது வாசிக்கிறேன்.. கென்யா நாட்டில் நனரொன்றை நிர்மாணித்தவராம். தமிழீழத்திற்கான கட்டுமானப் பணிகள் குறித்த தனது கனவுகளை நூலெங்கும் சொல்கிறார்.. ஆரம்பத்தில் புளொட்டுக்காக வேலை செய்தவரை கடைசியில் புளொட்டே தேடித்திரிந்ததாம்..

மிகுந்த கல்வியறிவு கொண்ட அவர் தமிழகத்தில் அடைபட்டுப்போனது இழப்பென்றே கருதுகிறேன்.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா..

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பேட்டி ஒன்று இந்தியச் சஞ்சிகை ஒன்றில் முன்பு வந்திருந்தது. ஆனால் அவர் மிகவும் வயது முதிந்தவர். அவர் மட்டுமல்ல, காசியாண்ணா கூட, இந்திய அரசினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி.. மட்டகக்களப்பில் இருந்து சிறையுடைப்பின் போது டேவிட் என்ற ஒருவர் தற்போது தமிழகத்தில் இருக்கிறார். அவர் எழுதிய நூலொன்றினை தற்போது வாசிக்கிறேன்.. கென்யா நாட்டில் நனரொன்றை நிர்மாணித்தவராம். தமிழீழத்திற்கான கட்டுமானப் பணிகள் குறித்த தனது கனவுகளை நூலெங்கும் சொல்கிறார்.. ஆரம்பத்தில் புளொட்டுக்காக வேலை செய்தவரை கடைசியில் புளொட்டே தேடித்திரிந்ததாம்..

மிகுந்த கல்வியறிவு கொண்ட அவர் தமிழகத்தில் அடைபட்டுப்போனது இழப்பென்றே கருதுகிறேன்.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா..

சயந்தன் நீங்கள் சொல்பவரை நானும் அறிந்திருக்கிறேன் அனால் நேரில் பார்த்தது இல்லை புளொட் அமைப்பில் இருந்தவர் புளொட்டில் சந்ததியாருடன் சேர்ந்து வேலைகள் செய்தவர் பின்னர் புளொட்இயக்க உட்படுகொலைகளின் போது இவரையும் கொல்ல புளொட் தலைமை உத்தவிட்டு இவரை கடத்தி கொண்டு போகும் வழியில் அதன் வாகன சாரதி இவரை தப்ப விட்டதாக கேள்விபட்டிருக்கிறேன் தமிழ் நாட்டில் திருச்சி பகுதியில் இவர் வசிப்பதாக சிலர் சொன்னார்கள் இவர்தான் வவுனியா விவசாய பண்ணை மற்றும் கொக்கிளாய் நாயாறு குடியேற்ற பண்ணைகளை நிர்மாணித்ததாகவும் எங்கோ படித்த ஞாபகம் விபரங்கள் ஏதும் கிடைத்தால் அறிய தருகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் டேவிட் ஐயாவின் கதை மீண்டும் அடிபடுகிறது. இவர்பற்றி தமிழ்வலைப்பதிவொன்றில் ரமணிதரன் கந்தையா உட்பட சிலர் கதைத்தது ஞாபகம் வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.