Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவேன்: மஹிந்த

Featured Replies

article_1432268989-01.jpg

 

 
இந்த ஆட்சியை மாற்றி, நாட்டில் மூவின மக்களும் மகிழ்ச்சியாக வாழும் ஆட்சி மாற்றமொன்றை விரைவில் உருவாக்குவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.
 
அம்பாறை, உகன வீதியிலுள்ள போதி விஹாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
'நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத காலத்தின் போது மதத்தலைவர்கள், கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலதரப்பினர் கொல்லப்பட்ட சம்பவத்தை எண்ணிப்பாருங்கள். அன்றிருந்த பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் நானே. சுபீட்சம் ஏற்படக் காரணமாக இருந்தவனும் நானே. எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நல்ல திட்டங்களையும் பணிகளையும் ஒரு போதும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்' என்று கூறினார்.
 
அத்துடன், 'எனது தலைமையில் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நல்ல பல திட்டங்களை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. என்னை அரசியலிலிருந்தும் மக்கள் மனத்திலிருந்தும் ஓரங்காட்டுவதற்கான முயற்சிகள் திரை மறைவில் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது' எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், 'தற்போது இந்த நாட்டில் நடைபெறுவது என்ன? எனது ஆதரவாளர்கள் மற்றும் சமுர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் பழிவாங்கப்படுவதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பருப்பு உட்பட பல பொருட்களை விலையேற்றி  மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்தியுள்ளனர்' எனத் தெரிவித்தார்.
 
'மக்களின் விரும்பமின்றி மாகாணசபை ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிரதேச சபைகளைக் கலைத்து, மக்களுக்கு பணி செய்தவர்களை பழிவாங்குகின்றனர். எனவே, இஸ்திரமில்லாத இந்த ஆட்சி நாட்டுக்கு வேண்டுமா? அல்லது நிம்மதியான சபீட்சமான ஆட்சி வேண்டுமா? என உங்களைப் பார்த்துக் கேட்கின்றேன்' என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான விமல வீர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் பியசேன உட்பட மதகுருமார்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொரும்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
article_1432269010-03.jpg
 
article_1432269024-05.jpg
 
article_1432272551-04.jpg
 
 
 
//www.tamilmirror.lk/146594#sthash.ozvJqwiY.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

- ஜூனில் புதிய விசாரணைக்குழு.

- அதைக்காரணம் காட்டி இன்னொரு விசாரணை தேவையில்லை என ஐநா செப்டம்பரில் அறிவிப்பு.

- அப்படி செய்யாவிட்டால் செப்டம்பருக்குப்பின் நடக்கப்போகும் தேர்தலில் தோல்வி நிச்சயம் என் மைத்திரி அமெரிக்காவுக்குத் தெரிவிப்பார்.

- ஐநா விசாரணை தவிர்க்கப்பட்ட பின்னர் நடக்கும் தேர்தலில் மகிந்த அமோக வெற்றி. :o

- சுபம்.

  • கருத்துக்கள உறவுகள்

- ஜூனில் புதிய விசாரணைக்குழு.

- அதைக்காரணம் காட்டி இன்னொரு விசாரணை தேவையில்லை என ஐநா செப்டம்பரில் அறிவிப்பு.

- அப்படி செய்யாவிட்டால் செப்டம்பருக்குப்பின் நடக்கப்போகும் தேர்தலில் தோல்வி நிச்சயம் என் மைத்திரி அமெரிக்காவுக்குத் தெரிவிப்பார்.

- ஐநா விசாரணை தவிர்க்கப்பட்ட பின்னர் நடக்கும் தேர்தலில் மகிந்த அமோக வெற்றி. :o

- சுபம்.

 

ஆமேன்.......இதயத்தால் இணைந்தோர் விவாகரத்து.......மீண்டும் பெண்பார்க்கும் படலம் ஆரம்பம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தானே ஆட்சி மாற்றம்.. அதுவும் சம்பந்தன் சுமந்திரனுக்கு நல்லாட்சி மாற்றம்..

 

அதுக்குள்ள இன்னொரு ஆட்சி மாற்றமா. ஆளை மாத்திறதெல்லாம்.. ஆட்சி மாற்றம் என்றாக்கிட்டாங்கப்பா. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கூட்டமைப்புக் கட்டாயம் எதிர்க்கும். காரணம் இணக்க அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் ஆட்சிக்கு, அதாவது பிரதமராக, சந்தர்ப்பம் உள்ளதா?

அவர் நிற்கும் மாவட்டத்தில், அவர் அதிக எண்ணிக்கையில் வெல்வார். ஆனால் அவரது அடிப்பொடிகள் வெல்வது கஸ்டம். காரணம் வாக்குகள் மூன்றாகப் பிரியலாம். சு.க, ஜ.தே.க, மகிந்தா கட்சி.

எனவே இவர் வருவது கஸ்டம். ஆனாலும் அவரது நோக்கம், சில MP க்களுடன் அரசியல் பேரம் நடாத்தி வழக்குகளில் இருந்து தப்பிக் கொள்வது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
 
மஹிந்த ஆதரவு அமைச்சர்கள் விலகல்.
 
mahi%20and%20thondai_14.jpg?itok=kkgTjvp
 

அமைச்சர்கள் நால்வர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இன்று (21) ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்களான டிலான் பெரேரா, சி.பீ. ரட்னாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரே ராஜினாமா செய்தவர்களாவர்.
 
இவர்கள் தங்களின் ராஜினாவுக்கான காரணத்தை விளக்கி நான்கு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றினையும் ஜனாதிபதி மைத்தழரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் இது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றிலும் விளக்கமளித்துள்ளனர்.
 
இங்கு கருத்து தெரிவித்த டிலான் பெரேரா, இன்னும் சில தினங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

http://www.eelanatham.net/articles/2015/05/22/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மீண்டும் வருவது புலத்து அன்பர்களுக்கு மிகவும் இனிப்பானது. ஆனால் அது ஓருபோதும் நடைபெறப்போவதும் இல்லை. அன்பர்களின் வியாபாரம் களைகட்டப்போவதுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மீண்டும் வருவது புலத்து அன்பர்களுக்கு மிகவும் இனிப்பானது. ஆனால் அது ஓருபோதும் நடைபெறப்போவதும் இல்லை. அன்பர்களின் வியாபாரம் களைகட்டப்போவதுமில்லை!

 

மகிந்தாவின் குடியுரிமை பறிக்கப்படாவிடின், மீண்டும் மகிந்தா பிரவதமராவது உறுதி....புலத்து புலி எதிர்பாளர்களை விட சிறிலங்காவின் மகிந்தா ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகம் ,அதைவிட இனவாதிகள் இன்னும் அதிகம்.....

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் ஆட்சிக்கு, அதாவது பிரதமராக, சந்தர்ப்பம் உள்ளதா?

அவர் நிற்கும் மாவட்டத்தில், அவர் அதிக எண்ணிக்கையில் வெல்வார். ஆனால் அவரது அடிப்பொடிகள் வெல்வது கஸ்டம். காரணம் வாக்குகள் மூன்றாகப் பிரியலாம். சு.க, ஜ.தே.க, மகிந்தா கட்சி.

எனவே இவர் வருவது கஸ்டம். ஆனாலும் அவரது நோக்கம், சில MP க்களுடன் அரசியல் பேரம் நடாத்தி வழக்குகளில் இருந்து தப்பிக் கொள்வது.

இதனால்தான் அவருக்கு வெல்லும் சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கிறேன் .....
சு க   ஐ தே க  இரண்டிற்கும் ஒரே பகுதிதான் வாக்குகளை பிரிக்க போவது.
 
இனவாதிகளின் வாக்கு மகிந்தவிற்கு உறுதியானது.
அவருடைய வாக்கு வங்கியில் பிரிவு வர போவதில்லை.
 
தேர்தலில் மகிந்த நிற்கும் சாத்தியம் இருந்தால் ....
உள்ளே தூக்கி போடுவார்கள் என்றுதான் நான் நினைகிறேன்.

மகிந்தவை விட பல மடங்கு இனவாதி எதிர்காலத்தில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரலாம்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.