Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதரின் பாதையில் போகிறார் விக்கி! - சுசில் பிரேம்ஜயந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரதரின் பாதையில் போகிறார் விக்கி! - சுசில் பிரேம்ஜயந்த

[Thursday 2015-05-28 09:00]
susil-premajayantha-380-seithy.jpg

வரதராஜப்பெருமாள் அன்று எவ்வாறு தனது தனிநாட்டுக் கோரிக்கையை ஆரம்பித்தாரோ அதையே இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்னெடுத்து செல்கின்றார்.

 

இவர்கள் தெரிவிப்பதைப்போல் வடக்கு,கிழக்கு பூமி அவர்களின் தாயகம் அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

  

 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

 

புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாம் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். இந்த மாணவிக்கு நடந்த மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாட்டில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி பெண்களின் மானத்தையும் உயிரையும் பறிக்கும் நபர்கள் தொடர்பில் நாம் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

 

அதேபோல் இந்த மாணவியின் ஆத்மா சாந்தியடையவும் நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம். எனினும் இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சொல்லும் செய்தி என்னவென்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது ஆட்சியில் யுத்தத்துக்கு பின்னரான கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கில் இவ்வாறான மோசமான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஒரு மாணவியை ஒன்பது ஆண்கள் வல்லுறவுக்குட்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் மோசமானதொரு நிலைமையாகும். இவ்வாறு மிருகத்தனமான சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுவது மிகவும் குறைவாகும்.

 

வடக்கில் பொலிஸ் பாதுகாப்பு சரியாக இருக்குமானால் யாரும் இவ்வாறான செயற்பாடுகளை செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த அரசாங்கம் நல்லாட்சி, மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டு மக்களை சீரழிக்கும் வகையில் தமது பாதுகாப்புகளை மேற்கொள்கின்றது.

 

ஜனாதிபதி வடக்குக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை மாற்றியமைக்க கோருகின்றார். ஆனால் சட்ட ஒழுங்குகளுக்கு பொறுப்பான அமைச்சர் வாய் மூடி நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார். இதுதான் எமது கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ள வேறுபாடு என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் இந்த மாணவியின் படுகொலை இடம்பெற்றிருக்காது .

 

ஆனால் அரசாங்கம் வடக்கில் சிவில் செயற்பாடுகளை தடுத்து பொலிஸாரின் கைகளை கட்டிப்போட்டுவிட்டனர். எனவே இந்த மாணவியின் படுகொலைக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக வடக்கில் பாதுகாப்பு அகற்றப்பட்டு விட்டது. எனவே இந்த ஒரு சம்பவத்துடன் குற்றங்கள் முடியப்போவதில்லை. நாட்டில் சிவில் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் பலப்படுத்தப்படாவிடின் இந்த மாணவிக்கு நடந்த கொடுமையைப்போல் இன்னும் பல மாணவிகள் சீரழிக்கப்படுவார்கள்.

 

எமது ஆட்சியில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தின் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தது. எமது இராணுவ வீரர்கள் மக்களோடு மக்களாய் ஒன்றிணைந்து அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தினர். வடக்கில் சில அசம்பாவிதங்கள் நடந்திருந்தாலும் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் எவையும் நடக்கவில்லை. ஆனால் இன்று நடப்பவை மிகவும் கொடுமையானது.

 

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ வீரர்களே யுத்த குற்றத்தை பொறுப்பேற்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருப்பது மிகவும் மோசமானதொரு கருத்தாகும். இலங்கை மீதான ஜெனிவா அறிக்கை வரமுன்னரே இவர்கள் இங்கிருந்து அறிக்கையினை தெரிவித்து விட்டனர். வடக்கு, கிழக்கை தமது பூமியாக மாற்றிக்கொள்ள இவர்கள் எடுக்கும் முயற்சியே இவை அனைத்துமாகும்.

 

அன்று வரதராஜப்பெருமாள் எவ்வாறு தனது தனிநாட்டு கோரிக்கையை ஆரம்பித்தாரோ அதையே இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்னெடுத்து செல்கின்றார். இவர்கள் தெரிவிப்பதைப்போல் வடக்குக் ,கிழக்கு பூமி அவர்களின் தாயகம் அல்ல. இது இலங்கை என்ற நாடு. இங்கு அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழவேண்டும். மேலும் வடக்கில் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது அவற்றை பிரதமர் கவனத்தில் கொள்ளாதுள்ளார்.

 

ஆனால் புங்குடுதீவு மாணவி விடயத்தில் முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக் ஷ வை மன்னிப்பு கேற்க சொல்கின்றனர். எனவே இந்த அரசாங்கத்தில் முழுமையாக பழிவாங்கும் அரசியல் மட்டுமே இடம்பெறுகின்றது என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132881&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் சம்பந்தங்களும்,சுமத்திரங்களும் உருவாகினாலும் நீங்கள் திருந்தப்போவதில்லை

பிரபாகரனை எப்படி உருவாக்கினிங்களோ அப்படியே மீண்டும் ஒருவரை உருவாக்க இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் திருந்துவார்கள் என கனவு கனவு காண்கிறோம்.

உண்மை தான் மேற்குலகின் இரு கைகளிலும் இரண்டு கடிவாளங்கள்.ஒன்று சிங்கள அரசு இன்னொன்று அதி மேன்மை தங்கிய முன்னை நாள் நீதியரசர் அப்புக்காத்துகளுக்கு ஒரு சில படி மேலே என்றுதான் கூறவேண்டும்.சம்பந்தர் குழாம் இந்தியாவுடன் முடக்கம்.ஆகவே மேற்குலகின் முடிவில் தான் இனிமேல் இலங்கையின் நலன் உண்டு என்பது மறுப்பதற்கில்லை.ஆகவே சிங்களம் தான் உணர்ந்து நடக்க வேண்டும்.முட்கம்பி வேலிக்குள் தமிழரை அடைத்த சிங்களமே!மீண்டும் அப்படியொரு வேலியை தமிழர் மேற்குலகின் துணையுடன் போடாதிருக்க அவர்களின் உரிமையை விட்டுக்கொடு.
 
 

Edited by BLUE BIRD

 

முட்கம்பி வேலிக்குள் தமிழரை அடைத்த சிங்களமே!மீண்டும் அப்படியொரு வேலியை தமிழர் மேற்குலகின் துணையுடன் போடாதிருக்க அவர்களின் உரிமையை விட்டுக்கொடு. வட மாகாண முதலமைச்சர் ஜூலையில் அமெரிக்கத்தமிழரின் அழைப்பின் பேரில் வழைகுடா நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

பரவாயில்லை நல்லாத்தான் போட்டுக் குடுக்கின்றீர்கள்.
 
வாழ்த்துக்கள்
 
வாழ்க வளர்க உங்கள் சேவை

 

பரவாயில்லை நல்லாத்தான் போட்டுக் குடுக்கின்றீர்கள்.
 
வாழ்த்துக்கள்
 
வாழ்க வளர்க உங்கள் சேவை

 

 

இதில் என்ன போட்டு கொடுக்க இருக்கின்றது.எதை கூறுகின்றீர்கள்? விரும்பினால் சில தகவல்களை தனி மடலிலும் அறியத்தரலாம்.பிழைகள் இருந்தால் உடனடியாகவே திருத்தி கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு நடந்த கொடுமைகளைப் பற்றிப் பேசுறதே இப்ப பிரச்சனை கண்டியளோ!ஏனெண்டாள் நாங்கள் நல்லாட்சியின் பங்காளிகள். நல்லவர்களின் மனதைப் புண்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. இதை நான் சொல்லேல்லை. பங்காளியள் சொல்லீனம்!

இதில் என்ன போட்டு கொடுக்க இருக்கின்றது.எதை கூறுகின்றீர்கள்? விரும்பினால் சில தகவல்களை தனி மடலிலும் அறியத்தரலாம்.பிழைகள் இருந்தால் உடனடியாகவே திருத்தி கொள்ளலாம்

 

நன்றி
 
எனது கோபத்தால் இடப்பட்ட இக்கருத்து எனது பாணியிலிருந்து விலகியதே. இக் கோபம் உங்கள் மீதானதல்ல ஆனால் உங்கள் கருத்து மீதானது. விக்னேஸ்வரனின் வருகை ஒன்றும் இரகசியமானதல்ல எனவே கோபம் அவர் வருகையை நீங்கள் குறிப்பிட்டதலானதல்ல. ஆணி மேல் நடப்பதைப்போல் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் இருப்பதும் உங்களுக்குத் தெரியாயதில்லை. 
 
ஆனால் "முட்கம்பி வேலிக்குள் தமிழரை அடைத்த சிங்களமே! மீண்டும் அப்படியொரு வேலியை தமிழர் மேற்குலகின் துணையுடன் போடாதிருக்க அவர்களின் உரிமையை விட்டுக்கொடு" என சும்மா இருக்கும் சிங்களத்தை தீண்டி விக்கியின் வரவிற்கு அல்லது அவரது நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டை போட நாமே அடி எடுத்துக் கொடுக்க வேண்டுமா என்ற தார்மீக கோபம்.
 
எனது கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத போதும் அதனை நாகரீகமாக தனிமடலிலும் களத்திலும் கேள்வி எழுப்பும் உங்களுக்கு எனது நன்றிகள் இவ்வாறு ஆரோக்கியமாக கருத்தாடும் உங்கள் கருத்திற்கான எனது பதில் கொஞ்சம் நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் - மன்னிக்கவும். முடிந்தவரை "போட்டுக் குடுக்கின்றீர்கள், வாழ்க வளர்க உங்கள் சேவை" போன்ற சொல்லாடல்களை தவிர்க்க முயற்சிக்கின்றேன்.
 
மறுபடியும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.