Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்திம பொழுதும் ஒற்றைக் குடையும்...

Featured Replies

34q0i09.jpg

இனியவளே...

தளர்நடை பாதங்களுக்கு உனது கரங்களின் 

தேவையை  பூர்த்தி செய்யும் இந்த குடை தான்

இப்போது துணையாயுள்ளது

குடைக்கார ஐயாவிற்கு சாப்பாடு போடு

குடைக்கார கிழவனை திண்ணையில் துங்க விடாதே

குடைக்கார தாத்தாவிற்கு லூசு பிடிச்சுருக்கு  என

ஒற்றை அடையாளமுமாய், வாழ்தலின் சான்றாயுமுள்ளது

அடைமழை நாளில் நனைந்து வருமென்னை

துவட்டியபடி வரும் உனது வசவுகளை போலல்லாது

மௌனமாய் நின்று காக்கிறது பெருமழைகளில்

முன்னெப்போதையும் விட பலவீனமாய் இருந்தாலும்

இந்த குடையை விரிக்குமளவு திரானியோடிருப்பதில்

எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு 

பிராயத்தின் நினைவுகள் அலையோடும் பொழுதுகளில்

குடையை விரித்து சுற்றியபடி இருப்பேன்

கானல் வெளியில் நாமிருவரும் குடைக்குள்

நடந்து போவதுபோல் கனவுகளும் வருவதுண்டு

நீயில்லாது போன கணதியில் குடையை அணைத்தபடி

ஆற்றாமையில் அழுவதும் வாடிக்கை யாகிவிட்டது 

கடவுளரை கைவிட்டு காலங்கள் ஆனபின்னும்

ஆயுதபூஜை நாட்களில் குடைக்கு திருநீறு பூசுவதுண்டு

ஆற்றங்கரையில் உடுப்புகளை உலர்த்தும் நாளில்

வீடாய் மானத்தை மறைப்பதும் இந்தகுடை தான்

அநாகரிக மனிதர்களுக்கு தட்டிக்கொண்டு நுழைய தெரிவதில்லை

வாழ்வின் மீதான விரக்தியில் குடையை

குப்பைதொட்டியில் வீசியெறிந்த கதையுமுண்டு

"வெறும் குடை தானே" திருப்பிகாட்டவில்லை அதன் கோவத்தை

குடைக்கம்பியினுள் பத்திரப்படுத்தியிருந்த உனது

நிழற்படத்தை காண்கையில் இதை சொல்ல தோன்றியது

யாதுமானவளே...

உயிர் உழவுகளில் அறுவடை செய்த பயிர்கள்

விட்டுசென்ற ஒரே சொத்து இந்த குடை

அதிலொன்றும் அபத்தமில்லை எனக்கு

அந்திமத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்

எனது கவலையெல்லாம் ஒன்றே ஒன்று  

" எனக்குப்பிறகு இதை யார் பாதுகாப்பார்? "

~ ராஜன் விஷ்வா

29.05.15

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தடி, செருப்பு, கைப்பை , இத்யாதி  என்று

எங்கள் அன்புக்குரியவர்களின் பாவனைப்பொருட்கள் மீதும்

எங்களுக்கு அலாதிப்பிரியம் இருக்கும்.
கவிதைக்கு நன்றி விஸ்வா

தொடர்ந்தும் பாதுகாக்க முடியாவிட்டால் என்னிடம்  அனுப்பிவிடுங்கள் :D

  • தொடங்கியவர்

அதை வைச்சு ஒண்டுமே செய்ய முடியாது எண்டு தான் கவிதயாச்சும் எழுதுவமே எண்டு எழுதி போட்டேன் ..... :D

பிய்ந்து போன குடையை வைத்து வாத்தியார் என்ன செய்ய போகிறாராம்?? :rolleyes:

எப்படியோ இது கவிதை எண்டு ஒருத்தரை நம்ப வச்சாச்சு :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

அதை வைச்சு ஒண்டுமே செய்ய முடியாது எண்டு தான் கவிதயாச்சும் எழுதுவமே எண்டு எழுதி போட்டேன் ..... :D

பிய்ந்து போன குடையை வைத்து வாத்தியார் என்ன செய்ய போகிறாராம்?? :rolleyes:

எப்படியோ இது கவிதை எண்டு ஒருத்தரை நம்ப வச்சாச்சு :lol:

பிராயத்தின் நினைவுகள் அலையோடும் பொழுதுகளில்

குடையை விரித்து சுற்றியபடி இருப்பேன் :D :D :lol:

  • தொடங்கியவர்

பிராயத்தின் நினைவுகள் அலையோடும் பொழுதுகளில்

குடையை விரித்து சுற்றியபடி இருப்பேன் :D :D :lol:

ஹஹா..... வாத்தியார் வாத்தியார் தான், மாணவன் என்றும் மாணவன் தான்... :)

  • கருத்துக்கள உறவுகள்
நானும் இப்படி வாழ்ந்து விட்டு போன ஒருவர் வைத்திருந்த இளநீர்ப் போத்தல் ஒன்று வைத்திருக்கிறன்..அதற்குள் அய்யா(அம்மாவின் தந்தையார்) சில்லறைக் காசு போட்டு வைந்திருந்து அரை குறையாக இருக்கும் போது இறந்து விட்டார்..
தற்செயலாய் கிடைத்த பரிசு..அந்த போத்தலை கடந்த ஏழு வருசமா நான் வைச்சு இருக்கிறன்..அதற்குள்ளயே நானும் சில்லறை போட்டு வைக்கும் பழக்கத்தை கொண்டதனால் அந்தப் போத்தல் எப்போதும் காசோடு தான் இருக்கும்.ஒருவர் இருக்கும் போது தெரிவதில்லை..இல்லாமல் போனதின் பின் தான் அவர்களைப்பற்றிய  நினைவுகள் அதிகம் மனதை தாக்கும் இல்லயா.இனிய நினைவுகள்..
  • கருத்துக்கள உறவுகள்

குடையை  ஒரு பூங்காவுக்கு அருகில் வைத்து விடவும்...! காதலர்களால் பாதுகாக்கப்படும்...! :lol::)

குடையைக் கொண்டு மனதைக் குடைவதுபோல் ஒரு கவிதை...!! :D

  • 2 weeks later...

எனக்கும் இப்படியான பழக்கம் இருக்கிறது, சில்லறை காசுகளை எடுத்து தேனீர் குவளையில் போட்டு வைப்பேன், வீட்டில் சில்லறைகள் அங்கங்கு கிடப்பது ஏனோ எரிச்சலூட்டும், எடுத்து அந்த பீங்கான் குவளையில் போட்டு வைப்பேன், பேருந்தில் பயணம் செய்யும் நாட்களில் நடத்துனருக்கு சில்லறை கொடுக்க வில்லையென்றால் வாய்க்கு வந்தபடி ஏதாவது சொல்லுவார், ஆகவே அன்றைய நாட்களில் அதிலிருந்து சில்லறையை எடுத்து கொள்வேன், தினமும் காலையில் அப்பா குளித்து சாமி கும்பிட்டு விட்டு அதிலிருந்து காசு எடுத்து உண்டியலில் போடுவார். தம்பியும் அப்பப்போது அதிலிருந்து திருடி கொள்வான்... :D

வருகைக்கு நன்றிகள் யாயினி அக்கா :)

குடையை  ஒரு பூங்காவுக்கு அருகில் வைத்து விடவும்...! காதலர்களால் பாதுகாக்கப்படும்...! :lol::)

குடையைக் கொண்டு மனதைக் குடைவதுபோல் ஒரு கவிதை...!! :D

காதலர்கள் குடையை  பாதுகாப்பர்களா ?? இல்லை  குடை அவர்களை பாதுகாக்குமா  ??? :D

  • கருத்துக்கள உறவுகள்

எம் இளமைக்கால இனிய நினைவுச் சின்னங்களையெல்லாம் ஒரு இரவுப்பொழுதில் இழந்த ஈழத்தமிழர் நாம். ஞாபகங்கள் மட்டுமே எம்முடன் கூட கைகோத்து நடக்கின்றன. என்றாலும் இங்கும் பல என்னால் பொத்தி வைக்கப்பட்டுள்ளன. என் கணவனின் கையில் இருந்த மணிக்கூடு பல வருடமாக ஓடி ஓய்ந்துபோய் உள்ளது. அவர் குடித்த கோப்பிக்கப். நான் அவரது இறுதிக்கணங்களில் அணிந்திருந்த சட்டை அம்மா அணிந்திருந்த தோடு இன்னும் பல குடைக்குள் மழையாக குவிந்து கிடப்பவை பல. ராஜன்விஸ்வா எம் பொக்கிசமான நினைவுகளை எல்லாம் தன் கவிதை கொண்டு வருடிவிட்டார். கவிஞர் ராஜன் விஸ்வாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது விஷ்வா

என் 

அடையாளமாய் இன்னும்

என்ன இருக்கிறது. 

தெரியவில்லை நண்பனே 

என்றாவது ஒருநாள் 

இந்தக் குடை போல 

என் நினைவுகளும் மீளுமோ உன்னில் ?

நல்ல கவிதை விஸ்வா 

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.....

என்னா ஒரு கவிதைப்பா.....

ராஜன் விஷ்வா உண்மையிலேயே மிக வியப்புறுகிறேன். என்ன திறமை.... அந்திமத்தில் துணையிழந்த சோகத்தில் தள்ளாடும் தனிமையில் உள்ள ஓர் உயிரின் முகவரியை கவிதையில் ஒரு இளையவனால் இவ்வளவு தூரம் உயிரோட்டமாக பதிவிடமுடிகிறதென்றால்...... இது கொடையப்பா..... தம்பி உனக்குள் இருக்கும் இலக்கியம் பிறவித்தொடர் இப்பிறப்பில் பெற்றதல்ல உன் ஆத்மாவின் வழி வந்தது. நாளைக்கே பெரும் கவிஞனாக வந்துவிட்டாலும் இந்த அக்காவை மறக்கக்கூடாது சொல்லிட்டேன் ஆ.... :rolleyes: :rolleyes:

Edited by வல்வை சகாறா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நன்றிகள் பல காவலூர் கண்மணி அக்கா, சுமே அக்கா மற்றும் தாசன் அண்ணா .... :)

  • தொடங்கியவர்

வாவ்.....

என்னா ஒரு கவிதைப்பா.....

ராஜன் விஷ்வா உண்மையிலேயே மிக வியப்புறுகிறேன். என்ன திறமை.... அந்திமத்தில் துணையிழந்த சோகத்தில் தள்ளாடும் தனிமையில் உள்ள ஓர் உயிரின் முகவரியை கவிதையில் ஒரு இளையவனால் இவ்வளவு தூரம் உயிரோட்டமாக பதிவிடமுடிகிறதென்றால்...... இது கொடையப்பா..... தம்பி உனக்குள் இருக்கும் இலக்கியம் பிறவித்தொடர் இப்பிறப்பில் பெற்றதல்ல உன் ஆத்மாவின் வழி வந்தது. நாளைக்கே பெரும் கவிஞனாக வந்துவிட்டாலும் இந்த அக்காவை மறக்கக்கூடாது சொல்லிட்டேன் ஆ.... :rolleyes: :rolleyes:

என்னம்மா நீங்க இப்பிடி சொல்லிடிங்களேமா :D நான் ஒரு கத்துக்குட்டி இது தெரியாம இந்த சகாரா அக்கா வேற நம்மள ஓரண்ட  இழுத்துகிட்டு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு வரியையும் கவனமாகச் செதுக்கி அழகிய கவிதையாக்கியிருக்கிறீர்கள்,  தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் படைப்பாளிகளெல்லாம்  மகுடம் சூட்டியபின்னர்....

வாழ்க வளமுடன்

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி......

  • தொடங்கியவர்

பெரும் படைப்பாளிகளெல்லாம்  மகுடம் சூட்டியபின்னர்....

வாழ்க வளமுடன்

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி......

என்மீதுள்ள அன்பின் வெளிப்பாடே யாழ் உறவுகளின் வார்த்தைகள்... உங்களன்பிர்க்கும் நன்றிகள் விசகு அண்ணா :)

ஒவ்வொரு வரியையும் கவனமாகச் செதுக்கி அழகிய கவிதையாக்கியிருக்கிறீர்கள்,  தொடருங்கள்!

 மிக்க நன்றிகள்  சேயோன் அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.