Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் மற்றும் இளையராஜாவும்.....

Featured Replies

அது ஒரு தனி உலகம், அங்கு வேறு யாருக்கும் இடமில்லை, ஒருவரை தவிர, அவர் ஜீவ நதி பிரவாகமாய் ஆழ் மனதில் ஊற்றெடுப்பவர், உயிரின் மொழிக்கு ஒலி கொடுப்பவர், பிரபஞ்ச வெளியில் இருப்பை இல்லதொழிப்பவர், உதட்டோரம் சிறு புன்னகை பூக்க செய்பவர், சில பொழுதில் சிலிர்ப்பை கொடுப்பவர், உள்ளங்களில் அமைதியை தருபவர், தியானங்களின் சக்தியை கொடுப்பவர், அந்த உலகம் அவ்வளது பிரம்மியங்கள் நிறைந்தது, எல்லா உணர்வுகளையும் கொடுக்க கூடியது. வாழ்தலை வளப்படுத்துவது... அந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும், உங்களுக்கும், எனக்கும் பின்னால்.... அது  ஒரு போதும் அதன் ரம்மியத்தை இழப்பதில்லை

 

பிரசாத் ஸ்டுடியோ உலகின் உன்னத ஆலயம்
உயிர்களை அங்கிருந்து தான் வசியப்படுத்த தொடங்குகிறான்
இசை கடவுள்
வாழ்க தேவனே நீ பல்லாண்டு

.

Ilayaraja020615_1c.jpg

 

( யாழ் உறவுகள் ராஜாவின் இசையோடு தங்களுக்கு உண்டான  உணர்வுகளை, அனுபவங்களை இந்த திரியில் பகிர வேண்டும் - எனதும், குருவின் வேண்டுகோள் )

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சொர்கமே என்றாலும்

அது நம் ஊரைப் போல வருமா?

அட என் நாடு என்றாலும்

அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்

தமிழ் போல் இனித்திடுமா?  இப்படி ஏராளம்..............

 
 
11206940_120695111595270_452767141166496
 
 
 
 
 

 

ஆயிரம் படங்களை கடந்த அபூர்வ ஞானி! இளையராஜா .

 

தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜாவும் ஒருவர்.

 

ஜூன் 2ம் தேதி 1943ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். 

(அவர் பிறந்தது ஜுன் 3ம் திகதி என்றும் ஆனால் அவர் கொண்டாடுவது 02ம் திகதி என்றும் கூறுவார்கள்.)

 

இவருடைய இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர், மற்றும் பவதாரிணி. சின்ன வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் கைதேர்ந்தவர். 1961ம் வருடம் முதல், 1968ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.

 

ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர், ஆயிரம் படங்களைக் கடந்து இசையமைத்த மேதை. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் யாவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு எழுத்தாளர் என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. சங்கீதக் கனவுகள், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, வழித்துணை, துளி கடல், ஞான கங்கா, பால் நிலாப்பாதை உண்மைக்குத் திரை ஏது?, யாருக்கு யார் எழுதுவது?, என் நரம்பு வீணை, மேலும் நாத வெளியினிலே என்னும் புத்தகத்தில், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பாக இது அமைந்தது, பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள் மற்றும் இளையராஜாவின் சிந்தனைகள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது, டாக்டர் பட்டம், பத்ம பூஷன் விருது, என பல விருதுகளை பெற்றவர். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். ’பஞ்சமுகி’ என்ற கருநாடக இசை ராகம் இளையராஜாவால் உருவாக்காப்பட்டது.

இளையராஜா பாடல்கள் என்றாலே ஆர்மோனியம் துவங்கி ஐபோன் வரை இல்லாமல் இருக்கவே முடியாது. அதில் ‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது’ என்ற பாடலில் பார்வையில்லாதவருக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என சின்ன சர்ச்சைகள் எழுந்தது கூட ராஜாவின் பாடல்களுக்கே . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன் நான் என்றும் கவிதைக்கு ஏது உண்மை, பொய் என்றாகிப் போய் பாடல் இப்போது வரை ஹிட் ரகமாக மாறியது வேறு கதை.

இளையராஜாவின் சிறப்பே அவரது பாடல்களில் ஆலாபனை சேர்ப்பதுதான். அதிலும் ஆலாபனைக்கு யாரை வேண்டுமானாலும் பயன் படுத்தாமல் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே பயன்படுத்துவார். எடுத்துக்காட்டு: ராஜபார்வை படத்தின் இந்த அந்திமழை பொழிகிறது பாடலை கூட பார்க்கலாமே, எஸ்.பி.பி , எஸ்.ஜானகியின் குரல்களுடன் ஒலிக்கும் ஒரு இனிய ஆலாபனை இளையராஜாவின் கர்நாடக சங்கீத குரு திரு டி.வி.கோபாலகிருஷ்ணனுடையது என்பதுதான் சிறப்பு. ராஜா மேல் கொண்ட அன்பினால் சில பாடல்களில் மட்டும் இவர் ஆலாபனை செய்திருப்பார்.

பெண் குரல்கள் ஒரு படத்திற்கு ஒரு பாடலே அரிதாக இருக்கும் 80களில் தைரியமாக ஒரு படத்தில் மூன்று பெண் குரல்களில் பாடல்கள் வைத்திருப்பார். 1988ம் ஆண்டு வெளியான ’அக்னி நட்சத்திரம்’ படத்தில் ஒரு பூங்காவனம், நின்னுக்கோரி, ரோஜாப்பூ என இம்மூன்றும் பெண் குரல்களில் மட்டுமே அமைந்தவை. கோடைகாலத்தில் நடந்த இந்த படத்தின் பாடல் பதிவின் போது ’தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பாடிய கே.ஜே.ஏசுதாசும், ஜானகியும் கேலியே செய்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் அமிர்தவர்ஷினி ராகமா, மழை வரவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல என கூறிவிட்டு பாடல் பதிவு முடிந்து வெளியேறிய போது இன்ப அதிர்ச்சியாக மழை கொட்டியுள்ளது. இதை எஸ்.ஜானகி ஒரு சந்திப்பில் கூறினார்.

ஏதார்த்தமாக மழை பெய்தாலும் கூட ஏன் கோடை காலத்தில் எதிர்பாரா விதமாக இப்படி கொட்ட வேண்டும் என அனைவரும் வியந்தது வேறு கதை. முதன்முதலில் தமிழில் கணினி முறை இசையை ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் கொண்டு வந்தவர் இளையராஜாவே. இளையராஜாவின் பாடலான முதல் மரியாதை பட பாடல் சீனாவின் ரேடியோ ஒன்றில் சிறந்த பாடலாக தேர்வானது. இன்னமும் இசையை பயிலும் மாணவர்கள் கூட இசை ஆய்விற்காக ராஜாவின் பாடல்களை எடுக்க சற்றே தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம் அவரது பாடல்கள் இன்னமும் இசை ஜாம்பான்களுக்கே புரியாத ரகமாய் உள்ளது.

அவருடைய இசை வலிமைக்கு சான்றாக சமீபத்தில் துவங்கப்பட்ட அவரது முகநூல் பக்கத்திற்கு 12 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துவருகின்றன. இத்தனை வருடங்கள் கழித்துதான் தனது இசைக்கு உரிமை கோரியுள்ளார். எனினும் இசைஞானியின் பாடல்களை நிராகரித்து விட்டு எந்த டிவிக்களோ, ரேடியோக்களோ தொடர்ந்து நடத்துவது என்பது மிக அரிது என்பதே இளையராவிற்கு கிடைத்திற்கும் மிகப்பெரிய வெற்றி எனலாம்.இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

- ஷாலினி நியூட்டன் -

நன்றி ராஜன் விஷ்வா
 
இசைஞானியின் பரம ரசிகன் நான். வெறுமனே ராஜாவுக்காக பாடல்களை இரசிப்பதில்லை. பல பாடல்கள் இதயத்தை ஊடுருவி கிட்னியால் வெளி வந்தாலும் எல்லாப் பாடல்களுமே சிறந்தவை என்று கூறமாட்டேன். ராஜாவும் தனது ஜில்லாங்கடி வேலைகளை பல பாடல்களில் காட்டியதுண்டு. இருப்பினும் ராஜாவின் பாடல்களுடன் எனக்கிருக்கும் பரிட்சயம் தவிர்க்க முடியாதது. இவற்றுடனேயே வளர்ந்து காதலித்து மணமுடித்து தந்தையாகி இனி கிழவனாகி பாடையில் போகும்வரை வாழ்ந்து தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்த இசை அரக்கன் எனக்கு கொடுத்த சாபம். அந்த சாபம் எல்லோருக்கும் கிடைத்து விடாத ஆனந்த சாபம்.
 
இவ்வரக்கனின் பாடல்களில் எனக்குப் பிடித்தவை எண்ணிலற்றது. ஆனாலும் சிலவற்றை கவிதை எனும் பெயரில் பாடலாசிரியர் பாதி கடித்து துப்பியிருப்பார். சரி படத்திலாவது மீதியை ரசிக்கலாமென்றால் இயக்குனரும் ஓளிப்பதிவாளரும் நடன ஆசிரியரும் ஏன் நடிகர்களும்தான் தங்கள் பங்கிற்கு அதை கொன்றே போட்டிருப்பார்கள். படம் முடிந்து பார்த்தால் இந்த அரக்கனின் இசை மட்டும்தான் கம்பீரமாக எழுந்து என்னுடன் என் தோழில் மீது ஏறி என் அனமதியில்லாமலே தியேட்டரை விட்டு வலுக்கட்டாயமாக வீடுவரை இல்லை நான் வாழும்வரை வருவேன் என்று பிடிவாதமாய் வரும். வேண்டாமென்றாலும் உன்னுடன் வாழ்ந்தே தீருவேன் என்கிற இந்த அரக்கனுடன் வாழ்வதிலும் ஒரு சுகமே.
 
ஆனாலும் சில பாடல்கள் இயக்குனர் ஓளிப்பதிவாளர் நடன ஆசிரியர் ஏன் நடிகர்களும்தான் சேர்ந்து இந்த இசை அரக்கனின் இசைக்கு ஏற்ப தாளம் போட்டு இருப்பார்கள். இப்படியான பல பாடல்களில் எனது முதல் தெரிவு இப்பாடல்.
 
பாடல் - செம்பூவே பூவே
படம் - சிறைச்சாலை
இசை - இசை அரக்கன் இளையராஜா
பாடல் - காதல் மதி
பாடியவர்கள் - பாலசுப்பிரமணியம், சித்ரா
நடிப்பு - மோகன்லால், தபு
ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
இயக்கம் - பிரியதர்ஷன்
 
பிகு - குமாரசாமி அண்ணை இந்தப்பாடலின் வரிகளை கூரந்து கவனித்தால் வரும் விளைவுகளிற்கு நானோ இளையராஜாவோ பொறுப்பில்லை.
 
 
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒ.ஹோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒ.ஹோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ
 
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே
அந்தி சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்
தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா..
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பாட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீரியதோ
 
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே
இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ
அந்த காமன் அம்பு என்னை சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலருக்கும் சேலை பொன்பூவே…
மின்னியது தாமரை வந்து தொடும் நாளிலா
பாவைமையல் சாயுதே மன்னன் மணி மார்பிலோ..
முத்ததாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்வேன் நானே
தாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே…
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒ.ஹோ
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒ.ஹோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே
 

 

Edited by ஜீவன் சிவா

ஒரு பாடலின் கொலை.
 
"இவ்வரக்கனின் பாடல்களில் எனக்குப் பிடித்தவை எண்ணிலற்றது. ஆனாலும் சிலவற்றை கவிதை எனும் பெயரில் பாடலாசிரியர் பாதி கடித்து துப்பியிருப்பார். சரி படத்திலாவது மீதியை ரசிக்கலாமென்றால் இயக்குனரும் ஓளிப்பதிவாளரும் நடன ஆசிரியரும் ஏன் நடிகர்களும்தான் தங்கள் பங்கிற்கு அதை கொன்றே போட்டிருப்பார்கள்."
 
இப்படி எழுதியிருக்கானே எப்படித்தான் ஒரு அழகிய பாடலை கவிஞர் தவிர்ந்த மற்றவர்கள் கொலை செய்யலாம் என்று யோசிப்பவர்களிற்கு இது பலதில் ஒரு உதாரணம். ராஜாவின் முகத்தைக் காட்டினால் மட்டும் போதுமா?
 
பாடல் - நான் தேடும் செவ்வந்தி பூவிது
படம் - தர்ம பத்தினி
பாடகர்கள் - இசை அரக்கன் + ஜானகி
இசை - இசை அரக்கன் இளையராஜா.
பாடலாசிரியர் -  கண்மனி சுப்பு
நடிகர்கள் - கார்த்திக்,  ஜீவிதா
இயக்குனர் - அமீர்ஜான்
 
ஆ.............ஆ..............................
 
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
 
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது
 
பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே.....
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி......
ஆ….ஆ…ஆ… ..............
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்,
பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?
 
நான் தேடும் செவ்வந்திப் பூவிது ஆ......
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆ......
 
மங்கைக்குள் என்ன நிலவரமோ?
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ?
என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம் தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா........
ஆ….ஆ….ஆ….............
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை
 
நான் தேடும் செவ்வந்திப் பூவிது ஆ......
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆ......
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப் பூவிது ஆ......
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆ......
 
வீடியோ பார்க்க முதல் வாசிக்க வேண்டிய முக்கிய குறிப்பு
 
கீழுள்ள வீடியோவை தயவு செய்து கண்களை மூடிக் கொண்டு கேட்கவும். மறந்தும் கண்களை திறக்க வேண்டாம். அப்படித் திறப்பதால் ஏற்படும் அசௌகரியங்களிற்கு நானோ இசைஞானியோ யாழ்களமோ பொறுப்பேற்க முடியாது.
 
 
கண்களை மூடிப் பார்த்தவர்களிற்காக கண் திறந்து பார்க்க மறுபடியும் இப்பாடல்.
 
 
 
ஆனா இதுதாம்பா ஒறிஜினல்.
 
 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
இளையராஜாவின் பல பாடல்கள் காலத்தினால் அழியாதவை.
 
சில பாடல்களை கேட்கும்போது என் வாழ்வின் பல மறக்க முடியாதா சம்பவங்கள் மனதில் வந்து போகும்.
 
உ+ம்
 
மெல்லத்திறந்த கதவு ‍‍படத்தில் உள்ள பாடல் வா வெண்ணிலா உன்னைத்தானே வாணம் தெடுதே.... இது பதின்ம வயதில் ஏற்பட்ட காதல்/இனக்கவர்ச்சி/காமம் போன்ற உணர்வுகளை மீட்டிச் செல்லும்.
 
வாழ்வே மாயம் படத்தில் உள்ள சில பாடல்களை கேட்கும்போது சித்தப்பாவும், சித்தியும் ஒருவரை ஒருவர் காதலித்தது ஞாபகம் வரும். சித்தப்பா எங்களுக்கு அடிக்கடி ஐஸ்கீறீம் வாங்கித்தருவார் ஏன் என அவ்வயதில் புரியவில்லை.
 
இதயக்கோயில் /மவுன ராகம்/வைதேகி காத்திருந்தால்/சின்னக்கவுண்டர் போன்ற‌ பல படங்களின் பாடல்களை பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் மேசையில் தட்டி நண்ப‌ர்களுடன் பாடிய ஞாபகம்.
 
காளி / தர்மயுத்தம் / பொல்லாதவன் போன்ற படங்களின் பாடல்களை கேட்கும்போது வார இறுதி நாட்களில் இலங்கை வானோலியில் இப்படத்தின் பாடல்களை கேட்பதும், பின்பு பெரியம்மாவை நச்சரித்து சென்று இவைகளை ரசித்துப் பார்த்ததும்.
 
ஜெர்மனியில் செந்தேன்மலரே என்ற பாடலை கேட்கும்போது, ஜெர்மனிக்கு செல்வதற்காக கொழும்பில் (1980) எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த யாழ்பாண அங்கிளுடன் கல்கிசை கடற்கரையில் குளித்தது.
 
1989ல் வெளிவந்த ராஜாதி ராஜா படத்தில் உள்ள மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா.. பாடலை கேட்கும்போது, ஜேவீபி பிரச்சினை காலத்தில், நான் பகுதி நேராமாக வேலை செய்த டிஸ்பென்சரியின் டொக்டர் (திருமணமாகி ஓர் குழந்தை உள்ளவர்) , அங்கு வேலை செய்த ஒர் நர்சை தினமும் தன்னுடைய பைக்கில் இரவு 9 மணியளவில் டிராப் செய்வார். (மாலையானல் அப்பொழுது பஸ் இல்லாதபடியால்) நாளடைவில் இது காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, பின் அப்பெண் வீட்டை விட்டு ஓடி வந்ததும். இதை கேள்விப்பட்ட டொக்டரின் மனைவி என்னிடம் "தம்பி இவர் என்னை ஒரு நாள் இந்த பைக்கிள் கூட்டிப் போயிருப்பாரா?   ஏன் இப்படி செய்கின்றார் என்று கேட்டு கண்ணீர் விட்டு அழுததும்.
 
இப்படி பல பல... இன்னும் எத்தினையே அனுபவங்கள். 
 
இன்றும் இப்பாடல்களை கேட்கும்போது எல்லாம் ஒர் கனவு போல் மனதில் ஓடும்.
 
ராஜாவின் ராகங்கள் வாழ்வில் ஒர் பகுதியாகி விட்டது.

Edited by colomban

வணக்கம் யாழினி
 
"அதில் ‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது’ என்ற பாடலில் பார்வையில்லாதவருக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என சின்ன சர்ச்சைகள் எழுந்தது கூட ராஜாவின் பாடல்களுக்கே . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன் நான் என்றும் கவிதைக்கு ஏது உண்மை, பொய் என்றாகிப் போய் பாடல் இப்போது வரை ஹிட் ரகமாக மாறியது வேறு கதை."
 
இக் கவிதையை படமாக்கிய விதத்தைப் பாருங்கள். அந்த நீர்த்துளியில் எப்படி கதாநாயகன் தன் காதலியைப் பார்க்கின்றான் என்பது புரியும். பாடல் கதாநாயகி கனவு காண்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதே. அப்புறம் எப்படி இந்தக் கேள்வி? அப்படி கேள்வி வந்தாலும் குருட்டுக் கதாநாயகன் முகத்தில் விழும் மழைத்துளியை அநுபவிக்காதவனா என்ன. முகத்தில் விழும் மழைத்துளியை பூனைக்குட்டி போலிருக்கு என்றால் அதில் நியாயம் இல்லை. ஆனால் அவன் அவள் முகத்தை அதில் உருவகப்படுத்துகின்றான் - என்னதப்பு.
 
நன்றி - இசை அரக்கனின் சிதைக்கப்படாத இன்னொரு பாடலை ஞாபகப்படுத்தியமைக்கு.
 
பாடல் - அந்திமழை பொழிகிறது
படம் - ராஜபார்வை
இசை - வேறு யார் இசை அரக்கனேதான்
நடிகர்கள் - கமலஹாசன், மாதவி
இயக்கம் - சிங்கிதம் ஸ்ரீனிவாசராவ்
பாடல் - வைரமுத்து என்று நினைக்கின்றேன் பிழையிருந்தால் திருத்தவும்
ஒளிப்பதிவு - பரண் முகர்ஜி
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வரைக்கும் தமிழ் / உலக இசையை புரட்டிப்போட்ட இசைத்தமிழனின் ஆரம்ப திரையிசை பாடல்....

 

11390242_10153360812129328_5912579508773


பிரசாத் ஸ்டுடியோவில் சிவப்பு விளக்கு எரிந்தால் எந்த ஜம்பவானும் கதவை தட்ட முடியாது. பச்சை எரியும் வரை காத்திருக்கவேண்டும் . இசைக்கு அவ்வளவு மரியாதை. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் # நன்றி என்றும் என் உடன் வாழும் இன்னொரு உயிர் அது .

  • கருத்துக்கள உறவுகள்

திருவாசகம் சிம்பொனி...! யார் சொன்னது மாணிக்கவாசகர் இறையுடன் கலந்தார் என்று... இல்லை இறைவன் அவரை இளையராஜாவாக உலவவிட்டுள்ளார். அவரும் ஜனனி ஜகம் நீ என்று காற்றினிலே கீதமாய் வலம் வந்து கொண்டிருக்கின்றார்...!

  • தொடங்கியவர்

என் அலைபேசியில் நான் அதிகம் கேட்பது ராஜாவின் திருவாசகம் தான் :)

 

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11377335_840112232732676_609736531516006

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=K_ftUBqeZR0

 

எனக்கு...... இளைய ராஜா இசையமைத்த பாடல்களில்,
"அடி,.... ராக்காயி, மூக்காயி... எல்லாரும்.... வாங்கடியோவ்..............
முத்துச் சம்பா... பச்சை நெல்லு, குத்தத்தான் வேணும்..."

அந்தப் பாடலை... இன்றும், என்னால்... மறக்க முடியாது. :wub: 

 

இது, எத்தனை வருடத்துக்கு... முன்னர் வந்த பாடல் என்றாலும்..
அந்த... அரிசி குத்தும்.... "சிக்.. சிக்..." என்ற இசையையும்..... ஒவ்வொரு பாடல் நகர்வின் போதும்... தன்னுடைய இசைக்கருவி மூலம்... காதில் துல்லியமாக விழ வைத்தவர், இசைஞானி இளைய ராஜா. :)

 

ஆனால்.... அவருக்கு, தலைக்கனம் அதிகம் என்றும், கூச்ச சுபாமுள்ளர் என்றும்... கேள்விப் பட்டேன்.. உண்மையோ... பொய்யோ... தெரியாது.

 

எங்களது.... கனடா குரு. இசை... மன்மத ஆண்டில்.... கூச்சப் படாமல்,
மீண்டும்....  யாழ்களத்துக்கு வர வேண்டும். :D  :lol: 

 

எனது அன்பு நண்பன், இசையை பற்றிய பகிர்வுகளுக்கு நன்றி..... ராஜன் விஷ்வா. :D  :icon_idea: 

இளையராஜா 10

 

HYCP05ILAYARAJA_91_2425042f.jpg

இளையராஜா
 
திரைஇசை உலகில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா (Ilaiayaraaja) பிறந்த தினம் இன்று (ஜூன் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
l தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் (1943) பிறந்தவர். இயற்பெயர் ராசய்யா. சிறு வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்கள் 3 பேருடன் சேர்ந்து சுமார் 20 ஆயிரம் கச்சேரிகள், நாடகங்களில் இசை அமைத்தார்.
 
l திரைப்படத்துக்கு இசை அமைக்கும் ஆர்வத்தில் 26 வயதில் சென்னை வந்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணி பியானோ, கிடார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
 
l ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976-ல் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்தான் இவருக்கு ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார். இந்த படத்தின் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல், அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
 
l தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்களில் நாட்டுப்புற மணம் கமழ வலம்வந்த இவரது இசை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. கர்னாடக இசையிலும் பல பாடல்களை அமைத்து புகழ்பெற்றார்.
 
l முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தவர். பல ராகங்களை உருவாக்கியுள்ளார். ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
 
l இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 1993-ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசை அமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
l பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றுள்ளார்.
 
l தாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டு பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் படங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் நடுவே உள்ள தனது அன்னையின் படத்தைக் கும்பிட்டுவிட்டே இவர் தனது நாளைத் தொடங்குவார். தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.
 
l ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். பல நூல்கள் எழுதியுள்ளார். ஆர்மோனியம் இல்லாமல் சிந்தித்தபடியே டியூன் போடக்கூடியவர். கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, பென்சில் டிராயிங் வரைவது, புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஃப்ரேம் செய்து மாட்டுவது ஆகியவை பொழுதுபோக்குகள். மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டி இவரது இசைத்தோழன்.
 
l இவரது வாரிசுகளும் இசை அமைப்பாளர்களாகப் புகழ்பெற்று தந்தைக்குப் பெருமை சேர்க்கின்றனர். இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் போற்றப்படும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்றும் வெற்றி நடைபோடுகிறது.
 
 

 


மறுபடியும் ஒரு கவிதை.
 
இப்பாடலை விரும்பாதவர்கள் இருப்பார்களா. எவ்வளவு அழகான இசை, பாடகர்களின் குரல், காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு. மொத்தத்தில் இப் பாடல் ஒரு அழகான கவிதையாக இசைஅரக்கனின் இசையை கெடுக்காமல் உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
பாடல் - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
இசை - இசைஅரக்கன் இளையராஜா
படம் - மைக்கல் மதன காம ராஜன் 
பாடல்வரிகள் - பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள் - கமல்ஹாசன் + ஜானகி
ஒளிப்பதிவு - கௌரி சங்கர்
இயக்கம் - சிங்கிதம் ஸ்ரீநிவாசராவ்.
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளசின் ஆரம்பகால பாடல்களில் பலரையும் துவட்டி எடுத்த பாடல் இது....

 

குசா
 
அழகான பாடல், இப்பவும்தான் வாட்டுது.
எனக்கென்னவோ இந்த சுதாகர், ராம்கியின்ர மூஞ்சியைப் பார்த்தாலே வெறுப்புத்தான் வரும். ஆனாலும் ராஜா ராஜாதான். இந்த சுதாகர் பயலை வைச்சு பாரதிராஜா கெடுத்த அழகான பாடல்கள் பல. அதில் ஒரு சாம்பிள்.
 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
இளையராஜாவின் பல பாடல்கள் பிடித்து இருந்தாலும் சுவர்ணலதாவின் குரலில்  இப்பாடலை எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.