Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தக்காளி ரின்னுக்குள் பல்லி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில்.. பார்மிங்காம் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட தக்காளி ரின்னில் பல்லி இருந்தமை சமையலின் போது கண்டறியப்பட்டுள்ளது.

 

மேற்படி தக்காளின் ரின்.. பார்மிங்காமில் அமைந்துள்ள.. Masala Bazaar என்ற ஆசிய உணவுப் பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கப்பட்டுள்ளது. அது Euro Foods க்கு சொந்தமானது. Euro Foods தான் இந்த ரின்களை இத்தாலிய வழங்குனரிடம் இருந்து தருவித்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளது.

 

_83442280_20150603_182026_resized_1.jpg

 

_83442281_20150603_181328_resized.jpg

 

http://www.bbc.co.uk/news/uk-england-birmingham-33018521

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றைப் பார்க்கும் போது சாப்பாடே வெறுக்குது...

நான் நினைக்கின்றேன் இது சீனர்களுக்காக தருவிக்கப்பட்ட தக்காளி ரின்னாக இருக்கலாம் என்று . இதை சீனர் ஒருவர் வாங்கி இருந்தால் கொடுத்த காசுக்கு கூடுதலாகவே கிடைத்தது என்று மகிழ்ந்து இருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பல்லியை மசாலா தடவி வறுத்தால் சுவையாக இருக்கும்.
இல்லையென்றால் உப்புத் தடவிக்  காய வைத்துக் கருவாடாகவும் சாப்பிடலாம். :D:lol:

இத்தாலியில் பல்லி இருக்கின்றதா? தெரியவில்லை. இது ஆசிய நாடுகளிலும்  டப்பாவில் அடைக்கப்பட்டிருக்கலாம்.

இந்தப்பல்லியை மசாலா தடவி வறுத்தால் சுவையாக இருக்கும்.

இல்லையென்றால் உப்புத் தடவிக்  காய வைத்துக் கருவாடாகவும் சாப்பிடலாம். :D:lol:

இத்தாலியில் பல்லி இருக்கின்றதா? தெரியவில்லை. இது ஆசிய நாடுகளிலும்  டப்பாவில் அடைக்கப்பட்டிருக்கலாம்.

பல்லி வறை என்று ஒரு ரெசிப்பி எழுதட்டா ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பல்லி வறை என்று ஒரு ரெசிப்பி எழுதட்டா ? :icon_mrgreen:

ஏன் பல்லி சூப்புக்கு என்ன குறைச்சல்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லி வறை என்று ஒரு ரெசிப்பி எழுதட்டா ? :icon_mrgreen:

 

ஏற்கனவே செதில் வறை செய்யப்போய் செவிலில ரயிலோடுது..., பல்லி வறை செய்யப் போனால் பல்லைப் பொறுக்கித்தான் எடுக்கணும்...! :lol:  :)

 

  • கருத்துக்கள உறவுகள்

இது அசைலம்தேடி இங்கிலாந்துக்கு வந்த பல்லி. கொண்டைனரில் வந்தால் பிடிபடலாம் என்று ரின்னில் அடைத்து அனுப்பியுள்ளார்கள் அந்த முகவர்கள். பாவம் பல்லி இறந்துவிட்டது, இல்லையென்றால் எத்தனைபேர் அது பலன்சொல்லக்கேட்டுப் பயனடைந்திருப்பார்கள். :(  :o    

  • கருத்துக்கள உறவுகள்

பல்லி வறை என்று ஒரு ரெசிப்பி எழுதட்டா ? :icon_mrgreen:

 

உங்க லெவெலுக்கு, பல்லி சரிவராது. டின் சொதி, பிரட்டல் என்று மாத்தி யோசியுங்கோ!  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

palli.jpg

ஊருக்கெல்லாம்... சாத்திரம் பாக்கிற பல்லி,

தக்காளிப் பழ ரின்னுக்குள் விழுந்து... உயிரை ஏன் விட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

பல்லி செய்த பாவம்.

சிற்றுயிர்களைப் புறக்கணிப்பவன் சிறிது சிறிதாக வீழ்வான் - சாலமோன் ராஜா -

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் வாழிடத்தைப் பகிர்ந்து, நம் வீடுகளில் ஒண்டுக் குடித்தனமாக வாழ்ந்து வருகிறது பல்லி. அவ்வப்போது அது எழுப்பும் குரல், ஒரு குறி சொல்லாக மதிக்கப்பட்டு ஒரு சாத்திரமே - கெளலி சாத்திரம் - உருவாகியுள்ளது.

நனைசுவர் கூரை கனை குரல் பல்லி - தன் கணவனைப் பற்றி நல்ல செய்தி ஏதாவது சொல்லுமா என்று காத்திருந்த சங்ககாலப் பெண் ஒருத்தியைப் பற்றி சத்திமுத்தப் புலவர் எழுதியிருக்கிறார். கூரை மற்றும் ஓட்டு வீடுகள் போய், அடுக்குமாடி வீடுகள் வந்த பின்னும், பல்லி நம்முடனேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நமது பாரம்பரியத்தின் ஒரு அங்கமான பல்லிக்கு அண்மைக் காலத்தில் சிலர் அவப்பெயரைக் கற்பித்து வருகிறார்கள். மதிய உணவு பரிமாறப்படும் பள்ளிக் கூடங்களில், ஈயமில்லாத பாத்திரத்தில் சமைப்பதாலும், ஊளை முட்டையை பயன்படுத்துவதாலும், ஊசிப்போன பதார்த்தங்களைப் படைப்பதாலும், சாப்பாடு நஞ்சாகி, நூற்றுக் கணக்கான குழந்தைகள் உயிருக்குப் போராடும் நிலை ஏற்படும்போது, சாம்பாரில் பல்லி விழுந்துவிட்டதால் தான் இப்படி ஆகிவிட்டது என்று காண்டிரக்டர்கள் கதை கட்டி விடுகிறார்கள். அதை தேவ வாக்காக எடுத்துப் பத்திரிகையாளர்களும் கட்டம் கட்டி செய்தியாக அச்சேற்றி விடுகிறார்கள். அச்சில் வருவது உண்மை என்ற மாயைதான் இருக்கிறதே. உணவு வியாபாரம் அதே ரீதியில் இடையூறு ஏதுமில்லாமல் தொடர்கிறது.

உண்மை என்னவென்றால், பல்லிக்கு நஞ்சு கிடையாது. அது உணவில் விழுந்தாலும் எந்த விளைவுமிருக்காது. உடும்புக்கறி சாப்பிட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பல்வி விழும் விபத்துகள் மதிய உணவுக் கூடங்களில் மட்டுமே நடப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பல்லி மீது பழி சுமத்திவிட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுகிறார்கள். பிள்ளைகளுக்கு ஏற்படும் ஆபத்தும் களையப்படுவதில்லை. உணவு நஞ்சாகும் செய்திகள் அவ்வப்போது தொடர்ந்து வந்த வண்ணம் தான் இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சிற்றுயிர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்டாததால் நாம் எவ்வளவு எளிதாக ஏமாற்றப்படுகிறோம் என்று பார்த்தீர்களா?

புதுச்சேரியில் திட்டமிட்டுத் தன் மனைவியைக் கொலை செய்த ஒருவன், அவர் குடித்த பால்குவளையில் ஒரு பல்லி கிடந்தது என்று காவல்துறையிடம் கூறியது பற்றியும், பரிசோதனையில் அப்பெண் சயனைட் விடத்த்ால் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்தது. கணவன் கைது செய்யப்பட்டது பற்றியும் அண்மையில் செய்தி வெளியானதை நாளிதழில் படித்தோம்.

எங்கள் தெருவில் ஒருவர் மோர் அருந்தியபின், அந்தப் பாத்திரத்தில் ஒரு பல்லி கிடப்பதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கிருந்த டாக்டரும், அவருக்கு உப்பு நீர் கொடுத்து வாந்தியெடுக்கச் செய்து, கூட ஒரு ஊசியும் போட்டு, மறக்காமல் பணத்தைப் பெற்றுக் கொண்டார். பல்லியைப் பற்றிய இந்த ஆதாரம் ஏதுமற்ற தொன்மம் எவ்வளவு ஆழமாக மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. அதை வைத்து எத்தனைபேர் பிழைப்பு நடத்துகிறார்கள்.

பல்லி என்று நம்மால் அறியப்படும் இந்த உயிரினம் இவ்வுலகமெங்கும் பரவியிருக்கும் ஊர்வன இனத்தைச் சேர்ந்தது. இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவில் மட்டுமே வாழும் ராட்சதப் பல்லியான கம்மடோர் டிராகன்தான் உலகிலேயே உருவில் பெரிய பல்லி. இது மான், முயல் முதலிய விலங்குகளைக் கூட பிடித்து இரையாக உண்ணும். சில சென்டிமீட்டர் மட்டுமே நீளமுள்ள சிறிய பல்லிகளும் உண்டு. பச்சோந்தியும் நம் தோட்டத்தில் காணப்படும் அரணையும் இந்த இனத்தைச் சேர்ந்தவையே. உடும்பு கூட ஒரு பல்லியே (இதன் தோல் தான் கஞ்சிரா செய்யப் பயன்படுத்தப் படுகிறது) கால்களே இல்லாத பல்லிகளும் உண்டு. இவை பார்பதற்கு பாம்பு போலவே இருக்கும்.

உங்கள் கவனத்திற்கு இன்று நான் கொண்டுவர விரும்புவது, மூஞ்சூறு, சிலந்தி, சிட்டுக்குருவி போன்ற உயிரினங்களுடன் நம்முடன் நம்மில்லங்களில் அன்றாடம் வாழும் gecko என்ற ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வீட்டுப் பல்லியைத்தான்.

பகற்பொழுதில் இண்டு இடுக்குகளில் மறைந்திருந்து, மாலையில் இரை தேட வெளிவரும். கரப்பான், விட்டில் பூச்சி போன்றவற்றை இரையாகக் கொண்டு வாழும். சில சமயம் தானும் வேறொரு இரை கொல்லிக்குத் தீனியாவதுமுண்டு. ஒருநாள் மாலை அந்திப்பொழுதில் எங்கள் வீட்டினுள் பறந்துவந்த வெளவால் ஒன்று, சுவரில் இருந்த பல்லியை லாவகமாகக் கவ்விச் சென்றதை நாங்கள் வியப்புடன் பார்த்தோம். அந்த வெளவால் மட்டும் பல்லியின் வாலைப் பிடித்து இருந்தால், அது உயிர் பிழைத்திருக்கும். தற்காப்பு வியூகமாக, வீட்டுப் பல்லியின் வால் தானாக அறுந்து விழுந்துவிடும் தன்மையுடையது. அறுந்துபோன இடத்திலுள்ள ரத்தக் குழாய்கள் தாமாக உடன் மூடிக்கொள்ளும். பின் நாளடைவில் புதிய வாலொன்று முளைத்துவிடும்.

வீட்டுப் பல்லிகளிலும் பல வகை உண்டு. அசாம் மாநிலத்தில் சில்ச்சார் அருகில், வனத்துறை சார்ந்த தங்கும் இல்லம் ஒன்றில் ஓரடி நீளமுள்ள டுக்.... டூ.... பல்லியைப் பார்த்திருக்கிறேன். இது எழுப்பும் டுக்.... டூ.... என்ற ஒலி வெகுதூரம் கேட்கும்.வீட்டுப் பல்லிகளிலேயே உருவில் பெரியது இதுதான். இவற்றில் எந்தப் பல்லிக்கும் விஷம் இல்லை என்பதையும், வீட்டுப் பல்லிகள் நம்மிடையே வாழ்வது பற்றி மனித இனம் என்றுமே கவலைப்பட்டதே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வீட்டினுள் கூட இது ஒரே பகுதியில்தான் வாழும். வீடு முழுவதும் சுற்றித் திரியாது. பல்லுயிரியத்தின் ஒரு பரிமாணமான வீட்டுப் பல்லிகளைப் பாதுகாக்க, அவற்றிற்காகப் பேச ஒரு பன்னாட்டு அமைப்பு செயற்பட்டு வருகிறது. வேறெங்கே அமெரிக்காவில்தான்.

வீட்டுப் பல்லி சுவரில் செங்குத்தாக ஊர்வது. கூரையில் தலைகீழாக நகர்வது. இவற்றை அவதானித்த உயிரியலாளர்கள், தனது பாதங்களை அழுத்தி வெற்றிடத்தை உருவாக்குவதால்தான் இத்தகைய அதிசய சலனம் பல்லிக்குச் சாத்தியம் ஆகிறது என்றனர். நான் தாராபுரம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது எங்கள் அறிவியல் ஆசிரியர் கூறியதும் இதுதான்.

ஆனால் இன்று உயிரியலாளர்களின் புரிதலே வேறு. அதன் பாதங்களிலுள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மயிரிழைகளால் தானிருக்கும் தளத்தின்மீது உராய்வு ஏற்படுத்தித் தான் பல்லி நகர்கிறது என்கின்றனர். இந்த முறையில் பல்லி கண்ணாடி மீதுகூட நிலை கொண்டு நகர முடியும்.

சு.தியோடர் பாஸ்கரன்.

நன்றி : தினமணிக் கதிர்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பல்லி பற்றி பல்வேறு செய்திகளை பதிவிட்ட தமிழ்சிறிக்கு பல்லி நல்ல பலன் சொல்லட்டும்...!  :lol::)

 

சனி பகல் / இரவு  வடக்கில் சொல்லட்டும்....   =  பணவரவு , மகிழ்ச்சி...! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.