Jump to content

ஒரு உதவி உறவுகளிடம்..,


Recommended Posts

பதியப்பட்டது

கால் நடைகளுக்கு கொடுக்க கூடிய வேலிமசால் பசுந்தீவன விதைகள்  இரண்டு கிலோ இலங்கை கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப முயன்ற போது விதைகளை அனுப்ப இயலாது என்று சொல்லி விட்டார்கள்... இதை அனுப்புவதற்கு இலங்கை கட்டு நாயக்கா விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், இந்த விதைகள் அனுப்ப செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தமிழகத்திற்கு வருவார்களானால் அவர்களிடம் கொடுத்தனுப்பவோ முடியுமென்றால் அறியத்தரவும்....

விதைகள் பற்றிய விவரம்

 

http://agritech.tnau.ac.in/agriculture/foragecrops_velimasal.html

 

velimasal2.jpg

 

Desmanthus- Hedge lucerne / Velimasal
Desmanthus2.png

  • Desmanthus is a perennial crop.
  • It is grown throughout the year under irrigation and during June - October as a rainfed crop.
  • Sow the seeds at 20 kg/ha in solid stand on the side of the ridges over the lines where fertilizers are applied at a depth of 2 cm and cover with soil.
  • Irrigate immediately after sowing, life irrigation on the third day and thereafter once in a week.
  • First cut on 90th day after sowing at 50 cm height and subsequent cuts at intervals of 40 days at the same height.
  • Green fodder yield is 80-100 t/ha/year.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள், விஸ்வா.
எனக்கு... ஸ்ரீலங்கா தொடர்புகள் அறுந்து, பல வருடங்களாகி விட்டது.
என்னால்... உதவ முடியாமைக்கு வருந்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட மாகாண, விவசாய அமைச்சர்,  திரு.  ஐங்கரநேசனிடம்...
அவ்வப்போது...  தொடர்பில் உள்ளவர், ஒருவர் யாழ்.களத்தில் இருக்கின்றார்.
அவரின் பார்வைக்கு, உங்கள் வேண்டுகோள் போனால்...
நிச்சயம்... உதவி செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விதை அனுப்ப வெளிக்கிட்டு, இப்ப விதைக்க நிக்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான.... பொருட்களை, தனி நபர் கொண்டு செல்வது, ஆபத்தானது.
சவூதியில்... கடுகு, கொண்டு போனவர்களை.... ஏதோ, ஒரு போதை பொருள் கொண்டு போனதாக தண்டித்தார்கள்.
ஸ்ரீலங்காவில்.... தமிழன், என்றாலே.... புலி என்ற, பார்வையில் தான் பார்ப்பார்கள்.
அதில்.. ஒருவன், மாட்டினால்..... நேரே கைலாயம் தான்.
இந்த, விதை அனுப்பும்  விடயத்தை, அரசாங்கத்தின் ஊடாக செய்வதே... பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்ற, நாடு கிடைத்திருந்தால்....
தமிழ் நாட்டுக்கு, வள்ளத்தில் சென்று...
விஸ்வாவிடம், விதைகளை வாங்கி வந்திருப்பேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்ற, நாடு கிடைத்திருந்தால்....

தமிழ் நாட்டுக்கு, வள்ளத்தில் சென்று...

விஸ்வாவிடம், விதைகளை வாங்கி வந்திருப்பேன். :)

சிறி அண்ணை.. வள்ளம் ஓட லைசென்ஸ் எடுத்து வச்சிருக்கிறியளோ..? இல்லாட்டி சோழக்காத்துக்கு கவுன்டு போவியள் நடுக்கடலுக்க.. :D

விஸ்வா.. எனக்கு தெரியல வழி :( .. நீ ஏன் இன்ன சாமான்தான் உள்ள இருக்கென்டு சொல்லுறாய்.. உலர் உணவு என்டு சொல்லி அனுப்ப முடியாதா?

  • 1 year later...
Posted
On 13/06/2015 at 5:29 AM, MEERA said:

விதை அனுப்ப வெளிக்கிட்டு, இப்ப விதைக்க நிக்கிறியள்

Fabaceae குடும்பத்தை சேர்ந்த இந்த கோதாரியையா இங்கு கொண்டுவர முயற்சித்தனீங்கள் + நானும்தான். இது இப்பில் இப்பில் போன்ற ஒரு கோதாரி, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரம். இந்த இப்பில் இப்பிலை 1976/1977 இல் விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தினதெண்டு அண்ணர் குருநாகலில் இருந்து கொண்டு வந்தார். அநேகமாக காங்கேசன்துறையில் முதலாவது என்று நினைக்கின்றேன். இன்றைக்கு காங்கேசன்துறையே இப்பில் இப்பில் காடு. உதை அழிக்கவே முடியவில்லை.  இராணுவம் விதைகளை ஹெலிஹாப்டரில் இருந்து தூவினதாவும் சனம் கதைக்குது - நான் நம்பவில்லை - 80 பதுகளின் ஆரம்பத்திலேயே எமது வீட்டில் நூற்றுக்கணக்கான மரங்களை புடுங்கி எறிந்திருப்போம்.

உந்த கோதாரி இங்கு வேண்டாம்.

வேணுமெண்டால் வல்லை வெளி, பொம்மைவெளியில நடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஜீவன் சிவா said:

Fabaceae குடும்பத்தை சேர்ந்த இந்த கோதாரியையா இங்கு கொண்டுவர முயற்சித்தனீங்கள் + நானும்தான். இது இப்பில் இப்பில் போன்ற ஒரு கோதாரி, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரம். இந்த இப்பில் இப்பிலை 1976/1977 இல் விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தினதெண்டு அண்ணர் குருநாகலில் இருந்து கொண்டு வந்தார். அநேகமாக காங்கேசன்துறையில் முதலாவது என்று நினைக்கின்றேன். இன்றைக்கு காங்கேசன்துறையே இப்பில் இப்பில் காடு. உதை அழிக்கவே முடியவில்லை.  இராணுவம் விதைகளை ஹெலிஹாப்டரில் இருந்து தூவினதாவும் சனம் கதைக்குது - நான் நம்பவில்லை - 80 பதுகளின் ஆரம்பத்திலேயே எமது வீட்டில் நூற்றுக்கணக்கான மரங்களை புடுங்கி எறிந்திருப்போம்.

உந்த கோதாரி இங்கு வேண்டாம்.

வேணுமெண்டால் வல்லை வெளி, பொம்மைவெளியில நடுங்கோ.

இப்பில் இப்பில் தூவதேவையில்ை ஒரு மரம் இருந்தால் போதும்  ஒரு மாவட்டத்தை நிரப்பி விடும் காரணம் அதனுடைய விதைகள்(20 விதைகள் ஒரு காய்குள் இருக்கும்   ) காய் முதிர்ச்சியடைந்தவுடம் அதனை அண்டிய பிரதேசங்கள் முற்றிலுமாக சிதறி  பரவிவிடும் பல மாதங்களுக்கு பிறகு பார்த்தால் அந்த பிரதேசத்தை மதிக்க முடியாத ஒன்றாகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதைப்பற்றியப்பா  பேசுகிறீர்கள்???

Posted
26 minutes ago, விசுகு said:

எதைப்பற்றியப்பா  பேசுகிறீர்கள்???

இது ஒருவிதமான தாவரம். 4-5 கிழமைகளிலேயே கால்நடைகளுக்கான உணவாக பயன்படுத்தலாம் என்று ஆதவன் ஒரு திரியில் எழுதியிருந்தார். நானும் மீராவும் இந்த தாவரத்தை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்திருந்தோம் (முட்டாள்தனமாக). இன்று சுபேஸ் கடைசியாக என்ன எழுதினார் என்று தேடியபோது இந்த திரி மாட்டியது. கொஞ்சம் வெளியே தேடியபோது இந்த தாவரம் ஒரு விவகாரமாக இருந்தது - அம்புட்டுதான். அப்ப தேடாதது பிழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.stuartxchange.org/Ipil-ipil.html

 

நீங்கள் கூறும் தாவர இனமும், ராஜன் விஷ்வா எழுதி இருந்த தாவர இனமும் வேறுபட்ட இனமாகத் தெரிகின்றதே.

HEDGE LUCERNE - VELIMASAL ( Desmanthus virgatus )  Leucaena leucocephala (Lam.) de Wit 
"இப்பில் இப்பில்" தாவர விதைகளை இலங்கை அரசாங்கம் 1970 களில் பரவலாக விதைத்தார்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. 
 

Posted
4 minutes ago, Sasi_varnam said:

http://www.stuartxchange.org/Ipil-ipil.html

 

நீங்கள் கூறும் தாவர இனமும், ராஜன் விஷ்வா எழுதி இருந்த தாவர இனமும் வேறுபட்ட இனமாகத் தெரிகின்றதே.

HEDGE LUCERNE - VELIMASAL ( Desmanthus virgatus )  Leucaena leucocephala (Lam.) de Wit 
"இப்பில் இப்பில்" தாவர விதைகளை இலங்கை அரசாங்கம் 1970 களில் பரவலாக விதைத்தார்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. 
 

இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை Fabaceae . வளர்ச்சியில் இப்பில் இப்பில் உயரமாகவும் , இது 1-2 மீட்டர் உயரமாகவும் சடைச்சும் இருக்கும். ஆனால் இனப்பரம்பலில் ஒரே மாதிரியானவை.

Scientific classification
Kingdom: Plantae
(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Rosids
Order: Fabales
Family: Fabaceae
Genus: Desmanthus
Species: D. virgatus
Desmanthus pernambucanus
Scientific classification
Kingdom: Plantae
(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Rosids
Order: Fabales
Family: Fabaceae
Subfamily: Mimosoideae
Tribe: Mimoseae
Genus: Desmanthus
Willd.[1]

Ipil Ipil 

Scientific classification
Kingdom: Plantae
(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Rosids
Order: Fabales
Family: Fabaceae
Subfamily: Mimosoideae
Tribe: Mimoseae
Genus: Leucaena
Species: L. leucocephala
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால் இப்பிலி இப்பிலி  ஆட்டுக்கு நல்ல தீனி ஆடு வளர்ப்பை ஊக்கு விக்கலாம்  ஜீவன் அண்ணை 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.