Jump to content

இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….?


Recommended Posts

இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….?

 

இலங்கையர்களின் தனித்துவமான உணவுகளில் ஒன்று கொத்து ரொட்டி. இலங்கையர்களில் அநேகருக்கு மிகவும் விருப்பமான உணவும்கூட. இதை வாங்குகின்றமைக்கு ஹோட்டல்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. மாறாக மாலை நேரங்களில் எந்தவொரு சாதாரண சாப்பாட்டுக் கடைகளிலும் சாதாரணமாக வாங்க முடியும்.

ரொட்டி, மரக் கறிகள், முட்டை, சீஸ், வாசனைத் திரவியங்கள், இறைச்சி போன்றன கலந்து செய்யப்படுகின்ற ஒரு வகை கலவையாக கொத்து ரொட்டி உள்ளது. சோறு கலக்காமல் செய்யப்படுகின்ற இலங்கை உணவுகள் சிலவற்றில் கொத்து ரொட்டிக்கு தனி இடம் உண்டு.

ஆயினும் தற்போது மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து, முட்டைக் கொத்து, இறால் கொத்து, கணவாய் கொத்து, மீன் கொத்து என்றெல்லாம் இன்னோரன்ன கொத்துக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டொல்பின் கொத்து என்று ஒரு வகை கொத்து தற்போது அறிமுகம் ஆகி வருகின்றது.

கொத்து ரொட்டி சாப்பிடுகின்றமைக்கு மிகவும் சுவையானதாகவும், உறைப்பானதாகவும் இருக்கும். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மத்தியிலும் கொத்து பிரபலமாகி வருகின்றது. கொத்து தயாரிக்கின்றபோது எழுகின்ற சத்தம்கூட வித்தியாசமானதுதான்.

http://www.jvpnews.com/srilanka/113191.htmlKotu-01.jpg?resize=560%2C373Kotu-02.jpg?resize=560%2C373Kotu-03.jpg?resize=560%2C373Kotu-04.jpg?resize=560%2C373Kotu.jpg?resize=560%2C373

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து மலையாளிகளினதல்லவா?

'கொத்து' தமிழ் சொல்லல்லவா?

மலையாளம் எப்படி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து மலையாளிகளினதல்லவா?

 

கொத்து மலையாளிகளினதல்லவா?

 

 

இதைத்தான் நானும் கேட்கநினைத்தேன்

கொத்து எப்படி

எப்பொழுதிலிருந்து இலங்கை உணவானது??

 

இசுலாமிய நண்பர்களின் கடைகளில் எறி ரொட்டி போடுவதை சிறுவயதில் பார்த்திருக்கின்றோம்

சாப்பிட்டிருக்கின்றோம்

ஆனால் அது கொத்தல்லவே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவில் சிங்களவர், 5வது பந்தியில் இது திருச்சியில் இருந்து வந்ததாக சொல்கிறார்.

https://m.facebook.com/notes/kottu-rotti/is-kottu-a-truly-sri-lankan-food/100680432938

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலைதான்  அந்தமாதிரி கொத்து கொத்தீனம்.  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலைதான்  அந்தமாதிரி கொத்து கொத்தீனம்.  :D

 

கொத்துவுக்கு  லா சப்பல்தான் சிறந்த இடம் :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தின்னவேலி கொத்து, கொத்துத்தான், அப்ப.

இப்ப, சேவையர், வரணி ரோட், VVT கொத்து அந்தமாதரி எண்டு, அடம் பிடிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் மட்டக்களப்பு காத்தான்குடி கொத்துக்களை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் மட்டக்களப்பு காத்தான்குடி கொத்துக்களை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது :wub:

நான் மேல தந்த இனைப்பில், இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதியில் தான் முதலில் கொத்து ரொட்டி கடைகளில் வந்தது என்கிறார். ஆகவே, நீங்கள் சொல்வது சரிதான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து மலையாளிகளினதல்லவா?

 

மலையாளப் படங்களையும், மலையாள நடிகைகளையும் ரசித்து பார்க்கிற, உங்களுக்கு....

கொத்து... மலையாளம், என்றால்... அதனை சாப்பிடாமல்,  வெறுத்து ஒதுக்கிற மாதிரி.... உங்கடை, கதை போகுது.

:D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கொத்து' தமிழ் சொல்லல்லவா?

மலையாளம் எப்படி??

 

"கொத்துக் கொத்தாக...." தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற போது....

நம்பியாரும், நாராயணனும், மேனனும்.... உங்களுக்கு ஞாபகம் வந்து, 

"கொத்து" மலையாளிகளின் சொல் என்ற.... நினைவு, வரவில்லையா? முனி...... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை துறைமுகத்துக்கு கூலியாய் வந்த மலையாளிகள் கொண்டு வந்த கொத்து பரோட்டா தான் கொத்து ரொட்டியாகியது என்பதே நான் கேள்விப்பட்டது.

காத்தான் குடியைவிட, மட்டு டவுன் ஹாஜியார் கொத்து இன்னும் நல்லாயிருக்கும்.

அதுக்கு அடுத்த படி லா சப்பல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடாக் கடலைக் கடந்து யாழ்செல்லக் கிளாலித் தோணித்துறையில் நிற்கவேண்டிய காலத்தில், அங்கு சுற்றியிருந்த உணவகங்களில், காலப் பிரமாணம் தவறாத தாளத்துடன் கொத்துறட்டி போடுவதற்கான, கொத்து வாசிப்பை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்தக் கச்சேரியின் இனிமை. அது இப்பொழுதும் காதில் ஒலிக்கிறது. கொத்தின் சுவையை நினைத்தால் இன்றும் நாவூறும். 

 

Link to comment
Share on other sites

நம்ம தின்னவேலி கொத்து, கொத்துத்தான், அப்ப.



இப்ப, சேவையர், வரணி ரோட், VVT கொத்து அந்தமாதரி எண்டு, அடம் பிடிக்கிறார்.

மாமு,

லண்டனிலை ஆரொ புதிசா கொத்துக்கடை துறக்குரதாக கேள்விப்பட்டம்

Link to comment
Share on other sites

 

மாமு,

லண்டனிலை ஆரொ புதிசா கொத்துக்கடை துறக்குரதாக கேள்விப்பட்டம்

யாரும் அல்ல சுமோ தான் :)

Link to comment
Share on other sites

உங்கள் ஆதரவை வாரி வழங்குங்கள் இங்கிலண் வாழ் தமிழ் மக்களே :)

Link to comment
Share on other sites

கொத்து வேணுமா 

யாழ்ப்பாணத்திலுள்ள மொக்கன் கடை, இல்லை தெல்லிப்பளை கோப்பரேட்டிவ் கடையை அடிக்க எதுவுமே இல்லை.

இப்ப சத்தம் காதில கேட்குது. நா ஊறுது - இப்ப எங்க போவன் கொத்து ரொட்டிக்கு. இந்தியாவிலும் கொத்துப்பரோட்டா இருக்கு, ஆனாலும் எங்கடை கொத்து கொத்துதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு லண்டன் கொத்துப் பிரியர்களே.

நேற்று star kebab Wembley யில் கொத்து வாங்கிச் சாப்பிட்டேன் நல்லா இருந்தது. ஜஸ்ட் ஈட் வெப்சைட் மூலமும் வாங்கலாம்.

கெபாப் கொத்தும் வித்தியாசமாய் நல்லா இருந்த்ததாய் நண்பர் சொன்னார்.

Link to comment
Share on other sites

யாரும் அல்ல சுமோ தான் :)

ஐயோ! எஸ்கேப்.........    

Link to comment
Share on other sites

கொத்து வேணுமா 

யாழ்ப்பாணத்திலுள்ள மொக்கன் கடை, இல்லை தெல்லிப்பளை கோப்பரேட்டிவ் கடையை அடிக்க எதுவுமே இல்லை.

இப்ப சத்தம் காதில கேட்குது. நா ஊறுது - இப்ப எங்க போவன் கொத்து ரொட்டிக்கு. இந்தியாவிலும் கொத்துப்பரோட்டா இருக்கு, ஆனாலும் எங்கடை கொத்து கொத்துதான்.

அண்ணை தெல்லிப்பளை எவ்விடத்தில சொல்லுரிங்க, பெரிய சங்கக்கடையடியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை தெல்லிப்பளை எவ்விடத்தில சொல்லுரிங்க, பெரிய சங்கக்கடையடியோ?

 இவருக்கு கொத்துரோட்டியிலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள்....:)

Link to comment
Share on other sites

ஐயோ! எஸ்கேப்.........    

நிவே உங்களிடம் காசு வாங்க மாட்டா சாப்பிட்டுப் பார்த்திட்டுச் சொல்லுங்கோ. சரி தானே ஆன்ரி 

Link to comment
Share on other sites

 

கொத்துவுக்கு  லா சப்பல்தான் சிறந்த இடம் :)  

ஆகஸ்ட் மாதம் பரிஸ் வருகின்றேன், ஒருக்கா லாச்சப்பெல் கொத்து கடைக்கு கூட்டிக்கொண்டு போகேலுமே அண்ணை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.