Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் சாதிப்பவர்கள் :அமைச்சர் ஐங்கரநேசன்

Featured Replies

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் சாதிப்பவர்கள் :அமைச்சர் ஐங்கரநேசன் 

news
வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
 
பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம் மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. யு.எஸ்.எய்ட் மற்றும் எஸ்.டி.சி நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இப்பயணிகள் ஓய்வகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 
 
வன்னி மண் யாருக்கும் இலகுவில் அடிபணியாது. பண்டாரவன்னியனின் படைகள் மன்னாரில் இருந்து மாங்குளம் ஊடாக முன்னேறிய ஆங்கிலேயப் படைகளை பதினெட்டுத் தடவைகள் முறியடித்ததாக வரலாற்றில் இருந்து அறிய முடிகிறது. இப்போது நடந்து முடிந்த போரிலும் இலங்கை அரசு இலகுவில் வெற்றி பெறவில்லை.
 
 எத்தனையோ தடவைகள் படையெடுப்புகளை நடாத்தியிருக்கிறது. அதனை எதிர் கொண்டதில் வன்னிப் பெண்களின் தீரமும் தியாகமும் பெருமளவுக்கு இருக்கிறது. 
 
கடின உழைப்பாளிகளான இந்த வன்னிப் பெண்களே போரினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள். தொழில் வாய்ப்பு இல்லாதவர்களாகவும், அங்கவீனர்களாகவும். குடும்பத் தலைவர்களை இழந்தவர்களாகவும். பாதுகாப்பு அற்றவர்களாகவும் இவர்கள் எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது. 
 
போருக்குப் பின்னர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏராளமான உதவிகளை வழங்கியபோதும் பெண்களின் வாழ்க்கைத்தரம் பெருமளவுக்கு முன்னேறவில்லை. பெரும்பாலான உதவிகள் மீனைப் பிடிப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாகச் சாப்பிடுவதற்கு மீனைக் கொடுப்பது போல் இருந்ததே இதற்கான காரணம் ஆகும். 
 
இப்போது, பெண்களைப் பங்குதாரர்களாகவும் தொழில் முனைவோராகவும் கொண்டு வன்னி வள சுயஅபிவிருத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டு, அவர்களின் தொழில் முயற்சியொன்றுக்கு  உதவி வழங்கும் நிறுவனங்கள் நிதிப்பங்களிப்புச் செய்துள்ளன. ஏறத்தாழ 13 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பயணிகள் தங்ககம், மிகப் பொருத்தமான ஒரு இடத்தில் கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. வன்னியின் சுவையைப் பறைசாற்றும் உணவகமும் அமைய இருப்பதால் பொருளாதார ரீதியான வெற்றியை இந்த உணவகம் எமது பெண்களுக்குப் பெற்றுத்தரும்.
 
 இதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாதர் அமைப்புகளும் உதவிகளை மற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து பெற்றுக்கொண்டிருப்பவர்களாக இல்லாது தொழில் முனைவோராகவும் தொழில் வழங்குநர்களாகவும் மாற்றம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிகழ்ச்சியில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மான் வோங், எஸ்.டி.சி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மார்ட்டின் ஸ்டுடர், எஸ்.ஏ.எச் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டானியல் புரொன்கல், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சோ.கோகுலதாசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
z(5).jpg
 
zzzzzzz(2).jpg
 
zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz.jpg
 
zzzz.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=300704103724154358#sthash.Pax8OsBE.dpuf

பெண்களை பற்றி இவருக்கு நல்லா தெரியும் போல .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போஸ்:

உங்கட கட்சியில போட்டி இட இந்த முறை 2 பேருக்கு இடம் தருவியளா? 

  • தொடங்கியவர்

போஸ்:

உங்கட கட்சியில போட்டி இட இந்த முறை 2 பேருக்கு இடம் தருவியளா? 

அவருக்கே இடம் கிடைக்குமோ என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப் பெண்கள் மட்டுமல்ல.. வளங்கள் மிகு வன்னி மண்ணை பாதுகாக்க வேண்டியது.. சர்வதேச தரத்துக்கு அதனை உயர்த்த வேண்டியதும் கட்டாயக் கடமையாகும். இன்று உலகம் பூராவும் பரவி வாழும் வன்னி மக்கள் இதனை செய்ய முன் வர வேண்டும்.

குக்கிராமமாக இருந்த சீன கிராமங்கள் அதன் பொருண்மிய வளர்ச்சியோடு தனித்துவம் இழக்காத நகரங்களாக மாறி வருகின்றன. http://www.bbc.co.uk/news/magazine-33148442 போருக்கு முன்னர் இருந்ததை விட போருக்குப் பின்னர் தமிழர்களின் வெளிநாட்டுப் பிரசன்னமும்.. வருவாயும் அதிகரித்து தமிழர்கள் தலைநிமிரக் கூடிய பொருண்மிய பலத்தைக் கொண்டிருந்தாலும் அபிவிருத்தி என்பது இன்னும் சிங்களவர்களின் கையை அதிகாரத்தை எதிர்பார்க்கும் ஒன்றாக இருப்பது நிதர்சன உண்மையாக இருப்பினும்.. அதனையும் தாண்டி எம் மண்ணை மக்களை உய்விக்க வேண்டும்.

அந்த பாதையில் ஐங்கரநேசன் எடுத்து வைக்கும் அடிகள் பாராட்டத்தக்கவையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை பற்றி இவருக்கு நல்லா தெரியும் போல .

அண்ணைக்கு வன்னி எண்டாலே இப்பவும் ஒரு அதிர்வு அச்சம் நாக்கு தடுமாறுதல் எல்லாம் இருக்கு போலை...:(

  • கருத்துக்கள உறவுகள்


 "துப்பாக்கி குழாயினூடாக எதிரியிடம் பேசும் நாம் மக்களுடனும்,நண்பர்களுடனும் தொண்டைக்குழாயினூடகப் பேசுவோம்". என்றாராம் EPRLF பத்மநாபா.
அதுதான் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி மக்களின் தொண்டைக்குழாயை அறுத்து அதனூடாக பேசினார்களோ தோழர்கள் ?

அதுசரி இவர்கள் துப்பாக்கி குழாயினூடாக எதிரியிடம் பேசினார்களா? ஆம் அப்பாவித் தமிழ் மக்கள் தான் இவர்களது எதிரிகள். 

ஆம் வன்னிப்பெண்கள் திறமைசாலிகள் என்பதை விட மனத்திடம் மிக்கவர்கள்.வீட்டில் சமைத்துகொண்டு குழந்தைகளையும் பார்த்து ஆயிரம் கண்டு மிளகாய் தோட்டத்துக்கும் தண்ணீர் வரும் நேரத்துக்கு தண்ணீரையும் பாச்சி வீட்டு வேலைகளையும் முடித்து வைப்பார்கள்.ஆண் வயல் காணி வேலை சாப்பிட குளிக்க படுக்கத்தான் வீட்டுக்கு  வருவார் மற்றைய வேளைகளில் வாசிக சாலை,பூப் பந்து,பாலை மர நிழலில் கடதாசி விளையாடுதல்.வன்னிப்பிள்ளைகளும் தங்கள் தேவைகளை தானாக செய்யப்பழகிவிடுவார்கள்.முன்னர் தோட்டவேலை சயிக்கிள் ஓட்டம் மூன்று வேளையும் நெல் குற்றிய அரிசிச் சோறு.இப்போ காலம் மாறி விட்டது.இதர வருமானம்(புலம் பெயர் தேசத்துப் பணம்)சோம பானங்கள் மக்களை சோம்பேறியாக்கி விட்டது.

http://manthaieast.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=24&lang=ta

Edited by BLUE BIRD

அப்ப இந்த யாழ்ப்பாண பெண்கள் எல்லாம் என்ன மாதிரி?

வெளிநாட்டுக்கு இறக்குமதி செய்யவா?

தலையங்கத்தைப் பார்த்திட்டு மட்டும்தான் கருத்து இருக்கின்றது. உள்ளடக்கத்தை வாசிக்கவில்லை. வாசிக்கவும் போறதில்லை.

 

Edited by சனியன்

வன்னிப் பெண்கள் மட்டுமல்ல.. வளங்கள் மிகு வன்னி மண்ணை பாதுகாக்க வேண்டியது.. சர்வதேச தரத்துக்கு அதனை உயர்த்த வேண்டியதும் கட்டாயக் கடமையாகும். இன்று உலகம் பூராவும் பரவி வாழும் வன்னி மக்கள் இதனை செய்ய முன் வர வேண்டும்.

அட வெறும் வாய்வீச்சுத்தான்.

அதுசரி யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்கள் பாவனைக்கு எதிராக ஏதாவது பண்ணுவோம் என்றால் ஆளைக்காணோம். நல்லா விசைப்பலகையை தட்டுங்கோ - எல்லாம் நல்லாவரும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன செய்தீர்கள். அதில் வந்து வசனம் எழுதிட்டுப் போனது மட்டும் தான். ஒரு கணக்கை ஆரம்பித்து அலுவலை தொடங்குங்கோ என்று வழிகாட்டிய பின்னும்.. நாங்க தான் அதையும் செய்யனும்.. நீங்கள் வசனம்.... வசன கர்த்தா.. நாங்க விசைப்பலகை.. நீங்க என்ன திருகுவலைப் பலகையா.. வைச்சு தட்டுறீங்க. முதலில முயற்சில முன்னுக்கு நிற்கலாமே. குறை நிறை சொல்ல நிறையப் பேர் இருக்கிறியள். ஒன்றையும் ஒழுங்கமைச்சு ஒற்றுமையாச் செய்ய மாட்டியள். உங்களோட எப்படி மிணக்கடுவது. விழலுக்கு இறைக்க நாங்க தயார் இல்லை. :o:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.