Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!

Featured Replies

இந்த திரியின் கருத்தாடல்களை பார்க்கும் போது அவரவர் ஆசனவாயிலை தொட்டு தாங்களே முகர்ந்து கொள்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. :(

எமது போராட்டங்கள் கிட்டத்தட்ட 60 வருடங்களாக நீடிக்கின்றது. அதில் சரி பிழை பிடிப்பவர்களுக்கு இன்னும் 600 வருடங்கள் தேவைப்படும். :lol:

குமாரசாமி அண்ணை.
வரலாறு சரி பிழைகளை தன்னகத்தே கொண்டது. 30வருட அகிம்சை போராட்டம் பிழையென்றுதான் ஆயுதம் தூக்கினோம். நடந்தது என்ன? கிடைத்தது என்ன? இருந்ததையும் இழந்தோம். இப்போது இன்னொரு பரிமாணம் - இதை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

அவரவர் ஆசனவாயிலை தொட்டு தாங்களே முகர்ந்து கொள்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இது உங்களுக்கும் பொருந்தும். இது தேவையும் கூட. எங்கள் நாற்றங்களை நிச்சயமாக நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நாற்றங்களை விட்டு நாம் வெளியே வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிலர் சிங்களவனின் ஆ. வாய் மட்டும் நாறும். தமிழனின் ஆ. வாயில் சந்தணமும் ஜவ்வாது மணக்கும் என்பார்கள்.

அதை எதிர்த்து கேள்வி கேட்டால் துரோகி, புல்லுருவி என்று பட்டமளிப்பு விழா நடத்தி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பை நேரடியாக அனுபவித்தவர்களின் கண்ணீரை நாம் மதிக்க வேண்டும்.

எனக்கு இன்னும் புதிராக இருக்கும் ஒரு விடயம்: சிங்களவர்களால் பாதிக்கப் பட்ட தமிழர்கள் போலவே புலிகளால் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கும் நாம் நீதி கேட்கும் நிலை எப்போதாவது வருமா? இந்த நிலை வந்தால் தமிழர்களுக்கிடையே ஒரு healing வரும் என நினைக்கிறேன். இதைப் பற்றி நெடுக்கு, கு.சா போன்ற உறவுகள் என்ன நினைக்கிறீர்கள்? அறிய ஆவல்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணா..

சிங்களவனால் மட்டுமல்ல.. புலிகளால் மட்டுமல்ல.. இந்தியனால்.. இதர தமிழ் ஒட்டுக்குழுக்களால்.. முஸ்லீம் மதவாதக் குழுக்களால்.. தமிழன் பாதிக்கப்பட்டிருக்கிறானே. வரலாற்று நெடுகைப் பார்த்தால்.. 1986 முதல் ஒட்டுக்குழு இன அழிப்பு என்பது பாரதூரமாக இருந்துள்ளது. அது 1987 - 90 வரை உச்சம் பெற்று மீண்டும் 2006 - 2009 வரை அதி தீவிரம் அடைந்திருந்தது. இடையில் வவுனியா.. தென் தமிழீழம் இவர்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு சமன்பாடு போட முடியாது. இவற்றிகெல்லாம்..முதன்மை இனக்கொலைஞனாக உள்ள சிங்களவனை நீதியின் முன் நிறுத்தினால்.. மற்றவர்களுக்கான நீதி என்ன என்பதை அவர்களே தீர்மானிக்கச் செய்ய முடியும். யாரையும் இதில் மன்னிக்க முடியாது.

அமெரிக்கா.. பிரிட்டன்.. பெல்ஜியம்..இஸ்ரேல்... ஹிந்தியா..பாகிஸ்தான்.. வங்கதேசம்..சீனா.. ரஷ்சியா.. உக்ரைன்.. அர்ஜென்ரீனா.. தென்னாபிரிக்கா.. ஜப்பான்.. தாய்லாந்து.. மலேசியா.. மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள்.. போன்ற நேரடி ஆயுத.. இராணுவப் பங்காளிகளும் இந்த மனித இனப்படுகொலையின் பின்னால் இயங்கியுள்ளனர். அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். தமிழர்கள்.. வெறுமனவே.. புலிகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதல்ல நியாயம்.. நீதி என்பது.

தமிழீழம் கேட்டவையும்.. இரத்தத் திலகம் வைச்சவையும்.. இந்தா அடுத்த தைப்பொங்கலுக்குள் தமிழீழம் என்றவையும்.. 5000 இளைஞர்களை தாருங்கள் சிங்களப் படைகளை விரட்டி அடிக்கிறோம் என்றவையும்..செய்த மாயமந்திர அரசியலாலும் அந்த அரசியல்வாதிகளாலும் தான் புலிகளே தோற்றம் பெற்றார்கள். இன்று அவர்களும் அவர்களின் சந்ததிகளும் எந்த விசாரணைகளும் குற்ற உணர்வும் இன்றி சகஜமாக சொகுசாக வாழ முடிகிறது. கொலை செய்பவனை விட அதனை தூண்டுபவன் தான் கொலைச் சூத்திரதாரியே. அமிர்தலிங்கம்.. சங்கரி... சம்பந்தன்.. உந்த வகையறாக்கள் தான். அவர்களை மிதவாதிகள் என்று சொல்லி புனிதப்படுத்துது ஒரு கூட்டம். எங்களைப் பொறுத்த வரை.. கடந்த கால இன அழிப்பில் இவர்களின் கொள்கை ரீதியான தவறுகள் இனப்படுகொலையாளிகளுக்கு உதவியுள்ளமை தெரிகிறது. அது மிகவும் கொடுமையான இனப்படுகொலை ஒத்துழைப்பாகும். அது விசாரிக்கப்பட்டு இவர்கள் நீதியால் தண்டிக்கப்படனும். அரசியல் தவறுகள் என்று சாதாரணமாகப் புறந்தள்ள முடியாது.

எங்களைக் கேட்டால்.. இவர்களை எல்லாம் விசாரணைக்கு உட்படுத்த நீதியின் முன் நிறுத்தும் போது புலிகளையும் நிறுத்தலாம்.

அதற்காக சிங்களவன் செய்த பெரும் மானுட அநீதியை போலிச் சமன்பாடுகளால் மறைக்கனும் என்று கிடையாது. சிங்களவன் செய்த மானுடப் படுகொலைக்கு சிறீலங்காவும்.. அதனோடு சம்பந்தப்பட்ட நாடுகளும் உடனடியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் அங்கு இழைக்கப்பட்ட மானுட அநீதி என்பது உதாரணமானால்.. அதுவே உலகில் மொத்த மானுட சமூகத்தையும் ஆட்சியாளர்களாக உள்ள மனிதர்கள்.. மொத்தமாக மெளனமாகவே அழிச்சுப் போட வகை செய்யும். அந்த வகையில்.. இது இந்தப் பூமியில் மானுடம் இன்னும் வாழனும் என்றாலும் கூட சிறீலங்கா சிங்கள ஆட்சியாளர்கள் செய்த இனப்படுகொலை என்பது.. விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய முதன்மை அம்சமாகவும் மாறியுள்ளது. அந்த வகையில் தான் இதற்கு முன்னுரிமை அளிக்க உலகில் மானுட மனச்சாட்சி உள்ள மனிதர்கள் குரல்கொடுக்கிறார்கள். அவர்கள்.. புலி.. தமிழன்.. என்ற நிலைக்கு அப்பால்.. மானுடப் பேரழிவாக இதைப்பார்க்கிறார்கள்.

ஆனால் எங்களில் சிலர் மங்கையற்கரசியின் கறுமாந்திரமாக இதைப் பார்ப்பது தான் வேடிக்கை. மங்கையற்கரசி அவரின் கணவரின் பிழையான அரசியல் அணுகுமுறைகளால் அழிக்கப்பட்ட எம் மக்களுக்காக அழுதவரா... மன்னிப்புத்தான் கேட்டவரா. அது கூடச் செய்ய இயலாத அவர் எல்லாம் மனிதனே கிடையாது. வாழும் சுயநலப் பிசாசு. அவர்களுக்கான நீதி என்பது இப்போதைய உடனடி அவசியம் அல்ல. அவர்களுக்கு நீதி என்பது அவர்களால்... நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் பொது நீதியின் ஒரு சிறுபங்காகவே இருக்க முடியும் என்பதும் திண்ணம்.

நாம் புலிகளில் பிழைபிடிக்க காட்டிற உற்சாகத்தை ஏன்.. எம் சுய பிழைகளில் காட்டுவதில்லை காட்டி இருந்தால்.. ஒட்டுக்குழு.. துரோகிகள்.. கொண்டான எம் இன அழிப்பு என்ற ஒன்றையாவது கட்டுப்படுத்தி இருக்கலாம்.  புலிகள் விசாரரிக்கப்படும் போது இவர்கள் தப்ப முடியாது. கொலை ஏஜென்டுகளாக செயற்பட்ட இவர்களும் விசாரிக்கப்பட வேண்டியவர்களே. அங்கு தான் நாம் பார்க்கும் நீதியே உள்ளது. வெறுமனவே சிங்களவன்.. புலிகள் மட்டும் தண்டிக்கப்படனும் என்பது அல்ல எங்கள் நோக்கம். தமிழினத்தை கருவறுக்க செயற்பட்ட அனைவரும் தண்டிக்கப்படனும். அது ஆயுத ரீதியாக மட்டுமல்ல.. கொள்கை ரீதியாக செயற்பட்டவர்களாக இருந்தாலும் கூட. !!! அதற்காக முதன்மை இனக்கொலையாளியான சிங்களவன் தண்டிக்கப்படுவதை பிற்போட முடியாது. அது எமது மக்களுக்கா நீதியை கிடைக்கப்பெற முடியாத ஒன்றாக்கி விடும்.:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பை நேரடியாக அனுபவித்தவர்களின் கண்ணீரை நாம் மதிக்க வேண்டும்.

எனக்கு இன்னும் புதிராக இருக்கும் ஒரு விடயம்: சிங்களவர்களால் பாதிக்கப் பட்ட தமிழர்கள் போலவே புலிகளால் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கும் நாம் நீதி கேட்கும் நிலை எப்போதாவது வருமா? இந்த நிலை வந்தால் தமிழர்களுக்கிடையே ஒரு healing வரும் என நினைக்கிறேன். இதைப் பற்றி நெடுக்கு, கு.சா போன்ற உறவுகள் என்ன நினைக்கிறீர்கள்? அறிய ஆவல்!

நாம் ஒரு விமானத்தில் குறித்த இடத்தை நோக்கி வானத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம்

முதலில் இலக்கில் இறங்கவேண்டும்  என்பது நோக்கமாக இருக்குமா?

அல்லது

விமானப்பணியாளர்கள் நீதியாக நடக்கவில்லை

தரப்பட்ட சாப்பாடு சரியில்லை

பக்கத்தில் இருந்தவர் குறட்டை விட்டார் 

என்று விமானியின்  கவனத்தை திசை திருப்பி

பயணத்தை ஆபத்தானதாக்குவீர்களா??

என்னிடம் பலமுறை இங்கு கேட்கப்பட்ட கேள்வி இது

பிரான்சிலுள்ள புலிகளின் நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்கமாட்டீர்களா என்று.

எனது பதில் என்றும் ஒன்றுதான்

தீர்வு கிடைத்து அவர்களுக்கொரு பட்டம் பதக்கம் தரும் நாள் வந்தால் நிச்சயம் எனக்குத்தெரிந்ததை தெரிவிப்பேன்.

அதுவரை காலைத்தடக்கிவிடுவது எமக்கு நாமே வைக்கும் உலை மட்டுமே..

இந்த விடயத்தில் எதிரியானாலும் சிங்களத்தின் தூசிக்கும் வராது தமிழினம்..:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் நீண்ட பதிலுக்கு நன்றிகள்!

"தாமதப் படுத்தப் பட்ட நீதி செத்த நீதி" என்பது சிங்களவர்களின் குற்றங்களுக்கு மட்டுமல்ல, யாருடைய குற்றத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்று தான். இதனால், சிங்களவனைத் தண்டித்த பின்னர் புலிகளையும் மற்றவர்களையும் தண்டிப்பது பற்றி யோசிக்கலாம் என்பதுடன் எனக்கு உடன் பாடில்லை. இதை நாம் ஆதரித்தால், "புலிகளைத் தண்டித்த பின்னர் எங்கள் இராணுவத்தைத் தண்டிப்பது பற்றி யோசிக்கலாம்" என்று சிங்களவர்கள் சொல்வதையும் நாம் கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். புலிகள் மீதான அபிமானத்தை இழக்காமல் அவர்கள் செய்த குற்றங்கள் குறைகளை தமிழர்களான எங்களிடையேயாவது நாம் பேசிக் கொள்ளும் ஒரு பொறிமுறை இருக்க வேண்டும்-இது எங்களிடையே இருக்கிற உராய்வுகளை நீக்கி ஒரு எண்ணை போட்ட இயந்திரம் போல இயங்க வைக்கும் என நான் கருதுவதால் இப்படி ஒரு கருத்தை வைத்தேன். தமிழர்களிடையே இப்போது உள்ள நிலைமையோ, கள்ள மௌனம்,உதாசீனம், பேசுபவரின் குழுச்சார்பைப் பாவித்து உண்மைகளை வலுவிழக்கச் செய்தல் என்பனவாய் இருக்கின்றன.

விசுகரின் பதில் எதிர் பார்த்தது தான். நான் மேலே சொல்லியிருப்பவை சில உங்களுக்கும் பதிலாகும். ஒரு தரப்பைப் சார்ந்தோர் தங்கள் நன்றிக் கடனை குற்ற மறுப்பாக வெளிப்படுத்துவதை சிங்களவர்கள் மட்டுமல்ல, ஈராக்கியர் விடயத்தில் அமெரிக்கர்கள், கிழக்குத் திமோர் விடயத்தில் இந்தோனேசியர்கள், ஆர்மேனியர்கள் விடயத்தில் துருக்கியர்கள், சீக்கியர்/நாகலாந்து விடயங்களில் தேசபக்தியுள்ள இந்தியர்கள் இப்படிப் பலரும் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இதனால் தான் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளாக மீள நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பது என் கருத்து!  

கொலை ,கொள்ளை ,பயங்கரவாதம் ,கட்டாய ஆள் சேர்ப்பு ,குழந்தை போராளிகள் ,தற்கொலைத்தாக்குதல் எல்லாம் போர்குற்றம் என்ற பேரில ஐ நா வில் விசாரணைக்கு வந்திருக்கு அண்ணைக்கு இவை குறட்டை போல கிடக்கு .

எமது அறிவு இவ்வளவுதான் என்றால் முள்ளிவாய்கால் தான் முடிவு .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவோ.. நீதியின் பால் அவர்களை நிறுத்தவோ தண்டிக்கவோ வேண்டாம் என்று கூறவில்லை. அரச பயங்கரவாதம் ஒன்றை ஊக்குவித்த நாடுகள்.. அதற்கு உதவிய நாடுகள்.. தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. முஸ்லீம் மதவாதக் குழுக்கள்.. எல்லாம் ஒட்டுமொத்தமாக விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டு.. இனப்படுகொலை அரச பயங்கரவாதத்தை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கும் போது புலிகள் மீதான விசாரணையும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே. அதை இந்த உலகம் செய்யும் என்றால்.. நாங்கள் வரவேற்போம். அதுதான் தேவை. அதற்காக.. முதன்மைக் கொலையாளியான சிங்களவனை தப்பிக்க அனுமதிக்க முடியாது.

அண்மையில் வெளியிடப்பட்ட இஸ்ரேல்- காசா யுத்த போர்க்குற்ற விசாரணையில் இருதரப்பு மீது ஐநா குறைபிடித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையின் பிரகாரம் இஸ்ரேல் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால்.. கிரிமியாவை ஒருங்கிணைத்தற்காக.. ஐநா தலையீடு இன்றியே.. ரஷ்சியா மீது மேற்குலகம் பொருண்மிய தடை போட்டுள்ளது.

ஆக எல்லாம் அவரவர் தேவைக்கு தான். சிரியாவில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கும் அமெரிக்காவே மற்றைய இடங்களில் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் பெரும் இனப்படுகொலைகளை செய்ய அரசுகளுக்கு உதவுகிறது. இந்த அமெரிக்காவை யார் விசாரிப்பது தண்டிப்பது. ஐநா செய்யுமா..??!

இங்கு புலிகள் செய்ததை சுட்டிக்காட்டும் பலர் புலிகள் இருந்த போதும் இல்லாத போதும் ஒட்டுக்குழுக்கள் இன்று வரை செய்து வரும் மானுட நீதிக்கு எதிரான செயற்பாடுகள் படுகொலைகள் பாலியல் வன்புணர்வுகள் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகள்.. தொடர்பில் விசாரிக்க.. நீதி வழங்கக் கோருவதில்லை. அதுவும் பல ஒட்டுக்குழு ஆட்கள் தப்பி வெளிநாடுகளில் செய்த குற்றங்களை மறைத்து வாழவும் வழி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றிற்கும் நீதி தேவை..! கிடைக்குமா.. வெறுமனவே புலிகள் தண்டிப்பதால் மட்டும் மானுட நீதி பலப்படப் போவதில்லை. புலிகள் அதில் செய்த தாக்கத்தை விட இன்று செய்து கொண்டிருப்பவர்கள்.. மிகப் பெரிய பேரழிவுகளை மானுடத்துக்கு எதிராகச் செய்தவர்கள் என்று சொல்லலாம்.

யார் இவர்களை தண்டிப்பது. நீதி எல்லோருக்கும் பொதுவானது. புலிகளுக்கு மட்டுமானதல்ல. :rolleyes:

ஒரு சாட்சியத்துகுகே இப்படி கருத்து மோதினால் எப்படி? 

முழு அறிக்கையும் வெளி வந்தபின்னர் உங்கள் கருத்தை வையுங்கள்.

உங்கள் நிலை விவாதங்கள் பாதிக்கபட்ட மனங்களை இன்னும் நோகடித்துவிடும் மறந்திடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவோ.. நீதியின் பால் அவர்களை நிறுத்தவோ தண்டிக்கவோ வேண்டாம் என்று கூறவில்லை. அரச பயங்கரவாதம் ஒன்றை ஊக்குவித்த நாடுகள்.. அதற்கு உதவிய நாடுகள்.. தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. முஸ்லீம் மதவாதக் குழுக்கள்.. எல்லாம் ஒட்டுமொத்தமாக விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டு.. இனப்படுகொலை அரச பயங்கரவாதத்தை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கும் போது புலிகள் மீதான விசாரணையும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே. அதை இந்த உலகம் செய்யும் என்றால்.. நாங்கள் வரவேற்போம். அதுதான் தேவை. அதற்காக.. முதன்மைக் கொலையாளியான சிங்களவனை தப்பிக்க அனுமதிக்க முடியாது.

அண்மையில் வெளியிடப்பட்ட இஸ்ரேல்- காசா யுத்த போர்க்குற்ற விசாரணையில் இருதரப்பு மீது ஐநா குறைபிடித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையின் பிரகாரம் இஸ்ரேல் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால்.. கிரிமியாவை ஒருங்கிணைத்தற்காக.. ஐநா தலையீடு இன்றியே.. ரஷ்சியா மீது மேற்குலகம் பொருண்மிய தடை போட்டுள்ளது.

ஆக எல்லாம் அவரவர் தேவைக்கு தான். சிரியாவில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கும் அமெரிக்காவே மற்றைய இடங்களில் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் பெரும் இனப்படுகொலைகளை செய்ய அரசுகளுக்கு உதவுகிறது. இந்த அமெரிக்காவை யார் விசாரிப்பது தண்டிப்பது. ஐநா செய்யுமா..??!

இங்கு புலிகள் செய்ததை சுட்டிக்காட்டும் பலர் புலிகள் இருந்த போதும் இல்லாத போதும் ஒட்டுக்குழுக்கள் இன்று வரை செய்து வரும் மானுட நீதிக்கு எதிரான செயற்பாடுகள் படுகொலைகள் பாலியல் வன்புணர்வுகள் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகள்.. தொடர்பில் விசாரிக்க.. நீதி வழங்கக் கோருவதில்லை. அதுவும் பல ஒட்டுக்குழு ஆட்கள் தப்பி வெளிநாடுகளில் செய்த குற்றங்களை மறைத்து வாழவும் வழி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றிற்கும் நீதி தேவை..! கிடைக்குமா.. வெறுமனவே புலிகள் தண்டிப்பதால் மட்டும் மானுட நீதி பலப்படப் போவதில்லை. புலிகள் அதில் செய்த தாக்கத்தை விட இன்று செய்து கொண்டிருப்பவர்கள்.. மிகப் பெரிய பேரழிவுகளை மானுடத்துக்கு எதிராகச் செய்தவர்கள் என்று சொல்லலாம்.

யார் இவர்களை தண்டிப்பது. நீதி எல்லோருக்கும் பொதுவானது. புலிகளுக்கு மட்டுமானதல்ல. :rolleyes:

வேலை காரணமாக விரிவாக இப்போது கருத்தாட இயலவில்லை. மாலையில் வருவேன். நான் பேசுவது தமிழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலான புலிகள் மீதான தவறுகளை ஏற்றுக் கொள்ளும் தமிழர்களிடையே மட்டுமான உரையாடல் பற்றி. இதில் சிங்களவர்களைச் சுத்தப் படுத்தும் முயற்சி எதுவும் இல்லை.

அர்ஜூன் உமாவின் தவறுகளைத் தவறென்றால், நீங்கள் புலிகளின் தவறுகளைத் தவறுகளாக ஏற்றுக் கொள்வீர்கள் போல இருக்கு! அப்படியா? அப்படியென்றால் we made progress! (மீண்டும், இப்போது நேரமில்லை, மாலையில் பேசலாம்!)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாங்கள் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை. ஏலவே விடுதலைப்புலிகள் சொன்னது தான். நாங்கள் எந்த வகையான ஐநா விசாரணை முன்னும் தோன்றத் தயார் என்பது. ஐநா அழைப்பவர்கள் உயிரோடு இருந்தால் புலிகள் ஐநா விசாரணையை ஏற்றுக் கொள்வார்கள் என்றே தெரிகிறது.

உமா மகேஸ்வரன் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஒட்டுக்குழு பயங்கரவாதிகளும் தண்டிக்கப்படனும். உலகெங்கும் தாம் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றச் செயல்களை மறைத்து வாழும் ஒட்டுக்குழு ஆட்கள் மற்றும் மிதவாதிகள் என்ற போர்வையில் இளைஞர்களிடம் ஆயுதத்தை திணித்துவிட்டு தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைத்த.. மிதவாத அரசியல் படுகொலையாளர்களும்... அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

சிங்கள அரசபயங்கரவாதம் எப்பவும் தப்ப அனுமதிக்கவே முடியாது. அதற்கு ஒத்துழைத்த நாடுகளும் விசாரணை வலயத்துள் எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதி. அதுதான் மானுடத்துக்கு எதிரான அரசபயங்கரவாதிகளை கொடுமை இன அழிப்புச் செய்வதில் இருந்தும் சற்றேனும் தடுத்து மானுடத்தை பாதுகாக்க முடியும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் நீண்ட பதிலுக்கு நன்றிகள்!

"தாமதப் படுத்தப் பட்ட நீதி செத்த நீதி" என்பது சிங்களவர்களின் குற்றங்களுக்கு மட்டுமல்ல, யாருடைய குற்றத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்று தான். இதனால், சிங்களவனைத் தண்டித்த பின்னர் புலிகளையும் மற்றவர்களையும் தண்டிப்பது பற்றி யோசிக்கலாம் என்பதுடன் எனக்கு உடன் பாடில்லை. இதை நாம் ஆதரித்தால், "புலிகளைத் தண்டித்த பின்னர் எங்கள் இராணுவத்தைத் தண்டிப்பது பற்றி யோசிக்கலாம்" என்று சிங்களவர்கள் சொல்வதையும் நாம் கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். புலிகள் மீதான அபிமானத்தை இழக்காமல் அவர்கள் செய்த குற்றங்கள் குறைகளை தமிழர்களான எங்களிடையேயாவது நாம் பேசிக் கொள்ளும் ஒரு பொறிமுறை இருக்க வேண்டும்-இது எங்களிடையே இருக்கிற உராய்வுகளை நீக்கி ஒரு எண்ணை போட்ட இயந்திரம் போல இயங்க வைக்கும் என நான் கருதுவதால் இப்படி ஒரு கருத்தை வைத்தேன். தமிழர்களிடையே இப்போது உள்ள நிலைமையோ, கள்ள மௌனம்,உதாசீனம், பேசுபவரின் குழுச்சார்பைப் பாவித்து உண்மைகளை வலுவிழக்கச் செய்தல் என்பனவாய் இருக்கின்றன.

விசுகரின் பதில் எதிர் பார்த்தது தான். நான் மேலே சொல்லியிருப்பவை சில உங்களுக்கும் பதிலாகும். ஒரு தரப்பைப் சார்ந்தோர் தங்கள் நன்றிக் கடனை குற்ற மறுப்பாக வெளிப்படுத்துவதை சிங்களவர்கள் மட்டுமல்ல, ஈராக்கியர் விடயத்தில் அமெரிக்கர்கள், கிழக்குத் திமோர் விடயத்தில் இந்தோனேசியர்கள், ஆர்மேனியர்கள் விடயத்தில் துருக்கியர்கள், சீக்கியர்/நாகலாந்து விடயங்களில் தேசபக்தியுள்ள இந்தியர்கள் இப்படிப் பலரும் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இதனால் தான் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளாக மீள நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பது என் கருத்து!  

 இப்போது புலிகள் பற்றிய ஆய்வுக்கான 

 அதற்கான சூழல் வந்துவிட்டதாக கருதுகிறீர்களா??

நீங்கள் காட்டிய உதாரணங்கள் 

அவர்கள் ஏற்றுக்கொண்டவையே

அப்படியாயின் தமிழர்கள் மட்டும் ஏன் தாங்களாகவே நாங்க முதலில் உரிகின்றோம் என்கிறார்கள்...?

போர்க்குற்றம் விசாரணை என்று வரும் போது

உலகம் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து முடிவு தராது

அதை அவர்கள் செய்யட்டும்

ஆனால் எம்மவரே 

அங்கே ஒழிந்திருக்கு

இங்கே ஒழிந்திருக்கு என்று  ஏன் வெளிச்சம் போடுகிறார்கள்...

இதன் மூலம் தமிழரது தீர்வு ஒடி அடிதானும் பின்னுக்கு போகாதா??

இங்க கருத்து வைப்பவர்களது நோக்கம் தமிழருக்குள் ஒரு தீர்வை நோக்கிச்செல்லும் நல்லநோக்கத்தில் தான் என கருதுகிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் "தமிழருக்கான தீர்வு" என்பது என்ன விசுகர்? தமிழ் ஈழமா? அல்லது பலியானவர்களுக்கு நீதியா? அல்லது எஞ்சியிருக்கும் மக்களுக்கு நீண்ட காலப் போக்கில் தரமான வாழ்க்கையா? இவை எல்லாமே தீர்வுகள் தான் என நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எங்களிடையேயான பிளவுகள் தான் நாம் இந்தத் தீர்வுகள் நோக்கி நகரத் தடை என நினைக்கிறேன். மேலும் ஒரு ஊருக்கு ஒரேயொரு வழி தான் என்று இருக்க முடியாது எனவும் நினைக்கிறேன். குறை சொல்பவனையெல்லாம் தடை போடுகிறான் என்று குற்றஞ்சாட்டும் போக்கை தலைவர் இன்று இருந்திருந்தாலும் ஆதரிப்பார் என நம்பவில்லை நான்!

இங்கு சாட்சி சொல்பவர்கள்  தமது குடும்பத்துக்கான தீர்வை

அல்லது வழியைத்தேடித்தான் சாட்சி சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பீர்களானால்......

உங்களுடன் எந்த தீர்வு பற்றி நான் பேசமுடியும்???

:huh:அவ்வாறு நான் எங்கும் சொல்லவில்லை! நினைக்கக் கூட இல்லை! எங்கே எடுத்தீர்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என அறியேன்!

  • கருத்துக்கள உறவுகள்

:huh:அவ்வாறு நான் எங்கும் சொல்லவில்லை! நினைக்கக் கூட இல்லை! எங்கே எடுத்தீர்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என அறியேன்!

அவர்களும் தமிழருக்கான ஒரு தீர்வு சார்ந்து தானே இதை ஒப்புவிக்கிறார்கள்

அதை புலி சார்ந்தது

தனிப்பட்டது சார்ந்தது போல்த்தானே இங்க கருத்துக்கள் வைக்கப்பட்டன

அத சார்ந்து தானே தங்களது கருத்துக்களும் வந்தன..

இதனூடாக ஒரு தீர்வை நோக்கி நகரலாம் என்ற முனைப்பில்

எதற்கு தடைகள்???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

உங்களுடன் உரையாடல்களைத் தொடர முடியாமல் போக இது தான் காரணம்:

எழுதாததை வாசிப்பீர்கள், எழுதியவர் நினைக்காததைப் புரிந்து கொள்வீர்கள், உடனே இன்னார் இன்னாருடன் என்று குழு சேர்த்து விடுவீர்கள். திரும்பவும் உரையாடலை முதல் சதுரத்திலேயே கொண்டு வந்து விட்டு விடுவீர்கள்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்று தான் - தமிழர்களுக்கு எது தீர்வு என்பதைப் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியா இல்லை!

பயனுள்ள வேலைகள் காத்திருக்கின்றன! திறந்த மனதுடன் நீங்கள் வரும் நாட்களில் உரையாடலாம்! இப்ப நான் விடைபெறுகிறேன்!

 ஒபாமா புட்டின் என்று பட்டியல் நீளம்ஆகும்  போல கிடக்கு .தான் போக வழியில்லை பழமொழி தான் நினைவு வருகின்றது 

இதில் நாங்கள் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை. ஏலவே விடுதலைப்புலிகள் சொன்னது தான். நாங்கள் எந்த வகையான ஐநா விசாரணை முன்னும் தோன்றத் தயார் என்பது. ஐநா அழைப்பவர்கள் உயிரோடு இருந்தால் புலிகள் ஐநா விசாரணையை ஏற்றுக் கொள்வார்கள் என்றே தெரிகிறது.

உமா மகேஸ்வரன் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஒட்டுக்குழு பயங்கரவாதிகளும் தண்டிக்கப்படனும். உலகெங்கும் தாம் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றச் செயல்களை மறைத்து வாழும் ஒட்டுக்குழு ஆட்கள் மற்றும் மிதவாதிகள் என்ற போர்வையில் இளைஞர்களிடம் ஆயுதத்தை திணித்துவிட்டு தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைத்த.. மிதவாத அரசியல் படுகொலையாளர்களும்... அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

சிங்கள அரசபயங்கரவாதம் எப்பவும் தப்ப அனுமதிக்கவே முடியாது. அதற்கு ஒத்துழைத்த நாடுகளும் விசாரணை வலயத்துள் எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதி. அதுதான் மானுடத்துக்கு எதிரான அரசபயங்கரவாதிகளை கொடுமை இன அழிப்புச் செய்வதில் இருந்தும் சற்றேனும் தடுத்து மானுடத்தை பாதுகாக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

உங்களுடன் உரையாடல்களைத் தொடர முடியாமல் போக இது தான் காரணம்:

எழுதாததை வாசிப்பீர்கள், எழுதியவர் நினைக்காததைப் புரிந்து கொள்வீர்கள், உடனே இன்னார் இன்னாருடன் என்று குழு சேர்த்து விடுவீர்கள். திரும்பவும் உரையாடலை முதல் சதுரத்திலேயே கொண்டு வந்து விட்டு விடுவீர்கள்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்று தான் - தமிழர்களுக்கு எது தீர்வு என்பதைப் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியா இல்லை!

பயனுள்ள வேலைகள் காத்திருக்கின்றன! திறந்த மனதுடன் நீங்கள் வரும் நாட்களில் உரையாடலாம்! இப்ப நான் விடைபெறுகிறேன்!

சென்று வாருங்கள்

ஆனால் குழுவிவாதம் என்பதை எவ்வாறு கண்டீர்கள்??

அந்த கருத்து  சார்ந்து தான் என்பது குழுவாகியது எப்படி??

என்னைப்பொறுத்தவரை

தமிழரின் தாகம் தமிழீழம் தான்....

புலிகள் கேட்டவையே எனது தெரிவு

அதைத்தரமுடியாது என்றால்

சமபந்தப்பட்டவர்கள் தான் அடுத்த தீர்வை வைக்கணும்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

இவர்கள் சொல்வது வேலுநாயக்கர் சொன்னதுதான். அவனை நிறுத்த சொல்லு நான் நிறுதிறேன் :)

அமேரிக்கா, முதல் இலங்கைக்கு உதவிய நாடுகள் எல்லாத்தையும் விசாரிச்சு உண்மை விளம்பும் போது புலிகளையும் விசாரிக்கலாம் அதுவரை சிங்களவனை மட்டும் விசாரிச்சா போதும்.

உங்களுக்கு பயனுள்ள வேலை நிறைய இருக்கென்று சொன்னீர்களே :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.