Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனது விருப்பம் நிராகரிப்பு - அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனம் என்ற ரீதியில் அனந்தி  செய்த காத்திரமான விடயம் என்று ஒன்றை குறிப்பிடவும்

நீங்கள் பார்த்தீர்களோ தெரியவில்லை, நான் பார்த்தேன். அவர் UN மனித உரிமை பகுதியில் தனக்கு நிகழ்ந்த, தன்னை போன்றவர்களுக்கு நிகழ்ந்த அவலங்களை சொல்லியவர். அதேபோல டேவிட் கமரோன் வந்தபோது பாதிக்க பட்ட மக்களில் கடிதங்களை வாங்கி உரியவர்களுக்கு கொடுத்தவர். மற்றவர்கள் எல்லோரும் " பாதிக்கபட்டவர்களே " இல்லை என்று சொல்லும் போது அவர் அந்த பணியை செய்தவர் ..அன்று வாய் திறந்தவர்கள் எல்லாம் இன்று வாய்ப்பூட்டு போடபட்டு உள்ளார்கள் . அன்று கமரோன் சொன்னார் , இதுவரைக்கும் நான் சந்தித்தவர்களில் விக்கினேஸ்வரன் போல் தெளிவாக பிரச்னையை சொன்னவரை நான் பார்க்கவில்லை என்று . ஆனால் இன்று அவர் வாய்பூட்டு போட்டப்பட்டு இருக்கிறார்.

 

அவர் ஒரு இன அழிப்பு போரின் சாட்சி , அவரை உரிய முறையில் பாதுகாப்பது இந்த சமூகத்தின் கடமை. ஆனால் இன அழிப்பு நடக்கவில்லை என்பவர்களுக்கு அவர் ஒரு இடையூறு . அதுதான் இங்கே நடக்கிறது .

  • Replies 62
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுயேட்சை மனுத்தாக்கல் செய்யும் நாட்கள் கடந்து விட்டது என நினைக்கின்றேன்.

 

இனம் என்ற ரீதியில் அனந்தி  செய்த காத்திரமான விடயம் என்று ஒன்றை குறிப்பிடவும்

வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இனம் என்ற ரீதியில் செய்த காத்திரமான விடயங்கள் ஏதாவது இருக்கின்றதா? 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உதாரணமாக குறிப்பிட்ட அமைப்புகளை உருவாக்கம், வழங்கல், திட்டம் வரை பெரியண்ணன் பார்த்துக் கொண்டார். இன்று வரை அவர்களின் கட்டுப்பாட்டில் தான் எல்லாம்.

எமது நாட்டில் இந்தியா தலையிட்டு நடந்தது உங்களுக்கு தெரியும், இந்தியாவை மீறி எந்த நாடும் எங்களுக்கு ஆதரவாக வராது ஆனாலும் பெரியண்ணன் உதவியை நாம் பெற்றுக் கொண்டிருந்தால் அவருக்கு அடிமையாய் இருந்திருப்போம்.

அப்படியெல்லாம் ஒன்றும் நடந்திருக்காது ....ஒருவேளை இலங்கை முழுவதும் பெட்ரோல் வளமும் , இலங்கை சனாதிபதி சதாம் குசேன் போல அமெரிக்கா எதிர்ப்பாளருமாக இருந்திருந்தால் நீங்கள் கூறியவை நடந்திருக்கலாம்  

நீங்கள் மட்டுமல்ல விடுதலை புலிகளும் இவ்வாறே நினைத்து இருந்தார்கள். இது அமெரிக்காவுக்கும் தெரியும். அதனாலேயே அமெரிக்க அரசு முள்ளிவாய்க்காலில் மக்கள் அழிந்த போது பெருமளவில் அக்கறை படவில்லை. இலங்கை தமிழர் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்குவதிலும் பார்க்க முள்ளிவாய்க்கால் அழிவும், ஸ்ரீ லங்கா அரசும் மேலானது என்று இன்றும் நினைப்பதனால் தீர்வு எட்டாக்கனியாகவே இருக்கிறது. 

இசுரேல், தென் சூடான் மற்றும் கிழக்கு தீமோர் மக்களும், தலைவர்களும் அமெரிக்காவை தேர்ந்து கொண்டதற்காக வருத்தப்படுவதாக தெரியவில்லை. 

  • தொடங்கியவர்

சுயேச்­சையில் கள­மி­றங்­கு­ம் அனந்தி : கட்டுப்பணமும் செலுத்தினார்

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வட­மா­காண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் சுயேச்சைக் குழுவில் கள­மி­றங்­க­வுள்­ள­தோடு நேற்­றைய தினம் யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் கட்­டுப்­ப­ணத்­தையும் செலுத்­தி­யுள்ளார்.ananthi.jpg

அண்­மைக்­கா­ல­மாக பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்­பாக வட­மா­காண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கள­மி­றங்க வேண்­டு­மென கட்­சிக்­குள்ளும் வெளி­யி­லி­ருந்தும் பல்­வேறு கருத்­துக்கள் எழுந்­தி­ருந்­தன. அதே­நேரம் வாய்ப்­ப­ளிக்­கப்­பட்டால் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றங்­குவேன் என அனந்தி சசி­தரன் பகி­ரங்­க­மாகத் தெரி­வித்து வந்தார்.

அண்­மையில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தது.

இதன்­போது அனந்தி சசி­தரன் எந்­த­வொரு தரப்­புக்கும் ஆதரவு வழங்­கு­வ­தா­னது பொருத்­த­மற்ற தீர்­மானம் எனவும் தேர்­தலைப் புறக்­க­ணிக்­க­வேண்­டு­மெ­னவும் கருத்­துக்­களை வெ ளியிட்­டி­ருந்தார். இக் கருத்­துக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தீர்­மா­னத்­திற்கும் அக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சியும் அவர் உறுப்­பு­ரி­மையைக் கொண்­டுள்ள கட்­சி­யு­மான தமி­ழ­ர­சுக்­கட்­சியின் முடி­வுக்கு எதி­ரா­ன­தாக அமைந்­ததால் அவர் கட்சிச் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன்­பின்னர் அண்­மையில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை கொழும்பில் சந்­தித்த அனந்தி சசி­தரன் பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய்ந்­தி­ருந்தார்.
அதன்­போதும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வாய்ப்பு வழங்­க­வேண்டும் என்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான ஆசனப் பங்­கீடு, வேட்­பா­ளர்கள் தெரிவு தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கு யாழ்.மாவட்­டத்தில் ஒதுக்­கப்­பட்ட இரண்டு ஆச­னங்­களில் ஒரு ஆச­னத்தை அனந்த சசி­த­ர­னுக்கு வழங்­கு­வ­தற்கு அக்­கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் முன்­மொ­ழிந்திருந்­தார்.

ஆனால் தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­ன­ரான அனந்தி சசி­தரன் கட்­சியின் முடி­வு­களை மீறி­யமை தொடர்பில் ஒழுக்­காற்றுக் கார­ணங்­க­ளுக்­காக தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்­த­தாக அனந்தி சசி­தரன் அண்­மையில் பகி­ரங்­க­மாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.
இந்­நி­லையில் நேற்று முன்­தினம் கருத்து வெளி­யிட்ட தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை. சேனா­தி­ராஜா அனந்தி சசிதரன் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக கோர­வில்­லை­யென குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­நேரம் வட­மா­காண சபை உறுப்­பினர் அனந்தி சசி­த­ர­னுக்கும் தமிழ்த் தேசியக் மக்கள் முன்­ன­ணிக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­ற­போதும் அது வெற்­றி­ய­ளித்­தி­ருக்­க­வில்லை.

இந்­நி­லை­யி­லேயே பொது மக்கள், புத்­தி­ஜீ­வி­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுயேட்­சை­யாகக் கள­மி­றங்­கு­வ­தற்கு அனந்தி சசி­தரன் தீர்­மா­னித்­த­தா­கவும் அத­னை­ய­டுத்தே கட்­டுப்­ப­ணத்­தையும் செலுத்­தி­யுள்­ள­தாக அறி­ய­வ­ரு­கி­றது.

அனந்தி சசி­த­ரனின் சுயேட்சைக் குழுவில் இடம்பெறவுள்ள ஏனைய வேட்பாளர்கள் தெரிவும் இடம்பெற்று வருவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்ட எழிலனின் (சசிதரன்) மனைவியான அனந்தி சசிதரன் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் 87 870 விருப்பு வாக்குகளைப்பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/07/10/சுயேச்­சையில்-கள­மி­றங்­கு­ம்-அனந்தி-கட்டுப்பணமும்-செலுத்தினார்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகளுக்குள்.... முத்தரப்பு போட்டி ஏற்பட்டுள்ளதால்,
ஐ.தே.க., டக்ளஸ்... அதிக இடங்களை பெறும் வாய்ப்பு உள்ளது.
இதனைத்தானே..... சம்பந்தன் எதிர் பார்த்தார்.

கெடுத்திட்டியே.... பரட்டை.....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மட்டுமல்ல விடுதலை புலிகளும் இவ்வாறே நினைத்து இருந்தார்கள். இது அமெரிக்காவுக்கும் தெரியும். அதனாலேயே அமெரிக்க அரசு முள்ளிவாய்க்காலில் மக்கள் அழிந்த போது பெருமளவில் அக்கறை படவில்லை. இலங்கை தமிழர் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்குவதிலும் பார்க்க முள்ளிவாய்க்கால் அழிவும், ஸ்ரீ லங்கா அரசும் மேலானது என்று இன்றும் நினைப்பதனால் தீர்வு எட்டாக்கனியாகவே இருக்கிறது. 

இசுரேல், தென் சூடான் மற்றும் கிழக்கு தீமோர் மக்களும், தலைவர்களும் அமெரிக்காவை தேர்ந்து கொண்டதற்காக வருத்தப்படுவதாக தெரியவில்லை. 

அண்ணை ஜூட் 
எப்புடி அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கவேண்டும் என்று சொல்ல வாரியல் ....இசுரேலில் ரோட்டிற்கு ரோட் அமெரிக்காவே நாங்கள் உனக்கு பின்னால் நிற்கிறோம் என்று போர்ட் வைத்திருப்பது போல புலத்திலும் வைத்திருக்க வேண்டும் என்கிறீங்களா ...? அதுசரி யாழிலேயே பாண் கி மூனைப்பற்றியும், சயிட் அல் குசைனைப்பற்றியும் எழுதினாலே வந்து யாழை பான் கி மூன் வாச்சிக்கிறாரா ...? என்று பொரிந்து தள்ளும் வாந்தி அணியினர் ஊரில அமெரிக்காவிற்கு போர்ட் வைக்க விட்டுவிடுவங்களா ....? 

அண்ணை நீங்கள் அமெரிக்காவை ஏதோ ''ஆ எனது நண்பனுக்கு  அங்கே அநியாயம் நடக்கிறது ...மக்கள் வகை தொகை இல்லாமல் கொல்லப்படுகிறார்கள் 
நான் போய் காப்பாற்ற வேண்டும்" என்று கையால கப்சா விட்டு காப்பாத்தும் Spider Man , Super Man மாதிரி காட்டதீங்கோ 
உன்னிடம் பெட்ரோல் இருக்கா நீ என் நண்பன்....வகை தொகை இல்லாமல் அதிகமாக இருக்கா நீ என் உயிர் நண்பன் 
அதிகமாக இருக்கு ஆனால் எனக்கு தரமாட்டாயா ....சரி நீ எனக்கு ஜென்ம விரோதி உன் ஆட்சி அதிகார கட்டமைப்பை சிதைத்து அப்படியே ஓட விடுகிறேன் பார் ....இது தான் அமெரிக்கா ஸ்டைல்  


இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏன் உதவியது என்பது ...வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவ உதவி ஏன் செய்யப்பட்டது என்பதும் ...எல்லோருக்கும் தெரியும் ..அதனை பார்க்கப்போனால் பைபிள் ,இசுரேல் இனம் (கடவுளால் அசீர்வத்திக்கப்பட்ட இனம்) இப்படி பல விடயம் இடைச்செருகலாக வேண்டும்

என்ன செய்வது இந்து கடவுள்கள்  பார்பன்களையும் , இந்தி ,மலையாளி ,ஆந்திர,கன்னட  இனத்தை அசீர்வதித்த அளவு தமிழர்களை ஆசீர்வதிக்கவில்லையே

தென் சுடான், கிழக்கு தீமோர் சொல்லவே வேண்டியதில்லை .
தென் சுடான்
Prior to independence, South Sudan produced 85% of Sudanese oil output.[4] The oil revenues according to the Comprehensive Peace Agreement (CPA), were to be split equally for the duration of the agreement period.[5] Since South Sudan relies on pipelines, refineries, and port facilities in Red Sea state in North Sudan, the agreement stated that the government in Khartoum would receive 50% share of all oil revenues.[5] Oil revenues constitute more than 98% of the government of South Sudan's budget according to the southern government's Ministry of Finance and Economic Planning and this has amounted to more than $8 billion in revenue since the signing of the peace agreement.[5]

இதுக்குள்ள அமெரிக்கா ஊரிற்கு காட்டும் படம் கீழே 


Due to Sudan's presence on the United States' list of state sponsors of terrorism and Khartoum's insistence upon receiving a share of the profit from any oil deal South Sudan conducts internationally, US oil companies cannot do business with landlocked South Sudan. As such, US companies have virtually no presence in the South Sudanese oil sector  

Source:Wikipedia

மேலே சிவப்பில் அடையாளப்படுத்தி இருப்பதை கூர்ந்து வாசியுங்கள் 

இனி கிழக்கு தீமோர் 

The state oil fund of East Timor showed a balance of $11.77 billion at the end of 2012, surpassing Oman’s and Bahrain’s with $9.1 billion and $8.2 billion, respectively.

The Timor-Leste Petroleum Fund receives the income from offshore oil and gas reserves, which contribute 57 per cent to the tiny country’s GDP. The fund pays for nearly all of the government’s annual budget, which has increased from $70 million in 2004 to $1.8 billion in 2012.

In August 2011 the country’s parliament approved a change in the law in order to make it easier to diversify its investment portfolio, which until that point had focused exclusively on US Treasury Bonds, as a way of increasing the return on investments
Source:http://investvine.com/east-timors-oil-wealth-growing/
 

அண்ணை அரசியல் சூறாவளிகள் , அரசியல் புயல்கள் என்று  நம்மை நாமே புகழ்ந்து கொண்டு திரிய வேண்டியது தான் 
இப்படி ஊருக்கு உபதேசம் செய்யும் நாம் கேவலம் அமெரிக்காவின் அடிப்படை அரசியலையே புரிந்து கொள்ளவில்லை 
தலைவரும் கடைசியில் அமெரிக்க கப்பல் வரும் என்று நம்பினாராம் ...?எந்த அமெரிக்கதாசனின் கதையை நம்பினாரோ தெரியவில்லை ...

 

தமிழரின் வாக்குகளை உடைத்து கூட்டமைப்பை சிதறடித்து தமிழரசு கட்சியாகி சிங்களவனுக்கு கழுவுவதே இந்த சம்பந்தன் என்ற கிளடுவின் எண்ணம் ... 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகளுக்குள்.... முத்தரப்பு போட்டி ஏற்பட்டுள்ளதால்,
ஐ.தே.க., டக்ளஸ்... அதிக இடங்களை பெறும் வாய்ப்பு உள்ளது.
இதனைத்தானே..... சம்பந்தன் எதிர் பார்த்தார்.

கெடுத்திட்டியே.... பரட்டை.....

சிறி அண்ணை இதுதான் அரசியல் சாணிக்கியம் 
தேர்தல் நெருங்க நெருங்க பய உரத்தில் விட்ட அறிக்கைகளே மனிசனுக்கு எமனாகி போட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் புலம் பெயர் தமிழ் அரசியல் வாதிகள் என்று அனைவரையும் குறிக்கும் முகமாக  பொதுப் பண்பில் குறிப்பிடவில்லை.' புலம்பெயர் தேசங்களில் கதிரைப் போட்டிக்காக அடிபடும் தமிழ் தேசிய வியாபாரிகளுக்காக' என்று தான் வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளேன்.

எனக்கு இந்த இரண்டு பிரிவினரையும் நன்கு தெரியும். ஒரு பிரிவு உண்மையாகவே மக்களின் அழிவுகளுக்காக கவலைப்பட்டு அவர்களுக்காக நல்ல விடயங்களை செய்து வரும் பிரிவு. மக்களின் முடிவுகளை ஏற்று அவர்களிற்காக இயங்கும் பிரிவு அது.  இன்னொரு பகுதி அம் மக்கள் மீது தம் முடிவுகளை திணிக்க முயலும் வியாபாரிகள் பகுதி. என்றுமே தம்மை கதிரையில் வைத்து பார்க்க அலையும் பிரிவு இது

பொதுவாகவே இந்த இரண்டாம் பிரிவை பற்றி எழுதினால் உங்களுக்கு கோபம் வருவது நிதர்சனம்

வணக்கம்

விரிவான பதிலுக்கு நன்றி

 

இங்கே இரண்டு பிரிவுகளைக்குறிப்பிட்டுள்ளீர்கள்

ஒன்று நல்லது

மற்றது கெட்டது

அது எது என்று குறிப்பிடாது விட்டுள்ளதே எனது கருத்துக்கான காரணம்

அதைக்கேட்ட என்னையும் கெட்டசாக்குக்குள் போட்டுள்ளீர்கள்

அதன்படி பார்த்தால் உங்களது தரவும் கணிப்பும் சந்தேகத்துக்குள்ளாகிறது.

 

உங்களது கணிப்புக்கு ஆதாரம் என்ன?

ஏதாவது புலம் பெயர் அமைப்பு இவ்வாறு செய்யுங்கள் என அனந்திக்கு அறிக்கை மூலம் தெரிவித்ததா??

அல்லது அனந்தி அவ்வாறு சொன்னாரா?

அல்லது எழுந்தமானத்துக்கு இப்படித்தான் இருந்திருக்கணும் என்று எழுதுகின்றீர்களா?

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இதில் நான் புலம் பெயர் தமிழ் அரசியல் வாதிகள் என்று அனைவரையும் குறிக்கும் முகமாக  பொதுப் பண்பில் குறிப்பிடவில்லை.' புலம்பெயர் தேசங்களில் கதிரைப் போட்டிக்காக அடிபடும் தமிழ் தேசிய வியாபாரிகளுக்காக' என்று தான் வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளேன்.

எனக்கு இந்த இரண்டு பிரிவினரையும் நன்கு தெரியும். ஒரு பிரிவு உண்மையாகவே மக்களின் அழிவுகளுக்காக கவலைப்பட்டு அவர்களுக்காக நல்ல விடயங்களை செய்து வரும் பிரிவு. மக்களின் முடிவுகளை ஏற்று அவர்களிற்காக இயங்கும் பிரிவு அது.  இன்னொரு பகுதி அம் மக்கள் மீது தம் முடிவுகளை திணிக்க முயலும் வியாபாரிகள் பகுதி. என்றுமே தம்மை கதிரையில் வைத்து பார்க்க அலையும் பிரிவு இது

பொதுவாகவே இந்த இரண்டாம் பிரிவை பற்றி எழுதினால் உங்களுக்கு கோபம் வருவது நிதர்சனம்

 

 

இனம் என்ற ரீதியில் அனந்தி  செய்த காத்திரமான விடயம் என்று ஒன்றை குறிப்பிடவும்

நிழலி நீங்கள் இப்படி தனிமனித தாக்குதல் செய்தா சம்பந்தப் பட்ட யாருக்கும் கோவம் வரும்தானே. இந்த ஐடியா லைட்டை வேற காணேல்ல.

 

 

  • தொடங்கியவர்

தேர்தலில் போட்டியிட அனந்தி விண்ணப்பிக்கவில்லை: சம்பந்தன்

அனந்தி சசிதரன் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வேண்டுமென்று கட்சிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.ananthi-sasitharan-sambanthan.jpg

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் சம்பந்தன் ஊடகங்களுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் அவர் என்னை சந்தித்தார். இதன் போது, தான் தேர்தலில் போட்டியிடுவதாகயிருந்தால் த.தே.கூட்டமைப்பினூடாக விரும்புகின்றேன் என்று கூறினார். ஆனால் இதுவரை அவர் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் அவரின் தற்போதைய நிலை என்னவென்று எனக்கு தெரியாது என்றார்.
    

http://www.virakesari.lk/articles/2015/07/10/தேர்தலில்-போட்டியிட-அனந்தி-விண்ணப்பிக்கவில்லை-சம்பந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஜூட் 
எப்புடி அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கவேண்டும் என்று சொல்ல வாரியல் ....


தலைவரும் கடைசியில் அமெரிக்க கப்பல் வரும் என்று நம்பினாராம் ...?எந்த அமெரிக்கதாசனின் கதையை நம்பினாரோ தெரியவில்லை ...

அமெரிக்காவை வெறுத்துக்கொண்டு வெறும் ஆதரவு என்று தெரிவிப்பதாலோ அல்லது கப்பல் வரும் என்று நம்புவதாலோ அமரிக்காவின் ஆதரவு கிடைப்பதில்லை.

அமெரிக்க ஆதரவு இல்ல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு விடிவும் கிடைக்க போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் இப்படி தனிமனித தாக்குதல் செய்தா சம்பந்தப் பட்ட யாருக்கும் கோவம் வரும்தானே. இந்த ஐடியா லைட்டை வேற காணேல்ல.

களவிதிகளைக்கடைப்பிடிக்கவும்

வாத்திமாருக்கே சட்டம் தெரியாதுவிட்டால் புகட்டப்படும்....

 

தனி  நபர் சார்ந்தோ

அமைப்புக்கள் சார்ந்தோ

குற்றச்சாட்டுக்களை வைக்கும் போது ஆதாரங்களுடன் பேசணும்.....

கீழே சிவத்த எழுத்தில் வலுவாகச்சொல்லியுள்ளேன்

2 கன்னங்களையும் கொடுத்தாச்சு என்று..

இனி இடமில்லை...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.