Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பெண்களிடையே கர்ப்பப் பையுட் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனப் பயன்பாட்டு செயலமர்வு...

Featured Replies

எழுப்பப்படும் கேள்விகளுக்கு குடும்ப சுகாதார நிலையம் மகப்பேற்று வைத்தியர்கள் மற்றும் தாய்மை நல வைத்தியக்குழுமம் பதிலளிக்குமா?

யாழில் பெண்களிடையே கர்ப்பப் பையுட் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனப் பயன்பாட்டு செயலமர்வு...

குடும்ப சுகாதார நிலையம் மகப்பேற்று வைத்தியர்கள் மற்றும் தாய்மை நல வைத்தியக்குழுமம் ஆகியோரால் ஒழுங்கு செய்யப்பட்ட செயற் பயிற்சி நிகழ்வொன்று இன்று (06.07.15) யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. யாழ்க்குடா நாட்டுப் பெண்களிடையே கர்ப்பப் பையுட் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனத்தை விளம்பரப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டதாக அக்களப்பயிற்சி அமைந்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன.

கிடைத்த தகவல்களின்படி இனிவரும் காலத்தில் மேற்குறித்த கருத்தடைச் சாதனத்தையே அனைத்துப் பெண்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற மறைமுக அழுத்தமும் அங்கு நிலவியதாக  அறியப்படுகிறது.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடையம் என்ன வென்றால்  இது வரைகாலமும் தற்காலிகக் கருத்தடை மருந்துகளே (Depo-Provera injection) குடாநாட்டில் பாவிக்கப்பட்டு வந்துள்ளன. இவை தாய்மை அடைதலை இரண்டு வருடங்களுக்கு மட்டுமே தடுக்கக்கூடியவை. குழந்தைகளுக்கிடையில் போதிய இடைவெளியை விட்டுத் தாய்மையை அடையக்கூடிய வாய்ப்பை இம்முறை தாய்மாருக்கு வழங்குகிறது.

ஆனால் புதிதாக அறிமுகப்ப்டுத்தப்படும் கருத்தடைச் சாதனம்Intrauterine Contraceptive Device தாய்மை அடைதலை 10 வருடங்களுக்கு மேல் தடுக்கக்கூடியது என அறியப்படுகிறது.

Intrauterine Contraceptive Device
கர்ப்பம் அடைதல் அல்லது அடையாமல் விடுதல் அல்லது எத்தனை பிள்ளைகளை பெறுவது எப்பொழுது பெறுவது போன்ற முடிவுகளை எடுக்க  வேண்டியது  சம்பந்தப்படுகிற பெண்களாகும். இவை  ஒவ்வொரு பெண்ணினதும் அடிப்படை உரிமைகளாகும்.

இன்றைய (06.07.15) செயற்பயிற்சியில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் உட்பட யாழப்பாணத்தின் சகல சுகாதார அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே சனத்தொகை அருகுதலை எதிர்நோக்கும் ஈழ சமூகத்தில் நீண்டகாலக் கர்ப்பத்தடை முறைமையை ஊக்குவிக்கும் ஒரு செயலுக்கு எந்த விளக்கமும் இல்லாமல் மாகாண சுகாதார அமைச்சு எவ்வாறு அனுமதி அளித்தது என்ற  கேள்வி இங்கு முன் வைக்கப்படுகிறது.

உலகளாவிய மருத்துவ நிறுவனங்களின் வியாபாரப்பசிக்கும்  சிறுபான்மை இனக்களின் அருகுதலை விரும்பும் சக்திகளுக்கும் பலியாகாமல் மாகாண சபையால் தொழிற்பட முடியாதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த களப்பயிற்சியில் கலந்து கொண்ட வைத்திய மற்றும் சுகாதார அதிகாரிகள் தங்கள் சுய அறிவைப் பயன்படுத்தாமல்  மேற்குறித்த சக்திகளின் வலையில் வீழ்ந்து எதிர்காலத்தில் மக்களைப் பலிக்கடாக்கள் ஆக்கி விடுவார்களோ என்ற  அச்சம் தோன்றியுள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரியவருகிறது.

இது குறித்து வட மாகாண சுகாதார அமைச்சோ அன்றி யாழ் பிராந்திய சுகாதாரப் பணிமனையோ, அல்லது இந்த பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்த சுகாதார மருத்துவ துறையினரோ விளக்கம் தருவார்களானால் அவை முழுமையாக பிரசுரிக்கப்படும்...

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121710/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயப்படுத்தி கருத்தடை செய்ய யாராவது முனைந்தால் அதை ஏற்கமுடியாது அதே நேரம் பெண்கள் தாம் விரும்பும் நேரத்தில் தாய்மை அடையக்கூடிய இலகுவகையான இவ்வழியைப்பின்பற்றுவதை ஏன் பாரதூரமாக சிந்திக்கவேண்டும் என்று புரியவில்லை. முற்றுமுழுதாக நீண்ட காலத்திற்கு மாத்திரைகள் மூலம் குழந்தைப்பேற்றைத்தள்ளிப்போட்ட பலர் இம்மாத்திரைகளை விட்டபின்னால் கருவுறுவது தொடர்பாக பிரச்சனைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது ஆரோக்கியமற்ற குழந்தைகளை பிரசவித்து கண்ணீரோடு இருக்கிறார்கள். யாழ்குடாவிற்கு மட்டுந்தான் குளோபல்தமிழ் இப்படியான கேள்வி எழுப்புமா? உண்மையிலேயே இந்தக்கட்டுரையின் நோக்கமென்ன? எவ்வகையான மருத்துவ ஆய்வின் அடிப்படையில் இக்கேள்வி எழுப்பப்படுகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்குடாவிற்கு மட்டுந்தான் குளோபல்தமிழ் இப்படியான கேள்வி எழுப்புமா? உண்மையிலேயே இந்தக்கட்டுரையின் நோக்கமென்ன? எவ்வகையான மருத்துவ ஆய்வின் அடிப்படையில் இக்கேள்வி எழுப்பப்படுகிறது?

நல்ல கேள்வி ...

பக்க விளைவு இல்லாத மருத்துவ, தொழில்நுட்ப முன்னேற்றம் என்று எதுவும் இல்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு துருவங்களான செய்தி ஊடகங்களின் ஆக்கிரமிப்பில் தமிழ்ச் செய்தி ஊடகங்கள் பயணிக்கின்றன!

எது உண்மை...எது பொய் என்று பகுத்தறிய இயலாத விதத்தில் செய்திகள் பகிரப்படுகின்றன!

ஒரு வேளை மக்களைக் குழப்புவதும், ஆத்திரமடைந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதும் தான் அவற்றின் நோக்கமோ என்னவோ தெரியாது!

கருத்தடை செய்தல் என்பது ஒரு குடும்பத்தின் நலனை முன்னிட்டு.. ஒரு குடும்பத்தால் மட்டுமே எடுக்கப்படவேண்டிய முடிவாகும்!

சமூக அறிவூட்டல் நோக்கத்துக்காக அது 'சந்திக்கு' வருமெனில் .. எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை!

ஆனால் இந்தக்கட்டுரை.. மக்களுக்கு உசுப்பேத்தும் நோக்கம் மட்டுமே கொண்டது போலத் தோன்றுகின்றது!:unsure: 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எங்கடை சனத்துக்கு கருத்தடைக்கான அவசியமென்ன??????

விரும்பியவாறு பிள்ளைகளை பெற்றெடுங்கள். சந்ததியை பெருக்குங்கள்.

உங்கள் பிள்ளைகளை  காப்பாற்றவேண்டியது புலம்பெயர் தமிழர்களின் கடமை. காலத்தின் கட்டாயம்.

அண்ணே பகிடி விடாதேங்கோ புலம் பெயர்ந்த சனம் உதவும் என்று அங்குள்ள மக்களுக்கு சும்மா ஆசை மூட்டாதேங்கோ..... இனத்திற்காக மண்ணுக்காக தங்களை ஆகுதியாக்கியவர்களின் குடும்பங்களையே சரியாக கவனிக்காமல் புலம்பெயர்ந்த நாங்கள் இருக்கிறோம் இந்த இலட்சணத்தில் உங்களுடைய நம்பிக்கையூட்டல் புல்லரிக்கவைக்குது

தனிப்பட்ட விரசங்கள் காரணமாக திரும்பவும் திரும்பவும் இங்கேதான் நாங்கள் பிழை விடுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் உடம்பு அவளின் (மட்டுமே) சொத்து. கற்பம் தரிப்பதா இல்லையா என ஒவ்வொரு பெண்ணும் தானே முடிவெடுக்க வேண்டும்.

நீங்கள் படையில் சேர்க்க, உங்கள் இனப் பரம்பலை தக்க வைக்க, பிள்ளைகளை பெற அவர்கள் என்ன தாய்மை மிசினா?

வேணுமெண்டால், ஊருக்குப் போய், வத வத என 16 ஐ பெற்றுப் போடுங்கோ, இனம் விருத்தியாகும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்தில் எம்மை வழிநடத்தி செல்ல ஒரு மேய்ப்பன் அவசரம் தேவை.
எட்டுத்திக்கும் தமிழ் ஒலிக்கட்டும். ஆனால் எம்மை வழிநடத்தி செல்ல ஒரு தலைமை வேண்டும். இதுதான் எமக்கான பற்றாக்குறை ..

என்ன அண்ணே இதெல்லாம் அறிவித்தல்போட்டு இன்டவியூ வைத்து தேர்வு செய்யிற விடயமா?

உயிரால, உணர்வால தன்னை தன்னினத்திற்காக உருக்கக்கூடிய ஒரு தலைமை.......... யாராலும் உருவாக்க முடியாது தன்னால தோன்றி வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணின் உடம்பு அவளின் (மட்டுமே) சொத்து. கற்பம் தரிப்பதா இல்லையா என ஒவ்வொரு பெண்ணும் தானே முடிவெடுக்க வேண்டும்.

நீங்கள் படையில் சேர்க்க, உங்கள் இனப் பரம்பலை தக்க வைக்க, பிள்ளைகளை பெற அவர்கள் என்ன தாய்மை மிசினா?

வேணுமெண்டால், ஊருக்குப் போய், வத வத என 16 ஐ பெற்றுப் போடுங்கோ, இனம் விருத்தியாகும் :)

ஊருக்கு போய்.....
என்றொரு வாக்கியத்தை யாவரும் பல இடங்களில் பயன்படுத்திவிட்டோம்.
இனிவரும் காலங்களிலாவது....
ஊரை விட்டு வந்து எம் மண்ணுக்கு என்ன செய்தோம் என்று சிந்திப்போமாக...
புலம்பெயர்ந்த துளிர்கள் பல துறைகளில் காலூன்றி விட்டார்கள்.  

இதனை பயன் படுத்தி பல வழிகளிகளில் எமது மண்ணை இலட்சியத்தை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு துருவங்களான செய்தி ஊடகங்களின் ஆக்கிரமிப்பில் தமிழ்ச் செய்தி ஊடகங்கள் பயணிக்கின்றன!

எது உண்மை...எது பொய் என்று பகுத்தறிய இயலாத விதத்தில் செய்திகள் பகிரப்படுகின்றன!

ஒரு வேளை மக்களைக் குழப்புவதும், ஆத்திரமடைந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதும் தான் அவற்றின் நோக்கமோ என்னவோ தெரியாது!

கருத்தடை செய்தல் என்பது ஒரு குடும்பத்தின் நலனை முன்னிட்டு.. ஒரு குடும்பத்தால் மட்டுமே எடுக்கப்படவேண்டிய முடிவாகும்!

சமூக அறிவூட்டல் நோக்கத்துக்காக அது 'சந்திக்கு' வருமெனில் .. எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை!

ஆனால் இந்தக்கட்டுரை.. மக்களுக்கு உசுப்பேத்தும் நோக்கம் மட்டுமே கொண்டது போலத் தோன்றுகின்றது!:unsure: 

நியாமான கருத்து, புங்கையூரான். 

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் உள்ள சிங்களப் படைகளின்.. அது வளர்க்கும் ரவுடிகளின்.. வசதிக்காக செய்கிறார்கள் போலும். கள்ளப் பிள்ளையைப் பெற்று வீதியில்.. குளத்தில்... ஆஸ்பத்திரியில் போடுவதைக் காட்டிலும்.. இது நல்லது தானே என்று எண்ணிவிட்டார்கள் போலும். இந்தியாவில் சிறீலங்காவில்..நடிகைகளிடமும் விபச்சாரிகளிடமும்.. இந்த முறை எப்பவும் பிரபல்யமாம். தமிழ் பெண்களை பல விதத்திலும் இன அழிப்பு இலக்காக்கிறாங்கள் என்பது இதில் அடங்கி இருக்கலாம்.

பாலியல் ஒழுக்கச் சீர்கேடுகள்.. நோய்கள் பெருக இடமளிக்கக் கூடிய வகைக்கு இவை இட்டுச் சென்றால் அதன் பொறுப்பு இவற்றை அறிமுகப்படுத்துவோரினை சார்ந்ததே. கட்டுப்பாடற்ற பாலியல் உறவுக்கு இட்டுச் செல்ல தூண்டுதல் பல பாதகங்களை உருவாக்கும். சமூக ஒழுக்கத்தைக் கேள்விக் குறியாக்குவதோடு.. ஒரு சமூகத்தினை அது பல தளத்தில் பாதிக்கவும் செய்யும். ஏலவே குட்டிச் சுவராகிக் கிடக்கும் தமிழரிடம்.. இவை... இன்னும் என்னென்ன நிலைகளை தோற்றுவிக்குமோ..?!

சரியான ஆய்வுக் கண்ணோட்டமின்றி இவற்றை சமூகத்தில் ஆழ ஊடுருவ விடுதல் குறித்து சிந்திந்து செயற்படுதல் அவசியம். இந்த முறையால் நிரந்தர தாய்மை இழப்பைக் கண்ட பெண்களும் உளர்.

Edited by nedukkalapoovan
கருத்து தெளிவுக்காக.

கணவன் மற்றும் மனைவி தீர்மநிக்கவேண்டியது ... இப்படியான பிரச்சாரம் அவசியமற்ற ஒன்று 

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் ஆகாமலே பிள்ளைப் பெறும்.. நிகழ்வுகள் வடக்குக் கிழக்கு சிங்களப் படை ஆக்கிரமிப்பின் பின் அதிகரித்துள்ளது. அதுவும் மே 2009 பின் அதிகம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில்.. கணவன் -  மனைவி தீர்க்க வேண்டிய பிரச்சனை என்று சொல்லிட்டு உட்காந்திட்டா எப்படி... பிரச்சனைகள் தீரும். பிரச்சனைகளின் அனைத்து மூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு தீர்வுகள் தேடப்பட்டால் அன்றி.. வியாபாரத்துக்கு வியாபாரம்.. இன அழிப்புக்கு இன அழிப்புன்னு சில கைங்கரியங்கள் எம் மக்களை நோக்கி நகர இருக்கும் வாய்ப்புக்களை அவசியமற்றவை என்று புறந்தள்ளக் கூடாது.

மலையகத்தில் குடும்பக்கட்டுப்பாடு என்று அங்கு தமிழ் சனத்தொகை குறுகி.. சிங்கள முஸ்லீம் சனத்தொகை..பெருகிட்டு வருகுது. யாழ்ப்பாணம்.. மிக விரைவில்... இன்னொரு ஈராக்.. அல்லது சிரியா மாதிரி ஆக கனநாள் எடுக்காது. எனவே சிங்களவன் மட்டுமல்ல.. பிற காரணிகள் குறித்தும் எச்சரிக்கைகள் அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.