Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் மக்கள் இலங்கை தமிழர்களின் நல்ல நேரத்தை கெடுத்து விடுவர் - ஷோபா சக்தி

Featured Replies

Tamil_News_large_129971020150720003414.j

ஷோபா சக்தி சிறுவனாக இருந்த போது, விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தார். பின், அதிலிருந்து வெளியேறி, எழுத்தாளராகவும், நடிகராகவும் அவதரித்து உள்ளார். 
சமீபத்தில், பிரான்சில் நடந்த, உலக பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், அவர் நடித்த, 'தீபன்' திரைப்படத்திற்கு 'பால்மே டோர்' விருது வழங்கப்பட்டது. இந்த, தமிழ் - பிரெஞ்சு படத்திற்கு அளிக்கப்பட்ட விருது, அந்த விழாவின் தலைசிறந்த அங்கீகாரம். 'தீபன்' திரைப்படம் பற்றியும், தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பார்வை குறித்தும், பத்திரிகையாளர் ரஞ்சிதா குணசேகரனுக்கு, ஷோபா சக்தி அளித்த பேட்டி:

தீபன் படத்தில், அந்தோணிதாசன் இயேசுதாசன் என, உங்க ளுடைய உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்?
ஷோபா சக்தி என, அழைக்கப்பட்டாலும், என் உண்மையான பெயர் அந்தோணிதாசன் தான். அதனால், அவர்கள் கேட்டபோது, தீபன் படத்தில், இந்த பெயரையே போட்டுவிட முடிவு செய்தேன்.

தீபன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது?
இயக்குனர் ஜாக் ஆடியார்ட், உலகம் முழுக்க நடிகர்களை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது, 'செங்கடல்' படத்தில், நான் நடித்த சிறு கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட என் நண்பர், தீபன் படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ளும்படி தெரிவித்தார்.ஆடிஷனில், ஒரு சூழலைச் சொல்லி நடிக்கச் சொன்னார்கள்; அது கொஞ்சம் விரிவாக இருந்தது. ஆனால், என்னை பார்த்த மாத்திரத்திலேயே, இயக்குனர் ஆடியார்ட், என்னை தேர்ந்தெடுத்து விட்டார் என்பது, சமீபத்தில் அவர் அளித்த பேட்டி மூலமாக தான் எனக்கு தெரிய வந்தது.

நடிப்பு/சினிமாவில் உங்களுக்கு எப்போதும் ஆர்வமிருந்ததா அல்லது நீங்கள் நடிகரானது ஒரு எதார்த்த கற்பனையா?

கற்பனையும் இல்லை; எதுவும் இல்லை. எனக்கு, அரங்கம், நடிப்பு மற்றும் சினிமாவில் எப்போதுமே ஆர்வம் உண்டு. ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாவதாக நான் ஒரு எழுத்தாளன்; நான் கூத்து வடிவம் ஒன்றை எழுதி, தெருக்கூத்து நடத்தி இருக்கிறேன். நான் எழுதிய ஒரு நாடகம் (கனடா நாட்டில் உள்ள) டொரொண்டோவில் அரங்கேற்றமானது. அதனால், நடிப்பில் ஆர்வமிருந்த எனக்கு, இந்த படத்தின் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்தது.
காளீஸ்வரி ஸ்ரீனிவாசனும் ('தீபன்' திரைப்படத்தின் பெண் முன்னணி கதாபாத்திரம், சென்னையைச் சேர்ந்த நாடக கலைஞர்), நானும் ஏற்கனவே தோழர்கள். அதனால், இந்த திரைப்படக் குழு சிறப்பாக அமைந்தது. எங்களுக்கு, குளிரும், பனியும் கஷ்டமாக இருந்தாலும், சந்தோஷமாக இந்தப் படத்தில் நடித்தோம்.

படத்தில், 80 சதவீதம் தமிழ். திரைக்கதையில் நீங்கள் உதவி செய்திருக்கின்றீரா?
திரைக்கதை பிரெஞ்சில் தான் எழுதப்பட்டது. இயக்குனர் ஆடியார்டுக்கு, தமிழ் பேசத் தெரியாது. அதனால், நாங்கள் விவாதித்து, வசனங்களை தமிழில் எழுதிப் பேசி நடித்தோம். அதில், எங்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது.

தீபன் கதாபாத்திரத்தில், 50 சதவீதம் உங்களுடைய வாழ்க்கை என, கூறியிருந்தீர்கள். அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எப்படி இருந்தது? அப்போது கசப்பான அனுபவங்கள், உணர்வுகள் ஏதேனும், மீண்டும் உங்கள் நினைவுக்கு வந்ததா?

தீபன் கதாபாத்திரமும், நானும் கிட்டதட்ட ஒன்றே. எங்களுக்கு ஒரே மாதிரியான பின்னணி தான். ஆனால், பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட வழிகள் முற்றிலும் வெவ்வேறானவை. இந்தப் படத்தில், தீபன் சந்தித்த அனைத்தும், நான் அனுபவப்பட்டவையே.அதனால், இயல்பாகவே, கசப்பான பழைய அனுபவங்களுக்குள் விழ வேண்டியிருந்தது. இருப்பினும், பழைய பிரச்னைகளை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால், எல்லாவற்றையும் துாக்கிப் போட்டு விட்டோம். அதுவும் புதிய பிரச்னைகளை சந்திக்கும் போது, அது சாதாரணமாக நடந்து விடுகிறது. தீபனும் நானும் வேறுபட்டது இதில் தான்.
நான், அகதியாக இங்கே வந்தேன்; என்னையும், என் அரசியல் சிந்தனையையும் மாற்றிக்கொண்டேன். ஆனால், தீபன் வன்முறையாளன், அவன் அப்படியே தான் இருப்பான். ஒரு சாதாரண குடிமகனாக இருப்பதற்கு போராடுகிறான்.

சில ஆண்டுகளுக்கு முன் நாம் சந்தித்த போது, அரசு அளிக்கும் உதவித் தொகையில் வாழ்வதாக கூறியிருந்தீர்கள். அப்படி இருந்த நீங்கள், கான்ஸ் திரைப்பட விழாவில், சிவப்பு கம்பளத்தில் கவுரவம் பெற்ற அனுபவம் எப்படி இருந்தது?

இந்த பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன், ஓர் ஆண்டு எனக்கு வேலையில்லை. வழக்கமாக வேலை இல்லாத போது, நான் பாரிஸ் நகர மெட்ரோவில் டிக்கெட் வாங்க மாட்டேன். ஏனெனில், டிக்கெட் விலை மிகவும் அதிகம். கான்சில் விழா முடிந்து நான் பாரிசுக்கு திரும்பிய போது, மெட்ரோ ஸ்டேஷனில் நின்று கொண்டு இருந்தேன். கடந்த, 20 ஆண்டுகளாக டிக்கெட் எடுக்காமலேயே பழகிவிட்டதால், அப்போதும் டிக்கெட் எடுக்க விரும்பவில்லை.
ஆனால், இந்த முறை, அங்கு இருந்த சில அதிகாரிகள் என்னை பார்த்து புன்னகைத்தனர். எங்கு பார்த்தாலும், கான்ஸ் விழாவின் செய்திகள் இருந்ததால், அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பர். அதனால், மெட்ரோவில் டிக்கெட் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.(சிரித்துக்கொண்டே...) அப்போது தான், 'ஐயோ! என் இழப்புகள் துவங்கி விட்டன' என்று எண்ணினேன்.

இப்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை குறித்து உங்களுடைய பார்வை என்ன?

இப்போது எவ்வளவோ தேவலாம். படுகொலைகளும், காணாமல் போவதும் இல்லை. ஆனால், தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு குறித்து விவாதிக்க வேண்டிய சூழல் நீடிக்கவே செய்கிறது. மாறும் என்று நான் நம்புகிறேன்.வரம்பு மீறியதாக அல்லாமல், மிகக் கவனமானதாக, அது இருக்க வேண்டும். 13வது சட்ட திருத்தம் விவாதிக்கப்பட வேண்டும். இந்த அரசு தமிழர்களின் ஓட்டுகளை பெற்றிருக்கிறது, அதனால், நல்ல நேரம் ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், உங்களுடைய மக்கள் எப்படியாவது முயற்சி செய்து அதைக் கெடுத்து விடுவர் (அசட்டு சிரிப்பு சிரிக்கிறார்).

எங்களுடைய மக்களா? தமிழகமா, இந்தியாவா?

தமிழகம்!

புலம்பெயர்ந்த தமிழர்களை விமர்சித்து உள்ளீர்கள். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக எழுதுகிறீர்கள்.அதனாலேயே, (புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்) நீங்கள் அன்னியராக கருதப்படுகிறீர்கள். புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு மாறியுள்ளதா? போருக்கு பின், அந்த சமூகத்தில் உங்கள் நிலை மாறியுள்ளதா?

முதலில், புலம்பெயர்ந்த தமிழர்களின் எந்த ஒரு விவாதமும், இங்குள்ள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இலங்கை மக்கள் போர் வேண்டாம் என்பதில் தெளிவாக உள்ளனர். அவர்களிடம் குறுகலான பார்வை நீடிக்கவில்லை; இலங்கைவாசி என்பதற்கு ஒரு பரந்த அடையாளத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே வெளிநாட்டு குடிமக்களாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களது அன்றாட வாழ்க்கையில் பரபரப்பாக இருக்கின்றனர். அவர்கள், இந்த அரசியலைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஊடகங்களிலும், பொது வெளியிலும் தலைகாட்டும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் தான், இன்னும் போர் வேண்டும் என, விரும்புகின்றனர்.

சமீபத்தில், இங்கு ஒரு தமிழ் குடும்ப திருமணத்திற்கு போயிருந்தேன், திருமணத்தின் முடிவில் எல்லாரும் நடனமாடிக் கொண்டு இருக்கும்போது, 'பிரபாகரன் வருவார்; இலங்கையை ஒரு கை பார்ப்பார்' என்ற ஒரு பாடலை அவர்கள் போட்டனர்!புலம்பெயர் தமிழர்கள் மத்தி யில், நான் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாததற்கு காரணம், இந்த கலாசாரத்தை, நான் விமர்சிக்கிறேன்; பெண் உரிமை பற்றி பேசுகிறேன்; ஜாதியம் குறித்து பேசுகிறேன். இதெல்லாம் அவர்களை புண்படுத்துகிறது. ஆனால், நான் இதை தொடர்ந்து செய்வேன். அப்படி செய்வது எனக்கு பிடித்திருக்கிறது.


நன்றி: 'பவுன்டெய்ன் இங்க்'

ஷோபா சக்தி பற்றி...
*விடுதலை புலிகள் இயக்கத்தில், சிறு வயதில் இருந்தே ஈடுபட்டு, பின் வெளியேறியவர்.
*பிரான்சில் அகதியாக தஞ்சமடைந்து உள்ளார்.
*பாரிஸ் நகரில் வசிக்கிறார்.
*ம், கொரில்லா ஆகிய இரு நாவல்களையும் தேசத்துரோகி,எம்.ஜி.ஆர்., கொலை வழக்கு, கண்டி வீரன் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதி உள்ளார்
*இவற்றில் கொரில்லா, தேசத்துரோகி, எம்.ஜி.ஆர்., கொலை வழக்கு ஆகியவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
*கடந்த, 2011ல் வெளியான, 'செங்கடல்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
*தமிழ் இலக்கிய சூழலில், சில வட்டங்களில், இவரது அரசியல் நிலைப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1299710

 

  • கருத்துக்கள உறவுகள்

சுய தணிக்கை....சுய தணிக்கை......சுய தணிக்கை!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆண்டுகளுக்கு முன் நாம் சந்தித்த போது, அரசு அளிக்கும் உதவித் தொகையில் வாழ்வதாக கூறியிருந்தீர்கள். அப்படி இருந்த நீங்கள், கான்ஸ் திரைப்பட விழாவில், சிவப்பு கம்பளத்தில் கவுரவம் பெற்ற அனுபவம் எப்படி இருந்தது?

 

இந்த பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன், ஓர் ஆண்டு எனக்கு வேலையில்லை. வழக்கமாக வேலை இல்லாத போது, நான் பாரிஸ் நகர மெட்ரோவில் டிக்கெட் வாங்க மாட்டேன். ஏனெனில், டிக்கெட் விலை மிகவும் அதிகம். கான்சில் விழா முடிந்து நான் பாரிசுக்கு திரும்பிய போது, மெட்ரோ ஸ்டேஷனில் நின்று கொண்டு இருந்தேன். கடந்த, 20 ஆண்டுகளாக டிக்கெட் எடுக்காமலேயே பழகிவிட்டதால், அப்போதும் டிக்கெட் எடுக்க விரும்பவில்லை.
ஆனால், இந்த முறை, அங்கு இருந்த சில அதிகாரிகள் என்னை பார்த்து புன்னகைத்தனர். எங்கு பார்த்தாலும், கான்ஸ் விழாவின் செய்திகள் இருந்ததால், அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பர். அதனால், மெட்ரோவில் டிக்கெட் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.(சிரித்துக்கொண்டே...) அப்போது தான், 'ஐயோ! என் இழப்புகள் துவங்கி விட்டன' என்று எண்ணினேன்.

 

ஐயாவுக்கு

ஒழுங்காக வாழும் எங்களைப்போன்றவர்களை

விடுதலைக்காக உழைக்கும் போராளிகளை

பார்த்தால் சிரிப்பும்  நகைப்பும் தானே ....

 

 

ஒரு ரிக்கற் எடுத்து பயணம் செய்வதற்கே அஞ்சும் ஒருவர்

எமக்கு பாடம் எடுப்பது தான் விந்தை

அவருக்கு நாலு பேர் குறை பிடிப்பது அதைவிட  பெரிய அநியாயம்......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சமூகவிரோதிகள் தான் இவை. இவை இப்ப சமூகத்துக்கு பாடம் எடுக்கினம். உவர் ஒன்று மற்றது யார் என்று உங்களுக்கே தெரியும். :innocent:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தெரியும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சமூகவிரோதிகள் தான் இவை. இவை இப்ப சமூகத்துக்கு பாடம் எடுக்கினம். உவர் ஒன்று மற்றது யார் என்று உங்களுக்கே தெரியும். :innocent:

ஆளைப்பாருங்கோ..

தீபன் படத்தில் இவர்

தமிழர்களை

தமிழர்களின் வாழ்வியலை 

தமிழர்களின் உண்மைநிலையை பிரதிநிதிப்படுத்துகிறாராம்...

(படத்தில் மட்டுமல்ல எப்பவும் இது தான் இவரின் கோலம்):(

 

Tamil_News_large_129971020150720003414.j

  • கருத்துக்கள உறவுகள்

வெறிக்குட்டிங்க பேச்சு விடிஞ்சா போச்சுன்னு ஊரில ஒரு சொல் வழக்குள்ளது. அது சரி தான் போலக் கிடக்கு. உவரையும் உவருடைய பிதட்டல்களையும் படிக்கிறப்போ. :grin:

தமிழர்களை அவமானப்படுத்தி விளம்பரம் அடைய.. இப்படியானவர்களை பயன்படுத்துகிறார்கள்.. சில பிரபல்யம் விரும்பிகள்.:unsure:

சில சமயங்கள்  சில  வேண்டாத கருத்துக்களை வைப்பதால் எல்லா விடயங்களிலும் சோபாவுடன் எனக்கும் உடன் பாடில்லை ஆனால் ஒரு இலக்கியவாதியாக அவர் சென்றுவிட்ட இடம் மிக உயரம் .

இப்போ சோபாவின் அடுத்த பரிமாணம் நடிகன் அதிலும் மிக உச்சத்தை உடனே எட்டிவிட்டார். ஒரு வித அதிஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும் .

காகம் திட்டி மாடு சாகாது .

11738128_10207020062881523_3284495679305

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20 வருசமாய் ரிக்கற் இல்லாமல் ஏறி இறங்கனவர் உச்சத்தை எட்டிவிட்டாராம்...:shocked:

இதுக்கும் இஞ்சை ஒருத்தர் புளகாங்கிதம் அடைகின்றார்....:grin:
அதுக்கை காகம் திட்டி மாடு சாகாதெண்டு உவமானம் வேறை எடுத்து விடுறாராம்....:oO:
றைஸ் பைக்கற் எண்டு சும்மாவே சொன்னவங்கள். :cool:

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.