Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?

Featured Replies

மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?

 

எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி.

150716101446_kissing_640x360_bbc_nocrediமனிதர்களைப் பொறுத்தவரை புதிய உறவுகளில் முத்தம் முக்கியப் பங்கை வகிக்கிறது.

மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச் சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கம் என்று கருதுகின்றனர். ஆனால், உலகில் பாதிக்கும் குறைவான சமூகங்களே அம்மாதிரி முத்தமிடுகின்றன. மிருகங்களைப் பொறுத்தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது.

அப்படியானால், இந்தப் பழக்கத்திற்கு என்ன பின்னணி? முத்தமிடுதல் என்பது பயனுள்ளதாக இருக்குமென்றால் எல்லா மிருகங்களும் மனிதர்களும் முத்தமிடுபவர்களாக இருந்திருப்பார்கள்.

எல்லா மிருகங்களும் முத்தமிடாதது ஏன் என்பதை ஆராய்ந்தால், ஏன் சிலர் மட்டும் முத்தமிடுகிறார்கள் என்பது விளங்கும்.

150716101552_couple_kissing_640x360_bbc_தன் துணையிடமிருந்து வரும் வாசனையை அறியவும் முத்தம் வழியேற்படுத்துக் கொடுக்கிறது.

முத்தமிடுதல் தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 168 பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

வெறும் 46 பண்பாட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்களே காதலைத் தெரிவிக்கும் வகையில் உதட்டோடு உதட்டைச் சேர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள்.

மனிதர்கள் அனைவருமே முத்தமிடுகிறார்கள் என்ற எண்ணத்தை இந்த ஆய்வு மாற்றியமைத்திருக்கிறது.

முந்தைய ஆய்வுகளில் 90 சதவீதம் பேர் முத்தமிடுவதாகத் தெரியவந்தது. ஆனால், இந்தப் புதிய ஆய்வில், பெற்றோர் குழந்தைகளை முத்தமிடுவது போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. காதல் சார்ந்து, இரண்டு நபர்கள் உதட்டில் அளித்துக்கொள்ளும் முத்தம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.

பெரும்பாலான வேட்டைச் சமூகங்களில் இம்மாதிரி முத்தம் என்பதே கிடையாது. அம்மாதிரி விருப்பமும்கூட அவர்களுக்குக் கிடையாது. பிரேசிலில் இருக்கும் மஹினகு என்ற இனத்தினர் முத்தமிடுதலை மிக மோசமான செயலாகக் கருதுகிறார்கள்.

150311092607_kiss_624x351_afp.jpgவேட்டையாடி உணவைச் சேகரிக்கும் சமூகங்களில் முத்தமிடுதல் என்பது கிடையாது.

நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு நெருக்கமாக இப்போதும் வாழ்வது இப்படியான வேட்டைச் சமூகங்கள்தான். ஆகவே, நம் மூதாதையர்களும் முத்தமிட்டிருக்காமல் இருந்திருக்கக்கூடும்.

முத்தமிடுவது எல்லா மனிதர்களிடமுமே இருக்கும் வழக்கம் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு புரட்டிப்போட்டிருக்கிறது என்கிறார் லாஸ் வேகாஸில் இருக்கும் நேவடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஜான்கோவியாக் தெரிவித்திருக்கிறார்.

நாம் இப்போது முத்தமிடுவதைப் போல முத்தமிடுவது என்பது ரொம்பவுமே சமீபத்திய பழக்கம்போலத் தெரிகிறது என்கிறார் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரஃபேல் வ்லோடார்ஸ்கி. முத்தம் கொடுப்பது எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை ஆராய்வதற்காக அவர் பல ஆவணங்களை ஆராய்ந்தார்.

3,500 வருடங்களுக்கு முந்தைய, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களில் முத்தம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஒருவரின் ஆன்மாவை உறிஞ்சுவது என முத்தம் இதில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், எகிப்திய சித்திர எழுத்துகளில் ஆட்கள் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறதே தவிர, உதட்டோடு முத்தமிடும் காட்சிகள் இல்லை.

மிருகங்கள் முத்தமிடுகின்றனவா?

மிருகங்களைப் பொருத்தவரை, பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிம்பன்ஸி, பொனபோ போன்ற குரங்குகள் முத்தமிடுகின்றன.

150716163159_kiss_animals_512x288_bbc_noசிம்பன்சிகள் முத்தம் கொடுத்துக்கொண்டாலும் அவை சமாதான நடவடிக்கையாகவே அதனைச் செய்கின்றன.

ஆனால், சிம்பன்ஸிகளைப் பொறுத்தவரை முத்தமிடுவது என்பது, ஒரு சமாதான நடவடிக்கை. பெண்களைவிட ஆண் சிம்பன்ஸிகளிடம்தான் இது அதிகம் இருக்கிறது. ஆக, இந்த முத்தம் என்பது காதல், பாலுறவு சார்ந்த முத்தமில்லை.

பொனபோ மனிதக் குரங்குகள் இன்னும் அதிகமாக முத்தமிடுகின்றன. தவிர, அவை நாக்குகளையும் அதற்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றன. காரணம் அந்தக் குரங்குகள், பாலுறவில் அதிக நாட்டமுடையவை.

இரண்டு மனிதர்கள் சந்தித்துக்கொண்டால் கைகொடுத்துக் கொள்வதைப் போல இரண்டு பொனபோக்கள் சந்தித்தால், உடனே பாலுறவு வைத்துக்கொள்ளும். ஆகவே, பாலுறவுக்கு முந்தைய நடவடிக்கையாக முத்தம் இருப்பதாகச் சொல்ல முடியாது.

சிம்பன்ஸி, பொனபோ ஆகிய இந்த இரண்டு மிருகங்களைத் தவிர, வேறு எந்த மிருகமும் முத்தமிடுவதில்லை. இவையும்கூட, முகத்தை அருகில் கொண்டு வருகின்றன, உதட்டால் தொட்டுக்கொள்கின்றன என்பதைத் தவிர, வேறு ஏதும் செய்வதில்லை.

மனிதர்களைப் பொறுத்தவரை வாசனையின் மூலம் துணையைப் பற்றி அறிவதில்லை. இருந்தபோதும், உடலிலிருந்து வரும் வாசனை இதில் முக்கியப் பங்கு வகிக்கவேசெய்கிறது.

2013ல் முத்தமிடுதல் குறித்து வ்லோடர்ஸ்கி விரிவாக ஆராய்ந்தார். ஒருவரை முத்தமிடும்போது, எது முக்கியம் எனப் பலரிடம் அவர் கேட்டார். அவர்களிடமிருந்துவரும் வாசனைதான் மிக முக்கியமான விஷயமாக இருந்தது.

150714143619_kissing_couple_624x351_gettதற்போது மனிதர்கள் முத்தமிடும் முறை மிக சமீபத்தில் உருவான முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கரடிகள் துணையை ஈர்க்க பெரோமோன் என்ற வாசனையை வெளியிடுவதைப் போல, ஆண்களின் வியர்வையிலும் அம்மாதிரியான வாசனை இருக்கிறது. பெண்கள் இந்த வாசனையை நுகரும்போது, அவர்களுடைய பாலியல் விருப்பம் அதிகரிக்கிறது.

ஆக மற்றொருவரின், வாசனையை உணர முத்தம் என்பது பண்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளும் வழிமுறையாக இருக்கிறது.

ஆக, சரியான துணையை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முத்தமிடுதலை விட்டுவிட்டு, வாசனையை நுகர்ந்து பார்த்து சேரலாம். சரியான துணையும்கூட கிடைக்கலாம். ஆனால், சுற்றியிருப்பவர்கள்தான் சற்று வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.

http://www.bbc.com/tamil/science/2015/07/150717_kiss

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் உன்னதமான விடயங்களைத் தேடிப்பிடிக்கும் நீலப்பறவைக்குப் பின்வரும் பாடல் பரிசாக வழங்கப்படுகின்றது!:grin:

https://youtu.be/1rC0ny8Q7bA

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் உன்னதமான விடயங்களைத் தேடிப்பிடிக்கும் நீலப்பறவைக்குப் பின்வரும் பாடல் பரிசாக வழங்கப்படுகின்றது!:grin:

https://youtu.be/1rC0ny8Q7bA

முதலில் ஒன்றும் புரியல அண்ணா

உங்க பாட்டை கேட்டபின்பு தான் ஞானம் பெற்றேன்..:)

Edited by விசுகு

முத்தத்தின் சுவை தெரியாதவர்கள் சொர்க்கத்தின் வழி புரியாதவர்கள்

இப்படிக்கு,
சுவாமி நிழலியானந்தா 

  • கருத்துக்கள உறவுகள்

முத்தத்தின் சுவை தெரியாதவர்கள் சொர்க்கத்தின் வழி புரியாதவர்கள்

இப்படிக்கு,
சுவாமி நிழலியானந்தா 

நிழலியானந்தா  சொல்வது சரிதான்:love:

ஆனால் அதை அவர் நித்தியானந்தாவுக்கு சொல்வது தான் கொடுமை...:grin:

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/07/2015 at 10:16 PM, நிழலி said:

முத்தத்தின் சுவை தெரியாதவர்கள் சொர்க்கத்தின் வழி புரியாதவர்கள்

இப்படிக்கு,
சுவாமி நிழலியானந்தா 

அடச்ச இது தெரியாமல் இத்தனை காலம் சும்மா ஓடிட்டுதே 

என்ன வாழ்க்கையடா முனிவர் 

நிழலி சாமி அடியேனுக்கு ஆலோசனைகள் நீங்கள் தான் வழங்க வேண்டும் ?

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்துக்கே முத்தம் மொத்தமாய் சப்ளை செய்பவர்களிடம் என்ன கேள்வி இது....!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

சொர்க்கத்துக்கே முத்தம் மொத்தமாய் சப்ளை செய்பவர்களிடம் என்ன கேள்வி இது....!

யாருப்பா அது:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கிருமிகளுக்கு வாழ்வு கொடுக்கத்தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

கிருமிகளுக்கு வாழ்வு கொடுக்கத்தான். tw_blush:

ருசி அறியாமல் அறிக்கையை விட்டால் எப்படி நம்புவது ☺

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

ருசி அறியாமல் அறிக்கையை விட்டால் எப்படி நம்புவது ☺

கிருமிக்கும்.. அதுங்க தொத்தவும்  ஒரு வழி வேணுமில்ல. இதை எல்லாம் பரிசோதனை செய்து அறிய வேண்டியதில்லை.. செய்தவை.. செய்யுறவை.. படுற பாட்டிலை தெரியுது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

கிருமிக்கும்.. அதுங்க தொத்தவும்  ஒரு வழி வேணுமில்ல. இதை எல்லாம் பரிசோதனை செய்து அறிய வேண்டியதில்லை.. செய்தவை.. செய்யுறவை.. படுற பாட்டிலை தெரியுது. tw_blush:

நடுரோட்டில் உறுஞ்சுவதை பார்க்க பொறாமை உங்களுக்கு ?

ஆனால் விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது கிரூமி நோய் உள் செல்ல படலாம் உள் வாங்க படலாம் 

ஆனால் உணர்ச்சி ரீதியாக பார்க்க போனால் எங்கே பார்க்கிறது  

தூண்டலில் ஆரம்பித்து தீண்டலில் அக்கால சொன்ன விரட்டி விரட்டி வெட்டுவார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.