Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஸ்டி முறைமை ஆட்சியை எதிர்க்கின்றேன் - ரணில் விக்ரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி முறைமை ஆட்சியை எதிர்க்கின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்வைத்த சமஸ்டி முறைமை ஆட்சியை தாம் நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் தேர்தலில் வெற்றியீட்டுவோம் என நன்கு தெரிந்து கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி சமஸ்டி முறைமை ஆட்சியை வழங்க இணங்க வேண்டிய தேவை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டில் பிரபாகரன் முன்வைத்த சமஸ்டி முறைமை யோசனைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், தாம் அப்போதே ஜனாதிபதியாக பதவி வகித்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் காலத்திலும் தாம் சமஸ்டி முறைமையை ஏற்றுக்கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமங்களுக்கு பரந்து செல்லக்கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வுப் பொறிமுறைமையே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த அரசாங்கத்தில் பல்வேறு வழிகளில் அங்கம் வகிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்த போதே தோற்கடிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

88-89ம் ஆண்டில் பட்டலந்த படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அறிந்து கொள்ள வேண்டுமாயின் அப்போது நடைபெற்ற பாராளுமன்ற விவாதங்களின் ஹன்சார்ட் அறிக்கையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தோல்வியை எதிர்நோக்கி வரும் மஹிந்த ராஜபக்ஸ பல்வேறு கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122905/language/ta-IN/article.aspx

சமஸ்டி முறையை  எதிர்த்து சிங்கள மக்களிடம் பிரச்சாரம் செய்து வாக்கு வேட்டையாடவேண்டிய நிலை ரணில்  சிங்கள என்ற தெற்கு அரசியல்வாதிக்கு.  அதேவேளை சமஸ்டியை ஆதரித்து புரட்சி செய்ய்யபோவதாக தமிழ் மக்களிடம்  நாடகமாடி வாக்குவேட்டையாட வேண்டிய நிலை நமது சம்பந்தர், சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்ற நமது தமிழ் அரசியல் அரசியல்வாதிகளுக்கு. எப்படியோ இந்த ஏமாற்று அரசியல்வாதிகள் தமது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிடுவார்கள். தோற்கப்போவது தமிழ் மக்கள் மட்டும் தான். இந்த அரசியல்வாதிகளின் யாழ்கள  வாலுகளுக்கும் அதைபற்றி அக்கறை இல்லை. தமது விசுவாச அரசியல்வாதிகள் வென்றால் போதும் என்ற நிலை.

நாங்கள் என்ன நீங்கள் தருவியள் எண்டே கேட்டனாங்கள். சனம் எங்களை ஒரு பிடி பிடிக்கும் போலை கிடந்தது. அதுதான் சமஸ்டி எண்ட எங்கடை பழைய மேளத்தை எடுத்துத் தட்டினனாங்கள்.

எலக்சன் முடியட்டும். நாங்கள் திரும்பவும் இதயங்களால் இணைந்து லவ் பண்ணுவம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக சொன்னீர்கள். snap1dl1.gif

நாங்கள் என்ன நீங்கள் தருவியள் எண்டே கேட்டனாங்கள். சனம் எங்களை ஒரு பிடி பிடிக்கும் போலை கிடந்தது. அதுதான் சமஸ்டி எண்ட எங்கடை பழைய மேளத்தை எடுத்துத் தட்டினனாங்கள்.

எலக்சன் முடியட்டும். நாங்கள் திரும்பவும் இதயங்களால் இணைந்து லவ் பண்ணுவம். 

இதயங்களால் இணைந்து லவ் பண்ணி அதை ஜாலியாக அனுபவிப்பதற்கு மக்கள் என்ற புருஷன்கிட்ட பொய் சொல்ல தானே வேண்டும். அதை தான் செய்யுறாங்க. அது சகஜம் தானே என்று வாலுகள் சொல்லுவாங்க.

தமிழ் தேசத்திற்கு இந்த சம் சும் கோஸ்டி செய்யிற அநியாயத்தைப் பற்றி எழுதிற ஆக்களை புலி வாலுகள் எண்டு சம் சும்மின்ரை வாலுக்ள எழுதிக் கொண்டு திரியினம். 

ஆனால் வடக்கு கிழக்கிலை எலக்சன் கேக்கிற கூத்தமைப்புக்காறர் எல்லாரும் இந்தப் புலிவாலைத் தான் பிடிச்சுத் தொங்கிக் கொண்டிருக்கினம் எண்டு இவைக்கு ஆராவது எடுத்துச் சொல்லுங்கோப்பா..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாங்கள் கட்டாயம் ஒரு நாட்டுக்குள்ள இரண்டு தேசம் எடுத்துத் தருவம். கட்டாயம் நம்பியிருங்கோ.  

பிரபாகரனின் பெயரை உச்சரித்ததும் கரகோசம் வானைப் பிளந்தது - இது உதயனின் தலைப்புச் செய்தி

மாவீரர்களின் கனவு பலிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள். - இது சிறிதரன் பச்சிலைப்பள்ளியிலை பேசினது.

போராளிகளின் தியாகங்கள் வீண்போக விடவேண்டாம் - இது அரியம் மட்டக்களப்பிலை பேசினது.

அட பிரபாகரனையும் போராளிகளையும் விட்டால் உவங்களுக்கு பேச ஒண்டுமே இல்லைப் போல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எலேய் ரணிலு,

என்னலே அங்க சவுண்டு?

அண்ணண் 22 எம்பியோட வாறார்,

வந்ததும் ஒழுங்கு மருவாதையா ஒரு தட்டில ஒரு நாடு இரண்டு தேசத்தை எடுத்துக் கொடுத்துடணும்லே.

இல்லாட்டி சமட்டி புட்வேன்லே, சமட்டி.

இப்படிக்குப்

புலவாழிகள்.

     - இப்படிக்கு கூட்டமைப்பின் சம்சும் வாலு

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்க தங்கட வசதிக்காக தாங்கள் புலிகளின் பிரநிதிகள் போல புலுடா விடப்பாக்கினம். அவையளுக்கு இன்னும் விளக்கம் குறைவு. கடவுள் சிலருக் இப்பிடி பட்சபாதம் செய்து படைத்து விடுவது உண்டு. எத்தினை தரம் சொல்லுறது. இப்ப ஒறிஜினல் புலிகள் இல்லை. புலத்திலை இருக்கிறதுகள் எல்லாம் புலிவால்கள் தான் எண்டு. புலிவால்கள் புலிகளை வைத்து வியாபாரம் நடத்தினவர்களே ஒழிய அவர்களுக்கு ஒறிஜினல் புலிகளில் எவ்வித அருகதையும் கிடையாது. நினைத்தாலு உங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புலிகளின் வீரம் தியாகம் ஒழுக்கம் புகழ் எல்லாவற்றையும் சொல்ல மக்களுக்கும் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்புக்கு மட்டுமே உரிமையுண்டு. புலிவால்களுக்கும் கஜே கோஸ்டிக்கு எள்ளாளவும் உரிமையில்லை. சிலர் முழுப்பூசனிக்காயை மறைத்தபடி கூட்டமைப்பு புலி எதிர்ப்பாளர்கள் போலவும் கஜே கோஸ்டி புலி ஆதரவாளர்கள் போலவும் ரீல் விட்டுத் தள்ளுகிறார்கள். உண்மையில் புலிவால்கள் புலிகள் இருந்த சமயத்தில் புலிகளுக்கு எப்ப ஆப்படிக்கலாம் என இருந்தார்கள் (இங்கு 'புலிவால்' என்ற பதத்தில் புலி என்று வருவதால் அவர்கள் புலிகள் அல்ல. புலிகள் வேறு அவர்கள் தேசத்தின் தியாகிகள், புலிவால்கள் வேறு அவர்கள் தேசியத்தின் வியாபாரிகள்) இதுகளெல்லாம் விளங்காமல் சும்மா மற்ற ஆக்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டு திரியினம். 17 ஆம் திகதி தெரியும் புலிவால்களுக்கும் கஜே கோஸ்டிக்கும் தமிழீழ மக்களின் தீர்ப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் ஒரு நாடு இருதேசம் கேட்கும் அளவுக்கு கோமாளிகள் யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவையிட்டா பாடம் படிக்கேலாது படம் காட்டுவினம் பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் இங்க தங்கட வசதிக்காக தாங்கள் புலிகளின் பிரநிதிகள் போல புலுடா விடப்பாக்கினம். அவையளுக்கு இன்னும் விளக்கம் குறைவு. கடவுள் சிலருக் இப்பிடி பட்சபாதம் செய்து படைத்து விடுவது உண்டு. எத்தினை தரம் சொல்லுறது. இப்ப ஒறிஜினல் புலிகள் இல்லை. புலத்திலை இருக்கிறதுகள் எல்லாம் புலிவால்கள் தான் எண்டு. புலிவால்கள் புலிகளை வைத்து வியாபாரம் நடத்தினவர்களே ஒழிய அவர்களுக்கு ஒறிஜினல் புலிகளில் எவ்வித அருகதையும் கிடையாது. நினைத்தாலு உங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புலிகளின் வீரம் தியாகம் ஒழுக்கம் புகழ் எல்லாவற்றையும் சொல்ல மக்களுக்கும் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்புக்கு மட்டுமே உரிமையுண்டு. புலிவால்களுக்கும் கஜே கோஸ்டிக்கு எள்ளாளவும் உரிமையில்லை. சிலர் முழுப்பூசனிக்காயை மறைத்தபடி கூட்டமைப்பு புலி எதிர்ப்பாளர்கள் போலவும் கஜே கோஸ்டி புலி ஆதரவாளர்கள் போலவும் ரீல் விட்டுத் தள்ளுகிறார்கள். உண்மையில் புலிவால்கள் புலிகள் இருந்த சமயத்தில் புலிகளுக்கு எப்ப ஆப்படிக்கலாம் என இருந்தார்கள் (இங்கு 'புலிவால்' என்ற பதத்தில் புலி என்று வருவதால் அவர்கள் புலிகள் அல்ல. புலிகள் வேறு அவர்கள் தேசத்தின் தியாகிகள், புலிவால்கள் வேறு அவர்கள் தேசியத்தின் வியாபாரிகள்) இதுகளெல்லாம் விளங்காமல் சும்மா மற்ற ஆக்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டு திரியினம். 17 ஆம் திகதி தெரியும் புலிவால்களுக்கும் கஜே கோஸ்டிக்கும் தமிழீழ மக்களின் தீர்ப்பு!

உள்ளதை சொன்னால் புலுடாவாம் புலிவாலாம்....

இலக்கியம் ,விளையாட்டு ,சினிமா மாதிரி அந்த விடயத்தில் சற்று அறிவு இருந்தால் தான் விமர்சனம் எழுதலாம் ஆனால் அரசியல் அப்படியல்ல .

அடிப்படை அரசியல் அறிவு எதுவும் இல்லாமல் அரசியல் செய்யலாம் விமர்சனம் எழுதலாம் .அதை நிரூபிக்க தமிழ் நாட்டில் இருப்பது போல  எங்கட ஆட்கள் பலர் கிளம்பியிருக்கினம் .

முப்பது வருட போராட்டம் முள்ளிவாய்காலில் வெள்ளை கொடி பிடிக்க வேண்டிவந்ததை கூட இன்னமும் விளங்காமல் படம் காட்ட நிற்கினம் .

ரணில் தேர்தலில் என்ன பேசுகின்றார் என்பது முக்கியமல்ல தேர்தல் முடிய என்ன செய்யபோகின்றார் என்பதுதான் முக்கியம் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்ல தெளிவாக இருக்கு அதை வாசித்து விளங்காதவர்கள் இப்படியே அலம்பிக்கொண்டிருக்க சரி .

உங்கள் கருத்து மாதிரியே பொதுமக்களை மட்டம்தட்டி அரசியல்பிழைப்பு நடத்தியவர்கள் நடத்துபவர்கள் தான் வெள்ளைவேட்டி தமிழரசு தமிழர்விடுலைக்கூட்டணி  தமிழ் தேசிய கூட்டமைப்புகாரர்கள்.

இன்று கூட்டமைப்புக்கு எதிராக அலம்புபவர்கள் என்றாவது தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு எதிராக நின்றார்களா?
அல்லது இன்று டக்ளஸ் கொம்பனிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றார்களா?

இன்னுமொன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
இலக்கியம் விளையாட்டு சினிமா பற்றி விவாதிக்க விரும்பினால் வாருங்கள் விவாதிப்போம்.

உலக அரசியலைக் கரைத்துக் குடித்த ஒருவர் இங்கே உலாவுகிறார். அவரால் எல்லோரும் அறிவிலிகள் என்று சொல்லித்திரிய மட்டுமே முடியும். ஆனால் அவரால் பரப்பப்படும் தவறான கருத்துக்களுக்கு உதாரணங்களுடன் பதிலளித்தால் அங்கிருந்து ஒதுங்கிவிடுவார் . தவறை ஒத்தக்கொள்ளவும் திராணியற்றி அடுத்தவர்களை நோக்கி விரல் சுட்ட மட்டுமே தெரிந்த இந்த அறிவாளிக்கு தாயக அரசியலும் தெரியாது புலத்து அரசியலும் தெரியாது என்பதே உண்மை.

அவரது புதிய தலைவர்களைப் போல அவருக்கும் போராளிகள் மீது திடீர் பாசம் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. 

Edited by Manivasahan

தங்களுக்கு அரசியல் தெரியும் என்று நம்பிய  இந்த கூட்டம் தான் இவ்வளவு அப்பாவி மக்களையும் முள்ளிவாய்காலில் பலி கொடுத்தது .

போராளிகள் மீது எல்லோருக்கும் பாசம் தான் பயங்கரவாதிகள் மீது அல்ல .

நாம் ஓசி பத்திரிகையில் வெட்டி ஒட்டும் ஆட்கள் அல்ல எண்பதுகளிலேயே சர்வதேசத்துடன் அரசியல் கதைக்க தெரிவுசெய்யபட்டவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் காழ்ப்புணர்வுடன் விசமத்தனமான தலையங்கங்களுடன் செய்திகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது,  நிழலி சாரினால் அன்பாகக் கண்டிக்கப்பட்டதை மறந்து விட்டினம் போல கிடக்கு. தொடக்கத்திலேயே நாகரிகமற்ற அரசியல் கருத்துக்களை ஆரம்பித்ததும் அவர்கள் தான். நடுநிலைவாதிகள் போன்று வேடமிட்டவர்களின் வேடம் கலைந்து போனது சோகம் தான். நல்லதொரு அரசியல் கருத்தாடல் ஒன்றைக் கட்சி சாராமல் செய்திருக்லாம்.  

சமஸ்டி முறைமை தானே எதிர்க்கிறார் தமிழீழத்தை இல்லை

தங்களுக்கு அரசியல் தெரியும் என்று நம்பிய  இந்த கூட்டம் தான் இவ்வளவு அப்பாவி மக்களையும் முள்ளிவாய்காலில் பலி கொடுத்தது .

போராளிகள் மீது எல்லோருக்கும் பாசம் தான் பயங்கரவாதிகள் மீது அல்ல .

நாம் ஓசி பத்திரிகையில் வெட்டி ஒட்டும் ஆட்கள் அல்ல எண்பதுகளிலேயே சர்வதேசத்துடன் அரசியல் கதைக்க தெரிவுசெய்யபட்டவர்கள் .

உங்கள் கருத்து மாதிரியே பொதுமக்களை மட்டம்தட்டி அரசியல்பிழைப்பு நடத்தியவர்கள் நடத்துபவர்கள் தான் வெள்ளைவேட்டி தமிழரசு தமிழர்விடுலைக்கூட்டணி  தமிழ் தேசிய கூட்டமைப்புகாரர்கள்.

இன்று கூட்டமைப்புக்கு எதிராக அலம்புபவர்கள் என்றாவது தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு எதிராக நின்றார்களா?
அல்லது இன்று டக்ளஸ் கொம்பனிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றார்களா?

இன்னுமொன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
இலக்கியம் விளையாட்டு சினிமா பற்றி விவாதிக்க விரும்பினால் வாருங்கள் விவாதிப்போம்.

விசயம் தெரி;நதவர்களுடன் விவாதிக்கலாம்.  ஆனால் விக்கினேஸ்வரனின்  முதலாவது அறிக்கை வெளிவந்த போது சர்வதேசத்தில் இது தான் நடைமுறை . புலத்திலுள்ளவர்கள் அனைவரும் இதை அறியாத பேதைகள் என்று கருத்தெழுதி இருந்தார். 

ஆனால் இதற்கு உதாரணங்களுடன் விளக்கமளித்த பின்னர் இதைப் பற்றிப் பேச்சே இல்லாமல் நழுவிக் கொண்டார். 

இந்மத அறிவுடன் சர்வதேசத் துடன் அரசியல் பேசினார் என்றால் எம் தமிழரின் தலைவிதியை என்ன செய்வது.

தன்னை தானே அறிவாளி என்று சொல்லிக் கொள்வதற்கு இவர் போல் ஒரு சிலரும் அதற்கு ஆமாம் போட ஒரு சில பெர்னாண்டோ பிள்ளைகளும் இருந்து கொண்டு தம்மைத் தாமே அறிவாளிகள் என்று பாராட்டிக் கொள்வது தான் கோமாளித்தனம்

  • கருத்துக்கள உறவுகள்

விசில் குஞ்சுகள் தங்கள் உண்மை முகம் வெளிப்பட்டவுடன் தனிப்பட்ட தாக்குதலைத் தொடுப்பார்கள். தலைகீழா நிக்கிறவனுக்கு எல்லாமே தலைகீழாகத்தான் தெரியும். புரியும் படி சொன்னால் கோமாளிக்கு அடுத்தவனைப் பார்த்தால் கோமாளியாகத்தான் தெரியும்.

சில விடயங்களை அந்த அந்த நேரத்தில் சொல்லாமல் விடுவதும் தவறுதான் .

ஒன்றும் தெரியாத என்னை வெளிநாட்டு தூதுவர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்கும் வேலையை எவனும் கொடுக்கமாட்டான் தம்பி .

மாகாண முதலமைச்சர் ஆக விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டபின் அவர் மாகாண முழு மக்களுக்கும் முதலமைச்சர் எனவே தேசிய அரசியலில் சார்ந்து அரசியல் செய்வது நியாயமாகாது என்று சொன்னதை  அவர் தான் சட்ட கல்லூரி முடிவு பற்றிய உதாரணத்தையும் சுட்டி காட்டினேன் .

பலர் இங்கு மாகாண  அரசியலில் இருந்துதான் தேசிய அரசியலுக்கு செல்வதாக பலர் எழுதியிருந்தார்கள் .அது அவர்கள் தெரிவு அப்படி போகாதவர்களும் பலர் இருக்கின்றார்கள் 

கனடாவில் எமது கண் முன்னே மாகாண அரசியலில் ஒரு கட்சியிலும் தேசிய அரசியலில் வேறு கட்சியிலும் இருந்தவர்களை பார்த்தோம் .

பொப் ரே ஆரம்ப லிபரல் அரசியல்வாதி பின்னர் என் டி பி சார்பில் தேசிய எம்பி பின்னர் மாகாண அரசியலில் காலடி வைத்து மாகாண பிரிமியர் என்டிபி சார்பில் .பின்னர் தேசிய அரசியலில் லிபரல் கட்சியாக மாறினார் .கனேடிய எதிர்கட்சி தலைவராக வேறு இருந்தார் .

மற்றவர் ஜீன் சரஸ்ட் .இவர் கொன்செர்வேர்டிவ் கட்சியை சேர்ந்தவர் .அந்த கட்சி சார்பில் மந்திரியாகவும் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தார் .பின்னர் தேசிய அரசியலில் அவர் கட்சி அடைந்த படுதோல்விக்கு பின் கியுபெக் அரசியலில் லிபரல் சார்பில் போட்டியிட்டு கியுபெக் பிரிமியராக வந்தார் .

விக்கியர் முதலில் விட்ட அறிக்கையுடன் நிறுத்தி இருக்கலாம் ஆனால் தான் சம்பந்தபடாத இந்த தேர்தலில் நாளுக்கு ஒரு அறிக்கை விட்டு நானும் உள்ளேன் ஐயா என்று மக்களுக்கு நினைவுபடுத்துகின்றார் .

விக்கி விட்ட அறிக்கைகளை விட ஓசி இணையங்களும் பத்திரிகைகளும் பத்தை நூறாக்கியதுதான் அதிகம் .சிங்கள ஆமியின் இறப்பையும் ஓடிப்போபவர்கள்  எண்ணிக்கையும் பத்தை நூறாக்கி எழுதிய கைகள் தானே வேறு என்ன செய்யும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களுக்கு அரசியல் தெரியும் என்று நம்பிய  இந்த கூட்டம் தான் இவ்வளவு அப்பாவி மக்களையும் முள்ளிவாய்காலில் பலி கொடுத்தது .

போராளிகள் மீது எல்லோருக்கும் பாசம் தான் பயங்கரவாதிகள் மீது அல்ல .

நாம் ஓசி பத்திரிகையில் வெட்டி ஒட்டும் ஆட்கள் அல்ல எண்பதுகளிலேயே சர்வதேசத்துடன் அரசியல் கதைக்க தெரிவுசெய்யபட்டவர்கள் .

கூட்டணி பெரிசுகள் 80களில்.....

பிள்ளையை வெளிநாட்டுக்கு படிக்க கொண்டுபோய் விட்டது......
பிள்ளையின்ரை பரதநாட்டியத்தை வெளிநாட்டிலை(G) அரங்கேற்றியது.....

இதெல்லாம் சர்வதேச அரசியல் கதையம்சத்தில் வருமா அண்ணா?

நாட்டில் அரசியல் செய்பவர்கள் பிள்ளைகள் நாட்டில் தான் இருக்கவேண்டும் என்று என்ன சட்டமா ?

பிள்ளைகளின் பரத நாட்டியத்திற்கும் அவர்கள் செய்யும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் .

இதைதான் முதலிலேயே எழுதனேன் எதுவித அறிவுமில்லாமலே அரசியல் கருத்துக்கள் எழுதாலாம் என்று .

"இன்னுமொன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
இலக்கியம் விளையாட்டு சினிமா பற்றி விவாதிக்க விரும்பினால் வாருங்கள் விவாதிப்போம்."

அண்ணை நான் எப்பவும் ரெடி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.