Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பிரச்சார பதாகைகளை வெட்டி வீசியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளன.

Featured Replies

பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்களை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் போன்றவை இன்றும் தொடர்கின்றனவா?????

அணு விஞ்ஞானி, பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் யோர்க் பிராந்திய சபையின் கவுன்சிலராக தெரிவாவதற்கு போட்டியிட்ட போது அவருக்கு தமிழர் சமூகத்தின் ஆதரவு பெருகியிருந்தது.
ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ வந்த எதிர்ப்பு அலை ஒன்று நிரபராதியான அவரை ஒரு தமிழர் சமூகத்தின் ஒரு துரோகியாக வேண்டுமென்றே சித்தரித்து புகழும் தகுதியும் கொண்ட அவரை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் ஆரம்பமாகின. அதில் முதலாவதாக விளங்கியது அவரது தேர்தல் பிரச்சார பதாகைகளை ( சைன்ஸ்- signs) களை கூறிய கத்திகள் அல்லது வாள்கள் போன்றவற்றால் வெட்டி வீசியதாகும்.. அதனை தொடர்ந்து வ் அவர் சந்தித்த மிகவும் மோசமானதும் பொய்யானதுமான விமர்சனங்கள் அவரை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்தன. நல்லதோர் சமூகத் தலைவரை நாம் இழந்தவர்கள் ஆனோம்

இப்போதும் மீண்டும் அது போன்ற கொடூர சம்பவங்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன என்பதை கனடா உதயன் அனைவர் கவனத்திற்கும் கொண்டுவருகின்றது
. ஆமாம் நண்பர்களே, ஸ்காபுரொ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பிரச்சார பதாகைகளை ( (சைன்ஸ்- signs) களை கூறிய கத்திகள் அல்லது வாள்கள் போன்றவற்றால் வெட்டி வீசியுள்ள மிகவும் பாதகமான சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் மேற்படி தொகுதிக்குள் இடம்பெற்றுள்ளன. ( அதன் புகை படங்களை கூர்ந்து கவனிக்கவும்)
இந்த சம்பவத்தை மீண்டும் கனடா உதயன் கண்டிகின்றது. முன்னர் பேராசிரியர் இலகுபிள்ளைக்கு நடந்த போது அதனை கண்டித்து எவ்வாறு எமது ஆசிரியர் தலையங்கம் மற்றும் செய்திகள் இருந்தனவோ, அதைபோலவே ஸ்காபுரொ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பிரச்சார பதாகைகளை ( (சைன்ஸ்- signs) களை வெட்டி எறிந்த சம்பவத்தையும் கண்டிக்கின்றது. இதில் உள்ள உண்மை என்னவென்றால் முன்னர் பேராசிரியர் இலகுபிள்ளைக்கு பாதகம் செய்த அதே கைகளும் கத்திகளுமே ஸ்காபுரொ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரியின் பிரச்சாரத்திற்கு பாதகம் செய்யத் தொடங்கியுள்ளன. அந்த கைகளுக்கு “சொந்தக்காரர்களை “ கனடா உதயன் நன்கு அறிவான். காரணம், 2010 ம் ஆண்டு எமது கனடா உதயன் அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்த கைகளே இதனையும் செய்துள்ளன என்பது முற்றிலும் உண்மை. 
இந்த சம்பவங்கள் மிகவும் கொடியவை. இவை நிறுத்தப்படவேண்டும். எமது சமூகம் ஒன்று சேர்ந்து இதை எதிர்க்க வேண்டும்.
இந்த சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால் இதற்கு பொறுப்பான நபர்களின் புகைப்படங்கள் எமது கனடா உதயனில் தொடர்ச்சியாக ஆதாரத்துடன் பிரசுரிக்கப்படும் என்பதையும் எமது ஆசிரியர் பீடம் எச்சரிக்கையுடன் தெரிவிக்கின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரொறன்ரோ பகுதியில் ஒரு கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளருக்கு தொண்டர்களாக பணியாற்றும் ஓரிருவர் கூட இந்த தேர்தல் பிரச்சார பதாகைகளை ( சைன்ஸ்- signs) களை கூறிய கத்திகள் அல்லது வாள்கள் போன்றவற்றால் வெட்டி வீசியதற்கு பின்னணியில் உள்ளார்கள் என்பதையும் எம்மில் பலர் அறிவார்கள்.
,இது இவ்வாறிருக்க, ஒரு லிபரல் கட்சி வேட்பாளரின் சைன்ஸ் வெட்டப்பட்டுவிட்டது என்ற காரணத்திற்காக மட்டும் நாம் இந்த விடயங்களை இங்கு பதிவு செய்யவில்லை. கனடா உதயன் எதிவரும் பொதுதேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சியோ அல்லது புதிய ஜனநாய கட்சியோ தான் ஆட்சியில் அமரவேண்டும் என்று விரும்புகின்றது. அதற்கு பல காரணங்கள் உண்டு.அத்தோடு அது தனிப்பட்ட விடயம். எமது சொந்த கருத்து என்றும் கொள்ள இடம் உண்டு... ஆனால் ஸ்காபுரொ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரியின் பிரச்சாரத்திற்கு பாதகம் செய்யத் தொடங்கியுள்ள கொடூரமான செயல்களை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எமது நாட்டில் நடைபெறும் இனப்படுகொலையை சர்வதேச விசாரணை சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் குரல் எழுப்புகின்றோம். அதைபோலவே இந்த பதாகைக் கொலைக்கும் எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும்.
இங்கே காணப்படும் படங்களைப் பாருங்கள். திரு ஹரி ஆனந்தசங்கரியின் கால்களை வெட்டியது போன்ற ஒரு உணர்வு உங்களிடத்தில் தோன்றும்.
மேலும் கருத்துக்கள் தொடரும்.......

கனடா உதயன் ஆசிரிய பீடம்

 

 

12002873_1137381196290409_53980733441395     11942294_1137381329623729_42588620458571

 

 

11000621_1137381392957056_26340266980345

கனடிய கட்சிகளின் விபரம்

கன்சவேட்டிவ் கட்சி       முதலாளித்துவம் சார்ந்தது

புதிய ஜனநாயக கட்சி     தொழிலாளர் சார்புடையது 

லிபரல் கட்சி                ஓரளவு நடு நிலையானது  

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

11215743_1137381322957063_84199449528859

கடந்த தேர்தலில்... மாவையின் வீட்டு வாசலில், குண்டு எறிந்தது போல்... 
அனுதாப வாக்கு பெறுவதற்காகவும், தாங்களே... இப்படி செய்திருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது "உலகத்தமிழர்" கோஸ்டியின் வேலை என நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் பத்திரிகைக்கு இத்தகைய அநாகரீகச் செயலில் இறங்குவது யாரென்று தெரியுமென்றால் அவர்களை அடையாளங்காட்டி முகத்திரையை கிழித்து விடவேண்டும் சும்மா மூடுமந்திரம் மாதிரி ஊகிப்புகளுக்கு விட்டு.......குழப்பங்களையும் சேறடிப்புகளையும் உருவாக்கக்கூடாது..... நேற்று வரைக்கும் நடந்தவை நேற்றோடு போகட்டும் இனியாவது தவறு செய்பவர்கள் சமூகத்தின் மத்தியில் அடையாளப்படுததப்படவேண்டும் அது எந்த கொம்பர்களாக இருந்தாலும் மக்கள் முன் அடையாளங்காட்டப்படட்டும். கடந்த காலங்களில் இனத்தின் நன்மைகருதி சிலரின் அடாவடித்தனங்களை கண்டும் காணாமலும் விட்டதன் பாதிப்பை இன்று தமிழ்சமூகம் முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இனியாவது ஹரி மட்டுமல்ல வேறு யாருக்கும் கூட இப்படி நடப்பின் அது அநுதாப ஓட்டுக்காகவோ அல்லது ஹரியைப் போன்றவர்களை தோற்கடிப்பதற்காகவோ செயற்படுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் அடையாளம் காட்டப்படவேண்டும். யாராக இருந்தாலும் பண்போடு போட்டியிடுவதும் பண்போடு எதிர்ப்பதும் தமிழர் நாகரீகமாக இருக்கட்டும் தகவல்களை எழுதும் ஊடகங்கள் சும்மா ஊகிப்புக்களுக்காக ஊக்கிகளை போடாமல் சமூகப் பொறுப்புடன் உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக எழுதவேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் கூட

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஜீன் வழி வந்தவை. கனடா வரை அதன் குணம் பரவி இருப்பது ஆச்சரியமே இல்லை. இவைக்கு விளம்பரம் எதுவும் தேவையில்லை.. நாலு பனரை கட்டி அறுத்துப் போட்டுவிட்டாலே போதும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இங்கு அண்மைக்காலமாக இரண்டு வகை வாக்கு வேட்டைகளை தமிழர் தரப்புகள் கைக்கொள்கின்றன அவையாவன

1. தன்னுடைய தேர்தல் பதாதைகளை தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்டு நடு இரவில் சேதப்படுத்திவிட்டு அடுத்த நாள் ஊடகங்களுக்கு முன்னால் நின்று குய்யோ முறையோ என்று முறையிட்டு அநுதாபத்தைப் பெற எத்தனிப்பது

2. எதிராளியின் தேர்தல் பிரச்சாரப்பதாதைகளை சிதைத்து பிரச்சார வேகத்தைக் கட்டுப்படுத்தும் முட்டாள்தனத்தை மேற்கொள்வது

 

ஆக தமிழகத்து தேர்தல் வியாபாரம்போல் இன்னும் சில காலங்களில் கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிலை மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இப்போதே அதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. அத்தோடு ஒருவரை வீழ்த்துவதற்கும், ஏற்றுவதற்கும் பிரபல குழுமம் அப்பட்டமாக செயற்படுவது  யாவரும் அறிந்த ஒன்று. இதற்குமேல் இவ்விடயம் தொடர்பாக எழுத ஒன்றும் இல்லை.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் அக்கா சொல்லி இருக்கம்.. ஜீனில வந்தது என்று. சங்கரியின் அரசியல் பூச்சியமானது உந்த ஜீனால தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் அக்கா சொல்லி இருக்கம்.. ஜீனில வந்தது என்று. சங்கரியின் அரசியல் பூச்சியமானது உந்த ஜீனால தான். tw_blush:

அது எப்படி நெடுக்கு இப்படியெல்லாம் சட்டென்று இலண்டனில் இருந்தபடி இதுவாகத்தான் இருக்கும் என்று அடித்துச் சொல்கிறீர்கள். ஊகிப்புகள் நிஜங்கள் ஆகாது. சில சமயங்களில் நிஜங்களையும் ஊகிப்புகள் அழித்துவிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இங்கு அண்மைக்காலமாக இரண்டு வகை வாக்கு வேட்டைகளை தமிழர் தரப்புகள் கைக்கொள்கின்றன அவையாவன

1. தன்னுடைய தேர்தல் பதாதைகளை தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்டு நடு இரவில் சேதப்படுத்திவிட்டு அடுத்த நாள் ஊடகங்களுக்கு முன்னால் நின்று குய்யோ முறையோ என்று முறையிட்டு அநுதாபத்தைப் பெற எத்தனிப்பது

2. எதிராளியின் தேர்தல் பிரச்சாரப்பதாதைகளை சிதைத்து பிரச்சார வேகத்தைக் கட்டுப்படுத்தும் முட்டாள்தனத்தை மேற்கொள்வது

 

ஆக தமிழகத்து தேர்தல் வியாபாரம்போல் இன்னும் சில காலங்களில் கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிலை மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இப்போதே அதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. அத்தோடு ஒருவரை வீழ்த்துவதற்கும், ஏற்றுவதற்கும் பிரபல குழுமம் அப்பட்டமாக செயற்படுவது  யாவரும் அறிந்த ஒன்று. இதற்குமேல் இவ்விடயம் தொடர்பாக எழுத ஒன்றும் இல்லை.

எதற்காக தமிழ்நாடு....?

இந்தமுறை தேர்தலில் எமது தாயகத்திலும் எல்லாம் நடந்தது தானே...?

இறுதியாக குண்டுவீச்சுவரை...

அதன் தொடர்ச்சி  என்றும் சொல்லலாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

11942294_1137381329623729_42588620458571

12002873_1137381196290409_53980733441395

 

பேயளுக்கு கழிப்பு கழிச்சு பூசணிக்காய் வெட்டுற இடத்திலை அவையின்ரை இதையும் தாட்டு.......  தாங்களே மொட்டைக்கத்தியாலை நாலாய் கிழிச்சுப்போட்டு......:grin:

தேர்தல் பதாகையாம்....பிரச்சார பதாகையாம்..இதுக்கை கோடூர சம்பவங்கள் எண்டு கொமன்ட் வேறை...

ஐயோ ஐயோ tw_glasses:

  • தொடங்கியவர்

இது "உலகத்தமிழர்" கோஸ்டியின் வேலை என நினைக்கின்றேன்!

விபரம் அறிய முக நூலை அழுத்தி அங்கு சென்று பார்வையிடுங்கள்.ஹரி வெல்வது ஏற்கனவே உறுதியான விடயம்.புதிய ஜன நாயக கட்சி வேட்பாளர் மற்றும் கன்சவேட்டிவ் வேட்பாளர் சிறு நீர் கழித்த காணொளி ஆகியன அமோக வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

புளூ பேர்ட், கரி சங்கரியோ வேறு எவரோ கனடாவில் ஒரு தொகுதியில் வென்று (புலத்தில்) எமக்கு ஏதும் ஆகிவிடப் போவதில்லை! தமது தொகுதிக்கும் அங்கு வாழும் சகல இனமக்களுக்கும் பாகுபாடு இன்றி "கனேடியன்" என்ற பொது உணர்வுடன் செயற்படும் வேட்பாளரையே தெரிவு செய்யவேண்டும்.  இனம் சார்ந்து சிந்தித்து வாக்களிப்பதால் பயன் ஏதும் இல்லை. ஆனால் கடந்த லிபரல் வேட்பாளர் தெரிவில் "உலகத் தமிழர் கோஸ்டி" கரி சங்கரிக்கு எதிராக கீழ்த்தரமான விசமத்தனமான பிரசாரத்தினை வீடுவீடாகப் படியேறிச் செய்தது. ஆனால் எல்லா இன மக்களின் பெருவாரியான வாக்குகளும் கரி சங்கரிக்கே வழங்கப்பட்டது.  இது கனடாவுக்கான தேர்தல் மட்டுமே!

  • தொடங்கியவர்

புளூ பேர்ட், கரி சங்கரியோ வேறு எவரோ கனடாவில் ஒரு தொகுதியில் வென்று (புலத்தில்) எமக்கு ஏதும் ஆகிவிடப் போவதில்லை! தமது தொகுதிக்கும் அங்கு வாழும் சகல இனமக்களுக்கும் பாகுபாடு இன்றி "கனேடியன்" என்ற பொது உணர்வுடன் செயற்படும் வேட்பாளரையே தெரிவு செய்யவேண்டும்.  இனம் சார்ந்து சிந்தித்து வாக்களிப்பதால் பயன் ஏதும் இல்லை. ஆனால் கடந்த லிபரல் வேட்பாளர் தெரிவில் "உலகத் தமிழர் கோஸ்டி" கரி சங்கரிக்கு எதிராக கீழ்த்தரமான விசமத்தனமான பிரசாரத்தினை வீடுவீடாகப் படியேறிச் செய்தது. ஆனால் எல்லா இன மக்களின் பெருவாரியான வாக்குகளும் கரி சங்கரிக்கே வழங்கப்பட்டது.  இது கனடாவுக்கான தேர்தல் மட்டுமே!

அது தான் முக நூலில் பார்க்கச் சொன்னேன்.அங்கு எல்லா விபரமும் உண்டு.அவற்றை இங்கு இணைக்க விரும்பவில்லை.

 நான் ஒன்றும் புலத்தைப் பற்றிக் கூறவில்லையே?

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.