Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே புலிகள் பயங்கரவாதிகள் என்று பச்சை குத்தியாச்சே ......
புலிகளை பட்டியலில் போட்டார்களாம் நாங்கள் எடுக்க போராடினோமாம் சரி போராடியதால் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டார்களா ....?
இன்றும் அவர்கள் பயங்கர வாதிகள் தான் .....

சரி விடயத்திற்கு வருகிறேன் நான் புலிகளின் ஆதரவாளன் தான் ..அதற்காக புலிகள் தவறு செய்யவில்லை என்று நான் சொல்ல மாட்டேன் 
அதை மறைக்கவும் முன் வரமாட்டேன் .....மேலே நீங்கள் கூறியவற்றை விட கொடூரமான கதைகள் பலவற்றை நானும் கேட்டுள்ளேன் (எல்லாம் இறுதியுத்தத்தில் தப்பிய போராளிகள் சொன்னது)....ஆனால் அதை விட கொடூரமானது எமது மக்களுக்கு சிங்களம் செய்தது (காரணம் அவர்கள் நடத்தியது மனிதாபிமான யுத்தம் -அவர்களது  மனிதாபிமான யுத்தம் என்பதே இப்படியென்றால் ....)

அதுக்குள்ள இங்கே யாரோ சிங்களவனுகளுடன் வேலை செய்தது ...சனல் 4 சிங்களவன் தயாரிச்சது எல்லாம் சரி
ஒரு இரண்டு சிங்களவன் ஆம் தமிழனுக்கு அநியாயம் நடந்துள்ளது என்றவுடன் எல்லாம் சரி அப்படியா
2009 இன் பின் நீங்கள் யாராவது சிங்களவனுடன் வேலை செயத்திருக்கிரீர்களா ......சிங்களவனை பற்றி இங்கே வகுப்பெடுக்காதீர்கள்
 
சரி புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு கொடுப்பீர்கள் ...புலிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் (புலிகளுக்கு ஏற்க்கனவே கொடுத்தாகிவிட்டது-இனி கொடுப்பதென்றால் தோண்டிஎடுத்துதான் கொடுக்கவேண்டும்)......தீர்வு கொடுக்கும் போது புலிகளை காரணம் காட்டி 
போரை காரணம் காட்டி அசைலம் அடிச்சவர்கள் எல்லாம் இங்க வர வேண்டும் ....போரில் புலிகளின் பங்கும் உண்டு எனவே நீங்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒருவகையில் புலிகளால் பாதிக்கப்பட்டவர் ..ஆகவே எல்லோருக்கும் (எப்படி உள்நாட்டு விசாரணை ஆரம்பித்து தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படுகிறதோ அப்படி  ) பாரபட்ச்சமற்ற முறையில் இலங்கை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தீர்வு வழங்கப்படும் .....வெளிநாட்டில அசைலம் அடிப்பது சர்வதேச தீர்வு அது சர்வதேச விசாரணைக்கு ஒப்பானதாகும் எனவே அதை வழங்க முடியாது

என்ன ஜஸ்டின் அண்ணை தீர்வு குடுத்திடுவமா ......புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இங்கே வந்து தீர்வு பெற்றுக்கொண்டு செட்டில் ஆக ரெடியா.....?நீங்க ரெடி என்றால் நாங்களும் ரெடி   

  • Replies 168
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்கிறது மருதர்! இதையெல்லாம் சுப்பண்ணையின் தனிப் பட்ட பிரச்சினைகளாகப் பார்க்காமல் விட்டால் நான் தமிழன் இல்லை, அப்படியா? சரி நான் இனித் தமிழன் இல்லை. அதனால் தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன்!

எதை எழுதினாலும் ...... அதை அப்படியே விட்டுவிட்டு 
உங்கள் திணிப்பை திணிக்கவேண்டும் என்றே நிற்கிறீர்கள்.
சுப்பன்ன்னையின் கணிக்குள் குண்டு வீழ்ந்தது 
சுப்பனையின் தனிபட்ட பிரச்சனை இல்லை .... அப்படி நான் எழுதாத ஒன்றை 
நான் எழுதியதுபோல் பதில் தருகிறீர்கள்.

சுப்பண்ணை யின் காணிக்குள் குண்டு வீழ்ந்ததற்கு 
இனபிரச்ச்னைதான் காரணம்.

எனது ஆரம்ப கருத்தே ஏன் இடையில் இருந்து தொடங்குகிறீர்கள் ? என்பதுதான் 
இதற்கு ஒரு பதிலை ஏன் இன்னமும் நீங்கள் வைக்கவில்லை?
உங்கள் திணிப்பை திணிக்க முடியாது போய்விடும் என்பதாலா ?

1983 இன கலவரமே புலிகளால்தான் உருவானது 
திருநெல்வேலியில் 13 இராணுவத்திற்கு குண்டுவைத்த காரணத்தால் ...
கொழும்பில் எத்தனை தமிழர்கள் இறந்துபோனார்கள் 
எல்லோரும் யாழுக்கு கப்பல் ஏறி கோலிடே கொண்டாடவா வந்தார்கள் ?
அவர்கள் வலி இழப்புகள் துன்பங்கள் துயரங்கள் இல்லையா ?

புலிகள் ஆயுதபோரை இராணுவத்திற்கு குண்டுவைக்காமல் செய்திருக்க வேண்டும் என்று 
எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

புலிகள் பிழை என்று சொல்லுங்கள் ஒத்துகொள்கிறேன் என்று 
இங்கு பல தடவை எழுதியாச்சு 
முள்ளிவாய்க்கால் திட்டமிட்ட இன அழிப்பின் இன்னொரு பக்கம் 
அதை இவ்வாறுதான் எதிர்கொள்ள முடியும். 

உங்களுடைய மழுப்பல்களை ஏற்றுகொள்ள முடியாது.
ஆயுத போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து எதோ ஒரு தமிழ் வீடு 
எரிந்துகொண்டுதான் இருந்தது 
ஏன் முள்ளி வாய்காலில் நின்று குத்துகரணம் அடிக்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

கடைசித் தகவல் பிழையாக இருப்பதற்கு வருந்துகிறேன்.

முதல் பகுதிக்கு வருகிறேன். நான் எதிர்பார்த்த விடயம் எதுவெனில் நீதி நியாயம் என்று பேசும் போது அதை சம அளவில் பிரயோகிப்பீர்களா என்பதை அறியவே. ஆனால் அப்படிச் செய்ய முடியாது என்பதை நீங்களும் அறிவீர்கள்.. நானும் அறிவேன்.

விதிவிலக்குகள் குறித்துப் பேசியிருந்தீர்கள். அவ்வளவெல்லாம் தேவையில்லை. உயிர்போகக்கூடிய ஒரு இடத்திற்கு ஒருவரை பயிற்சி கொடுத்து அனுப்பினாலும், அனுப்பாவிட்டாலும் போகும் உயிர் போய்த்தான் ஆகும். நாடுகள் அளவில் இதனைச் செய்யும்போது அதற்கு சாக்குகளும், வாதங்களும் செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம் என்கிற விடயத்துக்கு வரவே அந்த விடயத்தை எழுதவேண்டி வந்தது.

கனக்க தேவையில்லை இசை அண்ணை 
USSR's Battle of Stalingrad ஒன்றே போதும் ....இதே போன்றே குறுகிய கால பயிற்சியுடன் அனுப்பப்பட்டார்கள் ...கூறப்பட்டது ஒன்று முன்னேறவேண்டும் .
அடி தாங்காமல் ஓடி வந்தவர்கள் அவர்களது அதிகாரிகளாலே சுடப்பட்டார்கள் 1,129,619 பேர் காவு வாங்கப்பட்டு வெல்லப்பட்ட யுத்தம் (இறந்த சாதாரண சிவிலியன்களின் எண்ணிக்கை  கணக்கெடுக்க முடியாத அளவு )...இறுதியில் வென்றதால் யாரும் நியாயம் கேட்கவில்லை .....அதற்கென்ன எங்கடை சிங்கங்களை இறக்குவோம் ....ரசியா செய்த இந்த அநீதிக்கு யார் பதிலளிப்பது
பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் தீர்வு கொடுப்பது  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள இசை, வளர்ந்த நாடுகளில் இருக்கும் draft ஐயும் புலிகள் இறுதி நாட்களில் ஆட்களைக் கட்டாயமாகப் பிடித்து முன்னணியில் விட்டதையும் பலர் ஒப்பிட்டாகி விட்டது! அமெரிக்காவில் இருந்தது என்றோரும், பிரான்சில் என் மகன் கூட கட்டாயமாக பயிற்சி பெற்றான் என்றோரும் இப்படி பலர் வந்து சொல்லி விட்டுப் போனாலும் அவர்களின் கூகிள் தேடல் அறிவில் conscientious objectors  என்றால் என்ன என்பதும், எவ்வாறு விதிவிலக்குகள் இலகுவாக அளிக்கப் படுகின்றன என்பதும் பதியவில்லை. மேலும் cannon fodder ஆக இல்லாமல் முறையான பயிற்சியும் ஆயுதமும் கொடுத்துத்தான் நாடுகள் கட்டாய சேவையில் இருப்போரை அனுப்புகின்றன என்பதும் அவர்களின் அறிவுக்கு எட்டாத விடயம். இந்தப் பலத்த வேறு பாடுகள் உங்களுக்கும் புரியாமல் போனது விந்தை! 

(கொசுறு: மேலும் நீங்கள் கேள்விப்பட்ட போப்புக்கு பால்ய வயது மாணவன் அச்சுறுத்தல் விடுத்த விடயம் உண்மை தான்: இதோ இணைப்பு:  http://www.cbsnews.com/news/pope-francis-threat-arrest-secret-service-new-jersey/ இது கடிகாரம் கொண்டு வந்த மாணவன் அல்ல!). 

ஒரு மனித குழுமத்திடம் என்ன சக்தி இருக்கிறதோ 
அதை வைத்தே அவர்கள் வாழ்வாதாரம் அமையும்.
25 வருடம் பொருளாதார தடைக்குள் இருந்துகொண்டு 
ஒரு பாரிய இனப்போருக்கு முகம் கொடுத்துக்கொண்டு 
எந்த நாட்டின் தயவும் இல்லாது 
ஒரு சிறு தீவில் சிக்கிய இனத்தை 

உலக நவீன நாடுகளுடன் ஒப்பிடும் உங்களின் அறிவை 
பற்றி யார் கேள்விகள் கேட்பது ? 

2007இல் போர் திணிக்கபடாது போயிருந்தால் ...
இப்போ இப்படிதான் அங்கும் இருந்திருக்கும்.

வரி வீதத்தை அந்த அந்த நாட்டு பட்ஜெட்டை பொறுத்து 
நாடுகள் வகுத்து கொள்கின்றன 
விட்டால் அமெரிக்காவில் வெறும் 7 வீதம் 
ஜெர்மனியில் ஏன் 13 வீதம் என்று கேட்பீர்கள் போல் இருக்கிறதே ?

அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பேசுகிறார் இராணுவத்திற்கு 
ஆண்களை வெட்டி கடலில் வீசுங்கள் 
பெண்கள் உங்களுக்கு என்று 
இனபோரின் முடிவு எது என்று யாருக்கும் தெரியாத நிலையில் ....
அதை எதிர் கொள்ளவேண்டிய கட்டாயம் 
புலிகள் மீது வீழ்கிறது 
அவர்கள் இருப்பதை வைத்துதான் அதை கடக்க முடியும்.

எல்லாம் முடிய எகத்தாளம் பேசுவது 
பொழுதுபோக்கு ......

இப்போ கட்டாய ஆட்சேர்ப்பு தப்பில்லை 
பயிற்சி போதாது என்று இறங்கி இருக்கிறீர்கள் ......

இன்னமும் ஒருபடிதான் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு கொடுக்கும் போது புலிகளை காரணம் காட்டி 
போரை காரணம் காட்டி அசைலம் அடிச்சவர்கள் எல்லாம் இங்க வர வேண்டும் ....போரில் புலிகளின் பங்கும் உண்டு எனவே நீங்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒருவகையில் புலிகளால் பாதிக்கப்பட்டவர் ..ஆகவே எல்லோருக்கும் (எப்படி உள்நாட்டு விசாரணை ஆரம்பித்து தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படுகிறதோ அப்படி  ) பாரபட்ச்சமற்ற முறையில் இலங்கை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தீர்வு வழங்கப்படும் .....வெளிநாட்டில அசைலம் அடிப்பது சர்வதேச தீர்வு அது சர்வதேச விசாரணைக்கு ஒப்பானதாகும் எனவே அதை வழங்க முடியாது

அக்கினி, 

இதை நான் முழுமையாய் வரவேற்கிறேன்.

ஆனால் அசைலம் அடியாத ஆக்களை சொறிலங்காவுக்கு கூப்பிடக் கூடாது. ஓகேயா? :)

அதெப்பிடி நீங்களெலாம் நழுவுறது ...தீர்வுக்காக உழைத்தால்மட்டும் போதுமா யார் நடைமுறைப்படுத்துவது ....மேற்பார்வை செய்வது  .....நீங்களெல்லாம் Professional Migration , H1B,H1B1 ,Skilled Migration செய்த பார்ட்டிகள் எல்லாவற்றுக்கும் மேல் நடுநிலையாளர்கள் 
நாட்டிற்கு வந்து தீர்வு ஒழுங்காக நடைமுறைப்படுத்த படுகிறதா ..... எல்லோருக்கும் பாரபட்சமற்ற விதத்தில் வழங்கப்படுகிறதா என்று மேற்பார்வை செய்யவேண்டும் ....பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்ற வகையில் தீர்வை வரையறுக்கவேண்டும் இதையெல்லாம் கொள்ளளவு கூடினவங்கள் தான் செய்யவேணும் ...இதெல்லாம் அங்கன இருந்துகொண்டு செய்ய முடியாது ...

12043038_1038987996111321_86350144732803

அசைலம் அடித்த ஆக்கள் நினைத்தாலும் போக முடியாது! இரட்டைக் குடியுரிமை கிடைக்காது, வெளிநாட்டுக் குடியுரிமையைக் கைவிட்டால் பல லட்சம் கட்டி வழக்குப் போட்டுத் தான் சிறி லங்காக் குடியுரிமை எடுக்க வேண்டும். அவர்கள் இங்கயே இருந்து தீர்வை மேற்பார்வை செய்ய வேண்டியான்  (இப்ப இங்க இருந்து புலிகள் ஆள் பிடிச்சது நோர்மலா நடக்கிறது தானே? எண்டு மேற்பார்வை செய்யுற கணக்கா!:cool:) .நீங்கள்மேலே சொன்ன விசாக்காரர் தான் தீர்வு வந்த பின்னர் மட்டுமல்ல, இப்பவே போய் நிக்கீனம் சனத்தோட. யாழ் கள சபேசனை நினைவிருக்கா உங்களுக்கு? ஆகவே இந்த சவால் சவடால் எல்லாம் போய் அசைலம் அடிச்ச பின்னர் தேசியத் தூண்களாக மாறி விட்ட ஆட்களுக்கு விடுங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்

12043038_1038987996111321_86350144732803

இதெல்லாம் அவர்களுக்கு முதலே தெரியும்! இப்ப அவர்களின் வாதம் "செய்தது சரி தான், சர்வ தேச ஸ்ராண்டர்ட்டில செய்திருக்கிறார்கள், என்ன பிழை?" என்று தான் இருக்கு. கேள்வி என்னவெண்டால் இந்த அங்கீகரிக்கப் பட்ட ஆட்சேர்ப்பு நடந்த போது இங்க இருந்து இவர்களில் ஒருவர் கூட தமது வளர்ந்த குழந்தைளை அழைத்துக் கொண்டு போய் ஆட்சேர்ப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தான்! :"எனக்கு மலேரியா நோயெதிர்ப்பு இல்லை, வன்னியில போய் நான் நோய் வாய்ப்பட்டால் அது புலிகளுக்கு மேலதிக சுமையாக இருந்திருக்கும்! அதனால் நான் tactical ஆக போகாமல் விட்டேன்!"  என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆட்கள் யாராவது வந்து சொல்லக் கூடும்!. பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,
இந்த உரையாடல் எமக்குள் மிக அவசியமானதொன்று.
கருத்துக்கள் ஒவ்வொன்றையும் நான் ஆழமாக வாசிக்கின்றேன், உங்களையும் புரிந்து கொள்கின்றேன்.
எனது தம்பி, எனது சகோதரன் யுத்ததின் இறுதி நாட்களில் புலிகளால் பலவந்த மாக பிடிக்கப்பட்டு ராணுவ பயிட்சிகள் எதுவுமே இன்றி போரின் முன் அரங்கதுக்கு நகர்த்தப்பட்டு அநியாயமாக காவு கொடுக்கப்பட்டிருந்தால்  ??? ஒரு சராசரி மனிதனாக, இழந்தவனின் உறவாக என்னுடைய விமர்சனம் கூட புலிகளின் மேல் இருந்திருக்கும். மறுப்பதற்கில்லை.

இவை ஏற்கனவே ஆனையிறவு சமரில் (நான்) / நம் மக்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் தான்.

யுத்தத்தின் இறுதி கட்டம் மிகவும் கொடுமையானதாக எல்லாப் பக்கத்திலும் உணரப்பட்டிருக்கின்றது.
30 வருட வீரிய போராட்டம், பலத்த எதிர் பார்ப்புகள், கட்டமைப்புக்கள், ராணுவ தளபாடங்கள், போராளிகள், தியாகங்கள், சத்தியங்கள், நிழலாய், கவசமாய் கூடவே வந்த மக்கள் இவை அனைத்தும் பொடிப் பொடியாய் கண்முன்னே தகர்ந்து போன கோரமான நிமிடங்கள்..  கையறு நிலை...
கடைசியில் சரணடையும் முயற்சியும் குரூரமான முடிவைதர....அந்த ஒரு சூழ்நிலையில் ஒரு மனிதனாக பலவித உளவியல் தாக்கங்கள் ஏற்பட, கட்டளைகள் யார் யாரோ மூலம் பிறப்பிக்கப்பட பல தவறுகள் நிகழ்த் தப்படிருக்கின்றது. அப்படி தவறுகளை புரிந்தவர்கள் கூட எம்மத்தியில் இல்லை.

அவர்கள் கூட உயிருடன் பிடிக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, மண்டியிட வைக்கப்பட்டு, கொடூரங்கள் செய்யப்பட்டு, துப்பாகியால் சிதைக்கப்படுகிரார்கள். மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.

இவ்வளவு செய்து 6 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழனே உனக்கு ஒரு பிரச்சினையும் இந்த நாட்டில் இல்லை. உனக்கு தேவையானது வெறும் தொழிலும், கார்ப்பட் பாதையும் தான், என்ற ரீதியில் கதை விடுகிறார்கள். எனக்கு இவர்கள் தான் முதல் எதிரி...

வன்முறையில் சுழன்று கொண்டிருந்த டக்ளஸ், சித்தார்த்தன், விமல் வீரவன்ச, மற்றும் பலர் 
ராணுவ உயர் மரியாதையின் போது ராஜீவ் காந்தியை தலையில் அடித்த விஜித ரோகன விஜேமுனி 
மலையகத்தில் பல கொலை, பாலியல் வல்லுறவுகழுக்கு காரணமான டி.எம். ஜெயரட்ன (முன்னாள் பிரதம மந்திரி) ..., சித்திர வதைகளின் சிகரம் உடுகம்பொல .. இவர்கள் எல்லாம் இன்று அரச மரியாதையோடு அரசியல், சொகுசு வாழ்க்கை வாழுகிறார்கள்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் அரசியல் கொலை நிகழ்த்தியது ஒரு பௌத்த பிக்கு. புலிகள் அல்ல !!

நாம் இன்னும் கூட ஒரு வட்டத்திற்குள் உழன்று கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றுகின்றது.
 
நிழலி சொன்னதை போல ஜே வீ பீ காலத்தில் நடந்த கொடூரங்களுக்கு மக்கள் இன்றும் ராணுவத்தின் கொடுமைகளை நிச்சியம் பட்டியல் போடுவார்கள், ஏன் என்றால் அது உண்மை!!
அவர்கள் ஒன்றும் ஜே.வீ.பி அநீதி இளைத்ததை போல் கதைத்து திரிவதாக நான் அறியேன்.
இதே மக்கள் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அறிவார்களா? 90 வீதமான சிங்களவர்களுக்கு இலங்கை இராணுவம் போர் விமானங்களை பாவித்து குண்டு எரிந்து மக்களை கொன்றழித்தது 10 வருடங்களுக்கு பிறகே தெரிந்திருக்கும்.

அர்ஜுன் சொன்னது போல உண்மை தான் ராணுவம் செய்த மூர்க்கமான வீடியோ காட்சிகள் எமக்கு கிடைத்தது கூட சிங்களவர்களிடம் இருந்து தான், அவற்றில் பெரும் பாதி ஒரு விலையுடன் பேரம் பேசப்பட்டு பெறப்பட்ட ஆவணங்கள் என்றே நான் அறிகிறேன். இன்னும் கூட பல சாட்சியங்கள் அவர்கள் மத்தியில் இருகின்றன, பேரம் பேசி விலை கொடுப்பதற்கு தான் எமக்கு சக்தி இல்லை.

இன்றும் கூட அவர்கள் அடம்பன் கொடி போல திரண்டு நின்று  அட்டூழியம் செய்த ராணுவத்தை காப்பாற்றவே துடிகிறார்கள். ஒரு ராணுவ அதிகாரியை அவர்கள் தண்டிக்க முன் வரட்டும் பிறகு பாருங்கள் பெரும்பான்மை மக்களின் இனத்துவேசத்தின் அளவுகோலை.

தகுந்த நேரத்தில் தகுந்த விமர்சனம் வைக்கபடவேனும் என்பதே எனது ஆதங்கம்.
இங்கு இனிமேல் மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
புலிகள் செய்த சில தவறுகளை அவர்கள் அப்போ அப்போ சிறு வழிகளில் பிராயாசித்தமும் தேடினார்கள்.
முஸ்லீம் மக்களின் இடப்பெயற்சி, ராஜீவ் கொலை, இவை பற்றி உரையாடினார்கள்.
இன்று அவர் தலைமைகள் எம்மத்தியில் இருந்திருந்தால் இவை விவாதிக்கப்பட்டு, உரியவர்களுக்கு தண்டனைகள் கூட வழங்கப்படிருக்கலாம். யார் அறிவார்கள்!!!
   
புலிகள் போராட்டமும் செய்தார்கள்; தவறும்  செய்தார்கள் ...ஈற்றில் மடிந்தும் போனார்கள். அது வரலாறு.
அவர்கள் நிகழ்த்திய போராட்டம் இன்று எம்மை ஒரு சர்வதேச அரங்கில் ஞாயம் கேட்க வைத்திருக்கிறது.
அதனை செம்மையாக செய்வோம் !!!!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:
என்ற தலையங்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட திரி ...
புலிகளின் பயங்கரவாத, கொடூர செயல்களை ஆவணப்படுத்தும் திரியாக மாற்றம் கண்டுள்ளது.
இன்னும் பல நூறு ஆவணங்கள் கை வசம் வைத்து இருப்பார்கள் இனி வரிசையாக இங்கே கொண்டு வந்து பதியலாம், பின்னூட்டம் இடலாம்.

உங்கள் நோக்கங்கள் சிறப்பாக சித்தரிக்கபடுகின்றன. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அசைலம் அடித்த ஆக்கள் நினைத்தாலும் போக முடியாது! இரட்டைக் குடியுரிமை கிடைக்காது, வெளிநாட்டுக் குடியுரிமையைக் கைவிட்டால் பல லட்சம் கட்டி வழக்குப் போட்டுத் தான் சிறி லங்காக் குடியுரிமை எடுக்க வேண்டும். அவர்கள் இங்கயே இருந்து தீர்வை மேற்பார்வை செய்ய வேண்டியான்  (இப்ப இங்க இருந்து புலிகள் ஆள் பிடிச்சது நோர்மலா நடக்கிறது தானே? எண்டு மேற்பார்வை செய்யுற கணக்கா!:cool:) .நீங்கள்மேலே சொன்ன விசாக்காரர் தான் தீர்வு வந்த பின்னர் மட்டுமல்ல, இப்பவே போய் நிக்கீனம் சனத்தோட. யாழ் கள சபேசனை நினைவிருக்கா உங்களுக்கு? ஆகவே இந்த சவால் சவடால் எல்லாம் போய் அசைலம் அடிச்ச பின்னர் தேசியத் தூண்களாக மாறி விட்ட ஆட்களுக்கு விடுங்கோ! 

அதுதானே பார்த்தேன் ....அடி மடியில் கை வைத்தவுடன் பார்டி எல்லாம் நழுவுது ....பொறுப்பை கொடுத்தால்  எடுக்க முடியாது ..ஆனால் தீர்வு  கேட்கிறார்கள்  அதுவும் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ....ஜஸ்டின் அண்ணை உங்களை மாதிரித்தான் எனக்கும் நடுநிலைவாதி என்ற பெயரில் தமிழர்களை மட்டும் குத்தும் கனவான்களை கண்ணிலே காட்ட முடியாது ...வித்தியா கொலை மட்டும் சபை ஏறியது போல 
....இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் சிங்களவன் நேரடி எதிரி அவர்களை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று ......முதல் உங்கள் நேரடி எதிரிக்கெதிராக நீங்கள் சாதித்ததென்ன .....? முதல் சிங்களவனால்  பாதிக்கப்பட்ட சனத்திற்கு தீர்வை பெற்று கொடுங்கள் பிறகு புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் தீர்வை தேடவேண்டிய அவசியமில்லை ...மக்களே வழங்குவார்கள் .....அல்லது உங்கள் தீர்வு யாழில் போடும் comments இல் மட்டும் மட்டும்தானா .....நேரடியாக கேட்கிறேன் ........தீர்வை பற்றி கதைக்கும் உங்களில் எத்தனை பேர் அதற்கான பொறுப்பை எடுக்க தயார் ......?

  • கருத்துக்கள உறவுகள்

சசி வர்ணம், நீங்கள் ஒரு profuse apologist ! எனக்கு உங்கள் போன்ற நிலைப்பாடுடையோரோடு விவாதம் இல்லை! இவ்விவாதத்தில் நான் தீவிரமாக  இருப்பதற்குக் காரணம், புலி எதிர்ப்பு அல்ல! புலிகளின் திகைப்பூட்டும் குற்றங்களை 2009 இலேயே பெரும்பாலான தமிழர்கள் போல நானும் அறிந்திருந்தேன். ஆனால் பகிரங்கமாக யாருடனும் விவாதித்ததில்லை! இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை ஏறி மிதிக்கிற கணக்காக சிலர் அந்தக் குற்றங்களை நியாயப் படுத்தும் போது கொஞ்சம் உணர்வையும் கலந்து பதில் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்யும் போது சுவாரசியமான பாதைகளில் இந்த விவாதம் செல்வதைப் பாருங்கள்:

1. முதலில் புலிகளின் குற்றங்களைச் சுட்டிக் காட்டினால் சிறிலங்காவுக்கு ஆதரவு என்றார்கள் (இது எப்படி என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை!யாழைச் சிங்களவர்கள் பார்த்து ஆதாரம் சேர்க்கிறார்கள் என்பது மிகை!).

2. சும்மா கத்தாமல் பட்டியலிடு என்றார்கள்: பட்டியலிட்டேன்: "அட இதெல்லாம் எங்களுக்கு முதலே தெரியுமே?" என்றார்கள்.

3. மருதர் இன்னொரு படி மேலே போய்,இப்படித் தனிமனிதர்களுக்கு நடந்தவை புலிகளின் குற்றமல்ல என்கிறார்! இதன் அர்த்தமும் எனக்கு விளங்கவில்லை! ஒரு சமூகத்தின் துன்பம் என்பது மனித முகம் கொண்டது! அந்த மனிதனின் முகத்தைக் காட்டினால் அது சமூகப் பிரச்சினை இல்லை, தனிப் பிரச்சினை என்கிறார்கள்! அப்ப ரஜிகர் மனோகரனுக்கு நடந்ததும் பாரிய போரின் சின்ன ஒரு விளைவு என்று விட்டு விடலாமாஇல்லை என்பது என் கருத்து. விட்டு விடலாம் என்பது மருதரின் கருத்து!    

4. சிக்கலாக யோசித்துக் குத்தி முறிந்து ஒரு குற்றத்தை நியாயப் படுத்துகிறார்கள். "சிதறி ஓட வேண்டும் என்று சிங்களவன் குண்டு போட்டானாம். சிதறாமல் ஒரேயடியாக மக்கள் நகர்வது மக்களுக்குப் பாதுகாப்பு என்று புலிகள் தப்பிப் போக விடாமல் சுட்டார்களாம்! அப்படித் தனியாக்ப் போன ஆட்களின் பெண்களைக் காணவில்லையாம்-ஆதலால் புலிகள் தப்பியோரைச் சுட்டது சரி " இப்படி யோசிக்க எனக்கு வருகுதில்லை, நான் ஒரு simpleton!  

5. உச்சமாக இந்த ஆட்சேர்ப்பு: நாடுகளின் ஆட்சேர்ப்பு எவ்வளவு checks and balance ஓட நடக்கிறது என்று நன்கு தெரிந்து கொண்டே தெரியாதோர் போல நடிக்கிறார்கள். எழிலன் உட்பட பல தப்பி வந்த தலைவர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து ஆட்களைப் பிடித்துச் சென்றதை மக்கள் கண்டிருக்கிறார்கள். நான் அவர்களிடமிருந்து கேள்விப் பட்டிருக்கிறேன்.

 சுருக்கமாகச் சொன்னால், "இது நடந்தது தான்! தவறு தான், முடிந்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடோ உதவியோ கொடுப்போம்! குறைந்த பட்சம் இதையெல்லாம் நியாயப் படுத்தி அந்தக் குடும்பங்களின் காயத்தில் அசிட் ஊற்றாமலாவது இருப்போம்என்று முன்வர யாரும் தயாரா இல்லை! இது இந்த stalemate இற்குக் காரணம்!   

அதுதானே பார்த்தேன் ....அடி மடியில் கை வைத்தவுடன் பார்டி எல்லாம் நழுவுது ....பொறுப்பை கொடுத்தால்  எடுக்க முடியாது ..ஆனால் தீர்வு  கேட்கிறார்கள்  அதுவும் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ....ஜஸ்டின் அண்ணை உங்களை மாதிரித்தான் எனக்கும் நடுநிலைவாதி என்ற பெயரில் தமிழர்களை மட்டும் குத்தும் கனவான்களை கண்ணிலே காட்ட முடியாது ...வித்தியா கொலை மட்டும் சபை ஏறியது போல ....இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் சிங்களவன் நேரடி எதிரி அவர்களை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று ......முதல் உங்கள் நேரடி எதிரிக்கெதிராக நீங்கள் சாதித்ததென்ன .....? முதல் சிங்களவனால்  பாதிக்கப்பட்ட சனத்திற்கு தீர்வை பெற்று கொடுங்கள் பிறகு புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் தீர்வை தேடவேண்டிய அவசியமில்லை ...மக்களே வழங்குவார்கள் .....அல்லது உங்கள் தீர்வு யாழில் போடும் comments இல் மட்டும் மட்டும்தானா .....நேரடியாக கேட்கிறேன் ........தீர்வை பற்றி கதைக்கும் உங்களில் எத்தனை பேர் அதற்கான பொறுப்பை எடுக்க தயார் ......?

அக்னி! நீங்கள் அடிமடி என்பது என் பிரஜாவுரிமை நிலை என்றால் எனக்கு அடிமடியில்  கனமும் இல்லை, நான் பதறவும் இல்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன்! எனக்கு காசு கட்டாமலே சிறிலங்காவுக்கு வரவும் முடியும், வேண்டுமானால் இன்னொரு நாட்டுக்குப் போகவும் முடியும் என் சொந்தப் பெயரிலேயே! என் பதிலை வடிவாக வாசியுங்கள்! நழுவவில்லை! என் போன்றோர் தான் வர முடியும் என்று சொல்லியிருக்கிறேன். இதன் அர்த்தம் வருவேன் என்பது தான்! ஆனால், தீர்வுக்கு நானோ புலிகளின் குற்றங்களை வெளிப்படுத்தும் நபர்களோ ஏன் பொறுப்பெடுக்க வேணும்? இன்னும் வெட்டுவோம் புடுங்குவோம் என்று நிற்கும் தேசியத் தூண்கள் தான் பொறுப்பெடுக்க வேணும்! உண்மையில் அவர்கள் அதே பழைய குதிரையில் ஏறி விழுந்து மற்றத் தரப்பிடம் தான் வரப் போகிறார்கள் (சுமந்திரன் தெரிவான பின்னர் அசடு வழிஞ்ச மாதிரி!)   சிங்களவனுக்கெதிராக நான் செய்வதை என் போன்றோர் செய்வதை சேர்டிபிகேற் மாதிரி உங்களிடம் காட்டிக் கையெழுத்து வாங்க வேண்டுமோ? இதையே உங்களிடமும் நான் கேட்கலாம்! பிறகு போய் தனிப் பட்ட தகவல் கோரினான் ஜஸ்ரின் என்று கள விதிகளுக்குப் பின்னால் போய் ஒளிந்து கொள்வீர்கள். அது தானே கடைசி அஸ்திரம் இங்கே?  

சசி ,

உங்கள் சிந்தனை மிக நல்லது ஆனால் மிக மேலோட்டமானது .

புலிகளில் விமர்சனம் வைக்கவேண்டும் அல்லது அவர்களில் பிழை பிடிக்கவேண்டும் என்று எங்களுக்கு என்ன தேவை .

இனத்தின் விடுதலையும் அதற்காக சரியாய போராடவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் .போராடுகின்றார்கள் என்பதற்காக சரி என்று தலையாட்ட முடியாது .இறுதியில் நாம் தோற்றதற்கு அதுதான் காரணம் .  

பிள்ளை வளர்ப்பு மாதிரிதான் இதுவும் ஆரம்பத்திலேயே திருத்த முடியாவிட்டால் பின்னர் எக்காலமும் முடியாது .

சசியின் கவனத்திற்கு .

பலரது  குடும்பத்தில் எவருமே சிங்கள அரசாலோ அல்லது புலிகளாலோ பாதிக்கப்படவில்லை .ஆனால் 

1- இலங்கை அரசின் அடக்குமுறைக்கு  எதிராக ஆயுதபோராட்டத்தில் இணைந்தோம் .(  படித்து நல்லவேலை எடுத்து சீதனத்துடன் பெண் எடுத்திருக்கலாம் )

2-சேர்ந்த இயக்கம் பிழையாக செல்கின்றது என்று உயிரை பணயம் வைத்தே விமர்சனங்களை வைத்தோம் .(அவர்கள் செய்வதை கண்டும் காணாமல் இருந்து மோட்டார் சயிக்கிளில் சுத்தி இருக்க வேண்டும் )

3-புலிகள் பிழையான பாதையில் தொடர்ந்தும் செல்கின்றார்கள் என்று விமர்சனம் வைத்தோம் (ஒரு ஏரியா பொறுப்பாளர் ஆகி நாலு வீடு வாங்கியிருக்கவேண்டும் )

சசி இதில் எதை விரும்புகின்றார் என்று புரியவில்லை அதிலும் முதல் இரண்டும் அவருக்கு தெரிவதே இல்லை மூன்றாவது விடயம் மட்டும் தான் கண்ணை உறுத்துது .

அவருக்கு விளங்காத பக்கம் இதுதான் - நாங்கள் மூன்றாவதை செய்யதேவையில்லை என்றால் முதாலவது இரண்டாவதையும் செய்யாதவர்களாக சிவனே என்று குடும்பம் குட்டியுடன் இருந்திருப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அவர்களுக்கு முதலே தெரியும்! இப்ப அவர்களின் வாதம் "செய்தது சரி தான், சர்வ தேச ஸ்ராண்டர்ட்டில செய்திருக்கிறார்கள், என்ன பிழை?" என்று தான் இருக்கு. கேள்வி என்னவெண்டால் இந்த அங்கீகரிக்கப் பட்ட ஆட்சேர்ப்பு நடந்த போது இங்க இருந்து இவர்களில் ஒருவர் கூட தமது வளர்ந்த குழந்தைளை அழைத்துக் கொண்டு போய் ஆட்சேர்ப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தான்! :"எனக்கு மலேரியா நோயெதிர்ப்பு இல்லை, வன்னியில போய் நான் நோய் வாய்ப்பட்டால் அது புலிகளுக்கு மேலதிக சுமையாக இருந்திருக்கும்! அதனால் நான் tactical ஆக போகாமல் விட்டேன்!"  என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆட்கள் யாராவது வந்து சொல்லக் கூடும்!. பார்க்கலாம்!

நான் அழுக்கனவன் 
என்பதை நிருபிக்க போவதாகவே நீங்கள் மேலே ரதிக்கு எழுதிய பதிலில் வெளிப்படையாகவே எழுதி இருக்கிறீர்கள்.

நன் சுத்தவாளி இல்லை 
நான் சுத்த சுயநலவாதி என்று நானே எழுதியும் இருக்கிறேன்.

உங்களின் மூல வாதப்பொருள் எனக்கு இன்னமும் விளங்கவில்லை.
முடிந்த விடயத்தை மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள். ஒருவேளை கருத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணை ....
புலிகள் செய்தது தவறு/ சரி 

இந்த தளத்தில் இருந்து தொடங்கிய விவாதத்தை 
இப்போ கிட்டததட்ட ஒரு தனி நபர்கள் தாக்குதல் தளமாகவே நீங்கள் நகர்த்துகிறீர்கள். 

நான் மேலேயே ஒரு முறை தெளிவாக எழுதி இருக்கிறேன் கருத்தை எதிர்த்து கருத்தை வையுங்கள் வாதத்தை தொடரலாம் என்று.
தொடர்ந்தும் சிலேடை பேச்சை மட்டுமே தொடர்கிறீர்கள்.

இங்கிருந்து யாரும் போருக்கு போவதற்கும் .
புலிகளின் சரி/தவறிட்கும் ஏதும் சம்மந்தம் உண்டா ?

இந்த கேடு கெட்ட தமிழனுக்காக போராட போயிருந்தால்தான் தப்பு 
என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். 

எனது கருத்துக்கள் எனது தனிபட்ட வாழ்வு பற்றியது அல்ல 
இன சுத்திகரிப்பு போரை விலைமதிக்க முடியாத தியாங்களால் எதிர்கொண்ட புலிகள் பற்றியது.
தயவு செய்து முடிந்தால் தனி நபர் தாக்குதல் தளத்தில் இருந்து மீண்டு 
வாதத்தின் மூல பொருளுக்கு வாருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

12043038_1038987996111321_86350144732803

நீங்கள் இங்கு போட்டுள்ள பத்திரத்தில் சிவப்பு எழுத்தில் நீங்கள் போட்டதைத்தவிர

மற்றவை சட்டங்களுக்கு அமையத்தானே இருக்கிறது.

அப்படி இல்லை புலிகள் இவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு அனுமதியில்லையென்றால்

ஒரு போராட்ட இயக்கம் தனது மக்களிடமிருந்து படைக்கு ஆட்களைச்சேர்ப்பதற்கு எவ்வாறு முயலணும்??

நீங்கள் 80 களில் எவ்வாறு உங்கள் இயக்கத்துக்கு ஆட்களைத்திரட்டினீர்கள்??

உண்மையில் அறிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சசி ,

உங்கள் சிந்தனை மிக நல்லது ஆனால் மிக மேலோட்டமானது .

புலிகளில் விமர்சனம் வைக்கவேண்டும் அல்லது அவர்களில் பிழை பிடிக்கவேண்டும் என்று எங்களுக்கு என்ன தேவை .

இனத்தின் விடுதலையும் அதற்காக சரியாய போராடவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் .போராடுகின்றார்கள் என்பதற்காக சரி என்று தலையாட்ட முடியாது .இறுதியில் நாம் தோற்றதற்கு அதுதான் காரணம் .  

பிள்ளை வளர்ப்பு மாதிரிதான் இதுவும் ஆரம்பத்திலேயே திருத்த முடியாவிட்டால் பின்னர் எக்காலமும் முடியாது .

சசியின் கவனத்திற்கு .

பலரது  குடும்பத்தில் எவருமே சிங்கள அரசாலோ அல்லது புலிகளாலோ பாதிக்கப்படவில்லை .ஆனால் 

1- இலங்கை அரசின் அடக்குமுறைக்கு  எதிராக ஆயுதபோராட்டத்தில் இணைந்தோம் .(  படித்து நல்லவேலை எடுத்து சீதனத்துடன் பெண் எடுத்திருக்கலாம் )

2-சேர்ந்த இயக்கம் பிழையாக செல்கின்றது என்று உயிரை பணயம் வைத்தே விமர்சனங்களை வைத்தோம் .(அவர்கள் செய்வதை கண்டும் காணாமல் இருந்து மோட்டார் சயிக்கிளில் சுத்தி இருக்க வேண்டும் )

3-புலிகள் பிழையான பாதையில் தொடர்ந்தும் செல்கின்றார்கள் என்று விமர்சனம் வைத்தோம் (ஒரு ஏரியா பொறுப்பாளர் ஆகி நாலு வீடு வாங்கியிருக்கவேண்டும் )

சசி இதில் எதை விரும்புகின்றார் என்று புரியவில்லை அதிலும் முதல் இரண்டும் அவருக்கு தெரிவதே இல்லை மூன்றாவது விடயம் மட்டும் தான் கண்ணை உறுத்துது .

அவருக்கு விளங்காத பக்கம் இதுதான் - நாங்கள் மூன்றாவதை செய்யதேவையில்லை என்றால் முதாலவது இரண்டாவதையும் செய்யாதவர்களாக சிவனே என்று குடும்பம் குட்டியுடன் இருந்திருப்போம் .

அண்ணை இந்த சுய புராணத்தை கேட்டு கேட்டு காது புளித்து விட்டது 
1980இல் இருந்த இன போராட்டம் வேறு 
1990இல் இருந்த போராட்டம் வேறு 
மக்கள் மீது திணிக்கபட்ட போர் வடிவம் உக்கிரம் வேறு மாதிரியானது.
1975இல் பிறந்தவனுக்கு 1980இல் ஐந்து வயது 
1990இல் 15 வயது தனக்கு முன்னுக்கு என்ன பிரச்சனை இருந்ததோ அதைதான் அவனால் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது.
நீங்கள்  1980இல்  இந்தியாவில் எந்த தியேடரில் என்ன படம் பார்த்தீர்கள் என்பது அவர்களுக்கு எந்த விமோசனத்தையும் கொடுத்திருக்கவில்லை.

அவர்களுடைய அணுகுமுறை சரியா / தவறா 
உங்கள் பார்வை தவறு என்பது. அதில் எந்த தப்பும் இல்லை 
அதனோடு நின்று எது தவறு என்று தொடருங்கள் ......

உங்கள் சுயசரிசை வேறு ஒரு திரி திறந்து தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சசி வர்ணம், நீங்கள் ஒரு profuse apologist ! எனக்கு உங்கள் போன்ற நிலைப்பாடுடையோரோடு விவாதம் இல்லை! இவ்விவாதத்தில் நான் தீவிரமாக  இருப்பதற்குக் காரணம், புலி எதிர்ப்பு அல்ல! புலிகளின் திகைப்பூட்டும் குற்றங்களை 2009 இலேயே பெரும்பாலான தமிழர்கள் போல நானும் அறிந்திருந்தேன். ஆனால் பகிரங்கமாக யாருடனும் விவாதித்ததில்லை! இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை ஏறி மிதிக்கிற கணக்காக சிலர் அந்தக் குற்றங்களை நியாயப் படுத்தும் போது கொஞ்சம் உணர்வையும் கலந்து பதில் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்யும் போது சுவாரசியமான பாதைகளில் இந்த விவாதம் செல்வதைப் பாருங்கள்:

1. முதலில் புலிகளின் குற்றங்களைச் சுட்டிக் காட்டினால் சிறிலங்காவுக்கு ஆதரவு என்றார்கள் (இது எப்படி என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை!யாழைச் சிங்களவர்கள் பார்த்து ஆதாரம் சேர்க்கிறார்கள் என்பது மிகை!).

2. சும்மா கத்தாமல் பட்டியலிடு என்றார்கள்: பட்டியலிட்டேன்: "அட இதெல்லாம் எங்களுக்கு முதலே தெரியுமே?" என்றார்கள்.

3. மருதர் இன்னொரு படி மேலே போய்,இப்படித் தனிமனிதர்களுக்கு நடந்தவை புலிகளின் குற்றமல்ல என்கிறார்! இதன் அர்த்தமும் எனக்கு விளங்கவில்லை! ஒரு சமூகத்தின் துன்பம் என்பது மனித முகம் கொண்டது! அந்த மனிதனின் முகத்தைக் காட்டினால் அது சமூகப் பிரச்சினை இல்லை, தனிப் பிரச்சினை என்கிறார்கள்! அப்ப ரஜிகர் மனோகரனுக்கு நடந்ததும் பாரிய போரின் சின்ன ஒரு விளைவு என்று விட்டு விடலாமாஇல்லை என்பது என் கருத்து. விட்டு விடலாம் என்பது மருதரின் கருத்து!    

4. சிக்கலாக யோசித்துக் குத்தி முறிந்து ஒரு குற்றத்தை நியாயப் படுத்துகிறார்கள். "சிதறி ஓட வேண்டும் என்று சிங்களவன் குண்டு போட்டானாம். சிதறாமல் ஒரேயடியாக மக்கள் நகர்வது மக்களுக்குப் பாதுகாப்பு என்று புலிகள் தப்பிப் போக விடாமல் சுட்டார்களாம்! அப்படித் தனியாக்ப் போன ஆட்களின் பெண்களைக் காணவில்லையாம்-ஆதலால் புலிகள் தப்பியோரைச் சுட்டது சரி " இப்படி யோசிக்க எனக்கு வருகுதில்லை, நான் ஒரு simpleton!  

5. உச்சமாக இந்த ஆட்சேர்ப்பு: நாடுகளின் ஆட்சேர்ப்பு எவ்வளவு checks and balance ஓட நடக்கிறது என்று நன்கு தெரிந்து கொண்டே தெரியாதோர் போல நடிக்கிறார்கள். எழிலன் உட்பட பல தப்பி வந்த தலைவர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து ஆட்களைப் பிடித்துச் சென்றதை மக்கள் கண்டிருக்கிறார்கள். நான் அவர்களிடமிருந்து கேள்விப் பட்டிருக்கிறேன்.

 சுருக்கமாகச் சொன்னால், "இது நடந்தது தான்! தவறு தான், முடிந்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடோ உதவியோ கொடுப்போம்! குறைந்த பட்சம் இதையெல்லாம் நியாயப் படுத்தி அந்தக் குடும்பங்களின் காயத்தில் அசிட் ஊற்றாமலாவது இருப்போம்என்று முன்வர யாரும் தயாரா இல்லை! இது இந்த stalemate இற்குக் காரணம்!   

அக்னி! நீங்கள் அடிமடி என்பது என் பிரஜாவுரிமை நிலை என்றால் எனக்கு அடிமடியில்  கனமும் இல்லை, நான் பதறவும் இல்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன்! எனக்கு காசு கட்டாமலே சிறிலங்காவுக்கு வரவும் முடியும், வேண்டுமானால் இன்னொரு நாட்டுக்குப் போகவும் முடியும் என் சொந்தப் பெயரிலேயே! என் பதிலை வடிவாக வாசியுங்கள்! நழுவவில்லை! என் போன்றோர் தான் வர முடியும் என்று சொல்லியிருக்கிறேன். இதன் அர்த்தம் வருவேன் என்பது தான்! ஆனால், தீர்வுக்கு நானோ புலிகளின் குற்றங்களை வெளிப்படுத்தும் நபர்களோ ஏன் பொறுப்பெடுக்க வேணும்? இன்னும் வெட்டுவோம் புடுங்குவோம் என்று நிற்கும் தேசியத் தூண்கள் தான் பொறுப்பெடுக்க வேணும்! உண்மையில் அவர்கள் அதே பழைய குதிரையில் ஏறி விழுந்து மற்றத் தரப்பிடம் தான் வரப் போகிறார்கள் (சுமந்திரன் தெரிவான பின்னர் அசடு வழிஞ்ச மாதிரி!)   சிங்களவனுக்கெதிராக நான் செய்வதை என் போன்றோர் செய்வதை சேர்டிபிகேற் மாதிரி உங்களிடம் காட்டிக் கையெழுத்து வாங்க வேண்டுமோ? இதையே உங்களிடமும் நான் கேட்கலாம்! பிறகு போய் தனிப் பட்ட தகவல் கோரினான் ஜஸ்ரின் என்று கள விதிகளுக்குப் பின்னால் போய் ஒளிந்து கொள்வீர்கள். அது தானே கடைசி அஸ்திரம் இங்கே?  

மகிழ்ச்சி ....சிங்கலவனுக்கெதிராக (உங்களைப்போன்றோர் என்ன  செய்கிறீர்கள் என்பது எனக்கு தேவையில்லை ) நீங்கள் ஏதாவது செய்கிறீர்கள் என்ற விதத்தில் Hats of to you ....நாட்டிட்க்கு வருவேன் என்கிறீர்கள் மகிழ்ச்சி உங்களை போன்ற கல்வியறிவு கொண்டவர்கள் எமது சமூகத்தின் அவசியத்தேவை ....இங்கு சிலபேருக்கு புலிகளின் தவறுகள் சிங்களவனுக்கு வக்காளத்து வாங்க பயன்படுகிறது ...அவனது கொடூரத்தை மறைக்க உதவுகிறது ...ஆனால் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் சந்தோசம் 

ஒரு இடம் இடிக்கிறதே இதே கூத்தமைப்பு சம் சும் சித்து விளையாட்டினை கடைந்தெடுத்த மொள்ளமாரித்தனம்  என்று விமர்சித்தவர் நீங்கள் 
தெரிவு செய்யப்பட்டவுடன் எப்படி இது அரசியல் சாணக்கியமானது....இவர்களும்  பல பேர் சவாரி செய்த மண் குதிரையில் தான் பயணம் செய்கிறார்கள்...சாதிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் . தனிப்பட்ட தகவல் தேவையெனின் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் ....கள விதிகளுக்கு பின் ஒழியும் நபரல்ல நான்  
 
ஆம், அவர்கள் மொள்ள்மாரித்தனம் செய்த போது அதன் பெயர் மொள்ளமாரித் தனம் தான்! அப்படி தான் சொன்னேன்! இப்போதும் த.தே.கூ வெளிப்படையாகக் காரியம் ஆற்றாமல் தவறு செய்கிறது என்று சொல்கிறேன். ஆனால், தாயகத்தில் இருப்போர் தம் தேவைக்கேற்ப எந்த மொள்ளமாரியையும் தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது என்று வாதிட்டேன். அது உங்கள் கண்ணில் படாதது உங்கள் வடிகட்டின பார்வையின் குறைபாடு!இங்கிருந்து ரிமோட் கொன்ட்ரோல் வேலை செய்யும் ஆட்களைத் தான் குறைப்பட வேண்டும், எப்போதும் என் நிலையை எழுதும் என் போன்றவர்களை அல்ல! 

நீங்கள் இங்கு போட்டுள்ள பத்திரத்தில் சிவப்பு எழுத்தில் நீங்கள் போட்டதைத்தவிர

மற்றவை சட்டங்களுக்கு அமையத்தானே இருக்கிறது.

அப்படி இல்லை புலிகள் இவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு அனுமதியில்லையென்றால்

ஒரு போராட்ட இயக்கம் தனது மக்களிடமிருந்து படைக்கு ஆட்களைச்சேர்ப்பதற்கு எவ்வாறு முயலணும்??

நீங்கள் 80 களில் எவ்வாறு உங்கள் இயக்கத்துக்கு ஆட்களைத்திரட்டினீர்கள்??

உண்மையில் அறிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்.

விசுகர்! எந்தச் சட்டம்?

வீட்டுக்கு ஒரு ஆள் கட்டாயம் வரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி   வேறெந்த விடுதலை இயக்கமும் ஊரில் ஆள் சேர்த்ததாக எனக்கு நினைவில்லை! ENDLF  இந்திய ராணுவ காலத்தில் சந்தி சந்தியாய் நின்று தொண்டர் படைக்கு ஆள் பிடித்தது. ENDLF விடுதலை இயக்கம் என நான் நினைக்கவில்லை, காடையர் கூட்டம்!

அர்ஜூன் போட்டிருப்பது 2007 இல் பேசிப் பேசி (பாருங்கள் 6 தடவைகள்  பேசியிருக்கிறார்கள்) கூப்பிட்டது. 2009 இல் எழுத்து பேச்செல்லாம் இருக்கவில்லை. நேரே எல்f வானும் மோட்டர் சைக்கிளும் தான். உங்களுக்கு உங்களுடன் தொடர்பில் இருக்கும் ஊர் மக்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பீர்கள்! நம்புகிறோம்!<_<

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், அவர்கள் மொள்ள்மாரித்தனம் செய்த போது அதன் பெயர் மொள்ளமாரித் தனம் தான்! அப்படி தான் சொன்னேன்! இப்போதும் த.தே.கூ வெளிப்படையாகக் காரியம் ஆற்றாமல் தவறு செய்கிறது என்று சொல்கிறேன். ஆனால், தாயகத்தில் இருப்போர் தம் தேவைக்கேற்ப எந்த மொள்ளமாரியையும் தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது என்று வாதிட்டேன். அது உங்கள் கண்ணில் படாதது உங்கள் வடிகட்டின பார்வையின் குறைபாடு!இங்கிருந்து ரிமோட் கொன்ட்ரோல் வேலை செய்யும் ஆட்களைத் தான் குறைப்பட வேண்டும், எப்போதும் என் நிலையை எழுதும் என் போன்றவர்களை அல்ல! 

விசுகர்! எந்தச் சட்டம்?

ஐயா

சரி சட்டம் என்பதை விடுவோம்

ஒரு  மக்கள் இயக்கத்தின் ஒழுங்கில் தானே இருக்கிறது.. 

நீங்களே சொல்லுங்களேன்

வேற எவ்வாறு இயக்கம் ஆட்களைச்சேர்க்கணும்

சேர்க்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

சரி சட்டம் என்பதை விடுவோம்

ஒரு  மக்கள் இயக்கத்தின் ஒழுங்கில் தானே இருக்கிறது.. 

நீங்களே சொல்லுங்களேன்

வேற எவ்வாறு இயக்கம் ஆட்களைச்சேர்க்கணும்

சேர்க்கலாம்...

விரும்பியவரைச் சேருங்கள்! விரும்பாதவரை அவர் விரும்பிய வழியில் விடுங்கள்! இதை ஊகிக்க என்ன கஷ்டமா? திரும்பி வந்து சொல்வீர்கள், அப்ப எல்லாரும் விலகி விட்டால் விடுதலை கிடைக்காதே என்று! உண்மை தான் மக்களுக்கு விடுதலை வேண்டாமென்றால் இழுத்து மூடி விட்டுப் போங்கள்!

அது தானே அந்த பத்திரத்தில் உள்ளது

அதெப்படி  கடத்தலானது...

அவை ஏன் உங்கள் கண்களுக்குப்படுவதில்லை..??

  • கருத்துக்கள உறவுகள்

கனவான்களே தனி மனிதர் மீதான கருத்துத்  தாக்குதலை நிறுத்தி யதார்த்தமாக, முன்னேற்றகரமாக, உருப்படியாக கருத்து பகிரலாமே.

இனிவரும் காலங்களில் சிங்களவர்,  முஸ்லீம்,பறங்கியர் இன்னும் பலரோடு தமிழ் மக்கள்  சகோதரத்துவத் தொடு  இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை பற்றி கதைக்கும் நீங்களே .. (இந்த யாழ் களம் என்ற சின்ன வட்டத்துக்குள்)  ஒருவரை ஒருவர் மன்னிக்கவோ அல்லது விட்டுக் கொடுப்பதற்கு தயாராய் இல்லை என்பதே கசப்பான உண்மை.

இது இன்னும் ஒரு தசாப்த காலம் போனாலும் தொடரும்...
இது ஒரு போதை ... ஒருவன் சொல்லும் கருத்துக்கு எப்படியாவது ஒரு பாயிண்டை கண்டு பிடித்து அதற்கு மறுதலித்து பின்னோட்டம் இடுவது  ...
இதுவும் கூட எனக்கு புரியாத ஒரு பக்கம் தான்.... அர்ஜுன் 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

இந்த அக்கினி இங்கே முன்பு வேறு பெயரில் வந்து சுங்குடி சுப்பு ஆக்கப் பட்ட ஒரு தீப்பொறித் திருமுகம் தான்.

பழைய பேர் ரிப்பேர் ஆனவுடன் இப்போ புதுப் பெயரில் கப்ஸா வுடுறார்.

ஊரில் இருந்து எழுதிறாறாம் ...... நம்பீட்டம். ???

அக்கினி,

நாங்கள் எப்போது ஊரை விட்டுப் போனோம் திரும்பி வர ????

உங்கள் புலிவால் கோஸ்டிகள்தான் ஊரை விட்டு ஓடி வந்து 10, 15 வருசமா ஊருக்குப் போகாமா விசர் கதை கதைப்பது. நாங்களில்லை. 

தீர்வுக்கு உழைக்கிறோமோ இல்லையோ தீர்வு வர உழைப்பவர்களுக்கு உபத்திரவம் செய்யாமலாவது இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே அந்த பத்திரத்தில் உள்ளது

அதெப்படி  கடத்தலானது...

அவை ஏன் உங்கள் கண்களுக்குப்படுவதில்லை..??

"நீங்கள் வராவிட்டால், நாம் ஒன்றும் செய்யாமல் மூடி விட்டுப் போய் விடுகிறோம்!" என்று அந்த நோட்டீசில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை! இதற்குப் பிறகு வீட்டுக்கு வந்த வாகனங்களின் மனிதர்களின் அடையாளங்கள் ஆதரங்கள் கிடைத்தால் அர்ஜூன் இணைப்பார். அப்பவும் நீங்கள் துவக்கு முனையில் ஆட்கடத்தல் நடந்ததை நம்பப் போவதில்லை! எந்த விக்கினமும் இல்லை! ரதி சொன்னது போல ஒரு சில பூனைகள் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது! உலகம் தட்டை என்று நம்பிக் கொண்டே காலத்தைக் கழியுங்கள் அடுத்த தலைமுறைக்கு மட்டும் இந்தப் போலித் தனத்தை விட்டுச் செல்லாதீர்கள்!   :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.