Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!

Featured Replies

நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!

 

லகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது  வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது. 

modi3.jpg

பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் 'இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு ஒரு விஷயத்தை பற்றி மக்களிடம் எப்படி செய்தி சேர வேண்டும் என்பதில் தெளிந்த அறிவு உண்டு.  அதனால்தான் வாய் சொல்லிலேயே காலத்தை ஓட்டி விடுகிறாரோ? என்று எண்ணி விடாதீர்கள்.

இளம் வயது முதலே ஊர் ஊராக பயணம் மேற்கொள்வதில் மோடிக்கு மிகுந்த ஆர்வம். எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே மோடியின் பயணம் அமைந்திருக்குமாம். அப்படி ராஜ்கோட் முதல் இமயமலை வரை மோடியின் இளம் வயது பயணம் அமைந்திருக்கிறது. சில காலம் இமயமலையில் சந்நியாசி வாழ்க்கை கூட மோடி வாழ்ந்திருக்கிறார். மோடி வெளிநாடுகளுக்கு ஏன் அடிக்கடி பறக்கிறார் என்பதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறதா?

modi2.jpg

பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த புகைப்பட கலைஞர். அவர் எடுத்த புகைப்படங்களை கொண்டு கண்காட்சியும் நடத்தியிருக்கிறார். அவரது தாய்மொழியான குஜராத்தியில் கவிதையும் புனைந்துள்ளார்.  சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிறகு ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் உள்ள தலைவர் மோடிதான். இவரை ட்விட்டரில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் தொடர்கின்றனர். உலகளவில் மோடிக்கு இதில் 2வது இடம்.

1965ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது மோடியும் நாட்டுக்காக தன்னால் முடிந்த பங்களிப்பை செய்திருக்கிறார். அதாவது ரயிலில் செல்லும் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யும் சிறுவனாக பயணித்திருக்கிறார்.

குஜராத் முதலமைச்சராக மோடி 13 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதில் ஒருநாள் கூட அவர் விடுமுறை என்று எடுத்ததில்லையாம்.

modi1.jpg

இரவு லேட்டாக உறங்க சென்றாலும் மோடியின் விடியல் காலை 5.30 மணிக்கு தொடங்கி விடும்.

பள்ளி, கல்லூரி காலத்தில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் உண்டு. பல வேடங்களில் கலக்கியிருக்கிறார். அதனால்தான் இப்போதும் வேஷம் போடுகிறாரா? என்று கேட்காதீர்கள்.

மோடியின் சொந்த ஊரான வத்நகரில் உள்ள ஏரி  முதலைகளுக்கும் வசிப்பிடமாக இருக்கிறது. இளவயது மோடி அந்த ஏரிக்கரையில் விளையாடுவது வழக்கம். கரையில் கிடந்த முதலையிடம் வம்பிழுத்திருக்கிறார்.  முதலை வாலால் தாக்கி விட சிறிய காயத்துடன் தப்பிய வரலாறும் மோடிக்கு உண்டு.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கடந்த 2010ஆம் ஆண்டு உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 3வது நகரமாக அகமதாபாத்தை ஃபேர்ப்ஸ் இதழ் தேர்வு செய்தது. முதல் இரு இடங்களை சீனாவின் ஜோக்ஜிங், செங்குடு நகரங்கள் பெற்றன.

ஒரு மாநாட்டில் மோடி பங்கேற்கிறார் என்றால் அங்கு பேச வேண்டிய விஷயங்களை  ஹோம் வொர்க் செய்து பார்த்து விட்டுதான் மோடி மேடையே ஏறுவார்.

http://www.vikatan.com/news/article.php?aid=52945

  • கருத்துக்கள உறவுகள்

புல்லில் இருக்கிற புத்தகங்களைப் பார்த்தாலே தெரியுது செட்டப் என்று..! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை ... கொலை வெறி  எல்லாம் கூடவே இருப்பதால் 
எதிரணியினர் எப்போதும் கொஞ்சம் பணிந்து போவார்கள்.

சிறந்த நாடக கலைஞரும் கூட ...

  • கருத்துக்கள உறவுகள்

மோடி சரியான கேடி

  • கருத்துக்கள உறவுகள்

இவர் குஜராத்தில் முதல்வராக இருந்த போது கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு இவர் தான் பொறுப்பு. tw_dissapointed:இதனை விகடன் இலகுவாக மறந்து விட்டது. இவர் முதுமானி பட்டம் பெற்றவரா?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் குஜராத்தில் முதல்வராக இருந்த போது கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு இவர் தான் பொறுப்பு. tw_dissapointed:இதனை விகடன் இலகுவாக மறந்து விட்டது. இவர் முதுமானி பட்டம் பெற்றவரா?:unsure:

எனக்கென்றால் நம்பிக்கை இல்லை. 

  • தொடங்கியவர்

https://en.m.wikipedia.org/wiki/Narendra_Modi

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தபிறகுதான் கூடுதல் சந்தேகம். :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் 'இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

In 1978, Modi graduated from Delhi University with a degree in political science and completed his master’s work at Gujarat University in 1983.

http://www.biography.com/people/narendra-modi

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்றால் நம்பிக்கை இல்லை. 

எங்களுடைய குட்டி சுமந்திரன் ஐயாவே 3.5 லட்சத்தை இலகுவாக மறைச்சிட்டார் 
இவளவு  பெரிய மோடிக்கு 3 ஆயிரம் கூட இல்லாத முஸ்லிம் பிணங்களை மறைக்க முடியாதா?

உங்களுக்கு மட்டுமா நம்பிக்கை இல்லை ....?
உலகிற்கே மோடி அப்படி செய்திருப்பாரா ....? இவளவு பண்பானவர் என்ற சந்தேகம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சந்தேகம் வரக் காரணம்.

1) மிசிஸ் சிறிசேன என்பதை M.R.S. சிறிசேன என வாசித்த விடயம். (ஒரு முதுமானிக்கு இது தெரியாதா?)

2) இவரது அமைச்சரவையிலேயே ஸ்மிருதி இரானி தானும் பட்டதாரி என்று எழுதிக்கொடுத்து பிறகு மாட்டிக்கொண்ட விடயம். (இந்திய அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் சாதாரணம் என்பதைக் காட்டுகிறது)

3) இந்தியாவில் பள்ளிப்படிப்பை ஒருமுறை குழப்பினால் மீண்டும் உட்புகுவது கடினம் (அதுவும் எழுபதுகில்). இவரது தூரதேச இளமானி பட்டப்படிப்பு என்பது உற்று நோக்கப்பட வேண்டியது.

இதையெல்லாம் தாண்டி தேநீர்க் கடையில் வேலை செய்துவிட்டு பிறகு பட்டப்படிப்புகளை  முடித்தார் என்பது மேற்கு நாடுகளில் மக்டானல்ட்ஸ்களில் வேலை செய்துவிட்டு கல்லூரிக்குப் போவதைப் போல சொல்லப்பட்டுள்ளது. இந்தியா அப்படியான ஒரு நாடு இல்லை. ஒருமுறை தவறவிட்டால்

 பிறகு கடினம். இதற்குள் நாடோடிபோல சிலவருடங்கள் அலைந்துள்ளார். உண்மையில் முதுமானிப் படிப்பை முடித்திருந்தார் என்றால் மகிழ்ச்சிதான். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த குஜராத்தி நபர் ஒருவர் 2003  இல் 6 மாதகால சுற்றுலா விசாவில் இங்கு வந்தவர். 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர். இங்கு தொடர்ந்திருப்பதற்காக குஜராத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் Msc முடித்ததாக சான்றிதழ் பெற்று Work permit எடுத்து இன்று British Citizen சொந்த வீடு என்று ஜாலியாக இருக்கிறார்.  என்ன இப்பவும் எதிர்காலத்தை இறந்த காலமாகவும் இறந்தகாலத்தை நிகழ்காலமாகவும் கதைக்க கூடியவர். 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் மேல் பாராளுமன்றத்தில் எதற்கும் பதில் சொல்கிறாரில்லை என்று ஒரு பஞ்சாயத்து ஓடுகிறது. கேட்டால் அந்தந்த துறை அமைச்சர்களே பதிலளிப்பார்கள் என்கிறாராம். கேள்விகளை சந்திக்க தயங்குகிறார் என சொல்லப்படுகிறது. ஒன்று எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார்.. அல்லது வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறார். பிறகு எல்லாமே டிவிட்டரில்தான்.. tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் மேல் பாராளுமன்றத்தில் எதற்கும் பதில் சொல்கிறாரில்லை என்று ஒரு பஞ்சாயத்து ஓடுகிறது. கேட்டால் அந்தந்த துறை அமைச்சர்களே பதிலளிப்பார்கள் என்கிறாராம். கேள்விகளை சந்திக்க தயங்குகிறார் என சொல்லப்படுகிறது. ஒன்று எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார்.. அல்லது வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறார். பிறகு எல்லாமே டிவிட்டரில்தான்.tw_astonished:

அதை டிஜிட்டல் காரர் பார்பதால்தான் 
இப்போ நன்றி சொல்ல வந்திருக்கிறாரோ ? 

முதுநிலை பட்டம் பெற்றாரோ என்னமோ 
கொலைவெறி பட்டம் பெற்றது ஆதராமாக நிருபிக்கபட்ட பின்னர்தான் 

அமெரிக்க பிரித்தானியா இவருக்கு தடை விதித்து இருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் தேவையில்லை கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தகவல்களை பூர்த்தி செய்தால் 
தேவையான சர்டிபிகேட் உங்கள் மின்னஞ்சல் தேடி வரும் (275 டாலரில் இருந்து ஆரம்பம் )

http://www.phonydiploma.com/Fake-Diploma-From-India-University.aspx

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து (!?) மேலே காணப்படும் Engineering Degree பெற்றவர் ஒருவரை சந்தித்தேன் ..அண்ணன் வேலை தேடிக்கொண்டிருப்பதாக சொன்னார் ...அத்துடன் சும்மாயிருக்காமல் உந்த சர்டிபிக்கேடையும் காட்டினார் பார்த்தவுடனே பத்திட்டு பொருள் போலி என்று

ஒன்றும் கதைக்காமல் சொன்னவற்றையெல்லாம் கேட்டுவிட்டு நடையை கட்டிவிட்டேன் ...பயபுள்ளை அதை வைச்சு பேர் போன கன்ஸ்ரக்சன் ஒன்றில் (Sanken Construction)  கொழும்பில வேலையையும் எடுத்து போட்டுது  ....பிறகு தான் கேள்விப்பட்டேன் அண்ணையை  கொம்பனி போட்டு உருட்டின உருட்டில ஊருக்கு வந்து அப்பாவிண்ட  கடையில எடுபிடியா நிக்கிறார் என்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.