Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி கட் அவுட்டுக்கு பீர் புகட்டிய யாழ்ப்பாணம் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலி படம் இலங்கை யாழ்ப்பாணத்திலும் வெளியாகியுள்ளது. கட் அவுட், பேனர், தோரணம், பட்டாசு என்று தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் குறைவைக்கவில்லை யாழ்ப்பாண தமிழர்கள்.


 1443792995-6071.jpg
 
புலி வெளியான திரையரங்குகளில் வைக்கப்பட்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடந்தது. தமிழகத்தைப் போல், டாஸ்மாக்கையும் தெருவுக்குத் தெரு திறந்தால் யாழ்ப்பாண தமிழர்கள் இனப்படுகொலையை மறந்து இன்னும் குஷியாக இருப்பார்கள்.


1443793117-1937.jpg

 

தமிழன் என்றெnரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு. 
 
சாக்கடையில் குளித்தாலும் போகாத குணம் அது.

.

http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-fans-celebrate-puli-in-srilanka-115100200047_1.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காரியத்தைச் செய்வதற்கு அதில் அனுபவமும் பயிற்சியும் பெற்றிருப்பவர்கள் அதனைத் திறம்படச் செய்வார்கள். தரமற்ற சினிமாப் படங்களையும், பாடல்களையும் தடை செய்த தலைவனுக்குப் பாலூற்றிப் பயிற்சி பெற்றுள்ளதால் இன்று கட் அவுட்களுக்கு பாலாபிசேகத்தையும் பீர் அபிசேகத்தையும் சிறப்பாகச் செய்யமுடிந்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

புலி வெளியான திரையரங்குகளில் வைக்கப்பட்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடந்தது. தமிழகத்தைப் போல், டாஸ்மாக்கையும் தெருவுக்குத் தெரு திறந்தால் யாழ்ப்பாண தமிழர்கள் இனப்படுகொலையை மறந்து இன்னும் குஷியாக இருப்பார்கள்.

 அங்கே அவர்கள் கட் அவுட்டுகளுக்கு பால் அல்லது பியர் ஊற்றுவதால் அடுத்தவருக்கு என்ன நட்டம்!  குடித்துவிட்டு ரகளை செய்தால் அது தவிர்க்கப்படவேண்டியதே, ஆனால் அவர்கள் தங்கள் பணத்தில் தங்கள் மகிழ்ச்சிகாக செய்வதைக் குறித்து ஏன் இவர்கள் குத்தி முறிகிறார்களோ புரியவில்லை. இவர்கள் மட்டும் இருபத்து நான்கு மணிநேரமும் இனப்படுகொலையை நினைந்து நினைந்து உருகிக்கொண்டு இருக்கிறார்களாக்கும்.

சிறுவர்களை ஏமாற்றி போதைப்பொருள் பாவனைக்கு தூண்டிவரும் தமிழ்த் திரைப்படங்கள்; மது, போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை

http://www.yarl.com/forum3/topic/163938-சிறுவர்களை-ஏமாற்றி-போதைப்பொருள்-பாவனைக்கு-தூண்டிவரும்-தமிழ்த்-திரைப்படங்கள்-மது-போதைப்பொருள்-தகவல்-நிலையம்-ஆய்வறிக்கை/

 அங்கே அவர்கள் கட் அவுட்டுகளுக்கு பால் அல்லது பியர் ஊற்றுவதால் அடுத்தவருக்கு என்ன நட்டம்

அதே ... மாகமாணிக்கங்களின் .. எழுத்துக்கள், வாழ்க ... என்ன இப்போ தமிழரசுக்கட்சியோ அந்த வாலைப்பிடித்து!

ஏன் அப்பு, அங்கு சிங்களவன் ... கொலை செய்தது, வீடுகள் காணிகளை அபகரித்ததும், ஏன் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதும் ... எங்களையா? எங்களுக்கு அவன் மற்றவர்களுக்கு செய்கிறதாலை என்ன நட்டம்?

ஒட்டு மொத்தத்தில கேவலமான செயல் ...........ஆனால் நாமும் அந்த இளைஞ்சர்கள் பருவத்தில் இருந்து வந்தோம் அந்த துடிப்பை புரிந்து கொள்ள முடிகிறது .ஆனால் எம் துடிப்பை கட்டுப்படுத்தி எம்மை அடுத்த கட்ட நகர்வுக்கு தூக்கி  விட்ட  ஒரு  மகத்தான செயல்பாட்டை செயல் படுத்தும் ஓர் உன்னதமான நிலை ,அமைப்பு அங்கு இல்லை என்பதே கவலைக்கிடமான யதார்த்தம் ..................மரமண்டைகளுக்கு இதாவது புரியாவிட்டால் யாம் ஒன்றும் செய்ய முடியாது ....பாவம் /.///////////புண்ணியம் ;;;;;;;;;;;;;; பரிதாபம் ...........

  • கருத்துக்கள உறவுகள்

வியர்வை சிந்தி, உழைச்சு வாங்கிய சம்பளத்தில் வாங்கிக் குடிக்கும் பியரை யாரும் இப்படி ஊற்றுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பகிடி விடாதையுங்கோ அவங்கள் தங்கட காசிலை பாலும் பீரும் ஊத்துகிறான்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?

இனிமேல் இப்படியெல்லாம் நடக்காதுவிட்டால்தான் அதிசயம், தாயகம் தற்போது ஜனநாயக விழுமியங்களை மதித்து நடக்கும் ஒரு நாட்டுக்கு எப்படியான தகுதிகள் இருக்குமோ அவையெல்லாவறையும் அரவணைத்துச் செல்ல முனைப்புப்பெறுகின்றது.

நீங்கள் மாத்திரம் ஊருக்குப்போய் தனிப்பனைக்கள்ளுக்குடிக்கலாம், மதுசாலைகளில் குத்திமுறியலாம் ஊரிலை உள்ளவர்கள் ஒண்டும் செய்யக்கூடாதாம். இவ்வளவும் கதைக்கிறியள் யாழ்களஉறவுகளில் ஒருவராகுதல் புலம்பெயர் தேசங்களில் புலி வெளிவந்ததும் சினிமாக்கொட்டகைக்குப்போய்ப் பார்க்கவில்லை எண்டு சொல்லுங்கோ.

பிளேன் ஏறிவந்ததும் அறிவுஜீவிகள் எனக்கூறுபவர்கள் எப்போதாவது தரமான திரைப்படங்களைத் திரையிடுங்கள் என புலம்பெயர்தேசங்களின் தமிழ்படம் வெளியீட்டார்களிடம் கேட்டிருப்பீர்களா?

gun and ring எனும்எம்மவர் திரைப்படம் வந்ததே நீங்கள் வாழும் எத்தனை நாடுகளில் அரங்குநிறைந்த காட்சியாக வெளிவந்தது? 

அவர்கள் தங்களது பணத்தில் எதோ எல்லாம் செய்கிறார்கள் அது அவர்களது சொந்த உழைப்பாக இல்லாது புலம்பெயர் தேசத்தின் அவர்களது உறவுகளால் அவர்கட்கு அனுப்பப்பட்ட  பணமாகவிருந்தால் கன நாட்களுக்கு இந்த விளையாட்டுகளெல்லாம் தொடராது. 

 

அனைத்தும் முடிவுக்கு வருகின்றது, புலம்பெயர் தமிழர்களது மூன்றாவது சந்ததி தலையெடுத்தபின்பு எல்லாரும் பொத்திக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

இன்னுமொரு விசையம் அங்க நிண்டு இப்படிக்குத்தி முறியுறவை வெளிநாட்டுக்கனவிலதான் வாழ்கினம். அதுவும் கூடிய கெதியில் முடிவுக்குவரும். இதற்காகவாவது சிங்கக்கொடியைக் கையிலெடுத்துக்கொண்டு நாம் இலங்கையர்கள் எங்களுக்குள் பேதமில்லை எனத் தெருக்களில் இறங்கவேண்டும். 

இவர்கள் இப்படிக்கெட்டுக் குட்டிச்சுவராகிப் போகிறார்களாகவிருந்தால்தான் நான் மிகவும் சந்தோசப்படுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

 அங்கே அவர்கள் கட் அவுட்டுகளுக்கு பால் அல்லது பியர் ஊற்றுவதால் அடுத்தவருக்கு என்ன நட்டம்!  குடித்துவிட்டு ரகளை செய்தால் அது தவிர்க்கப்படவேண்டியதே, ஆனால் அவர்கள் தங்கள் பணத்தில் தங்கள் மகிழ்ச்சிகாக செய்வதைக் குறித்து ஏன் இவர்கள் குத்தி முறிகிறார்களோ புரியவில்லை. இவர்கள் மட்டும் இருபத்து நான்கு மணிநேரமும் இனப்படுகொலையை நினைந்து நினைந்து உருகிக்கொண்டு இருக்கிறார்களாக்கும்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். இவர்களை இப்படித்தான் ஊக்கப்படுத்த வேண்டும். வாழ்க உங்கள் பணி, வளர்க உங்கள் தொண்டு.

தமிழகத்திலிருந்து நாம் இறக்குமதி செய்த மற்றுமொரு குப்பை இது. ஆனால் இந்த இளைஞர்களை குறை கூறுபவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் இதே ஆட்டம் ஆடும் அவர்களின் பிள்ளைகளை எதுவும் கூற மாட்டார்கள். நேற்று கனடாவில் புலி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த சினிப்ளெக்ஸ் திரை ஒரு காவாலியால் கிழிக்கப்பட்டது . 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலிருந்து நாம் இறக்குமதி செய்த மற்றுமொரு குப்பை இது. ஆனால் இந்த இளைஞர்களை குறை கூறுபவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் இதே ஆட்டம் ஆடும் அவர்களின் பிள்ளைகளை எதுவும் கூற மாட்டார்கள். நேற்று கனடாவில் புலி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த சினிப்ளெக்ஸ் திரை ஒரு காவாலியால் கிழிக்கப்பட்டது . 

தமிழகத்தின் ஆட்சி தமிழர்களிடம் இல்லை. இந்தியாவிலிருந்து நாம் இறக்குமதி செய்த மற்றுமொரு குப்பை இது என்று குறிப்பிடுவதே பொருத்தமாகும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.