Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூதர்களின் புனிதத் தலம் எரிப்பு: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் முற்றுகிறது

Featured Replies

யூதர்களின் புனிதத் தலம் எரிப்பு: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் முற்றுகிறது

 

படம்: ராய்ட்டர்ஸ்.
படம்: ராய்ட்டர்ஸ்.

இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.

யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக யூதர்கள் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

இதன்படி ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக கத்திக் குத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 7 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். நுற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம், போலீஸாரின் பதிலடி தாக்குதல்களில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு கரை பகுதி நப்லஸ் என்ற இடத்தில் உள்ள யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன போராட்டக்காரர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர். இதனால் மோதல் முற்றியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர் கூறியபோது, புனிதத் தலத்தை எரித்தவர்கள் தப்ப முடியாது, அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீன அதிபர் கண்டனம்

யூதர்கள் புனித தலம் எரிக்கப்பட்டதற்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, நப்லஸ் சம்பவம் துரதிருஷ்டவசமானது, இதுதொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, பாலஸ்தீனர்கள் புதிதாக கத்திக்குத்து தாக்குதலை தொடங்கியுள்ளனர், அதற்கு அஞ்ச மாட்டோம், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா சமாதான முயற்சி

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி அடுத்த சில நாட்களில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இஸ்ரேல், பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்ல இருக்கிறார். அவரது தலைமையில் ஜோர்டானில் இஸ்ரேல் தரப்புக்கும் பாலஸ்தீன தலைவர்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/யூதர்களின்-புனிதத்-தலம்-எரிப்பு-இஸ்ரேல்பாலஸ்தீன-மோதல்-முற்றுகிறது/article7770736.ece

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் இதை வைச்சு இஸ்ரேல் வாங்குவாங்கு எண்டு ஒருக்கா வாங்கிவிட்டுத்தான் விடும்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

புல வாலுகளுக்கும் பாலஸ்தீனியருக்கும் ஒரு ஒற்றுமை.

பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது.

  • கருத்துக்கள உறவுகள்

புல வாலுகளுக்கும் பாலஸ்தீனியருக்கும் ஒரு ஒற்றுமை.

பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது.

இது எப்ப இருந்து புனித தலமானது 
ஏன் புனித தலமானது .....
என்று தெரிந்தால் இப்படி எழுதவாராது.

யார் பிணமானாலும் ... நாங்கள் அறிவாளிகள் என்று சுயவிளம்பரம் செய்தால் போதும்! 

  • கருத்துக்கள உறவுகள்

80 களில் பலஸ்தீனர்களுக்கு ,தாயகத்தில் காவடி எடுத்தவர்கள் இன்று புலத்தில் புனிதர்கள் ,முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பட்டத்துடன்.....

  • கருத்துக்கள உறவுகள்

புத்து,

எனக்கு 80 களில் ஒழுங்கா உச்சா போகவே தெரியாது ?

மருது,

யேசு கிறிஸ்துவுக்கு முன்பே இஸ்ரவேலும் டேவிட்டும், ஆபிரகாமும், மோசசும் இருந்தார்கள். பின்னாநாளில் வந்தவர்கள் பலஸ்தீனியர்களே.

நாளைக்கு வெலிஒயாவை சிங்கள ஊர் எண்டால் நாம் ஏற்போமா? வெலிஒயாவுக்கு முன்பே மணலாறும் தென்னமரவாடியும் இருந்தது. அதுபோலத்தான் இஸ்ரேலும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புத்து,

எனக்கு 80 களில் ஒழுங்கா உச்சா போகவே தெரியாது ?

மருது,

யேசு கிறிஸ்துவுக்கு முன்பே இஸ்ரவேலும் டேவிட்டும், ஆபிரகாமும், மோசசும் இருந்தார்கள். பின்னாநாளில் வந்தவர்கள் பலஸ்தீனியர்களே.

நாளைக்கு வெலிஒயாவை சிங்கள ஊர் எண்டால் நாம் ஏற்போமா? வெலிஒயாவுக்கு முன்பே மணலாறும் தென்னமரவாடியும் இருந்தது. அதுபோலத்தான் இஸ்ரேலும்.

 

 

 

 கோஷான்,

 

இஸ்றேலிய பாலஸ்த்தீனப் பிணக்கு கிறீஸ்த்துவுக்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகிவிட்டது.

 

சொல்லப்போனால் ஆபிரகாமின் அவசரப் புத்தியால் ஏற்பட்டது என்றுதேன் சொல்லவேண்டும். ஆபிரகாமுக்கும், அவரது மனைவி சாராளுக்கும் நெடுங்காலம் பிள்ளை இல்லாது போகவே, அவர்கள் வீட்டில் வேலைக்காரியாக இருந்த ( இன்றய பாலஸ்த்தீன / அரபுகளின் மூதாதையினர்) ஆகார் என்பவளுடன் தனது மனைவியின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு பெற்ற பிள்ளையான இஸ்மாயில் என்பவனுடந்தான் இந்த இஸ்லாமிய மதம் ஆரம்பிக்கிறது. 

ஆனால், இஸ்மாயில் பிறந்த சில வருடங்களிலேயே ஆபிரகாமுக்கும் அவரது மனைவிக்கும் ஈசாக் என்கிற ஒரு மகன் பிறக்கிறான். சிறுபிள்ளைகளான ஈசாகும் இஸ்மாயிலும் விளையாடும்போது, இஸ்மாயில் தனது மகனான ஈசாக்கை அடிப்பதைப் பார்த்த ஆபிரகாமின் மனைவி தனது வேலைக்காரியையும், அவளது மகனையும் ஆபிரகாமை வற்புறுத்தி தனது வீட்டிலிருந்து கலைத்து விடுகிறாள். இவ்வாறு ஆபிராகமினால் பாலைவனம் ஒன்றிற்குள் கலைத்துவிடப்பட்ட அவரது வேலைக்காரி மகனான இஸ்மாயில்தான் இன்றைய இஸ்லாமின் தந்தை.

அன்றிலிருந்து இன்றுவரை யூதர்களும், இஸ்லாமிய அரபுகளும் இதைக் காரணமாக வைத்து அடிபட்டே வருகின்றனர்.

இன்று இந்த இரு தரப்பினரும் உரிமை கொண்டாடும் கிழக்கு ஜெருசலேம் பகுதி முன்னர் யூதரின் பிரதான வணக்கஸ்த்தலம் இருந்த பகுதிதான். ஆனால், இஸ்ரேல் நாடு பலமுறை அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு , யூதர்களின் அடையாளாங்கள் அழிக்கப்பட்டு, யூதர்கள் இந்த உலகம் முழுதும் துரத்திவிடப்பட்டு வருவது நடந்து வந்தது. அப்படி இறுதியாக மத்திய கிழக்கிலிருந்து வந்த அரேபிய ஆக்கிரமிப்பாளர்களால் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேலின் பல பகுதிகளில் இன்று அரேபியர்கள் தமது மசூதிகளைக் கட்டியெழுப்பியுள்ளார்கள் (இது, அயோத்யாவில் ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டியதுக்கு ஒப்பானது). ஆக, இதற்காகத்தான் இப்போது இரு தரப்பினரும் சண்டையிடுகிறர்கள். 

இது எங்களின் மூதாதையரின் இடம், இங்கே எமது கோயில் இருந்தது என்று யூதர் சொல்ல, கடந்த 800 வருடங்களாக நாம் இங்கே கோயில் கட்டி வழிபடுகிறோம், ஆகவே தரமுடியாது என்று அரபு இஸ்லாமியர்களாளான பாலஸ்த்தினார்கள் சொல்கிறார்கள். 

 

நியாயம் யார்பக்கம் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

சிறு குறிப்பு : அரபு இஸ்ரேலிய பிணக்குப் பற்றிக் கதைக்கும்போது கூடவாவது இந்த புலத்து புலிப் பிணாமிகள் என்கிற அடைமொழியை பாவிக்காது விடலாமல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

நீங்கள் சொல்வது ராமாயணம் போல் ஒரு இதிகாசக்கதை. அரபு இனம் இப்படித் தோற்றம் பெற்றது என்பதை பெரும்பாலான துறை சார் அறிஞர்கள் ஏற்பதில்லை. 

 

ஒரு பேச்சுக்கு இதை ஏற்பதே ஆயினும், ஆபிரகாமுக்கு முன்பே இஸ்ரேலியர்கள் இருந்துளார்கள். இஸ்ரேலியர்களின் புத்தகங்களிலும், அவர்களின் வாய்வழிக் கதைகளில் இருந்துமே இஸ்மாயிலின் கதை கூடச் சொல்லப் படுகிறது, ஜெருசலேமும் அண்டிய பகுதிகளும் அரபிகள் எனும் இனம் தோன்ற முன்பே இஸ்ரேலியரின் பூமி.

தவிர கிபி 600 இல் தான் இஸ்லாம் தோன்றியது.

இஸ்மாயில் அரபியனே ஒழிய இஸ்லாமியன் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அரபுகள் எப்படித் தோன்றினார்கள என்று நான் சொல்ல வரவில்லை. இஸ்மாயில் என்பவன் ஆபிரகாம் எனப்படும் இஸ்ரேலிய யூதனின் வேலைக்காரிக்குப் பிறந்தவன் என்றுதான் சொல்ல வந்தேன்.

நீங்கள் சொன்ன இஸ்லாம் கி.பி 600 ஆ ஆண்டில்த்தான் தோற்றம்பெற்றது என்பது பற்றி எனக்குத் தெரியாது. 

இன்றுள்ள இஸ்ரேலிய இனம்தான் ஆதாம் ஏவாளின் வழித் தோன்றல்கள் என்று யூதரும் கிறீஸ்த்தவர்களும் கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் அவர்களைப் பொறுத்தவரை உலகின் முதல்க்குடி இஸ்ரேலியர்கள் அல்லது யூதர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இஸ்லாம் எனப்படுவது யூத மதத்திலிருந்து கிளைவிட்டுப் பிரிந்துபோன இன்னொரு மதம் என்பதுதான் சரியாக இருக்கும்.

எது எப்படியிருந்தாலும், பல நூற்ற்ண்டுகளாக தாம் பிறந்துவளர்ந்த மண்ணிலிருந்து வேரறுக்கப்பட்டு அந்நிய அரபு மற்றும் உரோம ஆக்கிரமிப்பாளர்களாள் விரட்டியடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள், பல நூற்றண்டுகளாக இந்த உலகமெல்லாம் அகதிகளாக அலைந்து திரிந்து, 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் இங்கிலாந்து அமெரிக்க உதவியால் மீண்டும் தமது சொந்த நாட்டில் குடியேறி இன்று அதை ஒரு சிறிய வல்லரசாக மாற்றியிருக்கிறார்கள். இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்த இந்த இடைப்பட்ட காலத்தில் அங்கே குடியேறியிருந்த அரபு ஆக்கிரமிப்பாளர்கள, இன்று இஸ்ரேலியர்களுடன் மோதி வருகிறார்கள். 

இதில் எவர் சரி, எவர் பிழை என்பதை கூறுவது கடிணம். ஒரு 50, 100 வருடங்கள் என்றால்ப் பரவாயில்லை. ஆனால் இது குறைந்தது 600 அல்லது 700 வருடங்கள் பழமை வாய்ந்த கதை.

  • கருத்துக்கள உறவுகள்

ரிப்பீட்டு எரர்

சிறு குறிப்பு : அரபு இஸ்ரேலிய பிணக்குப் பற்றிக் கதைக்கும்போது கூடவாவது இந்த புலத்து புலிப் பிணாமிகள் என்கிற அடைமொழியை பாவிக்காது விடலாமல்லவா??


கோஷன் உங்கள் கருத்துப் பதிவை வாசித்தவுடன் நானும் விசனம் அடைந்தேன்.
சம்பந்தா சம்பந்தமில்லாமல்   எதற்காக "புல வாலுகள்" என்ற அடைமொழி.
மதிநூட்ப்பத்துடன் கருத்தாடல் செய்யக் கூடிய நீங்கள் இதை தவிர்க்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
நீங்கள் ரகுவின் பின்குறிப்பு பற்றி எதுவும் எழுதாமல் விட்டதனால் இதை எழுதுகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

முகமதுவுடனேதான் இஸ்லாம் எழுகிறது. ஆனால் ஆபிரகாமில் இருந்து முகமது வரையான அரபிகள் இயற்கை வழி பாட்டாளர்கள். அதற்கு முன் அசிரியா என்றழைக்கப் பட்ட இப்போதைய சிரியாவை யும் எகிப்தையும் மையமாய் வைத்து கொப்டிக் கிறிஸ்தியன்கள் உருவாகிவிட்டனர்.

எனவே யூதர், பின் கிறீஸ்தவர், பின் ஓட்டமன் காலத்தில் இஸ்லாமியர் இப்படித்தான் கணக்கு.

ஆக இஸ்ரேலின் பூர்வ குடிகள் யூதரே.

வாள் முனையில் இஸ்லாம் பறித்த நிலத்தை மூளையினை கொண்டு மீட்டு, துப்பாக்கி கொண்டு தக்க வைக்கிறார்கள். அவ்வளவே.

புலவால் - பலஸ்தீனியர்கள் ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கைக்கு உடன் பட்டு, இஸ்ரேலை ஏற்றுக் கொண்டால் ஒரு தீர்வு கிடைக்கும்.

அப்படியில்லாமல் இஸ்ரேலை வரைபடத்திலிருந்து தூக்குவோம், எனக்கூறி 6 மாதத்துக்கு ஒருக்கா கல் எறிந்து, இண்டிபாடா செய்து, இஸ்ரேலிடம் வாங்கிக் கட்டுவார்கள்.

இப்படியான சொறிச் சேட்டை அரசியலையே புலவாலுகளும் பின்பற்றி, இலங்கையிடம் வாங்கி கட்டுவது.

அதையே நான் சுட்டினேன்.

 


*******

 

Edited by நியானி
நீக்கப்பட்ட கருத்துக்கான பதிலும் நீக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு இரு தேசமோ ....இதைக்கதைத்து தானே கஜே அடி வாங்கியவர் 
எங்கடை மக்களுக்கு இப்போது தேசம் வேண்டாம் .....ஏன் போராட போனோம் என்று இப்பதான் அவையல் தேர்ந்தெடுத்தவர்களுடன்  சேர்ந்து யோசிக்க தொடங்கியிருக்கினம் ,கலப்பு நீதிமன்றத்தில் மிக்ஸ்சிங் பற்றி பிசியா இருக்கினம் ...மிக விரைவில சிங்களம் நன்றாக கதைக்க பழகிவிடுவினம் பிறகு வெலிஓயா ஆகியென்ன மொறவேவ ஆகியென்ன 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ,

ஒரு நாடு இரு தேசம் கொடுப்பது பற்றி பேசுவதற்கு இஸ்ரேல் ( தன் பபாதுகாப்பு உறுதிப் படுமாயின்) தயாராய் இருக்கிறது. ஆனா இலங்கை அப்படி இல்லை.

இந்த வித்தியாசம் விளங்கினா ஓட்டைச் சைக்கிளுக்கு காத்தடிச்சிருப்போமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.