Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு மட்டும்

Featured Replies

பெண்களுக்காக என்று போட்டாலும் என்னால் கருத்துச்சொல்லாமல் இருக்க முடியவில்லை.. :P

1) மனைவி கணவனுக்குப் போடும் வரைமுறை மனைவிக்கும் பொருந்துமென வாதாடும் கணவன் கூடாது.

2) சேர்ந்து முடிவெடுக்கும் கணவன் வேண்டும். அதாவது, மனைவி எடுக்கும் முடிவைக் கணவன் ஆதரித்தால் போதும்.

3) வீட்டு வேலைகளில் என்ன உதவி செய்தாலும் பிறரிடம் காணவன் அதைக் காட்டிக்கொள்ளக்கூடாது.

4) பேசினால் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும

  • Replies 63
  • Views 8.5k
  • Created
  • Last Reply

கல்யாணத்துக்கு முன்பு எல்லாம் எதிர்ப்பாக்கிறது இருக்கும்.

கல்யாணம் முடிஞ்சபின்பு தான் எதிர்ப்பார்த்தது ஒன்றையும் காணமாட்டிங்கள்.

கல்யாணத்துக்கு முன்பு விழுந்து விழுந்து உபசரிப்புக்கள் கிடைக்கும்.

கல்யாணத்துக்குப்பிறகு அடிக்கடி திட்டுக்கள் ஏச்சுக்கள் கிடைக்கும்.

கல்யாணத்துக்கு முதல் பாடும் பாட்டு 'பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காதே'

கல்யாணத்துக்கு பிறகு பாடும் பாட்டு 'என் விதி அப்போது தெரிந்திருந்தாலே கற்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே'.

நான் உங்களுக்கு சொன்னால் யார் கேக்கப்போயினம். ஆசை யாரை விட்டது.சனம் அடம்பிடிக்குதுகள். அடி வாங்க, திட்டு வாங்க அடம்பிடிக்குதுகள். விதி யாரை விட்டது?

கந்தப்பு உது நல்லா இல்லை சொல்லிப்போட்டன். இது நம்மட அண்ணாமார் தம்பிமாருக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுடுமோ எண்டு பொறாமைல சொல்லுற மாதிரிகிடக்கு. யாழ் அண்ணாமாரே தம்பிமாரே இந்த அப்புமார் சொல்லுறதை கேக்காதீங்க. :P

அங்கதானே பிரச்சினையே, எப்படிப் புரிந்து கொள்ளுறது?

மங்கையர் மனதைப் புரிந்தவர் இங்கு யாரும் உண்டா?

நாரதர் அண்ணா அளவு மீற்றரால அளந்துதான் :angry: :angry: :angry:

நான் எதிர்பார்த்த குணாதிசயங்கள்

1. எனக்கு வாழ்க்கைத் துணையாய் வருபவர் என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும்.

2. என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். (அதாவது பொய் சொல்லாது அனைத்து

விஷயத்திலும்)

3. என் துன்பங்களை பகிர்ந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

4. என்னுடைய நியாயமான கோரிக்கைகளை, நியாயமான ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

5. நான் தவறு செய்தாலும் கடிந்து பேசாது அன்புடன் எடுத்துச் சொல்லும் குணம் வேண்டும்.

6. மொத்தத்தில் எனக்கு கணவராக மட்டுமல்லாமல் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்க

வேண்டும்.

என்னுடைய இந்தக் கருத்தில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் சொல்லுங்களேன் காவியா. :lol:

உங்கட எதிர்பார்ப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு அம்மணி ஆனால் ரொம்ப எதிர் பார்க்காதீங்க அதுக்கு எல்லாம் எதிர் மறையாத்தான் நடக்கும் :)

திருமணமாகிய புதிதில் நீங்கள் எதிபார்க்கும் குணாதிசயங்களெல்லாம் நிச்சயமாக இருக்கும். அதாவது கணவனின் குணாதிசயங்கள் பெண்களுக்குப் பிடித்திருக்கும். சில வருடங்கள் போக இவையெல்லாம் அலுத்துப்போக அக்கரைக்கு இக்கரை பச்சையாகத் தோன்றும். மற்றைய பெண்களின் கணவன்மார்கள் அவர்கள் மனைவியுடன் அன்பாகவும், வீடு கார் என்று வசதியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதுபோல் தோன்றும். இங்கேதான் நீங்கள் எதிர்பார்த்த குணாதிசயங்கள் மாறுபடும்.

அதன்பின் கணவனைத் திருத்த முயற்சியுங்கள் : "...ம்.... நீங்களும் இருக்கிறியளே...."

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க டங்குவார் உங்க வீட்டுச் சமாச்சாரம் எல்லாம் சொல்லி நம்ம பசங்களைப் பயப்படுத்துறீங்கள்?? எல்லாப் பெண்களும் இப்படி இல்லை டங்குவார்

எல்லாப் பெண்களும் இப்படியில்லை என்பது உண்மை ரசிகை. ஆனால் பெரும்பான்மையான பெண்களுக்கு என்றுதான் தலைப்பை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் கருத்திலிருந்து எனக்குத் தெரிவது,

1) உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை, அல்லது

2) அப்படித் திருமணமாகியிருப்பின், நீங்கள் உங்கள் உள்ளக்கிடக்கையைத் மேலே வெளிப்படுத்தவில்லை. :P

அப்படிப் பார்க்கையில், திருமணமாகி குறைந்தது ஒரு மூன்று வருடங்கள் வாழ்ந்த யாரேனும் ஒரு சகோதரியின் கருத்தை இங்கு எதிபார்க்கிறேன். சும்மா சாக்குப்போக்கு சொல்லாமல் இதயசுத்தியுடன் அவர் கருத்துச் சொன்னால் நல்லது. :D

மற்றையது, என் வீட்டுக் கதையை நான் இங்கு சொல்லவில்லைங்கோ..!( :lol::) )

சரி டங்குவார் குறை சொல்ல நினைச்சால் சொல்லீட்டே போகலாம் அதை விடுங்கோ

நான் பெருசா ஒன்டும் எதிர் பார்க்கலை புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருந்தால் சரியுங்கோ. ஆனால் அவை மட்டும்தான் அப்படி இருக்கணும் என்று இல்லை. இரண்டு பேருமே அப்படி இருக்கணும். :lol:

திருமணமாகிய புதிதில் நீங்கள் எதிபார்க்கும் குணாதிசயங்களெல்லாம் நிச்சயமாக இருக்கும். அதாவது கணவனின் குணாதிசயங்கள் பெண்களுக்குப் பிடித்திருக்கும். சில வருடங்கள் போக இவையெல்லாம் அலுத்துப்போக அக்கரைக்கு இக்கரை பச்சையாகத் தோன்றும். மற்றைய பெண்களின் கணவன்மார்கள் அவர்கள் மனைவியுடன் அன்பாகவும், வீடு கார் என்று வசதியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதுபோல் தோன்றும். இங்கேதான் நீங்கள் எதிர்பார்த்த குணாதிசயங்கள் மாறுபடும்.

அதன்பின் கணவனைத் திருத்த முயற்சியுங்கள் : "...ம்.... நீங்களும் இருக்கிறியளே...."

இதுதான் பிரச்சினையே அடுத்தவன் மாதிரி வாழனும் எண்டு ஆசைப்பட்டால் இருக்கிற நிம்மதியையும் தொலைக்க வேண்டியதுதான். ஆனால் ஒன்று புதுசுல எல்லாரும் அப்படிதான் அப்புறம் அவர்களுக்கிடையில் நல்ல புரிதல் வந்தால் இந்தப்பிரச்சினை ஒண்டும் வராது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உது நல்லா இல்லை சொல்லிப்போட்டன். இது நம்மட அண்ணாமார் தம்பிமாருக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுடுமோ எண்டு பொறாமைல சொல்லுற மாதிரிகிடக்கு. யாழ் அண்ணாமாரே தம்பிமாரே இந்த அப்புமார் சொல்லுறதை கேக்காதீங்க. :P

விதி யாரைத் தான் விட்டதோ?.

ithu enna? epidi thamil la type panratham? :lol: nila pear maathidavo???? ilada intha VijiVengi endrathu vera yaruma?

ithu enna? epidi thamil la type panratham? :lol: nila pear maathidavo???? ilada intha VijiVengi endrathu vera yaruma?

வணக்கம் அக்கா நீண்ட நாட்களுக்கு அப்புறம் எப்படி சுகம்?

தமிழில் எழுதுவதற்கு இதற்கு போய்ப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?autom...p;blogid=1&

அக்கா விஜிவெங்கி என்பவர் புதிய உறுப்பினர் ஆனால் சில நாட்களாக நிலாவைக் காணவில்லை.

Edited by சந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் பிரச்சினையே அடுத்தவன் மாதிரி வாழனும் எண்டு ஆசைப்பட்டால் இருக்கிற நிம்மதியையும் தொலைக்க வேண்டியதுதான். ஆனால் ஒன்று புதுசுல எல்லாரும் அப்படிதான் அப்புறம் அவர்களுக்கிடையில் நல்ல புரிதல் வந்தால் இந்தப்பிரச்சினை ஒண்டும் வராது. :unsure:

பெண்களில் அனேகர் அடுத்தவருக்காகத்தான் தங்கள் வாழ்கையைத் தீர்மானிக்கின்றனர். அதுமட்டுமன்றி எந்தப் பெண்ணும் தனது குடும்பத்தின் நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. உடனடியாகவே குற்றம் ஆணாகிய கணவனை நோக்கி நீட்டப்படுகிறது...! பெண்கள் அடுத்தவரின் கதையைக் கேட்டு அல்லது அடுத்தவரின் வாழ்கையைப் பார்த்து அல்லது ஒப்பிட்டு..வாழ விளைவதிலும் தனக்கும் தனக்குரியவனுக்கும் பிடித்தமான வாழ்க்கைக்குள் வாழ முனையும் போது அவர்களே அடுத்தவர்களுக்கு உதாரணமாக முடியும்...சிந்திப்பார்களா...??! அடுத்தவரைப் பார்த்து அடுத்தவரின் கதைக்காக தன் சுயத்தையே இழக்க பல மனிதர்கள் உலகில் இன்றும் தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றனர். உலகில் மனிதனைத் தவிர எதுவுமே அடுத்ததைப் பார்த்து தன் வாழ்க்ககையைத் தீர்மானிப்பதில்லை...!

இந்த தன்னிலை மதிக்காத மனம் அடிக்கடி நிலைமாறும் மனதுடைய பெண்களுக்கு அதிகம்....சில ஆண்களும்ம் இதற்குள் அடக்கம்...என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆண் வேண்டும் என்பது அவளுடைய வயதைப் பொருத்து வெகுவாக மாறும். எப்படி?

22 வயது: வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரன் வேண்டும்! அது சாத்தியமில்லை என்று தெரிந்தும், அப்படியொருவனை கற்பனையிலும் கனவிலும் சந்திக்க முயல்வதை அவளால் தடுக்க முடியாது. ஆணழகனாக, புத்திசாலியாக, வசதியானவனாக, நகைச்சுவை உணர்வுள்ளவனாக, அவளை பூக்களாலும் பரிசு பொருட்களாலும் திக்குமுக்காடச் செய்யும் காதலனாக இருக்கவேண்டும்.

32 வயது: அவன் நல்லவனாக இருந்தால் போதும். காதலும் கவர்ச்சியும் இல்லாவிட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள், நிரந்தரமான வேலை இவை அவசியம். இது இல்லாமல், சூப்பர் மார்க்கெட்டுக்கு தன்னுடன் கூடை தூக்கிக்கொண்டு வரவேண்டும், தான் வீட்டில் சமைத்த உணவில் த்ருப்தியடைய வேண்டும், வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்யவேண்டும். ஒட்டுமொத்தத்தில் ஒரு குடும்பப்பாங்கான ஆண் தேவைப்படுகிறான்.

42 வயது: ஏதோ ஒருவன் இருந்தால் போதும். சற்று தொப்பை இருந்தாலும் பரவாயில்லை. தலையில் கொஞ்சம் முடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தால் போதும். வாரம் ஒரு முறை தன் முகத்தை சவரம் செய்தால் போதும். மாதம் ஒரு முறை அவளை வெளியில் அழைத்துச் சென்றால் போதும். அவள் பேசும் போது அவ்வப்போது புன்னகையும், அவ்வப்போது தலை அசைத்தலும் போதும்.

52 வயது: குறைந்தபட்சம் அவளுடன் அவன் ஒரே வீட்டில் இருந்தாலே போதும். அவள் பெயரை அவன் ஞாபகம் வைத்திருந்தால் மகிழ்ச்சியே. அவள் பேசும் போது தூங்கி விழாமல் இருந்தால் பரவாயில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடந்தால் நன்றாக இருக்கும்.

62 வயது: அவளை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் அவன் பாட்டுக்கு ஒரு ஓரமாக இருந்தால் நன்றாக இருக்கும். தன் பேரக்குழந்தைகளை பயந்து அழவைக்காமல், பாத்ரூம் எங்கிருக்கிறது, அவனுடைய பல் செட் எங்கிருக்கிறது என்று நினைவிருந்தால் போதும். அவளுடைய உதவியில்லாமல் அவனே எழுந்து உடை மாற்றிக்கொண்டால் நலம். அவனுடைய கொரட்டைச் சத்தம் கேட்காத ஒரு இடமாவது அந்த வீட்டில் இருப்பது மிகவும் அவசியம்.

72 வயது: இத்தனை வயது வரை அவள் உயிருடன் இருந்தால் ஆச்சரியம். அப்படியே இருந்துவிட்டால், அவன் சுவாசித்துக்கொண்டிருக்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

12 வயதுப் பெண்ணுக்கு உள்ளதையே 22 என்று போட்டிருக்கிறார்கள் போல...இருக்கு. ரீன் ஏஜில் தான் அப்படிக் கனவுகள்....கற்பனைகள்...! 22 வயது என்பது சுயமா சிந்திக்கக் கூடிய வயது. அதில் கற்பனைகளோடு வாழ்வார்கள் என்று அதிகம் எதிர்பார்க்க முடியாதே...??! :unsure::unsure:

\\வணக்கம் அக்கா நீண்ட நாட்களுக்கு அப்புறம் எப்படி சுகம்?

தமிழில் எழுதுவதற்கு இதற்கு போய்ப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?autom...p;blogid=1&

அக்கா விஜிவெங்கி என்பவர் புதிய உறுப்பினர் ஆனால் சில நாட்களாக நிலாவைக் காணவில்லை\\

வணக்கம் சந்தியா...நல்ல சுகம்.நீங்கள் மற்றும் எல்லா யாழ் உறுப்பினர்களும் நலம்தானே?.நிலாவின்ர குட்டி பேபிட படத்தைப் போட்டிருக்கிறா விஜி அதான் கேட்டனான்.

Edited by Snegethy

வணக்கம் சந்தியா...நல்ல சுகம்.நீங்கள் மற்றும் எல்லா யாழ் உறுப்பினர்களும் நலம்தானே?.நிலாவின்ர குட்டி பேபிட படத்தைப் போட்டிருக்கிறா விஜி அதான் கேட்டனான்.

வணக்கம் அக்கா ம்ம் நாங்கள் எல்லோரும் நலம்.

ஆமாம் அக்கா எனக்கும் உதே குழப்பம் நான் விஜியிடம் கேட்டதற்கு நிலா அழகாய் இருந்தாவாம் அதுதான் எடுத்துவிட்டாங்களாம் என்றா :unsure:

Edited by சந்தியா

  • 2 weeks later...

பெண்கள் ஆண்களிடம் விரும்புவது..

ம்ம் ஆண்களைப்போலவே பெண்களும் ஆண்களிடத்தில் தாங்கள் விரும்பும் நிலைப்பாடுகளிலிருந்து ஆளாளுக்கு வேறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்., இருந்தாலும் பொதுவாக பெண்கள் விரும்புவது..

முழுமையான புரிதல் உள்ளவராக

தெளிவாக கதைப்பவராக

விட்டுக் கொடுப்பவராக

போதைப்பழக்கம் இல்லாதவராக

புத்திசாலித்தனத்துடன் கூடிய நேர்மை உள்ளவராக

சுத்தத்துடன் கூடிய ஸ்டைலானவராக

சீதனம் மறுப்பவராக

சுதந்திரம் கொடுப்பவராக

உழைப்பவராக

தன்னிடமே அன்பு செலுத்துபவராக

இக்குணங்கள் அனைத்தும் இருந்தால் அவர்கள் நிச்சயம் பெண்களின் அபிமானத்தை பெறுவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப்பட்ட ஆணை பெண் விரும்புகிறார்?

லண்டன் : பெரும்பாலான "டீன் ஏஜ்' பெண்கள், தங்களின் காதலனை தேர்ந்தெடுப்பதில் முக்கியமாக கவனிப் பது, அவனது வெளித் தோற்றத்தை வைத்துத்தானாம். பணக்கார நாடுகளை விட, வளரும் நாடுகளில் இந்த போக்கு மாறுகிறதாம்.லண்டனில் இருந்து வெளிவரும் "லைவ் சயின்ஸ்' என்ற மனோதத்துவ மருத்துவ இதழில் இதுபற்றி கூறியுள்ளதாவது:

"டீன் ஏஜ்' பெண்கள் பொதுவாக, எந்த ஆணையும் உடனுக்குடன் முடிவு செய்வதில்லை. சில சமயம், அப்படி தேர்வு செய்ய விரும்பினாலும், மனதில் உள்ளதை பகுத்துணர்ந்து, மாற்றிக்கொள்ளும் பக்குவம் அவர்களிடம் உள்ளது. ஆனால், சற்று தாமதமாகி விடும் அது. பொதுவாக பெண்கள், பருவ வயதை அடைந்ததும், எந்த வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் தான் இருப்பர். ஆனால், எது தவறு, எது சரி என்று தெரியாமல் குழம்புவதால், அவர்கள் சுற்றுச்சூழலை வைத்துத்தான் அவர்கள் முடிவு அமைகிறது. சுற்றுச்சூழல் நல்லதாக அமைந்தால், அவர்கள் முடிவு நல்லதாக அமைகிறது. இல்லாவிட்டால், மாறிவிடுகிறது.அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளில் இந்த போக்கு முற்றிலும் மாறுகிறது. அங்கு அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப டேஸ்ட்டும் மாறுகிறது. பொதுவாக சொல்லப் போனால், "சூம்பிப்போன' தாடையுடன், சுருங்கிய உதடுடன் உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. அதேசமயம், வட்ட முகம், துருத்திய உதடு கொண்ட ஆணை எந்த பெண்ணும் விரும்புகிறார்.ஆனாலும், திருமணம் என்று வரும் போது, ஆணின் வேலை, படிப்பு, வேலைவாய்ப்பு, மனப்போக்கு என்று எல்லாவற்றையும் பார்க்கிறார். எந்த பெண்ணும் உடனே உணர்வு வயப்படுவதில்லை. சிலர் "செக்ஸ்' ரீதியான அடையாளங்களுடன் இருந்தால், அவர்களுக்குள் ஒரு வித உணர்வலை ஏற்பட்டு விடுகிறது. ஒரு பெண்ணை ஆண் ஏமாற்றுவதற்கும் இந்த சுரப்பி தான் காரணமாகிறது. இந்த வகையில் ஆட்படும் ஆண்கள், சிறந்த பெற்றோருக்குரிய பங்கை ஆற்ற முடிவதில்லை. இதனால் தான் பெண்களிடம் பக்குவமான உணர்வுகள் எடுபட காரணமாகின்றன.இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயல்பாகவே பெண்கள் மீது அன்பும் கரிசனையும் அதிகமாக உள்ளவன் நான் (சில தனிப் பட்ட உள்ளுணர்வுகளை எழுதுவதால் நான் என்ற பதத்தை நான் சில வேளைகளில் அதிகமாகப் பயன் படுத்துவது உண்டு. அது தற்பெருமையின் வெளிப்பாடு என அருள்கூர்ந்து யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் . அப்படி ஒரு நினைப்பு என்னிடம் கடுகளவும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.) அதன் காரணமாகவே பல வேளைகைளில் மனக் கசப்புகளுக்கு உள்ளானேன். நான் பேசும் பெண்விடுதலையே சில வேளைகளில் எனக்கு பரிகாசமாகத் தெரிவதுண்டு. பெண்ணடிமைத்தனத்தை பெண்களே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே நான் கண்ட நிதர்சனமான உண்மை. பொட்டும் பூவும் தாலியும் அல்ல தமிழ்ப் பண்பாட்டின் சின்னங்கள்.

நேர்மை, இனியன மொழிதல், நல்நட்பு, மெய்யான அன்பு, விருந்தோம்பல் இவைகள்தாம் தமிழ் பண்பாடுகள். தமழிலக்கியங்களும் இவைகளைத்தாம் பட்டியலிடுகின்றன.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு. (குறள்75)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

. பொட்டும் பூவும் தாலியும் அல்ல தமிழ்ப் பண்பாட்டின் சின்னங்கள்.

ஏன் இளங்கோ இத்தனை வெறுப்பு இவற்றுடன்.

இவை தமிழ்த் தேசியத்தை கேலி செய்தனவா?

தேசியக்கொடி மரியாதை கூட ஒரு சம்பிருதாயம் தானே.

நவீன அறிவியல் கூட அவற்றை பேணும் போது,

எமது பாரம் பரிய சின்னங்களுக்குள் புதைந்து கிடக்கும் உணர்வுப் புதையல்களை ஏன் இளக்காரம் செய்வான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடை போடுகிறது பருவம், பெண்கள் உடை போடும் பௌக்குவத்தில்.

வாலிபத்தின் நாவால் வழிகிறனவை தானோ, பெண்வனப்பு தன் பெருமை என்று நினைக்கின்றது.

( கோவித்து விடாதீர்கள் கள உறவுகளே புலத்து பெண்ணியத்தில் என் வயித்தெரிச்சல் இது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டும் பூவும் விரும்பினால் அணியட்டும் கட்டாயமல்ல. அது அவர்களின் உரிமை.

கடவுள் நம்பிக்கையும் அது போல்தான். அவரவர் நம்பிக்கை அவரவர்க்குரியது அவரவர் மதங்களும் அவரவர்க்குரியன ஆனால் அன்பும் அறமும் அனைவர்க்கும் உரியன.

மனித விழுமியங்களுக்கு மதிப்புக் கொடுக்காமல்போலித்தனங்களைக் காவித்திரிவது வள்ளுவர் கூறுயதுபோல் கனியிருக்க காய் கவர்ந்தற்று என்றே பொருள்படும்.

அடுத்து தேவன் அவர்கள் கூறிய உடை விடயத்தை எடுதுக் கொண்டால் அது எனக்கு தவறாகப் படவில்லை.

அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் பேச ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதத்தை நேசியுங்கள்அதுதான் முக்கியம். First give respect to mankind. நாகரிகமாக உடை அணிவதில் எந்தத் தப்பும் இல்லை.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (குறள்79)

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை என்று தெரிகின்றதல்லவா? அடுத்தவர் உரிமைகளுக்குள் மூக்கை நுழைப்பதும், நாங்கள் பகுத்தறிவாளர் என்று படம் காட்ட மற்றவர்களின் நம்பிகைக்குள் கை வைப்பது கூட மேற்குறித்த வகைக்குள் தான் அடங்கும். சமண மதக் கொள்கை என்று தோற்றுப் போன்ற ஒன்றை வைத்து, சைவத்தை சீண்டுவதில் செயற்படு எல்லாம் மற்றவர் நம்பிக்கையில் தலையிடுவது ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட நம்பிக்கை வேறு மத அடிப்படை வாதம் வேறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான், சபேசன், நாரதர் போன்றவர்கள் சைவத்தைக்காட்டிலும் இந்துத்துவத்தையே எதிர்த்திருக்கின்றோம். தமிழில் அதிக இலக்கியங்களைக் கொடுத்தவர்கள் சமணத் துறவிகளே அது மதமாக பிற்காலத்தில் அறியப் பட்டாலும் உண்மையில் மதமல்ல.

சிலுவைப் போருக்கு வித்திட்ட கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்

சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்ற சைவம்

அப்பாவி முஸ்லிம்களைக் காவு கொள்ளும் இந்துத்துவம்

போன்ற மனிதநேயத்தைக் காவு கொள்ளும் மத அடிப்படை வாதங்களை எதிர்ப்பது பகுத்தறிவாளர்களின் கடமை.

கடவுள் இல்லை என்பதுதான் எங்களின் கொள்கை ஆனால் மற்றவர்கள் கோவிலுக்குச் செல்லும் போது அதைத் தடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை. ஆனால் பக்தி என்ற பெயரின் கடைந்தெடுத்த முட்டதள்தனங்களுக்கு வழிவகுப்பதும் அதை வைத்து ஆதிக்கவாதிகள் தங்கள் பிழைப்புக்களை மேற்கொள்வதும் தடுக்கப் படவேண்டும் அதைத்தான் நாங்கள் செய்ய முனைகின்றோம்.

முருகா! நான் தேர்வில் வெற்றி பெற்றால் உனக்கு செதில் குத்தி காவடி எடுக்கிறேன் என்று வேண்டிக்கொள்வதை விட முருகா! நான் தேர்வில் வெற்றி பெற்றால் ஒரு ஏழை மாணவனுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வேண்டுங்கள். மொத்தத்தில் மனிதத்தை நேசியுங்கள் இதைத்தான் நாங்கள் சொல்லுகின்றோம்.

நாங்கள் (நாத்திகர்கள்) கடவுளை நேசிக்கவில்லை ஆனால் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று உங்கள் வாதத்துக்கு வைத்துக் கொண்டால் அந்தக் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பட்டியலில் நாங்கள்தான் முதலிடத்தில் இருப்போம் காரணம் நாங்கள் மனிதர்களை நேசிக்கிறோம்.

ஆம் அன்புதான் எங்களுக்கு கடவுள் மனித நேயம்தான் எங்களின் மதம்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு. (குறள் 80)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.