Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொப்பிமலருடன் சபையில் சுமந்திரன் எம்.பி.

Featured Replies

இராணுவ வீரர்களை கௌரவித்து நினைவுகூரும் பொப்பி மலரை தன் கோர்ட்டில் குத்தியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் காணப்பட்டார். 

 http://www.thinakkural.lk/article.php?local/ntkhjr0pzd771948d4167a0f25848csxof3bc10686a1ad20a8008c73gicqo#sthash.VerQUV7r.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகப்போக இன்னும் வரும்

 

 

அந்த ஆளின் லெவலே வேற போலகிடக்கு .

tw_astonished:

புலம் பெயர்ந்தும் வடலிக்குள் போற ஆட்கள் பாடு கஷ்டம் தான் .

கார்த்திகை மாதத்தில் பொப்பி மலரை அணிந்து பாராளுமன்றம் செல்ல ஒரு கட்ஸ் தேவை .

  • கருத்துக்கள உறவுகள்

440px-Johnmccraememorialbookcloseup02.JP

பிளாண்டர் புலத்தில்

அபினி முதலாம் உலகப்போர் நினைவுறுத்தும் நாள்

 

 

Inscription of the complete poem in a bronze "book" at the John McCrae memorial at his birthplace in Guelph, Ontario, Canada.
Inscription of the complete poem in a bronze "book" at the John McCrae memorial at his birthplace in Guelph, Ontario, Canada.

பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப்போர்க்காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும். இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது.

Lieutenant Colonel John McCrae was a soldier, physician and poet.
Lieutenant Colonel John McCrae was a soldier, physician and poet.

முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே மிகவும் பிரபலம் பெற்றதும் அடிக்கடி கூறப்படுவதுமான கவிதையாக இது விளங்கியது. இதன் திடீர்ப் பிரசித்தி காரணமாக, கவிதையின் சிலவரிகள் போருக்கு பணம், படைபலம் திரட்ட உதவியது. இக்கவிதையில் போரில் உயிரிழந்த வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவே நினைவுறுத்தும் நாளின் சின்னமாக இன்று விளங்குகின்றது. இக்கவிதையும் பொப்பிச் சின்னமும் பொதுநலவாய நாட்டு மக்களிடையே, குறிப்பாக கனடாவில், பிரபல்யமானவையாக உள்ளன.

கவிதை

An autographed copy of the poem from In Flanders Fields and Other Poems
An autographed copy of the poem from In Flanders Fields and Other Poems

In Flanders fields the poppies blow
      Between the crosses, row on row,
   That mark our place; and in the sky
   The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.

We are the Dead. Short days ago
We lived, felt dawn, saw sunset glow,
   Loved and were loved, and now we lie
         In Flanders fields.

Take up our quarrel with the foe:
To you from failing hands we throw
   The torch; be yours to hold it high.
   If ye break faith with us who die
We shall not sleep, though poppies grow
         In Flanders fields.

கவிதையின் தமிழாக்கம்

பிளாண்டர் புலத்தில் பொப்பிகள் மலரும்
சிலுவைகள் இடையே, தொடர் தொடராக,
எங்கள் இடமே அதுவென சுட்டும், அந்த
வானத்தில் வானம்பாடிகள் பறக்கும்,
அவை வீரகானங்கள் மௌனமாய் இசைக்கும்,
துப்பாக்கி ஓசைகள் கீழேயோங்க – கானமோ
அரிதாய்ச் செவிதன்னில் மோதும்.

நாம்தான் சாவைக் கண்டவர்கள்.
நாட்கள் சில முன்னர்
உயிருடன் இருந்தோம்,
உணர்ந்தோம் வைகறை அழகை
கண்ணுற்றோம் ஒளிரும் அந்திநேரம்,
காதலுற்றோம் காதல் பெற்றோம்,
இன்றோ பிளாண்டர் புலத்தில்
துயில்கின்றோம்.

எதிரியுடன் எங்கள் சமரை உமதாக்குங்கள்:
வீழ்ந்து கொண்டிருக்கும் கைகளில் இருந்து
தீவர்த்திதனை உமக்காக எறிகின்றோம்;
உயரத்தில் நீங்கள் தாங்கிக்கொள்ள.
வீரமரணித்த எம்முடன் உம்
நம்பிக்கை உடைந்தால்
நாங்கள் துயிலமாட்டோம்,
பிளாண்டர் புலத்தில் பொப்பிகள்
வளர்ந்தாலும் கூட..


நிகழ்ந்து கொண்டிருக்கும் போரைத் தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் என்று இறந்த ஒரு வீரன் கூறுவதுபோன்று இக்கவிதை அமைந்துள்ளது. இறுதி வரியில் "நாங்கள் துயிலமாட்டோம், பிளாண்டர் புலத்தில் பொப்பிகள் வளர்ந்தாலும் கூட.." என்பது சோன் மக்கிரே ஒரு மருத்துவர் என்பதை நினைவுபடுத்துகின்றது. ஒருவகை பொப்பிச் செடிகள் மற்றும் அவற்றின் விதைகள் மருத்துவத்தில் தூக்கத்தை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.அபினி அல்லது அபின் எனும் போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஒரு பொப்பி வகை அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. பிளாண்டர் புலத்தில் வளர்ந்த பொப்பிகள் பப்பாவேர் ரோயியாசு (Papaver rhoeas) எனும் இனத்தைச் சார்ந்தவை

 

 

நன்றி மூலம் :- http://www.wikiwand.com/ta/பிளாண்டர்_புலத்தில்

Edited by வல்வை சகாறா

[இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்ப்போமாயின் “நாம்” என்று நாம் வாழ்ந்த காலம் போய் இன்று “நான்” என வாழத் தலைப்பட்டுள்ளோம் என்பது தெரியவரும். அறிவிலிகளின் ஆணவம் மிக்க எதேச்சதிகாரமே இன்னல்கள் எம்மை வந்தடையக் காரணமாக இருந்தன.]

http://www.tamilwin.com/show-RUmtzBTXSVfw2D.html

 

நிகழ்ந்து கொண்டிருக்கும் போரைத் தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் [பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields)], அதனால் தயவுசெய்து, arjun & குமாரசாமி நிறுத்துங்கள் உங்கள் குரோதங்களை.

எந்தவித பலனுமில்லை

நான் மற்றவர்களிடமிருக்கும் நல்லவற்றை (யும், எண்ணங்கள்) அறிவதற்கும், தூய்மைபடுத்தவும் யாழ்ப்பக்கம் வருவது, அது இங்கு இல்லையோ என்று என்னத்தோன்றுகிறது.

உனை நீ அறி

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

Hibiscus-rosa-sinensis.jpg

இந்த சிதம்பரத்தம் பூவை, சுமந்திரன்  தனது இரு காதுகளிலும் செருகிக் கொண்டு பாராளுமன்றம் போயிருக்கலாம். 
பார்க்க... வடிவாய் இருந்திருக்கும். 
18.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறு இருக்கின்றது?

அவர் சிங்களப்பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கிறார், அவரது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், சிறீலங்காவின் உண்மையான தேசியத்தலைவர் எனப் போற்றப்பட்டவர், 

(இவ்விடத்தில் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளால் நான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவராகப் பரிந்துரக்கப்பட்டதாக எண்ணவில்லை எனும் கருத்தைப் பதிவுசெய்தமை, நான் ஒட்டுமொத்த சிறீலங்காவிற்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவர் என பத்திரிகையில் கூறியமை, மே தினக்கொண்டாட்டத்தில் சிங்கக்கொடியை ரணிலுடன் சேர்ந்து தூக்கிப்பிடித்தமை ஆகியவற்றை நினைவுறுத்துகிறேன்)

தவிர சுமந்திரன் அவர்கள் என்ன புலம்பெயர் தமிழர்களது வாக்குகளாலா பாராளுமன்றம் சென்றார், தெருத்தெருவாக நீங்கள் தூக்கிப்பிடிக்கும் தேசியக்கொடியக் காவவும் கார்த்திகைப்பூவை கோட்டில சொருகிறதுக்கும், அல்லது அவரைத் தெரிவுசெய்த மக்கள் என்ன ஆனா ஆவன்னா படிக்காதவர்களா இன்றேல் அன்றாட  அரசியல் உலக அரசியல் உலகமயமாக்கல் அரசியல் இவகளைத்தெரியாதவர்களா? அவரைத் தெரிவுசெந்தவர்களில் கணிசமானோர் வடமராட்சிப்பகுதியில் வசிப்பவர்கள்  இலங்கைத்தீவில் மிகவும் முண்ணணியான கல்வி அறிவுடையோர், எங்களைப்போல கழுவி ஊத்துகிற ஆட்கள் இல்லை

(என்னத்த எண்டு கேட்கக்கூடாது, கோப்பை கக்கூசு இவைகளைத்தான் நான் சொல்லுறன், கடந்த இருவாரங்களுக்கு முன்பு முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவும் டாக்குத்த இன்சினியர் பட்டதாரிகள் எல்லாரும் நாட்டுக்கு சிலவருடங்களாவது வந்து கடமை செய்யவேண்டும் எனக்கூறி அந்தக்கருத்து யாழ் களத்தில் அதகளப்பட்டது நினைவிருக்கும், ஆனால் நான் அறிய புலம்பெயர்ந்த பட்டதாரிகள் டாக்குத்தர் இன்சினியர் இவர்களில் தொன்னூறுசதவிகிதமாணோர் தாய்நாட்டைப்பறிச் சிந்திப்பதே இல்லை, ஊரில இருக்கும் இவர்கள் போன்றோர் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அண்டை அயலுகளை விலத்தி தங்கள் மண்டைக்குப் பின்னாலை ஒளிவட்டம் தெரிவதாகக் காட்டிக்கொள்வதுபோல் புலம்பெயர் தேசத்திலையும் பலமடங்கு காட்டிக்கொண்டு திரியினம், சாமான்யன் தான் இப்போதும் புலத்தைப்பற்றி யோசிக்கிறான் இதுதெரியாமல், முதல்வர் கூவி அழைக்கிகிறார் மற்றவர்கள் எலோரும் தொடர்ந்து கழுவுங்கோ எனக்கூறாமல்க்கூறுகிறார் அவருக்குத் தெரியாது கழுவினவன் அடுத்த சந்ததி தளைத்திட்டுது என தெரிந்தாலும் அவர்களைக்கூப்பிட முடியாது என்பது வேறுவிடையம்)

ஆகவே கொஞ்சமும் உணர்ச்சிப்படவேண்டாம் பப்பி மலர்களைக் கார்த்திகை மாதத்தில் சிங்கத்தின் குகைக்குளேயே ஏந்திச்சென்ற புலி எனக்கூறிப் புளகாங்கித அடைவோம்.

தவிர எனது கண்ணோட்டத்தில் நிச்சயமாகச் சுமந்திரன் அவர்கள் செய்தது எள்ளளவும் தவறில்லை, காரணம் இதைத்தானே நாம் எதிர்பார்த்தோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொப்பி மலர் இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றிய நேச நாட்டு இராணுவ வீரர்களின் தியாகத்தைக் குறிப்பது. அப்போரில் அதிக அளவில் தியாகங்களைப் புரிந்த இரஷ்ய வீரர்களைக்கூட அது குறிப்பதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கார்த்திகைப் பூவைக் குத்துவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உவரட்ட ஏன் பொப்பி அணிஞ்சனீர் எண்டு கேட்டால்...

 

சிங்கள மீடியாக்கள் கேட்டால்>>>

சும்: நாட்டில் இன ஒருமைப்பாடு நாட்டின் ஒருமைப்பாடு வேண்டின் அதற்காக இறந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்வது அவசியம். அதையே செய்கிறேன். இதற்காக நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.

 

தமிழ் மீடியாக்கள் கேட்டால்>>>

சும்: போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்து இதனை செய்கிறேன். அது என் வரலாற்றுக் கடமை. இதை யாருக்கும் பயந்து செய்யவில்லை.

 

பிபிசி கேட்டால்>>>

சும்: நாங்கள் பிரித்தானியாவின் காலனியில் இருந்தவர்கள். பிரிட்டிஷ் படைவீரர்களின் தியாகங்களையும் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம். இதைச் செய்ய எனக்கு எப்போதும் உரிமை உள்ளது.

 

இதைக் கேட்ட சம் தேவாரம் பாடிகள்... சபாஸ் சரியான அறிவாளி. tw_blush:tw_angry:

 

தமிழ் பொதுமக்கள்: நல்ல cat5_4n_329312819.jpg வேட்டிக்க பிடிச்சு விட்டிட்டமோ. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உவரட்ட ஏன் பொப்பி அணிஞ்சனீர் எண்டு கேட்டால்...

 

சிங்கள மீடியாக்கள் கேட்டால்>>>

சும்: நாட்டில் இன ஒருமைப்பாடு நாட்டின் ஒருமைப்பாடு வேண்டின் அதற்காக இறந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்வது அவசியம். அதையே செய்கிறேன். இதற்காக நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்.

 

தமிழ் மீடியாக்கள் கேட்டால்>>>

சும்: போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்து இதனை செய்கிறேன். அது என் வரலாற்றுக் கடமை. இதை யாருக்கும் பயந்து செய்யவில்லை.

 

பிபிசி கேட்டால்>>>

சும்: நாங்கள் பிரித்தானியாவின் காலனியில் இருந்தவர்கள். பிரிட்டிஷ் படைவீரர்களின் தியாகங்களையும் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம். இதைச் செய்ய எனக்கு எப்போதும் உரிமை உள்ளது.

 

இதைக் கேட்ட சம் தேவாரம் பாடிகள்... சபாஸ் சரியான அறிவாளிtw_blush:tw_angry:

தமிழ் பொதுமக்கள்: நல்ல பச்சோந்தியொன்னை வேட்டிக்க பிடிச்சு விட்டிட்டமோ. 

kaluthai.gif  :grin:

 

கார்த்திகை பூவை வைக்க சுமந்திரன் என்ன லூசா ?

ஓடிவந்தவர்கள் பாடு இப்ப வலு திண்டாட்டம் ஆக இருக்கு .நாட்டில ஒரு பருப்பும் வேகுதில்லை எவரும் கணக்கிலும் எடுகின்றார்கள் இல்லை .

முடிந்தவரை திட்டிக்கொண்டே இருக்கவேண்டியத்துதான் .

Edited by arjun
சில மாற்றங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஆளின் லெவலே வேற போலகிடக்கு .

tw_astonished:

புலம் பெயர்ந்தும் வடலிக்குள் போற ஆட்கள் பாடு கஷ்டம் தான் .

கார்த்திகை மாதத்தில் பொப்பி மலரை அணிந்து பாராளுமன்றம் செல்ல ஒரு கட்ஸ் தேவை .

புலம் பெயர்ந்தும் வடலிக்குள் போற ஆட்கள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள்?

புலம் பெயர்ந்தும் வடலிக்குள் போகின்றவர்கள் என ஒரு பகுதி இருக்குமென்றால்...நீங்கள் எந்த பகுதிக்குள் வருகின்றீர்கள்?
வார்த்தை பரிமாற்றங்கள் பலதுக்கும் வழிவகுக்கும். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.