Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்கும் சதிகளுக்கு இடமளிக்கக்கூடாது: விக்கினேஸ்வரனுக்கு சுமந்திரன் பதில்

Featured Replies

Sumathiran

 

தமிழ் மக்களின் தலையாய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பதற்கான சதித்திட்டங்களிற்கு ஆளாகாமல் எமது மக்களின் விடிவிற்காகவும் நலன்களுக்காகவும் உழைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுமந்திரன் குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே இவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழுவடிவம்,

நேற்றைய தினம் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்கின்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்கின்றார். இச்சம்பவங்கள் நடைபெற்றன என்று நான் கூறியதை அவரது அறிக்கை உறுதிப்படுத்துவது வரவேற்கத்தக்கது. அவற்றிற்கு அவர் கொடுக்கும் வியாக்கியானங்கள் நியாயமானதா இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்கும்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செயற்படுவதற்கென்று கௌரவ விக்னேஸ்வரன், இன்றைய தமிழ் மக்களின் தலைவரான திரு. சம்பந்தனால் விசேடமாக தெரிவு செய்யப்பட்டவர். தலைவரின் இந்த தெரிவுக்கு வடமாகாண சபை தேர்தலின் போது மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தினார்கள். மக்களின் இந்த ஆதரவானது தொடர்ந்தும் பல்வேறு தேர்தல்களில் வெளிக்காட்டப்பட்டிருந்தது. தமிழ் மக்களுக்கும் அவர்களது தலைமைக்கும் புனிதமான உறவு ஒன்று இருக்கிறது. இந்த உறவை துண்டிக்க எத்தனித்தவர்கள் தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள்; தொடர்ந்தும் நிராகரிக்கப்படுவார்கள்.

கட்சிக்கும் கட்சித்தலைமைக்கும் விசுவாசமாக நடப்பது எம் ஒவ்வொருவரினதும் இன்றியமையாத கடைமையாகும். என்னைப் பொறுத்தவரையில் இந்த கடைமையை நிறைவேற்றுவதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது. கட்சி சம்பந்தமான என்னுடைய செயற்பாடுகளில் இவ்வெளிப்பாடு தொடர்ந்து பிரதிபலிக்கும்.

தமிழ் மக்களின் தலையாய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பதற்கான சதித்திட்டங்களிற்கு ஆளாகாமல் எமது மக்களின் விடிவிற்காகவும் நலன்களுக்காகவும் உழைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வடமாகாண சபையானது வினைத்திறன் உள்ளதாக செயற்ப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். இன்றைய மாகாண சபை முறையில் இருக்கும் குறைபாடுகளை கலைந்து அதிகாரப்பகிர்வினை அர்த்தமுள்ளதாக்குவதற்கு நாம் முனைப்பாக செயற்படும் அதேவேளை, இருக்கின்ற அதிகாரங்களையும் கிடைக்ககூடிய வளங்களையும் மக்கள் நலன்களுக்காக பயன்படுத்துவதற்காகவே இந்த நிர்வாகத்தை பொறுப்பெடுத்தோம். அந்த தருணத்திலிருந்து முதலமைச்சரின் பல வேண்டுகோற்களுக்கிணங்கி அவருக்கும் வடமாகாண சபை நிர்வாகத்திற்கும் உதவியாக நான் செயற்ப்பட்டதைபோல, எதிர்காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராக பதவியில் இருக்கும் எவருக்கும் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என உறுதியளிக்கிறேன்.

இன்று எழுந்திருக்கின்ற சந்தர்ப்பத்தை முற்றுமுழுதாக எமது மக்களின் நன்மைக்கும் விடிவிற்க்குமாக மிகுந்த நிதானத்தோடு உபயோகித்து, வடக்கு மாகாண சபையில் சட்டதிட்டங்களை இயற்றி சர்வதேசத்திடமிருந்து வருகின்ற உதவிகளை எடுத்து உபயோகித்து நிர்வாகத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றி எமது மக்களின் கடற்றொழில், விவசாயம், சுகாதாரம்,கல்வி,தொழில்வாய்ப்பு, தொழில்நுட்பவளர்ச்சி, மற்றும் வாழ்க்கைதரத்தை உயர்த்தும் அபிவிருத்தி திட்டங்கள் போன்றவற்றை திறம்பட செயற்றுவிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தப்பித்துகொள்ள முடியாது.
இது சம்பந்தமாக எனது முழுமையான ஒத்துழைப்பை இத்தருணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்று உபயோகிப்பார் என்று எதிர்பார்க்கிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.colombomirror.com/tamil/?p=6311

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கபட்ட அறிவிலித்தனமான பதில் எவ்வளவுதான் முயற்சி பண்ணியும் குருவை மிஞ்ச முடியாது தமிழ் மக்களையும் ஏமாத்த முடியாது .

கூட்டமைப்பின் ஒற்றுமை தான் முக்கியம் .

சுமந்திரன் வைத்த கருத்துக்கள் எதுவும் கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்ககூடியவை அல்ல ஆனால் புலி ஆதரவார்களை காயப்ப்படுத்த கூடியவை .அதற்குதான் அவர் கூட்டமும் குழப்பப்பட்டது .

ஆனால் விக்கியரின் கருத்துக்கள் கூட்டமமைப்பிற்கே எதிரானதும் அவர்களை பிரிக்கும் நோக்கம் கொண்டதும் ஆகும் .

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் கூட்டமைப்பிற்கு  ஆதரவு திரட்டி கூட்டத்தில் பேசாவிட்டாலும் பரவாயில்லை மக்களை குழப்பும் கருத்துக்கள் பலவற்றை தேவையில்லாமல் வைத்தார் .அவர் சொல்லு எதுவும் மக்கள் காதில் ஏறாமல் கூட்டமைப்பு பெருவெற்றி கண்டது .கடைசி வாயை மூடிக்கொண்டாவது இருந்து தனது மரியாதையை காப்பாற்றியிருக்கலாம் .

ஆனால் விக்கியர் இன்னமும் பாடம் படித்ததாக தெரியவில்லை குழந்தை பிள்ளைகள் போல அடம் பிடிக்கின்றார் .விரைவில் முதிர்ச்சி அடையவேண்டும் அல்லது அறியாத அரசியல் அவரை துரத்திவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு நடந்தது "இனச் சுத்திகரிப்பு" என்ற முட்டாள் தனமான , பொறுப்பற்ற, சுயநல நோக்குள்ள, கபட எண்ணங்கள் கொண்ட நச்சு வார்த்தைகளை ஏவி விட்டு செருப்படி வாங்க வேண்டிய நிலை வந்ததை விடவும் முதல்வரின் அறிக்கைகள் ஒன்றும் மோசமானவை அல்ல.
காவடி சிந்து பாடுவது என்னவோ தொடருகிறது... ஐயோ ஐயோ  

ஆனால் ஒன்று பாருங்கோ அவுஸ்திரேலிய "அனுபவம்" சிங்கனை கொஞ்சம் இப்போ நிதானமா சிந்திக்க வைத்து  இருக்கிறது....போல தெரிகிறது  அந்தர் பல்டி தொடரும் 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் இனி கதைக்க மாட்டார் என்று நம்பி வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொண்டார். இப்ப சடையுறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Athavan CH said:

அந்த தருணத்திலிருந்து முதலமைச்சரின் பல வேண்டுகோற்களுக்கிணங்கி அவருக்கும் வடமாகாண சபை நிர்வாகத்திற்கும் உதவியாக நான் செயற்ப்பட்டதைபோல, எதிர்காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராக பதவியில் இருக்கும் எவருக்கும் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என உறுதியளிக்கிறேன்.

 

http://www.colombomirror.com/tamil/?p=6311

 

சுமந்திரன் எல்லாத்தையும் சொல்லிப்போட்டு தற்போதைய முதல்வரை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடரும் எனக் கடைசிப்பந்தியில சொல்லியிருக்கிறார்.

தொண்ணூறுகளில் இந்தியாவின் வெளியுறவுச்செயலாளராக ஏ பி வெங்கடேஸ்வரன் என்பவர் இருந்தார் அப்போது இலங்கை தொடர்பான கேள்வியொன்றுக்கு தனது கருத்தைக்கூறியிருந்தார் அதை அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி ரசிக்கவில்லை பிறிதொரு தருணத்தில் ராஜீவ்காந்தியிடம் வெளிநாட்டு அதிகாரியொருவர் இதுபற்றிக்கேட்டதற்கு, நீங்கள் அடுத்ததடவை வரும்போது வேறொரு வெளியுறவுச் செயலாளரைச் சந்திப்பீர்கள் எனக்கூறினார். கிட்டத்தட்ட வடமாகாணசபையினது பிரச்சனை இதையொட்டியதாக இருக்கின்றது.

வெகுசன ஊடகங்கள் செய்திக்கான தலைப்பை எப்படிப்போடுகின்றதோ அதையொட்டியே வாசகர்கள் சிந்திப்பார்கள் அது அவர்களது சிந்தனைத்திறனில் தவறு எனக்கூறமுடியாது, ஊடகம் எதை எதிர்பார்க்குறதோ அதையே மண்டைக்குள் ஏத்த முயற்சிக்கும்.

இச்செய்தியில் விக்கியர் ஏதோ கூட்டமைப்பின் ஒற்றூமைக்குக் களங்கம் விளைவிக்க முயலுகிறார் என முதல்ப் பந்தி வாசிப்பவர்களுக்கு மண்டையில் படும். 

எதிர்காலத்தில் வடமாகாண முதலமைச்சராக இன்னுமொருவர் இருக்க வாய்ப்புகள் உண்டு, முதலமைச்சருக்குச் சுமந்திரன் பதில் 

இச்செய்திக்கு இப்படியொரு தலையங்கம் இருந்தால் தமிழன் இராஜதந்திரமான விடையங்களைக் கவனிக்கிறான் என்பது அர்த்தம்.

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாமள் சொன்னால் பாவம்.......பட்டினத்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, satan said:

விக்கியர் இனி கதைக்க மாட்டார் என்று நம்பி வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொண்டார். இப்ப சடையுறார்.  

சுமந்திரன் அரசியலுக்கு வந்தாப்பிறகும் தான் லோயர் எண்ட நினைப்பிலைதான் வெட்டிவிளாசுறார்.

அவர் லோயர் ஓகே...ஆனால் அரசியல் வேறை....அதுக்கேற்ற மாதிரி கதைக்கத்தெரியாது......

இதுக்கை ஏன் சுமந்திரனை நோவான்? ஏன் விக்கியரை நோவான்?

இரண்டு பேரையும் கொண்டுவந்து இறக்கின சிங்கக்கொடி சிங்கத்துக்கு அறிவு எங்கை போச்சுது ???  கேட்டால் பழம்பெரும் பழுத்த அரசியல்வாதியாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/18/2015, 7:55:13, Sasi_varnam said:

முஸ்லீம்களுக்கு நடந்தது "இனச் சுத்திகரிப்பு" என்ற முட்டாள் தனமான , பொறுப்பற்ற, சுயநல நோக்குள்ள, கபட எண்ணங்கள் கொண்ட நச்சு வார்த்தைகளை ஏவி விட்டு செருப்படி வாங்க வேண்டிய நிலை வந்ததை விடவும் முதல்வரின் அறிக்கைகள் ஒன்றும் மோசமானவை அல்ல.
காவடி சிந்து பாடுவது என்னவோ தொடருகிறது... ஐயோ ஐயோ  

ஆனால் ஒன்று பாருங்கோ அவுஸ்திரேலிய "அனுபவம்" சிங்கனை கொஞ்சம் இப்போ நிதானமா சிந்திக்க வைத்து  இருக்கிறது....போல தெரிகிறது  அந்தர் பல்டி தொடரும் 

சசி, வரைவிலக்கணத்தின் படி அது இனச்சுத்திகரிப்பு என்று சும் சொன்னது உண்மையே! தமிழரின் இனச்சுத்திகரிப்பை சும் "ஏற்றுக் கொள்கிறேன், ஆனால், நிறுவ இப்போது முடியாது!" என்று  சொன்ன போது வரைவிலக்கணத்தைத் தேடித் தேடி இங்கே முழங்கிய ஆட்கள் முஸ்லிம்கள் விடயத்தில் வரைவிலக்கணம் செல்லாது என்பது வேடிக்கை! இதெல்லாம் புலிகள் மீதான அபரிமிதமான அபிமானத்தில் பிறப்பது, rational thinking அல்ல! ஐந்தாம் வகுப்பு வயதில் இன்ரர்வல் நேரம் நடக்கும் சிறு பிள்ளைத்தனமான விதண்டா வாதங்கள் போல இவை எனக்குத் தெரிகின்றன!

அவுசில் வன்முறை அச்சுறுத்தல் விடுத்ததால் சும் அடங்கினார் என்பதும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியல்ல! தசாப்தங்கள் முன்பு பிரான்சில் வன்முறைகளை அச்சுறுத்தலை ரசித்து ஊக்குவித்தமையின் விளைவு இன்றும் கோடரிக் கொத்தலாகவும், பரிதியின் கொலையாகவும் தொடர்வதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்! 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் முடிவுற்றுள்ள நிலையில், அம் மக்களுக்கான இழப்புகள் தொடர்பில் பரிகாரங்களைக் காண்பதற் கான நடவடிக்கைகளுக்கு முயலாமல், சுயலாப நோக்கிலும், இனங்களுக்கிடையில் தற்போது ஏற்பட்டு வரும் சுமுகமான உறவுகளைக் குழப்பும் நோக்கிலும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை...

இதைதான் நான் மேலே எழுதி இருந்தேன்.
சுமந்திரன் ஐயா மேலோ அல்லது அவர் கட்சி சார்ந்த யார் மேலும் காழ்ப்பை கொட்டுவதற்கு அவசியம் எனக்கில்லை. 
அவரவர்க்கு மக்கள் கொடுத்த பணியை ஒழுங்கா செய்தாலே போதும்.
சுமந்திரன் வெளியிடும் கருத்துகள் அவருக்கு வாக்களித்த ஒட்டு மொத்த மக்களின் ஏகோபித்த கருத்துதானா?
அவருக்கு வாக்களித்த அவர் தொகுதி மக்கள் அவரிடம் இவ்வாறான கருத்துக்களை முன்வையுங்கள் அய்யா என்று கேட்டுக்கொண்டார்களா ?

குறைந்த பட்சம் அவரின் கருத்தோடு அவர் சார்ந்த கட்சி, உறுப்பினர், தலைவர் ஆகியோர் ஏற்றுக் கொள்கிறார்களா? தான்தோன்றிதனமாக சூழ்நிலை அறியாமல் கூறப்படும் கருத்துக்களின் பின்விளைவுகளை அவர் உணருவாரா? 
இது மட்டுமே எனக்கிருக்கும் கேள்வி.
 

**** நீங்கள் எழுதுவதற்கு முன்னமே நானே எழுதி விடுகிறேன்.
புலிகளின் காலத்தில், அவர்களின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பான எந்த கருத்து பரிமாறல் மேடையும்  கூட இருக்கவில்லை என்பதையும் நான் அறிவேன். ****
 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் முடிவுற்றுள்ள நிலையில், அம் மக்களுக்கான இழப்புகள் தொடர்பில் பரிகாரங்களைக் காண்பதற் கான நடவடிக்கைகளுக்கு முயலாமல், சுயலாப நோக்கிலும், இனங்களுக்கிடையில் தற்போது ஏற்பட்டு வரும் சுமுகமான உறவுகளைக் குழப்பும் நோக்கிலும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை...

இதைதான் நான் மேலே எழுதி இருந்தேன்.
சுமந்திரன் ஐயா மேலோ அல்லது அவர் கட்சி சார்ந்த யார் மேலும் காழ்ப்பை கொட்டுவதற்கு அவசியம் எனக்கில்லை. 
அவரவர்க்கு மக்கள் கொடுத்த பணியை ஒழுங்கா செய்தாலே போதும்.
சுமந்திரன் வெளியிடும் கருத்துகள் அவருக்கு வாக்களித்த ஒட்டு மொத்த மக்களின் ஏகோபித்த கருத்துதானா?
அவருக்கு வாக்களித்த அவர் தொகுதி மக்கள் அவரிடம் இவ்வாறான கருத்துக்களை முன்வையுங்கள் அய்யா என்று கேட்டுக்கொண்டார்களா ?

குறைந்த பட்சம் அவரின் கருத்தோடு அவர் சார்ந்த கட்சி, உறுப்பினர், தலைவர் ஆகியோர் ஏற்றுக் கொள்கிறார்களா? தான்தோன்றிதனமாக சூழ்நிலை அறியாமல் கூறப்படும் கருத்துக்களின் பின்விளைவுகளை அவர் உணருவாரா? 
இது மட்டுமே எனக்கிருக்கும் கேள்வி.
 

**** நீங்கள் எழுதுவதற்கு முன்னமே நானே எழுதி விடுகிறேன்.
புலிகளின் காலத்தில், அவர்களின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பான எந்த கருத்து பரிமாறல் மேடையும்  கூட இருக்கவில்லை என்பதையும் நான் அறிவேன். ****
 

ஜனநாயக பிரதிநிதித்துவம் இப்படித் தான் வேலை செய்கிறது நான் அறிந்த வரையில்:

முக்கியமான சில விடயங்களில் இது தான் நிலைப்பாடு என்று பிரதிநிதியாக வர விரும்புபவர் தெளிவாக்கிய பின்னர், மக்கள்  அவரில் நம்பிக்கை வைத்துத் தெரிவு செய்கிறார்கள். மற்றபடி அவர் தெரிவான பின்னர் பேசும் ஒவ்வொரு பேச்சையும் வாக்களித்த மக்களிடம் கொடுத்து அனுமதி வாங்கிப் பேச வேண்டும் என்று எங்கேயும் இல்லை! இந்த leeway சும்மா கொடுக்கப் படுவதில்லை! தெரிவு செய்தோர் விரும்பாததைப் பேசும் , செய்யும் பிரதிநிதியைத் தூக்கியெறிய அடுத்த தேர்தல் வரும்! சும் மின் செயல்களை தாயக வாக்காளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று அறிய நாம் அடுத்த தேர்தல் வரைப் பொறுத்திருக்க வேண்டும்!

முஸ்லிம் வெளியேற்றம் பற்றிய சும் மின் கருத்து சக கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. தலைமையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறதா என்று யாரும் அவர்களிடம் கேட்கவில்லை!தலைமை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் "இ.சு வரைவிலக்கணப் படி, முஸ்லிம்கள் வெளியேற்றம் ஒரு இ.சு" என்ற சும் மின் கருத்து சரியானதே! சட்ட ரீதியாகச் சரியானதைச் சொல்ல யாரும் கட்டுப் பாடுகள் விதிக்க முடியாது!. விசேசமாக, சும் அவுசில் பேச அனுமதிக்காமல் சட்டவிரோதமாக அச்சுறுத்தப் பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர்கள், இந்தக் கட்சிக் கட்டுப்பாடுகள் பற்றிப் பேசவே அருகதையற்றவர்கள் என்பது என் கருத்து!

இப்ப கேள்வியின் நாயகனான உங்களிடம் ஒரு கேள்வி: முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டது இனச்சுத்திகரிப்பு அல்ல என தாயகத் தமிழர்களில் எத்தனை வீதமானோர் நினைக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா?   

On 11/18/2015, 10:37:02, Athavan CH said:

Sumathiran

 

கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்கும் சதிகளுக்கு இடமளிக்கக்கூடாது: விக்கினேஸ்வரனுக்கு சுமந்திரன் பதில்

 

 

... சாக்கடையை கிளற ஆரம்பித்ததே இந்த ஈழத்து சோசுப்பிரமணியசாமிகள் தான்! .. இப்ப என்ன தொப்பியை புரட்டுபடுகிறது???? 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, no fire zone said:

... சாக்கடையை கிளற ஆரம்பித்ததே இந்த ஈழத்து சோசுப்பிரமணியசாமிகள் தான்! .. இப்ப என்ன தொப்பியை புரட்டுபடுகிறது???? 

சுமந்திரனுக்கு.... 
"ஈழத்து சுப்பிரமணிய சாமி" என்ற, கௌரவ பட்டத்தைக் வழங்கி கௌரவித்த...
"நோ பயர் சோனின்...."  திறமைக்கு, பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். 
Smiley

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.